பயனர் பேச்சு:Uksharma3/தொகுப்பு 1

வாருங்கள்!

வாருங்கள், Uksharma3, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 17:39, 7 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

கணேசையர் தொகு

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். கணேசையர் பற்றிய கட்டுரைக்கு நன்றி. பொதுவாக விக்கிப்பீடியாவில் தலைப்பில் அறிஞரின் பெயரை மட்டுமே தர வேண்டும். பட்டப்பெயருடன் சேர்த்து தலைப்பிட முடியாது. மேலும், கணேசையர் பற்றிய விரிவான கட்டுரை சி. கணேசையர் என்ற தலைப்பில் உள்ளது. மேலதிகமான உங்களுக்குத் தெரிந்த தகவல்களை இக்கட்டுரையிலேயே சேருங்கள். மேலும் உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:39, 7 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Uksharma3/தொகுப்பு 1!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Kanags \உரையாடுக 08:40, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் ஐயா, தங்களைப் பற்றிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள். சதாசிவ ஐயர் கட்டுரையை விக்கி நடையில் திருத்தியிருக்கிறேன். பாருங்கள். ஈழத்தில் பல அறிஞர்களைப் பற்றி அறியப்படாதவை நிறைய உள்ளன. அவற்றை அறியத் தாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். உதவி தேவைப்படின் எனது உரையாடல் பகுதியில் அல்லது இங்கேயே கேட்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:40, 8 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நன்றி! தொகு

வணக்கம்! மணி கிருஷ்ணசுவாமி எனும் கட்டுரையை சிறந்த முறையில் படைத்தமைக்கு மிக்க நன்றி! சங்கீத கலாநிதி பட்டியலிலுள்ள மற்றவர்கள் குறித்த கட்டுரைகளையும் வாய்ப்பு கிடைக்கும்போது உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:10, 17 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

ஆவலுடன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:52, 18 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் காட்டியுள்ள வளைதள தகவலுக்கு எனது நன்றிகள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:09, 27 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
குறிப்பிடத்தக்க கருநாடக இசைக் கலைஞர்கள் குறித்த கட்டுரைகளை சிறப்பான முறையில் படைத்து வருவதற்கு மிக்க நன்றி! கட்டுரைகள் விரிவாகவும், சிறப்பான உரைநடையிலும் இருக்கின்றன! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:52, 28 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம், உங்களுக்கு என் வாழ்த்துகள் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:33, 28 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம், தமிழ்க்குரிசில், நன்றி, வணக்கம் Uksharma3 (பேச்சு)
  விருப்பம், மா. செல்வசிவகுருநாதன், நன்றி வணக்கம். Uksharma3 (பேச்சு) 15:57, 28 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:13, 29 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம், நன்றி சிறீதரன். Uksharma3 (பேச்சு) 01:41, 30 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம் உங்கள் பணி தொடர்க.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:29, 30 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம் நன்றி, ஸ்ரீகர்சன் Uksharma3 (பேச்சு) 01:59, 31 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம்வாழ்த்துக்கள் அண்ணா... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 02:01, 31 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]


தேடுதல் பொறிகள் மணல்தொட்டி பக்கங்களை Index, follow செய்வதைத் தடுத்தல் தொகு

வணக்கம்! உங்களுக்கு ஒரு செய்தி இங்கு உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:08, 1 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம்! நண்பர் சண்முகம், உதவிக் குறிப்பு ஒன்றினை ஆலமரத்தடியில் இட்டுள்ளார். தீர்வு கிடைக்கும்வரை நீங்கள் அங்கு தொடர்ந்து உரையாடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:37, 1 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் செல்வசிவகுருநாதன். நண்பர் சண்முகம் தீர்வொன்றை சொல்லியிருக்கிறார். அது என் தேவைக்கு சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 16:33, 1 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பங்களிப்பு புள்ளி விவரம் தொகு

வணக்கம்!

 • தொடங்கிய கட்டுரைகள் குறித்து அறிய இயலும். பயனர் பங்களிப்புகள் பக்கத்தின் வெகுகீழே பார்த்தீர்கள் என்றால்... Uksharma3: பயனர்வெளி பக்கங்கள் • பயனர் அனுமதி • தொகுப்பு எண்ணிக்கை1 • தொகுப்பு எண்ணிக்கை2 • தொடங்கிய கட்டுரைகள்1 • தொடங்கிய கட்டுரைகள்2 • பதிவேற்றிய கோப்புகள் • SUL • அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் என்பன இருக்கும். இதில் தொடங்கிய கட்டுரைகள்1 என்பதைச் சொடுக்கினால், பட்டியல் வரும். ஆனால் தற்போது... இன்னொரு இடத்திற்கு Redirect ஆகும் வகையில் இருக்கிறது. இதுபோல Redirect ஆகும் வகையில் இருப்பதாலேயே பயனர்கள் ஏற்கனவே தந்துள்ள இணைப்பு வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.
 • தொகுப்பு எண்ணிக்கை1 என்பதைச் சொடுக்கினால், தொகுப்பு குறித்த Consolidated தகவல்கள் கிடைக்கும்.
 • ஆலமரத்தடியிலும் ஏதாவது அதிகப்படியான தகவல் வருகிறாதா எனப் பார்ப்போம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:00, 2 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
வணக்கம் செல்வசிவகுருநாதன். தகவலுக்கு நன்றி. இப்போது தொடங்கிய கட்டுரைகள்1 முயற்சி செய்தபோது தானாக Redirect ஆகிவிட்டது. அதனால் புதிய URL ஐக் கொடுத்து எனது பயனர் பக்கத்தில் ஒரு இணைப்பை கொடுத்துள்ளேன். பல வருடங்களாக கணினி, இணையம் தொடர்பாக ஆங்கில மொழி சொற்களையே பயன்படுத்தி வந்ததால் இங்கே தமிழ் சொற்களை வைத்து ஒவ்வொரு விடயத்தைப் பற்றி அறிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. தமிழ் சொற்கள் தெரிந்திருந்தாலும் உடன் நினைவுக்கு வருவதில்லை. இற்றைப் படுத்துதல், அணுக்கம் என்பவை என்ன? - Uksharma3 (பேச்சு) 04:32, 2 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
இன்று-> இற்றை -> இற்றைப்படுத்தல் (இன்றைய நிலைக்கு கொண்டு வருதல்) = update!

அணுகுதல் -> accessing, அணுக்கம் = access control/access rights -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:50, 2 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நன்றி தமிழ்க்குரிசில். சுமார் 45, 50 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கொழும்புவில் உள்ள தினகரன் பத்திரிக்கை நடிகர் சிவாஜி கணேசனுக்கு கலைக்குரிசில் என்ற பட்டம் கொடுத்தார்கள். உங்கள் பெயர் எனக்கு அதை நினைவு படுத்துகிறது :) Uksharma3 (பேச்சு) 05:30, 2 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

சஞ்சய் சுப்ரமண்யன்... தொகு

வணக்கம்! இதுவே தமிழ் விக்கிப்பீடியாவில் எனது முதல் தொகுப்பு! இக்கட்டுரையினை விரிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:00, 3 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அவர் எனது அபிமான பாடகர். இன்னும் எழுதலாம், ஆனால் கட்டுரை போல வந்துவிடும், விக்கிநடைக்கு ஒவ்வாது. நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 06:44, 3 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

இங்கும்காண்க. அவரைப் பற்றி எழுதவந்தே விக்கியில் எனது பணி தொடர்ந்தது!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:53, 3 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Uksharma3/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:52, 3 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நன்றி அன்ரன். நான் எண்ணிக்கைக்காக எழுதுவதில்லை. கட்டுரைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 02:40, 4 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

  விருப்பம்--[[ |25px|திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:12, 4 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மேற்கோள்கள் தொகு

முதலாவது இடத்தில் <ref name=xxxx>இது ஒரே மேற்கோளைப் பல இடங்களில் சுட்டும்</ref> என்றெழுதிய பின்னர், அடுத்தடுத்த இடங்களில் <ref name=xxxx/> என எழுதினால் போதுமானது. இங்கு xxxx என்பதற்கு ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ நீங்கள் ஏதாவது ஒரு பெயர் தரலாம். உதாரணத்திற்கு ரீயூனியன் கட்டுரையைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 05:07, 5 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நன்றி, சிறீதரன். Uksharma3 (பேச்சு) 06:13, 5 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம் தொகுஇணையான ஆங்கில மொழிக் கட்டுரைக்கு இணைப்பு தர... தொகு

வணக்கம்!

 • வழிமுறைப் பற்றி விளக்கமாக அறிய இங்கு பாருங்கள்!
 • மணி கிருஷ்ணசுவாமி கட்டுரையிலிருந்து உங்களின் ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்பு தரப்பட்டது. இதைச் செய்யும்போது 'print screen' செய்து, ஒரு ppt'யில் பதிவு செய்து, அதனை உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். மேலும் உதவி தேவையெனில் எனது பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:21, 10 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
அருமை! மிக அருமை!! உங்கள் ppt கோப்பு மிக மிக விளக்கமாக உள்ளது. உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து இந்தக் கோப்பை ஆக்கியுள்ளீர்கள். தமிழ் விக்கிக்கு நீங்கள் ஒரு அரிய சொத்து என்று சொன்னால் மிகையாகாது. என் உளமார்ந்த நன்றி, நண்பரே. - Uksharma3 (பேச்சு) 02:18, 11 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
 • 'விக்கித்தரவுகள்' முறையில் ஒரு விசயத்திற்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை... உதாரணமாக திருவிழா ஜெயசங்கர் எனும் கட்டுரையினை தமிழில் நான் தொடங்கினேன். அக்கட்டுரை ஆங்கிலத்தில் இல்லை. எனினும் மலையாளத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது; ஆனால் எனக்கு மலையாளம் தெரியாது! மலையாளத்தில் எழுதியவருக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம். ஆக இவ்விரு கட்டுரைகளுக்கு இடையே இணைப்பு இல்லாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ் அல்லது மலையாளம் அறிந்த ஒருவர் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியபிறகே இணைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது!
 • நான் புதிய கட்டுரைகள் எழுதுவதைவிட, ஆர்வமுள்ள நல்ல படைப்பாளிகளுக்கு என்னால் இயன்ற சிறுசிறு உதவிகளை செய்ய பெரிதும் விரும்புகிறேன். தமிழ் மொழிக்கும், பொது அறிவுக்களஞ்சியத்திற்கும் என்னால் இயன்ற அர்ப்பணிப்பினை செய்ய விழைகிறேன்.
 • பேச்சுப்பக்கத்தில் சில நேரங்களில் ஆங்கில மொழியில் நான் பதில்தர நேரிடும். நகர்பேசி மூலமாக உலவுதல் செய்யும்போது மட்டுமே இது நேரிடும்; விரைவாக பதிலுரைக்கவே இங்ஙனம்! பொறுத்தருள்க! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 11 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
1. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக இருப்பதால் விக்கி அதனை இதற்கு ஒரு தீர்வுகாண பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளில் எழுதப்படும் கட்டுரைகளின் தலைப்பு ஆங்கிலத்திலும் (கட்டாயமாக்காமல், விரும்பியவர்கள் மட்டும்) எழுத ஒரு வசதி செய்யப் பட்டால் தேடுதலில் அதனை வைத்து முடிவுகளைக் காட்டி இணைப்பை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு உதவலாம்.
2. உங்கள் சேவை உள்ளம் பாராட்டுதற்குரியது.
3. எனக்கு தமிழில் பற்று இருக்கிறது. ஆனால் அதற்காக வேற்று மொழிகளை நான் வெறுப்பதில்லை. ஆகவே ஆங்கிலத்தில் பதில் தருவது பற்றி கவலை கொள்ளற்க.
ஒரு கேள்வி: எழுத்துப் பெயர்ப்பு தெரிவு செய்திருக்கையில் இடையே ஆங்கிலம் எழுத toggle keys உண்டா? - Uksharma3 (பேச்சு) 16:10, 11 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
//எழுத்துப் பெயர்ப்பு தெரிவு செய்திருக்கையில் இடையே ஆங்கிலம் எழுத toggle keys உண்டா?//<-- Ctrl+M --சண்முகம்ப7 (பேச்சு) 16:52, 11 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
நன்றி, சண்முகம். -Uksharma3 (பேச்சு) 16:55, 11 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பொங்கல் வாழ்த்து தொகு

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்ற 'மொழி மற்றும் பல்வேறு கலைகளில் ஆர்வமுள்ள' அறிஞர்களின் நல்லாசியுடன் தமிழ் விக்கி வளர்ந்து அனைவருக்கும் பயன் தரட்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 17 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

 
நகர வாழ்க்கையில் அடுக்ககக் குடியிருப்பில்தான் பொங்கல் கொண்டாட்டம்; எனினும் நம் மரபினை மறக்கலாகுமா? பால்கனியின் கம்பிவலை இடைவெளிகளுக்கிடையே கதிரவனின் ஒளிக்கற்றைகள் அறையினுள் நுழைய, அவனுக்கு நன்றி அறிவிப்பு வழிபாடு நடத்தினோம்!
காலத்திற்கேற்ப, இடத்துக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மாறுவதுதான் மனித இயல்பு. பொங்கலின் உள்ளார்ந்த கருத்து - நாம் எமக்கு உறுதுணையாக உதவும் சக்திக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்த்துவது தான். அந்த நன்றி உணர்வு இருந்தால் போதும். அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடலாம்.
 

2007ல் மடிப்பாக்கத்தில் நாம் குடியிருந்த வீட்டு முன்றலில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து கொண்டாடினோம். இப்போது இருக்கும் இடத்தில் உள்ளே சமையலறையில் தான் பொங்கவேண்டும். என் மனைவி காலமானபின் தனியாக வாழ்கிறேன். எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லை. - Uksharma3 (பேச்சு) 00:36, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

புதிய பகுப்புகள் தொகு

 1. பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள் எனும் பகுப்பினை நாம் உருவாக்கி 39 கட்டுரைகளில் ஏற்கனவே சேர்த்துவிட்டோமே?!
 2. பகுப்பினை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். தலைப்பினை நன்கு முடிவுசெய்துவிட்டு தொடங்கினால் நல்லது; ஏனெனில் பகுப்பின் தலைப்பினை யாராலும் நகர்த்த இயலாது! ஒருவேளை தவறான தலைப்பில் பகுப்பினைத் தொடங்கிவிட்டால், நிருவாகி எவருக்கேனும் தகவல் தந்து அதனை நீக்கச் சொல்லலாம். பின்னர் சரியான தலைப்புடன், புதிய பகுப்பினைத் தொடங்கலாம். புதிய பகுப்பினைத் தொடங்குவது, புதிய கட்டுரை ஒன்றைத் துவக்குவது போன்றதே. பகுப்பு:சங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள் எனும் பகுப்பு, நீங்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் என்னால் இப்போது துவக்கப்பட்டது. இதனை எப்படி உருவாக்கினேன் என்பதனை அறிய கீழே காணுங்கள்:
 
முதல் பக்கம்
 
இரண்டாம் பக்கம்
 
மூன்றாம் பக்கம்

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:09, 17 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

சீரிய, விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி. தங்களைப் போன்று உதவுபவர்கள் இருக்கையில் தமிழ் விக்கி செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை. - Uksharma3 (பேச்சு) 00:53, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
பயனர்கள் குறித்த பகுப்புகள் அனைத்தும் கட்டுரைப் பகுப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். வானொலி ஆர்வலர்கள் என எழுதுவது கட்டுரைகளுக்கு மட்டுமே பொருந்தும். பயனர்களுக்குப் பயன்படுத்த முடியாது. பகுப்பு:பயனர் வானொலி ஆர்வலர்கள் என்ற புதிய பகுப்பை ஆரம்பித்துள்ளேன். வேறு யாராவது பயனர்கள் வானொலியில் ஆர்வமுள்ளோர் இப்பகுப்பினுள் சேரலாம்.--Kanags \உரையாடுக 01:02, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அப்படியானால் ஒரு பயனர் தன்னைப் பற்றி கட்டுரையாக எழுதி (மேற்கோள்களுடன்) வெளியிட முடியுமா? - Uksharma3 (பேச்சு) 04:45, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நிச்சயமாக முடியாது. ஒருவர் தன்னைப் பற்றி எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 05:02, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அப்படியானால் விக்கி கட்டுரையில் இடம்பெறத் தகுதி உள்ள ஒருவர் பயனராக இருக்கமுடியாது எனக் கொள்ளலாமா? தயவு செய்து நீங்கள் சுட்டிக் காட்டும் விதிகள் இருக்கும் பக்கத்தின் உரலியை தாருங்கள். எதிர்கால பயன்பாட்டுக்கு எனக்கு உதவும். பயனர் விதிகள் என தேடிப்பார்த்தேன். அப்படி ஒரு பக்கம் இல்லை. பயனர் வழிகாட்டி என ஒரு பக்கம் இருக்கிறது. அதில் இந்த விபரம் இல்லை. - Uksharma3 (பேச்சு) 05:21, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அப்படியல்ல ஐயா, உங்களைப் பற்றி நீங்களே எழுத முடியாது என்பது தான் விதி. (உள்ளது, தேடிப் பார்க்கிறேன்.) ஏற்கனவே இவ்வாறு எழுதப் போய் பலர் மனத்தாங்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஒரு சிலர் இதனால் விக்கியில் இருந்து விலகியும் சென்றுள்ளார்கள். ஆனாலும், பல கட்டுரையாளர்கள் இங்கு பயனர்களாக நீடித்துள்ளனர். மேலும், நீங்கள் உருவாக்கிய பகுப்பில் உங்கள் பயனர் பக்கத்தை மட்டுமே சேர்த்திருந்தீர்கள். அதனாலேயே அதனை நான் நீக்கினேன். மீண்டும் உருவாக்குகிறேன். பயனரல்லாத ஆர்வலர்களைப் பற்றிய கட்டுரைகளை மட்டும் சேருங்கள். புதியவர்களின் ஆக்கங்கள் மட்டுமல்ல, அனைத்தும் இங்கு பலராலும் கண்காணிக்கப்பட்டே வருகின்றன. குறிப்பிடத்தக்க மாற்றங்களை அந்தந்தப் பயனர்களுக்கு விளக்கவும் செய்கிறோம். எனவே, உங்கள் ஆக்கங்களை மட்டும் குறி வைத்துத் தாக்குவதாக எண்ண வேண்டாம்.--Kanags \உரையாடுக 06:53, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
பார்க்க: விக்கிப்பீடியா:தன்வரலாறு.--Kanags \உரையாடுக 07:05, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

இந்த விடயத்தை தெளிவு படுத்தியதற்கு நன்றி. என்னுடைய எழுத்துக்கள் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில சமயங்களில் பழைய நினைப்புகள் வந்து ஆர்வம் மிகும்போது ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றும். எனது தற்போதைய நிலையில் முடிந்தால் கட்டுரைகளை எழுதிவிட்டு வேறு விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம் என தீர்மானித்துள்ளேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 10:37, 18 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஒன்றிணைப்பு தொகு

ஒரே விவரம் குறித்து இரு கட்டுரைகள் இருக்கும்பட்சத்தில் அவை ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒன்றிணைப்பால் இரண்டில் எந்தவொன்றும் நீக்கப்படுவதில்லை. இரு கட்டுரைகளிலும் உள்ள உள்ளடக்கங்கள் ஒரே கட்டுரையாக இணைக்கப்படும். இந்த ஒன்றிணைப்பினை நிர்வாகிகள் தான் செய்ய இயலும் (அவர்களுக்கு உதவும் வகையில் பயனர்கள் பொருத்தமான உள்ளடக்கங்களை மட்டும் ஒரே கட்டுரைக்குள் இட்டுவிட்டு அவர்களிடம் ஒன்றிணைக்கும்படி கோரிக்கையை முன்வைக்கலாம்). ஒன்றிணைத்த பின் கிடைக்கும் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்தீர்களென்றால் அதில் இரு கட்டுரைகளையும் உருவாக்கியவர்களின் பங்களிப்புகளைக் காணலாம்.

நீங்கள் உருவாக்கிய நாகேஸ்வரராவ் கட்டுரை நல்ல தரமாக உள்ளது. நன்றாக இல்லை என்பதற்காக அதனை அக்கினேனி நாகேஸ்வர ராவ் என்ற கட்டுரையுடன் இணைக்கும்படி தொடுப்பிணைப்பி இடப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மன வருத்தம் கொள்ளாதீர்கள். ஒன்றிணைத்த பின்னரும் உங்கள் பங்களிப்புகள் இருக்கும். வடிவமைப்பு மட்டும் இருகட்டுரைகளுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும். இரு தலைப்பில் தேடினாலும் கிடைக்கும்படி இணைக்கப்படும். உங்களது கட்டுரைகள் அனத்தும் தரமானவையாக உள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கி வளம்பெறுகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்களுடன்--Booradleyp1 (பேச்சு) 14:14, 23 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

இங்கே கட்டுரை எண்ணிக்கை அதிகமாக எழுதியவர்களுக்கு பாராட்டும் பதக்கங்களும் கிடைக்கும் வழமை இருப்பதால் எண்ணிக்கையை பெருக்குகிறார்கள். மக்கள் தேடிப் படிக்கும் கட்டுரைகள் இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். தவறான தகவல்கள், உடைந்த இணைப்புகள், தொடர்ச்சி இல்லாமல் துண்டு துண்டாக இருக்கும் வசனங்கள், இலக்கணப் பிழைகள் நான் பார்த்த கட்டுரைகளில் பெரும்பாலும் காணப்படுகின்றன. தூய தமிழ் என்பதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் கிரந்த எழுத்தைக் கண்டவுடன் அதை மாற்றும் வேகமும் இலக்கண வழுக்களையும் ஏனைய, இங்கே குறிப்பிட்டுள்ள தவறுகளையும் திருத்துவதில் காண்பிக்கப் படுவதாக தெரியவில்லை. நீங்கள் கூட இணைக்கும் படி கேட்ட கட்டுரையின் வடிவமைப்பையும், அதில் இருந்த உடைந்த இணைப்பையும் (broken link), தவறான மேற்கோளையும் திருத்தாமலேயே அந்தக் கட்டுரையுடன் நான் எழுதிய கட்டுரையை இணைக்கும்படி கேட்டிருந்தீர்கள். நல்ல தண்ணீரையும் உப்புத் தண்ணீரையும் (இரண்டும் தண்ணீர் தான் என்பதற்காக) கலந்து விடும்படி கேட்டால் எப்படி? - Uksharma3 (பேச்சு) 16:22, 23 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
1911ல் தென் துருவத்தை அடைய நார்வேயிலிருந்து Roald Amundsen ம், இங்கிலாந்திலிருந்து Robert Scott ம் ஏறக்குறைய ஒரே சமயத்தில் கிளம்பினார்கள். வாய்ப்பைப் பயன்படுத்தி தெந்துருவ கண்டத்தில் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டு சென்றார் ஸ்காட். ஆனால் அமண்ட்செனுக்கு துருவத்தை அடைவது ஒன்றே குறிக்கோளாக இருந்தது. ஸ்காட் துருவத்தை அடைந்தபோது அங்கே அமண்ட்சென் வந்து போயிருந்த்ததைக் கண்டார். அவர் மனம் உடைந்தது. அவர் இங்கிலாந்துக்கு திரும்பவேயில்லை. தென் துருவ கண்டத்து பனியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இப்போது தென் துருவத்தை முதலில் அடைந்த பெருமை அமண்ட்சென்னுக்கு இருக்கிறது. ஆனால் ஸ்காட் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் தான் உலகத்துக்கு பயனளித்தன. தமிழ் விக்கியில் அமண்ட்சென்கள் அதிகம் இருப்பதாக எனக்குப் படுகிறது. ஆனாலும் நான் ஸ்காட் ஆகத்தான் இருக்க விரும்புகிறேன். - Uksharma3 (பேச்சு) 16:45, 23 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம்! வயலின் கலைஞரின் பெயரினை நீங்கள் சுட்டிக்காட்டியபடி திருத்தியுள்ளேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மகிழ்ச்சி. கட்டுரையில் ஒரு வெளி இணைப்பு சேர்த்துள்ளேன். ஏழு இராகங்களையும் அறிமுகம் செய்த படத்துடன் கூடிய செய்தி. கட்டுரையில் அந்த ஏழு இராகங்களையும் சேர்த்தால் தகவல் முழுமை பெறும் என நினைத்தேன். நீங்கள் கொடுத்துள்ள இந்து மேற்கோள் பக்கத்தில் பெயர்கள் உள்ளன. ஆகவே ஏதோ காரணத்தோடு தான் நீங்கள் அதைத் தவிர்த்திருக்க வேண்டுமென எண்ணி விட்டுவிட்டேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 06:44, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
 • நீங்கள் குறிப்பிடும் தகவல் என்னால் சேர்க்கப்பட்டதன்று. பயனர் யோகிசிவம் செய்துள்ளார்.
 • கட்டுரையில் அந்த ஏழு இராகங்களையும் சேர்த்து தகவலை முழுமைப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
 • கட்டுரைகளில் முன்னேற்றங்களை செய்யத் தயங்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் தரும் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த இராகங்களின் பெயர்களை எழுதுவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் பெயர்கள் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் தான் அவற்றை சேர்க்காமல் விட்டீர்களோ என நினைத்தேன்.
மாற்றாங்கள் செய்ய நான் தயங்குவதற்குக் காரணம் உண்டு. கருநாடக இசை தொடர்பில் எழுதும்போது தனித்தமிழ் என்பது கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது. அதனாலேயே எனது கட்டுரைகளில் கச்சேரிகள் பற்றி விரிவாக எழுதாமல் இருக்கிறேன். எழுதினால் இசையே தெரியாத ஒருவர் சொற்களை மாற்றி விடக் கூடும். அப்படி நடந்தால் என் மனம் சஞ்சலப் படும். ஆகவே அந்த நிலை ஏற்படாமல் தவிர்க்கவே விரும்புகிறேன். நன்றி வணக்கம். - Uksharma3 (பேச்சு) 16:21, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

கருத்துப் பரிமாற்றம்... தொகு

ஐயா, வணக்கம்! சில கருத்துகளை பரிமாற்றம் செய்ய விரும்புகிறேன்.

 • உங்களின் சிறந்த உழைப்பிற்கும், நல்ல பல கருத்துகளுக்கும் விக்கி குமுகாயத்தின் சார்பாக எனது நன்றி!
 • விக்கியில் உரைநடை முன்னேற்றங்கள் நிறைய தேவைப்படுகிறது என்ற உங்களின் கருத்தினை மதிக்கிறேன். இது குறித்து பலரும் தம்மாலான முயற்சிகளில் இங்கு இறங்கியுள்ளார்கள் என்றே நான் உணர்கிறேன். நானும்கூட நட்புமுறையில் பிற பயனர்களுக்கு அவ்வப்போது இதனை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகிறேன்.
 • எனது கட்டுரைகளில் இன்னமும் பல முன்னேற்றங்கள் தேவை என்பதனை என்னால் உணர இயல்கிறது. இனிவரும் நாட்களில் இன்னமும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன். கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் நீங்கள் குறிப்பிடும் விசயங்கள் நன்கு சிந்திக்க வைக்கின்றன; நல்ல வழிகாட்டல்களாக உள்ளன.
 • இலக்கணப் பிழைகளின்றி, சரியான உரைநடையுடன் பல கட்டுரைகள் இல்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எழுத்தினை முழுநேரப் பணியாகக் கொண்டவர்கள் இங்கு மிகவும் குறைவு. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலையில் அண்மையில் சேர்ந்த இளைஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், சில பள்ளி ஆசிரியர்கள், சில கல்லூரிப் பேராசிரியர்கள் என்பவர்களே இங்கு தன்னார்வப் பணியினை செய்கிறார்கள். செங்கைப் பொதுவன் ஐயா அவர்கள், அருண் ஐயா அவர்கள், நீங்கள் எனும் பெரியவர்கள் சிலரும் இங்கு தன்னார்வப் பணியினை செய்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் பல்வேறு நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையில்... இவ்விதமான தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவோரிடமிருந்து ஓரளவுக்குத்தான் எதிர்பார்க்க இயலும் என்பதுவே நடைமுறை சாத்தியம் என்பது எனது எண்ணம். இங்கிருப்போருக்கு சாதகமாக நான் பேசுவதாக தயவுசெய்து எண்ண வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
 • எதுவாக இருந்தாலும், தமிழைத் தமிழாக எழுதவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! எங்களுக்கு நீங்களும் வழிகாட்டுங்கள்; ஒருவருக்கொருவர் உதவிசெய்து, நம்மால் இயன்றதை நம் தாய்த்தமிழுக்கு செய்திடுவோம்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:57, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
  விருப்பம்--Kanags \உரையாடுக 21:37, 24 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் இருவரும் தமிழ் விக்கிக்குப் பெரும் சேவையாற்றுகிறீர்கள். அந்த அளவு செய்ய என்னால் முடியாது.
நான் 1990 வரை பத்திரிகைகள் வானொலி ஒலிபரப்புகள் என்பவற்றில் நிறைய எழுதியவன். ஒரு காலாண்டு சஞ்சிகையை 5 வருடங்கள் தொகுத்து வெளியிட்டவன். ஒரு தினசரி செய்தித்தாள் உதவி ஆசிரியராக பணியாற்றியவன். இதனை என் பெருமை சாற்ற இங்கு கூறவில்லை. இவற்றினால் எனக்கென ஒரு எழுத்துப் பாணி அமைந்துவிட்டது என்பதைக் கூறவே எழுதுகிறேன்.
தமிழை தமிழாக எழுதவேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட. ஆனால் எது தமிழ் என்பதில் தான் எனக்கு வேறு கருத்து. நான் அறிந்த அண்மைக்கால தமிழ் அறிஞர்கள் - ஆறுமுக நாவலர் (விவிலியத்தை முதன்முதலாக தமிழில் எழுதியவர்), வித்துவான் கணேசையர், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பாரதியார், ரா. பி. சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வ., கல்கி, கி.வா.ஜ... (இன்னும் சொல்லலாம்) போன்றோரின் எழுத்துக்களைப் படித்து வளர்த்துக் கொண்டதே என் தமிழ் எழுத்து. அதிலும் பண்டிதமணி கணபதிப்பிள்ளையில் மாணவர் கந்தையா பண்டிதரே என் தமிழ் குரு. இவர்களின் எழுத்தை நான் விரும்பிப் படித்ததற்கு காரணம் அவர்களின் எழுத்தில் வேற்றுமை உணர்வு இல்லை. காழ்ப்புணர்ச்சி இல்லை. எதையும் தாக்கியோ, கேலி செய்தோ அவர்கள் எழுதியதில்லை. அதிலும் கல்கியின் எழுத்து நடை நான் எட்டு வயது சிறுவனாக இருந்த போதே பொன்னியின் செல்வன் வழியாக என் நெஞ்சில் இடம் பிடித்து விட்டது.
சங்க காலம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை தமிழ் பரத கண்டத்தின் ஒரு மொழியாக இங்கிருந்த ஏனைய மொழிகளோடு உறவு கொண்டிருந்தது. ஐரோப்பிய மொழிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருக்கின்றனவோ அவ்வாறே இந்திய மொழிகளும் ஒரு குடும்பமாக (complimentary to each other) இருந்தன. இன்றைக்கும் ஏனைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை அதே பண்பை பேணுவதாகவே அறிகிறேன்.
தமிழ் வரிவடிவமும் கிரந்த வரி வடிவமும் பிராமி வரி வடிவத்திலிருந்து உருவானவை என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் பிராமி அசோக சக்கரவர்த்தி ஆட்சிப் பரப்பில் இருந்த பிராமியை விட வேறுபட்டது. ஒரு கால கட்டத்தில் தமிழை எழுத தனி வரி வடிவமாகவும் வடமொழியை எழுத கிரந்த வரி வடிவமாகவும் பிராமி வரி வடிவத்தைப் பிரித்தார்கள். இணையத்தில் தேடினால் இதற்கு ஆதாரங்கள் கிடைக்கும்.
கிரந்த வரி வடிவம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் ஒருங்கோட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் கிரந்த எழுத்து தடை செய்யப்படவில்லை. எத்தனையோ கட்டுரைகளில் மட்டுமன்றி தலைப்புக்களிலும் இடம் பெற்றுள்ளது. அப்படியிருக்க நான் எழுதும் கட்டுரைகளில் கிரந்த எழுத்துக்கள் உடனே மாற்றப் பட்டுள்ளன. கிரந்த எழுத்தை பயன்படுத்த விரும்பாதவர்கள் தங்கள் எழுத்துக்களில் அதைக் கடைபிடிக்கட்டும். நான் சொற்களை, குறிப்பாக பெயர்ச் சொற்களை சிதைக்க விரும்புவதில்லை. Australia என்பதை ஆஸ்திரேலியா என எழுதக் கூடியதாக இருக்கும்போது வலிந்து நான் ஏன் ஆத்திரேலியா என பெயரை சிதைக்க வேண்டும்? ஸ் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழ் ஒருங்கோட்டில் அங்கீகரிக்கப் பட்ட வரிவடிவம். அதை வைத்து நான் எழுதுகிறேன். அது தமிழ் இல்லை என எந்த அடிப்படையில் மாற்றம் செய்கிறார்கள்? கர்நாடக இசை தொடர்பான கட்டுரைகளில் கிரந்த எழுத்து சேர்க்காமல் சில பெயர்ச் சொற்களை எழுத முடியாது. கருநாடக இசை திராவிட இசை தான். ஆனால் அந்தப் பெயர்களை வைத்த காலகட்டத்தில் கிரந்த வரி வடிவங்கள் அந்நியம் என்ற பேச்சு இருந்ததில்லை.
நான் யாரையும் எதிர்ப்பதற்காக இதை எழுதவில்லை. இதுவரை எனக்கு எதிரிகள் என்றோ அந்நியர்கள் என்றோ யாரும் கிடையாது. நான் யாரையும் சொற்களால் கூட காயப்படுத்தியது கிடையாது. நான் எதையும் "அது வேண்டாம்" என்றோ, "அது கூடாது" என்றோ கூறவில்லை. மற்றவர்களும் அவ்வாறே நடந்தால் எனது தமிழ் எழுத்து தொடரும். - Uksharma3 (பேச்சு) 03:31, 25 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:02, 28 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

கலைமாமணி விருது... தொகு

ஐயா, வணக்கம்! நீங்கள் பார்வையிடக் கூறிய பக்கத்தினைப் பார்த்தேன்; அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்கு விளங்கவில்லை! நீங்கள் ஒருமுறை பேச்சு:கலைமாமணி விருது எனும் பக்கத்தினையும் பாருங்கள்! உரிய மேற்கோள்களை சுட்டிக்காட்டி, இக்கட்டுரையானது மேம்படுத்தப்பட வேண்டும் என்றே நானும் கருதுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:43, 27 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் செல்வா, கலைமாமணி விருது பக்கத்தை முன்னர் பார்த்திருக்கிறேன். இன்று அதன் பேச்சு பக்கத்தைப் பார்த்தேன்.
முன்னர் கலைமாமணி விருது பக்கத்தைப் பார்த்த பின்னர் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் இணையதளத்தை பார்த்தேன். அதிலுள்ள தொடர்பு பக்கத்துக்கு சென்று மின்னஞ்சல் முகவரி பெற்று 1955 இலிருந்து கலைமாமணி விருது பெற்றவர்களின் அதிகார பூர்வமான பட்டியலை இணையதளத்தில் வெளியிடுமாறும், இல்லையேல் அதனை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என அறியத் தருமாறும் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். இரண்டு வாரங்களாகியும் இன்னும் ஒரு பதிலும் இல்லை. இன்று மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். (tneinm@tn.gov.in) முடிந்தால் நீங்களும் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். அதிகம் பேர் கேட்டால் அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கக் கூடும். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 16:30, 27 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
இந்தப் பக்கத்தைப் பாருங்கள். தொடர்பு அதிகாரி கவிஞர் இளையபாரதியின் தொலைபேசி இலக்கம் உள்ளது. முடிந்தால் பேசிப் பாருங்கள். Uksharma3 (பேச்சு) 16:41, 27 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அருமை! கண்டிப்பாக நானும் மின்னஞ்சல் அனுப்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:00, 28 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மேலே குறிப்பிட்டவரின் நகர்பேசிக்கு நேற்று அழைப்பு விடுத்தேன். அது அணைக்கப்பட்டிருந்தது. சற்று நேரம் கழித்து அவர் அழைத்தார். "யாரது" என்று கேட்டார். சொன்னேன். விடயத்தை சொன்னேன். 'உம்' கொட்டிக்கொண்டிருந்துவிட்டு எதுவும் சொல்லாமலே இணைப்பை துண்டித்து விட்டார். - Uksharma3 (பேச்சு) 09:27, 29 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

அறிஞர்கள் தொகு

நீங்கள் ஆரம்பித்த அறிஞர்கள் குறித்த கட்டுரைகளை அவரவர்களின் பிறந்த தேதி, ஆண்டு, இறந்த தேதி, ஆண்டுகளின் பக்கங்களிலும் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, முடிகொண்டான் வெங்கடராம ஐயர் கட்டுரையை அக்டோபர் 15, செப்டம்பர் 13, 1897, 1975 ஆகிய கட்டுரைகளில் பிறப்பு இறப்புப் பகுதிகளில் இணைக்கலாம். முடிந்தால் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:38, 28 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஆலோசனைக்கு மிக்க நன்றி. முடிந்தவரை செய்கிறேன். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 12:02, 28 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஐயா, வணக்கம்! மேதை ராஜரத்தினம் பிள்ளை குறித்த கட்டுரை, ஆங்கில விக்கிப்பீடியாவில் இதுவரை இல்லை. ஆர்வமும், நேரமும் இருந்தால் எழுதி உதவுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

மன்னிக்கவும்; இருக்கிறது! இப்போது மொழியிடை இணைப்பு தந்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

  விருப்பம் - Uksharma3 (பேச்சு) 09:08, 29 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]


மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Uksharma3/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:57, 2 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

என் கட்டுரைகளின் தரம் பற்றி மற்றவர்கள் தான் சொல்லவேண்டும். நான் தரமான கட்டுரைகளையே படைக்க விரும்புகிறேன். எண்ணிக்கை தானாக வந்துவிட்டுப் போகிறது. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி. - Uksharma3 (பேச்சு) 12:26, 2 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

பேச்சுப் பக்க உரையாடல்களை பரணேற்றுதல்... தொகு

வணக்கம்! பேச்சுப் பக்கத்திலுள்ள உரையாடல்களை பெரும்பாலும் நாம் நீக்குவதில்லை. ஒரு ஆவணமாகக் கருதி இதனை நாம் செய்வதில்லை. பக்கம் நீண்டுவிட்டதாகக் கருதினால், பழைய உரையாடல்களை பரணில் ஏற்றுகிறோம் (archiving)

 • என்னுடைய பேச்சுப் பக்கத்தினை ஒரு உதாரணமாக நீங்கள் பார்க்கலாம் - மேலே... வலதுகை ஓரம்... ஆவணத் தொகுப்புகள் 1 2 3 என இருக்கும்! 25 அல்லது 50 உரையாடல்கள் ஆனதும் அவரவர் விருப்பப்படி பரணில் ஏற்றுகிறார்கள்!
 • உதவிக்கு இங்கு பாருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
ஆம், அவற்றைக் கட்டாயம் பரணேற்ற வேண்டும். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 07:28, 5 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஓராண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூக்களை நான் பரனேற்றுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:37, 28 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

திருக்கோடிக்காவல் தொகு

வணக்கம்! இந்தக் கட்டுரையின் இறுதியில் 'மருகர்' எனும் சொல் இருக்கிறது. இதனைக் கொஞ்சம் கவனியுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மருமகனை மருகர் என்றும் கூறுவர்.--Kanags \உரையாடுக 06:41, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஓ! இந்தச் சொல்லை இதுவரை அறிந்ததில்லை! இது இலங்கையில் வழங்கப்படுகிறதா? இது பேச்சுத் தமிழா அல்லது எழுத்திலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மருகர் என்றால், co-brother என்கிறது தமிழ் விக்சனரி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:31, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
எழுத்திலேயே பரவலான பயன்பாடு. //தங்கை பிள்ளை, தமக்கை மகன், மகளை மணந்தவன் ஆகியோர் மருகர் எனப் பெறுவர். மணம் பெற வந்தவர் ஆதலின் அவர்களை மருமகர் என அழைப்பதும் உண்டு. அவர்களையும் பிரியமுள மருகர் என பேசுவர். ஏரில் கூட்டிய எருமை மாமனும் மருகனும் போன்ற அன்பினர் என்பது சீவக சிந்தாமணி.// [1]. இதனைக் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் தொடருவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 09:08, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நல்லது; அறிந்துகொள்ளும் ஆர்வமே, வேறொன்றுமில்லை! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:00, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

செல்வசிவகுருநாதன், பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாளின் பிரபலமான பக்திப் பாடல் ஒன்றுளது. மாலோன் மருகனே - Uksharma3 (பேச்சு) 14:08, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

Kanags, உங்கள் விளக்கம் அருமை! நன்றி. - Uksharma3 (பேச்சு) 14:08, 20 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

Return to the user page of "Uksharma3/தொகுப்பு 1".