சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

சங்க காலம் தமிழ்ப் புலவர்கள்
(பெண் புலவர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.

பிற்காலத்தில் பெண்பாற் புலவர்களின் பெயர் எவ்வாறு சுட்டப்பட்டதெனின், அவர்கள் எழுதிய இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்தே அவர்களுக்கு பெயர் வைக்கப்பட்டது என்பதே உண்மை.எடுத்துக்காட்டாக செம்புலம் பற்றி ஒரு புலவர் பாடுகிறார். அவர் பெயர் ஆய்வாளர்களால் அறியப்படவில்லை. ஆயினும் கவிதை இரசம் கொட்டுகிறது. எனவே அப்புலவருக்கு செம்புலப்பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.

சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர்.[சான்று தேவை] இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநர் ஆற்றுப்படை, நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

எண் பெண் புலவர் பெயர் அகநானூறு புறநானூறு குறுந்தொகை பதிற்றுப்பத்து பொருநர் ஆற்றுப்படை நற்றிணை மொத்தம்
1 ஔவையார் 5 33 15 ... ... 7 60
2 அஞ்சில் அஞ்சியார் ... ... ... ... ... 1 1
3 அஞ்சியத்தை மகள் நாகையார் 1 ... ... ... ... ... 1
4 அள்ளூர் நன்முல்லையார் 1 1 9 ... ... ... 11
5 அணிலாடு முன்றிலார் ... ... 1 ... ... ... 1
6 ஆதிமந்தி ... ... 1 ... ... ... 1
7 ஒக்கூர் மாசாத்தியார் 2 1 5 ... ... ... 8
8 ஓரிற் பிச்சையார் ... ... 1 ... ... ... 1
9 கச்சிப்பேட்டு நன்னாகையார் ... ... 8 ... ... ... 8
10 கழார்க்கீரன் எயிற்றியார் 4 ... 3 ... ... 2 9
11 காக்கைப்பாடினி நச்செள்ளையார் ... 1 1 10 ... ... 12
12 காவற்பெண்டு ... 1 ... ... ... ... 1
13 காமக்கணி நப்பசலையார் 2 2 ... ... ... 1 5
14 குமுழி ஞாழல் நப்பசையார் 1 ... ... ... ... ... 1
15 குற மகள் இளவெயினியார் ... 1 ... ... ... ... 1
16 குறமகள் குறிஎயினி ... ... ... ... ... 1 1
17 தாயங்கண்ணியார் ... 1 ... ... ... ... 1
18 நக்கண்ணையார் 1 3 ... ... ... 2 6
19 நல்வெள்ளியார் 1 ... 1 ... ... 2 4
20 பாரிமகளிர் ... 1 ... ... ... ... 1
21 பூங்கனுத்திரையார் ... 1 2 ... ... ... 3
22 பெருங்கோப்பெண்டு ... 1 ... ... ... ... 1
23 இளவெயினி ... 1 ... ... ... ... 1
24 பொன்முடியார் ... 3 ... ... ... ... 3
25 பொதும்பில் புல்லளங்கண்ணியார் 1 ... ... ... ... ... 1
26 மாற்பத்தி ... 1 ... ... ... ... 1
27 மாறோகத்து நப்பசலையார் ... 7 ... ... ... 1 8
28 முடத்தாமக் கண்ணியார் ... ... ... ... 1 ... 1
29 முள்ளியூர் பூதியார் 1 ... ... ... ... ... 1
30 வெள்ளி வீதியார் 2 ... 8 ... ... 3 13
31 வெண்ணிக் குயத்தியார் ... ... 1 ... ... ... 1
32 மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் ... ... ... ... ... 2 2

சங்க கால பெண்பாற் புலவர்கள்[1]

தொகு
  1. அச்சியத்தை மகள் நாகையார்
  2. ஔவையார்
  3. அள்ளுரர் நன்முல்லை
  4. ஆதிமந்தி - குறுந் 3
  5. இளவெயினி - புறம் 157
  6. உப்பை ஃ உறுவை
  7. ஒக்கூர் மாசாத்தியார்
  8. கரீனா கண்கணையார்
  9. கவியரசி
  10. கழார் கீரன் எயிற்றியார்
  11. கள்ளில் ஆத்திரையனார்
  12. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
  13. காமக்கணிப் பசலையார்
  14. காரைக்காலம்மையார்
  15. காவற்பெண்டு
  16. கிழார் கீரனெயிற்றியார்
  17. குடபுலவியனார்
  18. குமிழிநாழல் நாப்பசலையார்
  19. குமுழி ஞாழல் நப்பசையார்
  20. குறமகள் ஃ இளவெயினி
  21. குறமகள் ஃ குறிஎயினி
  22. குற மகள் இளவெயினியார்
  23. கூகைக்கோழியார்
  24. தமிழறியும் பெருமாள்
  25. தாயங்கண்ணி - புறம் 250
  26. நக்கண்ணையார்
  27. நல்லிசைப் புலமை மெல்லியார்
  28. நல்வெள்ளியார்
  29. நெட்டிமையார்
  30. நெடும்பல்லியத்தை
  31. பசலையார்
  32. பாரிமகளிர்
  33. பூங்கண்ணுத்திரையார்
  34. பூங்கண் உத்திரையார்
  35. பூதபாண்டியன் தேவியார்
  36. பெண்மணிப் பூதியார்
  37. பெருங்கோப்பெண்டு
  38. பேய்மகள் இளவெயினி
  39. பேயனார்
  40. பேரெயென் முறுவலார்
  41. பொத்தியார்
  42. பொன்மணியார்
  43. பொன்முடியார்
  44. போந்தலைப் பசலையார்
  45. மதுவோலைக் கடையத்தார்
  46. மாற்பித்தியார்
  47. மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
  48. மாறோக்கத்து நாப்பசலையார்
  49. முள்ளியூர் பூதியார்
  50. முன்னியூப் பூதியார்
  51. வரதுங்க ராமன் தேவியார்
  52. வருமுலையாருத்தி
  53. வில்லிபுத்தூர்க் கோதையார்
  54. வெண்ணிக் குயத்தியார்
  55. வெள்ளி வீதியார்
  56. வெறிபாடிய காமக்கண்ணியர்

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [1] சங்க காலப் பெண்பாற் புலவர்கள் பட்டியல் தமிழ் எச்சங்களின் பேழை