மலப்புறம் பெருநகரப் பகுதி

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மாநகர்பகுதி

மலப்புறம் பெருநகரப் பகுதி (Malappuram metropolitan area) என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மலப்புறம், மஞ்சேரி நகரை மையமாகக் கொண்ட ஒரு நகர்ப்புற ஒருங்கிணைப்பு பகுதி ஆகும். [3] இது இந்தியாவின் 25வது பெரிய மாநகர்ப்புற பகுதி மற்றும் கேரளத்தின் நான்காவது பெரிய மாநகர் பகுதியாகும்.

மலப்புறம் பெருமாநகரப் பகுதி
மேலிருந்து கடிகார வரிசையில்:
மலப்புறம் நகரமண்டபம், பொன்னானி துறைமுகம், சாம்ரவட்டம் ஒழுங்குபடுத்தியுடனான பாலம், கோட்டக்குன்னு பூங்கா, பையநாடு ஆடுகளம், மகா கவி மொயின்குட்டி வைத்தியர் ஸ்மாரகம், கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், , பொன்னானி துறைமுகம்
மலப்புறம் பெருமாநகரப் பகுதி
மலப்புறம் பெருமாநகரப் பகுதி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
பரப்பளவு
 • மொத்தம்858 km2 (331 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்17,29,522
 • அடர்த்தி2,000/km2 (5,200/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-10, KL-55, KL-84, KL-65,KL-53,KL-54
அருகில் உள்ள நகரங்கள்மலப்புறம்,மஞ்சேரி
பாலின விகிதம்1102 /1000
கல்வியறிவு94.14%

இது மலப்புரம் நகராட்சியும், அதன் அருகில் உள்ள நகராட்சிகளையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இன்னும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாத, பத்து இலட்சத்துக்கும் கூடுதலான நகர்ப்புற ஒருங்கிணைப்பைக் கொண்ட கேரளத்தின் ஒரே நகரமாக இது உள்ளது. 2020 சனவரியில் நகர்ப்புற வளர்ச்சியின் அடிப்படையில் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) நடத்திய ஆய்வின்படி, 2015 மற்றும் 2020 இக்கு இடையில் 44.1% நகர்ப்புற வளர்ச்சியுடன் இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. [4] 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலப்புறம் பெருநகரப் பகுதியில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 94.14% என்று உள்ளது. இது தேசிய நகர்ப்புற கல்வியறிவு விகித சராசரியான 85% ஐ விட அதிகமாகும்.

நகர்ப்புற ஒருங்கிணைப்பின் பகுதிகள்

தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலப்புரம் பெருநகரப் பகுதி பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது: [5]

வ.எண். இடம் வகை மக்கள் தொகை
(2011)
1 மலப்புறம் நகராட்சி 68,127
2 மஞ்சேரி நகராட்சி 97,104
3 பொன்னானி நகராட்சி 90,491
4 கொண்டோட்டி நகராட்சி 59,256
5 திரூரங்காடி நகராட்சி 56,632
6 திரூர் நகராட்சி 56,058
7 கோட்டக்கல் நகராட்சி 44,382
8 வளஞ்சேரி நகராட்சி 40,318
9 தென்னல கணக்கெடுப்பிலுள்ள நகரம் 56,546
10 மூனியூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 55,535
11 வேங்கரா கணக்கெடுப்பிலுள்ள நகரம் 48,600
12 தானாலூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 47,976
13 பள்ளிக்கல் பசார் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 46,962
14 கோடூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 45,459
15 அப்து ரகுமான் நகர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 41,993
16 கண்ணமங்கலம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 41,260
17 திரிபிரங்கோடு கணக்கெடுப்பிலுள்ள நகரம் 41,167
18 நன்னம்பிரா கணக்கெடுப்பிலுள்ள நகரம் 40,543
19 ஒத்துக்குங்கல் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 39,139
20 வாழையூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 36,909
21 பரப்பூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 36,270
22 கூட்டிலங்காடி கணக்கெடுப்பிலுள்ள நகரம் 36,602
23 நெடுவ கணக்கெடுப்பிலுள்ள நகரம் 35,996
24 தலக்காடு கணக்கெடுப்பிலுள்ள நகரம் 35,820
25 மாறஞ்சேரி கணக்கெடுப்பிலுள்ள நகரம் 35,011
26 பெருவள்ளூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 34,941
27 செலம்பரா கணக்கெடுப்பிலுள்ள நகரம் 34,149
28 ஆலம்கோடு கணக்கெடுப்பிலுள்ள நகரம் 33,918
29 எடப்பாள் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 32,550
30 தேஞ்ஞிப்பாலம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 32,045
31 செரியமுண்டம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 31,212
32 இரிம்பிளியம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 30,635
33 செருகாவு கணக்கெடுப்பிலுள்ள நகரம் 30,126
34 ஊரகம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 29,157
35 பெருமண்ணா கணக்கெடுப்பிலுள்ள நகரம் 27,278
36 காலடி கணக்கெடுப்பிலுள்ள நகரம் 25,872
37 பொன்முண்டம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 25,855
38 குட்டிப்புரம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 25,750
39 திருநாவாய் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 24,790
40 அரியல்லூர் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 22,558
41 நடுவட்டம் கணக்கெடுப்பிலுள்ள நகரம் 21,273[5]
42 புத்தனத்தாணி கணக்கெடுப்பிலுள்ள நகரம் 20,480

மலப்புறம் மாநகராட்சிக்கான முன்மொழிவு

தொகு
 
மலப்புரம் மாநகர வரைபடம் முன்மொழியப்பட்ட மாநகராட்சி எல்லைகளைக் காட்டுகிறது

மலப்புறம் மட்டுமே, அதன் வரம்பிற்குள் எந்த மாநகராட்சியும் இல்லாத கேரளத்தின் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பு (பெருநகரப் பகுதி) ஆகும். ஆனால், மலப்புரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மலப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. [6] முன்மொழியப்பட்ட மலப்புரம் மாநகராட்சியானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • மலப்புறம் நகராட்சி
  • மஞ்சேரி நகராட்சி
  • கோட்டக்கல் நகராட்சி
  • அனக்காயம் புறநகர்
  • திருக்கலங்கோடு, மஞ்சேரியின் புறநகர் சிற்றூர்
  • கூட்டிலங்கடி, மலப்புரத்தின் புறநகர் சிற்றூர்
  • பூக்கோட்டூர், மலப்புரத்தின் புறநகர் சிற்றூர்
  • கோடூர், மலப்புரத்தின் புறநகர் சிற்றூர்
  • பொன்மலா, மலப்புரத்தின் புறநகர் சிற்றூர்
  • ஒத்துக்குங்கல், மலப்புரத்தின் புறநகர் பகுதி
  • மக்கரபரம்ப [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Area and population of towns in Malappuram metropolitan area" (PDF). censusindia.gov.in.
  2. "Urban Agglomerations/Cities having population 1 million and above" (PDF). The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  3. ""Cities of India - statewise". Archived from the original on 2016-08-25. பார்க்கப்பட்ட நாள் 2024-01-31.
  4. "3 of world's 10 fastest-growing urban areas are in Kerala: Economist ranking". 8 Jan 2020. பார்க்கப்பட்ட நாள் 13 Jan 2020.
  5. 5.0 5.1 "Constituents of Malappuram metropolitan area".
  6. 6.0 6.1 "Proposed Malappuram Municipal Corporation". 16 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.