இலங்கையின் மாவட்டங்கள்

இலங்கையில் உள்ள நிர்வாகப் பிரிவு
(மாவட்டம் (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையின் மாவட்டங்கள் (disticts) என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்[2] மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.[3] நடுவண் அரசு மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.[4] அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.[5]

இலங்கையின் மாவட்டம்
District
வகைஇரண்டாம் நிலை நிருவாக அலகு
அமைவிடம்இலங்கை
எண்ணிக்கை25 (as of பெப்ரவரி 1984)
மக்கள்தொகை92,238–2,324,349
பரப்புகள்699–7,179 கிமீ²
அரசுமாவட்டச் செயலாளர்
உட்பிரிவுகள்பிரதேச செயலகம்

மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.[1] பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]

மாவட்டத் தரவுகள்

தொகு

2012 கணக்கெடுப்பின் படி, மாவட்ட ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:

மாவட்டம் மாவட்ட
நிலவரை
மாகாணம் மாவட்டத்
தலைநகர்
நிலப்
பரப்பு
கிமீ2 (மை2)[7]
உள்ளூர்
நீர்ப்
பரப்பு
கிமீ2 (மை2)[7]
மொத்தப்
பரப்பு
கிமீ2 (மை2)
மக்கள்
தொகை
(2012)[8]
மக்கள்
அடர்த்தி
/கிமீ2
(/மைல்2)[a]
அம்பாறை   கிழக்கு அம்பாறை 4,222 (1,630) 193 (75) 4,415 (1,705) 649,402 154 (400)
அனுராதபுரம்   வடமத்திய அனுராதபுரம் 6,664 (2,573) 515 (199) 7,179 (2,772) 860,575 129 (330)
பதுளை   ஊவா பதுளை 2,827 (1,092) 34 (13) 2,861 (1,105) 815,405 288 (750)
மட்டக்களப்பு   கிழக்கு மட்டக்களப்பு 2,610 (1,010) 244 (94) 2,854 (1,102) 526,567 202 (520)
கொழும்பு   மேற்கு கொழும்பு 676 (261) 23 (8.9) 699 (270) 2,324,349 3,438 (8,900)
காலி   தெற்கு காலி 1,617 (624) 35 (14) 1,652 (638) 1,063,334 658 (1,700)
கம்பகா   மேற்கு கம்பகா 1,341 (518) 46 (18) 1,387 (536) 2,304,833 1,719 (4,450)
அம்பாந்தோட்டை   தெற்கு அம்பாந்தோட்டை 2,496 (964) 113 (44) 2,609 (1,007) 599,903 240 (620)
யாழ்ப்பாணம்   வடக்கு யாழ்ப்பாணம் 929 (359) 96 (37) 1,025 (396) 583,882 629 (1,630)
களுத்துறை   மேற்கு களுத்துறை 1,576 (608) 22 (8.5) 1,598 (617) 1,221,948 775 (2,010)
கண்டி   மத்திய கண்டி 1,917 (740) 23 (8.9) 1,940 (750) 1,375,382 716 (1,850)
கேகாலை   சபரகமுவா கேகாலை 1,685 (651) 8 (3.1) 1,693 (654) 840,648 499 (1,290)
கிளிநொச்சி   வடக்கு கிளிநொச்சி 1,205 (465) 74 (29) 1,279 (494) 113,510 94 (240)
குருணாகல்   வடமேற்கு குருணாகல் 4,624 (1,785) 192 (74) 4,816 (1,859) 1,618,465 350 (910)
மன்னார்   வடக்கு மன்னார் 1,880 (730) 116 (45) 1,996 (771) 99,570 53 (140)
மாத்தளை   மத்திய மாத்தளை 1,952 (754) 41 (16) 1,993 (770) 484,531 248 (640)
மாத்தறை   தெற்கு மாத்தறை 1,270 (490) 13 (5.0) 1,283 (495) 814,048 641 (1,660)
மொனராகலை   ஊவா மொனராகலை 5,508 (2,127) 131 (51) 5,639 (2,177) 451,058 82 (210)
முல்லைத்தீவு   வடக்கு முல்லைத்தீவு 2,415 (932) 202 (78) 2,617 (1,010) 92,238 38 (98)
நுவரெலியா   மத்திய நுவரெலியா 1,706 (659) 35 (14) 1,741 (672) 711,644 417 (1,080)
பொலன்னறுவை   வடமத்தி பொலன்னறுவை 3,077 (1,188) 216 (83) 3,293 (1,271) 406,088 132 (340)
புத்தளம்   வட மேல் புத்தளம் 2,882 (1,113) 190 (73) 3,072 (1,186) 762,396 265 (690)
இரத்தினபுரி   சபரகமுவா இரத்தினபுரி 3,236 (1,249) 39 (15) 3,275 (1,264) 1,088,007 336 (870)
திருகோணமலை   கிழக்கு திருக்கோணமலை 2,529 (976) 198 (76) 2,727 (1,053) 379,541 150 (390)
வவுனியா   வடக்கு வவுனியா 1,861 (719) 106 (41) 1,967 (759) 172,115 92 (240)
மொத்தம் 62,705 (24,211) 2,905 (1,122) 65,610 (25,330) 20,263,723 323 (840)

மேலும் சில தகவல்கள்

தொகு
மாவட்டம் பிரதேச செயலாளர் பிரிவு பிரதேச சபைகள் மாநகரங்கள் நகரங்கள் வட்டாரங்கள் தேர்தல் தொகுதிகள் ஊரூழியர் பிரிவுகள் கிராமங்கள் மக்கள்தொகை 1981-2001 வளர்ச்சிவீதம் மக்களடர்த்தி பரப்பளவு நீர்
கொழும்பு 13 6 4 3 121 15 557 808 2234289 1.3 3305 699 23
கம்பகா 13 12 2 5 72 13 1177 1911 2066096 1.9 1541 1387 46
களுத்துறை 14 10 0 4 35 8 762 2652 1060800 1.2 673 1598 22
கண்டி 20 17 1 4 58 13 1188 2987 1272463 1 664 1940 23
மாத்தளை 11 11 1 0 13 4 545 1355 442427 1.1 227 1993 41
நுவரெலியா 5 5 1 2 24 4 491 1421 700083 0.7 410 1741 35
காலி 18 15 1 2 37 10 896 2311 990539 1 613 1652 35
மாத்தறை 16 12 1 1 21 7 650 1598 761236 0.8 599 1283 13
அம்பாந்தோட்டை 12 9 0 2 12 4 576 1319 525370 1.1 210 2609 113
யாழ்ப்பாணம் 14 12 1 3 52 10 435 954 490,621* -2 528 1025 96
வவுனியா 4 4 0 1 11 1 102 527 149,835* 2.2 81 1996 116
முல்லைத்தீவு 4 4 0 0 0 1 127 516 121,667* 2.2 50 1967 106
கிளிநொச்சி 3 3 0 0 0 1 95 258 127,263* 1.6 106 2617 202
மட்டக்களப்பு 12 10 1 1 19 3 345 857 486,447* 1.9 186 2854 244
அம்பாறை 19 14 0 2 9 4 504 876 589344 2 140 4415 193
திருகோணமலை 10 10 0 1 12 3 230 645 340,158* 1.4 135 2727 198
குருநாகல் 27 18 1 1 21 14 1610 4509 1452369 0.9 314 4816 192
புத்தளம் 16 10 0 2 20 5 548 1284 705342 1.8 245 3072 190
அனுராதபுரம் 22 18 1 0 10 7 694 3085 746466 1.2 112 7179 515
பொலன்னறுவை 7 6 0 0 0 3 290 657 359197 1.6 117 3293 216
பதுளை 15 14 1 2 29 9 567 2229 774555 0.9 274 2861 34
மொனராகலை 11 10 0 0 0 3 319 1198 396173 1.8 72 5639 131
இரத்தினபுரி 17 13 1 1 24 8 575 1941 1008164 1.2 312 3275 39
கேகாலை 11 10 0 1 11 9 573 1677 779774 0.6 463 1693 8

குறிப்புகள்

தொகு
  1. மக்கள் அடர்த்தி நிலப்பரப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "At a Glance". Sri Lanka in Brief. இலங்கை அரசு. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2009.
  2. "Kilinochchi a brief look". டெய்லி நியூஸ். 27 ஏப்ரல் 2009. http://archives.dailynews.lk/2009/04/27/Visit.asp?id=s02. பார்த்த நாள்: 1 August 2009. 
  3. "Vision & Mission". District Secretariats Portal. Ministry of Public Administration & Home Affairs, Sri Lanka. Archived from the original on 13 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2009.
  4. "About Us". Vavuniya District Secretariat. Archived from the original on 12 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2009.
  5. "Performs Report and Accounts—2008" (PDF). District and Divisional Secretariats Portal—Ministry of Public Administration and Home Affairs. Archived from the original (PDF) on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-29.
  6. "Identification of DS Divisions of Sri Lanka Vulnerable for food insecurity" (PDF). உலக உணவுத் திட்டம். பார்க்கப்பட்ட நாள் 21 July 2009.
  7. 7.0 7.1 "Table 1.1: Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2014. இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.
  8. "Census of Population and Housing of Sri Lanka, 2012 - Table A1: Population by district,sex and sector" (PDF). இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம். Archived from the original (PDF) on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_மாவட்டங்கள்&oldid=3619398" இலிருந்து மீள்விக்கப்பட்டது