மு. அ. சிதம்பரம் அரங்கம்
முத்தையா அண்ணாமலை சிதம்பரம் அரங்கம் அல்லது பொதுவாகச் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ச்சியாகப் போட்டிகள் நடைபெற்றுவரும் மைதானங்களுள் மிகப்பழைய மைதானம் இதுவாகும்.[2] இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் மு. அ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934ஆம் ஆண்டு முதலாவது தேர்வுப் போட்டி நடைபெற்றது.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | |||||||
மு. அ. சிதம்பரம் மைதானம் | |||||||
அரங்கத் தகவல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | சேப்பாக்கம், சென்னை | ||||||
உருவாக்கம் | 1916 | ||||||
இருக்கைகள் | 36,446 [1] | ||||||
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு | ||||||
குத்தகையாளர் | தமிழ்நாடு அரசு சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கம் | ||||||
முடிவுகளின் பெயர்கள் | |||||||
அண்ணா பவிலியன் முனை வி. பட்டாபிராமன் முனை | |||||||
பன்னாட்டுத் தகவல் | |||||||
முதல் தேர்வு | 10 பெப்ரவரி 1934: இந்தியா எ இங்கிலாந்து | ||||||
கடைசித் தேர்வு | 13–17 பெப்ரவரி 2021: இந்தியா எ இங்கிலாந்து | ||||||
முதல் ஒநாப | 9 அக்டோபர் 1987: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
கடைசி ஒநாப | 22 மார்ச் 2023: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
முதல் இ20ப | 11 செப்டம்பர் 2012: இந்தியா எ நியூசிலாந்து | ||||||
கடைசி இ20ப | 11 நவம்பர் 2018: இந்தியா v மேற்கிந்தியத் தீவுகள் | ||||||
ஒரே மகளிர் தேர்வு | 7–9 நவம்பர் 1976: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் | ||||||
முதல் மஒநாப | 23 பெப்ரவரி 1984: இந்தியா எ ஆத்திரேலியா | ||||||
கடைசி மஒநாப | 5 மார்ச் 2007: ஆத்திரேலியா எ நியூசிலாந்து | ||||||
முதல் மஇ20ப | 23 மார்ச் 2016: தென்னாப்பிரிக்கா எ அயர்லாந்து | ||||||
கடைசி மஇ20ப | 27 மார்ச் 2016: இங்கிலாந்து எ பாக்கித்தான் | ||||||
அணித் தகவல் | |||||||
| |||||||
22 மார்ச் 2023 இல் உள்ள தரவு மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்போ |
இங்குதான் இந்தியா தேர்வுப் போட்டிகளில் தனது முதல் வெற்றியை 1952ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.
1996இல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
சாதனைகள்
தொகு- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீரேந்தர் சேவாக் தென்னாபிரிக்காவுக்கு எதிராகப் பெற்ற 319 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் சாயிட் அன்வர் இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 194 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி நரேந்திர ஹிர்வானி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 16/136 ஆகும்.
- ராகுல் திராவிட் தேர்வுப் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை இங்கு பூர்த்திசெய்தார்.
- சச்சின் டெண்டுல்கர் தேர்வுப் போட்டியொன்றில் நான்காவது இன்னிங்ஸில் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இங்கு இடம்பெற்றது.
உலகக் கிண்ணம்
தொகு1987 உலகக் கிண்ணம்
தொகு1996 உலகக் கிண்ணம்
தொகு2011 உலகக் கிண்ணம்
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ "MA Chidambaram Stadium". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "About M. A. Chidambaram Stadium". BCCI. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Upcoming Matches at Chennai
- Cricinfo - Grounds - MA Chidambaram Stadium
- M.A Chidambaram Stadium Notable Events
- All about Chidambaram stadium பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Reference பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம்
- Players,Teams statistics பரணிடப்பட்டது 2008-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Stadium pictures[தொடர்பிழந்த இணைப்பு]