ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang Federal Constituency; சீனம்: 兰斗班让国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P023) ஆகும்.[8]
ரந்தாவ் பாஞ்சாங் (P023) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Rantau Panjang (P023) Federal Constituency in Kelantan | |
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி (P023 Rantau Panjang) | |
மாவட்டம் | பாசிர் மாஸ் மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 94,026 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | ரந்தாவ் பாஞ்சாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, பாசிர் மாஸ், ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் பூத்தே, பாச்சோக் |
பரப்பளவு | 392 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சித்தி சைலா யூசோப் (Siti Zailah Mohd Yusoff) |
மக்கள் தொகை | 119,648 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
ரந்தாவ் பாஞ்சாங்
தொகுரந்தாவ் பாஞ்சாங் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[10]
இந்த நகரம் பல்வேறு வகையான விற்பனை பொருட்கள் மற்றும் நினைவு பரிசுப் பொருள்களுக்குப் பிரபலமானது. மலேசியாவின் தாய்லாந்து எல்லைத் தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் பெரும்பாலும் இங்குதான் உள்ளன.
ரந்தாவ் பாஞ்சாங் முக்கிம்கள்
தொகு- பக்காட் (Bakat)
- குவால் நெரிங் (Gual Nering)
- லுபோக் கோங் (Lubok Gong)
- லுபோக் செட்டோல் (Lubok Setol)
- ரகுமாட் (Rahmat)
- ரந்தாவ் பாஞ்சாங் (Rantau Panjang)
- தெலாகா மாஸ் (Telaga Mas)
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி
தொகுரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் ரந்தாவ் பாஞ்சாங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P021 | 1974–1978 | சக்காரியா இசுமாயில் (Zakaria Ismail) |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | இப்ராகிம் முகமது (Ibrahim Muhammad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | அசன் முகமது (Hassan Mohamed) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
7-ஆவது மக்களவை | 1986–1990 | முகமது யாக்கோப் (Mohamed Yaacob) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | டாயிங் சனுசி டாயிங் மரியோக் (Daeng Sanusi Daeng Mariok) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
9-ஆவது மக்களவை | P023 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | அப்துல் பதா அரூன் (Abdul Fatah Harun) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | சித்தி சைலா யூசோப் (Siti Zailah Mohd Yusoff) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தொகுபொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
93,248 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
61,406 | 64.91% | ▼ - 10.17% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
60,527 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
211 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
668 | ||
பெரும்பான்மை (Majority) |
20,636 | 34.09% | + 21.37 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |
ரந்தாவ் பாஞ்சாங் வேட்பாளர் விவரங்கள்
தொகுகட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | சித்தி சைலா யூசோப் (Siti Zailah Mohd Yusoff) |
60,527 | 37,759 | 62.38% | + 1.56% | |
பாரிசான் நேசனல் | சுல்கர்னைன் யூசுப் (Zulkarnain Yusoff) |
- | 17,123 | 28.29% | - 9.81% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | வான் சா சிகான் வான் தின் (Wan Shah Jihan Wan Din) |
- | 4,256 | 7.03% | - 4.05% ▼ | |
பூமிபுத்ரா கட்சி | இப்ராகிம் அலி (Ibrahim Ali) |
- | 1,216 | 2.01% | + 2.01% | |
மலேசிய மக்கள் கட்சி | முகமது சைன் இசுமாயில் (Mohd Zain Ismail) |
- | 173 | 0.29% | + 0.29% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
- ↑ "Rantau Panjang & Golok River". Life in Penang, is more than beautiful. 4 September 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.