வசந்தி சின்னசாமி

வசந்தி சின்னசாமி (ஆங்கிலம்: Wasanthee Sinnasamy; சீனம்: 瓦桑蒂·辛纳萨米) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி; மனித உரிமை செயற்பாட்டாளர்; மற்றும் பேராக் மாநில சட்டமன்றத்தின் ஊத்தான் மெலிந்தாங் தொகுதி உறுப்பினரும் ஆவார்.

வசந்தி சின்னசாமி
YB Wasanthee Sinnasamy
பேராக் மாநில சட்டமன்றம்
ஊத்தான் மெலிந்தாங்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2022 முதல்
ஆட்சியாளர்நசுரின் சா
முன்னையவர்கைருதீன் தர்மிசி
பாரிசான் நேசனல்
தொகுதிஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி
பெரும்பான்மை11,924 (2022)
வாக்காளர்கள்: 27,694
மக்கள் நீதிக் கட்சியின் தேசிய
மகளிர் பிரிவு துணைத் தலைவர்
பதவியில்
2012 – 2022
பாக்காத்தான் அரப்பான் நிர்வாகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வசந்தி சின்னசாமி
(Wasanthee Sinnasamy)

22 சூன் 1967 (1967-06-22) (அகவை 57)
கூலாய், ஜொகூர், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சி
பாக்காத்தான் அரப்பான் (PH)
(2008 முதல்)
வாழிடம்(s)சிம்பாங் அம்பாட், ஊத்தான் மெலிந்தாங், பேராக்
முன்னாள் கல்லூரிஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம், சைபர்ஜெயா (2019)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (2016)
மலாயா பல்கலைக்கழகம் (2010)
வேலைஅரசியல்வாதி

2022-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், 27,694 வாக்காளர்களைக் கொண்ட ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில், 11,924 வாக்குகள் பெற்று, 1,130 வாக்குகள் பெரும்பான்மையில் வசந்தி சின்னசாமி வெற்றி பெற்றார். 70 விழுக்காட்டு சீனர், மலாய் இனத்தவர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் ஒரு தமிழ்ப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு சாதனையாக அறியப்படுகிறது.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (People's Justice Party) (PKR) மகளிர் பிரிவின் தேசியத் துணைத் தலைவர் ஆவார்.[1][2]

பொது

தொகு

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட மூன்று இந்தியப் பெண்கள் மிகச் சிறப்பாக வெற்றி பெற்று சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்களில் வசந்தி சின்னசாமியும் ஒருவராவார்.[3]

மற்ற இருவர்: புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட துளசி மனோகரன்; மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவானி வீரையா

ஜொகூர் கூலாய் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்ற இவர், ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம், சைபர்ஜெயா; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்னை; மலாயா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார்.

பொறுப்புகள்

தொகு
  • நிர்வாகி, சிலாங்கூர் இஜ்ரா அறக்கட்டளை, சா ஆலாம் (2019 - தற்போது வரையில்)[4]
  • இயக்குநர்கள் குழு உறுப்பினர், சிலாங்கூர் பெண்கள் அறவாரியம் (2021- தற்போது வரையில்)[4]
  • அறங்காவலர் குழு உறுப்பினர், தேசிய நல அறக்கட்டளை (2019-2021)[4]
  • இயக்குநர், இந்துஜா நிறுவனம், ரவாங் ஒருங்கிணைந்த தொழில் பூங்கா, ரவாங், சிலாங்கூர் (2014-2019)[4]
  • நிர்வாக உறுப்பினர், கோலா சிலாங்கூர் மாவட்ட நகராட்சி (2013-2014)[4]
  • இயக்குநர், செகல் ஜெயா மழலையர் பள்ளி, சுங்கை பூலோ, சிலாங்கூர் (2007-2012)[4]

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

தொகு




 

2022-இல் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[5][6]

  மலாயர் (50.77%)
  சீனர் (18.77%)
  இதர இனத்தவர் (1.67%)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் வசந்தி சின்னசாமி
(Wasanthee Sinnasamy)
11,924 43.06% + 1.06 %  
பாரிசான் நேசனல் கைருதீன் தர்மிசி
(Khairuddin Tarmizi)
10,794 38.98% - 6.07%
பெரிக்காத்தான் நேசனல் கைருன் நிசாம் மரோசம்
(Khairun Nizam Marosm)
4,976 17.97% + 17.97%  
செல்லுபடி வாக்குகள் (Valid) 27,694 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 485
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 73
வாக்களித்தவர்கள் (Turnout) 28,252 71.91% - 13.02%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 38,513
பெரும்பான்மை (Majority) 1,130 4.08% + 1.03 %  
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Keputusan - Pilihan Raya Umum Malaysia Ke-15". PRU @ Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  2. "Perak representatives". DAP Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  3. "பேராக் மாநிலத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த மூன்று இந்திய பெண்கள்". Thinathanthi News. 22 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Wasanthee Sinnasamy". Parti Keadilan Rakyat. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.
  5. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  6. "undi.info - Buntong (P65-N30) | Malaysiakini". undi.info - Buntong (P65-N30) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.
  7. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Hutan Melintang N54". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_சின்னசாமி&oldid=4161209" இலிருந்து மீள்விக்கப்பட்டது