வான் சுனைடி துங்கு ஜாபார்
வான் சுனைடி துங்கு ஜாபார் (ஆங்கிலம்; Wan Junaidi bin Tuanku Jaafar; மலாய்: Tuan Yang Terutama Tun Pehin Sri Dr. Haji Wan Junaidi bin Tuanku Jaafar) (பிறப்பு: 1 பிப்ரவரி 1946) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; வழக்கறிஞர்; நூலாசிரியர்; காவல்துறை அதிகாரி ஆவார். சரவாக் மாநிலத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
மாண்புமிகு துன் பெகின் செரி வான் சுனைடி துங்கு ஜாபார் Wan Junaidi bin Tuanku Jaafar وان جنيدي توانكو جعفر | |
---|---|
2023-இல் வான் சுனைடி | |
8-ஆவது சரவாக் ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சனவரி 2024 | |
19-ஆவது மலேசிய மேலவைத் தலைவர் | |
பதவியில் 19 சூன் 2023 – 19 சனவரி 2024 | |
செனட்டர் | |
பதவியில் 19 Jun 2023 – 19 Januari 2024 | |
மலேசிய மக்களவை துணைத்தலைவர் | |
பதவியில் 28 ஏப்ரல் 2008 – 4 மார்ச் 2013 | |
சாந்துபோங் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 2004 – 10 அக்டோபர் 2022 | |
பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1990 – 4 மார்ச் 2004 | |
மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2021 – 10 அக்டோபர் 2022 | |
மலேசிய கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021 | |
மலேசிய இயற்கை வளங்கள் அமைச்சர் | |
பதவியில் 28 சூலை 2015 – 10 மே 2018 | |
மலேசிய உள்துறை துணையமைச்சர் | |
பதவியில் 16 மே 2013 – 28 சூலை 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1946[1] சாடோங் ஜெயா, சிமுஞ்சான், பிரித்தானிய சரவாக் முடியாட்சி |
அரசியல் கட்சி | பூமிபுத்ரா கட்சி|ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி|பூமிபுத்ரா கட்சி (PBB) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் (BN) (-2018) சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (2018-) |
துணைவர்(கள்) | டத்தின் செரி பியோனா நோர்ஜனா சிம் அப்துல்லா (தி. 1972; இற. 2022) தோ புவான் பௌசியா முகமட் சானுசி (தி. 2022) |
பிள்ளைகள் | சரிபா பரியா
சரிபா நோங் ஜாசிமா சரீபா நூரில் பரியா |
முன்னாள் கல்லூரி | பக்கிங்காம் பலகலைக்கழகம் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
இணையத்தளம் | wjunaidi |
இவர் 2024 மலேசியா, சரவாக் மாநிலத்தின் 8-ஆவது ஆளுநர் பதவி வகித்தவர் ஆவார். இவர் சரவாக் கட்சிகள் கூட்டணியின் (GPS) ஓர் உறுப்புக் கட்சியான ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியின் (PBB) மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
பதவிகள்
தொகு- 8-ஆவது சரவாக் ஆளுநர் (26 சனவரி 2024)
- 19-ஆவது மேலவைத் தலைவர் (19 சூன் 2023 - 19 சனவரி 2024)
- செனட்டர் (19 சூன் 2023 - 19 சனவரி 2024)
- மக்களவை துணைத்தலைவர் (28 ஏப்ரல் 2008 - 4 மார்ச் 2013)
- பிரதமர் துறை அமைச்சர் (2021 - 2022)
- கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் (2020 - 2021)
- இயற்கை வளங்கள் அமைச்சர் (2015 -2018)
- மலேசிய உள்துறை துணையமைச்சர் (2013 -2015)
- மூத்த உறுப்பினர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
- சாந்துபோங் மக்களவைத் தொகுதி உறுப்பினர் (2004 - 2022)
- பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி உறுப்பினர் (1990 - 2004)
வாழ்க்கை
தொகுவான் சுனைடி துங்கு ஜாபார், 1 பிப்ரவரி 1946 அன்று கம்போங் பெண்டாம், சாடோங் ஜெயா, சிமுஞ்சான், பிரித்தானிய சரவாக் முடியாட்சியில் (சரவாக்) பிறந்தார்.[1][2] 1956 முதல் 1958 வரை அவர் தன் ஆரம்பக் கல்வியை கம்போங் பெண்டாம் ராக்யாட் பள்ளியில் பெற்றார்.
பின்னர், 1959 முதல் 1960 வரை சிமுஞ்சான் அபாங் மான் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அதைத் தொடர்ந்து 1961 முதல் 1963 வரை கூச்சிங்கில் மதராசா பள்ளியில் பயின்றார்.[3] அவர் 17-ஆவது வயதில் ஆஸ்திரேலிய பொறியாளர் அமைப்பின் சாலை அமைப்பபுத் திட்டத்தில் பொதுப்பணித் துறையில் சேர்ந்தார்.
அரச மலேசிய காவல் துறை
தொகுபின்னர் மார்ச் 1964-இல், அரச மலேசிய காவல்துறையில் (Royal Malaysia Police) சேர்ந்து, அதே ஆண்டு கோலாலம்பூரில் காவல்துறைப் பயிற்சியை முடித்தார்.[3] பின்னர், 1968 முதல் 1973 வரை சரவாக் வனக் காவல் படையில் பணியாற்றினார்
அந்தக் காலகட்டத்தில் அவர் இராஜாங் பாதுகாப்புப் பகுதியில் (Rajang Area Security Command) பணிபுரிந்தார். 1969-1973 வரை பொதுவுடைமை ஆதரவாளர்களுக்கு எதிராகப் போராடினார். 1978-இல் இங்கிலாந்தின் பக்கிங்காம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் 1982 முதல் 2008 வரை சரவாக் அரசு துறையில் சட்டப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
விருதுகள்
தொகுமலேசிய விருதுகள்
தொகு- மலேசியா :
- - Order of the Defender of the Realm (SMN) – Tun (2024)[4]
- - Order of Loyalty to the Crown of Malaysia (PSM) – Tan Sri (2023)[5]
- - Order of Meritorious Service (PJN) – Datuk (2003)
- - Order of Loyalty to the Crown of Malaysia (JSM) (2000)
- சரவாக் :
- - Most Exalted Order of the Star of Sarawak (SBS) – Pehin Sri (2024)[6]
- - Most Exalted Order of the Star of Sarawak (PNBS) – Dato Sri (2014)[7]
- - Most Exalted Order of the Star of Sarawak (JBS)
- - Most Exalted Order of the Star of Sarawak (PBS)
- மலாக்கா :
- - Exalted Order of Malacca (DGSM) – Datuk Seri (2017)[8]
தேர்தல் முடிவுகள்
தொகுஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்கு | % | எதிரணி | வாக்கு | % | வாக்கு | பெரும் பான்மை |
% | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1990 | P162 பத்தாங் லுப்பார் | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
5,795 | 54.43% | வான் அபீப் முகமது (சரவாக் மலேசிய மக்கள் சங்கம்) (PERMAS) |
3,130 | 29.40% | 10,813 | 2,665 | 66.97% | ||
அபாங் இசுமாயில் (சுயேச்சை) |
1,722 | 16.17% | ||||||||||
1995 | P174 பத்தாங் லுப்பார் | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
N/A | N/A | போட்டி இல்லை
| |||||||
1999 | P175 பத்தாங் லுப்பார் | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
7,903 | 74.61% | சையது அசுமி (சரவாக் கட்சி) (STAR) |
2,689 | 25.39% | 10,944 | 5,214 | 57.85% | ||
2004 | P193 சாந்துபோங் | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
12,590 | 86.11% | இட்ரிசு புகாரி (சுயேச்சை) |
2,030 | 13.89% | 14,902 | 10,560 | 64.13% | ||
2008 | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
15,800 | 80.39% | ரகமாட் ஐடில் (பிகேஆர்) |
3,855 | 19.61% | 19,959 | 11,945 | 64.73% | |||
2013 | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
24,655 | 85.57% | சுல்ருசுடி முகமது (பிகேஆர்) |
3,719 | 12.91% | 29,286 | 20,936 | 79.12% | |||
அபான்டி செமான் (சுயேச்சை) |
233 | 0.81% | ||||||||||
முரா காதிர் (சரவாக் கட்சி) (STAR) |
206 | 0.71% | ||||||||||
2018 | வான் சுனைடி துங்கு ஜாபார் (பூமிபுத்ரா கட்சி) (PBB) |
26,379 | 79.28% | முகமது பிட்சுவான் சைதி (அமாணா) |
6,894 | 20.72% | 33,868 | 19,485 | 74.23% |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "PROFILE TUAN YANG TERUTAMA YANG DI-PERTUA NEGERI SARAWAK". tyt.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ "TYT Wan Junaidi visits hometown in Kampung Pendam". New Sarawak Tribune. 10 February 2024. https://www.newsarawaktribune.com.my/tyt-wan-junaidi-visits-hometown-in-kampung-pendam. பார்த்த நாள்: 2 March 2024.
- ↑ 3.0 3.1 Edward, Churchill (29 January 2024). "Wan Junaidi: Policeman, parliamentarian, prolific writer and more". The Borneo Post. https://www.theborneopost.com/2024/01/29/wan-junaidi-policeman-parliamentarian-prolific-writer-and-more. பார்த்த நாள்: 2 March 2024.
- ↑ "Wan Junaidi dikurnia gelaran Tun, dilantik Yang di-Pertua Sarawak". Utusan Malaysia (in மலாய்). 2024-01-26. பார்க்கப்பட்ட நாள் 2024-01-29.
- ↑ "839 TERIMA DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT SEMPENA HARI KEPUTERAAN AGONG". BERNAMA (in ஆங்கிலம்). 2023-05-06. பார்க்கப்பட்ட நாள் 2023-06-05.
- ↑ "TYT Sarawak Terima Gelaran Darjah Utama Yang Amat Mulia Satria Bintang Sarawak". UKAS. 28 February 2024. https://ukas.sarawak.gov.my/2024/02/28/tyt-sarawak-terima-gelaran-darjah-utama-yang-amat-mulia-satria-bintang-sarawak. பார்த்த நாள்: 28 February 2024.
- ↑ "Adenan a Datuk Patinggi". Peter Sibon, Lien Cheng. Borneo Post. 13 September 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
- ↑ "Wan Junaidi leads honours list in conjunction with Melaka Yang Dipertua's 79th birthday". Nurul Fhatihah Zakinan. New Straits Times. 12 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 5 April 2010.
நூல்கள்
தொகு- Nilakrisna James, ‘Enlightened’ Jeffrey recalls ISA’s cruelty பரணிடப்பட்டது 30 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம், Free Malaysia Today. 29 September 2011.
- Ian Neubauer, Very hush hush Borneo's 80bn Carbon deal stokes controversy, Al Jazeera Arabic. 2 February 2022
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் வான் சுனைடி துங்கு ஜாபார் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Fadillah Yusof on Facebook