வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகஸ்ட் 2008
- ஆகஸ்ட் 30:
- சூறாவளி குஸ்டாவ்:
- மேற்கு கியூபாவை சூறாவளி அண்மிப்பதாகவும் கிட்டத்தட்ட 200,000 பேர் இடம்பெயருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)
- ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் நகரத்தை சூறாவளி தாக்கும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. (பிபிசி)
- சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- பீகாரில் வெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைப் படகு மூழ்கியதில் அதில் பயணம் செய்த 25 பொதுமக்கள் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- சூறாவளி குஸ்டாவ்:
- ஆகஸ்ட் 29:
- தாய்லாந்தில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நாட்டின் மூன்று விமான நிலையங்களை முற்றுகையிட்டு அவற்றை மூடினர். (தி ஏஜ்)
- ஜோர்ஜியா ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. (ஏஎஃப்பி)
- அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அலாஸ்கா ஆளுனர் சேரா பேலினை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (அலைகள்) (சிஎன்என்)
- ஆகஸ்ட் 27:
- ஐக்கிய அமெரிக்காவின் 2008 அதிபர் தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிட பராக் ஒபாமாவை மக்களாட்சிக் கட்சி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுத்தது. (பிபிசி)
- தாய்லாந்தில் பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பதவியில் இருந்து விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 26:
- தெற்கு ஒசேத்தியா, அப்காசியா ஆகியவற்றை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. (நியூயோர்க் டைம்ஸ்)
- மலேசியாவில் "பெர்மாத்தாங் பாவ்" என்ற நகரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் பெரும் வெற்றி பெற்றார். (ஏபி)
- பீகார் மாநிலத்தில் கோஷி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- ஆகஸ்ட் 25:
- நல்லெண்ன நடவடிக்கையாக 199 பாலஸ்தீன அரசியல் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியிலிருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியது. (நியூஸ்வீக்)
- ஆகஸ்ட் 24:
- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றன. (சின்ஹுவா)
- கிர்கிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆகஸ்ட் 23: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பராக் ஒபாமா டெலவெயர் மேலவை உறுப்பினர் ஜோ பைடனை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (வெப்துனியா)
- ஆகஸ்ட் 22: சோமாலியாவில் இடம்பெற்ற கலவரங்களில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 21: பாகிஸ்தானில் நிகழ்ந்த இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்த்து 76 பேர் கொல்லப்பட்டனர். (சின்ஹுவா)
- ஆகஸ்ட் 20: ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகரின் பராஹாஸ் விமான நிலையத்தில் ஒரு ஸ்பானேர் வானூர்த்தி ஓடுபாதையை விட்டு விலகி தீ பிடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- ஆகஸ்ட் 19:
- லிம்கா சாதனைப் புத்தகத்தில் மிகவும் வயதான மனிதர் என இடம்பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 139 அகவை முதியவர் ஹபீப் மியான் உடல் நலக்குறைவால் இறந்தார். (வெப்துனியா)
- அல்ஜீரியாவில் காவற்துறை பயிற்சி முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 18:
- நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (பிபிசி)
- ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யா தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 17: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது எட்டாவது தங்கப்பதக்கத்தை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வென்று உலக சாதனை படைத்தார். (புளூம்பேர்க்)
- ஆகஸ்ட் 16: ஜமெய்க்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக் 100 மீ விரைவோட்டத்தை 9.69 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். (நியூயோர்க் டைம்ஸ்)
- ஆகஸ்ட் 15:
- நேபாளப் பிரதமராக மாவோயிஸ்ட்கட்சித் தலைவர் பிரசண்டா வெற்றி பெற்றார்.(பிபிசி)
- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 6வது தங்கப் பதக்கத்தைப் பெற்றார். (டைம்ஸ்)
- ஆகஸ்ட் 14:
- இலங்கை, திருகோணமலையில் பெரும் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (டெய்லிமிரர்)
- போலந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு, மற்றும் ஏவுகணைத் தளம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. (ஏபி)
- ஆகஸ்ட் 12: தெற்கு ஒசேத்தியாவில் தமது படை நடவடிக்கை முடிவடைந்ததாக ரஷ்யா அறிவித்தது. (பிபிசி)
- ஆகஸ்ட் 11: 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான 10 மீ கைத்துப்பாக்கி குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தனி நபர் ஒலிம்பிக் விளையாட்டில் முதன் முறையாக ஒரு இந்தியர் தங்கப் பதக்கத்தை பெற்றார். தட்ஸ்தமிழ்
- ஆகஸ்ட் 10:
- கனடா, டொரண்டோவில் டவுன்ஸ்வியூ என்ற இடத்தில் புரொப்பேன் எரிவாயுத் தொழிற்சாலைப் பகுதியில் அதிகால 4:00 மணிக்கு இடம்பெற்ற பெரும் வெடிப்பின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (சிபி)
- ரஷ்யர்களின் பலத்த எறிகணைகளுக்கு நடுவில் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் இருந்து ஜோர்ஜியப் படைகள் வெளியேறியுள்ளனர். (ஏபி)
- சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் மேற்கில் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 9: புர்கினா பாசோவில் தங்கச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 31 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஆகஸ்ட் 8:
- 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. (சிஆர்ஐ)
- ஜோர்ஜியா பிரிந்துபோன தெற்கு ஒசேத்தியாவினுள் நுழைந்து முழு அளவிலாத தாக்குதல்களை ஆரம்பித்தது. (ஜோர்ஜிய வெளிநாட்டமைச்சு)(ரியான்). ஜோர்ஜியப் படைகள் தலைநகர் த்ஸ்கின்வாலியை அண்மித்தன. (பிபிசி)(ராய்ட்டர்ஸ்). ஜோர்ஜியப் படைகள் ரஷ்ய அமைதிப்படையினரைத் தாக்கியதில் பல ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டனர். (ரியான்)
- டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றின் மேலாக ஆற்றில் வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)
- ஆகஸ்ட் 6:
- மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (ஏபிசி ஆஸ்திரேலியா)
- குவாண்டானமோ குடாவில் உள்ள அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒசாமா பின்லாடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான "சலீம் ஹம்டன்" பயங்கரவாதத்துக்கு பொருளுதவி வழங்கியதற்காக குற்றவாளியாகக் கண்டு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது. (புளூம்பேர்க்)
- ஆகஸ்ட் 5:
- தூத்துக்குடி தமிழ்நாட்டின் 10ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. (சிஃபி)
- சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் 6.0 அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (சிஎன்என்)
- ஆகஸ்ட் 4:
- தமிழறிஞர் முனைவர் ச. அகத்தியலிங்கம் புதுச்சேரியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் கொல்லப்பட்டார். (தட்ஸ்தமிழ்)
- இமயமலையின் கே-2 கொடுமுடியில் ஆகஸ்ட் 3 இல் பனிவீழ்ச்சியில் சிக்கிக் காணாமல் போன பன்னாட்டு மலையேறிகளில் 11 பேர் இறந்துவிட்டதாகவும் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- சீனாவின் காஷ்கார் என்ற இடத்தில் காவல்துறையினரின் நிலை ஒன்றைத் தீவிரவாதிகள் தாக்கியதில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் நைனா தேவி என்ற மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். (யாஹூ!)
- ஆகஸ்ட் 2:
- இமயமலையின் கே-2 கொடுமுடியில் ஏற முயன்ற இரண்டு பன்னாட்டு மலையேறிகள் பனிவீழ்ச்சியில் சிக்கி இறந்தனர். மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். (பிபிசி)
- சார்க் நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. (ராய்ட்டர்ஸ்)
- ஆகஸ்ட் 1:
- இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். (யாஹூ!)
- சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென சார்க் நாட்டுத் தலைவர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பை வந்தடைந்தனர். (பிபிசி)