விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 12
தமிழ்ப் பெயர் என்ன?
தொகுCommunity development block (C.D.Block) என்பதற்கு இணையான சொல் என்ன? சில மாநிலங்களில், சில ஊராட்சிகளை ஒன்றிணைத்தது (பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்தது) என ஆங்கில விக்கியில் குறிப்பு உள்ளது. வேறு சில மாநிலங்களில் வட்டங்களுக்கு இணையானது என்ற குறிப்பும் உள்ளது. முதல் குறிப்பின் படி, தமிழில் ஊராட்சி ஒன்றியம் என்ற சொல் உள்ளது. இதை அப்படி பயன்படுத்தலாமா? அல்லது, சமூக வளர்ச்சி மண்டலம் என்றவாறான பெயரில் எழுதவா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:14, 13 அக்டோபர் 2014 (UTC)
பகுப்பு உதவி - இந்திய வார்ப்புருக்கள்
தொகுபகுப்பு:இந்தியா வார்ப்புருக்கள் என்றும் பகுப்பு:இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் என்றும் இருவேறு பகுப்புகளில் இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் பகுக்கப்பட்டுள்ளன. எதனைத் தொடரலாம், எதனை நீக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். சத்தியராஜ் (பேச்சு) 07:24, 14 அக்டோபர் 2014 (UTC)
- பகுப்பு:இந்தியா தொடர்பான வார்ப்புருக்கள் ஐ வைத்திருந்து மற்றதை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 07:42, 14 அக்டோபர் 2014 (UTC)
- மிக்க நன்றி! சத்தியராஜ் (பேச்சு)
அருணாசலப் பிரதேசம் - உதவி
தொகுArunachal Pradesh என்பதை தமிழில் அருணாசலப் பிரதேசம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Arunachal East என்பதை எவ்வாறு மொழிபெயர்ப்பது? "கிழக்கு அருணாசலம்" என்றா அல்லது "கிழக்கு அருணாச்சல்" என்றா? எது சரியானது என பரிந்துரைக்க வேண்டுகிறேன். சத்தியராஜ் (பேச்சு) 07:33, 14 அக்டோபர் 2014 (UTC)
- கிழக்கு அருணாச்சல், கிழக்கு அருணாச்சலம் ஆகிய இரண்டுமே சரி. தமிழ் வழக்கிற்கு ஏற்ப, அருணாச்சலம் என்று எழுதுவது கூடுதல் பொருத்தமாகும். அதிகப் பயன்பாட்டில் உள்ள பிற வழக்குகளை வழிமாற்றாகத் தரலாம். மற்றவற்றை கட்டுரையில் குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 14 அக்டோபர் 2014 (UTC)
- மிக்க நன்றி! சத்தியராஜ் (பேச்சு)
புகைப்படங்கள் நீக்கம் என்ற கடிதங்கள்.
தொகு"விக்கிப்பீடியா page படிமம்:Vellaivinayakarkudamulukku14.jpg has been deleted by Jayarathina" என்றவாறு பல புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக எனக்கு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. நான் துவங்கிய தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் பக்கத்தில் சென்று பார்த்தபோது நான் இட்ட அனைத்துப் படங்களும் இருப்பதை அறிந்தேன். அப்படங்கள் அனைத்தும் அத்தலைப்பு தொடர்பானவையே. இத்தலைப்பு தொடர்பாக புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன எனக்குத் தகவல்கள் வருவதற்கான காரணத்தை அறியவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:23, 6 நவம்பர் 2014 (UTC)
- நண்பரே, நீங்கள் குறிப்பிட்டுள்ள படிமம் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படவில்லை. நீக்கப்பட்டதாக வந்த செய்தியை எங்குப் படித்தீர்கள். தங்களுடைய பயனர் பேச்சுப் பக்கத்திலும் அதற்கான குறிப்புகள் காணப்படவில்லை. தெளிவுபடுத்தவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:23, 21 சனவரி 2015 (UTC)
- வணக்கம். நவம்பர் மாதத்தில் எனக்கு இரு புகைப்படங்கள் நீக்கப்பட்டதாக இரு கடிதங்கள் மின்னஞ்சலில் வந்தன. அப்போதுதான் நான் இந்த ஐயத்தைக் கேட்டு, விக்கிக்கு எழுதினேன். எனக்கு தொடர்ந்து மறுமொழி வராத நிலையில் டிசம்பர் இறுதியில் எனக்கு வந்த மின்னஞ்சல்களை நீக்கிவிட்டேன். தங்கள் மூலமாகக் குறிப்பிட்டுள்ள படிமம் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படவில்லை என்பதை தற்போது அறிந்தேன். நன்றி. தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:21, 23 சனவரி 2015 (UTC)
Invitation to Bengali Wikipedia 10th Anniversary Celebration Conference 2015
தொகுHi Community members,
Bengali Wikipedia community is organizing its 10th Anniversary Celebration Conference at Kolkata on 9 & 10 January 2015. We are planning to invite our friends and well-wishers from different language wiki communities in India to this most auspicious occasion hosted by Bengali Wikimedia community! We are also planning to arrange few 30 scholarships for non-Bengali Indic Wikimedians who are interested in participating in this event. Please select your Five (5) scholarship [1] delegates from your community member for this conference and announce it here before 10th December 2014.
1) Scholarship included with Travel reimbursement upto 2000/- + dormitory or shared accommodation + meals during the conference hours On behalf of Bengali Wikipedia Community (Sorry for writing in English) |
---|
எத்தகு படிமம் ?
தொகுஅடியேனின் வணக்கம் பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி தற்போது மணல்தொட்டியில் பங்களித்துவரும் நான் எவ்வகை படிமங்களை பயன்படுத்துவது,என்று அறிய இயலவில்லை புதியவன் என்பதால் தவறுசெய்து விடுகிறேன்,இதுவரை 3 முறை தடைசெய்யப்பட்டுள்ளேன் தயவுகூர்ந்து எளிமையாக விளக்கவும்.நன்றி இவன்~>பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி
நாயன்மார் என்ற கட்டுரை பற்றி
தொகுநாயன்மார்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குலம் எனும் வரிசைக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? எதை வைத்து 63 நாயன்மார்களின் குலங்களை அங்கீகரித்து இருக்கின்றீர்?
- பெரிய புராணத்தில் ஒவ்வொரு நாயன்மார்களின் குலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரிய புராணம் எழுதிய காலத்தில் இருந்த குல வேறுபாடுகளை சுட்டி அவ்வேறுபாடுகள் இறைவனை அடைய ஒரு தடையில்லை என்று சுட்ட இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றும் எண்ணற்ற பெரிய புராணம், நாயன்மார்கள் குறித்தான நூல்களில் இக்குலச் சுட்டல்களை காண இயலும். மேலும் ஆதாரங்கள் தேவை என்றால் {{ஆதாரம் தேவை}} என்ற வார்ப்புருவினை கட்டுரையில் இடுங்கள். தக்க ஆதாரங்களை தேடிச் சேர்க்க முயலுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:29, 21 சனவரி 2015 (UTC)
சொற்களுக்கு இடையே சீரில்லாத இடைவெளி
தொகுபுளூஸ் கட்டுரையில் சொற்களுக்கு இடையிலான இடைவெளி சரியாக இல்லை. இதை எப்படி சீர் செய்வது? தொகுத்தல் பெட்டியில் சரியாக தான் உள்ளது. என் உலாவியின் இடைமாற்றை (Cache) அகற்றியும் வேறு உலாவியிலும் சோதித்து பார்த்து விட்டேன். - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 18:43, 27 நவம்பர் 2014 (UTC)
- ஆயிற்று--AntonTalk 19:02, 27 நவம்பர் 2014 (UTC)
please show me the publishers of pandiyan mahal by viswaksenar
GitHub
தொகுGitHub என்பதை தமிழில் என்ன பெயரில் அழைப்பது?−முன்நிற்கும் கருத்து Suthir (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கிட்ஹப் எனலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 06:58, 1 சனவரி 2015 (UTC)
- கிட்ஹப் +1 --Photonique (பேச்சு) 16:48, 1 மார்ச் 2015 (UTC)
காப்புரிமை
தொகுநாஞ்சில் ஏடு இப்புத்தகம் என் கைவசம் உள்ளது. இதைப் பதிப்பிதவரோ ஆசிரியரோ வெளியிட்ட பதிப்பக நிறுவனமோ எதுவும் இப்போது இல்லை. இதன் காப்புரிமையைத் தெரிந்து கொள்வது எப்படி? நன்றி.--இரா.பாலா (பேச்சு) 10:25, 4 சனவரி 2015 (UTC)
- காப்புரிமைப் பற்றி அந்நூலில் எந்தக் குறிப்புகளும் இல்லையென்றால், விக்கியில் காப்புரிமை குறித்தான இடத்தினை காலியாக விட்டுவிடலாம். மற்றபடி காப்புரிமையை பதிப்பகங்கள் வாங்காமல் இருப்பின், அது ஆசிரியருக்கு உரியதாகும். மேலும் ஆசிரியர் தற்போது இல்லையென்றாலும், அவருடைய வாரிசுகளுக்கு அக்காப்புரிமை உண்டு. பதிப்பகம் தற்போது இல்லையென்றாலும் பதிப்பகத்தினை நடத்தியவரின் வாரிசுகளுக்கும் உரிமை இருந்தால் சட்டப்படி செல்லும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:34, 21 சனவரி 2015 (UTC)
- இது காப்புரிமை கொண்டுள்ளது. காண்க: Indian Copyright Law --AntonTalk 06:24, 21 சனவரி 2015 (UTC)
முதல்வர் ஆளுநர் ஆட்சிதலைவர்
தொகுமுதல்வர் ஆளுநர், மாவட்ட ஆட்சிதலைவர் , ஆணையர் போன்ற தகவல்களை மாற்றனும். ஏதோ ஓரிடத்தில் (வார்ப்புருவில்) மாற்றினால் அம்மாநிலத்தின் எல்லா இடங்களிலும் தெரியும் படி நாம் மாற்றியுள்ளோம் என நினைக்கிறேன். அது எந்த வார்ப்புரு? சார்க்கண்டு முதல்வரை மாற்றனும் தமிழகத்தை சார்ந்த நிறைய இடங்களிலும் மாற்றனும் (மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவை) --குறும்பன் (பேச்சு) 19:08, 4 சனவரி 2015 (UTC)
- ஆயிற்று, வார்ப்புரு:முதலமைச்சர், வார்ப்புரு:ஆளுநர். மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவற்றை அந்தந்த கட்டுரைகளில் மாற்றுகிறோம் என நினைக்கிறேன். ஒரு எ.கா. கட்டுரையை குறிப்பிட்டால் அதற்கான வார்ப்புருவை எளிதாக கண்டறியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 07:05, 5 சனவரி 2015 (UTC)
- நாமக்கல், கரூர், மதுரை, சங்ககிரி, கரூர், திருவையாறு வட்டம். Infobox Indian jurisdiction & இந்திய ஆட்சி எல்லை என்ற வார்ப்புருக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. --குறும்பன் (பேச்சு) 21:17, 7 சனவரி 2015 (UTC)
அச்சு எடுப்பது எப்படி
தொகுஅச்சு எடுப்பது எப்படி−முன்நிற்கும் கருத்து 59.92.103.143 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- Print பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். உலாவியின் (browser) print option (Ctrl+P) கட்டுரையை மட்டும் அச்சு எடுக்கும்.--சண்முகம்ப7 (பேச்சு) 07:21, 8 சனவரி 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பயனர் தொகுப்புகளின் எண்ணிக்கை எப்படி பார்ப்பது
தொகுதமிழ் விக்கிப்பீடியா பயனர் தொகுப்புகளின் எண்ணிக்கை எப்படி பார்ப்பது. மாத தொகுப்பு எண்ணிக்கை ,நாள் தொகுப்பு எண்ணிக்கை எப்படி பார்ப்பது என்று கூறவும் . புதுவைபிரபு 06:50, 7 சனவரி 2015 (UTC)
- உங்கள் தொகுப்பு விவரங்களைக் காண உங்கள் பயனர் பக்கத்தின் மேலேயுள்ள பங்களிப்புகள் என்ற இணைப்பைச் சொடுக்குங்கள்...அதில் footerஇல் காணும் இணைப்புகளில் தொகுப்பு எண்ணிக்கையை தேர்ந்தெடுங்கள்..உங்கள் தொகுப்புக்களைக் காணலாம்...மாதத் தொகுப்புகளுக்கு இந்த கருவியில் நீங்கள் User:Prabhupuducherry/EditCounterOptIn.js அல்லது User:Prabhupuducherry/EditCounterGlobalOptIn.js பக்கங்களில் விருப்பத்தேர்வு தரவேண்டும். --மணியன் (பேச்சு) 03:51, 8 சனவரி 2015 (UTC)
how to write a tamil letters?
- நான் என் விருப்பத்தேர்வில் தோற்றம் தத்தலில் Vector (பொதுவானது | முன்தோற்றம் | தனிப்பட்ட சி.எசு.எசு (CSS) | தனிபயன் ஜாவாஸ்கிரிப்ட்) - என்பதில் தனிபயன் ஜாவாஸ்கிரிப்டில் ser:Kurumban/EditCounterOptIn.js என்று கொடுத்தேன், என்னால் மாத தொகுப்பு எண்ணிக்கையை பார்க்க முடியவில்லை. Shared CSS/JavaScript for all wikis: Custom CSS | Custom JavaScript என்பதில் Custom JavaScript திறந்து User:Kurumban/EditCounterOptIn.js & User:Kurumban/EditCounterGlobalOptIn.js என்று இரண்டையும் கொடுத்தேன் Ctrl+F5 அழுத்தினேன் (நான் பயன்படுத்துவது நெருப்புநரி)
- Not Opted In
- This useris not opted in. As a result, monthly counts are not available, top pages edited are not available. Please add content to User:Kurumban/EditCounterOptIn.js to opt in locally or add content to User:Kurumban/EditCounterGlobalOptIn.js to optin globally. என்று வருகிறது. வேறு உலாவியில் புகுபதிகை செய்தாலும் அதே சேதி தான் வருகிறது. எங்கு User:Kurumban/EditCounterOptIn.js என்பதை தர வேண்டும்?--குறும்பன் (பேச்சு) 21:04, 20 சனவரி 2015 (UTC)
- இப்போது பாருங்கள். பயனர்:Kurumban/EditCounterOptIn.js --AntonTalk 21:51, 20 சனவரி 2015 (UTC)
நன்றி ஆன்டன் இப்போது வேலை செய்கிறது--குறும்பன் (பேச்சு) 22:11, 20 சனவரி 2015 (UTC)
தலைப்பில் சந்தேகம்
தொகுநான் எங்கள் கல்லூரியில் நாங்கள் துவக்கிய 'குனு / லினக்ஸ் பயனர் குழு' என்னும் தலைப்பில் எங்கள் குழுவைப்பற்றி ஒரு கட்டுரை தொகுக்கலாமா? −முன்நிற்கும் கருத்து Sathishsathi500 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இயலாது. விக்கிப்பீடியா கட்டுரைகள் சிறப்புத் தன்மை மிக்க, செய்தி மதிப்பு மிக்க விடயங்களுக்கே எழுதப்படுகின்றன. காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை--மணியன் (பேச்சு) 09:00, 15 சனவரி 2015 (UTC)
ஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.
புதிய கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி?
தொகுஏற்கனவே உள்ள ஒரு தலைப்பின் கீழ் புதியதாக பதிவேற்றப்பட்ட ஒரு கட்டுரையை இணைப்பு செய்வது எப்படி என்று கூறுங்களேன்.
தமிழில் பெயர் வைப்பதில் சந்தேகம்
தொகு"Yanis Varoufakis" என்னும் பெயரை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது? "யனிஷ் வரோபகிஸ்" என்பது சரியாக இருக்குமா? --Suthir
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) மேலே கூறியுள்ள கோவிலின் முகவரி கொடுத்து உதவவும். நன்றி.--−முன்நிற்கும் கருத்து Chantrasekaran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பை மாற்றுவது எப்படி?
தொகுஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பில் பிழை உள்ளது. அதை மாற்றுவது எப்படி?--Arunnirml (பேச்சு) 17:07, 8 பெப்ரவரி 2015 (UTC)
வரலாற்றை காட்டவும் என்பதற்கு அருகில் இருக்கும் More என்பதை சொடுக்கினால் நகர்த்தவும் என்று வரும் அதில் புதிய தலைப்பை இடலாம். ஏன் நகர்த்துகிறோம் என்ற காரணத்தையும் அதில் தெரிவிக்கவும். --குறும்பன் (பேச்சு) 03:38, 9 பெப்ரவரி 2015 (UTC)
படிமம் நகர்த்தல்
தொகுhttps://en.wikipedia.org/wiki/File:SpiekerCenter.svg -இந்தப் படிமத்தைப் பொதுவகத்திற்கு நகர்த்த வேண்டும். உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--Booradleyp1 (பேச்சு) 04:36, 20 பெப்ரவரி 2015 (UTC)
தகவல் பெட்டி தொடர்பான உதவி
தொகுதமிழ் விக்கிபீடியாவில் தகவல் பெட்டிகளை எப்படிப் பயன்படுத்துவது? Mohammed Ammar (பேச்சு) 07:34, 21 பெப்ரவரி 2015 (UTC)
- முகம்மது அம்மார், எந்தக் கட்டுரையில் தகவல் பெட்டி தேவை எனக் குறிப்பிட்டால் விளக்க முடியும்.--Kanags \உரையாடுக 05:43, 7 மார்ச் 2015 (UTC)
மொழியாக்கம் செய்ய உதவி
தொகுஇந்த விக்கீ கொள்கைகளை சமூக ஒப்பந்தத்தால் மொழியாக்க உதவி தேவை.
பயனர்:Photonique
பலாஸ்காரம்
தொகுபலாஸ்காரம் தமிழ் சொல் தானே - அப்படினா ஏன் பக்கத்தை நீக்க வேண்டும்? பலாஸ்காரம் பக்கத்தை பயனர்:AntanO நீக்க வேண்டும் ?? --Photonique (பேச்சு) 02:08, 7 மார்ச் 2015 (UTC)
- இது எந்த தமிழ் அகர முதலியில் உள்ளது? இவ்வாறான உரையாடல்களை உதவிப்பக்கத்தில் அல்லது பொருத்தமான பக்கத்தில் தொடரவும். உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்தி உள்ளது. --AntonTalk 03:30, 7 மார்ச் 2015 (UTC)
- பலாஸ்காரம் -> [4]
--Photonique (பேச்சு) 03:15, 9 மார்ச் 2015 (UTC)
தமிழாக்க உதவி
தொகுCoupé என்பதினை தமிழில் எப்படி மாற்றுவது?
Sports car என்பதினை பந்தய தானுந்து என்று குறிக்கலாமா?
- -- சத்தியராஜ் (பேச்சு) 06:03, 10 மார்ச் 2015 (UTC)
எனது பரிந்துரைகள்:
- Coupé - குஃபி
- Sports car - விளையாட்டுத் தானுந்து
கட்டுரை
தொகுஎனது கோவையின் வரலாற்று ரயில்பாதை கட்டுரை,என்னால் சரியாக தொகுக்க இயலவில்லை.உதவ முடியுமா?
தமிழில் எவ்வாறு
தொகு- Navigational boxes என்ற பகுப்பினை தமிழில் எவ்வாறு எழுதுவது. திரைப்பட இயக்குனர்களுக்கா உருவாக்கப்பெற்ற வார்ப்புருக்களில் ஆங்கில பகுப்பே தற்போது இருக்கிறது. Indian film director navigational boxes, Tamil film director navigational boxes என்பவற்றை மொழிமாற்றம் செய்ய உதவுங்கள்?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:58, 12 மார்ச் 2015 (UTC)
Navigational boxes - வழிநடத்தும் பெட்டிகள் / வழிகாட்டிப் பெட்டிகள் / இலக்கு வழிகாட்டிப் பெட்டிகள் --AntonTalk 09:58, 12 மார்ச் 2015 (UTC)
- நன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:35, 14 மார்ச் 2015 (UTC)
சட்டமன்ற பேச்சுக்கான எழுத்துக்கள் காப்புரிமை பற்றி
தொகுஇண்டிய அரசியல் தலைவர்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் பேசியப் பேச்சுகள் எதன் காப்புரிமையின் கீழ் வரும்? சில கட்டுரைகளில் 1960களுக்கு முன்னர் சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் பேசியப் பேச்சுகளை அதிகளவில் சேர்க்க வேண்டியுள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் பேசியப் பேச்சுகளை அப்படியே விக்கியில் எழுதலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 15 மார்ச் 2015 (UTC)
- //எதன் காப்புரிமையின் கீழ் வரும்// Indian Copyright Act 1957, Article 28: Term of copyright in Government work. In the case of Government work, where Government is the first owner of the copyright therein, copyright shall subsist until 71[Sixty] years from the beginning of the calendar year next following the year in which the work is first published. --AntonTalk 18:51, 15 மார்ச் 2015 (UTC)
// 71[Sixty] //
71 ஆண்டுகளா 60 ஆண்டுகளா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:36, 16 மார்ச் 2015 (UTC)
நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:25, 16 மார்ச் 2015 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுமரியாதைக்குரியவர்களே,வணக்கம்.நான் இன்று கோபி கலை அறிவியல் கல்லூரியின் நூலகம் பற்றியும்,கோபி லட்சுமண அய்யர் பற்றிய கட்டுரையும் எனது வலைப்பூவிலிருந்து எடுத்து பதிவு செய்தேன்.
மேலும் நான் இங்கு பதிவிடும் கட்டுரைகள் எனது உண்மையான மற்றும் நேரில் சென்று சேகரித்த தகவல்களை மட்டுமே பதிவிடுவேன்.எனது வலைப்பூவில் உள்ள கட்டுரைகளைக்கூட பதிவிடுவது உரிமை மீறலாகுமா?சட்ட சிக்கலாகுமா?என அன்பன் பரமேஸ்வரன் டிரைவர்--பரமேஸ்வரன் டிரைவர் 14:42, 16 மார்ச் 2015 (UTC)
- இங்குள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.--AntonTalk 18:37, 16 மார்ச் 2015 (UTC)
- பரமேசுவரன், இங்கு டிரைவர் என்பது உங்கள் பெயராக இல்லாதவிடத்து குறிப்பிடத் தேவையில்லை.
- வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவது வலைப்பதிவை இயக்கும் தளங்களால் காப்புரிமை பெற்றவை. காப்புரிமையில் கிரியேட்டிவ் காமன்சு என்ற உரிமம் இருந்தால் மட்டுமே உரிமை மீறலாகாது. எனவே உங்கள் வலைப்பூக் கட்டுரைகளை அப்படியே வெட்டி ஒட்டுவதும் உரிமை மீறலாகும்.
- உங்கள் வலைப்பூவில் உங்கள் நண்பருக்கு சொல்வதுபோல எழுதியிருப்பீர்கள். அலங்காரச் சொற்களையோ அவமதிப்புச் சொற்களையோ பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இங்கு ஒரு பாடபுத்தகத்தில் இடம் பெறத்தக்கவாறு எழுத வேண்டும்.
- //நேரில் சென்று சேகரித்த தகவல்களை மட்டுமே பதிவிடுவேன்// உங்கள் தகவல்கள் இரண்டாம்நிலைத் தரவுகளாக, மற்றவர்களால் சரிபார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் இணையத்தில், அச்சு ஊடகங்களில், பதிப்பிக்கப்பட்ட நூல்களில் இருந்து எடுக்கப்பட்டு அதற்கு இணைப்புத் தரப்பட வேண்டும். தாளவாடியின் மக்கள்தொகை இவ்வளவு என்றால் நான் நேரடியாக சென்று சேகரித்தது என்பது போதாது; மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆவணம் அல்லது தினசரிகளில் வந்த செய்தி போன்று சான்று தர வேண்டும். --மணியன் (பேச்சு) 03:58, 17 மார்ச் 2015 (UTC)
- பரமேசுவரன், இங்கு டிரைவர் என்பது உங்கள் பெயராக இல்லாதவிடத்து குறிப்பிடத் தேவையில்லை.
கட்டுரைத் தலைப்பு மாற்றம் செய்ய இயலுமா?
தொகுநான் https://en.wikipedia.org/wiki/Conversation என்ற கட்டுரையை மொழி பெயர்த்து, "உரையாடல்" (conversation) என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் வெளியிட அணியமாக வைத்துள்ளேன்.
ஆனால், "உரையாடல்" என்ற தலைப்பில் https://ta.wikipedia.org/wiki/உரையாடல் என்ற சிறு கட்டுரை ஏற்கனவே உள்ளது. இதில், "உரையாடல்" என்ற சொல் "dialog" என்ற பொருளில் வந்துள்ளது. "Dialog" என்தைக் "கலந்துரையாடல்" என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். எனவே, இந்தக் கட்டுரையின் தலைப்பை "கலந்துரையாடல்" என்ற மாற்ற இயலுமா? அப்படி மாற்றினால், நான் எழுதிவைத்துள்ள உரையாடல் என்ற கட்டுரையை வெளியிட ஏதுவாக இருக்கும்.
வெளியிட்ட பிறகு, "கலந்துரையாடல்" (Dialog) என்ற கட்டுரையையும் முழுமையாக எழுதலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். கீழ்க்கண்ட தலைப்பிகளிலும் கட்டுரைகள் எழுதத் திட்டமிட்டுள்ளேன்:
monologue - ஓருரையாடல்; soliloquy - தன்னுரையாடல்;
உதவிக்கு மிக்க நன்றி. - Paramesh1231
மகதை மண்டலம்
தொகு900 ஆண்டுகளுக்கு முன் நடு நாடு எனப்படும் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகழூர்(சேலம் மாவட்டம்,ஆத்தூர் வட்டம்)இருந்துள்ளது..பொன்பரப்பின வாணகோவரையன் என்ற சோழருக்கு அடங்கிய சிற்றரசன் ஆண்டு வந்தான். வாணகோவரையரின் முழு வரலாற்றையும் எப்படி அறிவது..?
ஆதார தகவல்
தொகுவிக்கிபீடியாவில் தமிழில் ஒரு தலைப்பை பற்றி எழுதும்போது அதே தலைப்பில் விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் உள்ள தகவல்களை மூலமாக காட்டலாமா..?
படம் தெரியவில்லை, உதவி தேவை.
தொகுhttps://ta.wikipedia.org/wiki/மின்_முறிவு என்ற பக்கத்தில், படிமம்:TownsendVI.png Voltage-current relation before breakdown என்ற படம் தெரியவில்லை. இதைச் சரி செய்ய முடியுமா? நன்றி.-Paramesh1231
- சரி செய்யப்பட்டது. உங்களின் பங்களிப்பைக் காணும்போது மகிழ்வாக உணர்கிறேன். இப்போது இங்கே பாருங்கள். மேலும் உங்களின் பெயரை நீங்கள் தட்டச்சுவதற்குப் பதில்
~~~~
எனத் தட்டச்சினால் உங்களின் பெயர், நாள் மற்றும் நேரத்துடன் பதிவாகும். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 09:19, 30 மார்ச் 2015 (UTC)
பாலா அவர்கட்கு, மிக்க நன்றி. Paramesh1231 (பேச்சு) 03:42, 31 மார்ச் 2015 (UTC)
ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை மேற்கோள் காட்டலாமா?
தொகு- ஒரு தமிழ்க் கட்டுரையில், உசாத்துணை என்ற பிரிவின் கீழ் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை மேற்கோள் காட்டலாமா?
- அப்படி ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை மேற்கோள் காட்ட கூடாது என்றால், தமிழ்க் கட்டுரையில் புது சொற்கள் இருந்தால் அதை எப்படிக் கையாள்வது? எடுத்துக் காட்டாக, நான் கட்டு1 என்ற கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். அதில், சொல்1 என்ற சொல் வருகின்றது. சொல்1 என்ற சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லை அடைப்புக்குள் கொடுக்கக் கூடாது என்று சொல்வதால், சொல்1 என்ற சொல்லுக்கு கட்டு2 என்று இரண்டாவது கட்டுரை எழுதுகின்றேன். அதில் சொல்2 என்ற சொல் வருகின்றது. சொல்2 என்ற சொல்லுக்கு கட்டு3 என்ற கட்டுரை எழுத வேண்டும்.
இதற்குத் தீர்வு வேண்டும். ஒன்று, தமிழ்ச் சொல்லுக்குப் பக்கத்தில் ஆங்கிலச் சொல்லைக் கொஞ்ச காலம் போட்டுக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: இரைச்சல்(electrical noise). அல்லது, ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளை மேற்கோள் காட்ட இசைவு தெரிவிக்கலாம்;எடுத்துக் காட்டு:இரைச்சல்[1]. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
மிக்க நன்றி. Paramesh1231 (பேச்சு) 04:06, 31 மார்ச் 2015 (UTC)
- ஆ.வி. மூன்றாம் நிலை தரவென்பதால் அதனை உசாத்துணையாக்க முடியாது. புதிய கட்டுரைகள் உருவாக்கும் தேவை இங்கு உள்ளது. ஆகவே, அதற்கு மாற்றீடாக ஆ.வி கட்டுரைகளை இணைப்பது சிறப்பாகா. இயலுமாக அளவிற்கு தமிழில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். இங்கு தலைப்புக்கு மட்டுமே ஆங்கில அல்லது பொருத்தமான பிற மொழிச் சொற்கள் இணைப்பது வழக்கம். மேலும், இது தமிழ்-ஆங்கில அகராதி அல்லவே. தமிழை ஆங்கிலச் சொற்கள் ஊடாகத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? --AntonTalk 11:17, 31 மார்ச் 2015 (UTC)
- "இயன்ற அளவுக்குக் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்" என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அறிவியல் துறையில் இன்னும் தமிழ் சரியாக வளம் பெறவில்லையாதலால் தொடக்கத்தில் ஆங்கிலத்தின் துணை தேவைப்படுகிறது.Paramesh1231 (பேச்சு) 14:02, 31 மார்ச் 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில், கட்டுரையின் இறுதியில் அருஞ்சொற்பொருள் என்று புதிய சொற்களைக் குறிப்பதுண்டு.
//எடுத்துக் காட்டாக, நான் கட்டு1 என்ற கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். அதில், சொல்1 என்ற சொல் வருகின்றது. சொல்1 என்ற சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லை அடைப்புக்குள் கொடுக்கக் கூடாது என்று சொல்வதால், சொல்1 என்ற சொல்லுக்கு கட்டு2 என்று இரண்டாவது கட்டுரை எழுதுகின்றேன். அதில் சொல்2 என்ற சொல் வருகின்றது. சொல்2 என்ற சொல்லுக்கு கட்டு3 என்ற கட்டுரை எழுத வேண்டும்.//
இது சிக்கல் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவே இப்படித் தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தொடர்புடைய துறை சார் கட்டுரைகளை எழுதுவது வரவேற்கத்தக்கது.--இரவி (பேச்சு) 11:45, 31 மார்ச் 2015 (UTC)
- இதில் சிக்கல் என்னவென்றால், ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால், பல கட்டுரைகளை எழுதி முடிக்க வேண்டி இருக்கும். இது பெரும்பாலோரால் இயலாத காரியம்.
- கட்டுரை1 எழுத சொல்1 வேண்டும்.
- சொல்1 -ஐ விளக்க கட்டுரை2 வேண்டும்.
- கட்டுரை2 எழுத சொல்2 வேண்டும்.
- சொல்2 -ஐ விளக்க கட்டுரை3 வேண்டும்.
- கட்டுரை3 -ஐ விளக்க சொல்4 வேண்டும்.
- சொல்4 -ஐ விளக்க ...
- இப்படியே போய்க்கொண்டு இருந்தால் கட்டுரை1-ஐ எழுதி முடிப்பது எளிதல்ல. அந்த அளவுக்குப் பலருக்குத் தேவையான புலமை இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால், ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குள் கொடுத்து நிறுத்திவிட்டால், யாரேனும் பின்னால் அதை விளக்கி மற்றொரு கட்டுரை எழுத ஏதுவாக இருக்கும். எடுத்துக் காட்டாக, வெப்ப மின்னிரைச்சல் என்று சொல்லி நிறுத்துவதை விட, வெப்ப மின்னிரைச்சல்(thermal noise) என்று சொல்லி நிறுத்துவது நல்லது. யாரேனும் பிறகு வெப்ப மின்னிரைச்சலை விளக்கி ஒரு கட்டுரை எழுத எளிதாக இருக்கும்.
- இனி, தமிழ் நாட்டில் தமிழ்ப் பாட நூல்கள் தெளிவான விளக்கங்களோடு எழுதப் படுவதில்லை. பள்ளியில் நான் தமிழ் வழிப் படித்தேன். Paramesh1231 (பேச்சு) 14:02, 31 மார்ச் 2015 (UTC)
Paramesh1231, கட்டுரைகளின் இறுதியில் கலைச்சொல் பட்டியல் என்ற தலைப்பில் ஆங்கிலச் சொற் பட்டியலைத் தாருங்கள். இப்போதைக்கு, இந்த ஏற்பாடு சரி வரும் என்று நினைக்கிறேன். இக்கலைச்சொற் பட்டியல்களில் இடம்பெறுகிற தலைப்புகள் குறித்து தனிக்கட்டுரைகள் உருவாக்கிய பிறகு, இந்தச் சொற் பட்டியல்களை எடுத்து விடலாம். இது ஏற்புடையதா? நிற்க ! அடுத்து வரும் பகுதியில் என் கருத்தைக் காணுங்கள். அடைப்புக்குறி விளக்கம் இல்லாமலேயே உங்கள் கட்டுரை நன்கு புரியும் நிலையிலேயே உள்ளது. மின்னிரைச்சல் என்றாலும் புரியும். வெப்பம் என்றாலும் புரியும். எனவே, வெப்ப மின்னிரைச்சல் என்பதற்குத் தனி அடைப்புக்குறி விளக்கம் தேவைப்படுமா என்பது ஐயமே. --இரவி (பேச்சு) 14:11, 31 மார்ச் 2015 (UTC)
கலைச் சொற்கள்
தொகு- தமிழ் விக்கிபீடியாவில் பயன் படுத்தப்படும் கலைச் கலைசொற்களுக்கென்று ஒரு அகர முதலி இருக்கிறதா?
- அப்படி இருந்தால், அதைத் தமிழ் விக்கிபீடியாவில் பயன் படுத்தப்படும் கலைச் கலைசொற்களுடன் இணைக்க வழி உண்டா?
மிக்க நன்றி. Paramesh1231 (பேச்சு) 04:17, 31 மார்ச் 2015 (UTC)
தமிழ் விக்சனரியில் ஆயிரக்கணக்கான கலைச்சொற்கள் உள்ளன. அவற்றைத் தமிழ் விக்கிப்பீடியர் பயன்படுத்துகிறோம். நீங்கள் பயன்படுத்தும் சொற்களையும் அங்கு சேர்க்கலாம். எனினும், சொல்லுக்குச் சொல் விக்சனரிக்கு இணைப்பு கொடுப்பது வரவேற்கப்படுவதில்லை. நீங்கள் எழுதிய மின்னிரைச்சல் கட்டுரை படித்தேன். இது என் துறை இல்லை என்றாலும், பள்ளி முழுக்க ஆங்கில வழியத்தில் படித்து இருந்தாலும், இக்கட்டுரை எனக்கு நன்றாகப் புரிகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட +2 இயற்பியல் நூல் இங்கு இருக்கிறது. இது புரியும் மாணவனுக்குக் கண்டிப்பாக தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் புரியும். அது பாட நூல் என்பதால் ஆங்காங்கே சில ஆங்கிலச் சொற்களை ஈடாக கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நாம் கலைக்களஞ்சியம் எழுதுகிறோம் என்பதால் உள்ளிணைப்பாக தரக் கோருகிறோம். மாணவர்களுக்குப் புரிய வைப்பது தான் நோக்கம் என்றால், வெறும் ஆங்கிலச் சொல்லை மட்டும் தருவதை விட ஒரு சிறு கட்டுரையாக எழுதி விடுவதே நல்லது என்று நினைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 31 மார்ச் 2015 (UTC)
வருந்துகிறேன்
தொகுதவறுக்கு வருந்துகிறேன்
உண்மையில் எனக்கு பதிவுகள் பற்றி புரியாமல் பதிந்து விட்டேன் . மீண்டும் முயற்சிக்கிறேன் நன்றி வணக்கம்
Time Offsets பற்றிய கட்டுரைகள்
தொகு[[::en:UTC offset|UTC offset]] / [[::en:Category:UTC offsets|Category:UTC offsets]] பற்றிய கட்டுரைகளை உருவாக்க நினைக்கிறேன். எவ்வாறு குறிப்பது?
- ஒ.ச.நே. வித்தியாசம் / வித்தியாசங்கள்
- ஒ.ச.நே. விலக்கம் / விலக்கங்கள்
- ஒ.ச.நே. பெயர்ச்சி / பெயர்ச்சிகள்
உதவுங்களேன். --சத்தியராஜ் (பேச்சு) 11:56, 23 ஏப்ரல் 2015 (UTC)
- உ+ம்: ஒ.ச.நே + 05:30 (ஒசநே+05:30 - வழிமாற்று)
- UTC offset - ஒ.ச.நே பெயர்ச்சி
- பகுப்பு:ஒ.ச.நே பெயர்ச்சிகள்
புகைப்படம் சேர்த்தல்
தொகுவணக்கம். ரவிசுப்பிரமணியன் கட்டுரைக்கு அவருடைய முகநூலிலிருந்தோ, அவரிடமிருந்தோ புகைப்படம் பெற்று இணைக்க விரும்புகிறேன். அவரது புகைப்படத்தைப் பெற்று இணைக்க அவரிடம் பெறவேண்டிய அனுமதி குறித்துத் தெரிவிக்கவேண்டுகிறேன். இவரைப் போல இன்னும் சிலருக்கு அனுமதி பெறாமல் நான் இட்ட புகைப்படங்கள் முன்னர் நீக்கப்பட்டுவிட்டன. நெறிமுறை அறிந்து, உரியவர்களுடைய அனுமதி பெற்றுப் பதிய தற்போது முயற்சிக்கிறேன். கருத்தறிந்து தொடர்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:15, 24 ஏப்ரல் 2015 (UTC)
- அவரிடமிருந்து அனுமதி என்பதைவிட அவருடைய புகைப்படத்தை எடுத்தவரின் அனுமதியே முக்கியம் என நினைக்கிறேன். ஏனெனில் அப்புகைப்பத்தின் உரிமை எடுத்தவருடையது. மேலும் அவரையே விக்கி பொதுவகத்தில் இணைக்கச் சொன்னால் நன்றாகயிருக்கும். இது தொடர்பாக பிற பயனர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 09:12, 24 ஏப்ரல் 2015 (UTC)
- தங்களின் கருத்தை அறிந்தேன். பிறருடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். எளிதாகவுள்ளதைக் கடைபிடிப்பேன். அதேசமயம் ரவிசுப்பிரமணியன் பேச்சுப் பக்கத்திலும் இவ்வினாவினை தற்போது முன்வைத்துள்ளேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:43, 2 மே 2015 (UTC)
தலைப்பில் சந்தேகம்
தொகுTri ethyl orthoformate என்ற ஆங்கில கட்டுரையை ‘ டிரை ஈத்தைல் ஆர்த்தோ பார்மேட்டு “ என்று அப்படியே தமிழ்படுத்தியுள்ளேன். விக்கிபீடியா பெயரிடல் மரபுக்கு ஒவ்வாத தலைப்பாக இருக்கலாம் என்ற வார்ப்புரு இடப்பட்டுள்ளது. mono,di, tri, tetra, penta , hexa , hepta போன்ற ஒட்டுகளை அப்படியே பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் தேவை. மூவீத்தைல் ஆர்த்தோ பார்மேட்டு என்ற தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்தலாமா?--கி.மூர்த்தி 01:53, 27 ஏப்ரல் 2015 (UTC)
தமிழ் பெயர் என்ன?
தொகுDigital journalism என்பதை தமிழில் எவ்வாறு எழுதுவது. (பயனர் பேச்சு:Suthir)
”இலக்கமுறை இதழியல்” பொருத்தமாக இருக்கும். --கி.மூர்த்தி 15:03, 18 மே 2015 (UTC)
- எனது பரிந்துரை: எண்ணிம இதழியல் (இங்கும், இங்கும் பார்க்கவும்). --சத்தியராஜ் (பேச்சு) 16:03, 18 மே 2015 (UTC)
- digital - எண்ணிமம், பரவலாகப் பயன்படுத்தப்படும் கலைச்சொல். எண்ணிம இதழியல் என்பதே பொருத்தம்.--Kanags \உரையாடுக 21:11, 18 மே 2015 (UTC)
தமிழில் எவ்வாறு அழைப்பது?
தொகுPablo Iglesias Turrión என்ற பெயரை எவ்வாறு தமிழில் அழைப்பது. (பயனர் பேச்சு:Suthir)
- பாப்லோ இக்லேசியசு(ஸ்) டுரியோன்.--Kanags \உரையாடுக 21:08, 19 மே 2015 (UTC)
நூல் மூலங்கள்
தொகுI suggest that you add WorldCat to your நூல் மூலங்கள் page. I just fixed five ISBNs in the article en:Jaggi Vasudev and the corresponding Tamil article ஜகி வாசுதேவ். For verification, I found all five publications in WorldCat, but I only found two of the publications in Amazon.com on your நூல் மூலங்கள் page.
WorldCat has several possibilities for the language of its interface; you can find these choices at the bottom of any WorldCat page. Knife-in-the-drawer (பேச்சு) 03:45, 3 சூன் 2015 (UTC)
தமிழில் பெயர்
தொகுChancellor of Germany என்பதை தமிழில் எவ்வாறு அழைப்பது....
மேற்கோள்கள்
தொகு@Kanags:, @AntanO:, @Neechalkaran:, @மதனாஹரன்:மேற்கோள்கள் இல்லாதவை என்ற வார்ப்புரு இடப்படும் கட்டுரைகளிலிருந்து மருத்துவம், அறிவியல் ஆகியக் கட்டுரைகளைத் தனியாகப் பிரிக்க முடியுமா? முடிந்தால் வசதியாக இருக்கும். இந்த இரு துறைகளிலும் என்னால் மேற்கோள்களைச் சேர்த்து உதவ முடியும். தானியங்கிக் கொண்டு பிரித்தால் சிரமமிருக்காது. இப்படிப்பட்ட தானியங்கி உண்டா? மேற்கோள்கள் இல்லாதவை என்ற வார்ப்புரு மருத்துவம், அறிவியல் ஆகியக் கட்டுரைகளுக்கெனப் புதிதாக உருவாக்க இயலுமா? முடியும் என்றால் உதவவும்.--நந்தகுமார் (பேச்சு) 12:13, 21 சூலை 2015 (UTC)
- @Neechalkaran: தானியங்கி உதவ முடியும் என நினைக்கிறேன். --AntanO 12:32, 21 சூலை 2015 (UTC)
- en:Template:Citation and verifiability article maintenance templates இந்த வார்ப்புருவில் உள்ளவாறு தேவையான புதிய வார்ப்புருக்களை உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 12:39, 21 சூலை 2015 (UTC)
- பகுப்பு:அறிவியல் என்பதில் இரண்டாம்நிலை துணைப்பகுப்பாக பகுப்பு:மருத்துவம் இருக்கிறது. எனவே அறிவியல் பகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரையையும் சோதித்து, அதில் பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் என்ற பகுப்பிற்குள்ளிருந்தால் அதற்குக் கூடுதலாகப் புதிய பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அறிவியல் கட்டுரை என்ற பகுப்பையிடும் தானியங்கியை உருவாக்கமுடியும். ஆனால் இரண்டு பகுப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து பொதுப் பக்கங்களைக் காட்டும் சில கருவிகளைப் பார்த்ததாக ஞாபகம். தேடிப்பார்க்கிறேன் அப்படியில்லாவிட்டால் இவ்வரயிறுதியில் இத்தானியங்கியை உருவாக்கி ஏவுகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 15:27, 21 சூலை 2015 (UTC)
- @Kanags:, @AntanO:, @Neechalkaran:, ஆன்டன், கனக்ஸ், நீச்சல்காரன் உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி! நீச்சல்காரனுக்கு சிறப்பு நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 17:39, 21 சூலை 2015 (UTC)
- @Neechalkaran and Nan: நீச்சல்காரன் கூறிய கருவி இங்கே உள்ளது. ஆனாலும் தொடர்பில்லாத சில கட்டுரைகளும் இங்கே வருகின்றன. Depth = 2 என இட ஓரளவு சரியாக வருகின்றது. பார்க்க: இணைப்பு
- விக்கிப்பீடியாவுக்கான மீடியாவிக்கி மென்பொருளில் பகுப்பு இடைவெட்டைக் (Category Intersection) காண்பதற்கான நீட்சியை விரைவில் சேர்க்கவுள்ளனர். சில தனியார்விக்கிகளில் அவ்வாறான நீட்சிகள் செயற்பாட்டிலுள்ளன. அவ்வாறான ஒரு நீட்சியை விக்கிப்பீடியாவிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 15:01, 22 சூலை 2015 (UTC)
- @மதனாஹரன் and Neechalkaran:, நன்றி மதனாகரன். முதலில், நீங்கள் கடைசியாகக் கொடுத்துள்ளக் கட்டுரைத் தொகுப்புகளிலிருந்து ஆரம்பிக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 17:12, 22 சூலை 2015 (UTC)
- சந்தேகம்: கூகுள் மொழிப்பெயர்ப்புக் கட்டுரைகளில் உதாரணமாக 20-40 மேற்கோள்கள் இருந்தாலும், மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற வார்ப்புரு இடப்பட்டிருப்பது ஏன்? எ-கா: மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம்--நந்தகுமார் (பேச்சு) 17:23, 22 சூலை 2015 (UTC)
- @மதனாஹரன் and Neechalkaran:, நன்றி மதனாகரன். முதலில், நீங்கள் கடைசியாகக் கொடுத்துள்ளக் கட்டுரைத் தொகுப்புகளிலிருந்து ஆரம்பிக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 17:12, 22 சூலை 2015 (UTC)
- இடையில் ஒரு வரிக்கு {{சான்றுதேவை}} வார்ப்புரு இணைத்திருந்தாலும் மேற்கூறிய பகுப்பில் அக்கட்டுரை இடம்பெறும்.
எல்லா ஊனீர்-எதிர்மை தண்டுவட எலும்பு மூட்டு நோயைப் போலவே, நகங்கள் வீக்கமுற்று காணப்படுவதும் தோன்றக்கூடும். [சான்று தேவை]
- குறிகள் மற்றும் அறிகுறிகள் என்ற தலைப்பின் கீழ் மேற்கூறிய வரி இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கூற்றுகள் சரியானவையாகவிருப்பின், அவற்றுக்கும் சான்றிணைக்கலாம். தவறாக இருப்பின், சரிசெய்துவிட்டு, பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பை இடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 17:56, 22 சூலை 2015 (UTC)
- நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 17:58, 22 சூலை 2015 (UTC)
use Combined Category search.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:08, 10 செப்டம்பர் 2015 (UTC)
ஆதாரம் & பகுப்புகள்
தொகுஐயா @Kanags:, @AntanO:, @Neechalkaran:, @மதனாஹரன்:, @Nan:, @Selvasivagurunathan m:, @Booradleyp1: ஆலோசனை கூறவும்,
இரயில்வே மண்டலங்கள் குறித்த எனது மொழிமாற்று கட்டுரைகளில் kanags அவர்கள் சான்றுகளுடன் கூடிய கட்டுரையை உருவாக்கவும் என்றிருந்தார்; . நான் எனது கட்டுரைகள் ஊடே அதிகாரபபூர்வ வளைத்தளங்களை இணைத்திருக்கிறேன், விடுபட்ட சிலவற்றிலும் இணைக்க முயற்சிக்கின்றேன். அதிகாரப்பூர்வ வளைத்தளங்கள் சரியான தரவு ஆக இருக்கும் என எண்ணுகின்றேன். பெரும்பாலும் என்னுடைய கட்டுரைகள் ஆங்கில விக்கியிலிருந்தே தமிழாக்கம் செய்யப்படுகின்றது. மேலும் இடது புறமுள்ள மொழிகள் இணைப்பில் ஆங்கிலமொழியோடு இணைக்கப்பட்டுள்ளது.
- 1. மீண்டும் தனியாக சான்றுகளாக அந்த ஆங்கிலப் பக்கத்தினை இணைக்கத்தேவையில்லை எனக் கருதுகின்றேன்.
- 2. மற்ற பத்திரிக்கை செய்திகளையோ (அ) வலைத்தளங்களையோ ஆதாராமாக இணைப்பதின் மூலம் எவ்வளவு காலம் அவர்கள் தரவுகளை பாதுகாப்பர் என்று சொல்ல முடியாது என எண்ணுகின்றேன். அது நம்முடைய முயற்சியை வீணாக்கும் என்பது எனது தொழில்சார் அனுபவம்.
- 3. வீக்கிப்பீடியாவில் ஏதேனும் வகையில் சான்றுகளை வீக்கிகாப்பகத்திலே வைத்திருந்து, மேற்கோள்காட்டும் வசதி உள்ளதா, அப்படி இருந்தால் அது பயணளிக்கும், ஏனெனில் நம் வீட்டு காப்பகத்தினை நாம்தானே பராமரிப்புசெய்வோம் ஆக காப்பது எளிது, அதில்லாமல் வெளிப்புற இணைப்புகளை சான்றுகளாக வைத்தால் கால ஒட்டத்தில் அது மறைந்துவிடும். எனினும் ஆலோசனை கூறவும் ...
பகுப்புகள்: குறிப்பிட்ட பகுப்புகளின் கீழேயுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை குறித்து ஏதேனும் செயலிகள் பயன்பாட்டில் உள்ளனவா? எ.கா. கல்வி குறித்து வீக்கியில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கைகளை தெரிந்துகொள்ள உதவும்.
என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் கல்வி, அறிவியல், வரலாறு குறித்து எழுத வேண்டிய கட்டுரைகள் எண்ணற்ற உள்ளன, அதைவிட்டுவிட்டு நமது தனிப்பட்ட மனிதசக்தி திரைத்துறை குறித்தோ, அரசியல்வாதிகள் குறித்தோ எழுதவேண்டியது இல்லை. ஏனெனில் தமிழ் சூழலில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளன. ஏற்கனவே சில வீக்கித்திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என அறிவேன். அதில் திரை சார்ந்து பயணாற்றுபவர்களிடம் வேண்டுகோளாய் வைக்கிறேன் இதை...
ஆலோசனை கூறவும், பதிலுக்காய் காத்திருக்கிறேன்.−முன்நிற்கும் கருத்து Kurinjinet (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் அனைவரும் தன்னார்வலர்களே. ஒவ்வொரு விக்கிப்பீடியரும் தனது விருப்பத் துறைகளில் பங்களிப்பார். //நமது தனிப்பட்ட மனிதசக்தி திரைத்துறை குறித்தோ, அரசியல்வாதிகள் குறித்தோ எழுதவேண்டியது இல்லை.// என்று நீங்கள் கூறியதை எதிர்க்கிறேன். குறித்த கட்டுரை விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை தொடர்பான விதிகளினுள் அடங்காவிடில் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள். அதனை விடுத்து, திரைப்படம் குறித்து எழுத வேண்டாம், அரசியல்வாதிகள் குறித்து எழுத வேண்டாம் என்று சொல்வது முறையானதன்று. நோபல் பரிசு பெற்ற அறிவியலாளரைப் பற்றி எழுதி விட்டுத் தான், மற்றைய அறிவியலாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் கூடக் கூறமுடியாது. வேண்டுமானால், குறித்த கட்டுரையை உருவாக்கித் தருமாறு வேண்டுகோள் விடுக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 11:44, 8 ஆகத்து 2015 (UTC)
- திரைத்துறை, அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாறு போன்றவை எமது வரலாறே. அறிவியல் எவ்வாறு முக்கியமோ அது போன்றதே இவைகளும். கலைக்களஞ்சியத்தில் அனைத்தும் இடம்பெற வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் விருப்பத் துறைகளில் எழுதுங்கள். மேற்கோள்கள் இப்போது கைவசம் உள்ள இணைப்புகளை வெளியிடப்பட்ட தேதி, பார்க்கப்பட்ட நாள் போன்ற விபரங்களுடன் தாருங்கள். அவ்விணைப்பு நாளடைவில் துண்டிக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு இணையான வேறு மேற்கோள்கள் தரப்படாத விடத்து அவை அழிக்கப்பட மாட்டாது. ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கும் போது, அவர்களும் சில மேற்கோள்களைத் தந்திருப்பார்கள். அவற்றையும் நீங்கள் இங்கு தரலாம்.--Kanags \உரையாடுக 11:52, 8 ஆகத்து 2015 (UTC)
- வணக்கம். விக்கிக் காப்பகத்தில் அனைத்து சான்றுகளையும் வைத்திருக்க முடியாதென்றே கருதுகிறேன். என்றாலும், இது குறித்து @Ravidreams:, இரவி கருத்துகள் ஏதும் வைத்திருந்தால் தெரிவிக்கவும்.
- நீங்கள் தேடும்பெட்டியில் பகுப்பு:கல்வி என்று உங்களுக்குத் தேவையானத் தலைப்பில் தேடினால் அந்தப் பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள உள்ள அனைத்துக் கட்டுரைகளின் பட்டியலும் கிடைக்கும்.
- உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்றாலும், மதனாகரன் கூறியதுபோல இங்கு பங்களிப்பது தன்னார்வலமாகவே. எனவே, யாரையும் ஒரு பொருள் குறித்து எழுதவேண்டும், எழுதவண்டாம் எனக் கேட்க இயலாது. சமூகத்தில் உள்ள பல்வேறு தேவைகளையும், கருத்துகளையும் உள்வாங்கியதாகவே ஒரு கலைக்களஞ்சியம் இருக்க முடியும்.--நந்தகுமார் (பேச்சு) 12:03, 8 ஆகத்து 2015 (UTC)
நன்றி உங்களது அனைவரின் பதிலுக்கும். நானும் வீக்கியில் முன்னுரிமை கட்டுரைகளை எழுதுவதற்கு வேண்டுகோளாய் வைக்கலாம் என்றுதான் கூறுகின்றேன், யாரையும் கட்டாயப்படுத்தவிரும்பவில்லை.
- மேலும் பகுப்புகளின் கீழேயுள்ள கட்டுரைகளின் எண்ணிகை குறித்து மொத்தமாய் அறிய விரும்புகிறேன். அதாவது இன்றைய கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று சகோ. நீச்சல்காரன் அவர்களது செயலி போன்று பகுப்புகள் கீழேயுள்ள கட்டுரை எண்ணிக்கை அறிய ஏதேனும் செயலி உள்ளதா என்பதே என் கேள்வி. நன்றி...−முன்நிற்கும் கருத்து Kurinjinet (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- பகுப்புப் பக்கத்திலேயே கட்டுரைகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும். --மதனாகரன் (பேச்சு) 06:21, 9 ஆகத்து 2015 (UTC)
@Kurinjinet:, விக்கி காப்பகம் என்று எதனைக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. விக்கிமீடியா திட்டங்களுக்கு வெளியே உள்ள வலைத்தளங்களின் தரவுகளை நாம் சேமித்து வைப்பதில்லை. அழிந்து போன தளங்களின் படிகள் archive.org தளத்தில் இருக்க வாய்ப்புண்டு. தற்போது இருக்கின்ற ஆதாரங்களைத் தாருங்கள். அவை அழியக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 போன்று பல துறைகளிலும் முக்கியத்துவம் உள்ள தலைப்புகளை விரிவாக்கி வருகிறோம். உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளிலும் இது போன்ற பட்டியல்களை உருவாக்கி, பங்களிப்பாளர்களின் உதவியை நாடலாம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 18:55, 11 ஆகத்து 2015 (UTC)
உதவி தேவை - விஜயகுமார் (எந்திரனியல்)
தொகுநான் விஜயகுமார் (எந்திரனியல்) என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். இது ஆங்கில விக்கியில் Vijaykumar(Roboticist) என்ற தலைப்பில் உள்ளது. 1. அதை வைத்தே நான் இக்கட்டுரையை தமிழ் படுத்தினேன். இது சரியா? அல்லது தவறா? 2. மேலும் அதில் இந்த செய்தியை இட்டுள்ளனர் - "இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. "
நான் அவரைப்பற்றி உண்மைக்கு புறம்பாகவோ அவதுறாகவோ எழுதவில்லை. இவரது TED பேச்சு கேட்டு அதன் தாக்கத்தால் இவரை அறிய தமிழ் விக்கியில் தேடும் போது இவரது கட்டுரை இல்லை என அறிந்தேன். அதனால் இவரது ஆங்கில கட்டுரையை தமிழ் படுத்தினேன். இதை நாம் செய்யலாமா கூடாதா ?
மேலும் இவரது புகைப்படத்தையும் அவரது அதிகாரபூர்வ இணையதலத்தில் இருந்து பதிவிறக்கி தமிழ் கட்டுரைக்கு பதிவேற்றினேன். அனால் அது பதிப்புரிமை மீறல் என்று கூறி நீக்கிவிட்டனர். இரண்டு தடவை பதிவேற்றம் செய்தும் நீக்கிவிட்டனர். மீறினால் எனது கணக்கை பூட்டிவிடுவர் என்று எனக்கு இறுதி எச்சரிக்கையும் விடப்பட்டது. மேலும் ஜோனாதன் ஐவ் பற்றிய கட்டுரையும் பிழை உள்ளதாக செய்தி உள்ளது. எனக்கு இது புரியவில்லை. விளக்கவும். நான் ஒரு புது பயனர். பல நல்ல கட்டுரைகள் எழுத ஆர்வமாக உள்ளேன். இது போன்ற பிழைகளால் என்னால் வேறு பல கட்டுரைகள் எழுத முடியாமல் போகிறது. உதவி தேவை- --ரவி ஷங்கர் . செல்வா (பேச்சு) 06:05, 29 சூலை 2015 (UTC)
- ரவி ஷங்கர் . செல்வா, பொதுவாக வாழும் நபர்களைப் பற்றிய கட்டுரைகள் அதிகமான புற மேற்கோள்களையும் வெளி இணைப்புகளையும் கொண்டிருப்பது அக்கட்டுரையின் நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும், நீங்கள் பதிவேற்றிய படங்கள் அவரது காப்புரிமையில் உள்ளவை. எனவே, விக்கிப்பீடியாவில் அவற்றைப் பயன்படுத்த இயலாது. மேலும், அந்த வார்ப்புரு கட்டுரையை நீக்குவதற்காக அன்று. மேலும், மேற்கோள்களை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த மட்டுமே. கட்டுரையை விஜய் குமார் எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். பங்களிப்பிற்கு நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:29, 29 சூலை 2015 (UTC)
ஓத்தாசை பக்கத்தை நிருவாகிகளுக்கு மட்டும் அனுமதிப்பது எதனால்
தொகுஓத்தாசை பக்கத்தை நிருவாகிகளுக்கு மட்டும் அனுமதிப்பது எதனால்? ஒத்தாசை பக்கமே பல புதுப்பயனர்கள் கேள்வி கேட்பதற்குத் தானே?
தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தொகுக்கும் வண்ணம் இருப்பதே சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:02, 7 ஆகத்து 2015 (UTC)
- நிருவாகிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படவில்லையே? யாவரும் தொகுக்கலாம். புகுபதிகை செய்யாமல் முயற்சித்துப் பாருங்கள். --AntanO 19:29, 7 ஆகத்து 2015 (UTC)
என் கவனிப்புப்பட்டியலில் பின்வருமாறு இருந்தது.
//. AntanO (பேச்சு | பங்களிப்புகள் | தடு) "விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" காக்கப்பட்டது [move=sysop] (காலவரையறையற்ற) (அதிகம் பேர் பார்வையிடும் பக்கம்)// --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:31, 7 ஆகத்து 2015 (UTC)
- இதன் அர்த்தம் என்ன? புகுபதிகை செய்யாமல் முயற்சித்துப் பாருங்கள். --AntanO 19:33, 7 ஆகத்து 2015 (UTC)
அதன் பொருள் நீங்கள் ஒத்தாசைப் பக்கத்தை பூட்டியுள்ளீர்கள் என்பதாகும். நான் மீட்டுவிட்டேன். பக்க வரலாற்றில் பார்க்கவும். இதே போல் ஆலமரத்தடியும் திடீரென நிருவாகிகளுக்கு மட்டும் மதனாஹரன் ஐடியில் இருந்து பூட்டப்பட்டுள்ளது. ஏதேனும் தொழினுட்பக் கோளாறு போலும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:48, 7 ஆகத்து 2015 (UTC)
- பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். புகுபதிகை செய்யாமல் முயற்சித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். --AntanO 19:51, 7 ஆகத்து 2015 (UTC)
நான்தான் மீட்டெடுத்துவிட்டேனே. பின்னர் எப்படி புகுபதிகை செய்யாமல் முயற்சித்துப் பார்க்க இயலும். நீங்கள் பக்க வரலாற்றை பார்த்தீர்களா? இல்லையா? இத்தொகுப்பு நீங்கள் செய்தது தானே? [5] --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:31, 7 ஆகத்து 2015 (UTC)
- @தென்காசி சுப்பிரமணியன்: ஒத்தாசைப் பக்கத்தை நிருவாகிகள் தவிர்ந்தோர் நகர்த்த முடியாதவாறே ஆண்டன் காப்பு நிலையை மாற்றியுள்ளார். move=sysop என்றுள்ளதைக் கவனிக்கவும். நேற்று புதுப்பயனர் ஒருவர் ஒத்தாசைப் பக்கத்தின் தலைப்பை, சுடலை மாட சுவாமி என மாற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்தே இவ்வாறான மாற்றங்கள் நிகழாதிருக்கும்படி, ஒத்தாசைப் பக்கமும் ஆலமரத்தடியும் காக்கப்பட்டன. ஒத்தாசைப் பக்கத்தை யாரும் தொகுக்கலாம். அதில் சிக்கலில்லை. தமிழ் விக்கிப்பீடியாவிலும் இப்படி ஒரு பக்கத்தை உருவாக்கலாம் போல. --மதனாகரன் (பேச்சு) 01:21, 8 ஆகத்து 2015 (UTC)
ஓகே. ஓகே. முதலில் எனக்கு புரியவில்லை. இனிமேல் தீயா வேளை செய்யனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 11 ஆகத்து 2015 (UTC)
இடைவெளி தொடர்பான சிக்கல்
தொகுகாதற்கடிதம் என்ற கட்டுரையில் ஆதவன் பின்வரும் திருத்தத்தை மேற்கொண்டிருந்தார். 2008ஆம் என்றா 2008 ஆம் என்றா எழுத வேண்டும்? இது தொடர்பில் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டதா? பொது ஊடகங்களில் இரு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில முறையைப் பின்பற்றி, 2nd என்பதைப் போல் இடைவெளி விடாமலே இது வரை எழுதி வந்தேன். இது தொடர்பில் உதவும்படி வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:44, 18 ஆகத்து 2015 (UTC)
- நானும் பொதுவாக இதனைக் கவனிப்பதில்லை. ஆனாலும், இடைவெளி விடாமல் எழுதுவதே சிறந்தது. இடைவெளி விடுவது இரண்டு வெவ்வேறு சொற்களாகக் கருதப்படும்.--Kanags \உரையாடுக 10:57, 18 ஆகத்து 2015 (UTC)
- மதனாஹரன் அண்ணா இடைவெளி விடுவது நல்லது என நினைக்கின்றேன் (சொந்தக் கருத்து). //இது தொடர்பில் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டதா?// இவ்விணைபைப் பாருங்கள். வேறு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:00, 18 ஆகத்து 2015 (UTC)
Module
தொகு@Shrikarsan: Module என்பதன் பயன்பாட்டை அறியத் தரமுடியுமா? இதனை எங்குப் பயன்படுத்துவது? --மதனாகரன் (பேச்சு) 05:11, 21 ஆகத்து 2015 (UTC)
- Module என்பது லூவா (Lua) நிரல் மொழியில் இயங்கும் பெயர்வெளியாகும். இது வார்ப்புருக்களின் கட்டமைப்பை இலகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, முன்னர் வார்ப்புரு:Convert இயங்குவதற்கு 4000 இற்கும் மேற்பட்ட உப வார்ப்புருக்கள் தேவைப்பட்டன. இதனால் த.வி யில் வார்ப்புரு இயங்காததுடன் அதனைத் தமிழாக்கம் செய்வது அதனைவிடக் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருந்தது. ஆனால் தற்போது அதனை Module:Convert , Module:Convert/text , Module:Convert/data , Module:Convert/extra ஆகிய நான்கு Module களின் மூலம் இயஙக்கூடிய வகையில் சரிசெய்துள்ளேன். தற்போது பல சிக்கலான வார்ப்புருகளைச் (எ.கா:{{Infobox}}, {{Coord}}, {{Userbox}}) செயற்படுத்த Module பயன்படுத்தப்படுகின்றது.
- இதனை வார்ப்புருவில் செயற்படுத்த
{{#invoke:}}
என்ற parser function (குறிச்சொல்) பயன்படுத்தப்படுகின்றது. இதன் பயன்பாடு பற்றி மேலும் அறிய Wikipedia:Lua பக்கத்தைப் பாருங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:48, 21 ஆகத்து 2015 (UTC)
உதவி
தொகுஎன் பெயர் அன்புமுனுசாமி(பயனர்:Anbumunusamy) ஐந்தாம் வகுப்பு பழைய மாணவன்,நான் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் எழுத விரும்கிறேன்,பலமுறை முயன்றும் தடை செய்ய படுகிறேன்,தகுந்த காரணமும் உதவியும் தேவை.நன்றிகள்.
- @Anbumunusamy: இங்கே கட்டுரை எழுதும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம். --மதனாகரன் (பேச்சு) 08:37, 1 செப்டம்பர் 2015 (UTC)
- @Anbumunusamy:, நீங்கள் விக்கியில் எழுதிய மூன்று கட்டுரைகளும் சிறந்த முறையிலேயே எழுதியுள்ளீர்கள். எனவே அதே முறையில் கட்டுரைகளை எழுதுங்கள். எவரும் உங்களைத் தடை செய்யப் போவதில்லை. உதவி தேவைப்படின் யாராவது ஒரு பயனரின் உரையாடல் பக்கத்தில் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 09:39, 1 செப்டம்பர் 2015 (UTC)
கணிதச் சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி?
தொகுகணிதக் கட்டுரைகளுக்குகான சமன்பாடுகளை, படங்களை எவ்வாறு உள்ளீடு செய்வது?−முன்நிற்கும் கருத்து சிவபொன்னி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழில் எவ்வாறு அழைப்பது?
தொகுminimalism என்பதை தமிழில் எவ்வாறு அழைப்பது --Suthir