விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 9
வார்ப்புரு உதவி
தொகுகோட்டார், Kottar இவ்விரு கட்டுரைகளிலுமுள்ள அமைவிட உள்ளீடு சரியாக இருந்தும் கோட்டார் கட்டுரையில் அமைவிடம் பிழையாகக் காட்டுகின்றது. வார்ப்புருவில் சிக்கல் உள்ளதுபோல் உள்ளது. முடிந்தவர்கள் திருத்தி உதவவும். நானும் முயல்கிறேன். --Anton (பேச்சு) 01:25, 1 மார்ச் 2013 (UTC)
- எனக்கு இரண்டிலும் ஒரே இடத்தில் தானே காட்டுகிறது?--சோடாபாட்டில்உரையாடுக 01:42, 1 மார்ச் 2013 (UTC)
கட்டுரை எப்படி எழுதுவது,எதை பற்றி எழுதுவது?
புதிய பக்கங்கள் திறனாய்வு
தொகுhttps://en.wikipedia.org/wiki/Special:NewPagesFeed உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் செய்யலாமா? உதவி தேவை--இரவி (பேச்சு) 13:55, 2 மார்ச் 2013 (UTC)
மற்ற அரசியல் தகவல் இருக்கும் நம் வலையதளத்தில் குறவன் சமுதாயத்தின் தற்போது உள்ள நிலவரத்தை விளக்கீனேன். தவறூ இருந்தால் மன்னிக்கவும்.
மொழி மாற்றம் செய்வது குறித்த ஐயம்!
தொகுஅய்யா வணக்கம்! விக்கிபீடியாவில் புதிதாகக் கட்டுரைகள் எழுதத் துவங்கியுள்ளேன்.என்னிடம் ஒரே தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை விக்கிபீடியாவில் உள்ளது.இவற்றை எவ்வாறு மொழி மாற்றத் தலைப்பினூடாக இணைப்பது என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.நன்றி! - பட்டுக்கோட்டை சத்யா
- நீங்கள் எதைப்பற்றி கேட்கிறீர்கள் என்பது எனக்கு முழுமையாக விளங்கவில்லை. ஒருவேளை நீங்கள் கேட்பது தமிழ் விக்கிபீடியாவிலிருக்கும் ஒரு கட்டுரைக்கு, ஆங்கில விக்கிப்பீடியாவிலிருக்கும் அதே தலைப்பிலான கட்டுரைக்கும் விக்கி இடையிணைப்பை ஏற்படுத்துவது குறித்து எனில், [[en:<நீங்கள் கருதிய ஆங்கில விக்கி கட்டுரையின் பெயர்>]] என தமிழ் கட்டுரையின் கடைசியில் இடவும் (அ) [[ta:<நீங்கள் கருதிய தமிழ் விக்கி கட்டுரையின் பெயர்>]] என ஆங்கில கட்டுரையில் இடவும். கி. கார்த்திகேயன் (பேச்சு) 22:01, 3 மார்ச் 2013 (UTC)
நிலப்பட இணைப்பு வார்ப்புருக்களில் பிழை
தொகுபிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து தகவற்பெட்டிகளை இணைக்கும்போது அங்கு தரப்பட்டுள்ள நிலப்படம் தமிழ் விக்கியில் இல்லையென்றால் இவ்வாறான பிழைச்செய்தி வருகிறது;
Expression error: Unrecognised punctuation character "[".
இதனை சரிசெய்ய அந்த விக்கியாலிருந்து நிலப்படத்தை, பிற இல்லாத படிமங்களைப் போல, தரவிறக்கினால் போதுமா அல்லது வேறேதும் திருத்த வேண்டுமா ? --மணியன் (பேச்சு) 04:01, 4 மார்ச் 2013 (UTC)
- எந்தக் கட்டுரை என உதாரணம் தந்தால் நல்லது. நகரம் குறித்த கட்டுரையா?--Kanags \உரையாடுக 07:46, 4 மார்ச் 2013 (UTC)
- இன்று நான் எழுதியுள்ள கெம்பெகவுடா அருங்காட்சியகம் காணவும். பிழை ஏற்பட்டதால் வார்ப்புருவில் location map தரவுகளை மறைத்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 08:59, 4 மார்ச் 2013 (UTC)
- ஆயிற்று. வார்ப்புரு:Location map India Bengaluru ஐ மட்டும் இங்கு சேர்த்தால் போதுமானது. வரைபடம் பொதுவில் உள்ளது.--Kanags \உரையாடுக 09:15, 4 மார்ச் 2013 (UTC)
- இன்று நான் எழுதியுள்ள கெம்பெகவுடா அருங்காட்சியகம் காணவும். பிழை ஏற்பட்டதால் வார்ப்புருவில் location map தரவுகளை மறைத்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 08:59, 4 மார்ச் 2013 (UTC)
குறவர் சமுதாயம்
தொகுஅன்புடைய ரவி அவ்ர்களுக்கு, தாயுமானவர் எழுதி கொள்வது, தங்களின் ஆலோசனைப்படி குறவர் சமுதாயத்தின் வரலாறூ,மக்கள் தொகை, அவர்களீன் இன்றைய நிலை, இவர்களீன் தீர்வு தான் என்ன என்பதை உஙகள் உதவியால் விரைவில் எழுதுகிறேன்.அதே சமயம் அரசியல் கட்சிகள் பெயர்கள் என் டைப் செய்தால் ஒரு சில கட்சிகள் பெயர்கள் வருகின்றன, அதேபோல அந்த வரிசைஇல் வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி என்கிற கட்சி வருவற்க்கு எந்த பகுதிக்கு சென்றூ பதிவு செய்ய வேண்டும்.
- தாயுமானவர், வள்ளி மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற கட்டுரை விக்கியில் இருந்தால்தான் வரும். அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் ஊடகங்களில் வந்தாலே அது குறித்த கட்டுரை இடம்பெறும்.--மணியன் (பேச்சு) 08:59, 4 மார்ச் 2013 (UTC)
- வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி என்ற தலைப்பில் கட்டுரை உருவாக்கி அதில் அதன் இறுதியில் [[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]] என்று சேர்த்தீர்கள் என்றால் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பக்கத்தில் இக்கட்சியும் பட்டியலிடப்படும். ஆனால், இக்கட்சி ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க அளவு குறிப்பிடத்தக்கமை உள்ளது என்று எண்ணும் அளவுக்கு கட்டுரையில் தகவல் இல்லை என்றால், நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, இக்கட்சியின் தோற்றம், வரலாறு, சமூகப் பங்களிப்பு, தேர்தல் பங்கெடுப்பு முதலிய விவரங்களைக் குறிப்பிட்டு விரிவாக எழுதுங்கள். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வந்திருந்தால் அதற்கு இணைப்பு கொடுத்து எழுதுங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், ஏற்கனவே உள்ள கட்சிகள் பற்றிய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று கவனியுங்கள். இது ஒரு புறம் இருக்க, சமூகவியல் சார்ந்த கட்டுரைகளிலும் உங்கள் பங்களிப்புகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, அம்பேத்கர் போன்ற கட்டுரைகளைத் தொகுத்து கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். தரமான தகவலைச் சேர்க்க ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்து எழுதலாம். அல்லது, உரிய தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி எழுதலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:21, 4 மார்ச் 2013 (UTC)
திரு.ரவி அவர்களுக்கு,தாயுமானவர் எழுதி கொள்வது,வணக்கம்.குறவர்கள் பற்றிய கட்டுரையில் எனது
பங்களிப்பை தந்துள்ளேன். குறை இருந்தால் கூறவும், திருத்தி கொள்கிறேன்.நிறை இருந்தால் எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்.என் சமுதாய மக்கள் மட்டும்மல்ல அனைத்து மக்களும் படித்து அறிய வேண்டும் என்பதே என் விருப்பம்.கட்டுரை இன்னும் முழுமையடையவிலலை.விரைவில் முழு வடிவம் தந்து விடுகிறேன்.புதியவனான என்னை அரவணைத்து ஆலோசனை கூறியதற்கு மிக்க நன்றி.திரு.மணியன் அவர்களுக்கும் என் நன்றி.கண்டிப்பாக அம்பேத்கர் கட்டுரையை தொகுக்க முயற்சி செய்கிறேன் நன்றி
How to edit
தொகுHow can i edit a page which is created by me earlier..--−முன்நிற்கும் கருத்து Nowsadam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இந்தப் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளின் பட்டியல் உள்ளது. இதன் படி நீங்கள் அஸ்சிராஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று என்ற கட்டுரையை மட்டும் தொடங்கியிருக்கிறீர்கள். இக்கட்டுரையைத் தெரிவு செய்து தொகுக்கத் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 06:57, 8 மார்ச் 2013 (UTC)
குறவர் கட்டுரையில் சில நீக்கம்
தொகுஅன்புமிக்க நண்பர் திரு சூர்யா அவர்களுக்கு, குறவர் பற்றிய கட்டுரையில் சில பகுதிகளை தாங்கள் நீக்கம் செய்துள்ளீர்கள்.என்ன காரணம் என்பதை தாங்கள் கூறினால் எனக்கு பயனாக இருக்கும். முதன் முதலாக இந்த கட்டுரை அனைவருக்கும் என் மக்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டு, என் முன்னோர்கள் சொன்னதை எழுதி இருந்தேன்.நீக்கியதிற்கு விளக்கம் கொடுத்தால் மிகவும் சந்தோசம் அடைவேன்.என் முதல் படைப்பினை முடித்து கொடுக்க எனக்கு ஊக்கம் கொடுத்த அன்பு நண்பர் திரு.இரவி அவர்களுக்கும்,என்னை பாராட்டி செயல் படுத்திய அன்பு நண்பர் திரு. மணியன் அவர்களுக்கும், முழு வடிவம் கொடுப்பதற்கு தலைப்புகளை சரி செய்து தந்த அன்பு நண்பர் திரு.சுப்ரமணி அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,நன்றி--தாயுமானவர் 09:37, 15 மார்ச் 2013 (UTC)
- தாயுமானவர், நீங்கள் தந்துள்ள பகுதிகளில் ஒரு பகுதி மட்டுமே கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. அப்பகுதியை மட்டும் மீள்வித்திருக்கிறேன். மற்றும் கட்டுரைப் பக்கங்களில் உங்கள் கையொப்பங்களை இடாதீர்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:36, 15 மார்ச் 2013 (UTC
- மன்னிக்கவும் தாயுமானவர். தாங்கள் ஒவ்வொரு வரிக்குக் கீழும் கையொப்பம் இட்டிருந்தீர்கள். அதுதான் கடைசி மாற்றமாகக் காட்டியது. எனவே, உங்களது அனைத்துத் தொகுப்புகளையும் முன்னிலையாக்கினேன். நீங்கள் எழுதியதை இணைத்துவிடுகிறேன். கட்டுரைகளில் கையெழுத்திட வேண்டாம். வரலாற்றுப் பக்கத்தில் (alt+shift+h) உங்களது பயனர் பெயர் இருக்கும். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:37, 15 மார்ச் 2013 (UTC)
தொகுத்தல் உதவி
தொகுkatturai ezhudha aasaiyaaga ulladhu. eppadi ezhuduvadhu?
- வணக்கம், தமிழ் விக்கப்பீடியாவில் பங்களிக்க விருப்பத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பேச்சுப்பக்கத்திலிருக்கும் வரவேற்பு செய்தியை படியுங்கள், அதிலிருக்கும் இணைப்புகளைப்(பக்கங்களை) படியுங்கள். அதிலேயே முழு வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:02, 21 மார்ச் 2013 (UTC)
- தமிழில் எழுதுவதற்கு இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:11, 21 மார்ச் 2013 (UTC)
நான் விக்கிபீடியாவுக்கு புதியவன். கட்டுரைகளை தொகுக்க விரும்பிகிறேன். பயனர் பக்கம் ஊருவாக்க உதவ முடிமா?
வார்ப்புரு
தொகுபுதியவன். நான் கட்டுரைகளை உருவாக்கும் போது வார்ப்புருக்கைளை சேர்க்க விளைகிறேன்.தயவு செய்து யாரவது வற்புறு பற்றி விளக்கி எப்படி அமைப்பது என கூறவும்.நன்றி.--Aathavan jaffna (பேச்சு) 05:58, 24 மார்ச் 2013 (UTC)
- ஒரே பொருளை பல பக்கங்களில் காட்ட விரும்பினால் வார்ப்புரூக்களைப் பயன்படுத்துகிறோம். இவை எந்த வடிவிலும் இருக்கலாம். தகவற்பெட்டி வார்ப்புருக்கள் இங்கு நிறைய உள்ளன. பிற வகையினையும் உருவாக்கிக் கொள்ளலாம். தற்போதைய தேவையை விளக்கினால் நானே வார்ப்புரு உருவாக்கித் தருவேன். -தமிழ்க்குரிசில்
வார்ப்புரு
தொகுநன்றி .நான் நல்ல பயணர் பக்கத்தை உருவாக நினைக்கிறேன்.உதவ முடியமா? --Aathavan jaffna (பேச்சு) 14:46, 24 மார்ச் 2013 (UTC)
சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்ப பெயர்களும் என்ற தலைப்பில் [1] கட்டுரை எழுதி இருக்கிறேன்.அதில் முதல் பத்தி சரியாக என்னால் தொகுக்க முடியவில்லை. மேலும் அடுத்தடுத்த பத்திகளின் தலைப்புகள் தடித்த எழத்துக்களில் வரவில்லை.
மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர்
தொகுஅரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர் தவறாக காட்டுகின்றது.(எ.கா) செந்துறை மாவட்ட ஆட்சியர் பெயர் = செந்தில்குமார் :சரியான பெயர் ரவிகுமார்
- http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊர்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர் காட்டவில்லை வெற்று ஆக உள்ளது.--ஸ்ரீதர் (பேச்சு) 05:38, 9 ஏப்ரல் 2013 (UTC)
- இவற்றை இற்றைப்படுத்த சிறந்தவழி விக்கித்தரவுகள் தான். தற்போதைய இரண்டாம் கட்ட விரிவுபடுத்தலில் தகவற்பெட்டிகளின் தரவுகள் மையப்படுத்தப் படுகின்றன. இதனை பயன்படுத்த நுட்பவியலாளர்கள் உதவி தேவை.
How will this work?
There are two ways to access the data:
- Use a parser function like {{#property:p169}} in the wiki text of the article on Yahoo!. This will return “Marissa Mayer” as she is the chief executive officer of the company.
- For more complicated things you can use Lua. The documentation for this is here.
--மணியன் (பேச்சு) 05:49, 9 ஏப்ரல் 2013 (UTC)
- தகவல் பெட்டியில் பல ஆட்சியாளர்களின் பெயர்கள் ஆங்கிலத் தலைப்பெழுத்துடன் உள்ளன. இவற்றைத் திருத்த வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 14 ஏப்ரல் 2013 (UTC)
இப்போது உயரதிகாரிகள் பெயர்கள் இந்த வார்ப்புருவில் உள்ளன வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள். இதனைத் தொகுத்து இற்றைப் படுத்திக் கொள்ளுங்கள். (தமிழ்க்குரிசில் - தமிழ்த் தலைப்பெழுத்திடும் போது எம், எசு, கே. முறையில் தமிழ்ப்படுத்தவும், ம, ச, க என்று வேண்டாம். ஏனெனில் M என்பதன் விரிவாக்கம் ம, மா, மெ மே... ஏதேனும் ஒன்றாக இருக்கக் கூடும். எனவே விரிவாக்கம் தெரியாத நிலையில் தெரியாத நிலையில் ”எம்” போன்ற எழுத்துப்பெயர்ப்பு முறையைப் பயன்படுத்துங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 00:57, 19 ஏப்ரல் 2013 (UTC)
கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள்
தொகுவணக்கம் ,
கணினி மற்றும் கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள் எங்கே இருகின்றன ? எனக்கு பல ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் தெரியவில்லை ..
உதரணமாக ,
ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் இருக்கும் பக்கம் ஒன்றை துவங்கி உதவி புரிந்தால் என்போன்ற ஆட்களுக்கு உதவியாக இருக்கும்
நன்றி சுரேஷ்
- உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன் சுரேஷ், எனக்கு தெரிந்த சில உதவிக் குறிப்புகள்:
- 1. விக்சனரி இணையத்தில் கிடைக்கும் தமிழ் அகராதி. இதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கிடைக்கும். பார்க்க சில வேற்று மொழிச் சொற்களும் உள்ளன.
- 2. தெரியாத சொற்களுக்கு ஆங்கிலச் சொல்லை எழுதுங்கள். எ.கா: நெட்வொர்க். ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் இதே போல கேள்வி கேளுங்கள். பிறர் தங்களுக்கு தெரிந்த சொற்களைப் பரிந்துரைப்பர். பொருந்தும் சொற்களை பயன்படுத்துவோம்.
- 3. நான் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதியைப் பயன்படுத்துகிறேன். கூகுளில் கலைச்சொல் அகராதி எனத் தேடிப் பாருங்கள். கிடைக்கக் கூடும்.
- 4. விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை/தொழில்நுட்பம் இந்த பக்கத்தில் தொழில்னுட்பம் தொடர்பான சொற்கள் சில உள்ளன.
நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:03, 15 ஏப்ரல் 2013 (UTC)
தொகுப்புக்கான ஆலோசனை
தொகுமரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:13, 18 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம்
தொகுப்புக்கான ஆலோசனை
தொகுமரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:40, 18 ஏப்ரல் 2013 (UTC)
ஆலோசனை
தொகுநான் புதிதாக புகுபதிகை செய்ய வேண்டுமா? ஏற்கனவே செய்துள்ள YOKISHIVAM போதுமா?--182.156.22.243 15:54, 20 ஏப்ரல் 2013 (UTC)
- ஏற்கனவே பதிவு செய்தது போதுமானது. அதையே பயன்படுத்துங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 16:01, 20 ஏப்ரல் 2013 (UTC)
ஆங்கில விக்கியில் உள்ள படிமம் பொதுவில் இல்லையே!
தொகுஆங்கில விக்கியில் உள்ள படிமம் விக்கிபொதுவில் இல்லையே! என்ன செய்வது? File:PCT Globe.jpg இப்படிமம் தொடுதிரை என்ற கட்டுரைக்கு தேவையாகிறது. --இராஜ்குமார் (பேச்சு) 10:28, 21 ஏப்ரல் 2013 (UTC)
- அதனை உங்கள் கணினிக்குத் தரவிறக்கி நியாயமான பயன்பாடு அடிப்படையில் மீண்டும் தமிழ் விக்கியில் தரவேற்றலாம்.--Kanags \உரையாடுக 10:57, 21 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. சிறீதரன். நான் பதிவேற்றியுள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் கூறுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 11:06, 21 ஏப்ரல் 2013 (UTC)
- அதே பெயரில் தரவேற்றுவது நல்லது. மூலத்தையும் குறிப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 11:44, 21 ஏப்ரல் 2013 (UTC)
- நன்றி. சிறீதரன் --இராஜ்குமார் (பேச்சு) 17:18, 23 ஏப்ரல் 2013 (UTC)
calisthenic
தொகுcalisthenic தமிழ் என்ன? யாராவது கூற இயலுமா? Why corals do calisthenics இக்கட்டுரையை தமிழில் எழுதும் பொழுது சிக்கலுற்றேன். --இராஜ்குமார் (பேச்சு) 17:18, 23 ஏப்ரல் 2013 (UTC)
- தமிழ் விக்சனரியில் உள்ள callisthenic என்பதும் calisthenic என்பதும் ஒன்றா?? இரண்டு "l" உள்ளதே! --இராஜ்குமார் (பேச்சு) 17:21, 23 ஏப்ரல் 2013 (UTC)
- "கட்டழகு பயிற்சிகள்" என்று அறிந்து கொண்டேன். --இராஜ்குமார் (பேச்சு) 20:00, 23 ஏப்ரல் 2013 (UTC)
நேர வலயம்
தொகுஉள்ளூர் நேர வலயத்தை என் விருப்பத் தெரிவுகளில் எவ்வாறு சேர்ப்பது?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:53, 23 ஏப்ரல் 2013 (UTC)
உதவி
தொகுஅன்பு விக்கியர்களுக்கு வணக்கம்! கோபால் நாயக்கர் கட்டுரையை தொகுத்தேன், தொடர்ந்து தொகுக்க வேண்டும் உதவ மடியுமா?--யோகி சிவம் 03:50, 2 மே 2013 (UTC)
- விருப்பாச்சி கோபால நாயக்கர் என்ற விரிவான கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் மேலதிக தகவல்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 04:16, 2 மே 2013 (UTC)
- அன்பு கனகரத்தினம் அவர்களுக்கு வணக்கம்!விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டுரையில் மேலதிகத் தகவல்கள் எழுதியுள்ளேன்.ஆதாரங்களாக செப்புப் பட்டயம்,சத்திரப்பட்டி அரன்மனை, கோபால் நாயக்கரின் அரன்மனையின் சிதைந்த சுவர்களின் படங்கள் எனது கைபேசியில் உள்ளது.அதை எவ்வாறு பதிவேற்றுவது--யோகி சிவம் 14:11, 2 மே 2013 (UTC) \உரையாடுக
- சிவம், படத்தைப் பதிவேற்றும் முன் உங்கள் சொந்தப் படம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் பக்கத்தின் இடப்பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியை சொடுக்கி, கோப்பைப் பதிவேற்று என்பதைச் சொடுக்குங்கள். (கைபேசியில் வேலை செய்யவில்லை என்றால், சிறப்பு:upload என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.) படத்தை பதிவேற்றுங்கள். சில அடிப்படை வசதிகள் கொண்ட கைபேசிகளில், 300 கிலோபைட்டுகளை விட பெரிய படங்களை தரவேற்றுவது கடினமாக இருக்கலாம். பதிவேற்றிப் பாருங்கள். முடியவில்லை எனில், உங்கள் கைபேசியின் புளூடூத் வசதியின் மூலம், கணினி வழி தரவேற்றிப் பாருங்கள். தெளிவான படமாக இருந்தால் சிறப்பு :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:18, 2 மே 2013 (UTC)
இந்து சமய வலைவாசலை மேம்படுத்த உதவி வேண்டல்
தொகுஇந்து சமய வலைவாசலை கடந்த சில நாட்களில் அமைத்துள்ளேன். சிறப்பு கட்டுரைகள், இந்து சமய கடவுள், சிறப்பு படம், உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றினை மேம்படுத்தவும், வலைவாசலில் இணைக்க வேண்டியவை பற்றியும் விக்கியன்பர்கள் எடுத்துரைக்க வேண்டி இங்கு விண்ணப்பம் செய்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:39, 2 மே 2013 (UTC)
- விருப்பம், ரவி கூறியது போல வாரம் ஒரு வலைவாசலை மேம்படுத்தி முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். உங்கள் வலைவாசலுக்குள் நானும் நுழையலாம் தானே?? :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:42, 2 மே 2013 (UTC)
தோழர் தமிழ்க்குரிசில் வணக்கம்!! மகாபாரதத்தில் சத்தியவதி,சாந்தனு,வீடுமர்,சகுனி, ஆகியோரை கவனித்தீர்களா?--யோகி சிவம் 14:55, 2 மே 2013 (UTC) \உரையாடுக
- கண்டேன். மிக அருமையாக கதை விளக்கமும், கதைமாந்தரின் இயல்பும் தந்து அசத்தியிருக்கிறீர்கள். செம்மை, விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 2 மே 2013 (UTC)
- தமிழ்க்குரிசில் நண்பரே, தங்களை அன்புடன் இந்து சமய வலைவாசலுக்கு வரவேற்கிறேன். மேலும் தாங்கள் இந்து சமயம் தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கி முன்பே வலைவாசலை மேம்படுத்த தொடங்கிவிட்டீர்கள் என்பதையும் நினைவுகூற விரும்புகிறேன். நன்றி. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:37, 2 மே 2013 (UTC)
- தங்களுக்கு உதவுவது என் பாக்கியம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 2 மே 2013 (UTC)
இந்து சமயம்/தலைப்புகளை தமிழ்ப்படுத்த உதவி தேவை
தொகுஆங்கில இந்து சமய வலைவாசலில் இடம்பெற்றுள்ள en:Portal:Hinduism/Topics என்பதனை தமிழில் இந்து சமய தலைப்புகள் என தமிழாக்கம் செய்துள்ளேன். அவற்றில் சிலவற்றிக்கு தமிழ்ப்படுத்த தெரியவில்லை. எனவே விக்கியன்பர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 3 மே 2013 (UTC)
பகுப்பு:சைவ சமயம்என்பதில் Category:Shaivism என பிற மொழி பகுப்பின் இணைப்பு தர முயற்சிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு செய்தி வருகிறது.
Site link [[tawiki:பகுப்பு:சைவ சமயம்]] already used by item [[Q9995472]].
ஆனால் ஆங்கில பகுப்பில் எந்தவொரு தமிழ்ப்பகுப்பினையும் காண இயலவில்லை. இந்த பிழையை திருத்தம் செய்து உதவ இயலுமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:46, 4 மே 2013 (UTC)
ஆயிற்று சைவ சமயம் என்ற கட்டுரையுடன் ஆங்கிலப் பகுப்பும், பகுப்பு:சைவ சமயம் என்ற பக்கம் விக்கி பொது (காமன்ஸ்) சைவசமய பகுப்புப் பக்கத்திற்கான இணைப்புடனும் தரப்பட்டிருந்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 4 மே 2013 (UTC)
- மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:55, 7 மே 2013 (UTC)
நான் உருவாக்கிய பக்கத்தில் எப்படி படத்தை பதிவேற்றம் செய்வது. மேலக்கால் முஹம்மது பிலால் என்ற பக்கத்தில் அவரது புகைப்படம் இடம் பெற செய்யுஙகள் நன்றி
விக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது?
தொகுவிக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது? ஒரு கட்டுரையை இன்று எழுதி முடித்தேன். கூகிளில் தேடிப்பார்க்கும்போது நான் எழுதிய கட்டுரை வரவில்லை. உள்ளடக்கம் செய்யப்படவில்லை என தோன்றுகிறது. என்ன செய்யலாம்?
- வணக்கம் நண்பரே! நீங்கள் கட்டுரைகள் எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! எனக்குத் தெரிந்த வரையில், விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைகள் மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் தெரியும். ஏதேனும் உதவி தேவையென்றால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 6 மே 2013 (UTC)
நன்றி தமிழ்க்குரிசில். காத்திருக்கிறேன். மேலும் பல கட்டுரைகள் எழுத ஆவலாய் உள்ளேன்.
தமிழ் ஓம் படிமம்
தொகுஇந்து சமய வார்ப்புருக்கள் மற்றும் வலைவாசல் போன்றவற்றில் தேவநாகிரி எழுத்துமுறை ஓம் தற்போது இடப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்பில் தேவநாகிரி ஓம் கிடைப்பதாலும், உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுவதாலும் நானும் இதனையே பயன்படுத்த ஆலோசிக்கிறேன். எனினும் சில நண்பர்கள் தமிழ் ஓம் என்பதை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அழகிய வடிவமைப்பில் தமிழ் ஓம் படிமத்தினை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. விக்கிப்பீடியாவில் உள்ள வடிவமைப்பாளர்கள் எவரேனும் தமிழ் ஓம் படிமத்தினை வடிவமைத்து தந்திட கோரிக்கை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 7 மே 2013 (UTC)
ஆயிற்று--Anton (பேச்சு) 07:48, 7 மே 2013 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 08:14, 7 மே 2013 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 09:41, 7 மே 2013 (UTC)
- விருப்பம்நிறப்பின்னணியும் வடிவமைப்பும் அருமை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:54, 7 மே 2013 (UTC)
- விருப்பம்--ஆதவன் (பேச்சு) 13:12, 7 மே 2013 (UTC)
- விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:28, 8 மே 2013 (UTC)
- அன்டன் அவர்களே, இரண்டாவது படம் வலைவாசலில் அமைக்க சிறப்பானதாக இருக்கிறது. முதல் மற்றும் இறுதி படிமத்தின் நிறத்தினை காவிப்பின்னனியில் வைத்து பார்க்கும்போது நன்கு தெரியும் படி அமைத்து தர வேண்டுகிறேன். இந்து தர்மம் வார்ப்புருவில் படிமங்களை பார்வைக்காக இணைத்திருக்கிறேன். அதனைக் கண்டு தாங்கள் நிறம் மாற்றிதர வேண்டுகிறேன். மிக விரைவில் கோரிக்கையை அழகாக நிறைவேற்றி தந்தமைக்கு நன்றிகள் பல. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:51, 7 மே 2013 (UTC)
முஹம்மது பிலால்
தொகுமேலக்கால் முஹம்மது பிலால் என்னும் பக்கத்தில் உள்ள புகைப்படத்தின் அளவை சிறிதாக்குவதற்கு உதவுஙகள். அல்லது செய்யுங்கள்.
நன்றி ஆயிற்று--Anton (பேச்சு) 11:04, 7 மே 2013 (UTC) நன்றி
தமிழிலக்கியத்தின் மீதான உலக அறிஞர்களின் பார்வை
தொகுதமிழிலக்கியம் குறித்து பிற மொழி அறிஞர்கள் (மொழியியலாளர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள்...) தெரிவித்துள்ள கருத்துகள் குறைந்தது 7 தேவைப்படுகிறது. ஆதார மூலத்துடன் கிடைத்தால் இன்னமும் சிறப்பு! அந்தக் கருத்துகளை இங்கே இடுங்கள். இதனை வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்தில் காட்சிப்படுத்த எண்ணம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:49, 9 மே 2013 (UTC)
உதவி
தொகுஅன்பு விக்கியர்!குதிரை ஆறு அணை கட்டுரைக்கு உரிய படம் படிம பட்டியலில் உள்ளது,கட்டுரையில் இணைத்தால் படம் காட்சியாக வில்லை படத்தை இணைக்கவும் நன்றியுடன்--[[Yokishivam|Yokishivam]] (பேச்சு) 04:13, 12 மே 2013 (UTC)
- ஆயிற்று--ஸ்ரீதர் (பேச்சு) 04:59, 12 மே 2013 (UTC)
- நன்றி!ஸ்ரீதர்--Yokishivam (பேச்சு) 17:09, 12 மே 2013 (UTC)
சொல்லுங்களேன்!
தொகுவிக்கியர்களுக்கு வணக்கம்! ஒரு கட்டுரையின் பேச்சு பக்கம் எப்படி உருவாக்குவது. (உ.ம்)அப்பத்தா பேச்சு பக்கத்தில் குறும்பன் அவர்களும்,தென்காசி சுப்பிரமணியும்,நானும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.--Yokishivam (பேச்சு) 11:23, 15 மே 2013 (UTC)
- விக்கிக் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு உரையாடல் (பேச்சு) பக்கத்தையும் கொண்டிருக்கும். கட்டுரையின் மேல் பகுதியில் இரண்டாவது நிரலில் அப்பக்கம் இருக்கும். பேச்சுப் பக்கம் இதுவரை உருவாக்கப்படாமல் இருந்தால் அது சிவப்பு இணைப்பாக இருக்கும். அதனைத் தெரிவு செய்து நீங்கள் உங்கள் உரையாடலை ஆரம்பித்து சேமிக்கலாம். ஏற்கனவே உரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது நீல இணைப்பில் தெரியும். நீங்கள் உங்கள் உரையாடலைத் தொடரலாம். இதைத்தான் நீங்கள் கேட்டீர்களா?.--Kanags \உரையாடுக 11:46, 15 மே 2013 (UTC)
நான் கேட்டது இதுவல்ல எனக்கு பேச்சுப் பக்கம் நீல வண்ணத்தில் தெரிகிறது.ஆனால் பேச்சுப் பக்கத்தை சொடுக்கினால் அனைத்து பேச்சுக்களும் தெரிகிறது.ஆனால் அப்பத்தா கட்டுரையின் பேச்சுப் பக்கம் கீழ் கண்டவாறு உள்ளது.
பேச்சு:அப்பத்தா (இதில் கீழ்கண்டவை மட்டுமே உள்ளது)
ஆத்தா என்றும் பாட்டியா என்றும் சில இடங்களில் சொல்லுவார்கள். -குறும்பன்
- பாட்டி என்பது பொதுப் பெயர். அப்பாயி என்றும் அழைப்பர். தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:11, 14 மே 2013 (UTC)
கொங்கு தமிழில் ஐயம்மா அப்பம்மா என்று அழைத்து கேட்டதில்லை, பாட்டியா என்று அப்பாவின் அம்மாவையும் பாட்டன் என்று அப்பாவின் அப்பாவையும் சில இடங்களில் (கொங்கு பகுதியில்) அழைப்பதை கேட்டுள்ளேன். ஆத்தா என்ற பயன்பாடு கோவை, பொள்ளாட்சி, காங்கேயம், திருப்பூர், கோபி பகுதிகளில் அதிகம் --குறும்பன் (பேச்சு) 17:17, 14 மே 2013 (UTC)
தென்னகத்தில் அப்பாச்சி (அப்பா வழி ஆச்சி), அம்மாச்சி தான். ஆயா என்று சில இடங்களில் அழைப்பதுண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 15 மே 2013 (UTC)
பெத்தவளை அம்மா என்றும், அம்மாவின் அம்மாவை ஆத்தா என்றும்,ஆத்தாளின் அம்மாவை மூத்த ஆத்தா என்றும் தாய் வழி மண உறவு கொள்பவர்கள் இன்றும் (தற்போதைய இராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,ஆகிய மாவட்டங்களில்,இல்லத்துப்பிள்ளை,கொண்டையங் கோட்டை மறவர்,ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்)அழைப்பதுண்டு. கொங்குப் பகுதியில் அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்றும்,அப்பாயி என்றும்,அப்பாவின் அப்பாவை அப்பார் என்றும்,அப்பாரின் அப்பாவை அப்பார் அய்யன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:01, 15 மே 2013 (UTC)
அப்பார் அய்யனின் அப்பாவை பாட்டன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:04, 15 மே 2013 (UTC)
மேற்கண்ட உரையாடல் மட்டுமே உள்ளது,அதுதான் கேட்க தூண்டியது--Yokishivam (பேச்சு) 14:28, 15 மே 2013 (UTC)
rand கமெண்டில் பூஜ்ஜியத்தினை எவ்வாறு தவிர்ப்பது.
தொகுவலைவாசல்களின் கட்டுரைகளை ரேன்டமாக காட்டுவதற்கு {{வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/{{Rand|1+1|1}}}} என இட்டேன், இருப்பினும் பூஜ்ஜியத்தினை தவிர்க்க இயலவில்லை. வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/0 என்று வராமல் தடுத்து, வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/1 என்று வருவதற்கு உதவுங்கள் நண்பர்களே,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:05, 17 மே 2013 (UTC)
அஷ்டாவக்ர கீதை
தொகுஅன்பு கனக்ஸ் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை 24.05.2013ல் தொகுக்க முயன்றபோது அப்பக்கம் 13 செப்டம்பர் 2009லேயே தங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை செய்தியைக் கண்டேன். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியிட்டுள்ள அஷ்டாவக்ர கீதை படிக்க நேர்ந்தது,விக்கிப்பீடியா வாசகர்களுக்கு அத்வைத உபதேசம் குறித்து தேடுவோருக்கு பலனளிக்கும் என்பதால் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை தொகுக்க ஓர் ஆலோசனை சொல்லுங்கள்.--Yokishivam (பேச்சு) 01:30, 24 மே 2013 (UTC)
- 2009 இல் நீக்கப்பட்டது போதிய தகவல் இல்லாமையால். நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்.--203.13.3.92 02:45, 24 மே 2013 (UTC)
- நன்றி பார்வதிஸ்ரீ --Yokishivam (பேச்சு) 09:39, 24 மே 2013 (UTC)
- அந்தப் பதில் நான் எழுதியது. ஐபி பதிந்து விட்டது.--Kanags \உரையாடுக 10:26, 24 மே 2013 (UTC)
விருப்பம்...... :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:52, 24 மே 2013 (UTC)
- "நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்" என்ற அன்பு கனக்ஸ் தங்களுக்கு நன்றி!--Yokishivam (பேச்சு) 16:54, 24 மே 2013 (UTC)
naveenam pattiya ennakkarukkalai telivupaduttuka?
தொகுiroppija naveena nadaka varalaru naveena ennakaru arankil edpadutiya mattam
சரபம் கட்டுரைகள்
தொகுசரபம் எனும் கற்பனை உயிரினத்திற்கும், சரபேசுவரர் என்ற சிவவடிவத்திற்கும் நான்கு கட்டுரைகள் அவசியமற்றது என்று எண்ணுகிறேன். இக்கட்டுரைகளை இரு கட்டுரையாகவோ, ஒரு கட்டுரையாகவே அமைத்து தர வேண்டுகிறேன். நன்றி,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:27, 25 மே 2013 (UTC)
இதில் இரு கட்டுரைகள் தெய்வத்தை குறிப்பதாகவும் (2,3), இரு கட்டுரைகள் (1,4) உயிரினத்தை குறிப்பதாகவும் உள்ளன. அதனால் சகோ கூறியது போல் இரு கட்டுரையாக்க கட்டுரை வரலாறு முன்னுரிமைப்படி 3ஐ 2இலும் 4ஐ 1இலும் இணைக்க வேண்டும். கட்டுரை எண் மூன்று நான்கு போன்றவற்றை ஒரு ஆசிரியரே எழுதியுள்ளதால் (மற்ற பங்களிப்புகள் சகோ செய்தது) அவரே வெட்டி ஒட்டி வழிமாற்று கொடுப்பது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:03, 27 மே 2013 (UTC)
- மிக்க நன்றி நண்பரே. செங்கை ஐயாவிடம் விண்ணப்பிக்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:19, 27 மே 2013 (UTC)
ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:47, 27 மே 2013 (UTC)
- நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 27 மே 2013 (UTC)
விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை
தொகுஎனது விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது. யாராவது தங்களது விருப்பத்தேர்வுகளை கவனித்து விட்டு சொல்லவும்.தெ.சுப்ரமணியனுக்கும் உள்ளது.யாராவது பார்க்கவும்.
- என்ன பிரச்சினை?--Kanags \உரையாடுக 21:10, 28 மே 2013 (UTC)
- பார்க்கவும்.படங்கள் காட்டுகிறது.:) Viruppangal2.JPG viruppathervukalil pirachchanai.jpeg
- மீடியாவிக்கி மாறிகளை டிரான்ஸ்லேட் விக்கியில் ஒரு புதியவர் விக்கிப்ப்யன்பாடு தெரியாமல் லிடரலாக மொழிபெயர்த்ததால் வந்த சிக்கல். அவற்றை நானும் சங்கீர்த்தனும் மீளமைத்துள்ளோம். சில நாட்களாகும் சரியாக.--சோடாபாட்டில்உரையாடுக 04:01, 29 மே 2013 (UTC)
- நன்றி.சோடபோட்டில்
உதவி
தொகுஅன்புடன் - விக்கியில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலோ, புதிதாக இணைக்கும் கட்டுரைகளிலோ புகைப்படங்களை எவ்வாறு இணைப்பது என்பது தெரியாமலிருக்கிறது. தெரியப்படுத்துங்கள்.
அன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:41, 31 மே 2013 (UTC)
உதவி
தொகுஅன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:47, 31 மே 2013 (UTC)
- வலைவாசல்:மகாபாரதம் இன்னும் எழுதப்பெறவில்லை நண்பரே. தாங்கள் எதனை கூறுகின்றீர்கள்?. [[பக்கத்தின் பெயர்]] என இணைப்பினைத்தாருங்கள் திருத்திவிடலாம்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:06, 31 மே 2013 (UTC)
- ஆம் மகாபாரத வலைவாசல் தொடுப்பு வைணவ வலைவாசலுக்கு செல்கிறது.--குறும்பன் (பேச்சு) 18:15, 31 மே 2013 (UTC)
- திருத்தியிருக்கிறேன்,--Kanags \உரையாடுக 06:07, 31 மே 2013 (UTC)