தமிழக அரசிடம் ஏற்கனவே உள்ள தரவைக் கொண்டு பின்வருமாறு ஒரு கட்டுரை உருவாக்க இயலும். கவனிக்க: இது ஒரு மாதிரி மட்டுமே. அதுவும், அனைத்துத் தரவுகளையும் எழுத்தில் காட்டும் படியான மாதிரி. கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப எத்தரவுகளைக் காட்டலாம், எவற்றை விடலாம், எப்படிக் காட்டலாம் (எ.கா. தகவற் பெட்டி), இன்னும் என்னென்ன தரவுகள் இருந்தால் நன்று என்ற நோக்கில் கருத்து தேவை. இக்கருத்தின் அடிப்படையில் ஒரு மேம்பட்ட மாதிரிக் கட்டுரையை உருவாக்குவோம். நன்றி. --இரவி (பேச்சு) 12:54, 24 ஆகத்து 2015 (UTC)Reply



கிராம அமைவிடம்
அங்கம்பாக்கம் என்ற கிராம பஞ்சாயத்து காஞ்சிபுரம்
வட்டரத்தில் காஞ்சிபுரம்   மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்து உத்திரமேரூர்  சட்டசபை தொகுதியில் அமைந்துள்ளது.
======================================================================
மக்கள் தொகை விபரம் 2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின்படி
மொத்த மக்கள் தொகை : 900990
ஆண்கள் : 9090
பெண்கள் : 900990
தாழ்த்தப்பட்டோர் : 999099
தாழ்த்தப்பட்டோர் ஆண்கள்: 09090
தாழ்த்தப்பட்டோர் பெண்கள்: 09090
==============================================================================
ஊரில் அமைந்துள்ள அடிப்படை வசதிகள் பற்றிய விவரங்கள்
குடிநீர் இணைப்புகள் : 650
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (Over Head Tank) :  5
சிறு மின்விசைப் பம்புகள் (Mini Power Pump) : 4 
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் (Ground Level Reservoir): 1 
கைப்பம்புகள் (Hand Pump) : 12
கிராமத்தில் அமைந்துள்ள இடுகாடு / சுடுகாடுகள்: 2

குக்கிராமத்தில் அமைந்துள்ள அரசு / உள்ளாட்சிக் கட்டடங்கள்(பள்ளிக் கட்டடங்கள் நீங்கலாக) : 9

குக்கிராமத்தில் அமைந்துள்ள அரசு / உள்ளாட்சி பள்ளிக் கட்டடங்கள் : 12

ஊராட்சியில் உள்ள சிறு குளங்கள் மற்றும் ஊரணிகள் : 3
குக்கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மையங்கள்: 0
குக்கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம்: 1

குக்கிராமத்தில் அமைந்துள்ள சந்தை: 0

கிராம ஊராட்சி சாலைகள் : 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் : 1
பஞ்சாயத்தில் அடங்கிய குக்கிரமங்கள்
1. மல்லிகாபுரம் காலனி
2. அங்கம்பாக்கம் காலனி
3. அங்கம்பாக்கம்
4. கிருஷ்ணாபுரம்
===============================================================================
பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் விபரம்

வரிசை எண் -  பெயர் - பதவி - கைப்பேபேசி எண்

1

2

3

4

5


கவனிக்க: @Natkeeran, Rsmn, Kanags, Sundar, and AntanO:--இரவி (பேச்சு) 06:28, 25 ஆகத்து 2015 (UTC)Reply

தனிநபர் தொடர்பெண்ணைத்தருவதைப்பற்றி எண்ணிப்பார்த்து முடிவுசெய்யலாம். தரவுகளை உள்ளபடியே இடாமல் உரையாக்கி இடலாம். கணேசின் தானியங்கிக்கட்டுரைகளுக்கு எழுதியதுபோல ஒரு வார்ப்பு வேண்டும். மற்றவை பின்னர். -- சுந்தர் \பேச்சு 08:01, 28 ஆகத்து 2015 (UTC)Reply
  1. நாம் முன்னர் உருவாக்கிய சிற்றூர் கட்டுரைகளுக்கு ஒத்த வார்ப்புருவில் இவையும் அமைவது பொருத்தமானது.
  2. ஏற்கெனவே உள்ள சிற்றூர் கட்டுரைகளுடன் conflict வந்தால் தானியங்கி அவற்றைக் கையாளக்கூடியத் தன்மையுடன் இருத்தல் வேண்டும். (தானியக்கமாகவோ தனிநபர் குறுக்கீட்டாலோ)
  3. முதல் பத்தி சிற்றூர் அமைவிடம் குறித்து: எந்த மாவட்டம், எந்த வட்டம் மற்றும் பிற சுட்டிகள் இங்கிருந்து இவ்வளவு தொலைவில்
அங்கம்பாக்கம் என்ற கிராம பஞ்சாயத்து காஞ்சிபுரம் வட்டாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்து உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் அமைந்துள்ளது.
  1. இரண்டாம் பத்தி மக்கள்தொகை பரம்பல் குறித்து:
மக்கள் தொகை விபரம் 2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின்படி
மொத்த மக்கள் தொகை : 900990
ஆண்கள் : 9090
பெண்கள் : 900990
தாழ்த்தப்பட்டோர் : 999099
தாழ்த்தப்பட்டோர் ஆண்கள்: 09090
தாழ்த்தப்பட்டோர் பெண்கள்: 09090
இந்துக்கள்:
இசுலாமியர்:
கிறித்தவர்:
இத்தரவுகளை தொடர் உரையில் தரவியலுமாயின் நன்று.
  1. அடிப்படை வசதிகள் குறித்து:

குடிநீர் வசதி உள்ளது. அரசு / உள்ளாட்சி கல்விக்கூட கட்டிடங்களின் எண்ணிக்கை 12. பேருந்து நிறுத்தங்கள்,சந்தைகள்,சாலைகள்,அடங்கியுள்ள குடியிருப்புகள் போன்ற தரவுகள் போதுமானவை. தேவையில்லாத மற்ற தரவுகள் :

குடிநீர் இணைப்புகள் : 650
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (Over Head Tank) :  5
சிறு மின்விசைப் பம்புகள் (Mini Power Pump) : 4 
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் (Ground Level Reservoir): 1 
கைப்பம்புகள் (Hand Pump) : 12
கிராமத்தில் அமைந்துள்ள இடுகாடு / சுடுகாடுகள்: 2 குக்கிராமத்தில் அமைந்துள்ள அரசு / உள்ளாட்சிக் கட்டடங்கள்(பள்ளிக் கட்டடங்கள் நீங்கலாக) : 9
பஞ்சாயத்து தலைவர் பெயர் நீங்கலாக மற்ற வார்டு உறுப்பினர் பெயர்கள் 
மற்றும் கைபேசி எண்கள்

--மணியன் (பேச்சு) 11:25, 28 ஆகத்து 2015 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமை

தொகு

இரவி, ஊராட்சிகள் என்பதில் குறிப்பிடத்தக்கமை (notability) அளவுகோளில் சிக்கல் வரலாம் என்பது எனது கருத்து. தமிழக நகராட்சிகள் 148ம், தமிழக பேரூராட்சிகள்கள் 500+ கட்டுரைகளின் உள்ளடக்கம், தரம் பற்றியும் மீளாய்வு செய்யவேண்டும். அவை தொடர்பான புதிய தரவுகள் பெற்று மேம்படுத்துவதையும் ஆலோசிக்கலாம். -- மாகிர் (பேச்சு) 15:53, 28 ஆகத்து 2015 (UTC)Reply

@Mdmahir:, en:Wikipedia:Notability (geographic features)#Geogr:aphic regions, areas and places பார்க்கவும். //Populated, legally recognized places are typically considered notable, even if their population is very low. // என்ற அடிப்படையில் ஊராட்சிகள் குறிப்பிடத்தக்கவை எனக் கருதலாம். ஊராட்சிகள், அரச ஏற்பு பெற்ற, தேர்தல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகள் நிருவாக அலகுகள் ஆகும். ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது 3,000 பேராவது வாழ்கிறார்கள். --இரவி (பேச்சு) 22:21, 30 ஆகத்து 2015 (UTC)Reply

  நன்றி --மாகிர் (பேச்சு) 03:32, 31 ஆகத்து 2015 (UTC)Reply

மாதிரிக் கட்டுரை

தொகு

இம்முயற்சி தொடர்பான மாதிரிக் கட்டுரையை நீச்சல்காரன் இங்கு உருவாக்கியுள்ளார். இது குறித்த கருத்துகளை வரவேற்கிறோம். --இரவி (பேச்சு) 22:12, 30 ஆகத்து 2015 (UTC)Reply

தகவல் சட்டம் ஒன்றும் ஒவ்வொரு கட்டுரைக்கும் சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:38, 30 ஆகத்து 2015 (UTC)Reply
இக்கட்டுரைகளைத் தொடர்ந்து தானியக்க இற்றை செய்து சரியான தகவல்களைக் கொண்டிருப்பதையே ஊரகவளர்ச்சித் துறையினர் விரும்புகின்றனர். ஆகவே கணினிவழி தகவல் பரிமாற்றம் தொடர்ந்து நிகழும் வண்ணமும் மாதிரிக் கட்டுரைகள் இருக்கவேண்டும். அதிகபட்சமாகத் தானியக்க இணக்கமாக ஒரு கட்டுரையை காட்டிற்காக இங்கு உருவாக்கியுள்ளேன். ஆனால் பயனர்கள் தொகுக்கவும், பைட் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்ச தானியக்க இணக்கமாக இங்கு ஒரு கட்டுரையையும் உருவாக்கியுள்ளேன். அனைவரும் தங்கள் கருத்தை வழங்கலாம் அல்லது நேரடியாக இங்கு மேம்படுத்தியும் உதவலாம். கூடுதலாக ஆட்களக்கூறுகள், நிலப்படங்கள், தபால் குறியீடு மற்றும் கல்விநிலையப்பெயர்கள் போன்றவற்றைப் பெற முயல்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 04:00, 30 செப்டம்பர் 2015 (UTC)
கட்டுரையாக்கம் சிறப்பாகவே வந்துள்ளது. தகவல் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
  1. <!--tnrd-dname--> போன்றவற்றை பிற தொகுப்பாளர்கள் நீக்கவோ மாற்றவோ கூடும். அதன் பாதிப்பு என்ன ? அவை மாற்றப்படாமல் இருப்பது தேவை என்றால் தொகுப்பு பெட்டியில் இதற்கான எச்சரிக்கையை இட வேண்டும்.
  2. பகுப்புகள் தானியக்கமாக இட முடியுமா..பகுப்பு:<!--tnrd-dname-->மாவட்டத்திலுள்ள பேராட்சிகள் போல..
  3. கட்டுரை இறுதியில் அந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளையும் காட்டும் வழிகாட்டிச் சட்டம் (Navigation box) தானியக்கமாக சேர்க்க இயலுமா ?
  4. இவற்றை விக்கித்தரவில் இணைக்கவும் இல்லாத கட்டுரைகளை ஆங்கில விக்கியில் உருவாக்கவும் ஏதேனும் திட்டம் உள்ளதா ? விக்கித்தரவு மூலமாக தானியக்க இற்றை நிகழுமானால் அது விக்கிப்பீடியாவுடன் இயைந்த செயலாயிருக்கும். லுவா நிரலும் விக்கிதரவு dat structuremஉம் தெரிந்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
--மணியன் (பேச்சு) 04:23, 30 செப்டம்பர் 2015 (UTC)
வழிகாட்டிச்சட்டம், பகுப்புகள் தாராளமாகத் தானியக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஆங்கில விக்கியில் உருவாக்கும் நுட்பம்மும் தகவல்களும் உள்ளன. த.வி. சமூக எப்படி ஆதரிக்கிறது என்பதைப் பொறுத்து, பின்னர் ஆங்கிலத்திலும் உருவாக்கலாம். இவை புதுக் கட்டுரை என்பதால் விக்கித்தரவுகளில் இணைக்கும் தேவையுள்ளதா என்று தெரியவில்லை, தேவையிருப்பின் அதையும் தானியக்கமாகச் செய்யலாம். <!--tnrd-dname--> என்பது பிற்காலத் தானியக்கத்திற்குத் தேவையான குறிச்சொல், இதனால் தகவல் துல்லியம் அதிகரிக்கும். குறியீடுகள் இல்லாமல் செய்யலாம் ஆனால் முடிந்தளவிற்குத் தானியக்கத்தைக் தமிழ் விக்கிச் சமூகத்தினர் குறைக்கவே விரும்புவதால் குறைந்தபட்சம் இத்தகைய குறியீடுகள் தேவை இருக்கிறது. அதை நீக்கவேண்டாம் என்று அறிவிக்கவேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு)
நீச்சல்காரன், தற்போது உள்ள மாதிரிக் கட்டுரையின் ஆங்கில வடிவம் ஒன்றை உருவாக்கித் தர முடியுமா? இது, மற்ற மொழிகளில் உள்ள விக்கித்தரவு மற்றும் தானியங்கி வல்லுனர்களின் கருத்தையும் பெற உதவும். தமிழில் மட்டும் இருக்கும் கட்டுரைகளுக்கும் விக்கித்தரவில் தரவு உருப்படிகள் இருப்பது நன்று. மணியன் சுட்டியவாறு விக்கிதரவில் ஊர்கள் தொடர்பான தரவுகளைச் சேமித்து வைக்க வழியுண்டா என்றும் பார்க்கலாம். இது, பிற்காலத்தில் List of paintings by Jacob van Ruisdael போன்ற முழுக்க விக்கித்தரவு வழி கட்டுரை ஆக்கம், தரவு இற்றை ஆகியவற்றுக்குப் பயன்படலாம். சற்று வேலை கூடுகிறது. ஆனால், இது உலக அளவில் மிகச் சிறப்பான முன்மாதிரிச் செயற்பாடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:27, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

பகுப்புகள்

தொகு

பகுப்புகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி எழுதப்பட்டுள்ளன. இவற்றைத் தானியங்கியில் சேர்த்தால் குழப்பமாகிவிடும். அல்லது, பகுப்புகள் அனைத்தையும் வேறொரு தானியங்கி மூலம் ஒழுங்கு படுத்தி விட்டு தானியங்கிக் கட்டுரைகளில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 02:21, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

Kanags, இச்சிக்கல் தொடர்பாக சில எடுத்துக்காட்டுகளைத் தர முடியுமா? இயன்ற அளவு முதல் பதிவேற்றத்தின் போதே பகுப்புகளுடன் சேர்க்க முனைவோம். --இரவி (பேச்சு) 12:18, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்கள் கட்டுரைகளில் முறைப்படி இணைக்கப்பட வேண்டும். மக்கள் வகைப்பாடு, அடிப்படை வசதிகள், குடியிருப்புகள் உட்பட அனைத்துக்கும் மேற்கோள்களை சேர்க்க வேண்டும். தற்போது முன்னுரையில் மட்டுமே மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 02:26, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

Kanags, நாம் ஊராட்சிகள் தொடர்பாக சேர்க்கும் எந்த ஒரு தகவலும் சர்ச்சைக்குரியது அன்று. அதனால் வரிக்கு வரி ஆதாரம் சுட்ட வேண்டாம். ஆயினும், புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒரு பயனருக்கு, இத்தகவல் அச்சு வடிவிலோ இணையத்திலோ எங்கேனும் அலுவல் முறையில் கிடைப்பது நன்று. அரசு தரவுத்தளத்தில் உள்ள இத்தரவுகளை உடனடியாக முழுமையாக வெளியிடுவதில் சில நடைமுறைச் சிக்கலைகளை எதிர்கொண்டிருக்கிறோம். எனவே, பகுதி தரவையாவது இயன்ற போது வெளியிட முயற்சி எடுத்து வருகிறோம். அலுவல் முறை ஆதாரங்கள் கிடைக்கும் போது, கட்டுரைகளில் ஆதாரங்களுக்கான இணைப்புகளைச் சேர்த்து இற்றைப்படுத்தி விடுகிறோம்--இரவி (பேச்சு) 12:10, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

தகவல்கள் எவ்வாறு இற்றைப்படுத்தப்படு

தொகு

தகவல்கள் எவ்வாறு இற்றைப்படுத்தப்படும், அதற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை தெளியப்படுத்தவும். நன்றி.-−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தகவல்கள் எல்லாம் json கோப்பாகக் கோரப்பட்டுள்ளது. ஒரு நிடத்திற்கு 10 கட்டுரை என்று 2.5 மணிநேரத்தில் அனைத்துக் கட்டுரையையும் விக்கியில் உருவாக்கும் தானியக்க நிரல்கள் தயாராக உள்ளன. அதனை எனது NeechalBOT தானியங்கிக் கணக்கின் வழியாகப் பரிந்துரைத்த மாதிரிக் கட்டுரைபோல சுமார் 1300+ ஊரின் பெயருடன் ஊராட்சி என்று அடைப்புக்குறிக்குள் மகாராஜபுரம் (ஊராட்சி) என்று பதிவேற்றப்படும். பிற்காலத்தில் அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிச்சொல்(உதா:tnrd-ponds) அடிப்படையில் புதிய தகவல்களை நேரடியாகத் தானியங்கிமூலம் மாற்றிக்கொள்ளலாம். தமிழக ஊரகவளர்ச்சித் துறையினரும் தொடர்ந்து இற்றை செய்ய உதவுவதாகக் கூறியுள்ளனர். ஏற்கனவே இத்தலைப்பில் கட்டுரையிருந்தால் இத்தகவல்களை நானே இணைத்து பிற்கால தானியக்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவிடுவேன். வேறு பெயர்களில் இதே ஊராட்சி பற்றிய தகவலிருந்தால் விக்கிச் சமூகத்தினர் இந்தத் தலைப்பிற்கு மாற்றிவிடவேண்டும்.--நீச்சல்காரன், 02:08, 3 அக்டோபர் 2015 (UTC)Reply
நீச்சல்காரன், பல ஆயிரம் கட்டுரைகளின் தலைப்புகள் (ஊராட்சி) என்பது போன்று அடைப்புக்குறி கொண்டு அமைவது வசதியாக இருக்காது. கட்டுரைகளைத் தேடும் பயனர்கள் ஊர் பெயரை மட்டுமே கொண்டு தேடுவர். ஊருக்கு மட்டும் தனியே இன்னொரு கட்டுரை தொடங்கும் அளவு தரவு இல்லை. எனவே, மகாராஜபுரம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் உள்ள ஊராகும். இந்த ஊராட்சி, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். என்பது போல எழுதினால் சரியாக இருக்கும். இன்னும் சில உரை திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அவற்றையும் விரைந்து செய்கிறேன்--இரவி (பேச்சு) 12:17, 17 அக்டோபர் 2015 (UTC)Reply


நன்றி நீக்கல்காரன். இற்றைப்படுத்தும் தரவுகளின் வடிவம், அதற்கான நிரல் பற்றி சற்று ஆவணப்படுத்த முடிந்தால் பராமரிப்புப் பணிக்கு உதவும். --Natkeeran (பேச்சு) 20:17, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

சிறப்பு மனிதர்கள்

தொகு

ஊராட்சிகளில் பிறந்து சிறப்பு பெற்ற தனிமனிதர்கள் (கலாம், சுஜாதா, அண்ணா போன்ற்வர்கள்) பெய்ரையும் இணைக்க முடிந்தால் உள்ளடக்கம், இணைப்புகள் அதிகரிக்கும்.--கி.மூர்த்தி 02:24, 3 அக்டோபர் 2015 (UTC)

இவற்றைத் தனித்தனியே அவ்வப்போது சேர்க்க வேண்டும். தானியங்கியில் சேர்ப்பது கடினம் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:28, 3 அக்டோபர் 2015 (UTC)Reply

வாக்கெடுப்பு

தொகு

தரவுத்தள கட்டுரைகள் கொள்கைக்கு ஏற்ப தமிழக ஊராட்சிகள் தொடர்பான 12,000+ கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்கான ஒப்புதலைக் கோருகிறோம். இதற்கான மாதிரிக் கட்டுரையை இங்கு காணலாம். இந்த மாதிரிக் கட்டுரையின் மேம்பாடு தொடர்பான கருத்துகளை இதே பேச்சுப் பக்கத்திலும் இங்கும் காணலாம். நன்றி.

முன்மொழிவு:

ஆதரவு

தொகு
  1. நல்லது, பதிவேற்றம் செய்யுங்கள்.. --குறிஞ்சி (பேச்சு) 15:01, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  2. சிவகோசரன் (பேச்சு) 16:00, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  3. --நந்தகுமார் (பேச்சு) 17:32, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  4. நல்ல முயற்சி. --மணியன் (பேச்சு) 04:22, 17 அக்டோபர் 2015 (UTC)Reply
  5. --உழவன் (உரை) 05:37, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
  6. ஆதரவு கி.மூர்த்தி --கி.மூர்த்தி 07:28, 23 அக்டோபர் 2015 (UTC)Reply
  7. Commons sibi (பேச்சு) 03:32, 4 நவம்பர் 2015 (UTC)Reply
  8. --செல்வா (பேச்சு) 21:55, 7 நவம்பர் 2015 (UTC)Reply

நடுநிலை

தொகு
  1. கட்டுரை உரைப்பகுதியில் வார்ப்புருக்கள் மூலம் உருவாக்குவது நிரலாக்கக் குறிப்புகள் கூடுதலாக இருப்பது தொகுப்பவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும். இதனை மாற்றியமைத்தல் நன்று. உரையில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படல் வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 14:11, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  2. மேற்கோள்களின் வடிவமைப்பு (format), மேற்கோள்களின் காலம் குறித்து மாற்றங்கள் வேண்டும். திருத்தப்படும் இடத்து பதிவேற்றலாம். --Natkeeran (பேச்சு) 14:24, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  3. மேற்குறிப்பிட்டபடி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:57, 17 அக்டோபர் 2015 (UTC)Reply

எதிர்ப்பு

தொகு

கருத்து

தொகு
இவ்வாறான தரவுகள் வெவ்வேறு அரசு தரவுத் தளங்களில் இருப்பதால் உடனடியாக இவற்றைப் பெறுவதில் சிக்கல். சில தரவுகள் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல். எனவே, முதலில் இருக்கிற தரவைப் பதிவேற்றி விட்டுப் பிறகு படிப்படியாக விரிவாக்குவோம். தமிழக அரசு ஊராட்சித் துறை மூலமாக துறை அலுவலர்கள் மூலமாக இன்னும் கூடுதல் தரவுகளைப் பெறவும் முனையலாம். --இரவி (பேச்சு) 14:57, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  • மதனாகரன், Natkeeran கட்டுரையில் உரியவாறு திருத்தி உதவ வேண்டுகிறேன். உரைப்பகுதியில் தரவுகள் குறித்த நிரலாக்கக் குறிப்புகள் இருப்பது வழமையான கட்டுரைகளில் இருந்து மாறுபட்டு சற்றுக் குழப்பக்கூடியது தான். ஆனால், தரவுகளைத் தகுந்த கால இடைவெளியில் தானியக்கமாக இற்றைப்படுத்தி வருவதற்கு வேறு வழியில்லை என்று நினைக்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இவ்வாறு தானியங்கி வழி உருவாக்கி இற்றைப்படுத்தப்படும் கட்டுரைகளில் வழமையில் இருந்து மாறுபட்ட வார்ப்புருப் பயன்பாடு இருப்பதைக் காண முடிகிறது. பட்டியலைத் தொகுத்தால் நீக்கிவிடுவோம் என்று வேறு அறிவிப்பு இருக்கிறது! :) எடுத்துக்காட்டுக்கு, பார்க்க - List of paintings by Jacob van Ruisdael --இரவி (பேச்சு) 14:57, 16 அக்டோபர் 2015 (UTC)Reply
  • இரவி, எனது கருத்தில் (மேலே #1) இத்தகைய அறிவிப்பை தொகுப்பெட்டியில் <!-- --> இடையே இடவேண்டும் என்றே நானும் கூறியுள்ளேன். மேலும் commenting extensively பிற்காலத்திலும் அனைவருக்கும் பயனாகும். ஒவ்வொருமுறையும் தானியங்கி ஆக்குநரைச் சார்ந்திருக்கலாகாது.--மணியன் (பேச்சு) 04:29, 17 அக்டோபர் 2015 (UTC)Reply
மணியன், ஏற்கனவே மேலே நீங்கள் விரிவாகச் சுட்டியுள்ள கருத்துகளின் அடிப்படையில் இன்னும் மேம்படுத்த முனைவோம். அதே வேளை, உரை திருத்தம், கட்டுரைக்கு உள்ளே வர வேண்டிய நிரலாக்கக் குறிப்புகள் தொடர்பாக நீங்கள் நேரடியாகத் தொகுத்துச் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:29, 17 அக்டோபர் 2015 (UTC)Reply
இரவி, நான் நினைத்தவாறு இங்கு தொகுப்புப் பெட்டியில் எச்சரிக்கை இட்டுள்ளேன். இதன் உரையையும் உள்ளடக்கத்தையும் நீச்சல்காரன் மாற்றலாம். தவிர அவரது தானியக்கக் கட்டுரைகளில் இச்சரங்களில் மாற்றத்தைக் கண்காணிக்க ஓர் தானியங்கியை ஒவ்வொரு நாளின் இரவிலும் ஓட்டுவது இவை மாற்றப்படாதிருப்பதை உறுதி செய்யும். இதேபோல பயனர்கள் தொகுக்கக்கூடிய பத்திகள் அடையாளம் காட்டப்படலாம். காட்டாக, சிற்றூரில் வசிக்கும்/ பிறந்த புகழ் பெற்றவர்கள், பிற தனிப்பட்டச் சிறப்புகள் போன்றவற்றை நீங்கள் இயல்பாகத் தொகுக்கலாம் என அடையாளம் காட்டும் அறிவிக்கையை அந்தப் பத்திகளின் துவக்கத்தில் தரலாம். --மணியன் (பேச்சு) 14:24, 17 அக்டோபர் 2015 (UTC)Reply
கட்டுரை உருவாக்கப்பட்ட பின், பின்வரும் நிரலாக்கக் குறிப்புகளைத் தானியக்கமாக நீக்கி விடலாம். இவை மிக அரிதாகவே மாற்றமடையும். இவற்றை நீக்குவதால் பயனருக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும். மேலும் பயனர்:Neechalkaran/t2 என்ற வார்ப்புருவைப் பொருத்தமான தலைப்புடன் வார்ப்புருப் பெயர்வெளிக்கு நகர்த்த வேண்டும். <!--tnrd-vpname--><!--tnrd-dname--><!--tnrd-pcname--><!--tnrd-acname--><!--tnrd-area--><!--tnrd-bname--><!--tnrd-ward--> --மதனாகரன் (பேச்சு) 15:51, 17 அக்டோபர் 2015 (UTC)Reply
  • வாக்கெடுப்பு நிறைவடைந்துவிட்டாலும் ஒரு கருத்தை பதியவிரும்புகிறேன். அப்பெயர்களில் ஆங்கில விக்கிக்கட்டுரைகள் இருக்குமானால் இயன்றவரை அவற்றைக் கண்டறிந்து விக்கித்தரவகத்தில் தக்க இணைப்பு தரலாம். -- சுந்தர் \பேச்சு 11:52, 27 அக்டோபர் 2015 (UTC)Reply

இற்றை

தொகு

வாக்கெடுப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது. கருத்துகளுக்கு ஏற்ப உரிம மாற்றங்கள் செய்து, நடுநிலை வாக்குகள் அளித்துள்ளோரிடம் மீண்டும் ஒரு முறை ஒப்புதல் கோரி, தானியக்கப் பதிவேறம் நோக்கி நகர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:03, 23 அக்டோபர் 2015 (UTC)Reply

மொத்தக்கட்டுரை 12525 அதில் வெவ்வேறு ஐந்து கட்டுரைகளை மேலே குறிப்பிட்ட கருத்துகளுக்கேற்ப உங்கள் சார்பாக உருவாக்கியுள்ளேன். முதூர் (ஊராட்சி), முள்வாய் (ஊராட்சி), அலங்கிரி (ஊராட்சி), கக்கோட்டுதலை (ஊராட்சி), தென்கரை (ஊராட்சி). இவற்றை மதிப்பீடு செய்து உரிய ஆலோனைகளிருந்தால் அறியத்தந்து எனக்கு உதவுங்கள்.

சிக்கல் கையாளுகை

  1. விக்கியின் பக்கப்பெயருக்கும், அரசுப்பெயருக்கும் முரணிருந்தால் அப்பக்கம் சிவப்பாகத் தெரியும். நாம் அவ்வப்போது அவற்றிற்கு உரிய வழிமாற்றியை அமைக்கலாம்.
  2. ஒரே பெயரில் வட்டம், வட்டாரம், குக்கிராமும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதால் அனைத்து ஊராட்சிப் பெயர்களும் அடைப்புக்குறிக்குள் ஊராட்சி எனச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
  3. ஒரே பெயரில் ஏற்கனவே கட்டுரையிருந்தால் அந்த ஊராட்சியைத் தனியாக நான் சரிபார்த்து கட்டுரையை உருவாக்குவேன். வேறு பெயரில் அதே உள்ளடக்கம் கொண்ட கட்டுரையிருந்தல் நாம் அக்கட்டுரையைத் தானியக்கக் கட்டுரையுடன் சேர்ப்போம்.
  4. 50 ஊராட்சிக்கட்டுரைகளை முன்மாதிரிக் கட்டுரையாக இயன்றளவிற்குச் செழுமைசெய்து மற்றவற்றைப் பயனர்கள் மேம்படுத்தி எழுத ஊக்கப்படுத்தலாம்
  5. வரைபடம், வழிபாட்டுத்தளங்கள், இதர அரசுத்தகவல்கள் அடுத்த ஆண்டு முழுமையான கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது இக்கட்டுரைகளை இன்னும் மேம்படுத்துவோம்.
  6. அரசுத்தரவுகளில் இருந்த ஒருங்குறி பிழைகளை வாணி பிழை திருத்தி முடிந்ததளவிற்கு நீக்கியே பதிவேற்றுகிறது. மற்றபடி அரசுத் தகவல்கள் எதையும் மாற்றவில்லை. ஏதேனும் எழுத்துப்பிழையோ, ஒருங்குறிப் பிழையோ இருந்தால் நாம்தான் நேரடியாகத் திருத்த வேண்டும்.
  7. புதிய தகவல்கள் வரும்போது பகுப்பு:த. இ. க. ஊராட்சித் திட்டம் பகுப்பில் இருக்கும் இக்கட்டுரைகளைத் தானியக்கத்தில் எளிதாகத் திருத்திக் கொள்வோம்.
  8. பயனர்:Neechalkaran/மகாராஜபுரம் கட்டுரைதான் வார்ப்புருவாகத் தானியக்கத்திற்குப் பயன்படுவதால் உரைதிருத்தம் வேண்டினால் நேரடியாகத் திருத்திலாம். தொடர்ந்து நல்ல ஆலோசனைகள் அளித்து, கட்டுரையை உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. --நீச்சல்காரன் (பேச்சு) 03:04, 4 நவம்பர் 2015 (UTC)Reply

கட்டுரையின் ஆரம்பத்தில் (உ+ம்) முதூர் (ஆங்கில மொழி: Mudur), என்பதற்குப் பதிலாக முதூர் (Mudur), என்று மட்டும் இருந்தால் போதும் என நினைக்கிறேன். ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளுக்கு மட்டும் மொழியின் பெயரைக் கொடுத்தால் போதும். இது எனது அபிப்பிராயம்.--Kanags \உரையாடுக 07:07, 4 நவம்பர் 2015 (UTC)  Y ஆயிற்று தானியக்க வார்ப்புருவில் மாற்றிவிட்டேன். -நீச்சல்காரன் (பேச்சு) 10:13, 4 நவம்பர் 2015 (UTC)Reply

நல்ல பரிந்துரை Kanags. ஆங்கிலப்பெயரைச் சாய்வெழுத்துகளில் எழுதுவதா வழமை போல் எழுதுவதா? இவ்விரண்டு விதமாகவும் பல்வேறு விக்கிப்பீடியா கட்டுரைகளில் காணப்படுவதால் குழப்பமாக உள்ளது. @Rsmn, மதனாஹரன், Booradleyp1, AntanO, and Semmal50:, மாதிரிக் கட்டுரைகளில் இலக்கணம், விக்கி நடை, நிறுத்தற்குறிகள் முதலியன சரியாகிருக்கிறதா என்று பார்த்து உறுதிப்படுத்த வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 07:03, 5 நவம்பர் 2015 (UTC)Reply
ஆங்கிலம் உட்பட வேற்று மொழிப் பெயர்கள் அடைப்புகளுக்குள் சாய்வெழுத்தில் தான் வரவேண்டும்.--Kanags \உரையாடுக 07:10, 5 நவம்பர் 2015 (UTC)Reply

@Natkeeran, Aathavan jaffna, and மதனாஹரன்:, உங்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாதிரிக் கட்டுரைகளில் மேம்பாடுகள் செய்துள்ளோம். விக்கித்தரவில் சேர்ப்பது, கூடுதல் தகவல் சேர்ப்பது ஆகியவற்றை இரண்டாம் நிலையாகச் செய்ய உள்ளோம். இம்மாற்றங்களைக் கவனித்து தங்கள் கருத்தைத் தெரிவிப்பதோடு, இச்செயற்பாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி.--இரவி (பேச்சு) 06:54, 5 நவம்பர் 2015 (UTC)Reply

நீச்சல்காரன், விக்கிப்பீடியா:பக்கவழி நெறிப்படுத்தல் தேவைப்பட்டாலே ஒழிய முதன்மைக் கட்டுரைகளின் தலைப்புகளை அடைப்புக்குறிக்குள் தருவதில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களின் தலைப்புகளை அடைப்புக்குறிக்குள் தருவது தேவையற்றது. இது உள்ளிணைப்புகள் தரும் போதும் வசதியாக இருக்காது. இதே தலைப்பில் அக்குடியிருப்பு, ஊர் குறித்து தனியாக குறிப்பிடத்தக்கமையுடன் கட்டுரைகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி வரும் கட்டுரைகளையும் இவற்றின் ஒரு பகுதியாக ஒன்றிணைக்க முடியும். எனவே, கட்டாயம் கட்டுரைகளின் தலைப்பு, மாவட்ட ஊராட்சிகள் வார்ப்புருக்கள் ஆகியவற்றில் அடைப்புக்குறிகளில் ஊராட்சி என்று இருப்பதை நீக்க வேண்டுகிறேன். தானியங்கியை இயக்குவதற்கு முன் இம்மாற்றத்தை உறுதி செய்ய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:03, 5 நவம்பர் 2015 (UTC)Reply

  விருப்பம்கட்டுரைகள் நன்றாகவுள்ளன. இப்படியே மற்றக்கட்டுரைகளும் அமையட்டும். பாராட்டுக்கள் நீச்சல்காரன் --AntanO 07:24, 5 நவம்பர் 2015 (UTC)Reply
இரவி, இது மிகவும் அடிப்படையான கேள்வியாக இருக்கலாம். ஊராட்சி, ஊர் அல்லது கிராமம் - இவையனைத்தும் வெவ்வேறா? ஊராட்சி என்றால் ஊர் ஒன்றின் நிருவாக அலகைக் குறிக்கிறதா? அவ்வாறென்றால் ஒரே பெயரில் உள்ள ஊருக்கும், ஊராட்சிக்கும் வெவ்வேறு கட்டுரைகள் இருக்குமா? முதூர் (ஊராட்சி) கட்டுரையில் முதூர் (Mudur), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள ஓர் ஊராகும். என எழுதப்பட்டுள்ளது. முதூர் ஊராட்சியில் முதூர் உட்பட ஏழு குடியிருப்புகள் உள்ளன. அப்படியானால் முதூர் என்ற குடியிருப்புக்கு தனியே ஒரு கட்டுரை எழுதப்படலாம். குழப்பத்தைத் தவிர்க்க முதூர் (Mudur), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள ஓர் ஊராட்சியாகும். என்று எழுதப்படலாம். (இது பற்றி மேலே உரையாடப்பட்டுள்ளதா என நான் பார்க்கவில்லை.)--Kanags \உரையாடுக 07:31, 5 நவம்பர் 2015 (UTC)Reply
பேச்சு வழக்கில் எல்லா இடங்களுமே ஊர்கள் தாம். நிருவாகம் அல்லது மக்கள் தொகை / பரப்பளவு முதலிய காரணங்களை முன்வைத்து மாநகரம் (City. எ.கா. சென்னை, பார்க்க - தமிழக மாநகராட்சிகள்), நகரம் (Town. எ.கா. புதுக்கோட்டை நகரம். பார்க்க - தமிழக நகராட்சிகள். பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்கள் நகரங்கள் தாம்), என்று அழைப்போம். இவை போக, ஆட்சி முறை வசதிக்கு ஏற்ப இதற்கு அடுத்த நிலைகளில் உள்ள ஊர்களின் நிருவாகத்தை ஒழுங்குசெய்ய பேரூராட்சிகள், ஊராட்சிகள் முதலிய நிருவாக அலகுகள் வருகின்றன. சென்னை என்பது ஊர். சென்னை மாநகராட்சி என்பது அந்த ஊரின் நிருவாகத்தை ஒழுங்கு செய்வதற்கான ஒரு அமைப்பு. எனவே, ஊர் வேறு ஊராட்சி வேறு. எனவே, நீங்கள் சொல்வது போல ஊராட்சி என்பது ஊரை நிருவகிப்பதற்கான நிருவாக அலகைக் குறிக்கிறது. இங்கு ஊருக்கும் ஊராட்சிக்கும் தனித்தனிக் கட்டுரைகள் தேவையில்லை என்று நான் குறிப்பிடுவதற்கான காரணங்கள்: 1. 99% ஊராட்சிகளுக்குத் தனித்தனியாக ஊர்களைப் பற்றி எழுதும் அளவு குறிப்பிடத்தக்கமையோ புதிய தரவோ இல்லை. சென்னை மாநகராட்சிக்கும் சென்னைக்கும் தனித்தனிக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால், அதே போல் ஊராட்சியில் உள்ள ஊர்களைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை. ஊராட்சிக்கு உள்ளடங்கிய அதே பெயரில் உள்ள குடியிருப்பு பற்றிய தகவலைச் சேர்ப்பது என்றால் இதே கட்டுரையில் ஒரு பகுதியாகச் சேர்த்தால் போதும். எனவே, தான் இதன் முதல் வரியை ஊர் என்றே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். தெளிவு நோக்கி, இவ்வூர் ஊராட்சி நிலை தகுதி பெற்றுள்ளது என்று கூடுதலாக ஒரு வரியைச் சேர்த்து தொடர்ந்து ஊராட்சியின் தரவுகளைத் தரலாம். 2. கடந்த 13 ஆண்டு அனுபவத்தில் இவ்வாறான ஊர்களுக்குத் தனியே கட்டுரைகள் எழுதப்படும் வாய்ப்பு குறைவு என்பதைக் கண்டிருக்கிறோம். எனவே, தேவையில்லாமல் முதலிலேயே அடைப்புக்குறித் தலைப்புகளைத் தரத் தேவையில்லை. 3. வழமையான பயனர்கள் தங்கள் ஊர் பெயர்களை வைத்துத் தான் தேடுவார்கள், இணைப்பு தருவார்களே தவிர, ஊராட்சி என்ற முறையில் தங்கள் ஊரைப் பற்றி எண்ணுவதில்லை. இங்கு ஊராட்சி என்ற அடிப்படையில் இதனை நோக்குவதற்குக் காரணமே இத்தரவுகள் ஊராட்சித் துறை மூலம் கிடைத்தன என்பதனால் தான் . தலைப்பில் அடைப்புக்குறி விளக்கம் தரும் அளவு இங்கு எந்தக் குழப்பமும் இல்லை. அதுவும் கட்டுரைக்குள் தரவுகள் வரும் இடங்களில் எல்லாம் ஊராட்சியின் தரவு என்று குறிப்பிடுவதால்.--இரவி (பேச்சு) 19:16, 5 நவம்பர் 2015 (UTC)Reply
இரவி, ஊர் வேறு ஊராட்சி வேறு, ஒரு ஊராட்சியில் உள்ள பெரிய ஊரின் பெயரே ஊராட்சியின் பெயராக அமைகிறது. நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் ஊராட்சி பற்றியவை தான். சட்டசபைத் தொகுதி, மக்களவைத் தொகுதி போல எல்லாக் கட்டுரையும் சீர்மையில் இருந்தால் தான் எதிர்காலத்தில் ஊராட்சிக் கட்டுரையை யார்வேண்டுமென்றாலும் வளர்த்தெடுக்கமுடியும். ஏற்கனவே விக்கியாக்கத்திற்காகப் பல்வேறு தானியக்கக்கூறுகளைக் கைவிட்டுள்ளோம் அதேபோல சில கட்டுரைகளில் மட்டும் அடைப்புக்குறி இட்டு தானியங்கியை இயக்குவதும்/இற்றைசெய்வதும் NeechalBOTயைப் பொறுத்தமட்டில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வேறு யாரேனும் புதிய அரசுத் தகவலை இற்றை செய்ய முனைந்தால் இம்முறை உதவுமா என்றும் பார்க்கவேண்டும். பத்மனாபபுரம் என்பது அரசுத்தரவில் பத்மநாபபுரம் என்றுள்ளது இத்தகைய சிக்கல்களே பல இருக்கும் வேளையில் புதிய சிக்கல் வேண்டுமா? மற்றபடி இறுதியாக முடிவிற்கேற்ப தானியங்கியை இயக்குகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:27, 5 நவம்பர் 2015 (UTC)Reply
நீச்சல்காரன், ஊருக்கும் ஊராட்சிக்கும் தனித்தனிக் கட்டுரைகள் தேவையில்லை என்று நான் குறிப்பிடுவதற்கான காரணங்களை மேலே விளக்கியுள்ளேன். தலைப்பில் அடைப்புக்குறி விளக்கம் தவிர்த்தால் என்ன நுட்பச் சிக்கல் வரும் என்று விளக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 19:16, 5 நவம்பர் 2015 (UTC)Reply
அடைப்புக்குறியிடுதல் ஊரையும் ஊராட்சியையும் வேறுபடுத்திக் காட்டமட்டுமல்ல அதைத்தாண்டி பொருள் மயக்கத்திற்காகவும் தேவைப்படலாம். காட்டிற்காக அடைப்புக்குறியற்று ஊராட்சித் தலைப்புகளை உருவாக்கியுள்ளேன் வார்ப்புரு:மதுரை மாவட்ட ஊராட்சிகள் ‎, வார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள், வார்ப்புரு:திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள்(தானியக்கத்தில் பின்னர் இவ்வார்ப்புரு மாற்றியமைக்கப்படும்). 25% ஊராட்சியின் பெயர்கள் ஏற்கனவே விக்கியில் கட்டுரையாக உள்ளன. அவை ஊராட்சி தொடர்பானவையாகப் பெரும்பாலும் இல்லாமல் பேரூராட்சி, தாலுகா, கிராமம், வழக்கில் இருக்கும் பொதுப்பெயர்கள், தொன்மையான இடங்கள், பக்கவழி நெறிப்படுத்தலாக உள்ளன. மேலும் ஒரே பெயர் கொண்ட பல ஊராட்சி அல்லது வேறு பொதுப்பொருள் கொண்ட பெயர் என்று இனிமேல் அடைப்புக்குறிக்குள் தள்ளப்படும் பெயர்கள் மட்டுமே கணிசமாக உள்ளன. ஆகக் குறைந்தது 30% பெயர்களுக்கு அடைப்புக்குறியிட்டு வேறுபடுத்தவேண்டியுள்ளது. இப்படி சீர்மையற்ற கட்டுரையில் தானியங்கிகொண்டு எது ஊராட்சி தொடர்பானது என்று தீர்மானித்து, வார்ப்புரு உருவாக்கம், விக்கித்தரவில் சேர்த்தல், புதிய அரசுத் தரவைச் சேர்த்தல் போன்றவற்றிற்குக் கூடுதல் சிக்கல் வரும். வெறும் ஊராட்சிப் பகுப்பை மட்டும் வைத்து, செய்யக்கூடியவையல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். அதேவேளையில் சீராகக் கிடைக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் ஊராட்சிக் கட்டுரையை அமைத்து இதரத் தேவையிருக்குமானால் வழிமாற்றி அமைக்கலாம். கிராம ஊராட்சித் தகவல்களில் கிராமத்தைத் தவிர்த்து, அடுத்து ஊராட்சியையும் தவிர்த்து ஊருடன் சேர்ப்பது பயனுடையதாயென்றும், வேறு நிர்வாக அலகுடன் முரண்வருமா என்றும் தொடர்புடவர்களுடன் விவாதிக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு)
கட்டுரை சிறப்பாகவே வந்துள்ளது.
  1. இங்கு நிகழும் உரையாடல்களால் உள்ளாட்சி அமைப்புக் குறித்த நல்ல புரிதல் எழுந்துள்ளது. இதனை பொருத்தமான முதன்மைக் கட்டுரைகளிலும் சுட்ட வேண்டும். விடுபட்ட தமிழக நிர்வாக இலகுகளைக் குறித்த குறுங்கட்டுரைகளாவது எழுதப்பட்டு அவற்றுடன் பொருத்தமான உள்ளிணைப்புகளைத் தர வேண்டும்.
  2. தலைப்பில் அடைப்புக்குறி இருப்பது பெரிய குறையன்று என்பது எனது கருத்து.
  3. தற்போது தமிழக அரசின் கலைச்சொற்களை எடுத்துக் கொண்டு பின்னாளில் திருத்துவது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம். காலப்போக்கில் அரசே மாற்றுப் பெயர்களை முன்வைக்கலாம்.
  விருப்பம்--மணியன் (பேச்சு) 05:24, 6 நவம்பர் 2015 (UTC)Reply
நீச்சல்காரன், தாங்களும் மற்ற பயனர்களும் தந்துள்ள விளக்கங்கள், கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன். அடைப்புக்குறிக்குள் ஊராட்சி என்று தருவதற்குப் பதில் மகாராஜபுரம் ஊராட்சி என்று முழுமையாகவே தலைப்பைத் தந்து விடலாம். சென்னை மாநகராட்சி என்று முழுமையாகத் தான் எழுதுகிறோம். சென்னை (மாநகராட்சி) என்றவாறு அன்று என்பதை ஒப்பு நோக்கலாம். இவ்வாறு முழுமையாகத் தருவதால், படிக்க, தேட, இணைப்பு தர அடைப்புக்குறிகள் இன்றி இலகுவாக இருக்கும். இதற்கு ஏற்ப தொடக்க வரிகளும் மகாராஜபுரம் ஊராட்சி (Maharajapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. என்றவாறு மாற்ற வேண்டும்.--இரவி (பேச்சு) 05:50, 6 நவம்பர் 2015 (UTC)Reply
அடைப்புக்குறிகள் இன்றிக் கட்டுரைத் தலைப்புகள் இருக்க வேண்டுமென்றால், கட்டுரையிலும் சிறிது மாற்றம் வேண்டும். 'முதூர் ஊராட்சி' (Mudur ??), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம் வட்டாரத்தில் உள்ளது. இந்த ஊராட்சி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:48, 6 நவம்பர் 2015 (UTC)Reply
Kanags,  Y ஆயிற்று--இரவி (பேச்சு) 09:16, 8 நவம்பர் 2015 (UTC)Reply

ஐயங்கள்

தொகு
  • taluk என்பது வட்டம் என்றுதானே அழைக்கப்படுகிறது, வட்டாரம் என்பதும் சரியான வழக்கா?
  • block - வட்டாரம், Ward - வட்டம் என்ற பயன்பாடு சரியா? எனில் taluk - வட்டமும் Ward - வட்டமும் எவ்வகையில் வேறுபடுகின்றன? (tnrd-bname - வட்டாரம் (block), tnrd-ward - வட்டங்களின் எண்ணிக்கை)

அல்லது வட்டாரம் என்பது ஊராட்சி ஒன்றியத்தைக் குறிக்கிறதா?

\\இது மொத்தம் 7 வட்டங்களையும் 7 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.//

இதில் வரும் வட்டம் என்பது எந்த அலகைக் குறிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
taluk -வட்டம் என்பதுடன் இது குழப்பம் விளைவிக்காதா?
உறுப்பினர்கள் என்பது ஒவ்வொரு ஊராட்சியின் கீழமையும் சிறுகிராமங்களைக் குறிக்கிறது என நினைக்கிறேன். உறுப்பினர்கள் என்றால், நபர்களைக் குறிப்பது போலத் தோன்றுகிறது.
கட்டுரையினுள் இச்சிறுகிராமங்கள் குடியிருப்புகள் எனத் துணைத் தலைப்பிடப்பட்டுள்ளன. மேற்கோளாகத் தரப்பட்டுள்ள இணைப்பில் habitations எனத் தரப்பட்டிருந்தாலும் அவை வழக்கத்தில் குடியிருப்புகள் என அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் குடியிருப்பு என்பதன் உள்ளிணைப்பு தமிழக ஊராட்சி மன்றங்கள் (tamilnadu panchayat boards) என்ற கட்டுரைக்குச் செல்கிறது. இதுவும் குழப்பமாக உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 15:02, 5 நவம்பர் 2015 (UTC)Reply
Booradleyp1, மாவட்டம் (District), வட்டம் (Taluk), வட்டாரம் (Block), ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union), ஊராட்சி (Gram Panchayat), குக்கிராமங்கள் (Habitation), வார்டு (ward) ஆகிய சொற்கள் அரசு கலைச்சொற்களில் புழக்கத்தில் உள்ளன. இங்கு, வட்டாரம் எனப்படும் Blockம், ஊராட்சி ஒன்றியம் எனப்படும் Panchayat Unionம் ஒன்றே. Block என்பது நிருவாக அலகில் மேல் இருந்து கீழாகப் பார்க்கும் பார்வை. ஊராட்சி ஒன்றியம் என்பது கீழிருந்து மேலாகப் பார்க்கும் பார்வை. Block Development Officer போன்ற பொறுப்புகளை வட்டார வளர்ச்சி அலுவலர் என்றே குறிப்பிடுகிறார்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலர் என்று குறிப்பிடுவதில்லை. பார்க்க - https://en.wikipedia.org/wiki/Block_%28district_subdivision%29#India . Ward - வட்டம் என்பது சரியில்லை, மாற்ற வேண்டும் என்பதே ஊராட்சித் துறையின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தந்துள்ள கருத்து. ஆனால், அரசு இதனை வார்டு என்று தான் தமிழில் எழுதும் போதும் குறிப்பிடுகிறது. அதே போல் ward வேறு குக்கிராமங்கள் வேறு. ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் ஒரு ward இருக்கலாம். ஆனால், கட்டாயம் இல்லை. இங்கு, வார்டு என்பது ஊராட்சித் தேர்தலில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அலகு. குடியிருப்பு அலகு அன்று. இங்கு உறுப்பினர்கள் என்று குறிப்பிடுவது, தேர்ந்தெடுக்கப்படும் ward members. இவர்கள் கூடித் தான் ஊராட்சி மன்றத்தை நடத்துகிறார்கள். இவர்கள் தங்களில் இருந்து ஒரு ஊராட்சித் துணைத் தலைவரைத் தேர்ந்து எடுக்கிறார்கள். ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் நேரடியான தேர்தலாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் போல்.
இது போன்ற தெளிவுகளை எல்லாம் தமிழக ஊராட்சி மன்றங்கள் கட்டுரையில் விரித்து எழுதினால் உரிய பகுதிக்கு இணைப்பு தரலாம். கட்டுரை இன்னும் வளராததால், ஊராட்சி, குடியிருப்புகள் அனைத்துக்கும் முதன்மைத் தலைப்புக்கு இணைப்பு தந்துள்ளேன்.
தற்போது எழுந்துள்ள குழப்பத்தை இரு வகையாகப் பார்க்கலாம்:
  • நமக்கு ஊராட்சி முறை பற்றிய புரிதல் குறைவால் வரும் குழப்பம். இது எந்த துறை சார் கட்டுரைக்கும் இருக்கும். இதனை ஒதுக்கி வைத்து விட்டு உரிய முதன்மைக் கட்டுரைகளை விரிவாக்கிப் புரியவைக்கலாம்.
  • சொல்லாடல் குழப்பங்கள். தமிழ் விக்கிப்பீடியா நல்ல தமிழ் நடையை வலியுறுத்துகிறது. ஆனால், அரசு கலைச்சொல் சில இடங்களில் இதற்கு முரண்படுகிறது. அரசு பயன்படுத்தும் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்துவதா (எடுத்துக்காட்டுக்கு, வார்டு என்றே எழுதுவதா புதிய சொல்லை உருவாக்குவதா, குக்கிராமம் என்றே எழுதுவதா குடியிருப்பு, சிற்றூர் போன்ற சொற்களை ஆள்வதா) இல்லை, நாம் புதிய சொற்களை உருவாக்குவதா? இப்படிச் செய்தால் அரசுத் துறையில் உள்ளவர்களுக்கே இக்கட்டுரைகள் குழப்பத்தை உண்டாக்கலாம். மேல்மட்ட அளவில் சிலரின் கருத்துகளைப் பெற்று சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால், ஊராட்சித் துறை முழுக்க அச்சொற்கள் உடனடியாகப் புழக்கத்துக்கு வருமா என்று சொல்ல முடியாது. உண்மையில், இதே சிக்கலைத் தான் நாம் பல்வேறு துறை சார் கட்டுரைகளிலும் எதிர்கொள்கிறோம். --இரவி (பேச்சு) 19:33, 5 நவம்பர் 2015 (UTC)Reply

சந்தேகங்களைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி இரவி.

எனது பரிந்துரைகள்:

  • இப்போதைக்கு வழக்கிலுள்ள ’வார்டு’ என்பதையே பயன்படுத்தலாம். தாலுகாவிற்கான ‘வட்டம்’ -இதனுடன் ஏற்படும் முரண்பாட்டை இது தவிர்க்கும். மேலுள்ளவர்களுடன் உரையாடி வார்டு என்பதற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தடுத்து முடிவு எட்டியபின் அச்சொல்லை மீண்டும் தானியிங்கி மூலம் மாற்றிக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன் (ஆனால் அது சாத்தியமா என எனக்குத் தெரியவில்லை)
  • \\இது மொத்தம் 7 வட்டங்களையும் 7 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது\\

\\இது மொத்தம் 7 வார்டுகளையும், அவற்றுக்கான தேர்தெடுக்கப்பட்ட 7 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது\\ - என இருக்கலாம் *குடியிருப்பு -இதனை குக்கிராமங்கள் என்றே குறிக்கலாம்.

  • கட்டுரையின் தலைப்பு: ----- (ஊராட்சி) என்றே இருக்க வேண்டும். இல்லையெனில், பின்னர் ஊராட்சியின் குக்கிராமங்களைப் பற்றி கட்டுரை உருவாகும் வேளையில் ஊராட்சியின் தலைமை கிராமமாக உள்ள கிராமத்துக்கான கட்டுரையின் பெயருடன் சிக்கல் ஏற்படும்.--Booradleyp1 (பேச்சு) 05:22, 6 நவம்பர் 2015 (UTC)Reply
Booradleyp1, ஒரு முறை கட்டுரை பதிவேற்றிய பின் தேவையான மாற்றங்களைத் தானியக்கமாகச் செய்யலாம். என்ன, ஒரு சிறு தொகுப்பு என்றாலும் 12,000+ கட்டுரைகளில் திருத்த வேண்டியிருக்கும். அதனால் தான் இயன்றவரை இப்போதே உரையாடி ஒரு முடிவுக்கு வர முனைகிறோம். புதிய தரவுகள் கிடைக்கும் போது சில மாதங்களுக்கு ஒரு முறை இக்கட்டுரைகளை இற்றைப்படுத்தி வரலாம். சட்டமன்றத் தொகுதி, பாராளுமன்றத் தொகுதி என்பது போல ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியிடும் இடங்களை ஊராட்சி மன்றத் தொகுதிகள் எனவே கருதலாம். எனவே, வார்டு என்பதற்கு இணையாக தொகுதிகள் என்ற சொல்லைப் பயன்படுத்துவது சரியாக வரும். ஏனெனில் வார்டு உறுப்பினர்களை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிடும் வழக்கைச் செய்திகளில் காண முடிகிறது. மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களை மாமன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிடும் வழக்கமும் இருக்கிறது.
குக்கிராமங்கள் என்பதற்கு இணையாக சிற்றூர் என்ற நேரடியான, எளிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே, ஆட்சிக் கலைச்சொற்களில் பேரூர் என்று உள்ள சொல்லோடு ஒப்பு நோக்க முடியும். பேரூர் - > ஊர் - > சிற்றூர் என்ற அடுக்கும் சரியாக வரும். ஆங்கிலச் சொற்களின் நேரடித் தமிழாக்கமாக சிலர் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து என்று சொல்கின்றனர். ஆனால், கிராமம் தான் ஊர் என்பதால் ஊராட்சி என்று சொன்னாலே அது கிராமப் பஞ்சாயத்தைத் தான் குறிக்கும். அதே போலவே, நகராட்சி என்ற சொல்லும். எனவே, இந்தப் புலத்தில் குக்கிராமம் என்ற சொல்லைத் தவிர்த்து சிற்றூர் என்று சொல்வது சீர்மை பேண உதவும்.
அடைப்புக்குறி இல்லாமல் மகாராஜபுரம் ஊராட்சி என்று முழுமையாக குறிப்பிடலாம். இது தொடர்பாக என்னுடைய கருத்துகளை மேலே இட்டுள்ளேன்.--இரவி (பேச்சு) 18:22, 6 நவம்பர் 2015 (UTC)Reply

இரவி, உங்களது கருத்துகளும் முடிவுகளும் ஏற்புடையவை. இக் கூட்டு முயற்சி நல்லதொரு இலக்கை நோக்கி பயணிப்பது மிகவும் நிறைவைத் தருகிறது. பங்குகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:31, 7 நவம்பர் 2015 (UTC)Reply


  • dpopulation என்பது ஆதிதிராவிடர் எண்ணிக்கையா அல்லது பட்டியல் வகுப்பினரின் எண்ணிக்கையா? (tnrd-dpopulation - ஆதிதிராவிடர் எண்ணிக்கை)
  • தகவல் பெட்டியில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு பகுதிகளில் காணப்படும் எண்கள் சிறிய எழுத்துக்களாகவே காட்சியளிக்கின்றன.
  • மாவட்ட ஊராட்சி வார்ப்புருக்களை முழுவதுமாகக் காட்டாமல் வேண்டுமெனில் காணும் வகையில் மறைத்துக் காட்டலாமா? (எ. கா. விழுப்புரம் மாவட்ட பட்டியல்)
  • ஆகும் என்ற விகுதி வேண்டுமா? (எனக்கு இலக்கணம் மறந்துகொண்டிருப்பதால் யாரேனும் தெளிவுபடுத்துங்கள்)
மொத்த மக்கள் தொகை 111 ஆகும் எதிர் மொத்த மக்கள் தொகை 111
அதில் பெண்களின் எண்ணிக்கை 321, ஆண்களின் எண்ணிக்கை 123 ஆகும் எதிர் அதில் பெண்களின் எண்ணிக்கை 321, ஆண்களின் எண்ணிக்கை 123
நான் கடவுள் எதிர் நான் கடவுள் ஆவேன் / ஆகும்

கட்டுரைகள் நன்கு தொடங்கப்பட்டுள்ளன. நீச்சல்காரனுக்கும் உதவிய அனைவருக்கும் நன்றிகள் ! - ʋɐɾɯnபேச்சு 15:50, 5 நவம்பர் 2015 (UTC)Reply

tnrd-dpopulation என்பதனைத் தரவுத் தளத்தில் Dalits என்றே குறிப்பிட்டுள்ளனர். இச்சொல்லாடல் பொதுவாக பட்டியல் வகுப்பினரைக் குறிக்கும். ஆனால், மலையோர ஊராட்சிகளில் உள்ள பட்டியல் பழங்குடியினரை எப்படி மாறுபட்டு அழைக்கிறார்கள் என்று அறிய வேண்டும். தரவுத்தளத்தை அளித்த அலுவலர்கள், ஊராட்சித் துறையில் வேலை பார்க்கும் அலுவலர்களுடன் கலந்து கொண்டு பதில் தருகிறேன். சொற்றொடரை ஆகும் என்று முடிப்பது தான் இலக்கண மரபு என்று படித்த / கேட்ட நினைவு. நவீன எழுத்து நடையில் அதனை விடுத்தும் எழுதுகின்றனர். மற்ற பரிந்துரைகளை நீச்சல்காரன் கவனிக்க வேண்டுகிறேன்.
@Zsenthil: - பயனர்:Neechalkaran/மகாராஜபுரம் கட்டுரையின் மொழிநடையைக் கவனித்துப் பரிந்துரைகள் வழங்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:14, 6 நவம்பர் 2015 (UTC)Reply

சில விளக்கங்கள்

தொகு
  • உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுள் அடங்காத உள்ளாட்சி அலகான சிற்றூராட்சி என்பதையே நாம் இங்கு கிராம ஊராட்சி என்கிறோம். இது கிராம ஊராட்சி -> ஊராட்சி ஒன்றியம் -> மாவட்ட ஊராட்சி என்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடிப்படை அலகு. முறையே ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியக் குழு(panchayat union council), மாவட்ட ஊராட்சி மன்றம் ஆகியவை இவற்றின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றன.
  • பொதுவாக வருவாய் மாவட்டமும் மாவட்ட ஊராட்சியும் ஒரே பெயரிலேயே அமைந்துள்ளன. ஆனால் மாவட்ட ஊராட்சிக்குள் கிராம ஊராட்சிகளே வருமேயன்றி அம்மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வாரா. [மாவட்ட ஊராட்சி அமைப்புக்கு அதிகாரப் பகிர்வும் அவ்வளவு நடந்திருப்பதாகத் தெரியவில்லை].
  • தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியம் (panchayat union) என்பதுவும், வளர்ச்சி வட்டாரம் (development block) என்பதுவும் ஒன்றையே குறிக்கிறது. அதே குறிப்பிட்ட ஊராட்சிகளின் தொகுப்புகளே இவை. ஆனால் வருவாய்த் துறை வைத்திருக்கும் வட்டம் (தாலுகா) என்ற அலகு வேறு. எடுத்துக்காட்டாக, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊர் மதுரை வடக்கு வட்டத்தில் அடங்கியிருக்கலாம். எனவே இங்கு வட்டாரம் என்ற சொல் சரியானதே என்றாலும் ஊராட்சி ஒன்றியம் என்பதையே பயன்படுத்தலாம். block என்பதற்கு வட்டம் என்பதைப் பயன்படுத்தக்கூடாது.
  • இந்தக் கட்டுரைகளில் ஏன் சட்டமன்றத் தொகுதியையும், மக்களவைத் தொகுதியையும் குறிப்பிட வேண்டும் என்ற தெளிவு எனக்கில்லை. மாவட்ட ஊராட்சியோடு நிறுத்திக்கொள்ளலாம் என்பதே எனது கருத்து. ஏனெனில் ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எல்லா ஊர்களும் அதே சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்குவதில்லை. ஒரே மாவட்ட ஊராட்சிக்குள் உள்ள எல்லா ஊர்களும் ஒரே மக்களவைத் தொகுதியில் இருப்பதில்லை. நடுவண் அரசு, மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம் என்ற அடிப்படையில் இவை சேர்க்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கிறேன். இது தேவையா அல்லது இன்னும் காவல் மாவட்டம், கல்வி மாவட்டம் போன்ற பிற நிர்வாக அலகுகளும் சேர்க்கப்பட்டு விரிவாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து என்னால் முடிவுக்கு வர இயலவில்லை. தகவல் ஆதாரங்கள் கிடைப்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம்.
  • ward என்பதற்கு 'வார்டு' என்ற சொல்லே தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேடு முதலான பல ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • habitation என்பதற்கு 'குக்கிராமம்' என்ற சொல் தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையே இங்கு பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். இந்தக் கணக்குப்படி வரும் குக்கிராமங்களும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தப்படும் வசிப்பிட வகைப்பாடும், வருவாய் கிராமம் என்ற வகைப்பாடும் வேறுவேறாக இருப்பதுபோல் தெரிகிறது. சான்றாக மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றுள் 1,707 குக்கிராமங்கள் அடங்கியுள்ளன. ஆனால் வருவாய் கிராமங்களோ 670.
  • இறுதியாக, இந்தக் கட்டுரைகளை உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த செய்திகளுக்காக என்று மட்டும் வரம்புறுத்திக்கொண்டு தமிழ்நாட்டிலுள்ளதாகக் கூறப்படும் 79,394 ஊர்கள்/ கிராமங்கள்/ குக்கிராமங்கள்/ உட்கடை கிராமங்கள்/ குடியிருப்புகள் பற்றிய ஏனைய செய்திகளை அனுமதிப்பதற்காக அவற்றுக்குத் தனியாக பக்கம் தொடங்க அனுமதிக்கலாம். ஒரே நிபந்தனை: அவை இந்த 79,394 ஊர்களடங்கிய குக்கிராமங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். (இப்படி நிபந்தனை இல்லாவிட்டால் தா(த்தா மகன்). அப்பா நகர், நிலக்கொள்ளை சிட்டி அது இது என்று பல கட்டுரைகள் தொடங்கப்பட்டுவிடும்!?)

Paramatamil (பேச்சு) 18:15, 5 நவம்பர் 2015 (UTC)Reply

Paramatamil, விளக்கத்துக்கு நன்றி. இங்கு, பாராளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி யாவும் குறிப்பிட்ட ஊராட்சி குறித்தனவே. ஊராட்சி ஒன்றியம் குறித்தது அன்று. ஒரு ஊராட்சி முழுமையும் ஒரே பாராளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிக்குள் தான் இடம்பெறும் என்று கருதுகிறேன். உறுதிப்படுத்த வேண்டும். ஒரு ஊர் அல்லது ஊராட்சி பற்றி அறிய முனையும் போது, அது எந்த பாராளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி கீழ் வருகின்றது பயனுள்ள தகவலாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே இத்தகவல் தரப்படுகிறது. ஊராட்சிகளின் கணக்கில் கொள்ளப்படும் சிற்றூர்களுக்குக் கூட தனிக்கட்டுரைகள் எழுதுவதில் குறிப்பிடத்தக்கமை சிக்கல் இருக்கலாம். எனவே, நீங்கள் அஞ்சுவது போல் சிறிய பரப்புகள் பற்றிய கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று--இரவி (பேச்சு) 19:28, 6 நவம்பர் 2015 (UTC)Reply
ஊர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்) இல் விளக்கப்பட்டுள்ளது. இதன் படி, Populated, legally recognized places are typically considered notable, even if their population is very low. Even abandoned places can remain notable, because notability encompasses their entire history. One exception is that census tracts are usually not considered notable. இப்பக்கத்தை யாராவது (@Wwarunn and Rsmn:) மொழிபெயர்த்து உதவினால் நல்லது.--Kanags \உரையாடுக 21:06, 6 நவம்பர் 2015 (UTC)Reply
இரவி, Kanags குறிப்பிடத்தக்கமை குறித்த வழிகாட்டலுக்கு நன்றி.
* 2007இல் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு அக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியையே அடிப்படை அலகாகக் கொள்ள விரும்பினாலும் 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வருவாய் கிராம அடிப்படையிலேயே இருந்ததால் அதையே அடிப்படையாகக் கொள்ள வேண்டியதாயிற்று என்று இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரே ஊராட்சியின் இருவேறு குக்கிராமங்கள் வெவ்வேறு தொகுதிகளில் இடம்பெறும் வாய்ப்பிருப்பதைப் புறந்தள்ள முடியாது. மேலும் மகாராஜபுரம் கட்டுரையில் கன்னியாகுமரி மாவட்டத்து ஊர் காஞ்சிபுரத்து உத்திரமேரூர் தொகுதியில் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இவை கருதியே தானியக்கக் கட்டுரையில் ஊராட்சி அமைப்பு குறித்த தகவல்களோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று கருதினேன்.
*'கான்ஸ்டிடுயன்சி' என்ற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படும் 'தொகுதி' என்ற சொல், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி எனப் பல்வேறு அமைப்புகளிலும் பலகாலமாக வார்டுகள் இருந்துவரும் நிலையிலும் அவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதில்லை. [ஊராட்சி வார்டுக்கு (மட்டும்) ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்றாலும் வார்டுக்கும், தொகுதிக்குமான வரையறுக்கத் தக்க வேறுபாடு எதுவும் தெரியவில்லை என்பதுவும் உண்மையே]. புழக்கத்தில் உள்ள வார்டு என்ற சொல்லை பயன்படுத்தத் தயக்கம் இருக்கும் இந்நிலையில் த.இ.க நூலகத்தில் உள்ள 'சிறகம்' அல்லது 'பிரிவு' என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது? மருத்துவமனை வார்டுகளைக் கூட புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு என்று குறிக்கிறோம் அல்லவா?
*'பேரூராட்சி' எதிர் 'சிற்றூராட்சி' என்ற அடிப்படையில் கிராமம் என்பதே சிற்றூரைத்தான் குறிப்பதாகக் கருதினேன். அதனால் 'குற்றூர்' என்றெல்லாம் இல்லாத நிலையில் குக்கிராமம் பொருத்தமுடைத்து என்று கருதினேன். (அரசுத் துறை பயன்பாட்டின்படி 'பஞ்சாயத்து' என்பது ஊராட்சி. கிராம/ வில்லேஜ் பஞ்சாயத்து சிற்றூராட்சி. டவுன் பஞ்சாயத்து என்பது பேரூராட்சி). ஆனால் இப்போது சிற்றூர் < ஊர் < பேரூர் என்று சமாதானம் கொள்கிறேன்.
* உரையாடிவிட்டு மாற்றலாம் என்றுதான் கட்டுரையில் கைவைக்கவில்லை.

பதிவேற்றம்

தொகு

அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி இயன்றவரை மேம்படுத்தி பதிவேற்றம் நோக்கி நகர்ந்து வருகிறோம். ஒரு சில தரவுகளில் தெளிவு வேண்டியுள்ளதால், அது தொடர்பாக அரசு அலுவலர்களிடம் இருந்து இற்றையை எதிர்பார்த்துள்ளோம். ஒரு சில நாட்களில் தரவுகள் கிடைத்தவுடன் பதிவேற்றம் தொடங்கும். --இரவி (பேச்சு) 09:18, 8 நவம்பர் 2015 (UTC)Reply

@Neechalkaran: மேலே குறிப்பிட்ட <!--tnrd-vpname--><!--tnrd-dname--><!--tnrd-pcname--><!--tnrd-acname--><!--tnrd-area--><!--tnrd-bname--><!--tnrd-ward--> ஆகிய நிரலாக்கக் குறிப்புகளை மட்டும் நீக்கிப் பதிவேற்றஞ் செய்வதில் தொழினுட்பச் சிக்கல்கள் ஏதும் உண்டா? அவை பெரும்பாலும் மாற்றமடையப் போவதில்லை. @Ravidreams: ஊராட்சி என்பதைத் தானியக்கமாகச் சேர்ப்பதிலும் சிக்கல் உள்ளதாக உணர்கின்றேன். மகாராஜபுரம் ஊராட்சி என்று வருவது தமிழ் இலக்கணத்திற்குப் பொருத்தமானதன்று. மகாராஜபுர ஊராட்சி எனவே வருதல் வேண்டும். ஊராட்சியை அடைப்புக்குறிக்குள்ளேயே எழுதி விடலாம் போலுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 14:09, 10 நவம்பர் 2015 (UTC)Reply
vpname தவிர மற்ற மாறிலிகள் தேவைப்படும். வெறும் பெயர் மட்டுமல்லாமல் பிற கணிப்புகளுக்கும் தேவைப்படும். area தகவல் இனிமேல்தான் கிடைக்கும். நவீன இலக்கணப்படி தமிழ்நாட்டு அரசு என்பதற்குப் பதில் 'தமிழ்நாடு அரசு' போல மகாராஜபுரம் ஊராட்சியும் ஏற்புடையது என நினைக்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 05:36, 11 நவம்பர் 2015 (UTC)Reply
மதனாகரன், நீங்கள் சுட்டுவது இலக்கணப்படி சரி தான். ம் என்று முடியும் ஊர்கள் போக, -டு என்று முடியும் ஊர்கள் உட்பட (எ.கா - பெருமாநாடு ஊராட்சி ) இன்னும் சில இடங்களில் புணர்ச்சி விதி தவறலாம். இதனை நவீன இலக்கணம் என்று கருத முடியாவிட்டாலும், தமிழ்நாடு அரசு என்று எழுதுவது போல ஊர் பெயர்களை முழுமையாக எழுதி அதனை அடுத்து நிருவாக அலகைக் குறிக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. கட்டுரைகளின் தலைப்பில் ஊர் பெயர் முழுமையாக இடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, தலைப்பிடலைப் பொருத்தவரை, இதனை விதிவிலக்காக கருத வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 13:04, 12 நவம்பர் 2015 (UTC)Reply

தற்போதைய நிலவரம்

தொகு

கிடைக்கப்பெற்ற 12525 ஊராட்சி தகவல்களில் 10405 கட்டுரைகள் பதிவேற்றப்பட்டன. ஒரே பெயரில் வேறு வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சிகள் சுமார் 1800ம், ஒன்றிற்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஊராட்சிகள் மீதியும் பதிவேற்றப்படவுள்ளன. இதற்கிடையில் சில ஊராட்சிப் பெயர்கள் சரிதானா என்ற ஐயம் எழுந்ததால் அரசுத் துறையிடம் ஊராட்சிப் பெயர்களை மீண்டும் சரிபார்க்கக் கேட்டுள்ளேன். புதிய தரவுகள் வந்தவுடன் மீதி ஊராட்சிகள் உருவாக்கப்பட்டு, அனைத்துப் பெயர்களையும் உறுதிசெய்து, தற்போதைய முழுத் தானியகத்தையும் நிறைவு செய்கிறேன். அதுவரை தானியங்கியால் உருவான ஊராட்சிக் கட்டுரைகளின் பெயர்களை நிச்சயமாகத் தெரியாதவரை மாற்றுவதை தவிர்க்கலாம். மற்றபடி அவற்றின் உள்ளடக்க மேம்பாடுகளைச் செய்யலாம்.-நீச்சல்காரன் (பேச்சு)

தமிழக ஊராட்சிகள் பிழையான பெயர்கள்

தொகு

பார்க்க: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்/பிழைகள்/பெயர்கள்

விடுபட்ட/உருவாக்கப்படாத 754+ ஊராட்சிகளை உருவாக்க வேண்டுகோள்

தொகு

சுமார் 754 ஊராட்சிகள் சிவப்பு இணைப்புகளாக உள்ளன. இவற்றையும் உருவாக்கி இத்திட்டத்தினை முடித்தல் நலம். நன்றி --அஸ்வின் (பேச்சு) 20:00, 22 அக்டோபர் 2022 (UTC)Reply

தானியங்கியாக இயக்குவது இயலாது. சரி பார்த்த தகவல்களை அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே உள்ளவற்றைச் சரிபார்த்து பக்கம் உருவாக்க வேண்டும். தரவுகள் பொதுவில் தான் உள்ளன. நானும் நேரம்கிடைக்கும் போது உருவாக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:30, 24 அக்டோபர் 2022 (UTC)Reply

மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களில் சிக்கல்

தொகு

இந்திய அரசாங்கம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கடலூர் மாவட்ட விவரம் இதில் கண்டேன் [1]. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மக்கள் தொகை விவரங்கள் இதனோடு ஒற்றுப் போகவில்லை என்று எண்ணுகிறேன்.

உதாரணத்திற்கு கீழ்கவரப்பட்டு ஊராட்சி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் வட்டாரத்தில் அமைந்துள்ளது

விக்கி pdf பக்க எண்: 5
en (இந்த வட்டத்தில் இந்த பெயரிலேயே pdfல் உள்ளது) Keelkavarapattu Gram Panchayat Kilkavarapattu
ஆண்கள் 3383 2,909
பெண்கள் 3488 3,022
மொத்த மக்கள் 6871 5,931

கீழ்புளியம்பட்டு ஊராட்சி (Keelpuliyampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது

விக்கி pdf பக்க எண்: 10
en Keelpuliyampattu Gram Panchayat Keelpuliyampattu
ஆண்கள் 725 703
பெண்கள் 712 726
மொத்த மக்கள் 1437 1,429

ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:30, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

Return to the project page "தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழக ஊராட்சிகள்".