விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017

Active discussions

மாநில அளவிலான தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிதொகு

கடந்த 10/4/2017, 11/4/2017 ஆகிய இரன்டுநாட்கள் மாநில அளவிலான, " கல்வியில் தகவல் தொழில்நுட்பம், மற்றும் விக்கிப்பீடியா" குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு. உதய சந்திரன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் நிகழ்ந்தது. மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திரு இராமேஸ்வர முருகன், இணை இயக்குநர், விரிவுரையாளர்கள், தமிழ்நாடெங்குமுள்ள மாவட்டக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாநிலமெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இதில் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை தரம் , எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான ஆலோசனைக் கேட்கப்பட்டது. நான் பள்ளிமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோடை முகாம் நிகழ்த்துவதற்கான திட்டங்களை முன்வைத்தேன். இதன் படி முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரம் கட்டுரைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக பங்களிக்கும் மாவட்டத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. வரும் 2/5/2017 முதல் 4/5/2017 வரை மூன்று நாட்கள் மாநில அளவில் விக்கிப்பீடியா பயிற்சியும், 10/5/2017 முதல் 12/5/2017 வரை மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சியும் வழங்கப்படும். மாநில அளவிலான விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களாக பயனர்:பரிதிமதி மற்றும் பயனர்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:52, 14 ஏப்ரல் 2017 (UTC) செயல்படவுள்ளோம். இப்பயிற்சிக்கென விக்கிப்பீடியர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி முகாம் வெற்றிபெறவாழ்த்துகள்! பார்வதிஸ்ரீ, பயிற்சிப்பட்டறைகள் பற்றி தங்களுக்குத் தெரியாதது தான் என்ன? இலங்கையிலும் இவ்வாறு, நடாத்த உள்ளோம். இந்தியாவில் அரசு உதவியுடனும் இலங்கையில் நாமாவே நடாத்த உள்ளதும் தான் வித்தியாசம் என நினைக்கிறேன். அது இருக்க, தங்களிடம் பயிற்சிப்பட்டறைக்கு ஏற்ற காணொளி ஏதேனும் தேவையெனின் வினவுக. தங்களிடம் இருக்கும் Presentationஐ என் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். அத்துடன்
 • பயிற்சிப்பட்டறையில் பதிப்புரிமை பற்றி வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.
 • மேலும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வர்ணனை நடையிலோ, ஆராய்ச்சி வடிவிலோ எழுத வேண்டாம் என வலியுறுத்துங்கள். *அத்துடன், தமிழ் விக்கியில் பயிற்சிப்பட்டறைக்கு என ஒரு பக்கத்தை உருவாக்குக.
 • தமிழ் விக்கிப்பங்களிப்பாளார்களினால் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி கொடுக்கப்பட்ட காணொளிகளினையும் தவறாது காட்சிப்படுத்துங்கள்
 • விக்கிப்பீடியாவின் கொள்கைகள், வழிகாட்டுதல்களினை ஞாபகமூட்டல் வேண்டும்.
 • பேச்சுப்பக்கத்தில் விடுக்கும் செய்திகளுக்கு பதில் அளிப்பது பற்றிக் கற்றுக்கொடுங்கள், மேலும் அதனை தவறாது செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
 • தீக்குறும்பு மற்றும் இதர தடை செய்யப்படுவதற்கான சாத்தியங்களினை எடுத்துரைக்கவும்.
 • ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு கட்டுரைகளை மொழிபெயர்ப்பது எப்படி? அதற்கான இலகு வழிமுறைகள்.
 • சான்றிணைப்பது தொடர்பிலும் விளக்கவும்.
 • குறிப்பிடத்தகைமை கொண்ட கட்டுரைகளையே நாம் வரவேற்கின்றோம் என்பதை தெளிவுபடுத்துங்கள்
 • எல்லாவற்றிற்கும் மேலாக விருதுக்காக அன்றி நாமாகவே முன்வந்து விக்கியில் பங்களிப்போம் எனவும் அதனால் கிடைக்கும் பயன்களினையும் விலாவாரியாக எடுத்துக்கூறுக.
 • அத்தோடு விக்கிப்பீடியாவின் 15 ஆம் ஆண்டுகளைக் அடையும் தருணம், கொண்டாட்டம் என்பவற்றிற்கு இப்பயிற்சிப்பட்டறை உந்துதலாக அமையும்.

ஆயிரம் கட்டுரைகளும் மேல் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படின் அவற்றினை திருத்தும், கண்காணிக்கும் பணிகளிலும் என்னால் ஈடுபடமுடியும். உதவிகள் தேவையெனின் தவறாது கேளுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:21, 14 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி! ஸ்ரீஹீரன் கட்டாயம் உதவி தேவை 32,000 கட்டுரைகள் இலக்கு.

வாழ்த்துக்கள் @Parvathisri:. பயிற்சிகளின்போது, நுட்ப விடயங்களுடன் சேர்த்துக் கலைக்களஞ்சியக் கட்டுரைகளை எவ்வாறு எழுதுவது என்பது குறித்து விளக்க வேண்டியது அவசியம். முடியுமானால், எல்லா உறுப்புக்களும் அடங்கிய மாதிரிக் கட்டுரை ஒன்றை எழுதிக்காட்டி விளக்குவது பயன் தரும். இது தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளின் அமைப்புக் குறித்தும் விளக்கப் பயன்படும். ---மயூரநாதன் (பேச்சு) 03:01, 15 ஏப்ரல் 2017 (UTC)
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி (2,3,4 மே)நடந்துவருகிறது. சுமார் எழுபது ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் கலந்து கொண்டு அடிப்படை விக்கிப்பீடியாவின் அமைப்புகள் பற்றி விளக்கினேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்வதிஸ்ரீ, பரிதிமதி, தமிழ்ப்பரிதியுடன் சீனிவாசன், தகவலுழவன், சிபி(Commons_sibi), செம்மல், செந்தமிழ்க்கோதை போன்றோரும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் பயனர் பெயர் TNSE என்று தொடங்குமாறு திட்டமிட்டுள்ளனர், அவர்களின் தொகுப்புகள் மணல்தொட்டில் செய்யப்பட்டு, பின்னர் பொதுவெளிக்கு மாறுகிறது. இத்தகைய பெயருடைய பயனர்கள் ஏதேனும் சிக்கலுக்குள்ளானால் கனிவுடன் உதவிடக் கோருகிறேன். மாவட்டம் வாரியாக விக்கித் தரத்துடன் ஆயிரம் கட்டுரையாவது எழுத இலக்கைக் கொண்டுள்ளனர்.-நீச்சல்காரன் (பேச்சு) 01:50, 4 மே 2017 (UTC)
வாழ்த்துக்கள் நீச்சல்காரன். இந்நிகழ்வில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர்களும் பங்கு பெறுவதாக அறிகிறேன். இப்பயிற்சிக்குப் பின்னரும் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு உதவி (நேரடி) தேவையெனில் குமரி மாவட்டத்தில் நான் உதவக்கூடும் என்பதையும் தெரிவியுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:03, 4 மே 2017 (UTC)
கவனிக்க @Parvathisri:, @Thamizhpparithi Maari:, @பரிதிமதி:

ːː தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற மே மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் (சில மாவட்டங்களில் மாறும்) ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் விக்கிப்பீடியா பணிமனை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.. இதற்கு மாநில அளவில் கடந்த 2,3,4 பயிற்சியளித்துள்ளோம். ஆயினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விக்கிப்பீடியர்களின் வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நாட்கள் விக்கிப்பீடியாப் பயிற்சி மட்டுமே நடைபெறுகிறது. எனவே அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த விக்கிப்பீடியர்கள் தமது மாவட்டத்தில் ஒருநாளும் மற்ற இரு நாட்களில் அருகிலுள்ள மாவட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். இதன் திட்டப்பக்கத்தில் மிகவும் விரைவாக தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:17, 6 மே 2017 (UTC)

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ் விக்கிபீடியா பயிற்சியின் வீச்சு மாநிலம் முழுவதுமுள்ள ஆயிரக்கனக்கான ஆசிரியர்களை சென்றடைந்துள்ளது. விரைவில் தமிழ் விக்கிபீடியா புதிய பொலிவுடன் வளரப் போவதை எண்ணி மகிழ்கிறேன் Thiyagu Ganesh (பேச்சு) 08:42, 6 மே 2017 (UTC)

காலதாமதமாக இதை அறிகிறேன். மன்னிக்கவும். சென்னையில் (திருவல்லிக்கேணி, ஆவடி) 11,12, 15-17 நாட்களில் உதவ நான் தயார். தேவைப்படின் கூறுங்கள்@பரிதிமதி மற்றும் Parvathisri: --அஸ்வின் (பேச்சு) 17:19, 9 மே 2017 (UTC)

கவனத்திற்கு...தொகு

@Ravidreams: @Parvathisri:, @பரிதிமதி:

பயிற்சியின்போதும் அதற்குப் பிறகும் பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகளில் உரிய துப்புரவுகளை மேற்கொண்டு, அக்கட்டுரைகளை முழுமையான கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக மாற்றும் முயற்சியை எளிதாக்கும் விதத்தில் பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள் எனும் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:38, 27 மே 2017 (UTC)

ஏறத்தாழ ஒன்பது மணி நேர தொடர் உழைப்பு; தமிழ் விக்கிக்கு எந்தவகையில் உதவக்கூடும் என்பது தெரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:44, 31 மே 2017 (UTC)

பயனுள்ள அரிய முயற்சி. பாராட்டுகள் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு). இது இக்கட்டுரைகளை துப்புரவு செய்யவும் உரிய அறிவுரைகளை உரிய கட்டுரையாளரின் பேச்சுப் பக்கத்தில் தரவும் நன்கு உதவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:41, 2 சூன் 2017 (UTC)

கவனத்திற்கு...தொகு

@Ravidreams:, @Parvathisri:, @பரிதிமதி:

ஆசிரியர்களின் பங்களிப்பு சூன் மாதத்திலும் தொடர்கிறது. துப்புரவு தேவைப்படும் கட்டுரைகளில் cleanup june 2017 எனும் வார்ப்புருவினை இட்டு வருகிறேன். இதனைத் தொடரலாமா? கருத்தறிய விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:16, 5 சூன் 2017 (UTC)

ஆம்--இரவி (பேச்சு) 02:21, 6 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களின் கட்டுரைகளில் இப்போது நல்ல முன்னேற்றங்கள் தெரிகின்றன. அவர்களை தொடர்ந்து வழிநடத்த நம்மிடம் மனித வளங்கள் போதுமான அளவு இல்லாததை ஒரு குறையாக நான் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 6 சூன் 2017 (UTC)

கருத்துகள்தொகு

எனது கவனிப்புகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்:

பயிற்சிக் காலம்தொகு

@Info-farmer:, பயிற்சி இடம்பெறும் / நடைபெற்ற நாட்கள் மாதத்துடன் சேர்த்துத் தாருங்கள். மே மாதமா, சூன் மாதமா என்று குழப்பமாக உள்ளது.--Kanags \உரையாடுக 08:07, 7 சூன் 2017 (UTC)

ஓரளவு அரசு குறித்த நடைமுறை அனுபவம் இருப்பதால், இதனை கூற விரும்புகிறேன். தமிழகஅரசு முன்னறிவிப்பு, முன்கூட்டியே இருக்காது. அப்படியே தந்தாலும்,பல காரணிகளால் அது நடக்காது. ஏற்கனவே நடக்கவிருந்த பயிற்சி காலங்களைக் கவனிக்கவும். பயிற்சிக்கு இரண்டு ஒரு நாட்களுக்கு முன்னர் மட்டுமே, கல்வி இயக்குனரின் ஆணை வர அதிக வாய்ப்புண்டு. இதுவரை கொடுத்தவர்களுக்கு பயிற்சி போதுதாது என்று அன்றே கூறினேன். முடிந்தால் மறு பயிற்சிக்கு பிறகு, தொடர் பயிற்சி தந்தால் நன்றாக இருக்குமென்று கூறினர்.. நம்முடைய ஒரு மித்த குரல் இன்னும் ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதே நிலை. இல்லையேல் துப்புரவு பணிகள் அதிகம் வரும்.--உழவன் (உரை) 08:28, 7 சூன் 2017 (UTC)
நான் கூறியது உங்களுக்கு விளங்கவில்லைப் போல் தெரிகிறது. //15, 16, 17 தேதிகளில் பயிற்சி நடைபெறும் இடங்கள்// என்ற உப தலைப்பு உள்ளது. இது மே 15,16,17 இல் நடைபெறவிருந்ததா அல்லது, இனிமேல் வரும் சூன் 15, 16,17 தேதிகளா எனத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 08:40, 7 சூன் 2017 (UTC)

@Kanags மற்றும் Info-farmer:, 5, 16, 17 தேதிகளில் பயிற்சி நடைபெறும் இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்த இடங்கள் போன மாதம் அறிவிக்கப்பட்டு இரத்தானவை. இனி புதிதாக நடைபெறவுள்ள பயிற்சிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. சென்ற மாதம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலர் தங்கள் ஆர்வத்தின் காரணமாகத் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.--இரவி (பேச்சு) 03:24, 12 சூன் 2017 (UTC)

கட்டுரைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளின் அடிப்படையில் சில பரிந்துரைகள்...தொகு

முக்கியமானவைதொகு

 1. பயிற்சி பெறும் ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளில் துப்புரவு வார்ப்புரு இடப்படுவது குறித்து தெளிவான புரிதலை அவர்களிடத்து ஏற்படுத்த வேண்டும்.
 2. பயனர் உரையாடல் பக்கம், கட்டுரை உரையாடல் பக்கம் ஆகியன குறித்து நன்கு அறியச் செய்ய வேண்டும்.
 3. கலைக்களஞ்சியக் கட்டுரை என்றால் என்ன என்பதனை நன்கு விளக்க வேண்டும்.
 4. மேற்கோள்களின் முக்கியத்துவம், அதனை சுட்டுவது எப்படி ஆகிய இரண்டும் இன்னமும் நன்கு கற்றுத் தரப்படல் வேண்டும்.
 5. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதும்போது, துணைத் தலைப்புகளையும் மொழியாக்கம் செய்யவேண்டுமென கற்றுத் தர வேண்டும்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 22 சூன் 2017 (UTC)

செய்தால் நன்று!தொகு

 1. குறைந்தபட்சம் ஒரு பகுப்பாவது சேர்க்குமாறு கூறலாம்.
 2. விக்கித்தரவு இற்றை. சற்று சிரமமாக இருப்பின், கட்டுரையின் ஆரம்பத்தில் இணையான ஆங்கிலத் தலைப்பினை அடைப்புக் குறிக்குள் இடுமாறு பரிந்துரைக்கலாம். அறிவியல், தொழினுட்பம் குறித்த கட்டுரைகளுக்கு இது மிகவும் இன்றியமையாதது. கட்டுரைகளை ஒழுங்கமைவு செய்து, மேம்படுத்துவோருக்கு எளிதாக இருக்கும்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:47, 20 சூன் 2017 (UTC)

வேறு சில நுணுக்கமான விசயங்கள்தொகு

 1. நிறுத்துப் புள்ளிக்கு அடுத்து புதிய வாக்கியத்தை ஆரம்பிக்கும்போது ஒரு இடைவெளி விட்டு (single space) ஆரம்பித்தல். கால் புள்ளிக்கு அடுத்து ஒரு இடைவெளி விடுதல். இவ்வாறு செய்வதால் வாசித்தல் எளிதாக இருக்கும் (Readability) என்பதனை தெரிவிக்கலாம்.
 2. பெயர்களை எழுதும்போது என்.எஸ்.கிருஷ்ணன் என தொடர்ச்சியாக எழுதாது என். எஸ். கிருஷ்ணன் என எழுத வேண்டும் என்பதனை பயிற்றுவிக்கலாம். இதன் மூலமாக தலைப்பினை நகர்த்துதல் தவிர்க்கப்படும். எழுதிய பயனர் தேடவேண்டிய சூழலும் ஏற்படாது.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:19, 20 சூன் 2017 (UTC)

மாவட்ட அடிப்படையில் பகுப்பு உருவாக்குதலின் சிறப்புதொகு

ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர்களின் பெயரின் இறுதியில் அவர்கள் பணியாற்றும் மாவட்டத்தின் பெயர் குறியீடாக உள்ளது. அதுபோல, பயிலரங்கு நாட்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கும் பகுப்புகளை உருவாக்குதல் சிறப்பான வளர்ச்சியைத் தருமென்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக, பகுப்பு: அரியலூர் மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் சூன் 2017.பிறரின் எண்ணங்களை இடுக.--உழவன் (உரை) 11:57, 20 சூன் 2017 (UTC)

Info-farmer, மறைக்கப்பட்ட பகுப்புகளாக இவற்றை உருவாக்கலாம். பகுப்பு: அரியலூர் மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள் என்பது போல பகுப்பை உருவாக்கலாம். --இரவி (பேச்சு) 16:13, 20 சூன் 2017 (UTC)
Info-farmer, இப்பரிந்துரை தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் செயற்படுத்தப்பட்டுள்ளது. மறைபகுப்புகளால் குழப்பம் வருவதால் வழமையான பகுப்பாகவே இடப்பட்டுள்ளது. நல்ல பரிந்துரைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 13:24, 25 சூன் 2017 (UTC)
அப்பகுப்புகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தெரியவைக்கலாமா? தற்போது அவை எங்குள்ளன?--உழவன் (உரை) 16:53, 25 சூன் 2017 (UTC)

விக்கிப் பயிற்சி:சில வழிகாட்டல்கள் வேண்டல்தொகு

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சியின்போது, கருத்தாளர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. மூன்று நாட்களும் கருத்தாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கற்பித்தல் பணி குறித்து மேலதிக விளக்கங்களும் அதற்குரிய கட்டகங்களும் அடிப்படையான செயற்பாடுகளும் தேவையாக உள்ளன. தொழில் நுட்பம் சார்ந்த உரையாடல்களும் கருவிகளைச் செயல்படுத்தும் முறைகள் பற்றிய தகவல்கள் தமிழ் விக்கியில் காணப்பட்டாலும் எளிதில் விளக்கிடும் வகையில் சுருங்கக் கூற ஏதேனும் வழிவகைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். ஏனெனில், வகுப்புகள் நாளை 21/06/2017 முதற்கொண்டு தொடங்கவிருக்கிறது.நன்றி! மணி.கணேசன்

மணி.கணேசன் குறிப்பாக, என்னென்ன தலைப்புகளில் பயிற்சி, கூடுதல் விளக்கம் தேவை என்று குறிப்பிடுங்கள். அவற்றுக்கான விளக்கப் படங்கள் உருவாக்க முனைவோம். --இரவி (பேச்சு) 16:08, 20 சூன் 2017 (UTC)
இரவி சில தலைப்புக்கள்:
 • வார்ப்புரு இடுதல் மற்றும் உருவாக்குதல்
 • மேற்கோள் இடும் நடைமுறைகள்
 • எளிய மொழிபெயர்ப்புக் கையேடு
 • கணிதக் குறியீடுகள் சார்ந்த பதிவிடும் முறைகள்
 • பட்டியல் தயாரித்து இற்றை செய்யும் முறைகள் ...

மணி.கணேசன்

அனைவரின் கவனத்திற்காக...தொகு

உள்ளடக்கங்கள்தொகு

வணக்கம். பயிற்சியின் உள்ளடக்கங்கள் குறித்து முழுவதுமாக எனக்குத் தெரியவில்லை. அனுமானத்தின் அடிப்படையில் எனக்குத் தோன்றுவதை சொல்கிறேன்:- புதிதாக பயிற்சி பெறுபவர்கள், ஆங்கிலக் கட்டுரையை கருவி மூலமாக மொழிபெயர்ப்பது சிறந்த பலனைத் தரும் என நான் கருதவில்லை. ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, தங்களுடைய சொந்த மொழியாக்கத்தில் எழுதச் சொல்வதே நல்லது. மேலும் ஆரம்ப காலத்தில், ஐந்து வாக்கியங்கள் கொண்ட கட்டுரையை மேற்கோளுடன் எழுதி முடிக்குமாறு பயிற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் எளிது; துப்புரவு செய்பவர்களுக்கும் எளிது. நிறைய கட்டுரைகள் நீக்கப்படாமல் இருக்கும். அக்கட்டுரைகளை அந்த ஆசிரியரே மீண்டும் விரிவாக்கம் செய்யவும் ஏதுவாகும் என்பதே எனது ஆழ்ந்த நம்பிக்கை. பயிற்சி வகுப்பில் பயிற்றுவிப்போருக்குத்தான் நடைமுறைச் சிரமங்கள் தெரியும். எனினும் எனது கருத்தை நல்லெண்ணத்தில் பதிவு செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 22 சூன் 2017 (UTC)

நன்றி மா. செல்வசிவகுருநாதன். உங்களுடைய கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். பயனர் பக்கம் உருவாக்கச் சொன்னால் ஆர்வமுடன் செய்வர் என நினைக்கிறேன். அதிலிருந்து ஏதாவது ஒரு கட்டுரையில் திருத்தம் செய்தல், புதுக்கட்டுரை மேற்கோளுடன் எழுதுதல் என விரிவாக்கலாம். பயிற்சியின் உண்மையான சிக்கல் என்னவெனில் பயிற்சியளிப்போருக்கும் பயிற்சியில் பங்கு கொள்வோருக்குமான விகிதம். ஒரு பயிற்சியாளர் : 30 பயிற்சி பெறுவோர் என உள்ளது (1:30). பயிற்சியாளர்களை அதிகரிக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு என தனியாக திட்டப்பக்கம் தொடங்கி நெறிப்படுத்த வேண்டும். (வருங்காலப் பயிற்சிக்காவது உதவும்) ஏனோதானோவென பயிற்சியளிக்காமல் பயிற்சியாளர்களையும் ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவே எண்ணுகிறேன். மேலும் பயிற்சியில் பங்கு கொள்வோர்களுக்கு விக்கிப்பீடியா தொடர்பான கையேடு ஒன்றை அளித்தல் நல்லது எனவும் தோன்றுகிறது. இம்முறை நான் இன்னும் பயிற்சியளிக்கத் தொடங்கவில்லை. ஆசிரியர் உருவாக்கிய கட்டுரைகளில் நாம் துப்புரவுப் பணிக்கென ஒதுக்கியுள்ள கட்டுரைகளில் சிலவற்றை வாசித்துக் காட்டலாம் என்றிருக்கிறேன். எதனால், எம்மாதிரியான துப்புரவு தேவைப்படுகிறது என ஆசிரியர்கள் புரிந்து கொண்டால் அவர்கள் தவிர்க்க வேண்டியனவற்றை தவிர்ப்பர். நேரப்பற்றாக்குறையும் முக்கிய காரணி. பயிற்சியாளர்களுக்காக அனைவரும் ஒரேமாதிரிப் பயன்படுத்தும் பொதுவான வளங்களும் (Keynote or Powerpoint) அவசியம் எனக் கருதுகிறேன்.

எந்த ஆங்கிலக் கட்டுரை, எந்த வழிமுறையில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை - அனைவரும் அறிந்த வரலாறு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 24 சூன் 2017 (UTC)

J கோடு எனும் கட்டுரையை ஒழுங்கமைத்து, மேம்படுத்த யாராவது முன் வருவார்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:51, 24 சூன் 2017 (UTC)

மொழிபெயர்ப்புக் கருவி பயன்பாடுதொகு

கவனிக்க: இரவி, Antan, நீச்சல்காரன், செல்வா, கனக்சு, தமிழ் பரிதி மாரி, த.சீனிவாசன், காமன்சு சிபி, உலோ.செந்தமிழ்க்கோதை, செம்மல், பார்வதி சிறீ, தகவலுழவன், பரிதிமதி, தியாகு கணேஷ், ஹிபாயத்துல்லா, மணி.கணேசன் மற்றும் அருளரசன்.

மா. செல்வசிவகுருநாதன் கூறியதுபோல், பயிற்சியின்போது, ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புக் கருவிகொண்டு மொழிபெயர்த்துத் தொகுப்பதைத் தவிர்க்கும்படி சொல்ல வேண்டும்.
//ஆங்கிலக் கட்டுரையை கருவி மூலமாக மொழிபெயர்ப்பது சிறந்த பலனைத் தரும் என நான் கருதவில்லை. ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, தங்களுடைய சொந்த மொழியாக்கத்தில் எழுதச் சொல்வதே நல்லது.//
அவ்வாறு கருவிகொண்டு மொழிபெயர்ப்பது சிறந்த பலனைத் தராது என்பது மட்டுமல்லாமல், எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றே தோன்றுகின்றது. இன்று தற்செயலாக, எனது கவனிப்புப்பட்டியலில் வந்த இவ்வாறான இரு கட்டுரைகளைக் கண்டேன்.
 1. இலை கட்டுரையில் செய்யப்பட்டிருந்த மாற்றம் (இங்கு) முன்பு இருந்த கட்டுரையையும் சரியாகப் பார்க்க முடியாததுபோல் செய்துள்ளது. அது கருவியினால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புப் போல்தான் தெரிகிறது. சொற்றொடர்கள் ஒழுங்கில்லாமலும், பொருளற்றும் வந்திருக்கிறது. கருவி ஆங்கிலத்தில் கொடுத்த சொற்கள் மட்டும், தமிங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் தோன்றுகின்றது. ஆங்கிலக் கட்டுரையை கூகிள் மொழிபெயர்ப்புச் செய்தால், கிட்டத்தட்ட இதே போன்ற சொற்றொடர்கள்தான் வருகின்றது.
 2. தடுப்பூசி கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றத்தில் (இங்கு) வழிமாற்றியை எடுத்துவிட்டு, புதிதாகக் கட்டுரையாக்கம் செய்யப்பட்டிருந்தது. அங்கும் சொற்றொடர்களில் பல்வேறு ஒழுங்கின்மைகள். முழுவதுமாக வாசித்துப் பார்த்தால் புரியும்.
இத்தகைய மொழிபெயர்ப்புக்களைத் திருத்துவதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. புதிய கட்டுரைகள் எழுதுவதுபோலத்தால் என்னளவில் தெரிகிறது. ஏற்கனவே சரியாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளில், இவ்வாறான மொழிபெயர்ப்புக்கள் இடைச் செருகப்பட்டால், அந்தக் கட்டுரையும் வாசிக்க உகந்ததல்லாமல் போவதுடன், அதை எழுதிய பயனர்களுடைய உழைப்பும் வீணாகிவிடும். மேலும் மொழிபெயர்ப்புக் கருவிகொண்டு மொழிபெயர்க்கையில், தமக்குப் பரிச்சயம் இல்லாத தகவல்களையும், மொழிபெயர்த்துப் போடலாம் என்று எண்ணிப் போட்டு விடுவார்கள். ஆனால் அதில் இருக்கும் பிழைகளை அவர்களால் திருத்த முடியாது போகலாம்.
எனவே தயவுசெய்து மொழிபெயர்ப்புக் கருவியின் பயன்பாட்டைத் தவிர்க்கவும், அதனால் என்ன பிரச்சனை என்பதையும் பயிற்சியின்போது சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்றி.
--கலை (பேச்சு) 22:01, 23 சூன் 2017 (UTC)
மொழிபெயர்ப்புக் கருவியை பயன்படுத்துவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்பட்டதா? என்பதனை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:45, 26 சூன் 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் content translation tool என்ற மொழிபெயர்ப்புக் கருவியைப் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். இக்கருவி இன்னும் பீட்டா நிலையிலேயே உள்ளது. இதனைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது நல்லதல்ல.--Kanags \உரையாடுக 07:25, 28 சூன் 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன், கலை, Kanags அருள்கூர்ந்து இங்குள்ள உரையாடலைக் கேட்டுப் பாருங்கள். தானியங்கி மொழிபெயர்ப்பை யாரும் பயிற்சிகளில் ஊக்குவிப்பதில்லை. மாறாக, அப்படிப் பயன்படுத்துவது ஏன் அபத்தம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் கட்டுரைகள் நீக்கப்படும் என்பதும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. அதையும் மீறி, சிலர் ஆர்வ மிகுதியில் அப்படியே தானியங்கித் தமிழாக்கங்களை இடும் போது அவற்றை நீக்கவே செய்கிறோம். அவற்றைத் துப்புரவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. ஒரு சிலர் கூகுள் தானியங்கியைப் பயன்படுத்தி பெரும்பாலான உரையைத் தமிழாக்கி உரை திருத்தி கட்டுரையை இடுகிறார்கள். இது எதிர்பார்த்த தரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதனையும் நாம் ஊக்குவிப்பதில்லை. முழுதும் மனித முறையிலேயே தொடக்கத்தில் இருந்து மொழிபெயர்க்குமாறே அறிவுத்துகிறோம்.
ஒரு வேளை உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியையே பயன்படுத்தக் கூடாது என்றால், ஏன் அதனை ஊக்குவிக்கிறோம் என்பதற்கான காரணங்களை விளக்குகிறேன். நாம் விக்கிப்பீடியாவிலேயே உழல்வதால் புதியவர்களுக்கு விக்கிப்பீடியா எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதனை உணர்வதில்லை. பயிற்சிக்கு வருபவர்களில் முதல் முறை கணினியைத் தொடும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட இருக்கிறார்கள். நேரடியாக மணல்தொட்டியிலோ கட்டுரைவெளியிலோ எழுதும் போது குழம்புகிறார்கள். இந்தக் கருவி ஊடாகப் புதிய கட்டுரைகளைப் படைப்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது. மே மாதத்தில் குவிந்த பொருத்தமற்ற நூற்றுக் கணக்கான கட்டுரைகளை ஒப்பிடும் போது, இக்கருவியின் மூலம் பதிவேற்றுவதால் ஏற்படும் நன்மை என்ன?
 1. சரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்
 2. ஏற்கனவே இருக்கிற தலைப்புகளில் மீண்டும் கட்டுரைகள் எழுதாமல் இருத்தல்
 3. ஆங்கில விக்கியிலேயே உள்ளடக்கம் இல்லை என்றால் ஒழிய, மூன்று வரிகளுக்குக் குறையாமல் கட்டுரைகளை எழுதுதல்
 4. பதிப்புரிமைச் சிக்கல் இன்றி சரியான உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல்
 5. தகவல் பெட்டி சேர்த்தல்
 6. மேற்கோள் இடுதல்
 7. பகுப்புகள் இடுதல்
 8. விக்கிதரவு இணைப்பு சேர்த்தல்
 9. சரியான படிமங்களை ஏற்றுதல்
 10. சரியான உள்ளிணைப்புகள் தருதல்
 11. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்கு ஆக்குநர்சுட்டு அளித்தல்
என்று இவை அனைத்தும் பெரும்பாலும் உறுதி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு தலைப்பில் எழுதிய பிறகு அதே போன்ற பிற தலைப்புகளை எளிதில் கண்டுபிடித்து எழுதிக் குவிக்கிறார்கள். எந்த ஒரு முறையானாலும் ஓரிரு பயனர்கள் ஓரிரு கட்டுரைகளில் நாம் பயிற்றுவிப்பதற்கு மாறாகத் தான் செயற்படுவார்கள். ஆனால், ஓரிரு நாட்களில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை ஏற்றுபவர்களின் ஆர்வமே இக்கருவியால் சிக்கல் இல்லை என்பதற்குச் சான்று. நாம் கவலைப்படுமாறான பிழைகளை விடுவோர் இக்கருவி இல்லாமலும் கூட அதே பிழைகளை விடுவர். தற்போது குறுங்கட்டுரைகளாக வருகின்றன என்பது ஒரு குறை தான். ஆனால், இவ்வாறு விக்கிப்பீடியாவில் பங்களிப்பதில் நம்பிக்கை பிறப்பவர்களை அடுத்தடுத்து இன்னும் முக்கியமான தலைப்புகளில் விரிவான கட்டுரைகளைப் படைக்க ஊக்கப்படுத்துவோம். சிலர் தொடர் பங்களிப்பாளர் போட்டியில் கூட பங்கேற்று வருகிறார்கள். ஒரு பயனர் கொஞ்சம் கொஞ்சமாக விக்கி முறைகளைப் புரிந்து செயற்படுவதற்கான கால அவகாசம் தர வேண்டும். எழுதும் முதல் கட்டுரையே முற்றிலும் கச்சிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போதைய கட்டுரைகளில் மொழிபெயர்ப்புத் தரம் மட்டுமே சிக்கலாக இருக்கலாம். இதனால் துப்புரவுப் பணி கூடுகிறது என்பது தான் குறையானால், இக்கருவி பயன்படுத்தாவிட்டால் இன்னும் துப்புரவுப் பணி கூடும் என்பது தான் என் கணிப்பு. கூகுள் மொழிபெயர்ப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு இருக்கிறது. நாம் இக்கருவியைப் பற்றி கூறாவிட்டால் கூட அவர்கள் வழக்கமான தானியங்கித் தமிழாக்கத்தை முயலவே செய்வார்கள்.
இக்கருவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பீட்டா நிலையில் தொடர் முன்னேற்றத்தில் உள்ளது. உலகெங்கும் பல மொழி விக்கிப்பீடியாக்களையும் சேர்த்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பீட்டா நிலையில் உள்ள கருவியில் வழு இருந்தால் (அதாவது எழுத்துகள் பிய்வது, வார்ப்புருக்கள் சிதைவது) போன்ற சிக்கல்கள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டி வழு திருத்த வேண்டுவோம். ஆனால், இக்கருவி பீட்டா நிலையை விட்டு வெளியேறி பொதுப் பயன்பாட்டிற்கு வந்தாலும் மொழிபெயர்ப்புத் தரத்துக்குக் கருவி பொறுப்பாகாது. இக்கருவி பயன்பாட்டுக்கு ஏற்ற தரத்தில் உள்ளது என்பது தான் என் கருத்து. பீட்டா நிலையில் உள்ள கருவிகளை ஒருவர் விரும்பிப் பயன்படுத்த முடிவு எடுக்கவோ தடை செய்யவோ தேவை இல்லை. --இரவி (பேச்சு) 08:24, 28 சூன் 2017 (UTC)
இரவி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் இதுவரையில் இந்தக் கருவியைப் பயன்படுத்தாததால், இதன் பயனை நான் அறியவில்லை. ஆனால், தகவல்பெட்டி சேர்க்கும் போது தலைப்புகள் அனைத்தும் ஒரே வரியில் வருவது இந்தக் கருவி தான் காரணமா எனத் தெரியவில்லை. அத்துடன் சில தேவையற்ற நிரல்களும் சேர்க்கப்படுகின்றன. இவ்வழுக்கள் படிப்படியாகக் களையப்படும் என எதிர்பார்க்கலாம். நன்றி--Kanags \உரையாடுக 08:47, 28 சூன் 2017 (UTC)

இரவி, தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

 1. நான் உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியின் பயன்பாடு குறித்துதான் எனது கவலையைத் தெரிவித்திருந்தேன். நான் நல்லெண்ண அடிப்படையில்தான் எனது கருத்தை பதிவிட்டேன். பயிற்றுவித்தலில் இருக்கும் சிரமங்கள் குறித்து நன்கு அறிவேன். நடைமுறையில் எது சாத்தியமோ அதன்படியே செய்ய முடியும் என்பதனையும் ஏற்கிறேன். ஏராளமானக் கட்டுரைகள் மொழிமாற்றம் மட்டுமே செய்யப்பட்டு, பதிவிடப்பட்டிருந்தன. பயிற்சி வகுப்புகளில் என்ன நடக்கிறது என்பதனை அறிய முடியாமல் இருந்தது. நான் பலமுறை பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்தும், தகவல்களை பெற இயலவில்லை. இதனால் சற்று அயர்ச்சி ஏற்பட்டது உண்மை. நமது வழக்கமான பயனர்கள் பலரும் இப்போது தமது சொந்த வேலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதால், தங்களது பங்களிப்பினை தர இயலாத நிலையில் உள்ளதாக உணர்கிறேன். குறைவான மனித வளத்துடன் இவ்வளவு கட்டுரைகளை துப்புரவு செய்ய வேண்டியிருப்பதால், இத்திட்டத்தின் தரம் குறித்து எதிர்மறையான விமரிசனங்கள் வந்துவிடக் கூடாது எனும் கவலை எனக்கு ஏற்பட்டது. இப்போதும் எனது ஒரு வேண்டுகோள்:- உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரை எழுதிய பிறகு, முடிந்தளவிற்கு கட்டுரையாளரே படித்து, முடிந்தளவு முன்னேற்றம் செய்யுமாறு அவர்களைக் கேட்கலாம்.
 2. எழுதும் முதல் கட்டுரையே முற்றிலும் கச்சிதமாக இருக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. நானும் தவழ்ந்து, நின்று, நடந்து கற்றவன்தானே. இன்னமும் ஓடும் அளவு கற்கவில்லை! ஒவ்வொருவரிடம் அவரின் பேச்சுப் பக்கத்தில் பேசி, உதவிகள் செய்திட தயாராக இருக்கிறேன்.
 3. புதியவர்களுக்கு விக்கிப்பீடியா எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதனை நான் ஏற்கனவே நன்கு அறிவேன். பயிற்சியாளர்கள் திறமை குறித்தும் எனக்கு எந்த ஐயமும் இல்லை. நான் உணரும் விடயங்களை நல்லெண்ண நோக்கத்தில்தான் பதிவு செய்கிறேன். தொடர்ந்து என்னால் இயன்ற துப்புரவுப் பணிகளை மேற்கொள்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 30 சூன் 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன் புரிதலுக்கு நன்றி. மொழிபெயர்ப்புக் கருவி பயன்பாட்டை இந்தச் சுற்றிப் பயிற்சியில் அவ்வளவாவ வலியுறுத்தவில்லை. பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் பகுப்பில் உள்ள கட்டுரைகளையும் வேலூர் மாவட்டத்தில் இருந்து கருவி பயன்படுத்தி வந்திருந்த தலைப்புகளையும் ஒப்பிடுங்கள். ஏன் கருவியின் பயன்பாட்டை நான் பரிந்துரைக்கிறேன் என்பதற்கு இது தான் காரணம். கருவி பயன்படுத்தி ஒரே மாதிரியான கட்டுரைகள் வரலாம். ஆனால், சிறிதளவு துப்புரவு செய்தால் அவற்றில் 90% கட்டுரைகளைத் தக்க வைக்கலாம். ஆனால், கருவியின் பயன்பாடின்றி வரும் கட்டுரைகள் பெரிதும் பொருத்தற்று இருக்கின்றன. அவற்றில் 40% கட்டுரைகளைத் தக்க வைத்தாலே பெரிய விசயம். அதற்கும் பேரளவு துப்புரவு தேவைப்படும். --இரவி (பேச்சு) 07:27, 6 சூலை 2017 (UTC)
இந்த உள்ளடக்க மொழிபெயர்ப்புக்கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்று புரியவில்லை. எனது விருப்பத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட நிலையில்தான் உள்ளது. ஆனால் எங்கே, எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. --கலை (பேச்சு) 11:05, 9 சூலை 2017 (UTC)
உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி தமிழ் விக்கியில் வேலை செய்கிறது. ஆங்கில விக்கியில் எனக்கு வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 11:19, 9 சூலை 2017 (UTC)
தொகுப்புப் பெட்டியில் ஏதாவது icon வருமா? எனக்கு அப்படி எதுவும் வரவில்லையே?--கலை (பேச்சு) 13:22, 9 சூலை 2017 (UTC)

பயிற்சியாளர்தொகு

இரண்டாம் சுற்று பயிற்சியில் வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் விக்கிக்கு புதியவர்களான சிலரை (அருமபுமொழி,சங்கர்‌‌‌‌ அல்ல‌‌‌) பயிற்சியாளராக SCERTஅனுப்பியுள்ளது. அவர்கள் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி கட்டுரை எழுத மட்டுமே இரண்டு நாள் பயிற்சி அளித்தனர்.அதுவும் தமிழக சட்டமன்ற உறுப்பினகளை பற்றி மொழி பெயர்க்க பயிற்சி அளித்தனர். வேறு விக்கியின் அடிப்படைகளில் எந்த கவனமும் செலுத்தவில்லை. ஆனால் அந்த மாவட்டத்தில் பதிவேற்றப்பட்ட 137 கட்டுரைகளில் தமிழக சட்டமன்ற உறுப்பினகள் பகுப்பில் ஒரே ஒரு கட்டுரை தான் எழுதப்பட்டுள்ளது. சுப துரைராஜன் என்ற அக்கட்டுரையும் மொழிபெயர்ப்புக் கருவி இல்லாமல் எனது வழிகாட்டுதல் படி எளிய மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட்டது. விழலுக்கு இறைத்த நீராக பயிற்சி அமையாமல் இருக்க எல்லா பயிற்சிகளிலும் விக்கியர் ஒருவராவது இருக்க முயற்சிக்கவும். விக்கியில் தாம் சார்ந்த துறைகளை பற்றி இயல்பாக எழுதக்கூடியவர்கள் உருவாக வேண்டும். அவ்வகையில் இயந்திரத்தனம் இல்லாத தரமான கட்டுரைகளை எழுதிய வகையில் நான் அறிந்த வரை வேலூரை விட தேனியே முதலிடம் வகிக்கிறது.--−முன்நிற்கும் கருத்து Hibayathullah (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கிப்பீடியா குறித்து ஓரளவு பரந்த அறிமுகம் உள்ள ஆசிரியர்களை மட்டுமே பிற மாவட்டங்களுக்குப் பயிற்சியாளராக அனுப்ப பரிந்துரைத்தோம். எனினும், பல முனை ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் ஆர்வமுடைய மற்ற சில ஆசிரியர்களும் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டார்கள். இது தவிர்த்திருக்கப்பட வேண்டியதே. --இரவி (பேச்சு) 19:38, 7 சூலை 2017 (UTC)

தலைப்புகளில் புள்ளிதொகு

இரவி, தமிழ் பரிதி மாரி, த.சீனிவாசன், தகவலுழவன், தியாகு கணேஷ், ஹிபாயத்துல்லா, மணி.கணேசன்... தலைப்பில் நிறுத்துப் புள்ளி கடைப்பிடிப்பதில் இருக்கவேண்டிய சீர்மை சரிவர புரிந்துகொள்ளப்படாததால் பெரும் வேலைப் பளு ஏற்பட்டுள்ளது. அடுத்தச் சுற்று பயிற்சியில் இதனை வலியுறுத்தி கற்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:56, 24 சூன் 2017 (UTC)

தலைப்புகளில் வரும் நிறுத்துப்புள்ளி இடருக்கு, ஒரு எடுத்துக்காட்டு தருக. --உழவன் (உரை) 03:12, 24 சூன் 2017 (UTC)
 1. ஒன்று
 2. இரண்டு
 3. மூன்று --

இன்று மட்டும் சுமார் 50 கட்டுரைகளை இவ்விதம் நகர்த்தியிருக்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 24 சூன் 2017 (UTC)

நேற்று தொடர்ந்து 10 மணி நேரம் மின்சாரம் இல்லை. அதனால் உங்களுடன் உடன் இணைய முடியவில்லை. குறிப்புகளுக்கு நன்றி. புள்ளிகளை தவறாக கையாளுதல் குறித்து நானும் விதிகளை அறிமுகப்படுத்துகிறேன். ஒரு முதுநிலை பேராசிரியர் பின்வருமாறு செய்யலாமே?எனக் கூறினார். அதனை நடைமுறை படுத்தலாமா? யாதெனில், புள்ளியை தவறாக வைப்பதால், பெயரின் தொடக்க எழுத்துக்குப்பிறகு புள்ளியை வைக்காமல், ஆனால், ஒரு இடைவெளி விட்டு வைக்கலாமா? எடுத்துக்காட்டு, மா செல்வசிவகுருநாதன் --உழவன் (உரை) 02:39, 25 சூன் 2017 (UTC)
முற்றிலும் தவறு. தஞ்சை இராமையாதாஸ் என எழுதலாம். ஆனால் த இராமையாதாஸ் என எழுதுவது வழக்கமில்லை. அது இலக்கணத் தவறும் கூட. புள்ளியுடன் எழுதுவதில் என்ன சிரமம் உள்ளது? அது மட்டுமல்லாமல், பலர் சொற்களுக்கிடையே இடைவெளி விடுவதில்லை. உ+ம்: //வல்லவர்.புரசைவாக்கம்,மயிலாப்பூர்,புதுச்சேரி,மதுரை முதலான இடங்களில்// பல தமிழ் பேராசிரியர்களும் இவ்வாறான தவறுகளுடன் எழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 02:48, 25 சூன் 2017 (UTC)

பெயர்களை எழுதும்போது வைக்கப்படும் நிறுத்துப் புள்ளி நடைமுறையை இப்போது மாற்றுவது உகந்ததல்ல. ஆங்கில விக்கி, தமிழ் விக்கி ஆகியவற்றில் இவ்விதமே நடைமுறையில் உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 25 சூன் 2017 (UTC)

User:Info-farmer, இங்கு பாருங்கள். எத்தனைக் கட்டுரைகளில் தலைப்பினை நகர்த்த வேண்டியதுள்ளது என்பதனை தெரிந்துகொள்ளலாம்; மலைப்பாக இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 25 சூன் 2017 (UTC)

நன்றி. கவலைக் கொள்ளற்க. இதற்கான நிரலை சென்ற வருடமே, சீனி உருவாக்கி விட்டார். அதனை வங்க, தமிழ் விக்கிமூலத்தில் நடைமுறை படுத்தியுள்ளோம். சிறப்பு அணுக்கம்(sysop) பெற்றவரே இந்நிரலை இயக்க முடியும். இதுபோன்ற பகுப்புகள் இருப்பின், இந்த பக்க நகர்த்துதலை தானியங்கி கொண்டு முடிப்பேன். அந்த பைத்தான் நிரலை, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்ப மாற்ற இப்பொழுது போதுமான நேரம் இல்லை என்பதே நிலை. ஆனால், புள்ளியிடாமல் இடைவெளி இட்டு பெயரொன்றை எழுதும் நடைமுறை தமிழக நூல்களில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அதுபற்றி பின்னர் கலந்துரையாடுவோம். வணக்கம்.--உழவன் (உரை) 03:20, 25 சூன் 2017 (UTC)

//புள்ளியிடாமல் இடைவெளி இட்டு பெயரொன்றை எழுதும் நடைமுறை தமிழக நூல்களில் இருப்பதாகத் தெரிகிறது.// இவ்வாறெதுவும் தனிப்பட்ட நூல்களில் இருந்தாலும், அது சர்வதேச வழக்கிற்கு ஏற்புடையதல்ல. இதுபற்றிக் கலந்துரையாடி நேரம் மெனக்கெட வேண்டாம்.--Kanags \உரையாடுக 03:25, 25 சூன் 2017 (UTC)

தயவுசெய்து புள்ளி, இடைவெளி, அடைப்புக் குறிகள் குறித்து நன்கு பயிற்றுவிக்கவும். இதுவே எனது இறுதி வேண்டுகோள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 25 சூன் 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், இயன்றளவு பெயரிடல் மரபு உள்ளிட்ட விக்கி நடைமுறைகளை பயிற்சியின் போதும் யூடியூபு விளக்கப் படங்களின் மூலமும் வலியுறுத்துகிறோம். தலைப்பில் புள்ளிகள் போன்ற சில பணிகளைத் தானியக்கமாகவும் செய்ய முனைவோம். கவனிக்க: @Tshrinivasan:--இரவி (பேச்சு) 19:38, 7 சூலை 2017 (UTC)

25 சூன் 2017 கூகுள் வழியில் கலந்துரையாடல்தொகு

நிறைய உரையாட வேண்டியுள்ளது. பயிற்சியாளர்களும் அனைத்து விக்கிப்பீடியர்களும் கலந்து பேசி பயிற்சி நடக்கும் சூழலைப் புரிந்து கொள்வதும் அடுத்த கட்டப் பயிற்சிகளுக்குத் திட்டமிடுவதும் அவசியம். நாளை ஞாயிறு மாலை இந்திய மணி நேரம் 7:30 அளவில் கூகுள் Hangoutல உரையாடுவோமா?--இரவி (பேச்சு) 03:52, 24 சூன் 2017 (UTC)
  விருப்பம் --இரா. பாலாபேச்சு 03:55, 24 சூன் 2017 (UTC)
  விருப்பம்-- ThIyAGU 03:33, 25 சூன் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிகள் குறிந்த கூகுள் உரையாடல் இன்று நடைபெறுகிறது (இன்னும் 15 நிமிடங்களில்). உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு யூடியூபில் கிடைக்கும். ஆர்வமுடைய அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன். விவரங்கள் இங்கு. கூகுள் உரையாடலுக்கான வலைமுகவரி நிகழ்வு தொடங்க ஓரிரு மணித்துளிகளுக்கு முன் பகிரப்படும். கவனிக்க: @Kanags, Info-farmer, மணி.கணேசன், Selvasivagurunathan m, Hibayathullah, Thamizhpparithi Maari, மற்றும் Parvathisri:--இரவி (பேச்சு) 13:47, 25 சூன் 2017 (UTC)

புள்ளிவிவரம்தொகு

@Shanmugamp7: பின்வரும் மாவட்டங்களுக்கும் உங்கள் தானியங்கியை ஏவி மாவட்ட வாரியாகப் பகுப்புகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் தவிர்க்க வேண்டும். இதே குறியீடுகள் சிறிய எழுத்துகளில் இருந்தாலும் பகுப்பினைச் சேர்க்க வேண்டும்:

 1. ARY - அரியலூர்
 2. CHN - சென்னை
 3. CBE - கோயம்புத்தூர்
 4. CUD அல்லது பெயரின் தொடக்கத்தில் TNSE CUD - கடலூர்
 5. DGL - திண்டுக்கல்
 6. DPI - தர்மபுரி
 7. ERD - ஈரோடு
 8. KKD அல்லது KGI - கிருஷ்ணகிரி
 9. KKM - கன்னியாகுமரி
 10. KPM - காஞ்சிபுரம்
 11. KRR அல்லது KAR - கரூர்
 12. MDU - மதுரை
 13. NGP அல்லது NGT - நாகப்பட்டினம்
 14. NKL - நாமக்கல்
 15. NLG- நீலகரி
 16. PBLR அல்லது PLR - பெரம்பலூர்
 17. PDKT அல்லது PDK - புதுக்கோட்டை
 18. RMD - இராமநாதபுரம்
 19. SLM அல்லது SALEM - சேலம்
 20. SVG - சிவகங்கை
 21. THN - தேனி
 22. TLR - திருவள்ளூர்
 23. TNJ - தஞ்சாவூர்
 24. TNV - திருநெல்வேலி
 25. TPR - திருப்பூர்
 26. TRY - திருச்சி
 27. TUT - தூத்துக்குடி
 28. TVM - திருவண்ணாமலை
 29. TVR - திருவாரூர்
 30. VLR - வேலூர் (ஏற்கனவே தானியங்கி மூலம் பகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. சிறிய எழுத்துகளுக்கு மட்டும் சேர்க்க வேண்டும்)
 31. VNR - விருதுநகர்
 32. VPM - விழுப்புரம்

@Parvathisri, Thamizhpparithi Maari, மற்றும் Thiyagu Ganesh: மாவட்டங்களுக்கான குறியீடுகளைச் சரி பார்த்து விடுங்கள். ARNI என்றும் சில பெயர்கள் முடிகின்றன. அது என்ன மாவட்டம்? அருணை என்கிற திருவண்ணாமலையா? வேறு ஏதும் குறியீடுகள் விட்டுப்போயிருந்தாலும் இணைக்கவும்--இரவி (பேச்சு) 21:16, 24 சூன் 2017 (UTC)

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 01:34, 29 சூன் 2017 (UTC)
சண்முகம், தையல் இயந்திரம், ஆனி ஆகிய கட்டுரைகளில் இந்தப் பகுப்புகள் ஏன் இணைந்தன என்பதனைக் கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:56, 30 சூன் 2017 (UTC)
இலக்கு பக்கம் வழிமாற்றாக இருந்தால் AWB தானாக மூலப்பக்கத்தில் பகுப்பை சேர்க்கிறது. அடுத்த முறையில் இருந்து அதை சரி செய்கிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 14:07, 30 சூன் 2017 (UTC)

புதிய கணக்கு உருவாக்குநர் அணுக்கம்தொகு

How to create many user accounts during Wikipedia workshops

@Shanmugamp7: இவ்வாறான பயிலரங்குகளில் முதலில் செய்யும் பணியே கணக்கு தொடங்குதல் தான். ஆனால், பல்வேறு சிக்கல்களால் மிகுந்த கால தாமதம் ஆக்கக் கூடியதாகவும் பயனர்களை விரக்தி அடையச் செய்வதாகவும் இவ்வனுபவம் உள்ளது. எனவே இதனைத் தவிர்க்க, வழமையாகப் பயிற்சியாளர்களாகச் செல்லும் நம்பிக்கைக்கு உரிய அனைவருக்கும் கால வரையறையின்றி இவ்வணுக்கத்தை வழங்கலாம். அவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லையெனில், குறைந்தது ஒரு மாத காலத்துக்கு அணுக்கத்தை அளிக்கலாம். பின்வருபவர்களுக்கு அணுக்கம் தேவைப்படும்:

 1. Balurbala
 2. Tshrinivasan
 3. உலோ.செந்தமிழ்க்கோதை
 4. Neechalkaran
 5. Hibayathullah
 6. Thiyagu Ganesh
 7. மணி.கணேசன்
 8. TNSE Mahalingam VNR

இவ்வணுக்கத்தைப் பயன்படுத்தி எவ்வாறு புதிய கணக்குகளை உருவாக்குவது என்பதனை அறிய வலது பக்கம் உள்ள விளக்கப்படத்தைக் காணுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 22:55, 24 சூன் 2017 (UTC)

பல பயனர்கள் தமிழ் கணிமைக்குப் புதியவர்கள் . தமிழ் தட்டச்சு என்பது தெரியாது. ஆனால், துறைசார்ந்த அனுபவங்கள் அதிகம். எனவே, பயனர் பெயர் உருவாக்குதலில், அரசு விதியைப் பின்பற்றாமல், பிழைகளைச் செய்துள்ளனர். அவர்களுக்கு உடன் பயனர் பெயரை மாற்ற இயலுமா? ஒரு நிகழ்விடத்தில் 5 - 10 நபர்களாவது இந்நிலையில் உள்ளனர். தேவையான ஒளிபரப்பு வசதி இல்லாமையால்( projector), ஒவ்வொருவராக கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் மற்றவர் இத்தொடக்கப் பிழையை செய்து விடுகின்றனர். --உழவன் (உரை) 02:54, 25 சூன் 2017 (UTC)

@Ravidreams: ஒரு மாதத்திற்கு கணக்கு உருவாக்குவோர் அணுக்கத்தினை இப்பயனர்களுக்கு User:Matiia வழங்கியுள்ளார். @Info-farmer: பயனர் பெயர் மாற்ற வேண்டுமெனில் குறிப்பிட்ட பயனர் தனது கணக்கு மூலம் புகுபதிகை செய்து இப்படிவத்தை பூர்த்தி செய்யலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:26, 25 சூன் 2017 (UTC)
@Shanmugamp7:, பயிற்சியாளர்களாகச் செல்லும் பின்வரும் பயனர்களுக்கும் இவ்வணுக்கம் தேவை:
 1. Mohammed Ammar
 2. TNSE sankarkuppan vlr
 3. Srithern
 4. எஸ்ஸார்
 5. Arulghsr
 6. TNSE Arumbumozhi vlr
நன்றி--இரவி (பேச்சு) 17:17, 27 சூன் 2017 (UTC)
செயற்படுத்தியமைக்கு நன்றி @Shanmugamp7:--இரவி (பேச்சு) 19:40, 7 சூலை 2017 (UTC)

கருத்துகள், பரிந்துரைகள் தேவை...தொகு

வணக்கம். பள்ளிகள் குறித்தான கட்டுரைகளை ஏற்றுக்கொள்வது குறித்து மற்ற பயனர்களின் கருத்துகள் / பரிந்துரைகள் தேவை. உதாரணம்:- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அல்லிகுண்டம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:15, 1 சூலை 2017 (UTC)

 1. நல்வணக்கம். தமிழகப் பள்ளிகள் குறித்த செய்திகளை விக்கி நடைக்கேற்ப தக்கச் சான்றுகளுடன் இற்றைச் செய்யப்படும் கட்டுரைகளை ஏற்பது நல்லது. இவற்றை தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள் என்னும் பகுப்பின்கீழ் வகைமைப்படுத்துதல் நலம். அண்மையில் நடைபெற்றுவரும் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் வட்டார அளவில் காணப்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கல்லூரிகள் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்திட தக்க வழிகாட்டுதல் இன்றியமையாதது. நன்றி. மணி.கணேசன்
 2. இது பயிலரங்கு கட்டுரை. ஒரு புதிய பங்களிப்பாளர் தொடர்ந்து பயில, அவர் எழுதிய முதல் ஓரிரு கட்டுரைகளைக் குறிப்பிட்ட காலம் வரை பேணுதல் நலம். ஏனெனில், இப்பயிலரங்குகளை தொடர்ந்து, தமிழக அரசு நடத்துவதற்கான சூழல் எழுந்துள்ளது. புதிய வகுப்புகளில் இது போல கட்டுரைகளை விட, பாடத்திட்ட அடிப்படையில் எழுதினால், அரசுத்தேர்வுகள், கல்லூரி மாணவர்களுக்கும் பயனாகும் கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கலாம். நீக்குதலிலும், குறிப்பிடதக்கமையிலும் அவசரம் வேண்டாம் என முன்மொழிகிறேன்.--உழவன் (உரை) 03:47, 3 சூலை 2017 (UTC)
மா. செல்வசிவகுருநாதன், தொடர்புடைய உரையாடலுக்கு, காண்க - பகுப்பு பேச்சு:பள்ளிகள்--இரவி (பேச்சு) 19:32, 7 சூலை 2017 (UTC)

திட்டத்திற்கான துணைப் பக்கம்தொகு

கட்டுரைகளில் செய்யப்படும் துப்புரவு, மேம்பாடுகள் தொடர்பான உதவிக் குறிப்புகள், அனுபவங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள துணைப் பக்கத்தில் இடப்பட்டு வருகின்றன:

விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:14, 4 சூலை 2017 (UTC)

வேளாண்மை பற்றிய கட்டுரைகள்தொகு

வணக்கம். வேளாண்மை பற்றி ஏராளமான கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரையாக அல்லாது எழுதப்படுகின்றன. வேளாண்மைப் பாடத்தைப் படித்த ஆசிரியர்கள் இதனை எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். மேலும் இந்த ஆசிரியர்கள் பயிற்சியாளர்களாகவும் சென்று ஊக்குவிப்பதாக அனுமானிக்கிறேன். வேளாண்மை குறித்து கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதப்பட்டால் நன்று. இவர்களை அடையாளங் கண்டு, நெறிப்படுத்துவது எப்படி என்பது குறித்து பரிந்துரைகள், வழிநடத்தல் தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:44, 5 சூலை 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், B.Sc Agri முடித்த ஆசிரியர்கள் தமிழகப் பள்ளிகளில் வேளாண்மையைத் தொழிற்பாடமாகக் கற்பிக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இத்தகைய ஆசிரியர்கள் எழுவர் இப்பயிற்சிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேளாண்மையைத் தொழிற்கல்வியாக கற்றவர்கள் பல துறை கட்டுரைகளை எழுதக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பு. வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பலருக்கு சென்னையில் தனிச்சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் வேறு மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்கச் சென்றதாகத் தகவல் இல்லை. பெரும்பாலும் இவர்கள் எழுதும் கட்டுரைகள் உழவர்களுக்காக நடத்தப்படும் மாத இதழ்களில் வெளிவரும் கட்டுரைகள் போலவே உள்ளன. அவை பெம்பாலும் பதிப்புரிமை மீறல் கொண்டதாகவும் உள்ளன. இவர்களில் பலர் அண்மையிலேயே ஆசிரியப் பணிக்குச் சேர்ந்திருக்கலாம். வழமையான ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் தகவல் நுட்பப் பயிற்சி போன்றவை இவர்களுக்கு அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. நான் கண்டவரை இவர்களில் பலரும் கணினிகளைக் கையாளவும் தடுமாறுகிறார்கள். கவனிக்க: @Thamizhpparithi Maari:--இரவி (பேச்சு) 22:50, 5 சூலை 2017 (UTC)

இரவி, தகவல்களுக்கு நன்றி! அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளிலும் வேளாண்மை குறித்தான கட்டுரைகள் இருப்பதன் காரணம் இப்போதே புரிந்தது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் குறுவை சாகுபடி, மானாவாரி விவசாயம் ஆகிய பதங்களை விளக்கும் வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டால் மிகவும் பயனளிப்பதாக இருக்கும். அண்மையக் காலத்தில் தமிழகத்தில் வேளாண்மையின் முக்கியத்துவம் உணரப்பட்டு வரும் சூழலில், இத்துறை குறித்தான கலைக்களஞ்சியக் கட்டுரைகள் உருவானால் தமிழ் விக்கிக்கு மேலும் பெருமை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:14, 5 சூலை 2017 (UTC)

தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - எண்ணிக்கை அறிக்கைதொகு

http://ec2-54-244-78-106.us-west-2.compute.amazonaws.com/article-counts-in-category/csv-to-html-table/

Return to the project page "மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017".