விவிலிய நூல்களின் பட்டியல்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ விவிலிய நூல்கள் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
விவிலிய புத்தகங்கள் (நூல்கள்) யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரேய விவிலியம் என்று கூறுவதும் உண்டு.
கிறித்தவர்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கும் விவிலிய நூல் தொகுதி இயேசு கிறிஸ்துவின் போதனையை உள்ளடக்கிய பகுதியாகிய நற்செய்தி நூல்களையும், அப்போதனையின் அடிப்படையில் அமைந்த வேறு நூல்களையும் கொண்டுள்ளது.
புதிய ஏற்பாட்டு நூல்கள் எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தமட்டில், கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் புரடஸ்தாந்து சபைகளைவிட அதிகமான சில நூல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நூல்கள் எபிரேய மொழியிலன்றி, கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.
பழைய ஏற்பாடு
தொகுபுதிய ஏற்பாடு
தொகுபுதிய ஏற்பாட்டில் உள்ள 27 நூல்களையும் எல்லாக் கிறித்தவ சபைகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றின் வரிசை அமைப்பு மட்டும் சில வேளைகளில் மாறுபடுகிறது. கத்தோலிக்கம், கிரேக்க மரபுவழி சபை, புரடஸ்தாந்தம் ஆகிவை ஒரே வரிசைமுறையைக் கொண்டுள்ளன. அர்மீனிய, எத்தியோப்பிய மரபுகள் வேறு வரிசைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.
அட்டவணைக் குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 எபிரேயர், யாக்கோபு, யூதா, திருவெளிப்பாடு ஆகிய நான்கு விவிலிய நூல்களை ஏற்பது பற்றிச் சிறிது தயக்கம் இருந்தாலும், மார்ட்டின் லூதர் தாம் பதிப்பித்த செருமானிய விவிலியத்தில் அவற்றைச் சேர்த்தே பதித்தார்.
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பாகும்
- ↑ 2.0 2.1 எஸ்ரா மற்றும் நெகேமியா நூல்களை யூத விவிலியம் ஒன்றெனக் கொள்ளும்
- ↑ 3.0 3.1 103 வசனங்கள் கத்தோலிக்க மற்றும் மரபுவழி சபை விவிலியத்தில் மேலதிகமாக உள்ளன
- ↑ 4.0 4.1 4.2 4.3 உட்பிரிவின் படி இவ்வரிசை மாறும்
- ↑ கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றெங்கும் காணப்படாத 151ஆம் திருப்பாடலைச் சேர்த்துக்கொள்கிறது
- ↑ கத்தோலிக்க, புரடஸ்தாந்த விவிலியங்களில் காணப்படுவதில்லை
- ↑ 7.0 7.1 கத்தோலிக்க விவிலியத்தில் 6ஆம் அதிகாரம் (எரேமியாவின் கடிதம்) அதிகமாக உள்ளது. யூத விவிலியம் மற்றும் புரடஸ்தாந்த விவிலியத்தில் இந்நூல் இடம் பெறவில்லை
- ↑ Britannica 1911
- ↑ மரபுவழி திருச்சபைகளில் இது தனி நூலாய் உள்ளது
- ↑ New English Translation of the Septuagint
- ↑ 11.0 11.1 கத்தோலிக்க, மற்றும் கீழை மரபு சபை விவிலியங்களில் தானியேல் நூலோடு மூன்று இணைப்புகள் மேலதிகமாக உள்ளன. அவை இளைஞர் மூவரின் பாடல், சூசன்னா, பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும் என்பவையாகும். இவை புரடஸ்தாந்த பழைய ஏற்பாட்டில் இல்லை.
- ↑ இந்நூல்கள் கிறித்தவ விவிலியத் திருமுறையில் வரலாற்று மற்றும் ஞான நூல்கள் வரிசையில் உள்ளன.
- ↑ அரமேயம் அல்லது எபிரேய மொழியிலும் எழுதப் பட்டிருக்கலாம்.
- ↑ எபிரேய மொழியிலிருந்து லூக்காவால் மொழிபெயர்க்கப்பட்டது என்போரும் உளர்