முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஷேன் வாட்சன்

(ஷேன் வற்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷேன் ராபர்ட் வாட்சன் (Shane Robert Watson, பிறப்பு: சூன் 17, 1981, இப்ஸ்விச், குயின்ஸ்லாந்து) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை மித விரைவு வீச்சாளர் ஆவார்,2002 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[1] அப்போது அவர் பன்னாட்டு இருபது20 போட்டியின் மட்டையாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.[2][3][4] ஆத்திரேலியாவின் பொற்காலமாகக் கருதப்படும் 2000 களில் ஓய்வுபெற்ற கடைசித் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[5][6][7]

ஷேன் வாட்சன்
Shane Watson.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஷேன் ரொபேட் வற்சன்
பட்டப்பெயர் வற்றோ
பிறப்பு 17 சூன் 1981 (1981-06-17) (அகவை 38)
இப்ஸ்விச், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
உயரம் 1.83 m (6 ft 0 in)
வகை சகலதுறை ஆட்டக்காரர், (ஆரம்பத் துடுப்பாளர்)
துடுப்பாட்ட நடை வலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 391) 2 ஜனவரி, 2005: எ பாகிஸ்தான்
கடைசித் தேர்வு 20 பெப்ரவரி, 2014: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 148) 24 மார்ச், 2002: எ தென்னாபிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி 2 நவம்பர், 2013:  எ இந்தியா
சட்டை இல. 33
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001–2004 டாஸ்மேனியன் டைகர்ஸ்
2004–2009 குயின்ஸ்லாந்து புல்ஸ்
2005 ஹாம்ப்ஷயர்
2008– ராஜஸ்தான் ராயல்ஸ்
2009– நியூசவுத்வேல்ஸ் புளூஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.ப.து.மு.தபட்டியல் அ
ஆட்டங்கள் 51 173 124 241
ஓட்டங்கள் 3,343 5,256 8,822 7,165
துடுப்பாட்ட சராசரி 36.33 41.71 43.67 38.72
100கள்/50கள் 4/22 9/30 20/49 11/41
அதிகூடிய ஓட்டங்கள் 176 185* 203* 185*
பந்து வீச்சுகள் 4,705 6,000 11,116 8,010
வீழ்த்தல்கள் 68 162 202 208
பந்துவீச்சு சராசரி 31.83 30.01 28.77 31.99
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 3 0 7 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 6/33 4/36 7/69 4/36
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 33/– 59/– 95/– 79/&ndash

20 பெப்ரவரி, 2014 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் இருபது20 போட்டிகளில் வாட்சன் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். போர்ப்ஸ் இதழின்படி 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகள் வரை அதிகம் சம்பாதித்த இந்தியரல்லாத துடுப்பாட்ட வீரர் ஆவார்.[8][9][10]

இந்தியன் பிரீமியர் லீக்தொகு

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் துவக்க ஆண்டான 2008 ஆம் ஆண்டில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை 125,000 அமெரிக்க டாலர் மதிப்பில் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரில் இவர் மட்டையாளராகவும், பந்து வீச்சாளராகவும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 14 போட்டிகளில் விளையாடிய இவர் இதில் நான்குமுறை ஐம்பது ஓட்டங்களை எடுத்துள்ளார். நான்கு முறை ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.மேலும் 17 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். தொடர்நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.[11] இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் மாத்தியூ எய்டனுக்கு இடம் கிடைத்தது. அந்தச் சமயம் அவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் ஆத்திரேலிய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பின் அந்தத் தொடரில் துவக்கவீரராக களம் இறங்கினார்.[12]

ஆத்திரேலிய தேசிய அணிக்காக விளையாடியதாலும், காயம் ஏற்பட்டதாலும் இவரால் இரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவகாலத்தில் பங்கேற்க இயலவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. பின் 2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மீண்டும் அதே அணிக்காக விளையாடினார். ஷேன் வோர்னையும் அந்த அணி தக்கவைத்தது.[13]

ஏப்ரல் 22, 2013 ஆம் ஆண்டில் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான் போட்டியில் தனது முதல் இருபது20 போட்டியில் நூறு (துடுப்பாட்டம்) அடித்தார். இந்தப் போட்டியில் 61 பந்துகளில் 101 ஓட்டங்கள் அடித்தார். இதில் 6 நான்குகளும், 6 ஆறுகளும் அடங்கும். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இவர் தொடர்நாயகன் விருதினை வென்றார்.

2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் அணி நிர்வாகத்தின் கொள்கையின் படி மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[10][14][15][16] அந்த பருவகாலத்தில் அதிக பட்ச விலைக்கு இவரை ஏலத்தில் எடுத்தனர். மேலும் அந்தப் பருவத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[17]

ஏப்ரல் 20, 2018 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நூறு அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.


சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேன்_வாட்சன்&oldid=2721479" இருந்து மீள்விக்கப்பட்டது