அஜய் ராஜ்
அஜய் ராஜ் (Ajay Raj) இந்திய நடிகராகவும் நடன இயக்குநராகவும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். நடன இயக்குநராக பணிபுரியும் போது, அஜய் அகத்தியனின் செல்வம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சென்னை 600028 (2007) இல் நடிப்பதற்கு முன்பு, இயக்குநர் வெங்கட் பிரபுவின் குழுவினருடன் தொடர்புடைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.[1][2][3]
அஜய் ராஜ் | |
---|---|
பிறப்பு | நாகராஜன் 21 பெப்ரவரி 1982 சென்னை |
பணி | நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நடன இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
தொழில்
தொகுநடன இயக்குநராக பணிபுரியும் போது, அஜய் அகத்தியனின் செல்வம் (2005) திரைப்படத்தில் நந்தா நடித்த முக்கியக் கதாபாத்திரத்தின் நண்பராக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். வெங்கட் பிரபுவுடனான அவரது நட்பின் காரணமாக, இவர் சென்னை 600028 (2007) இல் சார்க்ஸ் அணிக்கான துடுப்பாட்ட விளையாட்டின் போது அவசர ஊர்து ஓட்டுநராக நடித்தார். பின்னர் இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் குழுவினருடன் தொடர்புடைய சரோஜா (2008), தோழா (2008) போன்றத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். அஜய் தியாகராஜன் குமாரராஜாவின் நியோ-நோயர் கேங்ஸ்டர் திரைப்படமான ஆரண்ய காண்டம் (2010) இல் ஜாக்கி செராப் நடித்த கேங்க்ஸ்டரின் உதவியாளராக ஒரு துணை வேடத்தில் நடித்தார்.[4][5][6]
2016 இல், நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராகவிருந்த முதற்படத்தில் அஜய் ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவித்தார்.[7]
திரைப்படவியல்
தொகுநடிகராக
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | ஜங்சன் | நடனமாடுபவர் | சிறப்புத் தோற்றம் |
2005 | செல்வம் | சுப்ரமணியம் | |
2007 | சென்னை 600028 | ஏழுமலை | |
2008 | வெள்ளித்திரை | திலீப்காந்தின் படக்குழு உறுப்பினர் | |
2008 | தோழா | வேலு | |
2008 | சரோஜா | விருந்தினர் தோற்றம் | |
2010 | கோவா | விருந்தினர் தோற்றம் | |
2011 | ஆரண்ய காண்டம் | சிட்டு | |
2014 | வடகறி | தயாளன் | |
2014 | தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் | சிறப்புத் தோற்றம் | |
2016 | சென்னை 600028 II | ஏழுமலை | |
2019 | குப்பத்து ராஜா | ||
2024 | தளபதி 68 | [8] |
நடன இயக்குநராக
தொகு- 1998 காதல் மன்னன்
- 1999 அமர்க்களம்
- 1999 ஹலோ
- 1999 தாஜ்மஹால்
- 2000 உன்னை கொடு என்னை தருவேன்
- 2000 அப்பு
- 2000 பார்த்தேன் ரசித்தேன்
- 2001 கடல் பூக்கள்
- 2002 ஜங்ஷன்
- 2002 நைனா
- 2002 தமிழ்
- 2002 விவரமான ஆளு
- 2002 கும்மாளம்
- 2003 யுனிவர்சிட்டி
- 2003 கையோடு கை
- 2003 பல்லவன்
- 2004 ஜதி
- 2004 கேம்பஸ்
- 2005 சுக்ரன்
- 2005 செல்வம்
- 2005 மழை
- 2006 கோவை பிரதர்ஸ்
- 2007 சென்னை 600028
- 2008 சாது மிரண்டா
- 2008 தோழா
- 2008 வெள்ளித்திரை
- 2009 சிவா மனசுல சக்தி
- 2009 குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
- 2010 கோவா
- 2010 நாணயம்
- 2010 பாணா காத்தாடி
- 2011 மங்காத்தா
- 2013 பிரியாணி
- 2014 ஸ்ரீ ராமானுஜர்
- 2014 சிகரம் தொடு
- 2014 தெரியாம உன்ன காதலிச்சுட்டேன்
- 2015 மகாபலிபுரம்
- 2015 இந்தியா பாகிஸ்தான்
- 2015 மாசு என்கிற மாசிலாமணி
- 2015 மாங்கா
- 2015 ஓம் சாந்தி ஓம்
- 2016 சென்னை 600028 II
- 2017 காதல் காலம்
- 2018 ஜருகண்டி
- 2019 பார்ட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ready for the occasion". 11 April 2008 – via www.thehindu.com.
- ↑ "Popular Hero turns villain for 'Chennai 600028 2' boys - Tamil News". IndiaGlitz.com. 29 November 2016.
- ↑ "YouTube". www.youtube.com.
- ↑ "Venkat Prabhu begins 'Chennai 600028' reunion - Tamil News". IndiaGlitz.com. 4 April 2016.
- ↑ "Balaji's Thots » Aaranya Kaandam". bbthots.com.
- ↑ "Aaranya Kaandam Movie Review {4.5/5}: Critic Review of Aaranya Kaandam by Times of India" – via timesofindia.indiatimes.com.
- ↑ "Chennai 600028 boys team up for a thriller". The Times of India.
- ↑ "Thalapathy 68:Vijay welcomes Meenakshi Chaudhary, Prabhu Deva and Other Cast Members". timesnownews.com. 24 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.