அமிர்தா பல்கலைக்கழகம்
அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (Amrita Vishwa Vidyapeetham) அல்லது அமிர்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள பல வளாகங்கள் கொண்ட, பல துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.[2]
अमृता विश्व विद्यापीठम् | |
குறிக்கோளுரை | சமக்கிருதம்: श्रद्धावान् लभते ज्ञानम् சிரத்தவான் லபதே ஞானம் (பகவத் கீதையிலிருந்து, அத்தியாயம் 4, பாடல் 39) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "ஈடுபாடுள்ளவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்கும்." |
வகை | தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1994 |
வேந்தர் | மாதா அமிர்தானந்தமயி |
துணை வேந்தர் | பி. வெங்கட் ரங்கன் |
கல்வி பணியாளர் | 1,750[1] |
மாணவர்கள் | 24,000 |
அமைவிடம் | , 10°54′4″N 76°54′10″E / 10.90111°N 76.90278°E |
வளாகம் | • எட்டிமடை, கோயம்புத்தூர் • அமிர்தபுரி, கொல்லம் |
மொழி | ஆங்கிலம் |
நிறங்கள் | (%66.94 சிவப்பு,%7.35 பச்சை,%25.71 நீலம்) |
இணையதளம் | அலுவல்முறை வாயில் |
இந்தப் பல்கலைக்கழகம் அமராவதி, அமிர்தபுரி, பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், கொச்சி, மைசூர் மற்றும் பரிதாபாத் ஆகிய 8 வளாகங்களை, 5 இந்திய மாநிலங்களில் கொண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கோயம்புத்தூர் நகரிலிருந்து 17 கி.மீ தொலைவிலுள்ள எட்டிமடையில் அமைந்துள்ளது.[3][4][5]
இந்தப் பல்கலைக்கழகம் பொறியியல், வணிக மேலாண்மை, மருத்துவம், அறிவியல், ஆயுர்வேதம், கலை இலக்கியம், வர்த்தகம், சட்டம், கட்டிடக்கலை திட்டமிடல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் 250க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை, ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டம், முதுகலை பட்டயம், முனைவர் பட்டம், குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், மற்றும் இணையவழி தொலைதூரப் படிப்புகளை வழங்குகிறது.[6]
நிர்வாகம்
தொகுஇந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அமிர்தானந்தமயி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)வில் பணியாற்றியுள்ள கணிணிப் பொறியியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பி. வெங்கட் ரங்கன் துணை வேந்தராக உள்ளார்.[7]
வரலாறு
தொகு1990களில் மாதா அமிர்தானந்தமயி மடத்தால் இரண்டு வளாகங்கள், கொல்லம் அமிர்தபுரியிலும் கோயம்புத்தூர் எட்டிமடையிலும், கணினி பயிற்சி மையங்களாகத் துவக்கப்பட்டு பின்னர் அமிர்தா தொழினுட்பக் கழகம் என்ற பெயரில் கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டன. கொல்லத்திலுள்ள அமிர்தாபுரியில் உள்ள கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்துடனும், கோயம்புத்தூரிலுள்ள எட்டிமடை வளாகத்திலுள்ள கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டன. 2002இல் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகமாக துவக்கப்பட்டபோது இவை அமிர்தா பொறியியல் பள்ளி என மீளவும் துவக்கப்பட்டன.[8] 2003 ஆம் ஆண்டில், இந்தியா பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்ட இளைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[9]
17 மே 1998 அன்று, கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் உள்ள அமிர்தா மருத்துவமனையுடன் இணைந்து அமிர்தா மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டு அப்போதைய பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[10] 2002 ஆம் ஆண்டில், கொல்லம் அமிர்தபுரி மற்றும் பெங்களூரில் பொறியியல் மற்றும் வணிகப் பள்ளிகளுடன் கூடிய இரண்டு வளாகங்கள் தொடங்கப்பட்டன.[11][12]
2019ல் சென்னை வெங்கலில் பொறியியல் கல்லூரி வளாகம் திறக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், அமராவதி நகரில் பொறியியல், வணிகம் மற்றும் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய வளாகம் திறக்கப்பட்டது.[13][14] 2022 ஆம் ஆண்டில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் மருத்துவமனை வளாகத்துடன் ஒரு மருத்துவக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.[15][16][17]
2022 ஆம் ஆண்டு படி, பல்கலைக்கழகத்தில் 1,700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 24,000 மாணவர்களும் இருந்தனர்.[18][19][20]
தரவரிசை
தொகுதேசிய கல்வி நிறுவன தரவரிசை
தொகுஅமிர்தா விஷ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) மூலம் 2023 இல் ஏழாவது சிறந்த பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவத்தில் 6வது இடத்தையும், பொறியியலில் 19வது இடத்தையும், வணிக நிர்வாகத்தில் 30வது இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவில் 15வது இடத்தையும், ஆராய்ச்சியில் 32வது இடத்தையும், மருந்தியல் துறையில் 10வது இடத்தையும், பல் மருத்துவத்தில் 12வது இடத்தையும் பெற்றுள்ளது.[21][22][23][24][25]
இந்தப் பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) 'A++' தரச்சான்றுடன் அங்கீகாரம் பெற்றுள்ளது மற்றும் இந்த தரவரிசை பெற்ற இந்தியாவின் இளைய கல்வி நிறுவனமாகும்.[26]
உலக தரவரிசை
தொகு2023 ஆம் ஆண்டில், அமிர்தா பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி பல்கலைக்கழக தாக்க தரவரிசையில் உலகின் முதல் 50 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.[27][28][29] இது இந்தியாவிலும் 1வது இடத்தில் உள்ளது. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின் 12வது பதிப்பில், அமிர்தா 601-800 பிரிவில் இடம் பெற்றுள்ளார். இது 2020 ஆம் ஆண்டு இளம் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 200 இடங்களிலும், BRICS & வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழக தரவரிசை 2020 இல் முதல் 90 இடங்களிலும் உள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை 801-1000 மற்றும் BRICS பல்கலைக்கழக தரவரிசையில் 2020 இல் 168 வது இடத்தைப் பிடித்தது.[30][31][32][33][34]
துணைக் கல்லூரிகளின் தரவரிசை
தொகுஅமிர்தா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்லூரி உலகத் தர வணிகக் கல்லூரிகள் சங்கத்தின் (Association to Advance Collegiate Schools of Business) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.[35]
அமிர்தா பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல்(பி.டெக்) மற்றும் , இளங்கலை மருந்தியல்(பி.பார்ம்) படிப்புகள் தேசிய அங்கீகார வாரியத்தால்(National Board of Accreditation) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[36][37]
அமிர்தா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers) அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் மருத்துவ கல்வி நிறுவனம் ஆகும். மேலும் அதன் அனைத்து ஆய்வகங்களும், சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பாலும் (International Organization for Standardization) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[38][39][40][41][42][43]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.amrita.edu/about/
- ↑ "தேசிய தரவரிசை பட்டியலின் முக்கிய இடங்களில் தமிழகக் கல்லூரிகள்". https://www.hindutamil.in/news/tamilnadu/826754-how-many-colleges-in-tamil-nadu-are-in-the-top-list-of-national-ranking-list.html.
- ↑ "Campuses | Amrita Vishwa Vidyapeetham". amrita.edu. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "Amrita Vishwa Vidyapeetham". ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "Bengaluru Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu. November 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ last=Khanna, Adithi (1 June 2023). "Amrita Vishwa Vidyapeetham in Coimbatore tops university Impact Rankings 2023 for India". ThePrint. https://theprint.in/world/amrita-vishwa-vidyapeetham-in-coimbatore-tops-university-impact-rankings-2023-for-india/1606498/.
- ↑ வெங்கடேஷ், மு பிரசன்ன. "AMRITA கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "Amrita Vishwa Vidyapeetham". ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "Amrita Vishwa Vidyapeetham". ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "கொரோனா கிருமியை இந்த வாயுவால் அழிக்க முடியுமா? ஆய்வு சொல்வதென்ன!". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
- ↑ "Amritapuri Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu. 7 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "Bengaluru Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu. November 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "Bengaluru Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ "Amritapuri Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
- ↑ Sharma, Ch. R. S (8 February 2018). "Naidu lays foundation stone for Amrita Vishwa Vidyapeetham in Amaravati". Businessline. https://www.thehindubusinessline.com/news/national/naidu-lays-foundation-stone-for-amrita-vishwa-vidyapeetham-in-amaravati/article22687423.ece.
- ↑ Sarma, Ch R. S. (8 February 2018). "Naidu lays foundation stone for Amrita Vishwa Vidyapeetham in Amaravati". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ P., Abhiraj (26 May 2022). "Amrita Vishwa Vidyapeetham's new off-campus centre at Amaravati to offer 8 courses". Careers360.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ www.ETHealthworld.com. "Haryana CM lays foundation stone for 2000 bed hospital in Faridabad – ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "PM Modi inaugurates Amrita Hospital in Faridabad, commends Haryana govt's work". The Indian Express (in ஆங்கிலம்). 24 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
- ↑ "IPN India Forumin association with Amrita Vishwa Vidyapeetham to HONOUR 100 SCHOOL LEADERS from PAN India". The Print. ANI. 14 November 2022. https://theprint.in/ani-press-releases/ipn-india-forumin-association-with-amrita-vishwa-vidyapeetham-to-honour-100-school-leaders-from-pan-india/1215880/.
- ↑ NIRF Rankings, Collegegunia.com. "Amrita - NIRF Ranking 2023". collegedunia.
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "NIRF - Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 10 March 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Amrita the fifth best university in India: NIRF 2022 - Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 23 July 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Amrita University is now the 5th Best in India & awarded with an A++ NAAC Grade". Hindustan Times (in ஆங்கிலம்). 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Amrita Vishwa Vidyapeetham India's highest ranked varsity: THE Impact Ranking 2023". The Indian Express (in ஆங்கிலம்). 1 June 2023. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ Bureau, DTNEXT (2 June 2023). "Amrita varsity tops University Impact Rankings in India". www.dtnext.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Amrita Vishwa Vidyapeetham". Top Universities (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Panjab University slips three spots to rank seven in India". The Indian Express (in ஆங்கிலம்). 3 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "New institutions outrank old powerhouses in Times list". The Times of India. 27 September 2018. https://timesofindia.indiatimes.com/education/news/new-institutions-outrank-old-powerhouses-in-times-list/articleshow/65973094.cms.
- ↑ "QS World University Rankings 2023: List of top universities in India". Hindustan Times (in ஆங்கிலம்). 9 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ Khanna, Aditi (1 June 2023). "Amrita Vishwa Vidyapeetham in Coimbatore tops university Impact Rankings 2023 for India". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "QS World University Rankings 2023: 7 new entries from India, 3 varsities rule top spots for eleventh year straight". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "AMET 2023 is on February 25 and March 5: All you need to know about the MBA course, scholarship, placements and more". The Economic Times. 6 February 2023. https://economictimes.indiatimes.com/industry/services/education/amet-2023-is-on-february-25-and-march-5-all-you-need-to-know-about-the-mba-course-scholarship-placements-and-more/articleshow/97546409.cms?from=mdr.
- ↑ "e - NBA". enba.nbaind.org. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Academic & Research Excellence: Global & National Rankings, Accreditation | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 25 June 2019. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "National Accreditation Board for Hospitals & Healthcare Providers (NABH)". www.nabh.co. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "National Accreditation Board for Hospitals & Healthcare Providers (NABH) - Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 13 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "NABL Amrita Labs". NABL gov.
- ↑ "NCR gets one of India's biggest super-specialty hospitals". Hindustan Times (in ஆங்கிலம்). 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
- ↑ "Amrita Vishwa Vidyapeetham Gets A++ Grade From NAAC". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "MBA at Amrita School of Business – World-Class Education with Social Responsibility - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.