அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
புதுதில்லியில் உள்ள ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம் (முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.[2] பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதன் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்றே அழைக்கப்படும் என்றும் டிடிசிஏ விளக்கமளித்தது.
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | புது டில்லி |
உருவாக்கம் | 1883 |
இருக்கைகள் | 48,000 |
முடிவுகளின் பெயர்கள் | |
அரங்க முனை பவிலியன் முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 10 - 14 நவம்பர் 1948: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் |
முதல் ஒநாப | 15 செப்டம்பர் 1982: இந்தியா எ இலங்கை |
முதல் இ20ப | 23 மே 2016: ஆப்கானித்தான் எ இங்கிலாந்து |
27 டிசம்பர் 2010 இல் உள்ள தரவு |
சாதனைப் பதிவுகள்
தொகுதேர்வுப் பதிவுகள்
தொகு- அதிகபட்ச புள்ளிகள்- மேற்கிந்தியத் தீவுகள் 644-8 (1959); 631 (1948), இந்தியா 613-7 (2008)
- அதிகபட்ச ஓட்டங்கள்- திலீப் வெங்சர்கார் (637), சுனில் கவாஸ்கர் (668), சச்சின் டெண்டுல்கர் (643)
- அதிகபட்ச வீழ்த்தல்கள்- அனில் கும்ப்ளே (58), கபில் தேவ் (32), ரவிச்சந்திரன் அசுவின் (27)
ஒருநாள் பதிவுகள்
தொகு- 2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
- 7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர்.
- 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார்.
உலகக்கிண்ணப் போட்டிகள்
தொகு 2 மார்ச் 1996
|
எ
|
||