கோரி ஆன்டர்சன்

கோரி ஜேம்சு ஆன்டர்சன் (Corey James Anderson, பிறப்பு: 13 டிசம்பர் 1990) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்.[1] இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2013 சூன் 16 அன்று இங்கிலாந்து அணுக்கு எதிராக விளையாடினார்.[2] இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சகலத்துறையரான இவர் வடக்கு மாவட்ட அணிகளுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

கோரி ஆன்டர்சன்
Corey Anderson
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கோரி ஜேம்சு ஆன்டர்சன்
பிறப்பு13 திசம்பர் 1990 (1990-12-13) (அகவை 31)
கிறைஸ்ட்சேர்ச், கான்டர்பரி, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை மித-விரைவு
பங்குபல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 261)9 அக்டோபர் 2013 எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு14–18 பெப்ரவரி 2014 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 181)16 சூன் 2013 எ இங்கிலாந்து
கடைசி ஒநாப27 அக்டோபர் 2014 எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–2011கான்டர்பரி
2011–2013வட மாகாணங்கள்
2014–இன்றுமும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒரு முத பஅ
ஆட்டங்கள் 7 15 36 38
ஓட்டங்கள் 327 425 1,846 908
மட்டையாட்ட சராசரி 32.70 42.50 36.19 31.31
100கள்/50கள் 1/1 1/1 3/7 1/5
அதியுயர் ஓட்டம் 116 131* 167 131*
வீசிய பந்துகள் 720 530 2,421 698
வீழ்த்தல்கள் 11 22 33 29
பந்துவீச்சு சராசரி 30.54 24.40 38.96 23.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 3/47 5/63 5/22 5/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/– 22/– 10/–

கோரி ஆன்டர்சன் 2014 சனவரி 1 இல் மிக விரைவான நூறு ஓட்டங்களை ஒருநாள் வரலாற்றில் எடுத்து சாதனை புரிந்தார். மேற்கிந்திய அணிக்கு எதிராக 36 பந்துகளுக்கு 100 ஓட்டங்களை எடுத்து சாகித் அஃபிரிடியின் சாதனையை முறியடித்தார். இதில் 14 ஆறுகளும்,6 நான்குகளும் அடங்கும். இதற்குமுன் 1996 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் நூறு ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தார். இச்சாதனையை 2015 சனவரி 18 இல் ஏ பி டி வில்லியர்ஸ் 31 பந்துகளுக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி முறியடித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்தொகு

2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 750,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தனர். இவரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓட்டங்கள் எடுத்து சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். மே 3, 2014 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 35 ஓடங்களை எடுத்துள்ளார். அதே போட்டியில் செதேஷ்வர் புஜாரா இலக்கினைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

மே 25, 2014 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டன. 44 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்து 14.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை சிறந்த ரன் விகிதத்தில் அடைய உதவினார். 2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் துவக்க போட்டிகளில்சிறப்பாக செயல்பட்டார். இவர் விளையாடிய நான்கு போட்டிகளில் இரு அரைநூறுகளை அடித்தார். ஆனால் விரலில் காயம் ஏற்பட்டதனால் இவர் அணியிலிருந்து விலகினார்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 1 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[3] 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்தது. கூலட்ர் நீல் பெங்களூர் அணிக்காகத் தேர்வானார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் தேர்வானார்.[4][5] கூல்டர் நீல் 2017 இந்தியன் பிரீமியர் லீக்கில் 8 போட்டிகளில் 15 இலக்குகளைக் கைப்பற்றி சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.இவர் தேர்வானதை பெங்களூர் அணி நிர்வாகம் மார்ச் 24 இல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

சர்வதேச நூறுகள்தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

தேர்வு துடுப்பாட்ட நூறுகள்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 116 2   வங்காளதேசம் வங்காளதேசம் ஷெர் இ வங்காளதேச துடுப்பாட்ட அரங்கம் 2013 சமன்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்தொகு

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 131* 7   மேற்கிந்தியத் தீவுகள் நியூசிலாந்து குயீன்ஸ்டவுன் மையம் 2014 வெற்றி

5 இலக்குகள்தொகு

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 5/63 12   இந்தியா நியூசிலாந்து ஈடன் பார்க் 2014 வெற்றி

மேற்கோள்கள்தொகு

  1. Corey Anderson, CricketArchive, Retrieved 28 ஏப்ரல் 2009
  2. http://www.espncricinfo.com/ci/engine/match/578624.html
  3. "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. 20 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "IPL 2018: Corey Anderson replaces injured Coulter-Nile in RCB" (in en). Sify. http://www.sify.com/sports/ipl-2018-corey-anderson-replaces-injured-coulter-nile-in-rcb-news-cricket-sdysLbhbbccbe.html. 
  5. NDTVSports.com. "IPL 2018: Corey Anderson Replaces Nathan Coulter-Nile In Royal Challengers Bangalore Squad – NDTV Sports" (in en). NDTVSports.com. https://sports.ndtv.com/indian-premier-league-2018/indian-premier-league-2018-corey-anderson-replaces-nathan-coulter-nile-in-royal-challengers-bangalor-1828157. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_ஆன்டர்சன்&oldid=2523800" இருந்து மீள்விக்கப்பட்டது