சேன் வார்ன்

முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
(சேன் வோர்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேன் கீத் வார்ன் (Shane Keith Warne; ஷேன் வோர்ன், 13 செப்டம்பர் 1969 – 4 மார்ச் 2022) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகப் பரவலாக அறியப்படுகிறார்.[1] 1994-ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார்.[2] அத்துடன் 2004, 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் முன்னணித் துடுப்பாட்ட வீரராக அறிவிக்கப்பட்டார்.[3][4] 2000-ஆம் ஆண்டில் சேன் வார்ன் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் 2013 சூலை இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக இவர் அறிவித்திருந்தார்.[5] இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீரராகவும் பணியாற்றினார்.

சேன் வார்ன்
Shane Warne
2015 பெப்ரவரியில் வார்ன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேன் கீத் வார்ன்
பிறப்பு(1969-09-13)13 செப்டம்பர் 1969
மேல் பெர்ன்ட்ரீ கலி, விக்டோரியா, ஆத்திரேலியா
இறப்பு4 மார்ச்சு 2022(2022-03-04) (அகவை 52)
சுராத் தானி, தாய்லாந்து
பட்டப்பெயர்வார்னி
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை கால்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 350)2 சனவரி 1992 எ. இந்தியா
கடைசித் தேர்வு2 சனவரி 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 110)24 மார்ச் 1993 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப10 சனவரி 2005 எ. ஆசியா XI
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–2007விக்டோரியா அணி (squad no. 23)
2000–2007ஆம்ப்சயர் அணி (squad no. 23)
2008–2011ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 23)
2011–2013மெல்பேர்ன் இசுடார்சு (squad no. 23)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 145 194 301 311
ஓட்டங்கள் 3,154 1,018 6,919 1,879
மட்டையாட்ட சராசரி 17.32 13.05 19.43 11.81
100கள்/50கள் 0/12 0/1 2/26 0/1
அதியுயர் ஓட்டம் 99 55 107* 55
வீசிய பந்துகள் 40,704 10,642 74,830 16,419
வீழ்த்தல்கள் 708 293 1,319 473
பந்துவீச்சு சராசரி 25.41 25.73 26.11 24.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
37 1 69 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
10 0 12 0
சிறந்த பந்துவீச்சு 8/71 5/33 8/71 6/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
125/– 80/– 264/– 126/–
மூலம்: ESPNcricinfo, 29 மார்ச் 2008

சேன் வார்ன் 1992 இல் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். தேர்வு, பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 1,011 இலக்குகளைக் கைப்பற்றினார்.[6] இவரது 708 தேர்வு இலக்குகள் 2007-ஆம் ஆண்டு வரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அதிக இலக்குகளை வீழ்த்திய சாதனையாக இருந்தது.[7] ஒரு பயனுள்ள கீழ்-வரிசை மட்டையாளராக, இவர் 3,154 தேர்வு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[8] பன்னாட்டு அளவில் விளையாடியதுடன், வார்ன் தனது சொந்த மாநிலமான விக்டோரியாவுக்காக உள்நாட்டுப் போட்டிகளிலும், ஆம்ப்சயர் அணிக்காக இங்கிலாந்து உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் 2005 முதல் 2007 வரை மூன்று பருவங்களுக்கு ஆம்ப்சயர் அணித் தலைவராக விளையாடினார். 2003 பெப்ரவரியில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளை சோதனை செய்ததற்காக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஓராண்டுகால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.[9] அத்துடன், பந்தயப் பணயத்தொழிலர்களிடமிருந்து பணம் பெற்று விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள்,[10] பாலியல் தொல்லை[11] உட்படக் களத்திற்கு வெளியே நடந்த அவதூறுகளால் இவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

2007 சனவரியில் ஆத்திரேலியாவின் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷசுத் தொடரின் வெற்றியின் முடிவில் வார்ன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவருடன் ஆத்திரேலிய அணியின் மேலும் மூன்று முன்னணி வீரர்களான கிளென் மெக்ரா, டேமியன் மார்ட்டின், ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் அதே நேரத்தில் தேர்வுப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர், இது "ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று பரவலாக அப்போது அறிவிக்கப்பட்டது.[12]

வார்ன் ஆத்திரேலியாவின் "சிறந்த ஒருநாள் அணியில்" அறிவிக்கப்பட்டார்.[13] பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறிய பின்னர், வார்ன் 2007 ஆம்ப்சயர் அணியில் இறுதிப் பருவப் போட்டிகளில் விளையாடிய பின்னர், முதல் தரப் போட்டிகளில் இருந்து இளைப்பாறினார்.[14] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2008–2011 காலப்பகுதியில் அணித் தலைவராக விளையாடியதோடு, பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.[15]

இளமைப்பருவம்

தொகு

ஷேன் வோர்ன் செப்டம்பர் 13, 1969 இல் விக்டோரியா ஆஸ்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பிரிட்ஜெட் தாய் கெய்த் வோர்ன் .[16][17] வோர்ன் ஏழு முதல் ஒண்பதாம் வகுப்பு (தரநிலை) வரை ஹாம்ப்டன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின் இவரின் விளையாட்டுப் புலமையினால் இவருக்கு மெண்டோன் கிராமர் பள்ளியில் இடம் கிடைத்தது. வோர்ன் தனது பள்ளிப்படிப்பின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் மெண்டோன் பள்ளியில் கழித்தார். 16 வயதிற்குட்பட்டோருக்கான டௌலிங் கேடயப் போட்டியில் மெல்பேர்ண் துடுப்பாட்ட சங்க பல்கலைக்கழக அணியை வழிநடத்தும் வாய்ப்பினை 1983, 1984 இல் பெற்றார்.

உள்ளூர் போட்டிகள்

தொகு

மெல்போர்ன், ஓவல் துடுப்பாட்ட அரங்கில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்டோரியாத் துடுப்பாட்ட அனி சார்பாக இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 61 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தர். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் 41 ஓட்டங்களுக்கு ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். 1991 பிப்ரவரி 15 அன்று வார்ன் தனது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் அவர் செப்டம்பர் 1991 இல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா ஆ அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அராரே துடுப்பாட்ட சங்க மைதானத்தில் நடந்த இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 இழப்புகளைக் கைபற்றினார். அந்தப் போட்ட்டியில் ஆத்திரேலிய ஆ அணி 9 இழப்புகளில் வென்றது.[18]

1991 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இழப்புகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் ஆத்திரேலியாவின் முதன்மைப் பந்துவீச்சாளரான பீட்டர் டெய்லர் முதல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே ஒரு இழப்பினை மட்டுமே எடுத்திருந்தார். ஒரு வாரம் கழித்து சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் போட்டிக்கு வார்ன் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆரம்பகால சர்வதேச துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

இவரின் முதல் சர்வதேச போட்டியானது சனவரி, 1992 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் ஆகும். இந்தப் போட்டியில் 45 ஓவர்கள் வீசிய வோர்ன் ஒரு இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இவர் ரவி சாஸ்திரியின் இலக்கை 150 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றினார். அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 78 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. எனவே அந்தத் தொடரின் இவரின் ஒட்டுமொத்த பந்து வீச்சானது 228 ஓட்டங்களுக்கு 1 இலக்கு என்று இருந்தது. இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டிகளிலும் இவரின் மோசமான பந்துவீச்சு 0/ 107 எனத் தொடர்ந்தது. இவ்வாறாக இருந்தபோதிலும் ஆகஸ்டு 22, 1992 இல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இறுதி மூன்று இலக்குகளை எடுத்தார். இதன் மூலம் ஆத்திரேலிய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இதனைப் பற்றி அர்ஜுன றணதுங்க கூறுகையில் 300 க்கும் அதிகமான பந்துவீச்சு சராசரி உள்ள ஒரு வீர்ர் எங்களின் வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டார் எனக் கூறினார்.

300 இழப்புகள்

தொகு

1993 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வார்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவரில் மொத்தமாக 34 இழப்புகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இழப்புகளைக் கைப்பற்ற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார் [19] மைக் கேட்டிங்கிற்கு எதிராக இவர் வீசிய பந்தானது நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சு என அறியப்படுகிறது.[20] அவர் 1993 ஆம் ஆண்டில் மொத்தமாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 71 இழப்புகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக இழப்புகளைக் கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார்.[20] நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் 17 இழப்புகளைக் கைப்பற்றினார்.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இதே அணியுடன் மீண்டும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய போது இவர் 18 இழப்புகளைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதினை வென்றார்.[21][22][23]

1993-94ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மார்ச் 1994 இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த இரு சுற்றுப்பயணங்களிலும் வார்ன் இடம்பெற்றார். சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது தேர்வு துடுப்பாட்டப் போட்டியில் , வார்ன் தனது முதல் முறையாக ஒரு பத்து இழப்புகளை வீழ்த்தினார். முதல் ஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களுக்கு 7 இழப்புகளையும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 72 ஓட்டங்களுக்கு 5 இழப்புகளையும் கைப்பற்றினார்.ஆனால் இந்தப் போட்டியில்ம் தென்னாப்பிரிக்கா வென்றது.[24]

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை $450,000 மதிப்பில் தேர்வு செய்தது.[25] ஷேன் வோர்ன் இந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரின் தலைமையில் முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.[26] முதல் நான்கு பருவங்களுக்கு அணித் தலைவராக இருந்தார்.[27]

மறைவு

தொகு

வோர்ன், தனது 52ஆவது அகவையில் மாரடைப்புக் காரணமாக 2022 மார்ச் 4 இல், தாய்லாந்தில் காலமானார்.[28]

சான்றுகள்

தொகு
  1. 'The finest legspinner the world has ever seen'Cricinfo Australia, 20 December 2006
  2. "Cricketer of the Year 1994 Shane Warne". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 1994.
  3. "Wisden's Leading Cricketer In The World". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 2008.
  4. "The leading cricketer in the world, 2004 Shane Warne". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 2005.
  5. "Warne officially retires from all cricket". Wisden India. 22 July 2013 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729100240/http://www.wisdenindia.com/cricket-news/warne-officially-retires-cricket/70146. பார்த்த நாள்: 31 July 2017. 
  6. "Shane Warne's career by the numbers". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
  7. "1000 wickets for Warne". The Sydney Morning Herald. 3 January 2007. https://www.smh.com.au/news/news/1000-wickets-for-warne/2007/01/03/1167777131854.html. 
  8. "Most runs in test career without a career hundred". cricinfo.
  9. "Drug test halts Warne's World Cup". The Age. 12 February 2003. http://www.theage.com.au/articles/2003/02/12/1044927636027.html. 
  10. Ray, Mark; Blake, Martin (9 December 1998). "Warne, Mark Waugh took bookie's cash". The Age. http://www.theage.com.au/articles/1998/12/09/1060588497968.html. 
  11. "Warne sacked over sex calls". The Independent (in ஆங்கிலம்). 2000-08-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-11.
  12. End of an era: Ponting பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம் Sportal.com.au
  13. Daily Times (28 February 2007). "Australia names greatest ODI team". பார்க்கப்பட்ட நாள் 1 March 2007.
  14. Shane Warne retires from first-class cricket as Hampshire pay tribute to leg spinner. தி டைம்ஸ். Retrieved 29 March 2008.
  15. "Warne returns to Royals as mentor". ESPNCricinfo. http://www.espncricinfo.com/story/_/id/22415522/shane-warne-returns-rajasthan-royals-mentor. 
  16. "Shane Warne considers German citizenship". News.com.au. News Corp Australia. 17 March 2009. Archived from the original on 6 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Leader: Danke Shane". The Guardian. 19 Aug 2007. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
  18. "Australian XI v Zimbabwe at Harare". espncricinfo. September 1991. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.
  19. "Records / The Ashes, 1993 / Most wickets". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  20. 20.0 20.1 . 
  21. "Records / Trans-Tasman Trophy, 1992/93 / Most wickets". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  22. "Records / Trans-Tasman Trophy, 1993/94 / Most wickets". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  23. "New Zealand tour of Australia, 1993/94 / Scorecard: 3rd Test". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  24. "South Africa tour of Australia, 1993/94 / Scorecard: Second Test". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  25. "Warne retires from first-class cricket". The Hindu. 28 March 2008 இம் மூலத்தில் இருந்து 12 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130512043222/http://www.hindu.com/thehindu/holnus/007200803281040.htm. பார்த்த நாள்: 21 January 2012. 
  26. "Warne's Royals win inaugural IPL". BBC Sport. 2 June 2008. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/7430352.stm. பார்த்த நாள்: 21 January 2012. 
  27. Bose, Saibal (20 May 2011). "Royals plan a warm send-off for Warne". Times of India இம் மூலத்தில் இருந்து 21 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130521171140/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/news/29563926_1_shane-warne-rajasthan-royals-royals-plan. பார்த்த நாள்: 21 January 2012. 
  28. "Shane Warne, Australia's legendary legspinner, dies aged 52". Cricinfo. 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சேன் வோர்ன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சேன் வார்ன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_வார்ன்&oldid=3986707" இலிருந்து மீள்விக்கப்பட்டது