தீர்த்தங்கரர்கள் சமண சமயப் பெரியார்கள் ஆவார்கள். அவர்கள் இருபத்துநான்கு பேர்கள் என்பது மரபு. அவர்களின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அவர்களை எளிதில் அடையாளம் காண அவர்களின் வாகனங்கள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. இவர்களின் உருவங்கள் பக்கவாட்டில் இரண்டுகைகளும் தொங்கவிட்டு நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஆடையற்றநிலையில் அதாவது திகம்பர நிலையில்தான் இவர்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வுருவங்களில் பெருத்த வேறுபாடு இல்லை; இச்சிற்பங்களின் அடியில் உள்ள வாகனங்களைக்கொண்டுதான் இப்பெரியார்களை நாம் உணரமுடியும். தீர்த்தங்கரர்களின் இருமருங்கிலும் உள்ள சிலைகள் யட்சர், யட்சிகளின் சிலைகளாகும்.அந்தத்தீர்த்தங்கரர்களின் பெயர்களையும், அவர்களின் சின்னங்கள் அல்லது வாகனங்களின் பெயர்களையும் கீழே காணலாம்.[1]
தீர்த்தங்கரர்களின் சின்னங்கள்
தொகு