தேசிய நெடுஞ்சாலை 63 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 63 (தே. நெ. 63)(National Highway 63 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 961 கிமீ (597 மைல்) ஆகும். இது மகாராட்டிரம், தெலங்காணா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2]
தேசிய நெடுஞ்சாலை 63 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 961 km (597 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பார்சி (நகரம்), மகாராட்டிரம் | |||
முடிவு: | போரிகும்மா, ஒடிசா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம்: 400 km தெலங்காணா: 268 km சத்தீசுகர்: 238 km ஒடிசா: 55 km | |||
முதன்மை இலக்குகள்: | குசுலாம்-யாதாசி-முருண்ட்-லாத்தூர்-ரேணாப்பூர்-உத்கீர்-தெக்லுர்-ஆதம்பூர்-காட்கோன்-போதன்-நிசாமாபாத்-ஜக்டியால்-மஞ்செரியல்-இந்தியா-சென்னூர்-சிரோன்சா-பிஜப்பூர்-கீதம்-பாகமுந்தி-ஜெகதல்பூர்-போரிகும்மா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- இந்த நெடுஞ்சாலை பார்சியிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ள குசுலாம்பில் தொடங்கி,
- மகாராட்டிரா குசுலாம்ப் பார்சி, இராம்லிங்கா, யெத்சி, லாத்தூர், ரெனாப்பூர், அசுடமோத், நாலேகாவ் உத்கிர், டெக்லூர், சிரோஞ்சா, கோபேலா மற்றும் பத்தகூடம்
- தெலங்காணா-போதன், நிசாமாபாத், ஆர்மூர், மெட்பள்ளி, கொரட்லா, ஜக்டியல், லக்செட்டிபேட்டை, தர்மபுரி, மஞ்செரியல் மற்றும் சென்னூர்
- சத்தீசுகர், போபால்பட்னம், மேட்டட், பிஜப்பூர், நிமெட், பைரம்கர், வரதுனார், கிடாம், பாக்முண்டி மற்றும் ஜெகதல்பூர்
- ஒடிசா: கோட்பாத் மற்றும் போரிகும்மா வழியாகச் செல்கிறது.
- இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 52ஐ யேத்சியில் கடந்து செல்கிறது.
- இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 548பி-ஐ லாத்தூர், ரெனாப்பூரில் கடந்து செல்கிறது.
- இந்த நெடுஞ்சாலை அசுடமோத்தில் தேசிய நெடுஞ்சாலை 361ஐக் கடக்கிறது.
- இந்த நெடுஞ்சாலை உத்கிரில் தேசிய நெடுஞ்சாலை 50ஐக் கடக்கிறது.
- இந்த நெடுஞ்சாலை ஆர்மூரில் தேசிய நெடுஞ்சாலை 44ஐக் கடக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை 163 போபால்பட்டணத்தில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
- தேசிய நெடுஞ்சாலை 563 இந்த நெடுஞ்சாலையை ஜக்தியாலில் இணைக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை 363 மஞ்சேரியலில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
- தேசிய நெடுஞ்சாலை 30 ஜக்தல்பூரில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
- தேசிய நெடுஞ்சாலை 26 இந்த நெடுஞ்சாலையை போரிகும்மாவில் இணைக்கிறது. இது விஜயநகரத்தில் முடிவடைகிறது.
இந்த நெடுஞ்சாலை தெலங்காணா மாநிலத்தின் பெடாபள்ளி மாவட்டம் மற்றும் மஞ்சேரியல் மாவட்டத்தின் எல்லையில் கோதாவரி ஆற்றினையும், மகாராட்டிரா மற்றும் தெலங்காணா எல்லையில் பிரணஹிதா ஆற்றினையும் மற்றும் மகாராட்டிரா, சத்தீசுகர் எல்லையில் இந்திராவதி ஆற்றையும் கடக்கிறது. மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநில எல்லையில் சிரோஞ்சா அருகே பிரணஹிதா ஆற்றின் குறுக்காகவும் மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் மாநிலத்தில் போபால்பட்னம் அருகே இந்திராவதி ஆற்றின் குறுக்காகவும் பாலங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நெடுஞ்சாலை விசாகப்பட்டினம், கட்டாக் மற்றும் புவனேசுவரம் வழியாக மும்பையை இணைக்கும்.
படம்
தொகு-
நிசாமாபாத்தில் தே. நெ. 63, தே. நெ. 44-உடன் இணையுமிடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Details of National Highways in India-Source-Govt. of India - ↑ "National highways substitution notification" (PDF). The Gazette of India- Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.