பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி

பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Mas; ஆங்கிலம்: Pasir Mas Federal Constituency; சீனம்: 巴西马国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P022) ஆகும்.[6]

பாசிர் மாஸ் (P022)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Pasir Mas (P022)
Federal Constituency in Kelantan
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி
(P022 Pasir Mas)
மாவட்டம் பாசிர் மாஸ் மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை94,755 (2023)[1]
வாக்காளர் தொகுதிபாசிர் மாஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, குபாங் கிரியான், பாசிர் மாஸ், கெத்தேரே, பாசிர் பூத்தே, பாச்சோக்
பரப்பளவு176 ச.கி.மீ
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
மக்கள் தொகை113,476 (2020)[2]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1955
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[3]




2022-இல் பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[4][5]

  மலாயர் (99.5%)
  சீனர் (0.2%)
  இதர இனத்தவர் (0.3%)

பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

பாசிர் மாஸ்

தொகு

பாசிர் மாஸ் நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 14 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 434 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பாசிர் மாஸ் கிளாந்தான் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். 1918-ஆம் ஆண்டில், பாசிர் மாஸ் நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோத்தா பாரு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டன. பின்னர் அந்தப் பகுதிகளுக்கு என பாசிர் மாஸ் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[8]

பாசிர் மாஸ் மாவட்டம்

தொகு

பாசிர் மாஸ் நகரம் தாய்லாந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் பாசிர் மாஸ் மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.பாசிர் மாஸ் நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பாசிர் மாஸ் தொடருந்து நிலையம். இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

பாசிர் மாஸ் மாவட்டத்தின் முக்கிய நகரம்; மற்றும் நிர்வாக மையம் பாசீர் மாஸ் நகரம் ஆகும்.[9] இந்த மாவட்டத்தின் வடக்கில் தும்பாட் மாவட்டம் (Tumpat District); கிழக்கில் கோத்தா பாரு மாவட்டம் (Kota Bharu District); தெற்கில் தானா மேரா மாவட்டம் (Tanah Merah District); மற்றும் தாய்லாந்து நாட்டின் சுங்கை கோலோக் மாவட்டம் ஆகிய நிலப்பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி

தொகு
பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1955-ஆம் ஆண்டில் கோத்தா பாரு தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை 1955–1959 தெங்கு அகமத் தெங்கு சாபர்
(Tengku Ahmad Tengku Ja'afar)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
பாசிர் மாஸ் தொகுதி (பாசிர் மாஸ் ஈலிர்; பாசிர் உலு) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
மலேசிய மக்களவை
பாசிர் மாஸ் ஈலிர் தொகுதியில் இருந்து பாசிர் மாஸ் தொகுதி உருவாக்கம்
4-ஆவது மக்களவை P018 1974–1978 தெங்கு சாயிட் தெங்கு அகமத்
(Tengku Zaid Tengku Ahmad)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 அப்துல் ரகுமான் தாவூத்
(Abdul Rahman Daud)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை 1982–1986 வான் இப்ராகீம் வான் அப்துல்லா
(Wan Ibrahim Wan Abdullah)
மலேசிய இசுலாமிய கட்சி
7-ஆவது மக்களவை P020 1986–1990 இப்ராகீம் அலி
(Ibrahim Ali)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P022 1995–1999 சைனுதீன் முகமது நோர்
(Zainuddin Mohamad Nor)
10-ஆவது மக்களவை 1999–2004 இசுமாயில் நோ
(Ismail Noh)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 (மலேசிய இசுலாமிய கட்சி)
12-ஆவது மக்களவை 2008 இப்ராகீம் அலி
(Ibrahim Ali)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
2008–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013–2018 நிக் முகமது நிக் அப்துல் அசீஸ்
(Nik Mohamad Nik Abdul Aziz)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2020 அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
PAS
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாசிர் மாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
94,544
வாக்களித்தவர்கள்
(Turnout)
79,028 68.91% - 8.76%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
65,153 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
173
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
819
பெரும்பான்மை
(Majority)
30,717 47.14%   + 22.72
வெற்றி பெற்ற கட்சி மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

பாசிர் மாஸ் வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அகமத் பட்லி சாரி
(Ahmad Fadhli Shaari)
65,153 44,444 68.21% + 15.77%  
பாரிசான் நேசனல் அப்துல் கனி அருண்
(Abdul Ghani Harun)
- 13,727 21.07% - 6.95%
பாக்காத்தான் அரப்பான் உசாம் மூசா
(Husam Musa)
- 6,439 9.88% - 0.37  %  
பூமிபுத்ரா கட்சி நசுருல் அசன் லத்தீப்
(Nasrul Ali Hassan Abdul Latif)
- 543 0.83% + 0.83%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  5. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  8. "Pasir Mas - Rantau Panjang highway, 09 km from the old town". Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Mas.
  9. "Map of British Malaya Including The Straits Settlements Federated Malay States and Malay States Not Included In The Federation 1924" (JPG). Raremaps.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு