பேச்சு:நஃபந்தான்
இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது . |
சரியான பெயர்
தொகுநஹ்பந்தான் என்பதே பெயர். எனவே, நஃபந்தான் என்றே தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:55, 1 திசம்பர் 2019 (UTC)
{{Nehbandan County}} என்பதில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளன. குறிப்பாக, சூசெஃப்பு ஊரக மாவட்டப் பெயர்கள் அந்த வார்ப்புருவின் அடியில் இருக்கும் 110க்கும் மேற்பட்ட ஊர்கள். ஆவலுடன்..--த♥உழவன் (உரை) 09:20, 1 திசம்பர் 2019 (UTC)
படத்திலுள்ள தலைப்புக்களை இப்படி மாற்றுவோம். பலர் ஃப என்பதை F இற்கு நிகராக வாசித்து வருவதால் நஃபந்தான் என்பதிலும் சிறு குழப்பம் ஏற்படலாம் என்பதால் அதற்கும் புதிய தலைப்பைத் தந்துள்ளேன்.
- Nehbandan - நகுபந்தான்
- Tabas - தபசு (ஈரான்)
- Boshruyeh - புசுரூயா
- Ferdows - பிர்தௌசு
- Qaen - காயின்
- Sarayan - சராயான்
- Birjand - பீர்ச்சந்து (மூல மொழியில் பீர் ஜந்த் என்று இரு சொற்களில் உள்ளது)
- Khusf - கூசபு
- Sarbisheh - சர்பீசா
- Zirkuh - சீர்கூகு
- Darmian - தர்மியான்
மேலுமுள்ள தலைப்புக்களைப் பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.--பாஹிம் (பேச்சு) 02:59, 14 திசம்பர் 2019 (UTC)
பின்னூட்டம் தருக
தொகுஇக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை (en:Nehbandan) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், சோழர் கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அதிலுள்ள {{முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி, இக்கட்டுரையை விரிவுபடுத்தி உள்ளேன். இதுபோல ஏறத்தாழ 2500 கட்டுரைகள் ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளன. அந்த அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் {{infobox settlement}} சொற்களுக்கு உரிய கட்டுரைகளை உருவாக்கி இணைத்துள்ளேன். மேலும், உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி File:South Khorasan counties-ta.svg பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். படத்திலுள்ள பெயர்கள் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து, அப்படத்தினை மேம்படுத்துவேன்.{{GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல கட்டுரைகளை உருவாக்கலாமா?--த♥உழவன் (உரை) 04:09, 3 திசம்பர் 2019 (UTC)
பின்னூட்டங்கள்
தொகு- விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:39, 9 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம். இது தேவையான எல்லா நகரங்களும் ஒரே வார்ப்புருவில் வரச் செய்வதால் ஒன்றிலிருந்து மற்றதற்கு எளிதில் நகரவும் ஒன்றுடனொன்றுக்கு உள்ள தொடர்புகளை எளிதில் விளங்கிக் கொள்ளவும் உதவும்.--பாஹிம் (பேச்சு) 04:05, 14 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம் --ஸ்ரீ (✉) 07:10, 14 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 13:56, 17 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம். இது ஒரு நல்ல உத்தியாக உள்ளது. ஒரு முன்மாதிரியாகக் கொள்ளும் அளவு இக்கட்டுரை உள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:17, 18 திசம்பர் 2019 (UTC)
- விருப்பம். சில கட்டுரைகளைப் படித்துப் பார்க்கும்போது சிறந்த கட்டுரையாகவே தோன்றுகிறது. மேலும் கட்டுரையின் தலைப்பிற்கு ஏற்ற உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது. போதுமான தகவல்கள் இல்லையெனில் அதனைக் குறிப்பிட்டு அக்கட்டுரையை மேம்படுத்தக் கோருவது நலம். அதைவிடுத்து ஒரே சாயலில் இருப்பதால் நிராகரிப்பது முறையானதல்ல. --இரா. பாலாபேச்சு 13:09, 19 திசம்பர் 2019 (UTC)
நடுநிலை
தொகு- தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு கட்டுரையை உருவாக்குதல் இயலாது. இம்முயற்சியில் நாம் அதிகபட்சம் 50 முதல் 100 சொற்களை மட்டுமே கூடுதலாக கட்டுரையில் சேர்க்க முடியும். 300 சொற்கள் என்ற இலக்கு இருக்கும்போது தகவல் பெட்டியிலுள்ள தகவல்களை விரிவாக்க முற்பட்டோமென்றால் அந்த உழைப்பு பயனளிக்கும் என்று உறுதியாக கூற இயலாது. புள்ளி விவரங்கள் மட்டுமே நிறைந்த கட்டுரையாகவே அது காணப்படும். போட்டிக் காலம் முடிவடைந்த பிறகு வேண்டுமானால் சொற்களின் இலக்கு ஏதுமின்றி உங்கள் திட்டத்தை முயற்சித்துப் பார்க்கலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 16:41, 17 திசம்பர் 2019 (UTC)
- முதலில் தற்போதுள்ளவற்றை நீக்கி, அவர்களின் ஆட்சி முறைமைகளை, நீங்கள் கூறிய சொல் எல்லைகளோடு விளக்குகிறேன். ஏனெனில், நாம் கூறும் சிற்றூர், ஊர், நகரம் என்ற நமது சொல்லாட்சி முறைமைகள் ஈரானியர் பின்பற்றுவதில்லை. அவர்கள் வரலாற்று அடிப்படையில் ஆட்சி முறைகளை அமைத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, நான் படித்தவரை மக்கள் வாழிடம் ஆகும். அவற்றிற்கு அவர்கள் மொழியில் பல பெயர்கள் உள்ளன. உடன் பின்னூட்டம் அறித்தமைக்கு நன்றி. --த♥உழவன் (உரை) 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
- {{முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி வேறு தலைப்புகளின் சுருக்கத்தை எடுத்தாள்வதில் தவறில்லை. இருப்பினும், கட்டுரையில் பெரும்பகுதி அத்தகையதாகவே இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் விதப்பான தலைப்புக்குறியதாக இருப்பது நல்லதல்ல. இந்தக்கட்டுரையில் அவ்வாறுள்ளதா என நான் முழுவதும் படித்துப் பார்க்கவில்லை. பிறகு பார்க்கிறேன். இணைய நிறுவனங்களில் நான் பணிபுரிகையில் content intensity என்பதை உள்ளடக்கத்தின் ஓர் அளவையாகக் கொள்வோம். பல கட்டுரைகளுக்குப் பொதுவான தகவல்கள் மிகுதியாகவும் குறிப்பிட்ட தலைப்புகளுக்கான உள்ளடக்கம் குறைவாகவும் இருந்தால் அந்த அளவை குறையும். அதைக்கருத்தில் கொண்டு, சற்று நீளம் குறைந்தாலும் விதப்பான தகவல்களை முன்னிறுத்தக் கோருகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:48, 18 திசம்பர் 2019 (UTC)
- //content intensity//(தலைப்புடனான உள்ளடக்கச் செறிவு) குறித்த அறிமுக உரைக்கு மிக்க நன்றி. அது குறித்த தெள்ளிய அறிவு நோக்கி நகருகிறேன்.--த♥உழவன் (உரை) 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
- புரிதலுக்கு நன்றி. ஒரு தளத்திலுள்ள வெவ்வேறு பக்கங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஒவ்வொரு பக்கத்துக்கும் தனிச்சிறப்பாக வரும் உள்ளடக்கத்தை ஒரு தேறலாகக் கொண்டால் அதன் அளவு செறிவைக் காட்டும். -- சுந்தர் \பேச்சு 06:25, 30 திசம்பர் 2019 (UTC)
- //content intensity//(தலைப்புடனான உள்ளடக்கச் செறிவு) குறித்த அறிமுக உரைக்கு மிக்க நன்றி. அது குறித்த தெள்ளிய அறிவு நோக்கி நகருகிறேன்.--த♥உழவன் (உரை) 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
- தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு நூறு கட்டுரைகளுக்கான தொடக்கப் பத்தியை நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்டு மேற்கொண்டு தலைப்பிற்குத் தொடர்புடைய செய்திகளை வழக்கமான முறையில் சேர்த்தால் என்ன? அந்த மாதிரி முயன்று பார்க்கலாமே.--TNSE Mahalingam VNR (பேச்சு) 17:34, 18 திசம்பர் 2019 (UTC)-
- ஆம். உங்கள் கூற்றினையே முதலில் பின்பற்றுகிறேன். --த♥உழவன் (உரை) 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
மாற்றுக்கருத்து
தொகு- எதிர்ப்பு பல ஆயிரக்கட்டுரைகளில் கிட்டதட்ட ஒரே மாதிரியாக தகவல்களை வெறும் கட்டுரை அளவை அதிகப்படுத்துவதற்காக முதன்மை கட்டுரை வார்ப்புரு சேர்த்து தருவதில் உடன்பாடில்லை. முதன்மை கட்டுரை வார்ப்புரு என்பது உபதலைப்பின் தகவல்கள் அதிகம் ஆகும் பொழுது, கட்டுரையின் நீளத்தை குறைப்பதற்கு, நீண்ட உப தலைப்பை தனி தலைப்பில் கட்டுரை எழுதுவர். பின்னர் ஆரம்பத்தில் உபதலைப்பாக கட்டுரையில் இருந்ததால், வரலாற்று ரீதியில் முதன்மை கட்டுரை என்று வார்ப்புரு இட்டு ஓரிரு வரிகள் எழுதுவர். கட்டுரை அளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை இப்படி செய்வதில் உடன்பாடில்லை. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:38, 18 திசம்பர் 2019 (UTC)
- {{முதன்மை}} வார்ப்புரு குறித்து யாவரும் அறிய விளக்கியமைக்கு நன்றி. கருத்துவேறுபாடு உள்ளவற்றை நீக்கி, பிறகு தனித்தனியாக விரிவு படுத்துகிறேன். அழைத்தவுடன் வந்து உங்கள் பணியடர்விலும் உடன் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி. --த♥உழவன் (உரை) 04:25, 21 திசம்பர் 2019 (UTC)
- எதிர்ப்பு நான் ஏற்கெனவே இக்கட்டுரைகள் குறித்து எனது கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். கட்டுரையின் அறிமுகப் பகுதியும், தகவல் பெட்டியும் தவிர மீதம் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். ஒரே தகவல்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் (நூற்றுக்கணக்கானவையாக இருக்கலாம்??) சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. இது விக்கி நடைமுறையல்ல. இப்போதில்லாவிடினும் வருங்காலத்தில் இவை அனைத்தும் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 07:17, 18 திசம்பர் 2019 (UTC)
- எதிர்ப்பு நான் ஏற்கனவே இதுபோன்ற கட்டுரைகளை ஏற்காததன் காரணத்தை கருவியில் பின்னூட்டம் மூலம் தெரிவித்துள்ளேன். ஊராட்சிக் கட்டுரைகள் இதுபோல சேர்க்கப்பட்டன என்பது வாதமாக வைத்தால் அவற்றில் மாநிலம், மாவட்டம், நகரம் போன்ற சொற்கள் மட்டுமே திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வரும். அவை அரசிடமிருந்து செய்திகள் பெறப்பட்டு சமூகத்தால் ஏற்பளிக்கப்பட்டு பின்னரே தானியக்கமாக எழுதப்பட்டன. அவற்றில் தலைப்பு குறித்த செய்திகளே விரிவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தலைப்பிற்கு தொடர்பற்ற இரண்டு வரிகளில் குறிப்பிட வேண்டிய செய்திகள் ஈரான் பற்றிய சில கட்டுரைகளில் பைட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டி சேர்க்கப்பட்டுள்ளன. தலைப்பை ஒட்டிய செய்திகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக பசுவைப்பற்றி எழுதவேண்டிய கட்டுரையில் தென்னை மரத்தைப் பற்றி எழுதிவிட்டு பசுவை இந்தத் தென்னை மரத்தில் தான் கட்டுவார்கள் என எழுதுவது எப்படி ஏற்றுக்கொள்ளவியலதோ, அது போலத்தான் ஈரானில் உள்ள நகரம், கிராமம், அல்லது மாகானங்கள் பற்றி எழுதும்பொழுது ஈரான் நாட்டைப்பற்றியும் அதற்கு ஏன் அப்பெயர் வந்தது என்பது பற்றியும் அதன் மாகாணங்களும் மாவட்டங்களும் எவ்வாறு பிரிக்கப்பட்டன, அவற்ரின் பெயர்கள் எவை என்பதையும் விரிவாக எழுதி, தலைப்பைப் பற்றிய சிலவரிச் செய்திகள் மட்டுமே இருக்கும் கட்டுரைகளும். இதேபோன்று தகவல் சட்டத்தை விரிவாக்குகிறேன் என இந்திய ஊர்கள் நகரங்கள் மற்றும் பிற கட்டுரைகளில் இந்தியா பற்றியும், தமிழ்நாடு பற்றியும், அந்த மாவட்டம் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துவிட்டு தலைப்பு தொடர்பாக ஒரு சிறிய பத்தி மட்டுமே தகவல்கள் தந்தால் அதுவும் அனைத்து கட்டுரைகளிலும் ஒரே தகவல்கள், மேற்கோள்கள் கூட மாறாமல் கொடுத்தால் எப்படியிருக்கும்? கீழ்க்கண்ட கட்டுரைகளை தயவு செய்து ஒரு முறை கவனியுங்கள்.
- ஒரே செய்திகள் ஆளுகை, புவியியல், மக்கள் தொகை போன்ற செய்திகளைத் திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வெட்டி ஒட்டியது போல் உள்ளன. போட்டிக்காகவெனினும் மற்ற போட்டியாளர்கள் தங்கள் நேரத்தைக் கொடுத்து கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் உருவாக்கும்பொழுது இப்படி எளிமையாக அனைத்துக் கட்டுரைகளிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே தகவல்களை இட்டு, கட்டுரை அளவையும் எண்ணிக்கையையும் கூட்டுவது சரியல்ல. மேலும் விக்கியின் தரத்துக்கும் ஏற்றதல்ல. இது போல இலட்சக்கணக்கில் உருவாக்கலாம் என்றால் பலராலும் இயலும். இவை மற்ற பயனர்களுக்கு ஒரு தவறான உதாரணமாகி விடும். எனவே அச்செய்திகள் நீக்கப்பட வேண்டும். எனக்கு இதில் உடன்பாடில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:26, 18 திசம்பர் 2019 (UTC)
4. எதிர்ப்பு மேலேயுள்ள காட்டுகளைப் பார்க்கையில் கட்டுரைக்கான தனியான தகவல்கள் சிறிய பகுதியாகவே இருப்பது தெரிகிறது. அது ஏற்புடையதன்று. -- சுந்தர் \பேச்சு 10:58, 19 திசம்பர் 2019 (UTC)
5.
6.
கூடுதல் செய்திகள்
தொகுதற்போது நஃபந்தானைப் பற்றி கூடுதல் செய்திகள் உரிய இணைப்போடு இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்திகள் சேர்க்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:59, 18 திசம்பர் 2019 (UTC)
மேலும் கூடுதல் செய்திகள் உரிய இணைப்புகளோடு தரப்பட்டுள்ளன. தொடர்புடைய வெளி இணைப்புகளும் பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. தற்போது தரப்பட்ட இணைப்புகள் மற்றும் செய்திகள் முழுக்க முழுக்க நஃபந்தான் தொடர்புடையதாகவே உள்ளன என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுரை அமைதல் தலைப்புக்குப் பொருத்தமாக அமையும் என்று கருதுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:46, 18 திசம்பர் 2019 (UTC)