வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சனவரி 2016
- சனவரி 31:
- நைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ அராம் போராளிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். (Sahara Reporters)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் சியா பள்ளிவாசல் ஒன்றில் இசுலாமிய அரசுப் போராளிகள் நடத்திய இரட்டைத்-தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் வரை உயிரிழந்தனர். (என்பிசி)
- மாஸ்கோவின் கிழக்கு சோக்கல்னிக்கி மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 12 பேர் வரை உயிரிழந்தனர். (ஆர்டி)
- 2016 ஆத்திரேலிய டென்னிசு ஓப்பன்: ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச் ஐக்கிய இராச்சியத்தின் ஆண்டி மறியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (ஏபிசி), (பிபிசி)
- வட மாகாண முதல்வர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை அதிகாரப் பகிர்வை உள்ளடக்கி அரசியல் தீர்வு வரைவு ஒன்றை வெளியிட்டது. (பிபிசி)
- சனவரி 30:
- ஜமேக்காவில் இசீக்கா தீநுண்மம் பாதித்த 4-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்குழந்தை அண்மையில் டெக்சஸ் சென்று திரும்பியவது எனக் கூறப்படுகிறது. (யூஎஸ்ஏ டுடே)
- கொலொம்பியாவில் 2100 கர்ப்பிணிப் பெண்கள் சீக்கா வரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் (ராய்ட்டர்சு)
- 2016 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று பெண்களுக்கான இறுதிப் போட்டியில் செருமனியின் ஏஞ்சலிக் கெர்பர் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை 6-4, 3–6, 6–4 என்ற கணக்கில் வென்றார். (ஏபிசி)
- சனவரி 21:
- கிபி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்போடியாவின் கெமர் பேரரசுக் கால கால சிவ-மாலிய கலையம்சமான அரிகரன் சிலையின் தலைப்பாகம் பிரெஞ்சு அரசால் கம்போடியாவிற்கு 126 ஆண்டுகளுக்குப் பின்பு திருப்பியளிக்கப்பட்டது. (கம்போடியா டுடே)
- சனவரி 16:
- புர்க்கினா பாசோ, தலைநகர் வாகடூகுவில் தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி போராளிகளால் தாக்கப்பட்ட ஸ்பிளென்டிட் உணவு விடுதி மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி 126 இற்கும் அதிகமானோரை விடுவித்தனர். மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி), (பிபிசி)
- புர்க்கினா பாசோவின் வடக்கே இரண்டு ஆத்திரேலியர்கள், ஒரு மருத்துவரும் அவரது மனைவியும், கடத்தப்பட்டனர். மாலியை தளமாகக் கொண்ட அல் காயிதா-தொடர்புடைய இசுலாமிய இயக்கம் ஒன்று இதற்கு உரிமை கோரியுள்ளது. (ஏபி)
- சிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய அரசுத் தாக்குதலில் கிழக்கு சிரியாவில் குறைந்தது 75 படையினரும், துணை இராணுவக் குழுவினரும் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- தாய்வான் தேர்தல்களில் ஆளும் குவோமின்டாங் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. 1911 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இக்கட்சி தோற்றுள்ளது. (கார்டியன்)
- சனவரி 15:
- புர்க்கினா பாசோ, தலைநகர் வாகடூகுவில் இரண்டு உணவகங்களில் போராளிகள் தாக்கியதில் 20 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். (பிபிசி) (கார்டியன்)
- சோமாலியாவின் தெற்கே அல் சபாப் தீவிரவாதிகள் ஆப்பிரிக்க ஒன்றியத் தளம் ஒன்றைத் தாக்கிக் கைப்பற்றினர். பல படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- விக்கிப்பீடியா தனது 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. (Wikipedia)
- பிரான்சு, ரேன் நகரில் போர்த்துக்கீச மருந்து நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட ஒரு மருந்தியக்கச் சோதனையில் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது, ஐவருக்கு கடும் சுகவீனம் ஏற்பட்டது. (கார்டியன்)
- சனவரி 6:
- வடகொரியாவில் சஞ்சிபேகம் என்ற இடத்தில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கம் அணுகுண்டு வெடிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. தாம் வெற்றிகரமாக ஐதரசன் குண்டு சோதனைய நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. (ஏஎஃப்பி) (ஏபி) (புளூம்பேர்க்) (கார்டியன்)
- இலங்கையில் வடமாகாணத்தின் கிராமப்புறங்களில் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சகம், 100 வண்டிகளைக் கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவையொன்றை ஆரம்பித்தது. (பிபிசி)
- 1404.49 காரட்டுகள் எடை கொண்ட உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் கருதப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- 2015 ஸ்டார் வார்ஸ் திரைப்படம் அமெரிக்கா, மற்றும் கனடாவில் அவதார் வசூலை மிஞ்சியது. (ஒலிவுட் ரிப்போர்ட்டர்)
- சனவரி 5:
- ஆப்கானித்தான், தெற்கு எல்மண்டுவில் ஆப்கானிய இராணுவத்தினருடன் இணைந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். (வாசின்ஹ்டன் போஸ்ட்)
- சீனாவின் யின்சுவான் நகரில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- சனவரி 4:
- இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையருகே இம்பால் நகருக்கு 20 கிமீ தூரத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். (என்பிசி) (டைம்சு ஒஃப் இந்தியா), (ஏபி)
- ஈராக்கின் மத்திய பகுதியில் இரண்டு சுணி இசுலாமியப் பள்ளிவாசல்கள் குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன. (ஏஎஃப்பி)
- ஐக்கிய இராச்சியத்துக்காக வேவு பார்ததாகக் கூறப்படும் தமது ஐந்து உறுப்பினர்களைக் கொலை செய்யும் காணொளி ஒன்றை இசுலாமிய அரசு வெளியிட்டது. (ஏஎஃப்பி)
- நான்கு புதிய தனிமங்கள் (113, 115, 117, 118) தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டதை பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் உறுதிப்படுத்தியது. இவை தற்காலிகமாக உன்னுன்டிரியம், உன்னுன்பென்டியம், உனுன்செப்டியம், உனுனோக்டியம் ஆகிய பெயர்களைப் பெற்றுள்ளன. (கார்டியன்)
- சனவரி 3:
- இந்தியாவில் பயங்கரவாதம்: பஞ்சாப் பகுதி பட்டான்கோட்டில் உள்ள இந்திய வான்படைத் தளத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. இரண்டு நாட்களில் அறு தீவிரவாதிகளும், ஏழு இராணுவ மற்றும் துணை இராணுவத்தினரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். (டிஎன்ஏ)
- சவூதி அரேபியாவில் சியா மதகுரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து, ஈரானில் உள்ள சவூதி தூதரகம் பொதுமக்களால் தாக்கப்பட்டு தீயிடப்பட்டது. சவூதி அரேபியா ஈரானுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. (பிபிசி)
- சனவரி 2:
- சவூதி அரேபியாவில் முடியாட்சியை விமரிசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட நிம்ர் அல் நிம்ரு என்ற சியா இசுலாமிய மதகுரு உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. (பிபிசி)
- ஜெய்ஸ்-இ-முகமது குழுவின் உறுப்பினர்கள் என நம்பப்படும் தீவிரவாதிகள் இந்தியாவின் பஞ்சாப் பகுதி, பட்டான்கோட் வான்படைத் தளத்தைத் தாக்கினர். இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். (டிஎன்ஏ)
- சனவரி 1:
- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: டெல் அவீவ் நகரில் இரவு உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், எட்டுப் பேர் காயமடைந்தனர். (ஆரட்சு)
- மணிலாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பில் இடம்பெற்ற தீவிபத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் எரிந்தன. இருவர் உயிரிழந்தனர். (ஏபி)
- சீனாவில் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்கூடியது இரு குழந்தைகள் பெறும் திட்டம் அமுலுக்கு வந்தது. (ஏஎஃப்பி)
- இட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் என்ற நூலின் பதிப்புரிமைக் காலம் முடிவடைந்ததை அடுத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் செருமனியில் பதிப்பிக்கப்படவுள்ளது. (பிபிசி)
- யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை, கோப்பாய் ஆகிய இடங்களில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 700 ஏக்கர் நிலம் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. (தி ஐலண்டு)