விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு81

தமிழ்நாடு மாவட்ட வார்ப்புருக்கள்

தொகு

மாவட்டங்கல் இந்தியாவுக்கே பொதுவானவை என்பதால் மேலதிக உரையாடல்கல் அங்கு நகர்த்தப்பட்டுள்ளன. பார்க்க பகுப்பு பேச்சு:இந்திய மாவட்டம் வார்ப்புருக்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:50, 4 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தொகு
 

I apologize for addressing you in English. I would be grateful if you could translate this message into your language.

The Wikimedia Foundation is conducting a request for comment on a proposed program that could provide legal assistance to users in specific support roles who are named in a legal complaint as a defendant because of those roles. We wanted to be sure that your community was aware of this discussion and would have a chance to participate in that discussion.

If this page is not the best place to publicize this request for comment, please help spread the word to those who may be interested in participating. (If you'd like to help translating the "request for comment", program policy or other pages into your language and don't know how the translation system works, please come by my user talk page at m:User talk:Mdennis (WMF). I'll be happy to assist or to connect you with a volunteer who can assist.)

Thank you! --Mdennis (WMF)02:14, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

இவ்வசதி உள்ளதா

தொகு
  • [http:en.wikipedia.org/wiki/Wikipedia:Twinkle *] இவ்வசதி தமிழ் விக்கியில் உள்ளதா? இல்லையெனில் பயன்படுத்திப் பார்த்து கட்டுரையும் எழுதுங்களேன். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு)

இல்லாத கட்டுரைகளை சேர்த்தல்

தொகு

பயனர்கள் தேடும் தலைப்புகளுக்கான முடிவுகள் பக்கத்தில், “தேடப்படும் தலைப்பு பக்கத்தை உருவாக்கவும்” என்ற சிவப்பு இணைப்பிற்கு கீழே, முடிவுகள் இல்லையெனில், அத்தலைப்பை கோரப்படும் பக்கத்தில் தெரிவிக்குமாறு பயனருக்கு செய்தி காட்ட முடியுமா? பயனர்கள் தேடிய தலைப்புகளை பட்டியலில் பார்க்கும் வசதி (சிறப்பு:logusers போல) உள்ளதா? அப்பட்டியல் இருந்தால், முக்கியமான தலைப்புகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளித்து உருவாக்க வசதியாயிருக்குமே? நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 6 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

+1   விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 06:44, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
+1. en:Wikipedia:Most wanted articles, en:Wikipedia:Most missed articles போல நாமும் உருவாக்க வேண்டும். http://wikistics.falsikon.de/2008/wikipedia/en/wanted/ - இதுபோல தமிழ் விக்கிக்கும் தரவுகளைப் பெற முடியுமா எனப் பார்க்க வேண்டும். சிரீகாந்து உதவுவார் என நினைக்கிறேன். விக்கிமீடியா கருவிப்பட்டறையில் (toolserver) கணக்கு ஒன்று இருந்தால் http://dumps.wikimedia.org/other/pagecounts-raw/2012/ தரவுகளில் இருந்து நாமே எளிதில் பெறலாம். -- சுந்தர் \பேச்சு 07:18, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
+1   விருப்பம் --மணியன் (பேச்சு) 07:54, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆமாம். இத் தரவுகள் எமக்கு மிகவும் உதவும். --Natkeeran (பேச்சு) 16:54, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
+1  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:29, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பேச்சு:கடைச்சங்கம்

தொகு

பேச்சு:கடைச்சங்கம் --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:57, 7 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்

தொகு

இங்குள்ள பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் பயனர் பக்கங்களைத் தவிர்ந்த அனைத்து பக்கங்களும் சீர் செய்யப்பட்டுள்ளன. புதிய பக்கங்களை உருவாக்கியவுடன் அறுபட்ட கோப்பு இணைப்புக்களை சீர் செய்வது எதிர்காலத்தில் துப்புரவு வேலையை இல்லாமல் செய்துவிடும். இது நம் கைகளில்தான் உள்ளது! --Anton (பேச்சு) 05:56, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி அன்ரன்.--Kanags \உரையாடுக 06:54, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

//புதிய பக்கங்களை உருவாக்கியவுடன் அறுபட்ட கோப்பு இணைப்புக்களை சீர் செய்வது// இக்கோப்புகளில் நாடுகளின் கொடிகள், சின்னங்கள் இருக்குமிடத்து ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி நியாய பயன்பாட்டின் படி பதிவேற்றல் வேண்டும், வெறுமனே அறுபட்ட கோப்பினை நீக்கல் சரியான தீர்வாக இராது--சங்கீர்த்தன் (பேச்சு) 18:20, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கருத்துக்கு நன்றி. முடிந்தால் அதைச் செய்துவிடுங்கள். --Anton (பேச்சு) 00:32, 9 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அறுபட்ட கோப்பு இணைப்புகளை முனைப்புடன் சீர் செய்த அன்ரன் அவர்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும். இனி புதிய பக்கங்களில் அறுபட்ட பக்கங்கள் இல்லாது உடனேயே சீர் செய்வது நல்ல விக்கிப் பண்பாக அமையும். இருப்பினும் சில வார்ப்புருக்களில் வழு உள்ளமையால் (அவற்றை அன்ரன் நீக்கி விட்டாரா எனத் தெரியாது) படிமங்களிட்டாலும் அவை "அறுபட்ட நிலையில்" காட்டப்படாதிருக்கின்றன. தமது பட்டறிவின் அடிப்படையில் இவற்றைச் சரிசெய்வதற்கான குறிப்புகளை அன்ரன் இடலாம். சங்கீர்த்தன் கூறுவதுபோல இணைப்புக்களை நீக்குவது சரியான தீர்வன்று. ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி நியாய பயன்பாட்டின் படி பதிவேற்றுகின்ற கடப்பாடும் உருவாக்கியவருக்கு உண்டு.--மணியன் (பேச்சு) 05:02, 9 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்டன் இதுவரைகாலமும் தமிழ் விக்கியில் தேங்கிக்கிடந்த அறுபட்ட இணைப்புக்களில் பெரும்பாலானவை கூகிள் கட்டுரைகளால் உருவானவை அங்கு அறுபட்ட இணைப்புக்களாக இருந்தவை எங்கும் கிடைக்காத கோப்புக்களே எனவே அவற்றை நீங்கள் நீக்கியது மிகப்பயன் தரக்கூடிய செயல், அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்,....ஆனால் தற்போது உருவாக்கப்படும் கட்டுரைகளில் உள்ள அறுபட்ட இணைப்புகளிற்கு ஆங்கில விக்கியில் நிச்சயம் ஓர் கோப்பு இருக்கும்,...எனவே யாரேனும் புதிய கட்டுரைகளில் அறுபட்ட கோப்புக்களை கண்டால் ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி நியாய பயன்பாட்டின் படி பதிவேற்றல் வேண்டும் என்றே கூறினேன்...மாறாக அக்கோப்பினை நீக்கினால் மீண்டும் அக்கோப்பினை இணைப்பவரிற்கு இரட்டிப்பு வேலையையே கொடுக்கும்..நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 07:55, 9 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மணியன், சங்கீர்த்தன், உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி! அறுபட்ட கோப்பு இணைப்புகள் பின்வரும் விதங்களில் காணப்பட்டன.

கூகிள் கட்டுரைகளால் உருவானவை

இங்குள்ளவற்றை நீக்கிவிடுவது சிறந்தது. கட்டுரைகளை மீளத் தொகுக்கும்போது பொருத்தமான படங்களை இணைக்கலாம்.

ஆ.வி. இல் இருந்து பிரதி பண்ணப்பட்ட, பொ.வி. இல் இல்லாதவை

இங்கு பெரும்பாலானவை பிரதேசங்களின் சின்னம், கொடி போன்றனவாகவிருந்தன.

வார்ப்புருக்களினாலும், வார்ப்புருக்களைத் தவறாகப் பயன்படுத்தியதாலும் உருவானவை

வார்ப்புருக்களில் காணப்பட்ட பிழைகளைத் திருத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு: “Taxobox”, “இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி” ஆகிய வார்ப்புருக்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. வார்ப்புருக்களிலுள்ள ஆங்கில பெரிய, சிறிய எழுத்துக்கள் மாற்றப்பட்டுத் தொகுக்கும்போது அறுபட்ட கோப்பு இணைப்புக்களை ஏற்படுத்தும்.

  • எ.கா 1: | status_system=iucn3.1 இங்குள்ள iucn என IUCN மாறக்கூடாது.
  • எ.கா 2: Infobox Indian jurisdiction/Parameters என்ற இந்த வார்ப்புருவில் உள்ளவாறு பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்கள் எழுதப்பட வேண்டும்.
ஆ.வி. இல் இருந்து அழிக்கப்பட்டவை (பொ.வி. இல் இல்லாதவை)

நீண்ட காலத்திற்கு முன் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் அதற்காக கோப்புக்கள் எங்குமில்லை. எனவே அவை நீக்கப்பட்டுவிட்டன.

அறுபட்ட கோப்பு இணைப்புக் கொண்டவையாக பகுப்பில் காணப்பட்டவை

கோப்புகள் உள்ளன. ஆனால், இங்கு பட்டியலிடப்பட்டுள்ளவை. இவற்றிற்கு இற்றைப்படுத்தல் தேவை. ஆகவே, குறிப்பிட்ட கட்டுரையினை தொகுத்தலின் திறந்து எதுவும் செய்யாது சேமித்தால் சரியாகிவிடும்.

‘’’கருத்து’’’ //ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி நியாய பயன்பாட்டின் படி பதிவேற்றுகின்ற கடப்பாடும் உருவாக்கியவருக்கு உண்டு// இது மிகமிகத் தேவையான ஒரு விக்கிப் பண்பு எனக் கூறலாம் என நினைக்கிறேன்.

நான் சில கோப்புக்களை ஆ. விக்கியில் இருந்து தரவிறக்கி நியாய பயன்பாட்டின் படி பதிவேற்றவில்லை. காரணம்:

  • வேண்டுமென்று செய்யாதுவிட்டாலும்,உருவாக்கியவருக்குப் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். அது பாரிய நிலுவையாகி வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்துள்ளது. சீர் செய்ய பல நாட்கள் தேவை (உழைப்பு, நேரவிரயம் உட்பட). குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்டுரை மேம்படுத்தாதுவிட்டால் நீங்குவது போல் நானும் அறுபட்ட இணைப்புக்களை நீக்கிவிட்டேன்.
  • பல கட்டுரைகள் சிறு கட்டுரைகளாக, தொகுத்தல் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதோடு சரி. பார்க்கப்பட்ட புள்ளி விபரம் 0 (மாதக்கணக்கில்). இவ்வாறு முக்கியத்துவமற்றவற்றுக்கு நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.

ஒரே வார்ப்புரு தமிழிலும் ஆங்கிலத்திலும் காணப்படுவது தொகுத்தல் செய்வது சிக்கலை ஏற்படுத்தும். ஒன்று இற்றைப்படுத்தப்பட்டிருக்க, மாற்றது பிழைகளுடனே காணப்படுகின்றது.

அறுபட்ட கோப்பு இணைப்புக்களை சீர்செய்யும்போதுதான் த.வி. இன் நிலை தெரிந்தது. மிகவும் தரமற்ற கட்டுரைகள் உட்பட விக்கிப்பீடியா துப்புரவு பணிகள் ஏராளம். அது தவிர 59வது இடத்தில் இருந்த நாம் இன்று 60வது இடத்தில்! --Anton (பேச்சு) 07:09, 10 செப்டெம்பர் 2012 (UTC)  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:50, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்டன், தனியாளாக நின்று 100 ஓட்டங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைப்பதைப் போல, கிட்டத்தட்ட தனியாளாக 1000+ கட்டுரைகளில் படிமங்களைச் சீர் செய்துள்ளீர்கள். மிக அரிய, பொறுமையைச் சோதிக்கும் பணி. உளமார்ந்த நன்றி. படிமங்களைச் சீர் செய்ய நீங்கள் மேற்கொண்ட அணுகுமுறை ஏற்புடையது.

//அறுபட்ட கோப்பு இணைப்புக்களை சீர்செய்யும்போதுதான் த.வி. இன் நிலை தெரிந்தது. மிகவும் தரமற்ற கட்டுரைகள் உட்பட விக்கிப்பீடியா துப்புரவு பணிகள் ஏராளம். //

இவற்றில் மிக உடனடியாகவும் முக்கியமாகவும் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு அல்லது மூன்று பணிகளைக் குறிப்பிட முடியுமா? சரியான விதத்தில் கவனத்தை ஈர்க்கும் வழிகளைக் கண்டறிந்தோம் என்றால், படிமங்கள் விசயத்தில் நீங்கள் அக்கறை காட்டியது போல் இவற்றில் வேறு எவரேனும் கவனம் செலுத்தக்கூடும். நன்றி--இரவி (பேச்சு) 19:37, 11 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அறுபட்ட இணைப்புகள் அனைத்தையும் சரிசெய்த உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அன்டன். -- சுந்தர் \பேச்சு 07:09, 13 செப்டெம்பர் 2012 (UTC)   விருப்பம்--Anton (பேச்சு) 08:05, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


இரவி, உங்கள் கேள்வியைக் கவனிக்கத் தவறி விட்டேன். இப்போதுதான் கவனித்தேன் :( கூகிள் கட்டுரைகள் (1193) பாரிய தலைவலிபோல் உள்ளன. அர்த்தமற்ற, தமிங்கிலம் கலந்த, வசிப்பவருக்கு குழப்பமான தமிழில் அமைந்த கட்டுரைகள். கூகிள் கட்டுரைகளை சீர் செய்தாலே பாதிக்கு மேற்பட்ட குப்பைகள் நீங்கிவிடும். அதிகமாக பார்க்கப்படும் கட்டுரைகளை முன்னுரிமைப்படுத்தி முதற்கட்டமாக சீர் செய்யலாம். இடைக்கிடையே/அடிக்கடி கூகிள் கட்டுரைகளை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரையாகவும் அறிவிக்கலாம்.

பகுப்பு:சான்றுகோள் இல்லாக் கட்டுரைகள், பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள், பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் பக்கங்கள் நம்பகத் தன்மையினை கேள்விக்குட்படுத்தும் கட்டுரைகள். இவற்றில் பெரும்பகுதி கூகிள் கட்டுரைகளில் காணப்படுகின்றன. பலவற்றிற்கு ஆ.வி. இலிருந்து சான்றுகோளைப் பெறலாம், ஆனால் த.வி. இல் மட்டுமே உள்ள கட்டுரைகள் கவனிக்கத் தக்கன.

பல வருடங்களாக விக்கிப்பீடியா துப்புரவுப் பகுதியில் தேங்கி உள்ள வேலைகளைப் பார்க்கும்போது, எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு "விக்கிப்பீடியா துப்புரவு" திட்டம் தொடங்கலாமா என எண்ணத் தோன்றுகின்றது. "விக்கிப்பீடியா துப்புரவு வாரம்" என்று ஏதும் உள்ளதா? :)

குறுங்கட்டுரைகள் ஏராளம்! த.வி.யைத் தேடி வருபவருக்கு 3 வரிகள் என்ன தகவலைக் கொடுக்க முடியும்? குறுங்கட்டுரைகளாக வார்ப்புரு இடப்படாதவைக்கும் வார்ப்புரு இட்டால் குறுங்கட்டுரைகள் பகுப்பு நிரம்பிவிடும் (அதில் நான் தொடங்கிய கட்டுரைகள் பலவும் போய்விடும்).

சில கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக இருக்க, பேச்சுப் பக்கமோ பல மடங்கு பெரிதாகக் காணப்படுகின்றன. பேசித் தீர்க்க வேண்டியது தேவைதான். அதற்காக பேசிக் கொண்டே இருப்பதா? இந்த வரியைப் பெரிதுபடுத்த வேண்டாம். தற்போது நான் விவாதத்திற்குத் தயாராக இல்லை. :-) --Anton (பேச்சு) 08:05, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்டன், உங்கள் மறுமொழியை மிகத் தாமதமாகவே கண்டு அதனினும் மிகத் தாமதமாக மறுமொழி இடுவதற்குப் பொறுக்கவும். கூகுள் கட்டுரைகளைச் சீராக்க ஏற்கனவே பலமுறை முயன்று விட்டோம். இனி அதற்கு ஒரு விக்கிப்பீடியர் பிறந்து தான் வர வேண்டும் என நினைக்கிறேன் :( உடனடியாக பல துறை கட்டுரைகளில் சான்று கோள் சேர்ப்பதும் அயரச் செய்யும் பணியே. குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதை முன்னிறுத்தலாம் என்று நினைக்கிறேன். துப்புரவு வாரம் என்ன மாதம் அல்லது ஆண்டே அறிவிக்கலாம் :) நெடுநாள் பங்களிப்பாளர்கள் நடப்பு நிகழ்வுகள் தவிர்த்த மற்ற புதிய கட்டுரைகள் ஆக்கத்தை நிறுத்திக் கொண்டு முற்றிலும் துப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட வேண்டுகோள். குறைந்தது 50,000 கட்டுரைகள் ஆக்கும் வரையோ தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு வரையோ இதனை முயலலாம். இவை முக்கியமான மைல்கற்கள் என்பதால் பல விசயங்களுக்கும் இதனை ஒரு அளவுகோலாக வைக்க வேண்டி இருக்கிறது :)--இரவி (பேச்சு) 14:44, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், சேலம், செப்டம்பர் 11, 2012

தொகு

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தர் நகர், பெரிய களம், நெய்க்காரப்பட்டி, சேலம்-63610 இல் 11, செப்டம்பர்,2012 செவ்வாய்க் கிழமை,நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் நிகழ உள்ளது; ஆர்வமுள்ள மேனிலைப்பள்ளி முதல்வர் / தலைமையாசிரியர், தங்கள் பள்ளியிலிருந்து மூன்று (3) மாணாக்கர்களை மட்டும் பரிந்துரைக் கடிதத்துடன் பயிலரங்கில் பங்கேற்க அனுப்பி வைக்க விழைகிறேன். பயிலரங்கக் பதிவுத்தொடர்பிற்கு: ஒருங்கிணைப்பாளர்: கணினி அறிவியல்துறை மற்றும் தமிழ்த்துறை திரு இரா. மணிகண்டன்,துறைத்தலைவர்-9092828524 முனைவர் அ.அறிவழகன், துறைத்தலைவர்-9865520132 இணைப் பொறுப்பாளர்- திரு சி.நந்தகுமார்-9942241408. --Thamizhpparithi Maari (பேச்சு) 18:36, 8 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

காணொளி ஏற்றம்

தொகு

[1] இக்காணோளியை என் உறவினர் ஒருவர் ஏற்ற முயன்றார். விக்கி பார்மட் .ogv டோட்டல் வீடியோ கன்வர்டரில் இல்லை. .mp4 காணொளியை விக்கியில் தரவேற்ற இயலுமா? பலவும் முயன்று பார்த்து .gif பார்மட்டில் அதை ஏற்றினார். எங்கலிடம் இருக்கும் இணையவசதிக்கு அதையும் தெளிவாக பார்க்க இயலவில்லை. தரவிறக்கவும் முடியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:10, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ogv காணொளிகளை மட்டுமே விக்கியில் தரவேற்ற இயலும். உதவிக்கு commons:Help:Converting video--சண்முகம்ப7 (பேச்சு) 04:36, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Wikidata is getting close to a first roll-out

தொகு
 

(Apologies if this message isn't in your language.)

As some of you might already have heard Wikimedia Deutschland is working on a new Wikimedia project. It is called m:Wikidata. The goal of Wikidata is to become a central data repository for the Wikipedias, its sister projects and the world. In the future it will hold data like the number of inhabitants of a country, the date of birth of a famous person or the length of a river. These can then be used in all Wikimedia projects and outside of them.

The project is divided into three phases and "we are getting close to roll-out the first phase". The phases are:

  1. language links in the Wikipedias (making it possible to store the links between the language editions of an article just once in Wikidata instead of in each linked article)
  2. infoboxes (making it possible to store the data that is currently in infoboxes in one central place and share the data)
  3. lists (making it possible to create lists and similar things based on queries to Wikidata so they update automatically when new data is added or modified)

It'd be great if you could join us, test the demo version, provide feedback and take part in the development of Wikidata. You can find all the relevant information including an FAQ and sign-up links for our on-wiki newsletter on the Wikidata page on Meta.

For further discussions please use this talk page (if you are uncomfortable writing in English you can also write in your native language there) or point me to the place where your discussion is happening so I can answer there.

--Lydia Pintscher 13:39, 10 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

60ஆம் இடம் முக்கியமா அல்லது ஆழம் முக்கியமா?

தொகு

பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு

கூட்டுமுயற்சியில் பகுப்பு

தொகு

பார்க்க விக்கிப்பீடியா பேச்சு:இந்த வாரக் கூட்டு முயற்சி#கூட்டுமுயற்சியில் பகுப்புகள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:44, 12 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் இடைமுகத்தில் பிழை

தொகு

கவனிப்புப் பட்டியல் பக்கத்தில், பேச்சுப் பக்கங்களைக் தவிர்த்து என வருகிறது. திருத்துங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:32, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று.. இங்கு அந்த தகவல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மீடியாவிக்கி:Watchlist-details, betawiki:MediaWiki:Watchlist-details/ta ஆகிய இரண்டு இடங்களிலும் திருத்தப்பட்டது--சண்முகம்ப7 (பேச்சு) 10:35, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இது போன்ற வேண்டுகோள்களை விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் பக்கத்தில் இடலாம்--இரவி (பேச்சு) 06:15, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆஸ்திரே−யாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!

தொகு

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-New%20Delhi&artid=662078&SectionID=260&MainSectionID=260&SEO=&Title=%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E2%88%92%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2050,000%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF!

ஒப்பு நோக்கவும்
  1. //தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத்(Tasmania) தீவில் இன்றுமிருத்தல்.// -பாவாணர்

  1. Aboriginal Australians descend from the first humans to leave Africa, DNA sequence reveals[2]

செல்வா ஏற்கனவே இதை பகிர்ந்திருந்தார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:19, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள்

தொகு

சிறப்புக்கட்டுரைகள் நியமனங்கள் பலகாலமாக நடத்தப்படவில்லையே. அதிலும் சிறிது கவனம் செலுத்தலாம்--பிரஷாந் (பேச்சு) 14:53, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"சிறப்புக் கட்டுரைகள் உருவாக்குவதை விட முதற்பக்க கட்டுரையின் தரமளவு சில அடிப்படை கட்டுரைகளை உருவாக்குவது சிறந்தது" என்று முன்பு இரவி கூறியிருந்தார். தற்போது முதற்பக்க கட்டுரைகள் போதுமானதளவு உள்ளதாக தெரிகிரது. மாதம் ஒன்றாவது முயன்று பார்க்கலாம். தள அறிவிப்பில் விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:50, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இன்னும் பல துறைகளில் போதுமான அளவு அடிப்படைக் கட்டுரைகளும் முதற்பக்கக் கட்டுரைகளும் இல்லை. முதற்பக்கக் கட்டுரைகளில் ஒரே துறையைச் சேர்ந்த சில கட்டுரைகளே தொடர்ந்து இடம்பெறுவதையும் காணலாம். ஆனால் இதற்காக சிறப்புக் கட்டுரை முயற்சியை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றில்லை. தற்போது முதற்பக்கக் கட்டுரைகளுக்கும் சிறப்புக் கட்டுரைகளுக்கும் சிறிதளவு வேறுபாடே உள்ளது. எனவே, சிறப்புக் கட்டுரை தகுதியை மீள்வரையறை செய்து ஏற்கனவே உள்ள சிறப்புக் கட்டுரைகளையும் அதன் அடிப்படையில் மறுதேர்வு செய்வது நன்று--இரவி (பேச்சு) 06:00, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் இழிவான கருத்துப் பிரச்சாரம்

தொகு

பயனர்கள் Sivane, Sivam29 என்பவர்கள் நடுநிலைமை என்ற பெயரில் இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் இழிவான கருத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள். விக்கிக்பீடியாவின் நிலை என்ன? இப்படியெல்லாம் எழுதலாமா? விக்கிப்பீடியா நிர்வாகம் சிறந்த முடிவை எடுக்கும் என்பதால் இதை ஒருவேண்டுகோளாக முன் வைக்கின்றேன். நன்றி.−முன்நிற்கும் கருத்து 68.71.76.242 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கவலை வேண்டாம் நண்பரே!. தவறான உள்ளடக்கங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:45, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நடுநிலை எனும் பெயரில் இதே விக்கியில் மதத்தின் புகழ் பரப்ப பட்டுக் கொண்டிருக்கிறது. அடிப்படை ஆதாரமற்ற பலவற்றினை இங்கு நடுநிலை என்று ஏற்கின்றார்கள். நான் இழிவான பிரச்சாரமொன்றை கையில் எடுக்கவில்லை. குரான் புனிதமானது என்று சொல்லுவதை நடுநிலையற்ற தன்மையாக கருதுகிறேன். குரான் புனிதமானது என்று இசுலாமியர்களால் நம்பபடுகிறது என்பதே நடுநிலையாகும். விமர்சனங்களை விக்கியில் வரவேற்க ஆளில்லை என்பதை அறிவேன். உலகம் முழுவதுமே மதத்தின் மீதான விமர்சனங்களை மறைக்க நினைக்கும் போது, விக்கி மட்டும் விதிவிலக்கா என்ன. விமர்சனங்களற்ற மதம் சார்ந்த கட்டுரைகள் பெரிய முரன்பாட்டினை மக்களுக்குள் கொண்டு செல்லும். விமர்சனங்கள் என்று வீண் பழி சுமத்துவதாக கருதவேண்டாம். நடுநிலையாளர்கள் அதனை திருத்தி சமன் செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். என்னைத்தவிற மற்ற அனைவறுமே மதத்தின் மீதான விமர்சனங்களை வெறுப்பதாக அறிகிறேன்.

குறைந்த பட்ச நடுநிலைத் தன்மையுடனாவது இனி மதம் சார்ந்த கட்டுரைகளை விக்கியில் எழுதுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன். மதம் சார்ந்த கட்டுரைகளை மதபிரட்சாரமாக மதம் சார்ந்தவர்கள் எழுதும் போது, அதை விமர்சித்து எழுதுவதை மட்டும் ஏனோ இழிவு பிரச்சாரமாக கருதும் பயனர்களை விக்கி அதிகம் கொண்டிருப்பதால்,..

நடுநிலை என்பது என்ன? மதபுகழ்ச்சிகளை விக்கி அனுமதிக்கிறதா? விமர்சனங்களை விவரிக்க அனுமதியில்லையா? விமர்சனங்களுக்கான விதிமுறைகள் என்ன? விமர்சனங்களை முன் வைக்கும் போது எத்தகைய மேற்கொள்களை காட்ட வேண்டும்?

என்பதை போன்ற பலகேள்விகளுக்கு விக்கி இங்கு பதில் தரும்வரை நான் காத்திருக்கிறேன். மதபோதனைகள் செய்து குழந்தைகளை மதசிந்தையுடன் பிணைப்பதை விக்கி விரும்பாது என்று நம்புகிறேன். அதிக பெரும்பான்மை மிக்க ஆத்திகர்களுக்கு மத்தில் இதனை எதிர்ப்பார்த்து இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விமர்சனங்களை ஏற்காத விக்கியின் கட்டுரைகள் மிகவும் நடுநிலையற்ற போக்கினை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகளுக்காக காத்திருக்கிறேன். அதுவரை விமர்சனங்களையும் தவிர்த்திருக்கிறேன். மதவாத விக்கப் பயனர்களும், நடுநிலையாளர்களும் என்ன சொல்லப் போகின்றீர்கள்.

Sivane (பேச்சு) 06:29, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிவனே, //விமர்சனங்கள் என்று வீண் பழி சுமத்துவதாக கருதவேண்டாம்// என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதேநேரம் சமயங்கள் கூறாதவற்றைக் கூறுவதாகப் பொய்யுரைக்கிறீர்கள். அதனை வீண் பழியென்று கூறாமல் நேர்மையென்றா கூறச் சொல்கிறீர்கள்? //அதை விமர்சித்து எழுதுவதை மட்டும் ஏனோ இழிவு பிரச்சாரமாக கருதும் பயனர்களை விக்கி அதிகம் கொண்டிருப்பதால்// என்று கூறுகிறீர்கள். அதேவேளை முகம்மது நபியவர்கள் மீது பொய்களை அள்ளி வீசுகிறீர்கள். அதனை இழிவுப் பிரச்சாரம் என்று கூறாமல், நடுநிலையான நேரிய செயலென்றா கூற வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 16:24, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

புகுபதிகை பக்கத்தில்

தொகு

புகுபதிகை பக்கத்தில் பயனர் பெயரை உள்ளிடும் பெட்டியிலும், புதுப் பயனர் உருவாக்கப் பக்கத்தில் பயனர் பெயரை உள்ளிடும் பெட்டியிலும் தமிழ்ப் பெயர் உள்ளிட்டால் நன்றாக இருக்கும். தங்கள் பெயரை தமிழில் வைத்துக் கொள்ளலாம் என்பதை புதியவர்கள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே, இயல்பிருப்பாக தமிழில் எழுதுவதை செயல்படுத்தலாம் அல்லது தமிழில் எழுத என்ற வசதியை புகுபதிகை பக்கத்தில் வைக்கலாம். விரைந்து பரிசிலீக்குமாறு வேண்டுகிறேன் நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:45, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கடவுச்சொல்லும் எனக்குத்தமிழில் தானுள்ளது. ஆனால் தமிழில் தட்டச்சு செய்தால் புகுபதிகை தவறென்றே வருகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:14, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
உரோம எழுத்துகளில் பயனர் பெயர் இருப்பது தமிழ் தட்டச்சு வசதி இல்லாத கருவிகளில் இருந்தும் புகுபதிய வசதியாக இருக்கும். அதே பெயரில் அனைத்து மொழி விக்கித் திட்டங்களிலும் புகும் போது, மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் எழுதவும் வசதியாக இருக்கும். இவ்விரு காரணங்களுக்காக, பயனர் பெயர் இயல்பிருப்பாக தமிழில் அமைவதைத் தவிர்க்கலாம். தமிழிலும் பயனர் பெயர் கொள்ளலாம் என்று தெரிவிக்கும் போது, இவ்விரு குறிப்புகளையும் இடுவது சரியான வழிகாட்டுதலாக இருக்கும்--இரவி (பேச்சு) 05:57, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இரவியின் கருத்தை ஏற்று வழிமொழிகிறேன். புகுபதிகை பக்கத்தில் பயனர் பெயரிடும் பெட்டிக்கருகில் உள்ள இடத்தில் இவ்விரு தகவல்களைச் சேர்த்துவிட்டு, தமிழ்ப் பெயர் இடும் வசதியை சேர்க்குமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:47, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

செப்டம்பர் 30, 2012 அன்று விக்கி மாரத்தான், இணையக் கூடல்

தொகு

செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, விக்கி மாரத்தான் ஒன்றை நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். செப்டம்பர் 30, காலை UTC நேரம் 00:01 தொடங்கி 23:59 வரை கணக்கில் கொள்ளலாம். அன்றைய நாளின் பங்களிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் பொதுவாக உரையாடவும் அன்று UTC நேரம் 14.30 முதல் 16.30 வரை கூகுள் hangout மூலம் இணையக் கூடல் ஒன்றையும் நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 06:20, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நல்லது. நானும் பங்களிக்கின்றேன். :) --மதனாகரன் (பேச்சு) 02:33, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மதம் சார்ந்த கட்டுரைகளில் நடுநிலை பேனப்படாமலும், விமர்சனங்கள் ஏற்கப்படாமலும் உள்ளன

தொகு

இந்து சமயம், கிறிஸ்து சமயம், இஸ்லாமிய சமயம் சார்ந்த கட்டுரைகளை வாசிக்கும் போது அந்தந்த கட்டுரைகள் தங்கள் மதம் பரப்பும் வேலையை மட்டுமே செய்பவனாக உள்ளன. இந்து சமய கட்டுரைகளில் சாதியின் விளைவுகளையும், மனுநூலின் முடிவுகளும், அதனால் மக்கள் பட்ட துன்பங்களும் இல்லை. கிறிஸ்து குறித்தான கட்டுரையில் அவர் உருவம், மனைவி குறித்தான விமர்சனங்கள் இல்லை. இசுலாம் குறித்தான கட்டுரைகளில் இறைவன் கொடுத்த வேதம் குரான் என்று தீர்ககமாக கூறுகிறது. முகமது நபியின் குழந்தை திருமணம் பற்றி விமர்சனம் முன்நிறுத்தப்படவில்லை. இப்படி எல்லா மதங்களிலும் விமர்சனப்பகுதிகளை மறைத்தே வைக்கப்பட்டு இருக்கின்றன. எழுத துணியும் போது என் மீதும் அதன் வெறுப்புகள் காட்டுகின்றார்கள்.

ஆனால் இறை மறுப்பாளர்கள் மீது மட்டும் தனி பக்கத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. http://ta.wikipedia.org/s/t8y என்பதில் உள்ள கருத்துகளுக்கு இதுவரை என்னைதவிற யாரும் ஆதாரமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இறை மறுப்பினை விக்கி மறுக்கின்றதா. இறையை ஏற்று கொள்ள கட்டளை இடப்பட்டுள்ளதா.

பெரும்பான்மை மிக்கவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்பதால், சிறுபான்மையான இறைமறுப்பினை எல்லோரும் இணைந்து மறுக்கின்றீர்களா.

Sivane (பேச்சு) 07:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

என்னைப் பொருத்தவரை விமர்சனங்களுக்கென்று தனிக் கட்டுரைகள் தேவையில்லை. முதன்மைக் கட்டுரைகளின் ஒரு பகுதியாக அவற்றைக் குறிக்கலாம். தனிக் கட்டுரைகள் வைப்பதால் ஏதோ அவற்றைத் தனியாக ஒதுக்குவது போன்ற தோற்றம் வரலாம். தவிர விமர்சனங்களுக்கான கட்டுரைகள் தேவைக்கு மேல் காட்டமாக வளரவும் வாய்ப்புண்டு.
உங்கள் கூற்றுடன் ஓரளவு உடன்படுகிறேன், சிவனே. அந்தந்த சமயப் பக்கங்கள் அந்தந்த சமயங்களின் பார்வையில் இருந்து எழுதப்படுவது சரியல்லவே. நம்பிக்கைகளையும், நிறுவப்பட்ட தகவல்களையும் வரையறுத்துக் காட்ட வேண்டும். பரவலாக அறியப்பட்ட குறைகளைத் தனியாக ஒரு பத்தியில் தரலாம். ஆனால் உரை யாரையும் புண்படுத்தாமலும், நடுநிலையோடும், சான்றுப் பின்புலத்தோடும் இருக்க வேண்டும். இதைச் சற்று பொறுமையாக அணுக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:19, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
//இறை மறுப்பினை விக்கி மறுக்கின்றதா. இறையை ஏற்று கொள்ள கட்டளை இடப்பட்டுள்ளதா. பெரும்பான்மை மிக்கவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் என்பதால், சிறுபான்மையான இறைமறுப்பினை எல்லோரும் இணைந்து மறுக்கின்றீர்களா.//
தாங்கள் ஒரே நேரத்தில் சமயம் தொடர்பான பல கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டு வருவதால், அக்கட்டுரைகளில் ஆர்வமுள்ளோரின் எதிர்வினைகளை ஒட்டுமொத்தமாகப் பெறுவதால், ஒட்டு மொத்த விக்கிப்பீடியாவும் ஏதோ ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக உணர்கிறீர்கள். ஆனால், அப்படி இல்லை. சமயவியல் குறித்து மட்டுமல்ல, எந்த ஒரு துறை குறித்தும் ஒட்டுமொத்த விக்கிப்பீடியாவுக்கும் என்று தனி ஒரு நிலைப்பாடு கிடையாது. இருக்க முடியாது. இது குறித்து விக்கிப்பீடியர்களிடையே எந்த வித கூட்டுச் செயற்பாடோ நிலைப்பாடோ கிடையாது. சமயம் சார்ந்த கட்டுரைகளில் இவ்வாறு உரையாடல்கள் நடக்கின்றன என்பதை அண்மைய மாற்றங்களில் கண்டேன். ஆனால், அவற்றை முழுமையாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லை. படித்துப் பார்த்தாலும் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அத்துறையில் அறிவு இல்லை. இதே நிலையே பல விக்கிப்பீடியர்களுக்கும் இருக்கும். தவிர, சூடான உரையாடல்கள் நடக்கும் போது பங்கெடுக்கத் தயங்கும் போக்கும் புரிந்துகொள்ளத்தக்கது. குறிப்பிட்ட சமயம் குறித்த ஆர்வமுள்ளோரே அது குறித்த கட்டுரைகளை எழுதுகிறார்கள் என்பதால், அவர்கள் நோக்கில் இருந்து எழுதப்படும்போது நடுநிலை நோக்குப் பிறழ்வு இருக்கலாம் என்பது உண்மை தான். உங்களைப் போன்ற மாற்று நோக்கு உள்ளோர் பலரும் பங்களிக்கத் தொடங்கும் போது தான் நடுநிலையில் சமநிலை வரும். சமயங்கள், அது தொடர்பானவர்கள் பற்றிய எதிர்கருத்தை மட்டும் முன்வைக்காமல், தகுந்த ஆதாரங்களுடன் கட்டுரையில் சேர்ப்பதும் உரையாடுவதும் ஏற்புடையதே. சுந்தர் கோரியபடி, அனைவரும் இதனைப் பொறுமையுடன் அணுகுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:04, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


இந்தக் குற்றச்சாட்டில் உண்மை உண்டு. சமயம் சார்ந்த கட்டுரைகள் பல பரப்புரை வடிவிலேயே உள்ளன. படு மூடநம்பிக்கைகள் உண்மை போன்ற தோற்றத்தில் கட்டுரையில் குறிக்கப்படுகின்றன. விமர்சனப் பகுதிகள் நீக்கப்படுகின்றன. எ.கா சைவ சமயம் என்ற பகுதியில் நாம் சேர்த்த விமர்சனப் பகுதி நீக்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 13:36, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
மேலும் சுந்தரின் கருத்துடன் முழுமையாக மறுக்கிறேன். ஒரு சமயத்தைப் பற்றி ஆயிரக் கணக்கான கட்டுரைகளும் நூற்றுக் கணக்கான பகுப்புகளும் இருக்கும் போது விமர்சனத்திற்கு தனிக் கட்டுரை இருப்பது சரியே. வழமையாக போல கட்டுரையிலும் தகுந்த இடம் குடுக்கலாம். --Natkeeran (பேச்சு) 13:58, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
மதம் பற்றிய கட்டுரைகள் பரப்புரையாக அமைந்துள்ளது உண்மை. மதம் என்பது பரப்புரைதான் என்பதையும் நாம் பல இடங்களில் ஒத்துக்கொண்டிருக்கின்றோம். அது சமுகத்தை முறைப்படுத்த போதுமா போதாதா என்பதுதான் முக்கியத்துவமான கேள்வி. போதாவிட்டாலும் கவலையில்லை. அறிவியல் இருக்கின்றது. மதம் என்பதை அடையாளமாக மட்டும் காண்பவர்களும் நிறைய இருக்கின்றனர். மதம் பற்றிய கட்டுரைகளில் விக்கி ஒரு கலைக்களஞ்சியமாக இருப்பதிலிருந்து வழுவுதலை மட்டுப்படுத்தல் தான் நமது பிரச்சினை. நாம் அதையும் தாண்டி விக்கியை இழந்துவிடுவோமோ எனும் அளவுக்கு மிகத்தூரம் செல்கின்றோம். மோதிக்கொள்கின்றோம். எனது முதல் பட்டப்படிப்பில் செய்த ஆராய்ச்சி அறிக்கையை ஒருபோது தரவுகளுக்காக தேடினேன். 15வருடங்களுக்கு முந்தியது. காலங்கடந்ததால் பயனற்று இருந்து. சோர்வுடன் அதை ஒதுக்கமாக வைத்திருந்தேன். அண்மையில் ஆய்வுமுறையியல் பற்றிய சந்தேகம் ஒன்றுக்கு அதில் பலபயனுள்ள தகவல்கள் இருந்தன. மீண்டும் புத்தக அடுக்கில் வைத்திருக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:03, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியங்களில் சமயம் சார்ந்த கட்டுரைகள் அவசியம் இருக்கவேண்டும். அதேசமயம் அடிப்படைத் தகவல்களே இல்லாதபோது விமர்சனக்கட்டுரை என்பது 1+2=3 என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் முன்பே (a+b)2=a2+b2+2ab என்று சூத்திரம் சொல்லிக்கொடுப்பது போன்று உள்ளது. அதிலும் விமர்சனக்கட்டுரைகளில் அடிப்படையற்ற உண்மைக்குப்புறம்பான தகவல்களை வேண்டுமென்றே சேர்ப்பது தேவையற்ற சர்ச்சையையும் விக்கிப்பீடியர்களின் நேரத்தையும் வீணடிக்க செய்யலாம். -- மாகிர் (பேச்சு) 16:58, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
முடிந்தளவு விரைவாக சிற்சில மாற்றங்களையேனும் செய்து நடுநிலைதன்மையை காக்க வேண்டுகிறேன். தனிப்பகுதியாக விமர்சனம் வேண்டாமென்றாலும் பரவாயில்லை. இறைநம்பிக்கை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லும் அளவிற்கு முழுமையாக மறுக்கப்படாமல் இருத்தலே இப்போதைக்கு போதும். எளிமையாக முரன்களை கட்டமைத்தாலே போதும். விரைவு திருத்தம் அதிக சர்சை உண்டாக்குவதால் நண்பரின் ஆலோசனைப் படி அடுத்த வெள்ளிவரை திருத்தங்கள் செய்யமல் காத்திருக்கிறேன். அதற்குள் நடுநிலை குறித்தான மற்ற நண்பர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம். அனைவருக்கும் நன்றி. - Sivane (பேச்சு) 17:17, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் சமயம் சார் கட்டுரைகள் குறித்த அணுகுமுறை

தொகு

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சமயம் சார் கட்டுரைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. பல கட்டுரைகள் முழுமையற்றும், பரப்புரை நோக்குடனும் ஒரு பக்கத் தன்மையுடனும் இருக்கின்றன. எ.கா - இந்து சமயம். இத்தனைக்கும் இது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு கட்டுரை. அதே வேளை, சமயங்கள் மீதான விமர்சனங்களாக வைக்கப்படும் ஒரு சில கட்டுரைகளும் வரலாற்று நோக்கும் உலகளாவிய ஏற்பும் உடையதாகவோ தகுந்த ஆதாரங்களை முன்வைப்பதாகவோ கலைக்களஞ்சிய நடையிலோ இல்லை. இது குறித்த உரையாடல்கள் உணர்வுச்சிக்கலைத் தூண்டுவனவாகவும் உடனே ஒரு உடன்பாட்டுக்கு வர இயல்வனவாகவும் இல்லை. எனவே, குறைவான ஆள்வளம் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக ஒரு சிக்கல் தீர்க்கும் வழிமுறையை முன்மொழிகிறேன்:

சமயம் தொடர்பான கட்டுரைகளில் முதலில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து ஏற்பாளர், மறுப்பாளர் ஆகிய இரு பக்கத்தாருக்கும் ஏற்புடைய பகுதிகள், ஆதாரங்களை முன்வைத்து எழுத வேண்டும். எ.கா:

விமர்சனம் குறித்த முதன்மைக் கட்டுரைகளைத் தொடங்கலாம். அவற்றின் சுருக்கத்தைச் சமயம் சார்ந்த முதன்மைக் கட்டுரையில் தரலாம்.

ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் முற்றிலும் நடுநிலைத்தன்மை உடையவை என்றில்லை. எனினும், தமிழை விடக் கூடுதலான பங்களிப்பாளர்கள், உரையாடல்களைப் பெறுவதால் நம்மில் இருந்து மாறுபட்ட, முழுமையான பார்வையைத் தரும் வாய்ப்புள்ளது. தவிர, தகுந்த முறையான ஆதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் இருக்கும். ஏற்புடைய பகுதிகள் குறித்த உடன்பாட்டைப் பெற பேச்சுப் பக்கங்களில் விக்கிப்பீடியா நற்பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு, உலகளவில் ஆய்வுச் சிறப்பு மிக்கதாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தகுந்த ஆதாரங்களை முன்வைத்து உரையாட வேண்டும்.

மேற்கண்ட அணுகுமுறை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தால், அதனை ஒரு முறையான வழிகாட்டலாக அறிவிக்கலாம். அல்லது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளங்களைக் கருத்தில் கொண்டு மாற்று அணுகுமுறைகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 17:24, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நடுநிலையாக்க முன்வரும் அனைவருக்கும் நன்றிகள். இதில் எனக்கு சில ஐயங்கள் உள்ளன. எ.டு: இயேசு இசுலாம் இயேசுவை முஸ்லிம் என்றும், இசுலாத்தின் தூதன் என்றும் கூறுகிறது. இதை இயேசு கட்டுரையில் இணைக்க வேண்டுமல்லவா. இயேசுவிற்கு மனைவி இருந்தார்கள் என்று பலர் கருத்தினை முன்வைக்கின்றார்கள். இந்த கருத்தினை வலியுருத்தி திரைப்படம் கூட வந்தது. இவை சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று இணைக்காமலேயே விட்டுவிட வேண்டுமா. அதே போல இசுலாத்தின் கட்டுரையில் குரானில் கூறப்பட்டுள்ளவையும், நபிகள் கூறியவைகளை மட்டுமே இணைக்கவேண்டும் என்று ஒரு பயனர் கூறியிருக்கிறார். குரானையும், நபிகளையும் விமர்சனமின்றி ஏற்க இசுலாமியர்கள் தயாராக இருக்கலாம். ஆனால் விக்கியின் கட்டுரையும் அப்படி இருக்க வேண்டுமா. குரானை ஓர் ஆதாரமாக கொண்டு நபிகள் பொய்யே கூறியதில்லை என்று கூட ஒரு கட்டுரையில் இருக்கிறது. குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறாததை நபிகளே கூறியதாக ஒப்புக் கொள்ளும் வசனமும் இருக்கிறது. இதில் குறைந்தபட்ச நடுநிலையை எப்படி பேனப்போகின்றோம். வழிகாட்டுதல்களை நண்பர்கள் செய்ய வேண்டுகிறேன்.

- Sivane (பேச்சு) 19:07, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஏன் இப்படிப் பொய்யுரைக்கிறீர்கள், சிவனே! //குரானை ஓர் ஆதாரமாக கொண்டு நபிகள் பொய்யே கூறியதில்லை என்று கூட ஒரு கட்டுரையில் இருக்கிறது. குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறாததை நபிகளே கூறியதாக ஒப்புக் கொள்ளும் வசனமும் இருக்கிறது.// என்று நீங்கள் கூறுவது முற்றிலும் பொய். திருக்குர்ஆனில் எங்கேயும் அப்படி ஒரு வசனமும் இல்லை. இருந்தாற் காட்டுங்கள் என்று நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். மேலும், தப்சீர் அத்-தபரீயில் இருப்பதாக வேறோரிடத்தில் நீங்கள் கூறியதும் முழுப் பொய். என்னிடம் கிட்டத்தட்ட ஏழாயிரம் அரபு இஸ்லாமிய நூல்களைக்கொண்ட நூலகம் இருக்கிறது. மிக எளிதாகத் தேடும் வசதியும் இருக்கிறது. மேற்கண்டவாறு நீங்கள் பொய்யுரைத்தவுடனே நான் தப்சீர் அத்-தபரீயை வாசித்துப் பார்த்தேன். இல்லாத ஒன்றை இருப்பதாகப் பொய்யுரைப்பதுதானா நீங்கள் கூறும் நடுநிலை? சமய நூல்களிற் கூறப்பட்டுள்ள வசனங்களைத் திரித்துக் கூறுவதுதானா உங்களது நேர்மை? //குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறாததை நபிகளே கூறியதாக ஒப்புக் கொள்ளும் வசனமும் இருக்கிறது// என்று நீங்கள் கூறுவதன் மூலம் உங்களது கயமைதானே வெளிப்படுகிறது? நபிகள் நாயகம் அவர்கள் கூறாத ஒன்றைக் கூறியதாக நீங்களே கற்பனை செய்துகொண்டால் அதற்குச் சமயம் எப்படிப் பொறுப்பாகும்? இவ்வளவுதானா உங்களது அறிவு?--பாஹிம் (பேச்சு) 15:45, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
Sivane, மேற்கண்டது போன்ற கேள்விகளுக்குத் தீர்வாகத் தான் முதலில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து இரு பக்கத்துக்கும் உடன்பாடுள்ள பகுதிகளைத் தமிழாக்குவோம் என்று முன்மொழிந்துள்ளேன். இப்பணியை முடித்தாலே தமி்ழ் விக்கிப்பீடியாவின் நடுநிலைத்தன்மையும் முழுமையும் இன்னும் ஒரு படி கூடும். அதன் பிறகு, தேவைப்படும் கூடுதல் தகவலைச் சேர்க்க முனையும் போது அதனை எப்படித் தொடர்ந்து நடுநிலையுடன் செய்வது என்று உரையாடுவோம். எனவே, ஆலமரத்தடியின் இந்த உரையாடல் பகுதியில் குறிப்பிட்ட சமயம் சார் எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்து, இந்த அணுகுமுறை பற்றிய தங்கள் பொதுவான கருத்துகளை மட்டும் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். ஒரு பொது ஏற்பு பெறும் அணுகுமுறை வரும் வரை கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உரையாடுவதையும் ஒத்திப் போடுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:31, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


வணக்கம். சமயம், சமயம் சாராக் கட்டுரைகள் என்று பார்க்காமல் சர்சைக்குரிய கட்டுரைகளுக்கான அணுகுமுறையாகவே பார்க்க வேண்டும். பின்வரும் கூறுகள் பொதுவாக முக்கியம் பெறுகின்றன:
  • புறவயத் தகவல்களை முதன்மைப்படுத்தல்
  • நம்பிக்கைகளை நம்பிக்கைகள் என்று முன்வைத்தல்
  • சமய கொள்கைகள், நம்பிக்கைகளின் அடிப்படைகள் சமய நூல்களே என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுதல் (எ.கா அறிவியல் அடிப்படை இல்லை என்பதை தேவைப்படும் பொழுது சுட்டுதல்).
  • முரண்பாட்டு கருத்துக்களுக்கு அவற்றுக்குத் தகுந்த இடம் தருதல். அதற்காக படிவளர்ச்சிக் கொள்கை கட்டுரையில் பல தரப்பட்ட சமய நம்பிக்கைகளுக்கு உண்மை போன்று இடம் வழஙக் கூடாது. மாற்றாக ஆங்கிலக் கட்டுரையில் தரப்பட்டது போன்று Social and cultural responses போன்ற ஒரு பகுதி இருக்கலாம்.
  • விமர்சனங்களை தகுந்த முறையில் சேர்த்துக் கொள்ளல்.
  • பல தரமான மேற்கோள்களைப் பயன்படுத்தல்
ஆங்கில விக்கியில் இருந்து இங்கு படியெடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. --Natkeeran (பேச்சு) 20:02, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் நக்கீரன், உங்களின் கருத்துக்களுடன் உடன்படும் அதேவேளை, ஒரு கருத்ததையும் முன் வைக்க விரும்புகிறேன். //சமய கொள்கைகள், நம்பிக்கைகளின் அடிப்படைகள் சமய நூல்களே என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுதல் (எ.கா அறிவியல் அடிப்படை இல்லை என்பதை தேவைப்படும் பொழுது சுட்டுதல்)// இதை முடிந்த முடிவாகக் கூற முடியாது. ஏனென்றால், விதிவிலக்குகளும் உள்ளன.

மேலும்,

  • கண்ணியமாக விமர்சனங்களை மேற்கொள்வது. எ.கா. திருத்தந்தையின் தவறா வரம் இந்தக் கட்டுரையில் கத்தோலிக்கரின் மறுப்பு என்ற பகுதியை இணைத்தேன். நிறைவு வாதம் - இது முழுக்க முழுக்க கிறித்தவ இறையியல் மறுப்பு. இதை மேம்படுத்தவுள்ளேன். ஆ.வி. இல் இதன் முழு பகுதியையும் பார்க்கலாம்.
  • தரமான மேற்கோள்கள் என்பதை எவ்வாறு நிர்ணயிப்பது? எ.கா: http://www.vinavu.com/ என்ற தளம். இதன் நம்பகத்தன்மை என்ன? இதை த.வி ஏற்றுக் கொள்ளுமா? இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்ற இக்கட்டுரையில் தமிழ் ஆரம்பித்த காலத்தினை பலரின் கருத்துக்கிணங்க நீக்கிவிட்டிருந்தோம். (தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பேச்சுப் பக்கம் பார்க்கவும்) ஆனால், தினமனி செய்தி தமிழின் வரலாறு 50,000 ஆண்டுகள் என்கிறது. ஆதாரம் தினமனி. முகநூலில் இணைத்ததற்கு நன்றி தென்காசி சுப்பிரமணியன். என்ன செய்வது?
  • இவ்வித சமய எதிர்ப்பு, சமய சார்பு கட்டுரைகளால் குறைவாக வளம் உள்ள த.வி இல் ஏற்கனவே கிடப்பில் உள்ள வேலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வீரியமான செயற்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுவதாகவும் உணர்கிறேன். இதற்கு என்ன செய்ய முடியும்?

--Anton (பேச்சு) 03:18, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

//தினமனி செய்தி தமிழின் வரலாறு 50,000 ஆண்டுகள் என்கிறது. ஆதாரம் தினமனி]. முகநூலில் இணைத்ததற்கு நன்றி தென்காசி சுப்பிரமணியன். என்ன செய்வது? //

இதற்கான பதில் இங்கு அளிக்கப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:07, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


நற்கீரன், சமயம் சார் கட்டுரைகள் என்றில்லாமல் சர்ச்சைக்குரிய கட்டுரைகள் என்ற நோக்கில் ஒரு அணுகுமுறை தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பெரும்பான்மை கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தமிழாக்கி எழுதப்பட்டவையே. எனவே, இவ்விசயத்தில் மட்டும் ஆங்கில விக்கிப்பீடியாவைப் படியெடுக்க வேண்டுமா என்று எண்ணத் தேவையில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் பல்வேறு சாய்வுகள் உள்ளன என்பதை அறிவேன். அதனால் தான் ஒரு சர்ச்சை குறித்து ஏற்பாளர், மறுப்பாளர் ஆகிய இருவரும் உடன்படும் பகுதிகளை மட்டும் தமிழாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். நாமே புதிய ஆதாரங்களை முன்வைத்து, அவ்வாதாரங்கள் ஏற்புடையனவா என்று அவற்றின் மெய்மையை நிறுவ முனையும் முன், ஏற்கனவே நமக்கு இலகுவாக கிடைக்கும் ஒரு தகவல் ஆதாரத்தில் இருந்து தொடங்கலாமே? நீங்கள் முக்கியக் கூறுகளாக பட்டியல் இட்டுள்ளவை அனைத்தும் ஏற்புடையவே. இவற்றை நாமே வரையறுக்கப் போகும் போது தான் பிணக்குகள் உருவாகின்றன. எனவே, இக்கூறுகளை உள்ளடக்கிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளைத் தமிழாக்கத் தயங்க வேண்டாமே? முரண்களை உரையாடும் முன், உடன்படும் தகவலை எழுதத் தொடங்கினாலே குறிப்பிட்ட அளவு நடுநிலைத் தன்மையும் முழுமையான கட்டுரைகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அன்டன், தரமான மேற்கோள் என்பதற்கு நான் புரிந்து கொண்டிருக்கும் அளவுகோல் என்னவென்றால், அது உலக ஏற்பும் மாற்றுக் கருத்தாளர் ஏற்பும் கல்வி சார் ஆய்வு நோக்காளர் ஏற்பும் பெறுமா என்பதே. எடுத்துக்காட்டுக்கு, கிறித்தவம் குறித்த ஒரு விமரிசனக் கருத்துக்கான ஆதாரத்தை பவுல் போன்ற இறையியல் பேராசிரியர்களே சுட்டி எழுதுவார்கள் எனில், அது தரமான ஆதாரமே. தமிழ் விக்கிப்பீடியாவில் சுட்டப்படக்கூடிய ஒரு தமிழ் மொழி வழி ஆதாரம் ஆங்கில விக்கிப்பீடியாவிலோ பிரான்சிய விக்கிப்பீடியாவிலோ ஏற்கப்படுமானால் அது தரமான ஆதாரமே. செய்திகள், நிகழ்வுகளுக்கான ஆதாரம் என்பது வேறு. ஒரு சர்ச்சைக்கு உரிய இயல் குறித்த விமரிசனப் பார்வைக்கு வைக்கப்படும் முழுமையான ஆய்வு நோக்கிலான ஆதாரங்கள் வேறு. உள்ளூர் நிகழ்வு ஒன்றைச் சுட்டி அதனையே உலகளாவிய குறையாக முன்வைப்பதும் தவறு. --இரவி (பேச்சு) 04:10, 22 செப்டெம்பர் 2012 (UTC)   விருப்பம் --Anton (பேச்சு) 13:57, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அண்மைய நாட்களின் சர்ச்சைகள் மிகவும் வருந்தத்தக்கன. குறைவான வளம் உள்ள த.வியில் நமது குவியம் இதுபோன்ற உரையாடல்களால் அயரச் செய்கின்றன. விக்கியின் வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளன. தரமான மேற்கோளுடன் எவரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும். சமயச் சார்புள்ள பயனர்கள் அளிக்கின்ற ஆக்கங்கள் மொழிநடையிலும் தகவற்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். பல நேரங்களில் நேரடியாக சமயநூல்களிலிருந்து வெட்டி ஒட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். பதிவுலகின் தாக்கம் இங்கும் நிறைந்துள்ளது. திறந்த சிந்தையுடன் அணுகும் மனப்பாங்கு ஓங்குகின்றவரை இத்தகைய சர்ச்சைகள் எழுந்த வண்ணமே இருக்கும்.
இந்தநிலையில் இரவியின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியனவாக உள்ளன. கட்சி சார்புள்ள அல்லது அறிவிக்கப்பட்ட கொள்கைகளுடன் இயங்கும் தளங்களிலிருந்து மேற்கோள்கள் இந்த காலகட்டத்தில் தவிர்க்கலாம்.
இத்தகைய சார்புநீக்குத் திருத்தங்களை மேற்கொள்வோரும் இடம்,பொருள், காலம் அறிந்து செயலாற்றுவது சிறந்தது. ஒரு சமயத்தினர் ஏற்கெனவே மனம் புண்பட்டிருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக செயலாற்றலாகாது. --மணியன் (பேச்சு) 05:02, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

  விருப்பம் --Anton (பேச்சு) 13:57, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பல்வேறு உணர்வு சார்ந்த காரணங்களால் விக்கிப்பீடியாவில் உள்ள சமயம் தொடர்பான கட்டுரைகளில் நடுநிலையைப் பேணுவது மிகவும் கடினமான விடயமாகவே உள்ளது. சமயத்துக்குச் சமயம் நடுநிலைமையைப் பேணுவதற்கான வாய்ப்பு மாறுபட்டு இருந்தாலும் எல்லாச் சமயத்தவர்களுமே தமது சமயமே உயர்ந்தது என்னும் கருத்தையே முன்னிறுத்தப் பார்க்கின்றனர். இறைமறுப்பாளரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த விடயத்தை அணுகும்போது சில விடயங்களை நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும். முதலாவதாகச் சமயங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. இங்கே பகுத்தறிவுவாதம் என்று சொல்லப்படும் விடயத்துக்கு இடம் கிடையாது. பகுத்தறிவு வாதம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்பட்டாலும் பிரபலமான அறிவியலாளர்களும் கூட சமயங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதை நாம் அறிவோம். மனிதர் முன்னுள்ள எல்லாக் கேள்விகளுக்குமே அறிவியலிடம் விடை இல்லாமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த நிலைமையில் எது சரி எது பிழை என்னும் வாதம் முடிவற்றுப் போவதைத் தவிரத் தற்போதைக்கு வேறு வழி இல்லை. இதனால் தான் மற்றச் சமயத்தவர்களுடைய நம்பிக்கைகளையும் மதித்து வாழ்வது என்னும் கருத்து இன்றைய உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

ஆனாலும் சமயக் கட்டுரைகளை எழுதுபவர்கள் தத்தமது சமய நம்பிக்கைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்பது போல் எழுதுவது கூடாது. விக்கிப்பீடியாக் கட்டுரைகள் சம்பந்தப்பட்ட சமயத்தவர்கள் வாசிப்பதற்கானவை மட்டும் அல்ல. இவற்றை யாரும் வாசிக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இதனால் சமயக் கட்டுரைகளை வாசிக்கும் பிற சமயத்தவர்களைச் சீண்டும் வகையில் கட்டுரைகளின் உள்ளடக்கம் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். சமயக் கொள்கைகள் பற்றிக் கூறும்போது அது அச்சமயத்தவர்களுடைய நம்பிக்கை அல்லது அச் சமயத்தவருடைய வேதங்கள் கூறுவது என்பன போன்ற பொருள் வருமாறு எழுத வேண்டும்.

"x" சமயத்தவர் ஒரு கடவுட் கொள்கையைக் கொண்டவர்கள். பல கடவுள்களை வணங்குவதை "x வேதம்" ஏற்றுக்கொள்வதில்லை (ஆதாரம்: "x வேதம்" பக். 25) என்று எழுதுவது ஏற்புடையது.

ஒரு கடவுளே உள்ளார். பல கடவுளரை வணங்குவது இறைவனுக்கு எதிரானது (ஆதாரம்: "x வேதம்" பக். 25) என்பது போல் எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.

சமய வெளியீடுகள் பிரசார நோக்கம் கொண்டவை அல்லது தமது சமயத்தவர்களுக்குச் சமய அறிவை ஊட்டுவதற்காக எழுதப்படுபவை. இவற்றை வரிக்குவரி பிரதி செய்வதனாலேயே பிரச்சினைகள் எழுகின்றன. கூடியவரை பொதுவான நூல்களில் இருந்து தரவுகளைப் பெறுவதும் அவற்றின் நடைகளைப் பின்பற்றுவதும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

தவிர, சமயங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுவதாலும், தோன்றிய காலத்திலும், பிந்திய பல நூற்றாண்டுகளிலும் பல்வேறு பொருளாதார, சமூக, பண்பாட்டுத் தாக்கங்களுக்கு உட்படுவதாலும் அவற்றில் காணப்படும் பல நடைமுறைகள் பல்வேறுபட்டு அமைகின்றன. இவற்றுக்கு எல்லாம் பகுத்தறிவுவாதத்தின் மூலம் விளக்கம் காண்பது முடியாது. இதனால் சமயங்களை விமர்சிக்கும் போது அவற்றின் பின்புலங்களைச் சரியாகத் தெரிந்து கொண்டு விமர்சிப்பதே உகந்தது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் போன்ற உரிமைகளை எடுத்துக்காட்டி நான் விரும்பியவற்றைப் பேசுவேன், எழுதுவேன் என்பது வாதத்துக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், சூழ்நிலைகளையும், விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்காமல் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமை ஆகாது. --- மயூரநாதன் (பேச்சு) 11:26, 22 செப்டெம்பர் 2012 (UTC)   விருப்பம் --Anton (பேச்சு) 13:57, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி மயூரநாதன். உங்கள் கருத்துக்களுடம் பெரிதும் உடன்படுகிறேன். குறிப்பாக நடை தொடர்பான கருத்துக்களோடு. சில அறிவியலாளர்கள் சமயம் சார்ந்து இருப்பது பகுத்தறிவுவாதத்துக்கு எதிரான கருத்தாக கொள்ளப்படுதல் தவறு. அப்படிப் பார்த்தாலும் ஐக்கிய அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பின் படி பெரும்பான்மையான அறிவியலாளர்கள் சமய நம்பிக்கை இல்லாதவர்கள். எம்மிடம் உள்ள கேள்விகள் எல்லாவற்றுக்கு பதில் இல்லை உண்மை. இதனால் மனிதருக்கு சமயம் ஏன் தேவைப்பட்டது என்றதை புரிந்து கொள்ளலாம். ஆனால் எல்லாப் பதில்களும் உள்ள மாதிரி சமயக் கட்டுரைகள் எழுதப்படுவதில்தான் சிக்கல் எழுகிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் யாரும் அவர் விரும்பியவற்றை பேசவோ, எழுதவோ முடியாது. ஆனால் தகுந்த சான்றுகளுடன் புறவயமாக நடுநிலையாக எழுதப்படும் கட்டுரைகளும் ஊடகங்களும் சிலரின் உணர்வுகள் பாதிப்படையும் என்று தணிக்கை செய்ய முடியாது. இது தொடர்பாக விக்கிப்பீடியாவில் மிகவும் தெளிவான கொள்கை நிலை உண்டு.
ரவி, ஆங்கில விக்கியை பல சூழ்நிலைகளில் நாம் படியெடுக்க முடியாது. எ.கா இந்துசயமம் என்ற கட்டுரைக்கு அவர்கள் ஒரு தமிழ் நூலைத் தானும் மேற்கோள் காட்டி இருக்க மாட்டார்கள். ஒரு தமிழ் நூல் தானும் சமய நூலாக கொள்ளப்படவில்லை. இதே போல பல தமிழர், தமிழர் சார் விடயங்கள் ஆங்கில விக்கியில் முறையாக கையாழப்படவில்லை. ஆங்கில விக்கியில் இருந்து கொள்கை நோக்கில் படியெடுப்பது என்றால் ஒவ்வொரு கட்டுரையும் case by case ஆக மதிப்பீடு செய்ய வேண்டும். --Natkeeran (பேச்சு) 14:47, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நற்கீரன், நீங்களுச்ம் மயூரநாதனும் ஒரு சரியான கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியுள்ளீர்கள். நான் அந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையை முன்வைத்துள்ளேன். அனைத்து ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளும் சிறந்தவை அல்ல என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். எனவே, கண்டிப்பாக ஒவ்வொரு கட்டுரையாக ஆய்ந்து நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு கட்டுரையில் இருந்தும் சிறந்த பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தொடங்குவோமே என்று தானே கூறுகிறேன். முற்று முழுதாக ஆங்கில விக்கிப்பீடியாவை மட்டுமே படியெடுக்க வேண்டும், வேறு எதையும் எழுதக்கூடாது என்று கூறவில்லையே? 10+ எச்சரிக்கை வார்ப்புருகள் உடைய இசுலாம் குறித்த விமர்சனங்கள் கட்டுரையை விட http://en.wikipedia.org/wiki/Criticism_of_Islam கட்டுரை 100 மடங்கு பயனுள்ளது, முழுமையானது, உலக நோக்கு உடையது, சிறப்பாக எழுதப்பட்டது என்பதே எனது கருத்து. தேவைப்படும் கட்டுரைகள் இல்லா நிலை, எழுத முனையும் போது எது தகுந்த ஆதாரம் என்று முதலிலேயே உரையாடல்களை நேரத்தைச் செலவிடும் நிலையை ஒப்பிடும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தகுந்த பகுதிகளைத் தமிழாக்குவதே நல்ல முன்னேற்றம் தானே? தகுந்த கட்டுரைகளில் தமிழ் நோக்கு தேவை தான். முதலில் உலக நோக்கில் எழுதிவிட்டுப் பிறகு தகுந்த இடங்களில் தமிழ் நோக்கில் ஆதாரங்களைச் சேர்க்க முனையலாமே? --இரவி (பேச்சு) 05:14, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இது தொடர்பான கொள்கை வழிகாட்டலை விக்கிப்பீடியா பேச்சு:சர்ச்சைக்குரிய துறைகள் பக்கத்தில் பரிந்துரைத்துள்ளேன்--இரவி (பேச்சு) 13:55, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சமயங்கள் பற்றிய கட்டுரைகள் குறித்து என் கருத்து

தொகு

இங்கே சமயங்கள் பற்றிய கட்டுரைகள் குறித்து கடுமையான விவாதம் நிகழ்வதை இப்போதுதான் கவனித்தேன். மேலே, மணியன், இரவி, நட்கீரன், மயூரநாதன்... போன்றோர் மிகத் தெளிவான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளார்கள். அந்த அணுகுமுறையே தலைசிறந்தது என்பது என் கருத்து. சமய உணர்வுகளைப் புண்படுத்துவது மிக எளிது. ஆனால், சமய நம்பிக்கைகள் அச்சமயத்தைப் பின்பற்றுவோரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தவை என்பதால் அந்த நம்பிக்கைகளுக்கு மாறான கருத்துகளை முன்வைக்கும்போது கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் செயல்படுக என்பதே எனது வேண்டுகோள்.

இவ்விடயம் தொடர்பாக விக்கி வழிமுறைகள் மிகத் தெளிவாகவே உள்ளன. குறிப்பாக நடுநிலை பேணுதல் என்னும் கொள்கையை எல்லாப் பங்களிப்பாளர்களும் கைகொண்டால் வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. மேலும், ஒரு குறிப்பிட்ட சமய நம்பிக்கை கொண்டவர் அச்சமயம் பற்றிய விரிவான அறிவு கொண்டவராக இருந்தால் தமது சமயம் பிற சமயங்களை விட உயர்ந்தது என்று காட்ட வேண்டிய தேவை இல்லை.

பரப்புரையோ பிரச்சாரமோ விக்கிக்கு உகந்தனவன்று. நடுநிலை நின்று, தகவல் வழங்குவது, பண்போடு எழுதுவது, மாற்றுக் கருத்துகளுக்கு உண்மை மற்றும் நேர்மை அடிப்படையில் ஆதாரங்கள் காட்டுவது போன்ற நற்பழக்கங்களைக் கடைப்பிடித்தால் விக்கியின் தரமும் உயரும், அனைவருக்கும் பயனும் கிட்டும். வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 20:28, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்பதற்கு வழிகாட்டுங்கள்

தொகு

ஒரு கட்டுரையில் ஒருபக்க சார்பினை எப்படி நம்மால் நீக்க முடியுமென்றால் அந்த கட்டுரையின் மறுபக்க சார்பினை இணைப்பதன் மூலமே. மதக் கட்டுரைகளில் மதசார்பு தன்மை மேலோங்கி காணப்படுகிறது என்று நான் சுட்டிகாட்டியமைக்காக இத்தனை தூரம் விரிவாக விவாதம் நடைப்பற்றுக் கொண்டிருப்பது மகிழத்தக்கதாக உள்ளது. ஆனாலும் யாரும் இன்னும் நடுநிலைத் தன்மைக்காக கட்டுரைகளை மாற்றியமைக்க தொடங்கவில்லை. ஒரு கூட்டு முயற்சியாக வாரம் ஒரு கட்டுரையை மேம்படுத்துவது போல, நடுநிலைத் தன்மையை பேனுவதற்கும் ஆவனம் செய்விக்க வேண்டும்.

அடுத்தாக நிறுபனம் செய்யப்பட்ட விமர்சனங்களை வைக்க இங்கு சிலர் சொல்கின்றார்கள். சற்றேனும் சிந்திக்க கூடிய வல்லமை உடையவர்கள் மதத்தின் பால் இருக்கும் தவறுகளை தானாக முன்வந்து வெளியிட்டுவிடுவார்கள். ஆனாலும் இங்கு விமர்சனம் என்பதையே முழுமையாக அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும்தான் வைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது.

x என்றொருவர் x என்ற மதத்தினை இப்படி புகழ்கின்றார் என்று சொல்ல விக்கி அனுமத்திருக்கிறது. இந்த புகழ்ச்சிக்கு அந்த மதம் உரியதுதானா என்று எவரும் பார்க்கவில்லை. ஆனால் x என்றொருவர் x என்ற மதத்தின் மீது இந்த விமர்சனத்தினை வைக்கிறார் என்று எழுதுவதற்கு மட்டும் அதன் உண்மைத்தன்மையை நிறுபனம் செய்ய வேண்டும் என்ற கட்டளை எதற்காக. புகழ்ச்சியை நிறுபிக்க வேண்டிய அவசியம் இன்றி,. அனுமதிக்கும் போது அந்த விமர்சனத்தினை நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதானே சரியான நடைமுறை.

Sivane (பேச்சு) 11:14, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


விமர்சனத்தற்கு மேற்கொள்கள் காட்ட வழிகாட்டுங்கள்

தொகு

விமர்சனப்பகுதியை இணைப்பதா வேண்டாமா என்ற கருத்தே இன்னும் தீர்மானிக்கப் படவில்லை என்ற போதும், அதற்கு மேற்கோள்கள் காட்டுவதற்கு சில தளங்களை குறிப்பிடும் போது அந்த தளங்கள் குறித்தான விமர்சனமும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஒரு மதக் கட்டுரையில் மதத்தின் பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்ட புத்தகமும், அதனை பரப்ப எழுதப்பெற்ற வலைதளங்களையும் விக்கிப்பீடியா மேற்கோள் காட்டுவதற்கு அனுமதி தந்திருக்கிறது. அது போலவே அந்த மதத்தினை விமர்சிக்கும் தளங்களிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கு கொள்கையில் மதஎதிர்ப்புடைய தளத்தினை அனுமதிக்க வேண்டும். சமயம் சார்ந்த வலைதளங்களுக்கு அனுமதி தருவதை போல கொள்கை சார் தளங்களுக்கும் அனுமதி வேண்டும். பரப்புரை தளத்தினை அனுமதிக்கும் போது, எதிர்ப்புரை தளத்தினை அனுமதிப்பதே சிறந்ததாகும். மேலும் மத எதிர்ப்பு நூல்களிலிருந்தும், நாத்திக அறிஞர்களிடமிருந்தும் மேற்கோள் காட்ட அனுமதி தரவேண்டும்.

Sivane (பேச்சு)


வினவு வலைத்தளத்தின் நேர்மையீனம்

தொகு

இங்கிருந்த உரையாடல் பேச்சு:வினவு பக்கத்துக்கு நகர்த்தப்படுகிறது--இரவி (பேச்சு) 13:55, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஜகரமும் ப (B) ஒலிப்பும்

தொகு

தமிழிற் கலந்துவிட்ட ஏராளமான பிறமொழிச் சொற்கள் பண்டைக் காலந்தொட்டே நல்ல முறையிற் தமிழ்ப்படுத்தப்பட்டு வந்திருப்பது மரபு. இவற்றில் ஜகரமும் ப (b) ஒலிப்பும் விக்கிப்பீடியாவிற் பயன்படுத்தப்படும் முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன. இதற்கு முன்னொரு தடவை நடந்த உரையாடலில் ஜகரம் என்பது சகரமாக மாத்திரமே தமிழ்ப்படுத்தப்பட வேண்டுமென ஒரு சாரார் கருத்துத் தெரிவித்தனர். எனினும் அதனை (யன்னல், யப்பான், யனவரி என்பன போன்று) யகரமாகத் தமிழ்ப்படுத்தும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வருவதே. இதே வழக்கத்தைச் சிலப்பதிகாரமும் மேற்கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தின் வரந்தரு காதையில் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் என்று இலங்கை மன்னனான கஜபாகு (Gajabahu) என்பவனது பெயர் கயவாகு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஜகரம் யகரமாகத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, மகர மெய்யை அடுத்து வரும் பகரம் தவிர்த்த ஏனைய இடங்களில் பகரத்துக்கு B ஒலிப்பு இல்லை. இதனாற்றான் கஜபாகு (Gajabahu) என்பதிலுள்ள பகரம் தமிழில் வகரமாகத் திரிபடைந்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே அரபுச் சொல்லான பாபா (baba - بابا) என்பது வாப்பா என்றும், ஆங்கிலத்திலுள்ள பாட்டா (Bata) என்ற சொல் மட்டக்களப்புப் பகுதியில் வாட்டா என்றும் பங்குளா மொழியை வங்காளி என்றும் பங்களாதேஷ் என்பதை வங்காளதேசம் என்றும் குறிக்கப்படும் நடைமுறை ஏற்பட்டுள்ளது. மொழிக்கு இடையில் வரும் பகரம் B ஒலிப்புக் கொண்டதாயின், ஒன்றில் வகரமாகத் திரிய வேண்டும் அல்லது ஆங்கிலத்தைப் போன்று F ஒலிப்பிற் குறிக்கப்படும் நடைமுறை இலங்கையில் உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக ஒரு விதியை உருவாக்க முன்னர் ஏற்கனவே உள்ளவற்றை ஏற்றுக்கொள்ளும் உளப்பக்குவம் வர வேண்டும். பெருங்காப்பியங்களுள் ஒன்றெனத் தமிழுலகமே ஏற்றுக்கொள்ளும் சிலப்பதிகாரம் கொண்டுள்ள நடைமுறையை விக்கிப்பீடியாவில் எதிர்க்கும் உளப்பாங்கு உள்ளதைக் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜகரம் சகரமாக மட்டுமல்ல, யகரமாகவும் தமிழ்ப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஜப்பான் என்பதைக் குறிப்பதற்கு ஏற்கனவே யப்பான் என்ற சொல் வழக்கத்தில் இருக்கும்போது புதிதாக ஒரு சப்பானை ஏன் உருவாக்க வேண்டும்? யனவரி என்ற ஒரு சொல் தமிழுலகில் வழக்கத்திலிருக்கும்போது ஏன் ஒரு சனவரியை உருவாக்க வேண்டும்? B ஒலிப்பை வகரமாகக் குறிக்கும் வழக்கம் இருக்கும்போது அதைத் தவிர்த்துவிட்டு F ஒலிப்பை ஏன் வகரமாகக் குறிக்க முனைய வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 06:48, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பாஹிம், ஜகரத்துக்குப் பதிலீடாக யகரத்தை இட்டு வழங்குவது பற்றிய உங்கள் எடுத்துக் காட்டுகள் சரியே. ஆனால், எல்லா இடங்களிலும் இவ்வாறுதான் வரும் என்றில்லை. "ஜகம்" என்பதை "சகம்" என்றும், "பூஜை" என்பதை "பூசை" என்றும், "ஜோடி" என்பதை "சோடி" என்றும் எழுதுவது வழக்கம், "யகம்", "பூயை", "யோடி" என்று எழுதுவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை ஒரே தமிழ் எழுத்தால்தான் மாற்றீடு செய்யவேண்டும் என்பதில்லை. இடத்துக்குத் தகுந்தபடி எது பொருந்துகிறதோ அதன்படி யகரத்தையோ, சகரத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. ஆனாலும், அவரவர் தமக்கு நினைத்தாவாறு எழுதாமல் ஒரு தரமுறையைக் கைக்கொள்வது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 11:02, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
யப்பான், யனவரி என எழுதுவது இலக்கணச்சுத்தமாக இருக்குமா? ய-வில் சொற்கள் தொடங்குமா? மதனுக்குத் தெரிந்திருக்கும்.--Kanags \உரையாடுக 11:11, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தொல்காப்பியம் "யா" மட்டுமே சொல்லுக்கு முதலில் வரலாம் என்கிறது. சகரங்களிலும், ச, சை, சௌ என்பன முதல் எழுத்தாக வரா என்கிறது தொல்காப்பியம். எனினும் தற்காலத்தில் பெரிதும் பின்பற்றப்படும் தமிழ் இலக்கண நூலான நன்னூல் பன்னீருயிரும் க ச த ந ப ம வ ய ஞ ங என்னும் ஈரைந்து உயிர் மெய்யும் மொழி முதல் என்கிறது. இதன் படி "ய" முதல் எழுத்தாக வரலாம். அத்துடன் இதே நூல் யகரத்துக்கான சிறப்புவிதிகளைக் கூறும்போது, "அ ஆ உ ஊ ஓ ஔயம் முதல்" என்கிறது. இதன்படி ய யா யு யூ யோ யௌ என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதல் எழுத்தாக வரலாம். நன்னூலின்படி எல்லாச் சகர உயிர்மெய்களும் சொல் முதலாக வரலாம். --- மயூரநாதன் (பேச்சு) 11:58, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

John, Joseph, Jacob போன்ற பெயர்கள் போத்துக்கேயர் காலத்தில் இருந்தே யோவான், யோசேப்பு, யாக்கோபு எனத் தமிழொலிப்புப் பெற்று வழங்கிவருவதைக் கவனிக்கவும். --- மயூரநாதன் (பேச்சு) 12:05, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விரிவான விளக்கத்துக்கு நன்றி மயூரநாதன்.--Kanags \உரையாடுக 12:08, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
கற்பித்தமைக்கு நன்றி.பாகிம்!கசடற கற்பித்தமைக்கு மிக்க நன்றி.மயூரநாதன். -- உழவன் +உரை.. 02:38, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். வாழ்த்துக்கள் மயூரநாதன். ஏற்றுகொள்ள கூடிய வரவேற்க கூடிய விரும்பத்தக்க அருமையான விளக்கம்.--சிவம் 02:56, 23 செப்டெம்பர் 2012 (UTC)

அ, ஆ, உ, ஊ. ஓ, ஔ ஆகிய உயிர்களுடன் யகரம் மொழிக்கு முதலில் வருவதை ஏற்கலாம். யகரம், சகரம் என்பவற்றுள் பொது வழக்கிலுள்ளதை, சொல்லிற்கேற்ப ஜகரத்துக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். Bஇற்கும் இதனையே செய்யலாம். வசு (Bus), விசுக்கோத்து (Biscuit) என்றவாறு குறிப்பிடப்படுவதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. விளக்கத்தைத் தந்துதவிய பாஹிமுக்கு நன்றிகள்! இப்போது ஜப்பானைப் பற்றிய கட்டுரை ஜகரத்திலேயே தொடங்குகின்றது. யப்பான் என மாற்றியமைக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 10:04, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மக்களே... மேற்ச்சொன்ன வாதங்கள் எல்லாம் ஒத்துக்கொள்ள கூடியவையாக இருந்தாலும், சற்று யோசிக்கலாம் இங்கே. தமிழ் மொழி பழமையான மொழிதான், ஆனால் உலக, கால மாற்றத்திற்க்கேற்ப நாமும், நம் மொழியும் மாற வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லயெனில் எவ்வளவோ மொழிகள் மறைந்துள்ளன காலப்போக்கில். அதனால், தொல்காப்பியம் "யா" மட்டுமே சொல்லுக்கு முதலில் வரலாம் என்று சொன்னாலும், அயல்மொழிச் சொற்க்களுக்கு அதை பின்பற்ற தேவையில்லை என்றே சொல்வேன். என், தொல்க்காப்பியத்திலிருந்து ஒரு "புதுக்காப்பியம்" படைப்போமே! இதை மறுப்போர்க்கு என் கேள்வி இதுதான்: தமிழில் உண்மையில் நிறுத்தக்குறிகள் கிடையாதே, பின் ஏன் நாம் இங்கும், மற்ற பிற இடங்களிலும் ஆங்கில/ஜெர்மானிய நிறுத்தக்குறிகளை உபயோகிக்கிறோம்? நம் மொழியில் நிறைய ஒலிகளுக்கு வரி வடிவம் இல்லை (உம். கட்டி, காந்தி - உங்களுக்கு புரியும்). அதை நிவர்த்தி செய்யவே க்ரந்த எழுத்துக்கள் உபயோக படுத்தப்பட்டன. ஏன், தமிழிலேயே "யானை"யில் உள்ள "னை"யை வேறு மாதிரி எழுதவும் ஒரு எழுத்து உருவாக்கப்பட்டது. அதுப்போல் நம் மொழியில் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய முயற்ச்சி செய்வோம்.--Astracastor (பேச்சு)

பரோட்டாவைத் திரும்ப முதல்ல இருந்து எண்ணனும் போல இருக்கே :) --இரவி (பேச்சு) 11:29, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் பயனர் ரவி. இரண்டு வாரமாக நான் கொஞ்சம் சிரிப்பு இல்லாமல் இருந்தேன், ஆனால் உங்களின் கருத்தை பார்த்ததும் ஒரே சிரிப்பாக உள்ளது. இருந்தாலும் பறவை இல்லை. நீங்கள் எண்ணிய பரோட்டாவின் எண்ணிக்கை என்ன என்று சொல்லுங்கள். மீதியை மற்றவர்கள் எண்ணுவார்கள் அதனால் உங்கள் பணி குறையும்..--சிவம் 12:09, 27 செப்டெம்பர் 2012 (UTC)

@Astracastor: மேற்ச்சொன்ன, மாற்றத்திற்க்கேற்ப, சொற்க்களுக்கு, தொல்க்காப்பியம்-இவையெல்லாம் நீங்கள் கூறியவை. இவ்வாறு தவறாகச் சொற்களைச் சேர்த்தெழுதுவதையும் புதுக்காப்பியம் எனப் போகிறீர்களா? மின்குமிழைக் கண்டுபிடித்தது அமெரிக்கரான தோமசு அல்வா எடிசன் என்பதால் மின்குமிழையே பயன்படுத்த வேண்டாம் என்கிறீர்களா? நிறுத்தக்குறிகள் உரைநடையின் அமைப்பைச் சீராக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், புதிய ஒலிகளைப் புகுத்துவது ஒரு மொழியின் தனித்துவத்தைச் சீர்குலைக்கின்றது. --மதனாகரன் (பேச்சு) 12:47, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
@இரவி: பரோட்டாவை நீண்ட காலமாகவே எண்ணிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? எப்போது எண்ணி முடிப்பது? யார் புள்ளிகள் இடுவது? --மதனாகரன் (பேச்சு) 12:48, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

கிராமங்கள் குறித்த கட்டுரைகள்

தொகு

கிராமங்கள் குறித்த கட்டுரைகள் அதிக பட்சம் பத்துவரிகள் தான் எழுத முடியும். இவற்றிற்காக தனித் தனிக் கட்டுரைகள் எழுதுவது எனக்கு சரியாகப் படவில்லை. இவ்வாறு எழுதத் தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான பலனற்ற கட்டுரைகள் தோன்றக் கூடும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எல்லா கிராமங்களையும் உட்படுத்த வேண்டி நிலை வரலாம். பின்னர் மாநிலம் முழுவதும் தேவைப்படும். பிற மாநில ஊர்களையும் சேர்க்க வேண்டி வரும். ஆகவே, பேரூராட்சி, நகரங்கள் தவிர்த்த கிராமங்களை வட்டத்திற்குட்பட்ட கிராமங்கள் என்ற பட்டியலில் சேர்க்கலாம் அல்லது. வட்டம் கட்டுரையின் கீழேயே பகுதிவாரியாக பிரித்து எழுதலாம். ஒத்துவருமா? கருத்திடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்க்குருசில். கிராமங்கள் பற்றிய கட்டுரைகள் சில அதன் வரலாற்று முக்கியத்துவம், பண்பாட்டுக் கூறுகள், வளம் குறித்த புள்ளிவிபரங்கள் என இன்னோரன்ன பல தகவல்களை அடக்கலாம். ஆகவே வளரவிடுவதுதான் சரி எனப்படுகின்றது. அன்புடன்--124.43.214.69 16:25, 22 செப்டெம்பர் 2012 (UTC) இது--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:26, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
இவை வளரக்கூடிய கட்டுரைகள். குக்கிராமம் என்றாலும் அதனைப் பற்றிய கட்டுரை இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 21:37, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். மாற்று மொழி விக்கியில் பல கிராமத்து கட்டுரைகள், வாசிப்பதற்கு அழகாகவும், பல ஆர்வங்களையும் ஏற்ப்படுத்துகின்றன. அதனால் தமிழ் விக்கியில் தமிழ் கிராமங்களோ அல்லது வேற்று பிதேசத்தில் உள்ள கிராமத்தை வெளிப்படுதுவது நன்று என்றே எண்ணுகிறேன்.--சிவம் 03:04, 23 செப்டெம்பர் 2012 (UTC)

மேற்கூறிய கருத்துக்கு வருந்துகிறேன். நீங்கள் கூறியபடியே, வேற்று மொழிகளில் இருப்பதைப் போன்றே, தமிழிலும் அருமையான கட்டுரைகள் உருவாகும். எழில்மிகு வயல்கள், மக்கள், பழக்க வழக்கம் தொடர்பான படங்களுடன், விரிவாக வளரும் என்று நம்புகிறேன். படிக்க சுவையாக இருக்கும். :) சான்றிணைத்தலில் மட்டும் கவனம் தேவைப்படலாம். எ.கா கட்டுரை: புதுமடம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:35, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவுக்கு நன்றி!

தொகு

வாசகன் தமிழ்க்குரிசில் எழுதுவது, பல முறை கட்டுரைகள் திருத்தம் செய்திருந்தாலும், இங்கே என் தேவைக்காக இதுவரை படித்ததில்லை. நான் படித்த முதல் கட்டுரை மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம். முக்கியமான ஜாவா பாடத்தில் ஏற்பட்ட ஐயத்தை தீர்த்துக் கொள்ள இதைப் படித்தறிந்தேன். தாய்மொழி ராக்சு! கட்டுரைகளை எழுதி என் போன்றோருக்கு உதவும் விக்கிப்பீடிய நிறுவனத்திற்கும், பயனர்கள் எனப்படும் விக்கிப்பீடிய உருவாக்குனர்களுக்கும் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:06, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில் விக்கிப்பீடிய நிறுவனம் என்று எழுதுவதைப் பல இடங்களில் கவனித்துள்ளேன். தமிழ் முறைப்படி விக்கிப்பீடிய நிறுவனம் (பிரித்தானியப் பேரரசு என்பது போல) என்றே வர வேண்டும். ஆனால், பல இடங்களில் விக்கிப்பீடியா நிறுவனம், விக்கிமீடியா நிறுவனம் என்றவாறே எழுதப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 10:12, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
அக் கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன்: மாதிரி (தரவு + வணிக விதிகள்/செயலாக்கங்கள்), கட்டுப்பாட்டகம் (பரிமாறி), காட்சி (இடைமுகம்). முன்னர் வணிக விதிகள் கட்டுப்பாட்டகத்தில் இருப்பது போன்று வசனம் அமைந்து இருந்தது. --Natkeeran (பேச்சு) 14:25, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
@ மதனாகரன் - ஒரு சிறு குறிப்பு: ப்ரிட்டானிய பேரரசு என்று சொல்வது வழக்கமாயினும், அது சரியாகாது என்பது என் எண்ணம். ஏனெனில், ப்ரிட்டானியா(Brittania) என்பது அயல் மொழி சொல். அதை கூடிய மட்டில் அம்மொழியில் எவ்வாறு உச்சரிக்கிறார்களோ அவ்வாறு உச்சரிப்பதே நலம். இது அம்மொழி பேசுவோருடன் உரையாடும்போது குழப்பத்தையும், கேலி சங்கடத்தையும் தவிர்க்கும். எனவே விக்கீப்பீடியா நிறுவனம் என்று குறிப்பதே சரியாகும் என்பது என் அபிப்ராயம்.

--Astracastor (பேச்சு) 06:28, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பிறமொழி உச்சரிப்பின்படியே உச்சரிக்க வேண்டுமாயின், பிறகு தமிழ் ஏன்? தாய்மொழிகள் ஏன்? உலகம் முழுவதும் அனைவருக்கும் ஒரேயொரு மொழியையே கற்றுக் கொடுக்கலாமே. தூத்துக்குடியை Tuticorin எனலாம். யாழ்ப்பாணத்தை Jaffna எனலாம். மட்டக்களப்பை Batticaloa எனலாம். ஆனால், தமிழ் இலக்கண விதிகளுக்கேற்ப எழுதுவது தவறு. இது தானே உங்கள் கருத்து. என் கருத்துப்படி பிரித்தானியாவும் தவறில்லை. Tuticorinஉம் தவறில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:09, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மதனாகரன் சுட்டியது சரியே. நான் கூட அவர் சுட்டும் வரை இதனை உணரவில்லை. ஆங்கிலத்தில் Indian Railway என்றாலும் தமிழில் இந்திய இரயில்வே தான். இந்தியா நாடு என்று சொல்வது பிழை. இந்திய நாடு என்பது சரி. தமிழ்நாடு மாவட்டங்கள் என்பது பிழை. தமிழ்நாட்டு மாவட்டங்கள் என்பது சரி. வீடு வீட்டில் என்பது போல் ரோடு ரோட்டில் என்று தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்டுத் தான் சொற்கள் உள்வாங்கப்படுகின்றன. பல நாடுகளில் பல மொழியினர் இடைய பழகிய அனுபவத்தில் சொல்கிறேன்..//இது அம்மொழி பேசுவோருடன் உரையாடும்போது குழப்பத்தையும், கேலி சங்கடத்தையும் தவிர்க்கும்.// என்று எண்ணுவது தாழ்வு மனப்பான்மை. நம்மொழி வழக்கத்துக்கு ஏற்ப உச்சரிக்கும் அதே வேளை, பிற மொழியினருடன் பேசும் போது அவர்கள் வழக்குக்கு ஏற்பப் பேசலாம். அப்படியே நமது வழக்கில் பேசினாலும் சிரிக்க மாட்டார்கள். இது நமது வழக்கு என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். --இரவி (பேச்சு) 11:26, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

தொகு

பல கட்டுரைகளில், மாதங்கள் ஆங்கில சோல்களை கொண்டுள்ளது!! ஆனால் தமிழில் எழுதி உள்ளார்கள்.!! உதாரணம் தமிழ்: தை , மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி, புரட்டாதி, அற்பேசி, கார்த்திகை, மார்கழி. என்று தமிழில் சொல்லப்படும் மாதங்கள் இருக்கும் பொழுது எதற்காக மாற்று மொழியை தமிழில் விக்கியில்???? உங்கள் கருத்துகளை முன்வையுங்கள்.--சிவம் 11:13, 23 செப்டெம்பர் 2012 (UTC)

தை என்பது வேறு, சனவரி என்பது வேறு. தை 1 என்பது சனவரி 1ஐக் குறிக்காது. சனவரித் திங்களில் 14ஆம் நாளையோ 15ஆம் நாளையோ பெரும்பாலும் குறிக்கும். தை முதலான திங்கள்கள் தமிழ் ஆண்டு முறைமையில் பயன்படுத்தப்படுகின்றன. இன்று உலகில் பாரிய அளவில் பயன்படுத்தப்படும் கிரெகொரி ஆண்டு முறைமையிலுள்ள திங்கள்களே சனவரி முதலானவை ஆகும். ஆகவே, கிரெகொரி ஆண்டு முறைமையில் குறிப்பிடப்படும் நாட்களுக்கு சனவரி முதலான திங்கள்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது. தவிர, கிரெகொரி ஆண்டு முறைமைக்கேற்பக் குறிப்பிடப்படும் நாட்களுக்கு நிகரான தமிழ் நாட்களைக் கண்டுபிடிப்பது சிக்கலானது. --மதனாகரன் (பேச்சு) 11:27, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிவம்! அது அற்பேசியல்ல, ஐப்பசி என்றிருக்க வேண்டும். மதனாகரன்! திங்கள்கள் என்று கூறுவதில்லை. திங்கட்கள் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 11:29, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

திங்கள்கள்-திங்கட்கள், நாள்கள்-நாட்கள் ஆகியவை தொடர்பில் ஆதாரங்களுடன் (இலக்கண நூல்களெனின் நன்று.) விளக்கம் தந்துதவ முடியுமா பாஹிம்? அவ்வாறு தந்தீர்களானால் கட்டுரையிலும் இணைதது விடலாம். இப்பக்கத்தையும் பார்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 11:42, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மதனஹரன் நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன், காரணம்: வள்ளுவர் ஆண்டையோ இல்லை கிறிஸ்தவர் ஆண்டையோ நான் குறிப்பிடவில்லை. தமிழில் தை, மாசி.... என்ற சொல் பதத்தை சொன்னேன் உதாரணம்: நான் மாசி 29 பிறந்தேன் கிறிஸ்தவ திகதி. .--சிவம் 14:41, 23 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், தை, மாசி, ......... என்பவை January, February, ....... என்பவற்றின் தமிழாக்கம் அல்ல. இரண்டும் வேறுவேறான காலப் பகுப்பு முறைகளுக்கு உரிய மாதப் பெயர்கள். ஆங்கில வருடம் January முதலாம் திகதி பிறக்கிறது என்றால் அது தை முதலாம் திகதி பிறக்கிறது என்று சொல்ல முடியாது. உண்மையில் ஆங்கில வருடப்பிறப்பு தமிழுக்கு மார்கழி மாதத்தில்தான் வரும். அல்லது நீங்கள் தமிழ் விக்கியில் தமிழ் முறையில் தேதி மாதம் முதலியவற்றைக் குறிக்க வேண்டும் என்கிறீர்களா? அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்றது 1947 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி என்பதற்குப் பதிலாக "இந்தியா சுதந்திரம் பெற்றது சர்வசித்து ஆண்டு ஆடி மாதம் 30 ஆம் நாள்" என்று எழுதவேண்டும் என்கிறீர்களா? --- மயூரநாதன் (பேச்சு) 19:02, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

அப்படி சொல்லவில்லை மயூரநாதன். உதாரணமாக நான் மாசி இருபத்தியொன்பது பிறந்தேன் என்றால் எப்படி சொல்வது? அல்லது ஆவணி ஒன்று என்றால் எப்படி சொல்வது??--சிவம் 04:41, 24 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், தமிழ் நாட்களை குறிப்பதில் மதனாகரன் குறிப்பிட்டுள்ளது போல சில பிணக்குகள் உள்ளது. உதாரணமாக 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் திகதி காந்தி பிறந்தார் என்ற தகவலை தமிழில் எவ்வாறு குறிப்பீர்கள். ஒருவேளை நீங்கள் தமிழில் மட்டுமே குறித்தால் இது எந்த ஆண்டு, எந்த நாளை குறிக்கிறது என்று கணக்கிடுவதற்கே பல நாட்கள் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:20, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
சிவம், நீங்கள் மாசி 29 பிறந்தீர்கள் என்றால் அதற்கு இணையான ஆங்கிலத் தேதியைக் கண்டுபிடிப்பது கடினம். நீங்கள் பிறந்த ஆண்டும் தெரிய வேண்டும். தெரிந்தால் தான் பஞ்சாங்கத்தைப் (இணையத்தில் இப்போது எல்லா ஆண்டும் பஞ்சாங்கங்களும் உள்ளன) பார்த்துக் கண்டுபிடிக்கலாம்:)--Kanags \உரையாடுக 07:47, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி நண்பர்களே.--சிவம் 08:07, 24 செப்டெம்பர் 2012 (UTC)

உணர்ச்சி வசப்படாதீர்கள் நண்பரே

தொகு

நமக்குள் கருத்து முறன்கள் இருக்கலாம். நான் அறிவற்றவனாகவோ, என் கொள்கை பொருள் அற்றதாகவோ இருக்கலாம். ஆனால் காலம் தோன்றியது முதல் மதமெனம் மூர்க்க தனத்தினை எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவுமிக்கவர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனை மதங்களை உலகம் கண்டபின்னும் இன்னும் கூட கடவுளை நம்பாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். \\குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா?\\ உண்மை அப்படிதான் என்றால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். உங்கள் நம்பிக்கை எதிராக சிலர் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று நம்பிக்கை x மதத்தினர் நம்புகிறார்கள் என்று இருக்க வேண்டிய இடத்தில், "கடவுள்தான் மனிதனை படைத்தார்" என்றிருத்தலை நடுநிலை என்றா நீங்கள் கருதுகின்றீர்கள்.

என்னுடைய வாதங்கள் தவறிருக்கலாம், என்னுடைய மேற்கோள்களில் தவறிருக்கலாம், என் கொள்கையில் தவறிருக்கலாம்,.. ஆனால் இப்படி தவறாக ஒன்றை சிலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு நரகம்தான் கிடைக்குமென ஆத்திகவாதிகள் சொல்லும் போதும், நாங்கள் இந்த மண்ணிலேயே சொர்க்த்தினை உருவாக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு தனிமனித தாக்குதல்களும் பெரிய விஷயமில்லை. பெரியாரை விட அதிகமாக நாங்கள் தூற்றப்படப் போவதில்லை. எனினும் வரும் தலைமுறைக்கு நல் வழிகாட்டுகள், பொது இடத்தில் இருக்கின்றீர்கள். நாளைய தலைமுறை விக்கியைப் படித்து கடவுள் இருக்கிறார் என்று தவறாக நம்பும் அளவிற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்.

Sivane (பேச்சு) 11:39, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிவனே, முதலில் //முதல் மதமெனம் மூர்க்க தனத்தினை எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவுமிக்கவர்கள்// என்று கூறுவதன் மூலம் எங்களையெல்லாம் நீங்கள் இழிவாகவும் மூர்க்கமானவர்களாகவும் பிரச்சாரம் செய்கிறீர்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களைப் பகுத்தறிவு மிக்கவர்களாகவும் சமயத்தைப் பின்பற்றும் எங்களைப் பகுத்தறிவற்றவர்களாகவும் காண்பிக்க முயல்கிறீர்கள். எங்களுடைய சமயம் எங்களுக்கு வழிகாட்டுகிறது. எங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் விட எங்களுக்கு எங்களது சமயமே முக்கியம். அடுத்தது, சமயம் பற்றிய கட்டுரைகளில் நடுநிலை இல்லையெனக் கூறி நீங்கள் பொய்யான கருத்துக்களைத் திணிக்க முயன்றீர்கள். தப்சீர் அத்-தபரீயில் இல்லாத ஒரு செய்தியை இருப்பதாகப் பொய்யுரைத்தீர்கள். முகம்மது நபியவர்கள் மீது அவதூறான செய்தியைப் பரப்ப முயல்கிறீர்கள். அதே நேரம், உங்களை நடுநிலையாளராகக் கூறிக்கொள்கிறீர்கள். மேலும், //\\குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போரையா?\\ உண்மை அப்படிதான் என்றால் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்// என்பதன் மூலம், இதுவரை அறிவியல் அடிப்படையில் ஒருபோதும் நிறுவப்படாத ஒரு கற்பனையை உண்மையென ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள். அது வெறும் கற்பனை மாத்திரமல்ல, அறிவியல் அடிப்படையில் நிறுவப்படாத ஒன்றை அறிவியல் உண்மையெனப் பரப்புரை செய்வது உங்களது மூடக்கொள்கைகளை ஏனையோர் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான திணிப்பு ஆகும். பரிணாமம் என்ற ஒரு கற்பனைக் கோட்பாடு இருப்பதாயின் அதைப்பற்றிக் கூறுமிடமெல்லாம் பரிணாமமென்ற கற்பனைக் கோட்பாடு இப்படக் கூறுகிறது என்றுதான் கூற வேண்டும். அது ஒன்றும் முடிந்த முடிவல்ல. அத்துடன், //எங்களுக்கு தனிமனித தாக்குதல்களும் பெரிய விஷயமில்லை// என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆம், முகம்மது நபி என்ற மனிதரைத் தரக்குறைவாகத் தாக்கியெழுதுவது உங்களுக்குப் பெரிய செய்தியல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் புண்படுத்தும் ஒரு இழிசெயல் என்பதை உணர மறுக்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் அதனை வேண்டுமென்றே செய்கிறீர்கள். அதனாற்றானே நீங்கள் வேறோரிடத்தில் உங்களது விமர்சனத்தைக் கண்டு மக்கள் நடுங்குவதாகக் கூறுகிறீர்கள். அஃதாவது, மக்களை நடுங்க வைப்பது உங்களுக்கு இன்பம் தருகிறது. நீங்களென்ன ஒரு பயங்கரவாதியா? //விக்கியைப் படித்து கடவுள் இருக்கிறார் என்று தவறாக நம்பும் அளவிற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்// என்று எனக்குக் கட்டளையிடுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை. கடவுளை மறுக்கும் கேடுகெட்ட செயலை நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதுடன் உங்களது கொள்கையே தவறானதாயிருக்க, உலக மக்கட்டொகையில் நான்கிலொரு பங்கினர் தம் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள முகம்மது நபியவர்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் நீங்களே நேர்மையில்லாமல் நடக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அண்மையில் எமது தலைவரை அவமதிக்கும் வகையில் எடுத்துள்ள திரைப்படம் முஸ்லிம் நாடுகளிலும் இலங்கையிலும் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் இழிவுப் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவையும் இலங்கையிலும் முஸ்லிம் நாடுகளிலும் தடைசெய்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தமிழுலகமே உங்களுக்கு நன்றி சொல்லுமென்றா எதிர்பார்க்கிறீர்கள்? இறுதியாக, இது தொடர்பான எந்தவொரு உரையாடலையும் நான் பொது இடமான ஆலமரத்தடியில் வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். ஏனெனில், நீங்கள் உங்களது கொள்கையைத் தனிப்பட்ட முறையில் என்னிடம் திணிக்க முயல்கிறீர்கள் என்பதுடன் எங்களது தலைவரை அவமதிக்கும் வகையிலேயே தொடர்ந்து எழுதிவருகிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 15:05, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மேற்படி உரையாடல் என்னுடைய பேச்சுப் பக்கத்திலிருந்து படியெடுக்கப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 15:14, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
பாகிம், பயனர் பேச்சுப் பக்க உரையாடல்களை ஆலமரத்தடிக்கு நகர்த்துவது விரும்பத்தக்க நடைமுறையன்று. அருள்கூர்ந்து தவிர்க்கவும். Sivane, சமயம் சார் கட்டுரைகளில் நடுநிலை தேவை என்ற உங்கள் கருத்தைப் பலரும் ஏற்று அதற்கான அணுகுமுறையை உரையாடி வருவதை அறிவீர்கள். இது குறித்த தெளிவான கொள்கை வழிகாட்டல் உருவாகும் வரை சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டுகிறேன். அதன் பிறகும், குறித்த கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கம், ஆதாரங்கள் அடிப்படையில் அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் மட்டும் உரையாடவும். பொத்தாம் பொதுவாகவோ தனிப்பட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களிலோ கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்க்கவும்.--இரவி (பேச்சு) 06:30, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சர்ச்சைக்குரிய துறைகள் - வாக்கெடுப்பு

தொகு

சர்ச்சைக்குரிய துறைகளில் இயன்ற அளவு முழுமையான, நடுநிலையான கட்டுரைகளை விரைந்தும் பயனர் பிணக்குகள் இன்றியும் உருவாக்குவதற்காக பின்வரும் அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது. சில பரிந்துரைகள் வழமையான விக்கிப்பீடியா உரிமைகளில் இருந்து சற்று கடுமையானது என்றாலும் குறைவான வளங்கள் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையைக் கருத்திற் கொண்டு செயற்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு வார உரையாடல் / வாக்கெடுப்புக் காலத்துக்குப் பின் இந்நடைமுறை பயனர்களின் ஏற்பு பெறும் நிலையில், இது முறையான தமிழ் விக்கிப்பீடியா கொள்கையாகவும் வழிகாட்டலாகவும் அறிவிக்கப்படும்: வாக்களிக்க இங்கே செல்லவும் சர்ச்சைக்குரிய துறைகள் - வாக்கெடுப்பு
--Anton (பேச்சு) 15:51, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இரவியின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன். குறைவான வளங்கள் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையைக் கருத்திற் கொண்டு செயற்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. என்பது மிக அருமையான குறிப்பு. --Anton (பேச்சு) 15:56, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

பூனைக்கு யார் மணி கட்டுவது?

தொகு
"பூனைக்கு யார் மணி கட்டுவது?" எனும் நிலை விக்கியில் ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் யாரென்றாலும் கட்டத்தான் வேண்டும்.
விக்கிப்பீடியா:கண்ணியம் எனும் பகுதியில் "தொகுத்தல் சுருக்கங்களில் பிறரின் தொகுத்தல் குறித்து இழிவாகக் கூறுதல் ("மட்டமான தமிழ் பெயர்ப்பு," "அறியாது தொகுத்தல்")”, பயனர்களின் மொழியறிவு அல்லது இலக்கணம் குறித்து எள்ளுவது" போன்ற செயற்பாடுகள் இன்றி கண்ணியமாக நடந்துக்கொள்ளுதல் பற்றி கூறப்பட்டிருந்தப் போதும்...
விக்கிப்பீடியா:நற்பழக்கவழக்கங்கள் பகுதியில் "பேச்சுப் பக்கங்களில்" இலக்கண சுத்தமாக உடையாடத் தேவையில்லை என்றாலும், கண்ணியமாகவும் கனிவாகவும் உடையாடுவதன் அவசியம் உணர்த்தப்பட்டிருந்தப் போதும்...
தொடர்ச்சியாக ஒரு பயனர் எவ்வித கண்ணியமும் கட்டுபாடும் அற்றவகையில் பேச்சுப்பக்கங்களில் புதிய பயனர்களை "இலக்கண மற்றும் மொழியறிவு" குறித்து எள்ளுவதும், தமிழர் அரசியல், தமிழர் வரலாறு, தமிழ் சொற்கள் தொடர்பில் கேள்வியெழுப்புவதும் தொடர்ந்து இடம் பெற்றவண்ணம் உள்ளன.
ஒருவரின் கருத்து பிழையானதாக இருந்தால் அக்கருத்துக்கு சரியான பதிலளிக்கலாம். தவறை சுட்டிக்காட்டாலாம். அக்கருத்து பொய்யானதாக இருந்தாலும்; அதனை பொய்யென எடுத்துக்காட்டலாம். ஆனால் கருத்தை விடுத்து கருத்திட்டவரை "பொய்யர்", “பொய்யர்" என அழைப்பதும்,
  • என்ன உளறுகிறீர்கள்?”
  • முட்டாளதனமாக உளறாதீர்கள்"
  • புலமை எந்தளவு உள்ளது?
  • என்ன உளறுகிறீர்கள்?
  • எவ்வளவு பெரிய பொய்யர்
  • குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளும் தம் மூதாதையரென மூட நம்பிக்கை கொண்டிருப்போ...
  • கயமை
  • இவ்வளவுதான உங்கள் அறிவு
  • உங்களைப் பயங்கரவாதி எனலாமா?”

என்பது போன்ற கொடுஞ்சொற்கலும் கடுஞ்சாடல்களும் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட பயனரை எவரும் கண்டித்தாக காண்பதற்கில்லை. இதன் பிறகும் இவ்வாறு நிகழ இடமளிக்க முடியாது. --ஜவஹர் அலி (பேச்சு) 20:35, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஒரு சிலர் பொய்யான ஆளடையாளங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாமியப் பெயரைப் பயன்படுத்துவது வேண்டுமென்றே முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கான செயலென்றே கருத வேண்டியுள்ளது. ஒருவர் பேச்சுப் பக்கங்களில் வெறுமனே பொய்களைக் கூறி அவற்றை ஆதாரமெனக் கூறினால், கட்டாயமாக அவற்றைப் பொய்யெனக் கூறி நிராகரிக்கத்தான் வேண்டும். முகம்மது நபியவர்கள் மீது வேண்டுமென்றே பொய்களைப் புனைந்து கூறும் ஒருவரைப் பொய்யரென்றுதான் கூற வேண்டும். வேண்டுமென்றே மக்களைத் திசை திருப்ப நினைப்போர், தனிப்பட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் அவர்களை மூர்க்கர் என்று இழித்துரைப்போர் இங்கு வேறு பல பயனர் கணக்குகளில் வந்து தங்களை நேர்மையாளராகச் சித்தரிப்பதுதான் வேடிக்கை. சிலருக்குத் தமிழ் உணர்வு சார்ந்த விடயமாம். ஆனால் அவர்கள் நல்ல தமிழில் எழுத மாட்டார்களாம். தமிழ் மொழியைப் பிழையாக எழுதுவதுதான் நல்ல தமிழுணர்வாளருக்கு அடையாளமென அவர்கள் கருதுகின்றனரோ என்னவோ. மேலும், ஒரு சிலருக்குத் தமிழ் உணர்வு என்னவென்பதற்கும் விளக்கம் தெரியவில்லை எனத் தோன்றுகிறது. இங்கு விக்கிப்பீடியாவில் நடுநிலைத்தன்மை இல்லையெனக் கூறும் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான கட்டுரைகளை நடுநிலைப்படுத்த விரும்புவதில்லை.--பாஹிம் (பேச்சு) 01:33, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இருவருக்கும் வணக்கம், தயவுசெய்து ஒருவருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதை விடுத்து உள்ளடக்கம் தொடர்பான உரையாடலை மட்டும் மேற்கொண்டால் விக்கிப்பீடியா சிறக்கும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 01:47, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தனிப்பட்ட பயனர்கள், கட்டுரைகள் குறித்த உரையாடல்களை ஆலமரத்தடியில் மேற்கொள்ள வேண்டம். பயனர்களைப் பற்றிய முறையீடுகளை விக்கிப்பீடியா:பயனர் தடை வாக்கெடுப்புகள் பக்கத்தில் தரலாம். தடுக்க வேண்டிய பயனர் பெயர் / ஐ. பி. முகவரி, காரணம், அதற்கான எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.--இரவி (பேச்சு) 03:54, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஜவஹர் அலி சுட்டிக்காட்டியபடி பண்புமாறாது தொடருவோம். தனிப்பட்ட கொள்கை விருப்புவெறுப்புகள் கட்டுரைகளில் தொனிக்காமல் கட்டுப்படுத்திக்கொள்வோம். தயைகூர்ந்து இவ்விடயங்களில் உறுதியாயிருப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:54, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சண்முகத்தின் கருத்தை ஏற்கிறேன்.   விருப்பம் தயவு செய்து, தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச வேண்டாம். //உள்ளடக்கம் தொடர்பான உரையாடலை மட்டும் மேற்கொண்டால் விக்கிப்பீடியா சிறக்கும், இவ்வரியை நற்பழக்கவழக்கங்களில் சேருங்கள்.


தமிழ்நாடு - சொற்கள்

தொகு

நண்பர்களே, தமிழ்நாட்டில் வழங்கும் பின்வரும் சொற்களைப் பற்றிச் சிறிது தகவல் வேண்டும். தெரிந்தவர்கள் கூறுவீர்களா?

  1. பேட் மாநகரம்: இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள ஓர் ஊர். இதன் பெயரை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதப்படுகிறது?
  2. தென்பத்தி: இச்சொல்லின் பொருளென்ன? ஆங்கில்த்தில் எப்படி எழுதப்படுகிறது?
  3. சித்லாஸி என்றால் என்ன?
  4. சார்பதிவாளர் என்றால் sub-registrar என்று பொருளா?

--பாஹிம் (பேச்சு) 15:00, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வாப்பா என்று சொல்லுகிறார்களே அதற்க்கு அர்த்தம் என்ன?? உம்மா என்று சொல்லுகிறார்களே அதற்க்கு அர்த்தம் என்ன?? அல்லா ஹூ அக்பர் இதற்க்கு என்ன அர்த்தம்?? வல்ல இதற்க்க்கு என்ன அர்த்தகம்?? ஹராம் இதற்கு என்ன அர்த்தம்?? --சிவம் 15:25, 27 செப்டெம்பர் 2012 (UTC) இது எனது கடைசி எச்சரிக்கை~~!!!! பொறுமையாக நடுந்து கொள்ளுங்கள்.!!! நீங்கள் தமிழர்களையும் , தமிழ் நாட்டையும் அவமதிக்க இங்கு முயட்ச்சி செய்கிறீர்கள்~~!!!! உடனடியாக இவரை வெளியேற்றவும்!! இதுவே ஒரு சிறந்த ஆதாரம்!!!! இதற்க்கு மேல் ஆதாரம் தேவை இல்லை!!!--சிவம் 15:34, 27 செப்டெம்பர் 2012 (UTC)

தேவையின்றி உளறாதீர்கள், சிவம். நீங்கள் கேட்கும் சொற்கள் அனைத்துக்கும் பொருளுண்டு. நான் இங்கு மேற்படி சொற்களைப் பற்றிக் கேட்பது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. நான் ஒரு சொல்லைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அது எப்படித் தமிழைக் கொச்சைப்படுத்துவதாகும்? நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வர முன்னரே நான் ஆண்டுக் கணக்காக ஏனைய விக்கிப்பீடியர்களுடன் நல்ல முறையில் உரையாடிக் கட்டுரைகளை வளப்படுத்திய அனுபவம் உண்டு. யாராவது தமிழ்நாட்டுக்காரர் பதிலளிப்பாரென எதிர்பார்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 15:43, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிவம், பாகிம் கேட்டுள்ள ஐயங்களில் எந்தத் தவறும் இல்லை. இது எந்த விதத்திலும் தமிழையோ தமிழரையோ தமிழ்நாட்டையோ அவமதிப்பதாக நினைக்கவில்லை. தொடர்பில்லாத இடங்களிலும் பிற பயனர்களைப் பற்றித் தவறாக முறையிடுவதைத் தவிர்க்கவும்.

பாகிம், சார்பதிவாளர் என்றால் sub-registrar தான். மற்ற சொற்கள் பற்றி அறியேன். இது போன்ற ஐயங்களை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேட்கலாம். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தினைப் பற்றிய பெருநோக்குக் கருத்துகளுக்கு மட்டும் ஆலமரத்தடியைப் பயன்படுத்தவும்--இரவி (பேச்சு) 16:20, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி, இரவி. நான் விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்திற் கேட்காமைக்குக் காரணம் சார்பதிவாளர் என்பது தவிர்ந்த ஏனைய சொற்கள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டில் உள்ளவையென நினைத்தமையே. ஏனெனில், பேட் மாநகரம் என்னும் போது ஓர் ஊரைத்தானே குறிக்கிறது? ஆனால் அதை Pet, Pate, Paet, Bet, Bate, Baet என்றெல்லாம் எழுதிக் குழப்பிக்கொள்ளாமல் யாராவது தெரிந்தவர்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன். தென்பத்தி என்றால் தென்பகுதி என்று பொருளாயிருக்குமோ என்று நினைக்கிறேன். சித்லாஸி என்பது தமிழ்ச் சொல்லாக இருக்க முடியாது. அது ஒரு பெயரா எனத் தெரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 16:27, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சித்லாஸி, தமிழ்ச் சொல் போன்றே இல்லையே. ஒருவேளை குளிர்பானமாயிருக்கும்;-) இதை எங்கே படித்தீர்கள் பாகிம்?-101.220.14.245 16:41, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

குளிர்பானம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். அது ஒருவருடைய பெயராயிருக்குமோ என்று நினைக்கிறேன். ஏனெனில், தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணமொன்றில் "நொண்டி சித்லாஸி xxxxx" என்று காணப்படுகிறது. அது சரி, பேட் மாநகரத்தைப் பற்றித் தெரியுமா? தெரிந்தால், அதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது என்றாவது சொல்லுங்களேன்.--பாஹிம் (பேச்சு) 17:08, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]