ஆலம் (நடிகை)

இந்திய நடிகை

ஆலம் அல்லது ''ஹலம்'' இவர் 1970களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் கவர்ச்சி நடன நடிகையாக நடித்தவர். தமிழ்த் திரையுலகில் 70களின் பிற்பகுதியில் சி. ஐ. டி. சகுந்தலா, ஆலம், ஜெயகுமாரி ஆகியோர் கவர்ச்சி நடிகைகளாக பெரும்பாலான திரைப்படங்களில் நடித்தனர்.[1]

ஆலம்
பிறப்புசத்யபாமா
1953
குண்டூர், ரெபள்ளி, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியன்
செயற்பாட்டுக்
காலம்
1970–1982
பெற்றோர்தந்தை : கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
தாயார் : மங்கம்மாள்
வாழ்க்கைத்
துணை
சாந்து (1979-2008)
பிள்ளைகள்3

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சத்யபாமா என்ற இயற்பெயர் கொண்ட ஆலம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் அருகே ரெபள்ளி என்ற ஊரில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்–மங்கம்மாள் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவர்கள் குடும்பம் பின்னாளில் தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுரில் குடியேறியது இவருடன் சத்யவாணி, ராதிகா என இரண்டு சகோதரிகளும் சவரா என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.

திரையுலக அனுபவம் தொகு

  • இவர் 1970களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் மட்டுமே முதன்மை கதாபாத்திரம் ஏற்று கவர்ச்சி நடிகையாகவும், சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், எதிர்மறை கதாபாத்திரமாக வில்லியாகவும் நடித்துள்ளார்.[2]
  • இவர் 70களில் தமிழ் திரையுலகில் ஜனரக எழுத்தாளரும், நடிகருமான ஜாவர் சீதாராமன் இயக்கித் தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற நாடகம் தயாரித்த போது அதில் பிரபல நடிகை சரோஜாதேவி உடலில் இருந்து பிரிந்து தோன்றும் ஆலம் பனா என்ற பெயரில் நடித்ததால் இவருக்கு சத்யபாமா என்ற பெயர் மறைந்து ஆலம் என்ற பெயர் நிலைத்தது.
  • இவர் ஆங்கில திரைப்படமான பிளே பாய்ஸ் என்ற திரைப்படத்தில் பெங்களூர் நகரத்தில் படமாகி கொண்டிருக்கும் போது அங்கு சீன உணவகம் நடத்தி கொண்டு இருந்த சீன நாட்டை சேர்ந்த சாந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்தனர்.
  • இவர்களது திருமணம் நடந்த 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு கணவர் சாந்து மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி கொண்டார்.
  • திருமணத்திற்கு பிறகு ஆலம் நடித்த சில திரைப்படங்கள் வெளிவந்தன.
  • 2008 ஆம் ஆண்டு கணவர் சாந்துவின் மரணத்திற்குப் பிறகு 3 பிள்ளைகளோடு சென்னையில் வசித்து வந்தார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. FilmiClub. "Aalam - Biography, Movies, Photos, Videos". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.
  2. "Aalam". IMDb (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்_(நடிகை)&oldid=3923142" இலிருந்து மீள்விக்கப்பட்டது