ஆத்திரேலியப் பழங்குடிகள்
ஆஸ்திரேலிய பழங்குடிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.
வரலாறுதொகு
பழங்குடிகளின் வருகைதொகு
ஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாக நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.
ஐரோப்பியரின் வருகைதொகு
1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.
இவற்றையும் பார்க்கவும்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- DNA study sheds light on aboriginal Australians' heritage பரணிடப்பட்டது 2012-10-06 at the Library of Congress Web Archives, எல்லே டைம்சு, சனவரி 15, 2013
- Ancient migration: Genes link Australia with India, பிபிசி, சனவரி 14, 2013
- The 4,000-year-old Indian link, லைவ் மின்ற், சனவரி 15, 2013
- Genome-wide data substantiate Holocene gene flow from India to Australia, Proceedings of the National Academy of Sciencesof the United States of America