இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021

இந்தியா துடுப்பாட்ட அணி 2021 சூலை மாதம் இலங்கையில் மூன்று ஒருநாள்போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது 20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1] ஒருநாள் தொடர் 2020–2023 ஐ.சி.சி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சிறப்புச் சுற்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.[2][3] அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச அரங்கத்தில் நடைபெற உள்ளன.[4] முதலில், இச்சுற்றுப்பயணம் ஜூன் 2020 இல் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா பெருந்தொற்றுநோயால், இச்சுற்றுப்பயணம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.[5][6]

இந்திய துடுப்பாட்ட அணியின் இலங்கை பயணம் , 2021
இலங்கை
இந்தியா
காலம் 18 – 29 சூலை 2021
தலைவர்கள் தசுன் சானக்க ஷிகர் தவான்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (159) ஷிகர் தவான் (128)
அதிக வீழ்த்தல்கள் அகிலா தனஞ்செய (3)
பிரவீன் ஜயவிக்கிரம (3)
வனிந்து ஹசரங்கா (3)
யுஸ்வேந்திர சஹல் (5)
தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ் (இந்.)
இருபது20 தொடர்

இச்சுற்றுப்பயணம், 2021 ஐ.சி.சி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் இறுதிப்போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கவுள்ள தேர்வுத் தொடருக்கும் இடையில் வருகிறது.[7] எனவே, இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவானும், துணைத் தலைவராக புவனேஷ்வர் குமாரும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ,இந்திய அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் .[8]

பின்னணி

தொகு

2020-ஆம் ஆண்டு மே மாதம், இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் , இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துக்கு (பிசிசிஐ) ஒரு மின்னஞ்சல் அனுப்பியது [9].அதில் ,கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக , 2020-ஆம் ஆண்டின் சூன் மாதத்தில் நடைப்பெற வேண்டிய இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளை, அவ்வாண்டின் சூலை மாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது[10]. மேலும் , இப்போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்தவும் இலங்கை துடுப்பாட்ட வாரியம் திட்டமிட்டது. ஆனால், நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வந்ததால், வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்போட்டிகளை ஆகஸ்ட் மாதம் நடத்த இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பட்டு வாரியம் திட்டமிட்டது[11]. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்தையும் இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பட்டு வாரியம் கைவிட்டது[12].

இதைத்தொடர்ந்து, இப்போட்டிகளை 2021-ஆம் ஆண்டின் சூலை மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது .இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் அறிவிக்கப்பட்டார் [13].இதைத்தொடர்ந்து , இலங்கைக்குப் பயணம் செய்ய உள்ள வீரர்களின் பட்டியலை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் சூன் 10 , 2021 அன்று அறிவித்தது[14].

அணிகள்

தொகு
  இலங்கை   இந்தியா
ஒருநாள் மற்றும் இருபது20 கள் [15] ஒருநாள் மற்றும் இருபது20 கள் [16]

ஒருநாள் தொடர்

தொகு

1-வது ஒருநாள்

தொகு
18 சூலை 2021
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை  
262/9 (50 நிறைவுகள்)
  இந்தியா
263/3 (36.4 நிறைவுகள்)
இந்தியா 7 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பானுக ராஜபக்ச (இல), இசான் கிசான் (இந்), சூர்யகுமார் யாதவ் (இந்) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாஃடினர்.
  • தசுன் சானக்க முதல்தடவையாக ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடினார்.[17]
  • ஷிகர் தவான் முதல்தடவையாக ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவராக விளையாடினார்.[18] அத்துடன் தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[19]
  • ஐ.சி.சி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சிறப்புச் சுற்றுப் புள்ளிகள்: இந்தியா 10, இலங்கை 0.

2-வது ஒருநாள்

தொகு
20 சூலை2021
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை  
275/9 (50 நிறைவுகள்)
  இந்தியா
277/7 (49.1 நிறைவுகள்)
இந்தியா 3 இழப்புகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), லிண்டன் அனிபால் (இல)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஐ.சி.சி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சிறப்புச் சுற்றுப் புள்ளிகள்: இந்தியா 10, இலங்கை –1.[20][n 1]

3-வது ஒருநாள்

தொகு
23 சூலை 2021
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா  
225 (43.1 நிறைவுகள்)
  இலங்கை
227/7 (39 நிறைவுகள்)
பிரித்வி ஷா 49 (49)
அகிலா தனஞ்செய 3/44 (10 நிறைவுகள்)
இலங்கை 3 இழப்புகளால் வெற்றி (ட/லூ முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு 47 நிறைவுகளுக்கு 227 ஓட்டங்களாகக் கணிக்கப்பட்டது.
  • ராகுல் சாகர், கிருஷ்ணப்பா கௌதம், நித்தீசு ராணா, சேட்டன் சக்காரியா, சஞ்சு சாம்சன் அனைவரும் இந்திய அணிக்காக தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
  • ஐ.சி.சி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சிறப்புச் சுற்றுப் புள்ளிகள்: இலங்கை 10, இந்தியா 0.

இருபது20 தொடர்

தொகு

1-வது ப20இ

தொகு

2-வது ப20இ

தொகு

3-வது ப20இ

தொகு

குறிப்புகள்

தொகு
  1. பந்துவீச்சில் மந்த வேகம் காட்டியதால் இலங்கை அணிக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "India's tour of Sri Lanka in July to comprise three ODIs, three T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
  2. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  3. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
  4. "Schedules of Sri Lanka's next three tours revealed". The Papare. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  5. "India agree to tour Sri Lanka in August". The Papare. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  6. "India's tours to Sri Lanka, Zimbabwe postponed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.
  7. "India Announce Squad for Sri Lanka Tour; Shikhar Dhawan to Lead, Bhuvneshwar Kumar Vice Captain". News18. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  8. "India's squad for ODI & T20I series against Sri Lanka announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  9. "SLC writes to BCCI to conduct bilateral series". Archived from the original on 2020-05-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  10. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  11. Staff, Scroll. "BCCI agrees to Indian team touring Sri Lanka in August: Report". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  12. "India tours to Sri Lanka and Zimbabwe called off". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  13. "Dravid to travel as head coach for Sri Lanka tour". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  14. "India's squad for ODI & T20I series against Sri Lanka announced". The Board of Control for Cricket in India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  15. "India vs Sri Lanka 2021: SLC Announce Squad; Check Full List". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
  16. "Shikhar Dhawan to captain India on limited-overs tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  17. "India start as favourites against unsettled Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  18. "Sri Lanka kick-off India series with crucial CWCSL points at stake". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  19. "Shikhar Dhawan Second Fastest Indian After Virat Kohli to Reach 6,000 Runs in ODIs". News18. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  20. "Sri Lanka fined for slow over-rate in second ODI against India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.