இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019–20

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2019 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பாக்கித்தானில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது.[1][2] இத்தொடரில் ஆரம்பத்தில் இரண்டு தேர்வுப் போட்டிகளும் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், தேர்வுப் போட்டிகள் திசம்பர் 2019 இல் அமீரகத்தில் விளையாடப்படத் தீர்மானிக்கப்பட்டது.[3][4] இலங்கை கடைசியாக 2017 அக்டோபரில் பாக்கித்தானில் விளையாடியது. அப்போது அது மூன்று இ20ப போட்டிகளில் லாகூர், கடாபி அரங்கில் விளையாடியது.[5][6]

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019
பாக்கித்தான்
இலங்கை
காலம் 27 செப்டம்பர் – 9 அக்டோபர் 2019
தலைவர்கள் அசார் அலி (தேர்வு)
சப்ராஸ் அகமது(ஒநாப மற்றும் இ20ப)
திமுத் கருணாரத்ன (இ20ப)
லகிரு திரிமான்ன (ஒநா)
தசுன் சானக்க (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அபித் அலி (321) ஒசதா பெர்னாண்டோ (146)
அதிக வீழ்த்தல்கள் சகீன் அஃப்ரிடி (8) லகிரு குமார (7)
தொடர் நாயகன் அபித் அலி (பாக்.)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் பாபர் அசாம் (146) தனுஷ்க குணதிலக்க (147)
அதிக வீழ்த்தல்கள் உஸ்மான் கான் சின்வாரி (6) வனிந்து அசரங்க (3)
தொடர் நாயகன் பாபர் அசாம் (பாக்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சப்ராஸ் அகமது (67) பானுக ராஜபக்ச (112)
அதிக வீழ்த்தல்கள் முகம்மது அசுனைன் (3)
முகம்மது ஆமிர் (3)
வனிந்து அசரங்க (8)
தொடர் நாயகன் வனிந்து அசரங்க (இல)

இலங்கை அணியில் பல வீரர்கள் இத்தொடரில் பங்குபற்ற விருப்பம் தெரிவிக்காத நிலையில்,[7] லகிரு திரிமான்ன, தசுன் சானக்க ஆகியோர் முறையே ஒருநாள், இ20ப போட்டிகளில் தலைவர்களாக விளையாடுகிறார்கள்.[8] சப்ராஸ் அகமது பாக்கித்தான் அணியின் தலைவராக விளையாடுகிறார்.[9][10]

கராச்சி, தேசிய அரங்கில் நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.[11][12] அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாக்கித்தான் வெற்றி பெற்று, தொடரை 2-0 கணக்கில் வென்றது.[13] இ20ப தொடரை இலங்கை அணி 3–0 என்ற கணக்கில் வென்றது.[14]

இலங்கைத் துடுப்பாட்ட அணி மீண்டும் பாக்கித்தானுக்கு வருகை தந்து இரு தேர்வுப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.[15] இது 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.[16][17][18] இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்கித்தானில் நடைபெறும் முதல் தேர்வுத் தொடர் ஆகும்.[19]

பின்னணி தொகு

2009 மார்ச்சில், இலங்கைத் துடுப்பாட்ட அணி லாகூர், கடாபி அரங்கில் அத்தொடரின் இரண்டாவது தேர்வுப் போட்டியை விளையாட ஆரம்பிக்க முன்னர் அவ்வணி மீது தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில், ஆறு இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள், இரண்டு இலங்கை அதிகாரிகள், ஒரு நடுவர் காயமடைந்தனர், ஆறு பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இலங்கை அணி பாக்கித்தானில் முழுமையான தொடர் எதிலும் விளையாடவில்லை.[20] 2019 மே மாதத்தில், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியத் துடுப்பாட்ட அவையின் கூட்டத்தில், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் பாக்கித்தானில் இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாட இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்திடம் வேண்டுகோள் விடுத்தது.[21] 2019 ஆகத்தில் இலங்கை அணி லாகூர், கராச்சி அரங்குகளில் பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்தது.[22][23] 2019 ஆகத்து 22 இல், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருநாள் போட்டிகளை மட்டும் பாக்கித்தானில் நடத்த அனுமதித்தார். தேர்வுப் போட்டிகளை நடத்த னுமதிக்கவில்லை.[24][25]

2019 செப்டம்பர் 9 இல், தினேஸ் சந்திமல், அகில தனஞ்சயா, நிரோசன் டிக்வெல்ல, திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, அஞ்செலோ மத்தியூஸ், குசல் பெரேரா, திசாரா பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் பாக்கித்தான் செல்வதில்லை என அறிவித்தனர்.[26] 2019 செப்டம்பர் 19 இல், இலங்கை அணி திட்டமிட்டபடி பாக்கித்தான் செல்லும் என இலங்கை அறிவித்தது.[27][28]

அணிகள் தொகு

ஒருநாள் அணி இ20ப அணி
  பாக்கித்தான்[29]   இலங்கை[30]   பாக்கித்தான்[31]   இலங்கை[32]

ஒருநாள் தொடர் தொகு

1-வது ஒருநாள் தொகு

27 செப்டம்பர் 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆட்டம் கைவிடப்பட்டது.
தேசிய அரங்கு, கராச்சி
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ஜொயெல் வில்சன் (மேஇ)
 • நாணய்ச்சுழற்சி மேற்கொள்ளப்படவில்லை.
 • மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.

2-வது ஒருநாள் தொகு

30 செப்டம்பர் 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
305/7 (50 நிறைவுகள்)
  இலங்கை
238 (46.5 நிறைவுகள்)
பாபர் அசாம் 115 (105)
வனிந்து அசரங்கா 2/63 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 67 ஓட்டங்களால் வெற்றி
தேசிய அரங்கு, கராச்சி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), சொசாப் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: உஸ்மான் கான் சின்வாரி (பாக்)
 • நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3-வது ஒருநாள் தொகு

2 அக்டோபர் 2019
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
297/9 (50 நிறைவுகள்)
  பாக்கித்தான்
299/5 (48.2 நிறைவுகள்)
பகர் சமான் 76 (91)
நுவான் பிரதீப் 2/53 (9.2 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இழப்புகளால் வெற்றி
தேசிய அரங்கு, கராச்சி
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஆபித் அலி (பாக்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மினோத் பானுக்கா (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இ20ப தொடர் தொகு

1-வது இ20ப தொகு

5 அக்டோபர் 2019
18:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
165/5 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
101 (17.4 நிறைவுகள்)
தனுஷ்க குணதிலக்க 57 (38)
முகம்மது அசுனைன் 3/37 (4 நிறைவுகள்)
இப்திகார் அகமது 25 (24)
இசுரு உதான 3/11 (2.4 நிறைவுகள்)
இலங்கை 64 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கு, லாகூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: தனுஷ்க குணதிலக்க (இல)
 • நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மினோத் பானுக்க, பானுக ராஜபக்ச (இல) இருவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
 • தசுன் சானக்க முதல்தடவையாக இ20ப போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடினார்.[33]

2-வது இ20ப தொகு

7 அக்டோபர் 2019
18:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
182/6 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
147 (19 நிறைவுகள்)
பானுக ராஜபக்ச 77 (48)
இமாத் வசிம் 1/27 (4 நிறைவுகள்)
இலங்கை 35 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கு, லாகூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஆசிப் யாக்கூப் (பாக்)
ஆட்ட நாயகன்: பானுக ராஜபக்ச (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3-வது இ20ப தொகு

9 அக்டோபர் 2019
18:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
147/7 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான்
134/6 (20 நிறைவுகள்)
ஒசாடா பெர்னாண்டோ 78* (48)
முகம்மது ஆமிர் 3/27 (4 நிறைவுகள்)
ஹரிஸ் சோகைல் 52 (50)
வனிந்து அசரங்க 3/21 (4 நிறைவுகள்)
இலங்கை 13 ஓட்டங்களால் வெற்றி
கடாஃபி அரங்கு, லாகூர்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சோசாப் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்க (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஒசாடா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

தேர்வுத் தொடர் தொகு

1வது தேர்வு தொகு

11–15 திசம்பர் 2019
ஓட்டப்பலகை
308/6 (97 நிறைவுகள்)
தனஞ்சய டி சில்வா 102* (186)
சகீன் அஃப்ரிடி 2/58 (22 நிறைவுகள்)
252/2 (70 நிறைவுகள்)
அபித் அலி 109* (201)
கசுன் ரஜிதா 1/5 (6 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கு, இராவல்பிண்டி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்.), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.)
ஆட்ட நாயகன்: அபித் அலி (பாக்.)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை, மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-ஆம், 3-ஆம் நாள் ஆட்டஙக்ளில் முறையே 18.2, 5.2 நிறைவுகள் மட்டுமே விளையாடப்பட்டன.
 • தரை ஈரத்தன்மையுடன் காணப்பட்டதால், 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
 • அபித் அலி (பாக்.), உஸ்மான் கான் சின்வாரி (பாக்.) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
 • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 20, பாக்கித்தான் 20

2வது தேர்வு தொகு

19–23 திசம்பர் 2019
ஆட்ட விவரம்
191 (59.3 நிறைவுகள்)
அசாத் சஃபீக் 63 (126)
லகிரு குமார 4/49 (18 நிறைவுகள்)
271 (85.5 நிறைவுகள்)
தினேஸ் சந்திமல் 74 (143)
சகீன் அஃப்ரிடி 5/77 (26.5 நிறைவுகள்)
555/3 (131 நிறைவுகள்)
அபித் அலி 174 (281)
லகிரு குமார 2/139 (29 நிறைவுகள்)
212 (62.5 நிறைவுகள்)
ஒசதா பெர்னாண்டோ 102 (180)
நசீம் ஷா 5/31 (12.5 நிறைவுகள்)
பாக்கித்தான் 263 ஓட்டங்களால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), ஜோல் வில்சன் (மேஇ.)
ஆட்ட நாயகன்: அபித் அலி (பாக்.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
 • சகீன் அஃப்ரிடி (பாக்.) தனது முதல் ஐவீழ்த்தலை எடுத்தார்.[34]
 • அபித் அலி தனது முதல் இரு தேர்வுப் போட்டிகளிலும் நூறு எடுத்த முதல் பாக்கித்தான் வீரரானார்.[35]
 • ஷான் மசூத் (பாக்.) தனது 1,000ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[36]
 • பாக்கித்தான் அணியின் மட்டையாடும் வரிசையில் உள்ள முதல் 4 மட்டையாளர்களும் ஒரே ஆட்டப்பகுதியில் நூறு எடுத்தது இதுவே முதல்முறையாகும்.[37]
 • ஒசதா பெர்னாண்டோ (இல.) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் நூறை எடுத்தார்.[38]
 • நசீம் ஷா (பாக்.) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் ஐவீழ்த்தலை எடுத்தார். இதன்மூலம் தேர்வு வரலாற்றில் இளம் வயதில் ஐவீழ்த்தல் எடுத்தவரானார் (16 வருடங்கள், 311 மாதங்கள்).
 • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: பாக்கித்தான் 60, இலங்கை 0.

மேற்கோள்கள் தொகு

 1. "Men's Future Tours Programme". International Cricket Council. https://pulse-static-files.s3.amazonaws.com/ICC/document/2018/06/20/6dc2c8d4-e1a5-4dec-94b4-7121fab3cd7f/ICC_Tours.pdf. பார்த்த நாள்: 11 January 2019. 
 2. "Sri Lanka to tour Pakistan for limited-overs series in September - Here's complete schedule". Times Now News. https://www.timesnownews.com/sports/cricket/article/sri-lanka-to-tour-pakistan-for-limited-overs-series-in-september-heres-complete-schedule/474689. பார்த்த நாள்: 23 August 2019. 
 3. "PCB and SLC announce schedule of upcoming matches". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/pcb-and-slc-announce-schedule-of-upcoming-matches.html. பார்த்த நாள்: 23 August 2019. 
 4. "PCB and SLC announce schedule of upcoming matches". Sri Lanka Cricket. http://cricket.lk/2019/08/23/pcb-and-slc-announce-schedule-of-upcoming-matches/. பார்த்த நாள்: 23 August 2019. 
 5. "Sri Lanka confirm tour of Pakistan". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1321121. பார்த்த நாள்: 23 August 2019. 
 6. "Sri Lanka to tour Pakistan for limited-overs series". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27446179/sri-lanka-tour-pakistan-limited-overs-series. பார்த்த நாள்: 23 August 2019. 
 7. "Ten Sri Lanka players opt out of tour of Pakistan due to security concerns". BBC Sport. https://www.bbc.co.uk/sport/cricket/49639227. பார்த்த நாள்: 11 September 2019. 
 8. "Thirimanne, Shanaka to lead Sri Lanka in Pakistan". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1200308.html. பார்த்த நாள்: 11 September 2019. 
 9. "Sarfaraz Ahmed retained as Pakistan captain, Babar Azam made vice-captain". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27606503/sarfaraz-ahmed-retained-pakistan-captain-babar-azam-made-vice-captain. பார்த்த நாள்: 13 September 2019. 
 10. "Sarfaraz Ahmed retained Pakistan captain; Babar Azam appointed vice-captain". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/sarfaraz-ahmed-retained-pakistan-captain-babar-azam-appointed-vice-captain.html. பார்த்த நாள்: 13 September 2019. 
 11. "Rain ruins tour opener in Karachi". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/series/19504/report/1198486/pakistan-vs-sri-lanka-1st-odi-sri-lanka-in-pakistan-2019-20. பார்த்த நாள்: 27 September 2019. 
 12. "ODI cricket's return to Pakistan ruined by rain". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1359224. பார்த்த நாள்: 27 September 2019. 
 13. "Pakistan beat Sri Lanka by five wickets in third ODI, clinch series 2-0". Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/pakistan-beat-sri-lanka-by-five-wickets-in-third-odi-clinch-series-2-0/story-yBVxWIzHKC6Nh0zrTwGlBL.html. பார்த்த நாள்: 2 October 2019. 
 14. Sri Lanka sweep Pakistan 3-0 in T20 series, கான்பரா டைம்சு, அக்டோபர் 10, 2019
 15. "Pakistan to host Sri Lanka for two-Test series in December". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/28076663/pakistan-host-sri-lanka-two-test-series-december. பார்த்த நாள்: 14 November 2019. 
 16. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. https://www.icc-cricket.com/news/742337. பார்த்த நாள்: 11 January 2019. 
 17. "Men's Future Tours Programme". International Cricket Council. https://icc-static-files.s3.amazonaws.com/ICC/document/2018/06/20/6dc2c8d4-e1a5-4dec-94b4-7121fab3cd7f/ICC_Tours.pdf. பார்த்த நாள்: 11 October 2019. 
 18. "Pakistan announce WTC schedule against England". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/pakistan-announce-wtc-schedule-against-england.html. பார்த்த நாள்: 21 August 2019. 
 19. "Test cricket set to return to Pakistan after 10 years". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1494835. பார்த்த நாள்: 14 November 2019. 
 20. "PCB offer to host SL for Test series in Pakistan". CricBuzz. https://www.cricbuzz.com/cricket-news/108200/pcb-offer-to-host-sl-for-test-series-in-pakistan. பார்த்த நாள்: 29 May 2019. 
 21. "PCB makes contact with Sri Lanka with a view to moving Test series to Pakistan". Dawn. https://www.dawn.com/news/1485119. பார்த்த நாள்: 29 May 2019. 
 22. "Sri Lankan security delegation to decide on Test series in Pakistan". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27237996/sri-lankan-security-delegation-decide-test-series-pakistan. பார்த்த நாள்: 22 July 2019. 
 23. "Sri Lanka Cricket security delegation to visit Pakistan this week". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/sri-lanka-cricket-security-delegation-to-visit-pakistan-this-week.html. பார்த்த நாள்: 5 August 2019. 
 24. "Sri Lanka will tour Pakistan after two-year gap to play ODIs and T20Is, informs SL sports minister". Agence France-Presse. https://www.firstpost.com/firstcricket/sports-news/sri-lanka-will-tour-pakistan-after-two-year-gap-to-play-odis-and-t20is-informs-sl-sports-minister-7209821.html. பார்த்த நாள்: 22 August 2019. 
 25. "Sri Lanka to play ODIs in Pakistan". The Papare. http://www.thepapare.com/sri-lanka-play-odis-pakistan/. பார்த்த நாள்: 23 August 2019. 
 26. "Malinga, Mathews, Karunaratne among ten players to pull out of Pakistan tour". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27576976/malinga-mathews-karunaratne-ten-players-pull-pakistan-tour. பார்த்த நாள்: 9 September 2019. 
 27. "Sri Lanka tour of Pakistan to go ahead as planned". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27649921/sri-lanka-tour-pakistan-go-ahead-planned. பார்த்த நாள்: 19 September 2019. 
 28. "Sri Lanka tour of Pakistan to go ahead as planned". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1349617. பார்த்த நாள்: 19 September 2019. 
 29. "Pakistan squad for Sri Lanka ODIs announced". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/pakistan-squad-for-sri-lanka-odis-announced.html. பார்த்த நாள்: 21 September 2019. 
 30. "Sri Lanka ODI and T20I Squads for Pakistan tour". Sri Lanka Cricket. http://cricket.lk/2019/09/11/sri-lanka-odi-and-t20i-squads-for-pakistan-tour/. பார்த்த நாள்: 11 September 2019. 
 31. "Pakistan squad for Sri Lanka T20Is announced". Pakistan Cricket Board. https://www.pcb.com.pk/press-release-detail/pakistan-squad-for-sri-lanka-t20is-announced.html. பார்த்த நாள்: 2 October 2019. 
 32. "Thirimanne and Shanaka to lead Sri Lanka in Pakistan". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1340862. பார்த்த நாள்: 11 September 2019. 
 33. "A test for Sri Lanka's next gen as Pakistan look to re-establish their T20I credentials". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/series/19504/preview/1198489/pakistan-vs-sri-lanka-1st-t20i-sri-lanka-in-pakistan-2019-20. பார்த்த நாள்: 5 October 2019. 
 34. "Shaheen Afridi and Dinesh Chandimal star on day of fluctuating fortunes". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1210684.html. பார்த்த நாள்: 20 December 2019. 
 35. "Abid Ali and Shan Masood rewrite record books". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/28344571/abid-ali-shan-masood-rewrite-record-books. பார்த்த நாள்: 21 December 2019. 
 36. "Monumental opening stand puts Pakistan in firm control". International Cricket Council. https://www.icc-cricket.com/news/1539722. பார்த்த நாள்: 21 December 2019. 
 37. "Centuries for top four batsmen - Pakistan's rare feat in Karachi". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/28350480/centuries-top-four-batsmen-pakistan-rare-feat-karachi. பார்த்த நாள்: 22 December 2019. 
 38. "Pakistan sniff series victory despite Fernando fightback". Eurosport. https://www.eurosport.co.uk/cricket/pakistan-sniff-series-victory-despite-fernando-fightback_sto7585854/story.shtml. பார்த்த நாள்: 22 December 2019. 

வெளி இணைப்புகள் தொகு