உடனடி கொடுக்கல் சேவை
உடனடி கொடுக்கல் சேவை (Immediate Payment Service, IMPS) இந்தியாவின் உடன்நிகழும் நிகழ்நேர வங்கிகளிடை மின்வழி நிதி மாற்றம் அமைப்பாகும். நகர்பேசிகள் மூலமாக இந்தச் சேவை வழங்கப்படுகின்றது. தேசிய மின்வழி நிதி மாற்றம் (NEFT ) மற்றும் நிகழ்நேர பெருந்திரள் தீர்வு (RTGS) போலன்றி இது ஆண்டின் அனைத்து நாட்களிலும், வங்கி விடுமுறை நாட்கள் உட்பட, 24/7 சேவை வழங்குகின்றது.
செயலாக்கப் பகுதி | இந்தியா |
---|---|
நிறுவப்பட்டது | 22 நவம்பர் 2010 |
உரிமையாளர் | இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் |
வலைத்தளம் | ஐஎம்பிஎசு |
இதனை இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் (NPCI) மேலாண்மை செய்கின்றது. இது ஏற்கெனவே உள்ள தேசிய நிதி மாற்றுகை பிணையத்தைப் பயன்படுத்துகின்றது. 2010இல் இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் தனது நான்கு உறுப்பினர் வங்கிகள் மூலமாக (பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் வங்கி (நிறுவனம்), இந்திய யூனியன் வங்கி & ஐசிஐசிஐ வங்கி) முன்னோட்டச் சேவையை சோதித்தது. அவ்வாண்டின் பிற்பகுதியில் யெசு வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கிக்கும் இதனை விரிவுபடுத்தியது. பொதுப் பயன்பாட்டிற்கு நவம்பர் 22, 2010 முதல் வெளியிட்டது.
பங்கேற்கும் வங்கிகளின் பட்டியல்
தொகு- ஆந்திரா வங்கி
- ஆக்சிஸ் வங்கி
- பரோடா வங்கி
- இந்தியாவின் வங்கி (நிறுவனம்)
- பாசீன் கத்தோலிக்க கூட்டுறவு வங்கி
- பிஎன்பி பரிபாஸ்
- கனரா வங்கி
- கத்தோலிக்கச் சிரியன் வங்கி
- இந்திய மத்திய வங்கி
- சிட்டிவங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- கார்ப்பரேஷன் வங்கி
- காசுமோசு கூட்டுறவு வங்கி
- தேனா வங்கி
- டி.பி.எஸ் வங்கி
- டிசிபி வங்கி
- தனலட்சுமி வங்கி
- டோம்பிவிலி நாகரிக் சககாரி வங்கி
- பெடரல் வங்கி
- எச்டிஎஃப்சி வங்கி
- எச்எசுபிசி
- ஐசிஐசிஐ வங்கி
- ஐடிபிஐ வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- இன்டசுஇண்டு வங்கி
- ஐஎன்ஜி வைசியா வங்கி
- சம்மு & காசுமீர் வங்கி
- சனதா சககாரி வங்கி, புனே
- கர்நாடக வங்கி
- கரூர் வைசியா வங்கி
- கேரள கிராம வங்கி
- கோடக் மகிந்தரா வங்கி
- இலட்சுமி விலாசு வங்கி
- மேகசனா ஊரக கூட்டுறவு வங்கி
- நைனிதால் வங்கி
- ஓரியண்டல் வணிக வங்கி
- பஞ்சாப் & மகாராட்டிரா கூட்டுறவு வங்கி
- பஞ்சாப் & சிந்து வங்கி
- பஞ்சாப் தேசிய வங்கி
- இராச்கோட் நாகரிக் சககாரி வங்கி
- ஆர்பிஎல் வங்கி
- சரசுவத் வங்கி
- சௌத் இந்தியன் வங்கி
- இசுடாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
- பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி
- ஐதராபாத் ஸ்டேட் வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- மைசூர் ஸ்டேட் வங்கி
- பாட்டியாலா ஸ்டேட் வங்கி
- திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
- சிண்டிகேட் வங்கி
- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
- தாணே சனதா சககாரி வங்கி
- பெருநகர பம்பாய் கூட்டுறவு வங்கி
- யூகோ வங்கி
- இந்திய யூனியன் வங்கி
- இந்திய ஐக்கிய வங்கி
- விஜயா வங்கி
- யெசு வங்கி