எகிப்திய யூதர்களின் வரலாறு

(எகிப்தில் யூதர்களின் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எகிப்திய யூதர்களின் குழு மிகவும் பழமையானதும், புதுமையானதாகும். எகிப்திய யூதக் குழுக்களில் அரபு மொழி பேசும் யூத குருமார்களும், மறைநூல் வாசிக்கும் யூதர்களுமே அதிகம் ஆவார். ஸ்பெயினிலிருந்த செபராது யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு எகிப்திற்கு குடியேற்றப்பட்டனர். 1869-இல் எகிப்தின் செங்கடலையும், மத்திய தரைக் கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் 1869ல் நிறுவப்பட்ட பின்னர் யூதர்கள் தங்கள் வணிகத்தை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளுக்கு வளர்த்தனர்.

எகிப்திய யூதர்கள
اليهود المصريون
יהודי מצרים
ஆப்பிரிக்காவில் எகிப்தின் அமைவிடம்
மொத்த மக்கள்தொகை
57,500+
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்57,500[1]
 எகிப்து3 (2022)[2][3]
மொழி(கள்)
எபிரேயம், எகிப்திய அரபு, யூதேய-எகிப்திய அரபு
சமயங்கள்
யூதம், குருக்கள், மறைநூல் வாசிப்பாளர்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மிஸ்ராகி யூதர்கள், செபராது யூதர்கள், அஸ்கனாசு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், ஏமன் யூதர்கள், பாரசீக யூதர்கள்
எகிப்தின் எலிபென்டைன் தீவில் கிடைத்த பாபிரஸ் ஆவணங்களில், அரமேயம் மொழியில் எழுதப்பட்ட அனனியா மற்றும் தாமு ஆகியோர்களின் திருமண ஒப்பந்தம் & கடிதங்கள், காலம் கிமு 3 சூலை 449
எகிப்தின் அலெக்சாந்திரியா நகர யூதர்கள்
திருவிழாவின் போது யூதப் பெண்களின் ஊர்வலம்

மேலும் இதன் விளைவாக எகிப்திய யூதர்கள், இத்தாலி யூதர்கள், அஸ்கனாசு யூதர்கள், கிரேக்க யூதர்களின் வணிகம் உதுமானியப் பேரரசு முழுவதும் செழித்து வளர்ந்தது.

1950களில், எகிப்து அதன் யூத மக்களை வெளியேற்றத் தொடங்கியது (1948 இல் 75,000 முதல் 80,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது. 1947 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் யூதர்கள் 65,639க்கும் மிகக் குறைவாக இருக்கலாம்.)[4]

எகிப்திய யூத சமுதாயத் தலைவரின் கூற்றுப்படி கெய்ரோ நகரத்தில் 6 யூதர்களும்; அலெக்சாந்திரியா நகரத்தில் 12 யூதர்களும் இருந்தனர்.[5][6] 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கெய்ரோ நகரத்தில் 5 யூதர்ககள் இருந்தனர்.[7] 2022-ஆம் ஆண்டில் எகிப்தில் 3 யூதர்கள் மட்டுமே இருந்தனர்.[2][8]

பண்டைய காலங்களில்

தொகு

யூதேயா இராச்சியத்தின் மன்னர் மனஸ்சே ஆட்சியின் போது கிமு 650இல் எகிப்தின் மன்னர் முதலாம் சாம்திக் நூபியா மீது படையெடுப்பதற்கு வசதியாக எலிபென்டைன் தீவில் யூதப் படைகளை நிறுத்தி வைத்தார்.

கிமு 450 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய எகிப்தின் எலிபென்டைன் தீவில் கண்டெடுக்கப்பட்ட பாபிரஸ் ஆவணங்களின்படி எலிபென்டைன் தீவில் அகாமனிசியப் பேரரசின் சார்பாக யூதப் படைவீரர்கள் மற்றும் யூத சமூகம் தங்கியிருந்த சான்றுகள் கிடைத்துள்ளது.[9]

பாபிலோனிய மன்னர் இரண்டாம் நெபுகாத்நேசர் ஆட்சியின் போது கிமு 597-இல் யூதேயா இராச்சியத்த்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் யூதர்கள் பண்டைய எகிப்தில் அடைக்கலம் அடைந்ததாக எபிரேய வேதாகமம் கூறுகிறது (2 Kings 25:22-24,Jeremiah 40:6-8), Jeremiah 40:6-8). பின்னர் யூதேயாவின் ஆளுநர் கொல்லப்பட்டப் பின்னர், எகிப்தில் குடியேறிய யூதர்கள் மீண்டும் யூதேயாவிற்கு திரும்பி வந்தனர்.(2 Kings 25:26, Jeremiah 43:5-7)

தாலமி பேரரசு மற்றும் உரோமைப் பேரரசு

தொகு

எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசின் வடக்கு எகிப்தின் நைல் வடிநிலத்தில் அமைந்த அலெக்சாந்திரியா நகரத்தை மையமாகக் கொண்டு பல நகரங்களில் யூதர்கள் குடியேறி வாழ்ந்தனர். வரலாற்று ஆசிரியர் ஜோஸ்பெசின் கூற்றுப்படி, யூதேயா, ஜெருசலம் மற்றும் சமாரியாவில் வாழ்ந்த 1,20,000 யூதர்களை, எகிப்திய மன்னர் தாலமி சோத்தர் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 367 – 283/282) நைல் வடிநிலப்பகுதியில் கோயில்கள் கட்டிக் கொண்டு சுதந்திரமாக வாழ அனுமதி அளித்தார். இந்த யூதக் கோயில்களின் தொல்லியல் எச்சங்கள் 19-ஆம் நூற்றாண்டு அகழாய்வின் போது அலெக்சாந்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.[10] மேலும் ஜோஸ்பெசின் கூற்றுப்படி இந்த 1,20,000 யூதர்களை எகிப்திய மன்னர் தாலமி பிலடெஸ்பஸ் ஆட்சிக் காலத்தில் (கிமு 284 முதல் கிமு 246) எகிப்திலிருந்து விடுவித்தார்.[11]

அலெக்சாந்திரியா யூதர்களின் வரலாறு, பேரரசர் அலெக்சாந்தர், எகிப்தில் அலெக்சாந்திரியா நகரத்தை கிமு 332-இல் நிறுவுகையிலிருந்து தொடர்கிறது. அலெக்சாந்திரிய யூதர்கள் மற்ற இடங்களை விட அதிக அளவிலான அரசியல் சுதந்திரத்தை அனுபவித்தனர். பிற்காலத்தில் எகிப்தை ஆண்ட உரோமைப் பேரரசு முழுவதும் யூத மக்கள் அடிக்கடி மத நோக்கங்களுக்காக சமூகங்களை உருவாக்கினர். அலெக்சாந்திரிவின் பிற சமூகத்தவர்களுடன் இணைந்து வாழ்ந்தனர்.[12]

எகிப்தில் கிபி 300-இல் கிறித்துவம் அறிமுகம் ஆகிய பின்னர் பல யூதர்கள் கிறித்தவர்களாக மதம் மாறினர். எலனியக் கால யூதர்கள் கிமு 132-இல் பழைய ஏற்பாடு நூலை பண்டைய கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தனர்.[13][14][15]

கிபி 115-117 ஆண்டுகளில் நடைபெற்ற யூதர்களின் கிளர்ச்சியை அடக்க, கிரேக்கத் திராயான் படைகள் நடத்திய கிடோஸ் போரில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.[16] கிபி 66-73களில் நடைபெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் முடிவில் யூதர்களின் இரண்டாம் கோவில் இடிக்கப்பட்டது. உரோமானியர்கள் யூதர்களை இரண்டாம் தர மக்களாக நடத்தினர்.[17]

பைசாந்தியப் பேரரசு அல்லது கிழக்கு உரோமைப் பேரரசு

தொகு

உரோமானியர்களின் பைசாந்தியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் (கிபி 330–1453) எகிப்தின் அலெக்சாந்திரியா நகர யூதர்களுக்கு கெட்ட காலம் நெருங்கியது. மேலும் கிறித்துவம் வளர்ந்தது. கிறித்துவத்திற்கு மதம் மாறத யூதர்கள் கிபி 414 அல்லது 415-ஆம் ஆண்டில் அலெக்சாந்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் மேலும் யூதர்களுக்கு எதிரான படுகொலைகள் அரங்கேறிய்து.[18]

எந்தவொரு சட்டத் தண்டனையும் இல்லாமல், எந்த அரச ஆணையும் இல்லாமல், அலெக்சாந்திரியா நகர சிரில் விடியற்காலையில், யூத ஜெப ஆலயங்களின் தாக்குதலுக்கு மக்களை வழிநடத்தினார். நிராயுதபாணியாகவும், ஆயத்தமில்லாதவர்களாகவும் இருந்த யூதர்கள் எதிர்க்க இயலாதவர்களாக இருந்தனர்; அவர்களின் பிரார்த்தனை வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், எபிஸ்கோபல் எனும் போர்வீரன், தனது படைகளுக்கு யூதர்களின் பொருட்களைக் கொள்ளையடித்து வெகுமதி அளித்த பிறகு, தேசத்தின் மீது நம்பிக்கையற்ற யூதர்களை நகரத்திலிருந்து வெளியேற்றினார்.[19]

சில வரலாற்று ஆசிரியர்கள் ஒரு இலட்சம் யூதர்களை எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறுகிறார்கள்.[20][21] கிறித்துவத்திற்கு மதம் மாறத யூதர்களை வெளியேற்றும் நிகழ்வுகள், எகிப்தின் அண்டைப் பகுதிகளான பாலஸ்தீனத்திலும் விரிவடைந்தது.

அரேபியர் ஆட்சியில் (661 - 1250)

தொகு

661-இல் உமையா கலீபகம் மற்றும் 751-இல் அப்பாசியக் கலீபகத்தின் அரேபியப் படைகள் எகிப்தை கைப்பற்றிய போது, எகிப்தில் வாழ்ந்த யூதர்கள் நன்கு வளர்ச்சி கண்டனர்.

பாத்திம கலீபகம் ஆட்சியில் (969 - 1169)

தொகு

பாத்திம கலீபகம் ஆட்சியின் போது யூதர்கள் பெருமளவில் மதிக்கப்பட்டதால், கிபி969-இல் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த யூதர்கள் எகிப்தில் குடியேறினர்.[22]இதனால் எகிப்திய சமூகத்தில் யூத சமூகம் உயர்நிலை அடைந்தது. கலிபா அல்-ஹக்கீம் ஆட்சிக் காலத்தில் (996–1020) யூதர்கள் இடுப்பில் மணி அணிந்தும், கையில் கன்றுக்குட்டி மரப்பாச்சி பொம்மையை வைத்துக் கொண்டு தெருக்களில் நடமாட வேண்டும் என ஆணைப்பிறத்தார்.

12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேளாண்மை துறையின் தலைவராக அபு அல்-முனஜ்ஜா இபின் ஷாய்யா எனும் ஒரு யூதர் நியமிக்கப்பட்டார். இவர் நைல் நதியில் பல மதகுகளை நிறுவினார். 12-ஆம் நூற்றாண்டில் எகிப்தில் 90 யூதக் குடியிருப்பு பகுதிகளும்,[23]4,000 யூதர்களும் வாழ்ந்தனர்.

யூதர்களின் வேதாகமத்தில் குறிப்பாக தொடக்க நூல் மற்றும் விடுதலைப் பயணம் அத்தியாயத்தில், பண்டைய எகிப்தின் நைல் வடிநிலப் பகுதியில் இசுரவேலர்கள் குடியேறி வாழ்ந்ததாகவும், எகிப்தியர்கள் அம்மக்களை யூதர்கள் என்று அழைத்து, அடிமைகளாக நடத்தபட்டதாக கூறுகிறது. பின்னர் விடுதலைப் பயணம் நூலில், இந்த யூதர்கள் தங்களை 12 கோத்திரங்களாக பிரித்துக் கொண்டு வாழ்ந்ததாகவும், பின்னர் எகிப்திலிருந்து மொத்தமாக வெளியேறிய யூதர்கள், சினாய் தீபகற்பத்தில் 40 ஆண்டுகள் தங்கி வாழ்ந்தாக கூறுகிறது.[24]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jews, by Country of Origin and Age". Statistical Abstract of Israel (in ஆங்கிலம் and ஹீப்ரூ). Israel Central Bureau of Statistics. 26 September 2011. பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
  2. 2.0 2.1 "BDE: One Of The Last Jews In Egypt Passes Away". The Yeshiva World. 17 November 2021. பார்க்கப்பட்ட நாள் 3 December 2021.
  3. Cairo Jews Protest at egypt seizure of second cairo Geniza accessed March 25,2022
  4. The Dispersion of Egyptian Jewry: Culture, Politics, and the Formation of a Modern Diaspora. Berkeley: University of California Press, 1998. Introduction.
  5. "Egypt's Jewish community diminished to 6 women after death of Lucy Saul". Egypt Independent. 30 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
  6. Parisse, Emmanuel (26 March 2017). "Egypt's last Jews aim to keep heritage alive". The Times of Israel. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  7. Oster, Marcy (9 July 2019). "Only 5 Jews left in Cairo following death of Jewish community president". The Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  8. Cairo Jews Protest at egypt seizure of second cairo Geniza accessed March 25,2022
  9. "Ancient Sudan~ Nubia: Investigating the Origin of the Ancient Jewish Community at Elephantine: A Review". www.ancientsudan.org. Archived from the original on December 4, 2008.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. Sir John Pentland MahaffyThe History of Egypt under the Ptolemaic Dynasty, New York 1899 p. 192.
  11. ஜொசிஃபஸ், Antiquities of the Jews, in The Works of Josephus, Complete and Unabridged, New Updated Edition (Translated by William Whiston, A.M.; Peabody Massachusetts:Hendrickson Publishers, 1987; Fifth Printing:Jan.1991 Bk. 12, chapters. 1, 2, pp. 308-309 (Bk. 12: verses 7, 9, 11)
  12. Emil Schürer (1906). "Alexandria, Ancient Egypt". Jewish Encyclopedia.
  13. Life after death: a history of the afterlife in the religions of the West (2004), Anchor Bible Reference Library, Alan F. Segal, p.363
  14. Gilles Dorival, Marguerite Harl, and Olivier Munnich, La Bible grecque des Septante: Du judaïsme hellénistique au christianisme ancien (Paris: Cerfs, 1988), p.111
  15. "[…] die griechische Bibelübersetzung, die einem innerjüdischen Bedürfnis entsprang […] [von den] Rabbinern zuerst gerühmt (..) Später jedoch, als manche ungenaue Übertragung des hebräischen Textes in der Septuaginta und Übersetzungsfehler die Grundlage für hellenistische Irrlehren abgaben, lehnte man die Septuaginta ab." Verband der Deutschen Juden (Hrsg.), neu hrsg. von Walter Homolka, Walter Jacob, Tovia Ben Chorin: Die Lehren des Judentums nach den Quellen; München, Knesebeck, 1999, Bd.3, S. 43ff
  16. Schwartz, Seth (2014). The Ancient Jews from Alexander to Muhammad. Cambridge University Press.
  17. "The Jews of Egypt". The Museum of the Jewish People at Beit Hatfutsot. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  18. "THE "I" OF CHRIST". First Things. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  19. "Decline and Fall of the Roman Empire, Vol. 4: Chapter XLVII: Ecclesiastical Discord. Part II". www.sacred-texts.com.
  20. http://www.research-projects.uzh.ch/p498.htm பரணிடப்பட்டது 2019-05-28 at the வந்தவழி இயந்திரம், Cyril of Alexandria, Against Julian: Critical edition of books 1-10 ,page 503
  21. Alexandria in Late Antiquity: Topography and Social Conflict By Christopher Haas, JHU Press, Nov 4, 2002 – History – 520 pages, Part IV "Jewish Community"
  22. Stillman. The Jews of Arab Lands: A History and Source Book. pp. Ch. 3 Egypt pg.46.
  23. Stillman. The Jews of Arab Lands: A History and Source Book. pp. Ch.3 pg.47–48.
  24. James Weinstein, "Exodus and the Archaeological Reality", in Exodus: The Egyptian Evidence, ed. Ernest S. Frerichs and Leonard H. Lesko (Eisenbrauns, 1997), p.87

வெளி இணைப்புகள்

தொகு