கொச்சி

கேரள மாநிலத்தின் துறைமுகங்களில் ஒன்று
(எரணாகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொச்சி (Kochi) (வார்ப்புரு:IPA-ml) (/ˈkɪn/ KOH-chin), தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும். இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர். 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 94.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 6,77,381 ஆகும்.[4] கொச்சி நகரம் பெருநகர கொச்சி வளர்ச்சிப் பகுதியின் ஒரு பகுதியாகும்.[9][10]

கொச்சி
கொச்சின்
பெருநகரம்
அடைபெயர்(கள்): அரபுக் கடலின் இராணி[1][2]
கொச்சி is located in கேரளம்
கொச்சி
கொச்சி
கொச்சி is located in இந்தியா
கொச்சி
கொச்சி
ஆள்கூறுகள்: 9°55′52″N 76°16′02″E / 9.9312°N 76.2673°E / 9.9312; 76.2673[1]
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்எறணாகுளம்
நிறுவிய நாள்1 ஏப்ரல் 1958[3]
அரசு
 • நிர்வாகம்கொச்சி மாநகராட்சி
பரப்பளவு
 • பெருநகரம்94.88 km2 (36.63 sq mi)
 • மாநகரம்440 km2 (170 sq mi)
ஏற்றம்
26.02 m (85.37 ft)
மக்கள்தொகை
 (2011)[4]
 • பெருநகரம்6,77,381
 • அடர்த்தி7,100/km2 (18,000/sq mi)
 • பெருநகர்21,19,724
இனம்Cochinite[7][8]
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் சுட்டு எண்
682xxx, 683xxx
இடக் குறியீடு+91484xxxxxxx
வாகனப் பதிவுKL-7, KL-39, KL-41, KL-42, KL-43, KL-63
உயர்நீதிமன்றம்கேரளா உயர் நீதிமன்றம்
கடற்கரை48 கிலோமீட்டர்கள் (30 mi)
பாலின விகிதம்1028 /
எழுத்தறிவு98.5%
மனித மேம்பாட்டுச் சுட்டெண் Very High
வளர்ச்சி முகமைபெருநகர கொச்சி வளர்ச்சி முகமை
தட்பவெப்பம்இந்தியாவின் தட்பவெப்ப நிலை(கோப்பென்)
மழைப் பொழிவு3,228.3 மில்லிமீட்டர்கள் (127.10 அங்)
இணையதளம்cochinmunicipalcorporation.kerala.gov.in

கொச்சி மாநகராட்சி 1967-இல் நிறுவப்பட்டது.[11]

கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர்.

கிபி 1503-இல் கொச்சியை போர்த்துகேயர்கள் (1503–1663) கைப்பற்றினர். பின்னர் டச்சுக்காரர்கள் (1663–1795) கொச்சி நகரத்தைக் கைப்பற்றினர். 1795-இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர், கொச்சி இராச்சியத்தை கைப்பற்றி, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக ஆக்கினர்.

கேரளாவின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி முனையமாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது.[12][13] இந்தியாவின் ஆறு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கொச்சி விளங்குகிறது.[14] இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்.[15]

கேரளாவின் பெரும் நிதி மற்றும் வணிக மையமாக கொச்சி நகரம் விளங்குகிறது.[16][17][18][19] and industrial[20][21]

கேரளா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி நகரம் பெரும் பங்கு வகிக்கிறது.[22][23]

இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.[24][25]

இந்தியக் கடலோரக் காவல்படையின் தென் மண்டல அலுவலகம் கொச்சியில் இயங்குகிறது.[26] கொச்சியில் இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை உள்ளது.[15] கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள் (HMT), அப்போல்லா டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம், போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளது.[15][27][28] இங்கு கொச்சி உயர் நீதிமன்றம் உள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளதுடன், சீர்மிகு நகரம் என்ற தகுதியும் கொச்சி நகரம் பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் கொச்சி தேசியச் சட்டப் பள்ளிகள் உள்ளது.[29]

பெயர் வரலாறு

தொகு

கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னானி வட்டத்தில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341-இல் துறைமுகம் உருவானபோது இதன் பெயர் கொச்சி என்றாயிற்று.[30]

கொச்சி யூதர்கள் தங்களது வழிபாட்டுத் தலத்தில் கொச்சியை கொகின் ("Kogin" (எபிரேயம்: קוגין‎) என்றே தங்களது முத்திரையில் குறித்துள்ளனர்.[31].

கொச்சி என்ற சொல்லிற்கு மலையாள மொழியில் கொச்சு ஆழி ( kochu azhi) என்பதற்கு சிறிய கடற்காயல் எனப்பொருளாகும். மேலும் மலையாள மொழியில் கச்சி என்பதற்கு துறைமுகம் என்று பொருளாகும்.[32]

15-ஆம் நூற்றாண்டின் இத்தாலிய கடலோடி நிக்கோலோ கோண்டி மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் பிரா போலின் என்ற கடலோடிகள், ஆற்று நீர் கடற்காயல்களில் கலந்து பின் கடலில் கலப்பதால், இந்நகரத்தை கொச்சி (Kochchi) என்று அழைத்தனர்.[33] போர்த்துகேயர்களும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்நகரத்தை கொச்சின் என்று அழைத்தனர். பின்னர் கேரளா அரசினர் 1996-இல் கொச்சின் என்பதை கொச்சி என்று பெயர் மாற்றம் செய்தனர்.[34]

1635-இல் கொச்சி நகரம்
கொச்சி யூதர்களின் வழிபாட்டுத் தலம்
1503-இல் கட்டப்பட்ட புனித பிரான்சிஸ் தேவாலயம்,[30]

வரலாறு

தொகு

கிபி 12-ஆம் நூற்றாண்டில் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்டது. கிபி 1500-இல் போர்த்துகேயர்கள் கொச்சியில் வணிக மையத்தை நிறுவினர்.[35]

போர்த்துகேய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொச்சியில் கோட்டை கட்டிக்கொண்டு, 1503 முதல் 1663 கொச்சியை ஆண்டனர். புலம்பெயர்ந்த கொச்சி யூதர்கள், புனித தாமஸ் கிறித்தவர்கள் மற்றும் சிரியாக் கிறித்துவர்கள் புலம்பெயர்ந்து கொச்சியில் வாழ்ந்தனர். கொச்சியில் வாஸ்கோ ட காமா]வின் கல்லறை கொச்சியில் இருந்தது. பின்னர் 1539-இல் போர்த்துகல்லுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.[36]

போர்த்துகேயர்களிடமிருந்து இடச்சுக்காரர்கள் கொச்சி நகரத்தையும், கோட்டையையும் கைப்பற்றி, கோட்டைக்கு இம்மானுவேல் கோட்டை எனப்பெயரிட்டனர். அதே நேரத்தில் கொச்சி இராச்சிய அரச குடும்பத்தினர், தங்களது வசிப்படத்தை திருச்சூருக்கு மாற்றிக் கொண்டனர்.

1664-இல் இடாச்சுக்காரர்கள் கொச்சி நகராட்சி மன்றத்தை நிறுவினர். 1773-இல் மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் ஐதர் அலி தனது ஆட்சிப் பகுதியை மலபார் பிரதேசம் வரை விரிவுபடுத்தினார். இதனால் கொச்சி இராச்சியத்தினர் ஐதர் அலிக்கு திறை]] செலுத்த வேண்டியதாயிற்று.[37]

1814-இல் ஐக்கிய இராச்சியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இடாச்சுக்காரர்கள் கொச்சியை பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியிடம ஒப்படைத்தனர்.[38] 1883-இல் ஆங்கிலேயர்கள் மீண்டும் கொச்சிக் கோட்டையில் நகராட்சி மன்றத்தை நிறுவினர். 1870-கொச்சி இராச்சியத்தின் தலைமையிடம் கொச்சி புறநகரத்தில் உள்ள திருப்பூணித்துறைக்கு மாற்றப்பட்டது.

1910-இல் எர்ணாகுளம், கொச்சி இராச்சியத்தின் நிர்வாகத் தலைமையிடமானது.[39]

1925-இல் கொச்சி சட்டமன்றம் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொச்சியில் பெரும் துறைமுகத்தை நிறுவினர்.[40]

1947-இல் இந்தியா விடுதலையின் போது, கொச்சி இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[32] 1949-இல் கொச்சி இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டது. 1949 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னர் திருவிதாங்கூர் - கொச்சி இராச்சியத்திற்கு தலைமை வகித்தார். பின்னர் திருவிதாங்கூர் - கொச்சிப் பகுதிகள் இணைந்து பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக மலபார் மாவட்டமாக விளங்கியது.

1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழிவாரியாக மாநிலங்களை பிரிவினை செய்த போது, மலையாள மொழி பேசிய மலபார் பிரதேசம், கொச்சி இராச்சியப் பகுதிகள் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகளைக் கொண்டு கேரளா மாநிலம் நிறுவப்பட்டது.[41]

1 நவம்பர் 1967-இல் கொச்சி மாநகராட்சி நிறுவப்பட்டது.[42]

பழைய கொச்சி இராச்சியத்தின் பெரும் பகுதிகளைக் கொண்டு 1 ஏப்ரல் 1958-இல் எர்ணாகுளம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]

புவியியல் மற்றும் தட்பவெப்பம்

தொகு

புவியியல்

தொகு

இந்தியாவின் தென்மேற்கு மலபார் கடற்கரையில் அமைந்த கொச்சி நகரத்திற்கு மேற்கில் அரபுக் கடல் உள்ளது. கொச்சி நகரம் 9°58′N 76°13′E / 9.967°N 76.217°E / 9.967; 76.217 பாகையில் உள்ளது. கொச்சி மாநகராட்சியின் பரப்பளவு 94.88 km2 (36.63 sq mi) ஆகும்.

தற்போதைய கொச்சி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் எர்ணாகுளம், கொச்சிக் கோட்டை, எடப்பள்ளி, கலாம்சேரி, திருப்புனித்துறை மற்றும் கக்கநாட்டுப் பகுதிகள் உள்ளது.[43][44]

கொச்சியின் நீர் ஆதாரங்களாக பெரியாறு மற்றும் மூவாட்டுப்புழா ஆறுகள் உள்ளது.[45][46]

தட்பவெப்பம்

தொகு

கோடக் காலத்திய குறைந்த வெப்பம் 23 மற்றும் 31 °C (73 மற்றும் 88 °F) ஆகவும்; உயர்ந்த வெப்பம் 36.5 °C (97.7 °F) ஆகவும் உள்ளது.[47]

சூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பொழிகிறது.

ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2,978.0 mm (117.24 அங்) ஆகவுள்ளது.[48]

தட்பவெப்ப நிலைத் தகவல், கொச்சி (1971–2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.4
(97.5)
35.7
(96.3)
36.0
(96.8)
36.5
(97.7)
35.2
(95.4)
34.2
(93.6)
33.1
(91.6)
32.5
(90.5)
34.2
(93.6)
34.6
(94.3)
35.6
(96.1)
34.8
(94.6)
36.5
(97.7)
உயர் சராசரி °C (°F) 31.7
(89.1)
31.9
(89.4)
32.5
(90.5)
32.9
(91.2)
32.3
(90.1)
30.1
(86.2)
29.3
(84.7)
29.3
(84.7)
30.0
(86)
30.6
(87.1)
31.2
(88.2)
31.8
(89.2)
31.1
(88)
தாழ் சராசரி °C (°F) 22.6
(72.7)
24.0
(75.2)
25.3
(77.5)
25.9
(78.6)
25.7
(78.3)
24.1
(75.4)
23.7
(74.7)
23.9
(75)
24.2
(75.6)
24.1
(75.4)
24.0
(75.2)
23.1
(73.6)
24.2
(75.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 16.5
(61.7)
16.3
(61.3)
21.6
(70.9)
21.3
(70.3)
21.1
(70)
20.4
(68.7)
17.6
(63.7)
20.6
(69.1)
21.1
(70)
19.2
(66.6)
19.2
(66.6)
17.7
(63.9)
16.3
(61.3)
பொழிவு mm (inches) 23.3
(0.917)
25.9
(1.02)
30.8
(1.213)
94.8
(3.732)
282.8
(11.134)
705.8
(27.787)
593.6
(23.37)
403.1
(15.87)
279.6
(11.008)
320.3
(12.61)
174.9
(6.886)
43.2
(1.701)
2,978.0
(117.244)
சராசரி மழை நாட்கள் 1.0 1.2 2.3 6.2 10.7 23.2 22.3 20.0 13.8 14.3 7.8 1.9 124.7
ஆதாரம்: India Meteorological Department (record high and low up to 2010)[47][48]

நிர்வாகம்

தொகு

கொச்சி மாநகராட்சி மன்றம் நகரத்தின் தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறது.

கொச்சி மாநகராட்சி அலுவலர்கள்
மேயர்
துணை மேயர்
காவல் ஆணையாளர் இந்தியக் காவல் பணி
கொச்சி மாநகராட்சி

கொச்சி மாநகராட்சிக்கு 74 வார்டு உறுப்பினர்களும், மேயர் மற்றும் துணை மேயர் உள்ளனர்.[49]

அரசியல்

தொகு

எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் கொச்சி நகரம் அமைந்துள்ளது.[50] கொச்சி மாநகராட்சி மற்றும் விரிவாக்கப் பகுதிகளான கொச்சி, எர்ணாகுளம், திருப்புனித்துறை, திருக்காரகாரா மற்றும் கலாம்சேரி சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து கேரளா சட்டமன்றத்திற்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[51]

பொருளாதாரம்

தொகு

கேரளாவில் கொச்சி நகரம், நிதி மற்றும் வணிகத் துறையில் தலைமையிடமாக உள்ளது.[16][18] இந்தியப் பங்குச் சந்தை மற்றும் செபியின் கிளைகள் கொச்சியில் உள்ளது.[52] கொச்சி துறைமுகம், பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்கள், ஆழ்கடல் மீன் பிடித்தொழில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி 41.74% பங்கு வகிக்கிறது.[53]

எர்ணாகுளம் மாவட்டத்தின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் கொச்சி நகரம் 37% பங்கு வகிக்கிறது. மற்றும் மாவட்ட வணிகம், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் வளர்ச்சியில் 20% பங்கு வகிக்கிறது.

கொச்சியின் முக்கியப் பெருந்தொழில்கள் கப்பல் கட்டுதல், வீட்டு மனை கட்டுமானத் தொழில், கடல்சார் உணவுகள் பதப்படுத்துதல் மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகும். மேலும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் பெரும்பணம் ஈட்டுகிறது.[54]

வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் வெளிநாட்டுப் பணம் இம்மாவட்டத்தின் முக்கிய வருவாயின் ஒரு பகுதியாக உள்ளது.[55]

போக்குவரத்து

தொகு
A panoramic view of Vyttila Mobility Hub

வானூர்தி நிலையங்கள்

தொகு

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்,கொச்சி நகரத்திலிருந்து 28 கிமி தொலைவில் உள்ள நெடும்பச்சேரியில் உள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் இயக்கப்படுகிறது.[56]

சாலைப் போக்குவரத்து

தொகு

வடக்கு-தெற்கே செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு-மேற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கொச்சி நகரத்தினை மாநிலத்தின் பிறநகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் பேருந்துகள் இணைக்கிறது.[57][58]

6 நடைமேடைகள் கொண்ட எறணாகுளச் சந்திப்பு வழியாக தொடருந்துகள் மூலம் மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் கொச்சி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[59]

மெட்ரோ இரயில்கள்

தொகு

அதி விரைவுப் போக்குவரத்திற்கு கொச்சி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது.[60]

மக்கள் தொகை பரம்பல்

தொகு
கொச்சியில் சமயங்கள்
சமயங்கள்
இந்து சமயம்
47%
கிறித்துவம்
35%
இசுலாம்
17%
பிறர்
1%

கொச்சி நகத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 7139 பேர் வாழ்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொச்சி மாநகர மக்கள்தொகை 21,17,990 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1028 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 97.5% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 47%, கிறித்தவர்கள் 35%, இசுலாமியர்கள் 17% உள்ளனர்.[61][62]

மேற்கோள்கள்

தொகு
  1. K. C. Sivaramakrishnan (2006). People's Participation in Urban Governance. Concept Publishing Company. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8069-326-0. Archived from the original on 8 பெப்பிரவரி 2016.
  2. Ganesh Kumar (செப்டெம்பர் 2010). Modern General Knowledge. Upkar Prakashan. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7482-180-5. Archived from the original on 6 பெப்பிரவரி 2016.
  3. 3.0 3.1 "Ernakulam_History". Archived from the original on 15 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2015.
  4. 4.0 4.1 4.2 "Profile of Kochi". Kochi Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  5. "Demographia World Urban Areas" (PDF). demographia.com. Archived (PDF) from the original on 5 ஆகத்து 2011.
  6. "Urban Agglomerations/Cities having population 1 million and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived (PDF) from the original on 15 திசம்பர் 2011.
  7. Sadasivan, S.N. (2005). Territorial Integration. Mittal Publications. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170999683. {{cite book}}: |work= ignored (help)
  8. Menon, K.P.S. (1977-01-23). "My Kerala". Sunday. Vol. 4, no. 44. Ananda Bazar. p. 31.
  9. "Urban Sector Kerala" (PDF). Archived from the original (PDF) on 23 March 2012. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
  10. "Steps to control pollution in Greater Kochi area mooted". The Hindu. 20 September 2010 இம் மூலத்தில் இருந்து 6 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130906195839/http://www.hindu.com/2010/09/20/stories/2010092058650300.htm. 
  11. "GCDA - Greater Cochin Development Authority". Archived from the original on 28 March 2015. பார்க்கப்பட்ட நாள் 5 April 2015.
  12. "Destnation [sic] Wide Number of Foreign Tourists Visited Kerala During 2010" (PDF). Kerala Tourism Development Corporation. Archived (PDF) from the original on 11 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  13. "Tourist statistics – 2008" (PDF). Kerala Tourism Development Corporation. Archived (PDF) from the original on 2 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2010.
  14. "Nielsen retains top tourism destination grade for Kerala". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/companies/nielsen-retains-top-tourism-destination-grade-for-kerala/article2920128.ece. பார்த்த நாள்: 22 February 2012. 
  15. 15.0 15.1 15.2 "BPCL rides high on superior returns, earnings prospects". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 12 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180112161451/https://economictimes.indiatimes.com/markets/stocks/news/bpcl-rides-high-on-superior-returns-earnings-prospects/articleshow/52892928.cms. பார்த்த நாள்: 12 January 2018. 
  16. 16.0 16.1 "Setting a scorching pace: the metro saga". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303164152/http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/setting-a-scorching-pace-the-metro-saga/article18717013.ece. பார்த்த நாள்: 22 October 2017. 
  17. "Check out the 10 novelties onboard Kochi Metro". மலையாள மனோரமா. Archived from the original on 23 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2017.
  18. 18.0 18.1 "Cochin Chronicle -- Introduction". Kerala Tourism Development Corporation. Archived from the original on 22 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  19. "Kochi emerging as tier-2 destination for corporates". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 23 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171023063614/https://timesofindia.indiatimes.com/city/kochi/kochi-emerging-as-tier-2-destination-for-corporates/articleshow/57034187.cms. பார்த்த நாள்: 23 October 2017. 
  20. "Industrial areas in Kochi". Kerala Tourism Development Corporation. Archived from the original on 22 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  21. "LNG the answer?". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/lng-the-answer/article19699572.ece. பார்த்த நாள்: 23 October 2017. 
  22. "National and State Income". Kerala State Planning Board. Archived from the original on 27 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. "Top 5 districts of Kerala on the basis of GDP at current price from 2004-05 to 2012-13". இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
  24. "Indian Coast Guard. Regions. Western Region". Indiancoastguard.nic.in. Archived from the original on 4 June 2013. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
  25. "Indian Coast Guard. Organization Structure". Indiancoastguard.nic.in. Archived from the original on 31 October 2012. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
  26. "Indian Coast Guard. Aviation". Indiancoastguard.nic.in. Archived from the original on 31 October 2012. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
  27. "HOCL official web site. Phenol Complex at Kochi in Kerala". Hocl.gov.in. Archived from the original on 10 May 2013. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
  28. "TELK official website". Telk.com. Archived from the original on 7 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2012.
  29. "Facts about Kochi Biennale Foundation". Kochi Biennale Foundation. Archived from the original on 31 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2010.
  30. 30.0 30.1 "Facts about India" (PDF). Kochi Municipal Corporation. Archived from the original (PDF) on 29 December 2009. பார்க்கப்பட்ட நாள் 9 January 2010.
  31. "Fort And Harbour". Cghearth.com. Archived from the original on 28 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2012.
  32. 32.0 32.1 C. M. Dinesh Mani, Mayor(2000–2005). "Cochin" (PDF). Cochin (A Monograph). Corporation of Kochi. Archived from the original (PDF) on 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  33. Academy, Students. Kochi-The Small Lagoon. Lulu Press, Inc. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781257094110.
  34. "C.Ramachandra Menon vs State Of Kerala on 7 February, 1990". indiankanoon.org. Archived from the original on 21 சூலை 2017.
  35. "Early Voyages to the Far East". University of Calgary. Archived from the original on 1 March 2011. பார்க்கப்பட்ட நாள் 9 March 2011.
  36. "St. Francis Church in Ernakulam". Department of Tourism, Kerala. Archived from the original on 19 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2018.
  37. "Kochi 'Queen Of Arabian Sea'". National Informatics Centre. Archived from the original on 7 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2018.
  38. KP Padmanabha Menon. (1914). Kochi Rajyacharithram.
  39. "History". National Informatics Centre. Archived from the original on 1 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2018.
  40. "Cochin Harbour and Willingdon Island". Official website of Ernakulam District. Government of Kerala. Archived from the original on 7 November 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2006.
  41. Plunkett, R, Cannon, T, Davis, P, Greenway, P & Harding (2001). Lonely Planet South India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86450-161-8.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  42. Academy, Students. Kochi-The Small Lagoon. Lulu Press, Inc. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781257094110. Archived from the original on 3 மார்ச்சு 2018.
  43. "Metro status for Kochi soon". Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-02-12.
  44. "Kochi forward for Metro status". The New Indian Express. Archived from the original on 18 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2015.
  45. "Growth response of phytoplankton exposed to industrial effluents in River Periyar" (PDF). CUSAT. Archived (PDF) from the original on 13 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.
  46. "West Kochi water project to be commissioned tomorrow". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303164152/http://www.thehindu.com/news/cities/Kochi/west-kochi-water-project-to-be-commissioned-tomorrow/article19362432.ece. பார்த்த நாள்: 12 January 2018. 
  47. 47.0 47.1 "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. Archived from the original on 16 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 April 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  48. 48.0 48.1 "Kochi Climatological Table Period: 1971–2000". India Meteorological Department. Archived from the original on 14 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்பிரல் 2015.
  49. "Kochi Municipal Corporation, Division Map" (PDF). Kochi Municipal Corporation. Archived from the original (PDF) on 5 November 2010. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  50. "From May 1: Mallikarjun Kharge set to replace KV Thomas as PAC chairman". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 11 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180111165256/http://indianexpress.com/article/india/from-may-1-mallikarjun-kharge-set-to-replace-kv-thomas-as-pac-chairman-4569278/. பார்த்த நாள்: 11 January 2018. 
  51. "Delimitation of Constituencies, Final Order" (PDF). Chief Electoral Officer, Kerala. Archived (PDF) from the original on 26 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2011.
  52. Our Bureau. "SEBI opens office in Kochi". The Hindu Business Line. Archived from the original on 16 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்பிரல் 2015.
  53. "Kerala Planning Board, Economic Review 2020-21". District-wise Distribution of GSDP. Government of Kerala.
  54. "Doing Business in India 2009" (PDF). World Bank. Archived from the original (PDF) on 19 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 June 2010.
  55. Director, Kerala Tourism. "Kerala, Gods Own Country: Where Business Blooms". cbcglobelink.org இம் மூலத்தில் இருந்து 17 June 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060617072209/http://www.cbcglobelink.org/cbcglobelink/events/IndiaTourism05/Presentation/KT%20Investment%202005-London.ppt. பார்த்த நாள்: 7 February 2006. 
  56. "The Official Website of Cochin International Airport". Cochin-airport.in. Archived from the original on 26 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
  57. "NS&EW Corridor Map". National Highway Authority of India. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2018.
  58. "NS&EW Corridor Chainage Chart". National Highway Authority of India. Archived from the original on 1 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2018.
  59. Ernakulam Junction (South)
  60. "More funds for metro rail; sanction yet to be granted". The Hindu இம் மூலத்தில் இருந்து 5 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110805025944/http://www.hindu.com/2010/03/07/stories/2010030761160300.htm. 
  61. Demographics of Kochi பரணிடப்பட்டது 7 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் – as given in census
  62. Census of India, 2001 – List of cities by population; Census of India, 2001 – Kochi : Religious demographics (Hindus 47%, Christians 35%, Muslims 17%)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி&oldid=4148951" இலிருந்து மீள்விக்கப்பட்டது