பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு06
வலைவாசல் உருவாக்க வேண்டல்
தொகுவணக்கம் நண்பா! நாம் உரையாடி வெகு நாட்களாகி விட்டன. :) எனக்கு உங்கள் உதவி தேவை! கேரளம் தொடர்பான வலைவாசலை உருவாக்கித் தருமாறு வேண்டுகிறேன். பக்க வடிவமைப்பு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. சிறப்புக் கட்டுரைகள், தேவைப்படும் கட்டுரைகள், பகுப்புகள், இன்ன பிற என ஒவ்வொன்றிலும் இருபது வீதம் குறிப்பிட்டீர்கள் எனில், தொடர வசதியாய் இருக்கும். மேலும் உங்கள் ஆலோசனைகளை வழங்குக! சிவகுருவையும், செயரத்தினாவையும் கேட்டுள்ளேன். ;) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:41, 25 நவம்பர் 2013 (UTC)
- வலைவாசல் உருவாக்க எண்ணம் கொண்டமைக்கு எனது நன்றிகள் நண்பரே. வலைவாசல்:கேரளம் என்பதில் பிற வலைவாசல்களின் உள்ளடக்கங்களை சேமித்து வையுங்கள். (வரலாற்றுப் பகுதியில் தாங்கள் தொடங்கிய வலைவாசலாக இருப்பதற்காக..) பிறகு வடிவமைப்பு பணியை மேற்கொள்கிறேன். வலைவாசல் வடிவமைப்பு பெரிய விசயமே இல்லை. பிற வலைவாசலில் உள்ள உள்ளடக்கத்தினை அப்படியே சேமித்துவிட்டு, அந்த வலைவாசல் பெயர் உள்ள இடங்களில் எல்லாம் கேரளம் என்று மாற்ற வேண்டியிருக்கும் அவ்வளவுதான். பிறகு நிறத்தேர்வு போன்ற விசயங்களை மாற்றினால் தனித்த வலைவாசல் கிடைத்துவிடும். சிறப்புக் கட்டுரை, உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றை தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்ளலாம். பயனர்களின் பரிந்துரைகளைப் பெற்றும் கொள்ளலாம். அதனால் வலைவாசலை தொடங்கிவிட்டு இங்கு ஒரு குறிப்பினை இடுங்கள். அடுத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:41, 25 நவம்பர் 2013 (UTC)
- ஜெகதீஸ்வரனின் முனைப்பான பணிகளுக்குப் பிறகு ஏதேனும் முன்னேற்றங்கள் தேவைப்படின் நான் செய்து தருகிறேன். ஒருவர் உதவி எனக் கேட்கும்போது அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தப் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:01, 26 நவம்பர் 2013 (UTC)
- வலைவாசல்:மதுரை என்பதனை அப்படியே படி எடுத்து வலைவாசல்:கேரளம் எனும் பக்கத்தினை தமிழ்க்குரிசில் ஆரம்பிக்கலாம் என்பது எனது பரிந்துரை. அதன்பிறகு தேவைப்படும் முன்னேற்றங்களை செய்து கொள்ளலாம்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 26 நவம்பர் 2013 (UTC)
- மதுரை வலைவாசல் நல்லதொரு பரிந்துரை நண்பரே. வலைவாசலின் வடிவமைப்பு பணிகளுக்குப் பின்பு கட்டுரை, படத்தேர்வில் தங்களது உதவி தேவைப்படும். என்னுடைய பணிகள் முடிந்ததும் தங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:35, 26 நவம்பர் 2013 (UTC)
ஐயம்
தொகுசகோதரரே ஆலமரத்தடியில் நான் எழுப்பியுள்ள ஐயத்திற்கு விடை தெரிந்தால் கூறி உதவுங்களேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:07, 1 திசம்பர் 2013 (UTC)
- சிறுவிளக்கமொன்றை அங்கு தந்துள்ளேன். ஐயம் எதன் பொருட்டு எழுந்தது என்று தெரிவித்தால் ஏற்ற விளக்கம் தர இயலும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:18, 1 திசம்பர் 2013 (UTC)
:முதற்பக்க வலைவாசல் வார்ப்புரு
தொகு{{மு.ப வலைவாசல்}}, {{முபவ பயனர் அறிவிப்பு}} - இந்த வார்ப்புருக்களை வலைவாசலிலும், பயனர் பேச்சுப்பக்கத்திலும் பயன்படுத்தலாமா? அப்படியெனின் முன்பு காட்சிப்படுத்தியவற்றுக்கும் பயன்படுத்தி விடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 18:11, 1 திசம்பர் 2013 (UTC)
- தாராளமாக பயன்படுத்தலாம் நண்பரே. முன்பே செல்வகுரு அவர்கள் இது குறித்து உரையாடியிருந்தார். புதுவருடத்திலிருந்து இந்த முறையை துவங்கலாம் என்றிருந்தேன். வார்ப்புருவை உருவாக்கி தந்துவிட்டீர்கள். முன்பு காட்சிபடுத்தப்பட்டவைகளில் தமிழிலக்கிய வலைவாசலுக்கு மட்டும் இதனை இடுகிறேன். தகுந்த வலைவாசல்கள் இல்லாமையால் ஏற்கனவே காட்சிபடுத்திய வலைவாசல்களை மீண்டும் ஆய்வு செய்து வருங்காலங்களில் இடலாம் என்று நினைத்துள்ளேன். அப்போது அவைகளுக்கு இந்த வார்ப்புருவை இடலாம். தங்களுடைய கருத்தினை தெரிவியுங்கள். செல்வசிவகுருநாதன் அவர்களிடம் இது குறித்து தெரிவித்து கருத்துப் பெறுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:32, 1 திசம்பர் 2013 (UTC)
- நல்லது, அப்படியே செய்யுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:47, 2 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுபேச்சு:காணாபத்தியம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:58, 2 திசம்பர் 2013 (UTC)
IWT கருவியில் மாற்றங்கள் குறித்து
தொகுதிரு ஜெகதீஸ்வரன்.
வணக்கம்! நீங்கள் பயன்படுத்தும் IWT கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றத்தின்படி இக்கருவியில் சொற்களைத் தேடிக்கண்டுபிடித்து மாற்ற உங்கள் உங்களின் common.js பக்கத்தில் உள்ள விருப்பப் பட்டியலின் வடிவமைப்பு மற்றப்பட வேண்டும். இதனை செய்ய உங்கள் உங்களின் common.js பக்கதுக்கு சென்று var en_words மற்றும் var ta_words எனத்தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் கீழ் உள்ளவற்றை சேர்கவும் (கீழுள்ள பட்டியல் உங்களின் common.jsஇல் இருக்கும் சொற்களிலிருந்து உங்களுக்காக தனியாக தயாரிக்கப்பட்டது) :
var relpaceList = {
'ஜனவரி' : 'January',
'பெப்ரவரி' : 'February',
'மார்ச்' : 'March',
'ஏப்ரல்' : 'April',
'மே' : 'May',
'ஜூன்' : 'June',
'ஜூலை' : 'July',
'ஆகஸ்ட்' : 'August',
'செப்டம்பர்' : 'September',
'அக்டோபர்' : 'October',
'நவம்பர்' : 'November',
'டிசம்பர்' : 'December',
'திரைப்படங்கள்' : 'Films',
'தமிழ்' : 'Tamil',
'கோடி' : 'crore',
'நடிகர்' : 'actor',
'திரைப்படம்' : 'Film',
'மொழி' : 'Language',
'கதாப்பாத்திரம்' : 'Cast',
'இயக்குநர்' : 'Director',
'தெலுங்கு' : 'Telugu',
'கன்னடம்' : 'Kannada',
'பகுப்பு' : ' Category',
'ஆதாரங்களும் மேற்கோள்களும்' : 'References',
'எதிர்மறை நாயகன்' : 'Villain',
'திரைப்படங்களின் பட்டியல்' : 'Filmography',
'இந்தியா' : 'India',
'தற்போது' : 'present',
'வெளி இணைப்புகள்' : 'External links',
'-' : 'as',
'ஹிந்தி' : 'Hindi',
'மற்றும்' : 'and',
'அர்ஜூன்' : 'Arjun',
'விஜய்' : 'Vijay'
};
இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:54, 2 திசம்பர் 2013 (UTC)
- மிகவும் பயனுள்ள கருவியை மேலும் மேம்படுத்தியிருப்பதற்கு வாழ்த்துகள். திரைப்படம் சார்ந்த எண்ணற்ற கட்டுரைகளை இதன் மூலம் மொழி பெயர்க்க முடிந்திருக்கிறது. என்னுடைய தனிப்பட்டியல்களையும் சிரமம் பாராமல் புதிய முறைக்கு மாற்றித் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:33, 2 திசம்பர் 2013 (UTC)
பொதுமை
தொகுநபர்கள் பற்றிய கட்டுரைகளில் அதே பெயரில் வேறொருவர் இருந்தால் மட்டுமே பொதுமை தேவைப்படும். அல்லாவிடில் பெயர் மட்டுமே தலைப்பில் இடப்பட வேண்டும். வித்யுலேகா ராமன் என வேறு யாராவது இல்லாவிடில் நடிகை என்ற பின்னொட்டுத் தேவையில்லை. இது போலப் பல கட்டுரைகளிலும் தலைப்பை மாற்றியுள்ளீர்கள். அபிராமி போன்ற பொதுப்பெயர்களுக்குப் பின்னொட்டுத் தேவை. மீண்டும் மாற்றி விடுங்கள். தலைப்பை மாற்றும் போது மறக்காமல் பழைய பேச்சுப் பக்கத்தை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:06, 2 திசம்பர் 2013 (UTC)
- சரி நண்பரே, பின்னொட்டு இணைத்தவற்றை மீண்டும் பரிசீலனை செய்து மாற்றத்தினை சரி செய்கிறேன். வழிகாட்டியமைக்கு நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:சாரா-ஜேன் டயஸ்.jpg மற்றும் படிமம்:அஞ்சலி லாவண்யா.jpg
தொகுபடிமம்:அஞ்சலி லாவண்யா.jpg மற்றும் படிமம்:சாரா-ஜேன் டயஸ்.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).
விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:52, 4 திசம்பர் 2013 (UTC)
- கட்டுரைகளில் பயன்படுத்தவே இணைத்தேன். பூங்கோதை அவர்கள் இந்தப் படங்களுக்குப் பதிலாக வேறு படங்களை இணைத்துள்ளார். அதனால் தற்போது நீக்கியுள்ளேன். பயன்படுத்தப்படாத படிமங்கள் ஏதேனும் நான் பதிவேற்றியமையாக இருப்பின் எனக்கு தகவல்கள் தராமலேயே அழி்த்துவிடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:12, 4 திசம்பர் 2013 (UTC)
வலைவாசல் பகுப்புக்கள்
தொகுஜெகதீஸ்வரன்! நான் வலைவாசல்:சைவம் பக்கத்தில், பகுப்பு:வலைவாசல் என்பதை நீக்கிய பின்னர், நீங்கள் மீண்டும் அதனைச் சேர்த்திருக்கின்றீர்கள். ஆனால் நான் உண்மையிலேயே அப்போது கவனிக்கவில்லை. வலைவாசல்கள் பகுப்பிலுள்ள கட்டுரைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு, முதலிலேயே அதனை மாற்றியதை எண்ணாமல் மேலும் மாற்றம் செய்துவிட்டேன். நான் வேண்டுமென்றே செய்ததாகத் தவறாகப் புரிந்துகொண்டீர்களோ தெரியவில்லை. இப்போதுதான் வரலாற்றைப் பார்த்தபோது அதனை அவதானித்தேன். நீங்கள் மாற்றியதை முதலிலேயே அவதானித்திருந்தால், அவ்வாறு செய்திருக்க மாட்டேன். நீங்கள் சரியாகப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 20:16, 10 திசம்பர் 2013 (UTC)
இது தொடர்பில் இன்னுமொரு கேள்வி. நீங்கள் செய்திருக்கும் மாற்றத்தின்படி, பகுப்பு:வலைவாசல்கள் என்பதற்குள், பகுப்பு:சமய வலைவாசல்கள் என்பது வருகின்றது. பின்னர் பகுப்பு:சமய வலைவாசல்கள் என்பதற்குள் பகுப்பு:வலைவாசல் சைவம் வருகின்றது. பின்னர் பகுப்பு:வலைவாசல் சைவம் இற்குள் வலைவாசல்:சைவம் என்ற கட்டுரை வருகின்றது. அதேநேரம், வலைவாசல்:சைவம் கட்டுரையானது, பகுப்பு:சமய வலைவாசல்கள் என்பதற்குள்ளும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இதனை எப்படிச் சரிசெய்யலாம்?--கலை (பேச்சு) 20:42, 10 திசம்பர் 2013 (UTC)
நான் இன்று வலைவாசல்களின் பகுப்பில் செய்த தொகுப்புக்கள் அனைத்தையும் முன்னிலைப்படுத்திவிட்டேன். சிலவற்றில் மேலதிகமான பகுப்பை இணைத்துள்ளேன். அவை இருக்கட்டும். ஆனால் நான் முன்னிலைப்படுத்திய பின்னர் பார்க்கும்போது, சில வலைவாசல்கள் தாய்ப்பகுப்பிலும், அதே நேரம் துணைப்பகுப்பிலும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்து, வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள். எனது பேச்சுப் பக்கத்திலும் உங்களது கேள்விக்குப் பதிலுள்ளது. அதில் நான் செய்த மாற்றங்களுக்கு விளக்கம் தந்துள்ளேன். பாருங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:32, 10 திசம்பர் 2013 (UTC)
- மூன்று முறை எனது பேச்சுப் பக்கத்தினை தொகுத்து தாங்கள் வலைவாசல்கள் பகுப்பு பற்றி புரிதல்களை உருவாக்கியமைக்கு நன்றி. தங்களது பேச்சுப் பக்கத்திலேயே எனது ஆலோசனைகளை பதிவு செய்துள்ளேன். வலைவாசல்களை செம்மைப்படுத்த தாங்கள் முனைந்திருப்பதற்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:33, 11 திசம்பர் 2013 (UTC)
வலைவாசல் பகுப்புக்களைச் சரி செய்யலாம் என முயற்சிக்கின்றேன். ஆனால் மீண்டும் ஒரு சந்தேகம் :). பல வலைவாசலிகளில் துணைப்பகுப்பிற்கான இணைப்பும், அதே சமயம் தாய்ப்பகுப்பான பகுப்பு:வலைவாசல்கள் இற்கான வார்ப்புருவும் இடப்பட்டுள்ளது. துணைப்பகுப்பிற்குள் வரும் வலைவாசல்களில் குறிப்பிட்ட அந்த வார்ப்புருவை நீக்கட்டுமா?--கலை (பேச்சு) 11:33, 3 சனவரி 2014 (UTC)
- தாங்கள் மீண்டும் வலைவாசல் பகுதியை மேம்படுத்துவதற்கு நன்றி. துறை சார் பகுப்புகளை இடும்போது, தாய்ப் பகுப்பினை நீக்கிவிடுங்கள். மீண்டும் எனது நன்றி :). --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:18, 3 சனவரி 2014 (UTC)
- வலைவாசல்களிற்கான பகுப்புக்களை இடுவது தொடர்பில் சில உதவிகள் தேவைப்படுகின்றது. உங்களுக்கு மின்னஞ்சல் இட்டுள்ளேன். பார்த்து உதவுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 22:50, 7 சனவரி 2014 (UTC)
வலைவாசல் வானியல்
தொகுவலைவாசல் வானியலில் செயற்படுத்தச் சொன்ன விடயங்கள் பற்றி செய்து பார்க்கும்போது சற்று கட்டுரைகள் எல்லாம் மாறி மாறி வருகின்றன. ஒரே ஒழுங்கில் வரவில்லை அதை சரிப்படுத்டினால் நன்றாய் இருக்கும் எனவே நீங்களே ஒருமுறை அங்கு சென்று பாருங்களேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:02, 16 திசம்பர் 2013 (UTC)
:சரியாயிற்று ஆயிற்று, நீங்கள் உள்ளிட்டத்தில் ஏற்பட்ட சிக்கல் என நினைக்கிறேன். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:20, 16 திசம்பர் 2013 (UTC)
- மன்னிக்கவும். நீங்கள் தான் கவனிக்கவேண்டும் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:28, 16 திசம்பர் 2013 (UTC)
- வலைவாசலில் எந்தவொரு பிரட்சனையும் இருப்பதாக தெரியவில்லை நண்பரே. அனைத்தும் நன்றாக உள்ளது. 15 இன்ச் மானிட்டரில் மட்டும் சற்று வெளியே செல்கிறது. அது பிரட்சனையில்லை. தாங்கள் உள்ளடக்கங்களை மேம்படுத்துங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:54, 16 திசம்பர் 2013 (UTC)
நீங்கள் சொன்ன மாதிரி மாற்றிப் பார்த்தேன் இதோ பாருங்கள் சிறப்புப்படம் ஒன்றே வலைவாசலில் காட்டப்படுகிறது தேர்வுக்கடுரையும் அதே மாதிரித்தான் இரண்டாவது கட்டுரையை காட்ட வேண்டியது நான்காவது மூன்றாவது என மாற்றி மாற்றி காட்டுகிறது, பிழை என்ன? --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 02:54, 17 திசம்பர் 2013 (UTC) உங்களுக்குத் தெரியுமா கூட அவ்வாறுதான் நண்பரே--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 02:56, 17 திசம்பர் 2013 (UTC) இப்பொழுது சரியா--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:02, 17 திசம்பர் 2013 (UTC)
- {{Rand|2+1|1}} என்பதே தொடர்ச்சியாக கட்டுரைகளை மாற்றி மாற்றி காட்டுவதற்காக உருவாக்கப்பட்டது [[நண்பரே. அதனால் அது மூன்று, ஐந்து என்று கணக்கில்லாமல் மாறிமாறி கட்டுரையை காட்சிபடுத்தும். அவ்வாறு இல்லாமல் தி்ங்களன்று ஒரு கட்டுரை, செவ்வாயன்று வேறு என நாள் கணக்கிலோ, ஜனவரி மாதம் வரை ஒரு கட்டுரை பின் பிப்ரவரியில் அடுத்து என மாதம் வாரியாகவும் மாற்றம் செய்யும் தானியங்கள் இருக்கின்றன. தாங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். தாங்கள் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொழுது Rand|10+1|1 என கட்டுரையை அதிகரித்துக் கொண்டே செல்லலாம். தற்போது நீங்கள் செய்துள்ள திருத்தங்கள் மிகவும் சரியானதே. தொடருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:23, 17 திசம்பர் 2013 (UTC)
மிக்க நன்றி நண்பரே!...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:19, 18 திசம்பர் 2013 (UTC)
மீண்டும் குழப்பம் ஏற்பட்டுவிட்டது பார்க்கவும் --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:56, 18 திசம்பர் 2013 (UTC)
முதல் இருந்தது போல் வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/2 என அனைத்துப்பகுதிகளையும் மாற்றட்டுமா?..... பதில் தெரிவிக்கவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:03, 18 திசம்பர் 2013 (UTC)
- சரி செய்துள்ளேன் நண்பரே. இந்த RAND அரே போல 0 விலிருந்தே தன்னுடைய எண்ணிக்கையை தொடங்குகின்றது. அதனால் அவ்வாறு சிவப்பிணைப்புகள் தோன்றின. தற்போது அந்த இணைப்பில் முதல் கட்டுரைகளை பிரதியீடு செய்துள்ளேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:17, 18 திசம்பர் 2013 (UTC)
சிறப்புப்படப்பகுதி பிழைத்துள்ளது நண்பரே என்ன காரணம்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:17, 19 திசம்பர் 2013 (UTC)
- சிறப்புப்படம் என்பதற்குப் பதிலாக சிறப்புப்_படம் என்ற ஒரு இடைவெளி இருந்ததே காரணம் அதனை நீக்கியிருக்கிறேன். தற்போது காணுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:25, 19 திசம்பர் 2013 (UTC)
நன்றி எனக்கு ஒரு சந்தேகம் அடுத்த கட்டுரை, படம், தகவல்கள் போன்ற பகுதிகள் எப்போது மாற்றமடையும் அல்லது நாமாகவே மாற்ற வேண்டுமா?--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:51, 19 திசம்பர் 2013 (UTC)
- வானியல் வலைவாசலில் ஒரு சிறுப் பகுதியை இணைத்துள்ளேன். அறிமுகப்பகுதிக்கு கீழே உள்ள உலவியின் இடைமாற்றை நீக்குக (purge) என்ற இணைப்பினை சொடுக்கி நீங்கள் மாற்றமடையச் செய்யலாம். அத்துடன் ஒரு விண்ணப்பம் கலிஸ்டோ கட்டுரையில் உள்ளது போல கட்டுரையில் மேல் குறுங்கட்டுரை வார்ப்புருவை இணைக்காதீர்கள்,. அது கட்டுரைப் படிப்பவர்களுக்கு சிரமத்தினை உண்டாக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:09, 19 திசம்பர் 2013 (UTC)
அறிவுரைக்கு நன்றி, அப்படியானால் அனைத்து வானியல் குறுங்கட்டுரைகளிலும் அவ்வார்ப்புருவை கீழே இணைத்து விடுகிறேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:18, 19 திசம்பர் 2013 (UTC)
ஒரு சந்தேகம் வலைவாசலில் சிறப்புக்கட்டுரை எனும் பகுதியில் மேலும் என்ற சொல்லிற்கு சூரியக்குடும்பம் என்ற இணைப்பு இடப்பட்டுள்ளது, அதை வால்வெள்ளி என்ற இணைப்புக்கு மாற்ற முயற்பட்டால் மீண்டும் முன்னையது போல் குழப்பம் ஏற்படாதா?...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:21, 19 திசம்பர் 2013 (UTC)
- வலைவாசலிருந்து சூர்ய குடும்பம் இணைப்பினை நீக்கியிருக்கிறேன். தாங்கள் சைவ சமய வலைவாசலில் உள்ளது போல கட்டுரைகளை அமைத்தால் இப்பிரட்சனை வராது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அதன் கட்டுரைப்பகுதியை இணைப்பாக தரும் வசதி உள்ளது. இந்த இணைப்பில் உள்ளது போல செயல்படுத்துங்கள். https://ta.wikipedia.org/s/2tmz. வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு எனும் பக்கத்திலிருப்பதைப்பதை நகலெடுத்து வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/வடிவமைப்பு என்றொரு பக்கம் உருவாக்கி இடுங்கள். நன்றி.
மூன்று வரிகள்
தொகுஉங்கள் குறுங்க் கட்டுரைகளுக்கு தயந்து 3 வரிகள் உள்ளதாகப் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிடின் அவை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:32, 2 சனவரி 2014 (UTC)
- விசிறி வாழை (நூல்), ஏ. கே. வேலன் கட்டுரைகளைப் பற்றி குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கிறேன். அதன் உள்ளடக்கங்களை அதிகரிக்க நூலை படிக்க வேண்டும், உடன் ஏ.கே.வேலனைப் பற்றி குறிப்புகள் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. அவருடைய நூல்களை தரவிரக்கியுள்ளேன். இயன்றளவு விரிவு செய்யப் பார்க்கிறேன், இயலாதபட்சத்தில் காலக்கெடு முடிந்ததும் நீக்கிவிடுங்கள். பிறகு குறிப்புகள் கிடைத்தும் மீண்டும் எழுதுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:49, 2 சனவரி 2014 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
விக்கிப்பீடியாவில் எனது ஐயங்களை தீர்த்து வழிகாட்டியமைக்காக இப்பதக்கத்தைத் தருகிறேன். நன்றி ஜெகா. ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 16:43, 5 சனவரி 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:01, 5 சனவரி 2014 (UTC)
- ஹரீஷ் மற்றும் ஸ்ரீகர்சன்,.. இருவருக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:19, 6 சனவரி 2014 (UTC)
விருப்பம்--திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:41, 6 சனவரி 2014 (UTC)
சந்தேகம்
தொகுவணக்கம்! சகோதரா!! நலமா? என்னை மறந்தீரோ? பொங்கல் முடிந்ததா? தவியில் எனது பங்களிப்புகள் அண்மைய மாற்றங்களில் பதிவாவதில்லையே ஏன்? பதிதாக கட்டுரை தொடங்கினால் மட்டுமே பதிவாகிறது, மற்ற கட்டுரைகளில் பங்களிப்பு செய்கிற மாற்றங்கள் பதிவாவதில்லை ஏன்? - யோகிசிவம்
- அண்மைய மாற்றங்கள் பகுதியில் இறுதி 50 பதிவுகள் மட்டுமே நமக்கு காட்டும். அண்மைய மாற்றங்களின் தேர்வுகள் பகுதியில் இருக்கின்ற தெரிவுகளை நமக்கு தக்கவாறு மாற்றி 500 பதிவுகள் வரை காணுதல் இயலும். இதனை முயன்று பாருங்கள். மேலும் உங்களை மறக்க முடியுமா? பொங்கல் விடுமுறையின் காரணமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:51, 18 சனவரி 2014 (UTC)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | ||
வணக்கம், ஜெகதீஸ்வரன்! இன்றுவரை 1035 கட்டுரைகள்..! தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்! 'ஆயிரவர்' பதக்கத்தினை உங்களின் பயனர் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். அன்புடன், மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:47, 23 சனவரி 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- வாழ்த்துகள்!--⚕சி.செந்தி⚕ (உரையாடுக) 05:48, 23 சனவரி 2014 (UTC)
- மனம் கனிந்த வாழ்த்துக்கள் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:14, 23 சனவரி 2014 (UTC)
- பதக்கம் தந்து ஊக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே. உடன் வாழ்த்து தெரிவித்த செந்தி,ஆதவன் இருவருக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:41, 23 சனவரி 2014 (UTC)
- உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் :)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:56, 23 சனவரி 2014 (UTC)
வாழ்த்துகள் ஜெகதீசுவரன்! தங்கள் விக்கிப்பயணம் மேலும் சிறக்கட்டும். தங்கள் விக்கிப்பயணத்தைப் பிறர் பயன்படும் படி அறியத்தந்தமைக்குப் பாராட்டுகள் !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:01, 23 சனவரி 2014 (UTC)
விருப்பம் வாழ்த்துகள்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:39, 31 சனவரி 2014 (UTC)
வலைவாசல்:வானியல்
தொகுஇது முதற்பக்கட்தில் இடம்பெறத் தகுதி பெற்றுள்ளது என நினக்கின்றேன் ஏனெனில் கட்டுரை, படம், உங்களுக்குத்தெரியுமா என்பவை 5 முறை காட்சிப்படுத்தப் பட்டுவிட்டன தலைப்புக்கள் சேர்க்கப்பட்டுவிட்டது? உங்கள் கருத்துக்களை உடனே தெரிவிக்கவும். --யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:39, 31 சனவரி 2014 (UTC)
- அற்புதம் நண்பரே. பிப்ரவரி மாதத்திற்கு காட்சிசெய்துவிடலாம். நேர்த்தியான இதுபோன்ற பல வலைவாசல்களை தமிழுலகிற்கு அளிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:44, 31 சனவரி 2014 (UTC)
நிச்சயமாக! நண்பரே.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:51, 31 சனவரி 2014 (UTC)
பாண்டிராஜ்
தொகுஇந்த இயக்குநரின் பெயர் பாண்டிராஜ் என்று ஆ.வியிலும், அவரது வலைப்பக்கத்திலும் உள்ளது. நீங்கள் பாண்டியராஜ் என்று கட்டுரை தொடங்கியிருக்கிறீர்களே?([1])--Booradleyp1 (பேச்சு) 14:58, 1 பெப்ரவரி 2014 (UTC)
- தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க. ஊடகங்களில் பாண்டியராஜ் என்று கேள்விப்பட்டதாக நினைவு. பாண்டிராஜ், பாண்டியராஜ் என்று இரண்டையும் அவை கையாளுகின்றன. தற்போது சரிசெய்துள்ளேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:26, 1 பெப்ரவரி 2014 (UTC)
மாற்றியதற்கு நன்றி. தொடக்க காலத்தில் பாண்டியராஜ் என்றுதான் பெயர் இருந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவர் பாண்டிராஜ் என்றே குறிப்பிடப்படுகிறார்.--Booradleyp1 (பேச்சு) 03:02, 2 பெப்ரவரி 2014 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:48, 7 பெப்ரவரி 2014 (UTC)
தயவுசெய்து வாக்களிக்க
தொகுஇங்கு சென்று vote' என்பதை click செய்து yes என்பதை தெரிவுசெய்யவும், வேணு மெனில் கருத்துக்களையும் இடவும்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:42, 9 பெப்ரவரி 2014 (UTC)
- சரி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:54, 9 பெப்ரவரி 2014 (UTC)
- உங்களுக்கு யார் பொருத்தமானவர் என தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. மேலும் Yes, No, Neutral இதில் எது உங்களுக்கு சரி என படுகிறதோ அதன்படி வாக்களியுங்கள். நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 12:04, 9 பெப்ரவரி 2014 (UTC)
- நன்நோக்கம் கருதியே வாக்களித்திருக்கிறேன். மேலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் இத்தேர்தலில் உள்ளார்களா?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:17, 9 பெப்ரவரி 2014 (UTC)
எனக்கும் அதே ச்ந்தேகம் தான்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:23, 9 பெப்ரவரி 2014 (UTC)
- இத்தேர்தலில் ஏதேனும் ஒரு விக்கிமீடியா விக்கியில் கணக்குள்ள யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். பார்க்க m:Stewards/Elections_2014/Guidelines#Voters--சண்முகம்ப7 (பேச்சு) 12:25, 9 பெப்ரவரி 2014 (UTC)
- தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:40, 9 பெப்ரவரி 2014 (UTC)
உரிமம்
தொகு[[படிமம்:நடிகை நயன்தாரா.jpg|thumbnail]] இதன் உரிமம் என்ன? --AntonTalk 12:58, 13 பெப்ரவரி 2014 (UTC)
- உரிமத்தினை அப்படிமத்தில் இணைத்துள்ளேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:38, 13 பெப்ரவரி 2014 (UTC)
கருவி
தொகுகருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன் இங்கு வருக. கருத்துக்களை இடவும்--aho;- பேச்சு 08:15, 15 பெப்ரவரி 2014 (UTC)
பகுப்பு:தமிழ் நடிகர்கள்
தொகுவணக்கம்! தமிழ்த் திரைப்பட நடிகர்கள் எனும் பகுப்பு ஏற்கனவே இருக்கையில் தமிழ் நடிகர்கள் எனும் பகுப்பினைத் தொடங்கியிருப்பதன் காரணத்தை அறியலாமா? தொலைக்காட்சியிலும் நடிப்பதை கருத்தில்கொண்டு ஆரம்பித்துள்ளீர்களோ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:44, 18 பெப்ரவரி 2014 (UTC) பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் என்பதும் இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 18 பெப்ரவரி 2014 (UTC)
- ஆங்கில விக்கியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்படும் பொழுது en:Category:Tamil actors என்ற பகுப்புக்கு நிகரான தமிழ்ப் பகுப்பு தேவைப்பட்டது. அதனால் உருவாக்கியிருக்கிறேன். இப்பகுப்பு தேவையற்றதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:55, 18 பெப்ரவரி 2014 (UTC)
புதிய பகுப்பு தேவையற்றது என்றே கருதுகிறேன். பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள், பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் என்பதன்கீழ் முறையே 200 கட்டுரைகளுக்கும் மேலே உள்ளன. இவ்விரு பகுப்புகளைப் பயன்படுத்துதல் சிறப்பானதாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:05, 18 பெப்ரவரி 2014 (UTC)
- சரி நண்பரே. நீக்கம் செய்துவிடுகிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 18 பெப்ரவரி 2014 (UTC)
புரிதலுக்கு நன்றி! சிலர் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடிக்கக் கூடும். உதாரணம்: குஷ்பு, டெல்லி கணேஷ். ஒருவேளை இதைக் கருதியே தமிழ் நடிகர்கள், தமிழ் நடிகைகள் எனும் பகுப்புகளை உருவாக்கினீர்களோ என முதலில் நினைத்தேன். அதன்பின்னர் அனைவர் பற்றிய கட்டுரைகளிலும் சேர்ப்பதனைக் கண்டபின் உங்களின் பேச்சுப் பக்கத்தில் எழுதினேன். தேவைப்பட்டால், பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகர்கள் எனும் பகுப்பினையும் நீங்கள் பயன்படுத்தலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:08, 19 பெப்ரவரி 2014 (UTC)
- தமிழ் நடிகர்கள் பகுப்பு குறித்து சிறு ஐயம் இருக்கிறது. தொழில்வாரியான தமிழ் சமூகத்தின் கீழ் இப்பகுப்பினை ஆங்கிலத்தில் வரையரை செய்துள்ளமையால், தமிழ்த் திரைப்பட அல்லது தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்களுக்கு மாற்றாக இதனை வகை செய்யமல், தமிழ் புலம் சார்ந்த மக்களில் நடிகர்களாக இருப்பவர்கள் என்ற முறையில் வடிவமைத்திருக்கின்றார்களோ என்று தோன்றுகிறது. நீங்களும் ஒரு முறை ஆங்கிலத்தில் பகுப்பினைக் காணுங்கள். பிற்காலத்தில் தேவையேற்படும் பொழுது உருவாக்க உதவியாக இருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:57, 19 பெப்ரவரி 2014 (UTC)
- ஓ, சரி பார்க்கிறேன்!
- பகுப்பு:நடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பின்கீழ் உள்ள துணைப்பகுப்புகளைப் பாருங்கள். திரைப்படங்கள் குறித்து நீங்கள் நிறைய கட்டுரைகள் எழுதுவதால் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்குங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:55, 21 பெப்ரவரி 2014 (UTC)
- நன்றி நண்பரே, இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். --17:45, 21 பெப்ரவரி 2014 (UTC)
வேண்டுகோள்
தொகுஎழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.
அறிவியுங்கள். வழி காட்டுங்கள்.
எறும்பும் தன் கையால் எண் சாண்
நானும் எறும்புதானே? --Sengai Podhuvan (பேச்சு) 17:41, 25 பெப்ரவரி 2014 (UTC)
- புரியலேங்க. ஏதாவது செய்ய வேண்டுமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:42, 25 பெப்ரவரி 2014 (UTC)
வலைவாசல்
தொகுமார்ஸ் மாதத்திற்கு வலைவாசல்:புவியியல் இதை தேர்ந்து எடுக்கலாம் என நினைக்கின்றேன். சரிபார்த்துக்கூறவும்.--aho;- பேச்சு 11:21, 27 பெப்ரவரி 2014 (UTC)
- பார்த்தேன் நண்பரே. வலைவாசல் சிறப்பாக இருக்கிறது. அடுத்த மாதத்திற்கு இதனையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:04, 27 பெப்ரவரி 2014 (UTC)
தானியங்கி
தொகுநீண்ட காலம் மெதுவாக இயங்கிய தானியங்கி தற்போது பல நாட்களாக அசுரவேகமாக இயங்குகின்றது. இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்....., வாழ்த்துக்கள்.... :P :), நான் கூறுகிறேன், தமிழ் விக்கி வேகமாக வளர்ந்துவிடும்..., தங்களைப்போன்ற தானியங்கிகள் இருக்கையில்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:18, 6 மார்ச் 2014 (UTC)
- நன்றி நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:22, 6 மார்ச் 2014 (UTC)
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:31, 6 மார்ச் 2014 (UTC) விருப்பம்--aho;- பேச்சு 16:07, 8 மார்ச் 2014 (UTC)
மின்னஞ்சல்
தொகுஉங்களுக்கு மின்னஞ்சலில் ஒரு செய்தி காத்திருக்கின்றது.--aho;- பேச்சு 16:07, 8 மார்ச் 2014 (UTC)
- பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:06, 8 மார்ச் 2014 (UTC)
முப்பரிமாணம்
தொகுநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:41, 4 ஏப்ரல் 2014 (UTC)
பகுப்பு
தொகுபுனைவுக் கிளிகள் என்ற பகுப்பு பொருத்தமற்றதாகப்படுகிறது. ரியோவில் காட்டப்படும் கிளிகள் புனைவு அல்ல. மேலும் பறைவைகள் பகுப்பில் திரைப்படம் தொடர்பான பகுப்பு வருவது விரும்பத்தக்கதல்ல. ஆட்சேபனை இல்ல என்றால் நீக்கிவிடுங்கள் அல்லது வேறு தாயப்பகுப்புடன் இணைத்துவிடுங்கள். --AntonTalk 18:59, 4 ஏப்ரல் 2014 (UTC)
- Fictional parrots என்ற ஆங்கிலப் பகுப்பினை இவ்வாறு தமிழ்ப்படுத்தினேன். இதனை வேறு வகையில் மொழிமாற்றம் செய்ய இயலுமா?. ஏதேனும் ஆலோசனையிருந்தால் தெரிவியுங்கள். பறவைகள் பகுப்பில் இப்புகுப்புகளை நேரடியாக கலந்துவிடாமல், பறவைகளைப் பற்றியத் திரைப்படங்கள் என்பதைப் போன்று தாய்ப்பகுப்பினை உண்டாக்கி இணைத்துவிடலாமா என ஆலோசனைக் கூறுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:48, 6 ஏப்ரல் 2014 (UTC)
- புனைவுக் கதை கிளிகள் / புனைவுக் கதை பறவைகள்என்பது பொருத்தமாகவிருக்கும். அல்லது பகுப்பில் ஓர் சுருக்கத்தை இடலாம். எ.கா: en:Category:Wikipedia categorization --AntonTalk 06:44, 8 ஏப்ரல் 2014 (UTC)
- Fictional parrots என்ற ஆங்கிலப் பகுப்பினை இவ்வாறு தமிழ்ப்படுத்தினேன். இதனை வேறு வகையில் மொழிமாற்றம் செய்ய இயலுமா?. ஏதேனும் ஆலோசனையிருந்தால் தெரிவியுங்கள். பறவைகள் பகுப்பில் இப்புகுப்புகளை நேரடியாக கலந்துவிடாமல், பறவைகளைப் பற்றியத் திரைப்படங்கள் என்பதைப் போன்று தாய்ப்பகுப்பினை உண்டாக்கி இணைத்துவிடலாமா என ஆலோசனைக் கூறுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:48, 6 ஏப்ரல் 2014 (UTC)
- இவ்வாறே மாற்றம் செய்துவிடலாம் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:14, 8 ஏப்ரல் 2014 (UTC)
Wikimedians Speak
தொகு
|
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.
Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:37, 9 ஏப்ரல் 2014 (UTC)
முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த வலைவாசல்:இந்து சமயம் என்ற வலைவாசல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 1,2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
கட்டுரைப் போட்டி நிறைவு
தொகுவணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:35, 6 மே 2014 (UTC)
- வாழ்த்துகள் நண்பரே, மிகப் பெரும் இலக்கினை எட்டியுள்ளீர்கள். ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் கற்றவை குறித்தும், அதன் அடுத்த நிகழ்வில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் சிந்திப்பீர்கள். பத்தாண்டு கொண்டாட்ட சந்திப்புக்கு எழுதியது போல இந்தக் கட்டுரைப் போட்டியில் கற்றுக் கொண்டவை குறித்தும் பதிவு செய்யுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:11, 11 மே 2014 (UTC)
வேண்டுகோள்
தொகுவணக்கம் Jagadeeswarann99! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
தொகு--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:52, 18 மே 2014 (UTC)
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஜெகதீஸ்வரன் அண்ணா. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்-- நி.மாதவன் ( பேச்சு ) 05:28, 18 மே 2014 (UTC)
- வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பர்களே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:46, 20 மே 2014 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:30, 21 மே 2014 (UTC)