பயனர் பேச்சு:Jayarathina/தொகுப்பு05
ஜாவாஸ்கிரிப்ட் உதவி
தொகுஉங்களுடையப் போன்றே நானும் ஜாவாஸ்கிரிப்ட் எழுத நினைக்கிறேன். அது இந்த தொகுப்பு பெட்டியில் உள்ள உரையை எடுக்க வேண்டும். பிறகு ஏதாவது செயல்களைச் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் இந்த பெட்டியிலேயே திருத்திய உரையை போட வேண்டும். ஜாவாஸ்கிரிப்டில் அனுபவம் உண்டு. ஆனால், இணையப் பக்கங்களில் செய்து பழக்கமில்லை. எனவே, பெட்டியின் உரையை எடுக்கவும், மீண்டும் உரையை சேர்க்கவுமான நிரல் வரிகளைத் தருக. உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:34, 3 சனவரி 2014 (UTC)
- தமிழ்க்குரிசில், நீங்கள் எவ்வகை நிரல் வேண்டும் என்று கூறினால், அதை கொடுக்க ஏதுவாய் இருக்கும். இருவகையில் இதனை செய்யலாம். ஒன்று பயனர் கருவி (user script), மற்றொன்று Greasemonkey Script. இதில் user script எழுதுவது கடினம் ஆனால் பிறர் பயன்படுத்துவது எளிது. Greasemonkey Script எழுதுவது எளிது ஆனால் பயன்படுத்த உலாவியில் extension இருக்க வேண்டும். உங்களின் தேவையினை கூறினால் அதன் படி நிரல் உருவாக்கி தருகிறேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:56, 3 சனவரி 2014 (UTC)
- இந்த இரண்டில் எது சவுகரியமோ அதிலேயே செய்து தாருங்கள். இந்த கருவி விக்கியில் அல்லாது மற்ற வலைத்தளங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலை வரலாம். இது டைனமிக் எழுத்துருக்களில் இருந்து யூனிக்கோடுக்கு மாற்றும் பணியைச் செய்யும். சுரதா போன்ற ஏகப்பட்ட கருவிகள் இருப்பதை அறிவேன். ஆயினும், நான் எனக்கு பிடித்த, அதிகப் புழக்கத்தில் இல்லாத எழுத்துருக்களுக்கே பயன்படுத்தப் போகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:37, 3 சனவரி 2014 (UTC)
- பிற இணையதளங்களுக்கு என்றால் Greasemonkey Script தவிர வேறு வழியில்லை. அதனை பயன்படுத்த உங்கள் உளாவிக்கான நீட்சியினை நிருவவும். கீழுள்ள நிரலினை பயன்படுத்தினால், ஒரு பக்கத்தை தொகுக்கும் போது அதன் தொகுப்பானில் இருக்கும் உரை alert பெட்டியில் வரும். பின்னர் அது தொகுப்பானின் உரையினை மாற்றும். இவை அனைத்தும் உலாவி விக்கி பக்கத்தை ஏற்றி முடித்த உடனே நிகழும். இது ஜெகுவெரியில் எழுதப்பட்டுள்ளது.
// ==UserScript==
// @name tamil wiki
// @namespace mysite.com
// @include https://ta.wikipedia.org/w/index.php?title=*&action=submit*
// @version 1
// @grant GM_addStyle
// @require http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.2/jquery.min.js
// ==/UserScript==
$(document).ready(function(){
if($("#wpTextbox1" ).length > 0){
alert($("#wpTextbox1" ).val());
$("#wpTextbox1" ).val("தமிழ்க்குரிசில்");
}
});
தமிழ் தட்டச்சு
தொகுஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:12, 24 சனவரி 2014 (UTC)
உதவி
தொகு- எனது குரோம் மற்றும் ஃபயர்பாக்சு உலாவிகளில் விரைவுப் பகுப்பி வேலை செய்யவில்லை. இடைமாற்றை மீளமைத்தும் பயனில்லை.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் visualeditor வேலை செய்கிறது. தமிழ்விக்கியில் தெரிவு செய்தும் வேலை செய்யவில்லை.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 07:05, 25 சனவரி 2014 (UTC)
- கார்த்திகேயன், தமிழ் விக்கியிலும் எனக்கு விரைவு பகுப்பி மற்றும் visualeditor குரோம் (SRWare Iron - 31.0.1700.0 (236000)) மற்றும் ஃபயர்பாக்சில் (26.0) வேலை செய்கின்றதே! உங்கள் உலவியின் இடைமாற்றினை அகற்றியப்பின் பரிசோதிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:16, 25 சனவரி 2014 (UTC)
- இடைமாற்றை அகற்றியும் பயனில்லை--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:10, 25 சனவரி 2014 (UTC)
- கார்த்திகேயன், ஆலமரத்தடியில் வேறுயாருக்கேனும் இச்சிக்கல் உள்ளதா எனக்கேட்டுப்பார்கலாமா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:25, 25 சனவரி 2014 (UTC)
ஏற்கனவே கேட்டேன். ஒருவரும் பதிலளிக்கவில்லை. :-( --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:35, 27 சனவரி 2014 (UTC)
- எனக்கு இது உங்கள் கணினியில் மட்டும் இருக்கும் சிக்கல் போல தெரிகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:05, 27 சனவரி 2014 (UTC)
வணக்கம்
தொகுவணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:43, 9 பெப்ரவரி 2014 (UTC)
- நன்றி. மின் விரிவாக கட்டுரை மேம்படுத்தலாம்.--83.41.94.194 18:17, 9 பெப்ரவரி 2014 (UTC)
கருவி
தொகுகருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன் இங்கு வருக. கருத்துக்களை இடவும்--aho;- பேச்சு 08:11, 15 பெப்ரவரி 2014 (UTC)
இயேசு சந்தித்த சோதனை
தொகுஜெயரத்தின மாதரசன், அண்மையில் தாங்கள் இயேசு சோதிக்கப்படுதல் என்ற தலைப்பில் ஒரு குறுங்கட்டுரை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். நான் ஏற்கெனவே மணல்தொட்டியில் “இயேசு சந்தித்த சோதனை” என்ற தலைப்பில் இப்பொருள் பற்றிய விரிவான கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். எனவே, உங்கள் குறுங்கக் கட்டுரையை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். அல்லது அவற்றை இணைக்க வேண்டியிருக்கும். வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 02:24, 27 பெப்ரவரி 2014 (UTC)
- திரு. பவுல், மிக்க மகிழ்ச்சி, தயவு செய்து கட்டுரையில்
{{நற்செய்தியில் இயேசு|பணிவாழ்வு}}
வார்ப்புரு இட வேண்டுகின்றேன். மேலும் கட்டுரையின் தலைப்பு இயேசு சந்தித்த சோதனை எனவருமானால் வார்ப்புருவிலும் மாற்ற வேண்டுகின்றேன். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:50, 27 பெப்ரவரி 2014 (UTC)
- சரி, மாதரசன், வார்ப்புருவில் மாற்றியுள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 04:50, 27 பெப்ரவரி 2014 (UTC)
தானியங்கி தேவை
தொகுஉங்கள் பார்வைக்கு
தொகுதவி-பக்கங்களில் விடுபதிகை என்பதற்குப் பதில் ஆங்கிலத்தில் log out என்று அண்மையில் சிலநாட்களாகத் தோன்றுகிறது. ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:01, 8 மார்ச் 2014 (UTC)
- Booradleyp1, இயன்றவரை மாற்றியிருக்கின்றேன். இதன் விளைவு வெளிப்பட சில வாரம் ஆகும். சரியான ஆவணங்கள் இல்லாததால் எங்கு மாற்றுவது என்பது சரிவரத் தெரியவில்லை. சில வாரங்களில் மாற்றம் தெரியவில்லை எனில், மீண்டும் முயர்சிக்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:39, 8 மார்ச் 2014 (UTC)
வத்திக்கான் வானொலி
தொகுஇணையத்தில் கேட்கும் இணைப்பை நான் கொடுத்திருந்தேன். அதனை நீக்கியுள்ளீர்கள். link changes everyday எனக் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எனக்குப் புரியவில்லை. இதே இணைப்பில் தான் நான் வத்திக்கான் வானொலியை கேட்கிறேன். இப்போதும் சரிபார்த்தேன். வேலை செய்கிறது. - Uksharma3 (பேச்சு) 01:31, 14 மார்ச் 2014 (UTC)
- கோப்புக்கான நேர் இணைப்பாக இருந்ததால் மாறும் என்று எண்ணினேன். மன்னிக்கவும். இப்போது மீள்வித்து விட்டேன். இணையப்பக்கத்துக்கான நேரடி இணைப்பிருத்தால் (embeded raido player) நன்றாக இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:12, 14 மார்ச் 2014 (UTC)
இந்த இணைப்பை சொடுக்கினால் player திறந்து தானாகவே அன்றைய நாளுக்கான ஒலிபரப்பு ஒலிக்கத் தொடங்கும். இந்த player ஐ கட்டுரையில் embed செய்ய முடியுமா? எப்படிச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. - Uksharma3 (பேச்சு) 06:34, 14 மார்ச் 2014 (UTC)
- புற இணையதளங்களின் பகுதிகளை விக்கிப்பீடியாவில் இணைக்க விட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். எனினும் தற்போதைக்கு தமிழ் முகவரியினை வார்புருவில் இணைத்துள்ளேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:35, 14 மார்ச் 2014 (UTC)
Hello Jayarathina, I have noticed that you have added this map to the article. I could upload a version in Tamil, if you would provide me the translations on my talk page. --Furfur (பேச்சு) 21:05, 25 மார்ச் 2014 (UTC)
தங்களின் உதவி தேவை...
தொகுவணக்கம்! வரவிருக்கும் தேர்தல் குறித்த கட்டுரைகளை இற்றை செய்து வருகிறேன். கட்டுரைகளில் map சேர்க்க விரும்புகிறேன். இந்த இணைப்பில் உள்ள pdf file'ஐப் பாருங்கள். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 'press release' இது. இந்தக் கோப்பில் 44'ஆம் பக்கத்திலுள்ள கேரளா மேப்பினை நாம் நமது கட்டுரையில் பயன்படுத்தலாமா? ஏதேனும் காப்புரிமை பிரச்சினை வருமா? கொஞ்சம் சரிபார்த்து கூற இயலுமா?! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 4 ஏப்ரல் 2014 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், இந்திய பதிப்புரிமை சட்டப்படி இந்திய அரசு மற்றும் அரசுத்துறைகளால் செய்யப்படும் ஆக்கங்களும் பதிப்புரிமைக்கு உட்பட்டதே. (காண்: 1: In the case of a government work, government shall be the first owner of the copyright.... term of protection of copyright ..... for works of government the 60-year period is counted from the date of publication.) எனினும் இத்தகைய நிலப்படங்களை நாமே வரையலாமே? உங்களுக்காக 44ம் பக்க நிலப்படத்தை நான் வரைந்துள்ளேன்: File:Constituencies in Kerala for the Lok Sabha 2014.svg --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:18, 5 ஏப்ரல் 2014 (UTC)
தேவைப்படும் நிலப்படத்தை அருமையாக வரைந்து தந்துள்ளீர்கள், மிக்க நன்றி! இதனை எப்படி வரைந்தீர்கள்? எதனை மூலமாக வைத்து வரைந்தீர்கள்? வழிமுறை குறித்து என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு ppt அனுப்ப இயலுமா? உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்; முடிந்தால் pptயுடன் பதில் அனுப்புங்கள்; அவசரமில்லை, பொறுமையாக உதவவும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 5 ஏப்ரல் 2014 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், மன்னிக்கவும். எனக்கு எந்த மின்னஞ்சலும் இதுவரை வரவில்லை. எனினும் நான் இதை கேரள தேர்தல் துறையின் இணையத்தில் இங்கு உள்ள நிலப்படத்தை அடிப்படையாகக்கொண்டு வரைந்தேன். இதை வரைய inkscape பயன்படுத்தினேன். இதற்கு அடிப்படை நிலப்படமாக கேரள மாவட்டங்களின் எல்லைகளோடு அமைந்துள்ள இப்படிமத்தை பயன்படுத்தினேன். இதை செய்ய வழிமுறைகள் என எதுவும் குறிப்பாக இல்லை. முன்பே உள்ள படிமத்தை சில மாற்றங்கள் செய்ய வேண்டும். செய்வதற்கு பொருமையும் காலமும் தேவை. inkscape பயன்படுத்த தெரிந்தால் எளிதில் செய்யலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:31, 6 ஏப்ரல் 2014 (UTC)
மிக்க நன்றி, ஜெயரத்தின மாதரசன்! inkscape பயன்படுத்தி பயிற்சி எடுக்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், மீண்டும் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 7 ஏப்ரல் 2014 (UTC)
Wikimedians Speak
தொகு
|
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.
Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:39, 9 ஏப்ரல் 2014 (UTC)
பேச்சு:கண்டுபிடிப்புச் சித்தாந்தம்
தொகு- பார்க்க: பேச்சு:கண்டுபிடிப்புச் சித்தாந்தம்--Natkeeran (பேச்சு) 20:36, 24 ஏப்ரல் 2014 (UTC)
ஒரு வேண்டுகோள்
தொகுவணக்கம் Jayarathina! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்
தொகுவணக்கம், செயரத்தினா. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
- வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
- சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி. --இரவி (பேச்சு) 19:19, 30 சூன் 2014 (UTC)
- ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:32, 1 சூலை 2014 (UTC)
AWB
தொகுAWB தொகுப்புகள் தானியங்கித் தொகுப்பாக கருதப்படும். பயனர்:JayarathinaAWB BOT பயன்படுத்தி இத்தொகுப்புகளைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:11, 5 சூலை 2014 (UTC)
கருவி தேவை
தொகுவணக்கம் ஜெயரத்தினா! எனக்கு ஒரு உதவி செய்வீரா? :) ஏற்கனவே, உள்ள iwt போன்ற கருவி தான் தேவை. ஒரு கட்டுரையைத் தந்தால், அதில் உள்ள சொற்களுக்கு [[ ]]என்ற அடைப்புக் குறியை இட்டு, அந்த பெயரில், அதே விக்கியில் கட்டுரை உள்ளதா என சோதிக்க வேண்டும். இருந்தால், உள்ளிணைப்பைத் தர வேண்டும். இடைவெளிவிட்டு இரண்டு (அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட) சொற்களில் உள்ளிணைப்பு இருந்தால், அவற்றை இணைத்து ஒரே உள்ளிணைப்பு இருக்கின்றதா என பார்க்க வேண்டும். எ.கா: [[அலபாமா]] [[பல்கலைக்கழகம்]] -> [[அலபாமா பல்கலைக்கழகம்]] இதை செயல்படுத்தினால் போதும். புணர்ச்சி விதிகளால் உள்ளிணைப்பை அடையாளம் காண முடியாமை, தேவையில்லாத சொற்களுக்கு உள்ளிணைப்பை வழங்குவது போன்ற சிக்கல்கள் இருப்பது தெரிகிறது. தற்காலிகமாக, கட்டுரையில் எல்லா சொற்களுக்கும் உள்ளிணைப்பு தேடும் கருவி தேவை. எல்லா சொற்களுக்கும் கட்டுரையில் உள்ளிணைப்பு வழங்குவது சிக்கலாகத் தெரிந்தால், preview பெட்டி ஒன்றில் உள்ளிணைப்புகளை காட்டுமாறு செய்யலாம். இதே போன்ற கருவிகள் இருந்தாலும் தெரிவியுங்கள். உங்கள் உதவியை நாடுகிறேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:55, 10 சூலை 2014 (UTC)
- தமிழ்க்குரிசில், இதை மேலும் விளக்க இயலுமா? உங்கள் input என்னவாக இருக்கும், உங்களுக்கு தேவையான output எது என்பதை விளக்கவும். ஒரு எடுத்துக்காட்டினைத்தந்தால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அதாவது Alabama University, அலபாமா பல்கலைக்கழகம் என்று மாறவேண்டுமா? அல்லது அலபாமா பல்கலைக்கழகம் என மாற வேண்டுமா? இப்படி எத்தனை சொற்களைக்கூட்டி பார்க்க வேண்டும்? (உங்களுக்கு இக்கருவி எதற்கு தேவைப்படுகின்றது எனச்சொன்னால் இதை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:26, 11 சூலை 2014 (UTC)
- இந்தக் கருவியின் வேலை ஒன்று தான். தமிழ் கட்டுரை ஒன்றை, தொகுப்புப் பெட்டியில் தந்தால், அந்த கட்டுரையில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் எடுத்து, அந்த சொல்லில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அவ்வளவு தான். :) அப்படி கட்டுரை இருந்தால், அந்த சொல்லில் இணைப்பு தர வேண்டும். கட்டுரையில் உள்ளிணைப்புகள் வழங்க தேவைப்படுகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:01, 11 சூலை 2014 (UTC)
தேடி மாற்றும் கருவி
தொகுவணக்கம் ஜெயரத்தினா, உங்கள் iwt கருவியில் சிறிய சந்தேகம். |Bangalore]] என்பதை |பெங்களூர்]] என மாற்ற வேண்டும். "|" குறியீட்டை பயன்படுத்தத் தெரியவில்லை. escape sequence character குறித்து எதுவும் தெரியாது. :( |,],[ ஆகிய குறிகளைப் பயன்படுத்தி தேடி மாற்றுவது எப்படி என சிறிய விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். bangalore என்பதை பெங்களூர் என்று மாற்றினால், இணையதளப் பெயர்களிலும், map உள்ளிட்ட இடங்களிலும் தமிழ் பெயராகி விடுகிறது. உள்ளிணைப்பு இருக்கும் இடங்களில் மட்டும், | குறியீட்டுக்கு பின்னால் உள்ள பெயர்களை மாற்ற வேண்டும். எ.கா: [[பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்|Bangalore]] என்பதை [[பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்|பெங்களூர்]] என மாற்ற வேண்டும். விரைந்து உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:40, 13 சூலை 2014 (UTC)
- தமிழ்க்குரிசில், நீங்கள் முன்னரே உங்களின் common.js இல் பல சொற்களுக்கு மாற்றங்களை பட்டியல் இட்டிருக்கின்றீர்களே, அதோடு இவ்வாறு இணைக்கவும்:
'|பெங்களூர்]]' : /\|Bangalore\]\]/g,
இதனை சோதித்தப்பின்னர் நீங்கள் கேட்டது நடக்கின்றதா என சொல்லவும். பிற உங்கள் பதில் கண்டு. (கவணிக்க இது |Bangalore]]ஐ மட்டும் தான் மாற்றும் |bangalore]]ஐ அல்ல) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:19, 13 சூலை 2014 (UTC)
- நன்றி! பெரிய, சிறிய எழுத்துகள் இரண்டும் இல்லாமல் case insensitive ஆக இருந்தால் இன்னும் சிறப்பு. இல்லாவிடில், இரண்டுக்கும் இரண்டு முறை இடவேண்டி இருக்கும். சோதிக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 13 சூலை 2014 (UTC)
- தமிழ்க்குரிசில், case insensitive ஆக இருக்க:
- நன்றி! பெரிய, சிறிய எழுத்துகள் இரண்டும் இல்லாமல் case insensitive ஆக இருந்தால் இன்னும் சிறப்பு. இல்லாவிடில், இரண்டுக்கும் இரண்டு முறை இடவேண்டி இருக்கும். சோதிக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 13 சூலை 2014 (UTC)
'|பெங்களூர்]]' : /\|Bangalore\]\]/gi,
- --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:26, 13 சூலை 2014 (UTC)
- நன்றி! இந்த கருவியினால் என் உழைப்பை சேமித்துக் கொள்ள முடிகிறது. இன்னும் மேம்பாடுகளை கொண்டுவந்தால் பலருக்கும் உதவியாய் இருக்கும். மேலே கேட்டிருந்த கருவி பற்றி யோசித்தீரா?? நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 13 சூலை 2014 (UTC)
- சிறிது கால அவகாசம் தரவும். ஓரிரு நாட்களின் முடிக்க முயல்கின்றேன். அக்கருவியில் உள்ள ஒரே சிக்கள் பல வார்த்தைகள் உள்ள இணைப்பை எப்படி கணிப்பது என்பதில் தான். :( --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:36, 13 சூலை 2014 (UTC)
- பரவாயில்லை. ஒரு சொல்லுக்கு மட்டும் இயங்குமாறு தற்போதைக்கு செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். எவ்வளவு விரைவில் தருகிறீர்களோ, அவ்வளவு விரைவில் எனக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும். கவனத்தில் கொண்டமைக்கும் மிக்க நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:07, 13 சூலை 2014 (UTC)
- நன்றி! இந்த கருவியினால் என் உழைப்பை சேமித்துக் கொள்ள முடிகிறது. இன்னும் மேம்பாடுகளை கொண்டுவந்தால் பலருக்கும் உதவியாய் இருக்கும். மேலே கேட்டிருந்த கருவி பற்றி யோசித்தீரா?? நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 13 சூலை 2014 (UTC)
- --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:26, 13 சூலை 2014 (UTC)
கட்டுரைகளை இணைத்தல்
தொகுவணக்கம்! கோடியக்கரை_அமுதகடேசுவரர்_கோயில், திருக்கோடி குழுகர் கோயில் ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்தேன். முதல் முறையாக செய்துள்ளதால் தவறு நிகழ்ந்துள்ளதா என தெரியவில்லை. உறுதிப்படுத்திச் சொல்லுங்கள். பிழை இருந்தால் மீட்டெடுத்து திருத்துங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:59, 10 ஆகத்து 2014 (UTC)
- சரியாக உள்ளது என்றே நினைக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:45, 10 ஆகத்து 2014 (UTC)
- நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:44, 12 ஆகத்து 2014 (UTC)
உதவி
தொகுநான் விருப்பத்தேர்வுகளில் ஹொட் கட்டை தெரிவு செய்துள்ளேன் எனினும் எனது கணக்கில் அது வேலை செய்ய்யவில்லை இதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்க!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:40, 12 ஆகத்து 2014 (UTC)
- யாழ், விரைவுப்பகுப்பியை விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்திருந்தால் கண்டிப்பாக இயங்கும். உங்கள் கணினியில் ஜாவாஸ்கிரிப்டை முடக்கி வைத்திருக்கிறீர்களா என சோதித்துப் பாருங்கள். வேறு உலாவிகளில் முயன்று பாருங்கள். கட்டுரையின் இறுதியில் ”பகுப்பு (+)” என்றவாறு தெரியும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:44, 12 ஆகத்து 2014 (UTC)
- சற்று மாதங்களுக்கு முன்னும் நீங்கள் கூறியவாறு தெரிந்ததாக ஞாபகம், எனினும் தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி!....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:06, 12 ஆகத்து 2014 (UTC)
- யாழ்ஸ்ரீ, உங்களது common.js பக்கத்தில் இருக்கும் அனைத்து scriptகளையும் நீக்கிவிட்டு வேலை செய்கின்றதா என்று பார்க்கவும். (cache நீக்க மறவாதீர்) அப்போது வேலை செய்தால் நீங்கள் பயன்படுத்தும் அந்த scriptகளில் ஏதோ சிக்கல் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:52, 12 ஆகத்து 2014 (UTC)
தங்கள் உதவிக்கு நன்றி, நான் நீங்கள் கூறியதுபோல முயற்சி செய்கின்றேன்?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:57, 14 ஆகத்து 2014 (UTC)
புதுக்கருவிக்கான உதவி
தொகுஇங்கு புதிய கருவி உருவாக்குதலுக்கான திட்டத்தை ஏற்க உள்ளனர். நீங்கள் ஏற்கனவே விக்சனரிக்கு உதவி உள்ளீர்கள். எனவே, நீங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறேன். விக்சனரியில், மிக எளிமையான, அனைத்து மொழியினரும் பயன்படுத்த வல்ல, சில புதிய வசதிகளை நாம் உருவாக்கலாம். இருப்பதை மேம்படுத்தினாலே 4, 5 ஆழிகள் உருவாக்கலாம். எ-கா.
- அகரவரிசைப்படுத்துதல்,
- பதிவேறும் தலைப்புச்சொல்லில் பிறமொழியின் எழுத்துக்களும், குறியீடுகளும் இருந்தால், அவற்றைக் களை எடுத்தல்,
- ஒரு சொல்லுக்கு முன்னும், பின்னும் குறியீடுகளை இணைத்தல், நீக்குதல்,
- ஒரே நேரத்தில் பலவற்றை தேடி மாற்றுதல். உங்களின் சூழ்நிலையைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
மேற்கூறிய தேவைகளுக்காக ஏற்கனவே அரைகுறையாக உள்ள யாவாகிரிப்டு(javascript) உள்ள பக்கங்களைக் காட்டுகிறேன். நீங்கள் , அதன் வழுக்குகளை நீக்கினாலே போதும். இதுவே என்திட்டம். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு..ஆவலுடன்..--≈ த♥உழவன் ( கூறுக ) 01:43, 3 செப்டம்பர் 2014 (UTC)
- விக்கி திட்டங்களின் ஓய்வு நேரத்தில் மட்டுமே என்னால் பங்களிக்க இயலும் என்பதால் இதில் விண்ணப்பிக்க இயலா நிலையில் உள்ளேன். மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:55, 22 செப்டம்பர் 2014 (UTC)
- தயவுசெய்து "மன்னிப்பு" என்றெல்லாம் கூறாதீர்கள். நல்கையுதவி இருப்பின், இன்னும் பலநுட்பங்களை விரைவில் பெற இயலும் என்ற அவாவில் வினவினேன். வழமை போல உங்களின் நிரலாக்க உதவியை, உங்களக்கு உகந்த நேரத்தில் செய்தளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். பொறுமையாக செய்வோமே!. நானும் "ரெகுலர் எக்சுபிரசன்+யாவாகிரிப்டு+ பைத்தான்" மொழியை கற்கத் தொடங்கியுள்ளேன். மீண்டும் நல்லதொரு நாளில் சந்திப்போம். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 08:31, 22 செப்டம்பர் 2014 (UTC)
புதிய சிறுவிவரப்படம்
தொகுஉங்கள் பக்கம் வந்தபோது, இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணினேன். எப்படி உள்ளது.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:13, 3 செப்டம்பர் 2014 (UTC)
- தகவலுழவன், மிக்க நன்றி ஐயா, தங்களின் படம் அருமையாக உள்ளது. அதனையே இப்பக்கத்தில் இணைத்துள்ளேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:53, 22 செப்டம்பர் 2014 (UTC)
- மகிழ்ச்சி. நி-என்பதற்கு முன்னுள்ள இடத்தில் பாதியை, க-க்கு அடுத்து விரைவில் மாற்றியமைப்பேன். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 08:33, 22 செப்டம்பர் 2014 (UTC)
பதக்கம்
தொகுகளைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
பழைய படிமங்களை நீக்கியும் , புதிய SVG படிமங்களை சேர்த்தும் , தாங்கள் செய்யும் பணிக்காக இந்த சிறிய பதக்கம் . Commons sibi (பேச்சு) 07:45, 25 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- மிக்க நன்றி சிபி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:21, 25 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:04, 25 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்! அமைதியான எனும் அடைமொழியினையும் சேர்த்து, அமைதியான களைப்படையாப் பங்களிப்பாளர் என அழைக்கவேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:08, 26 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:04, 25 அக்டோபர் 2014 (UTC)
விருப்பம் --AntonTalk 05:39, 29 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 05:41, 29 அக்டோபர் 2014 (UTC)
பெண்ணியம் வலைவாசல்
தொகுவணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:23, 27 அக்டோபர் 2014 (UTC)
திரள் தொகுப்பு
தொகுஜெயரத்ன, நீங்கள் வார்ப்புருக்களில் செய்து வரும் மாற்றங்களை இது ஒரு சிறு தொகுப்பு என்று குறியிட முடியுமா ? இதனால் மற்ற மாற்றங்களைக் காண எளிதாக இருக்கும். திரளாக சிறு மாற்றங்களை, ஒரே போன்ற திருத்தங்களை, மேற்கொள்ளும்போது இவ்வாறு செய்தல் தேவையாகின்றது. --மணியன் (பேச்சு) 14:17, 6 நவம்பர் 2014 (UTC)
- இனி அப்படியே செய்கிறேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:37, 6 நவம்பர் 2014 (UTC)
படிமம்
தொகுபடிமம்:Sujeethg2014a.jpg படிமத்தை சுஜீத்தே எனக்கு அனுப்பினார்.
ஐயம்...
தொகுவணக்கம்! இந்தியப் பிரதமர் தனது Twitter பக்கத்தில் வெளியிடும் படிமங்களை தி இந்து நாளிதழ் Twitterஇல் வெளியான என்ற குறிப்புடன் தனது websiteஇல் வெளியிடுகிறார்கள். இதே முறையில் நாமும் twitterஇலிருந்து பதிவிறக்கம் செய்து நமது விக்கியில் பயன்படுத்த இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:28, 23 நவம்பர் 2014 (UTC)
- ஐயா,
- முன்னர் ஒருமுறை இதுகுறித்து பொதுவகத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கல்வி, செய்தி ஊடகங்கள் முதலிய மக்களுக்கு பயன் தரும் சில நிறுவனங்களுக்கு (இந்திய மற்றும் அமெரிக்க) பதிப்புரிமைசட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா இவ்வற்றறில் அடங்காது.
- ஆயினும் இந்திய பிரதமர் தனது flickerஇல் வெளியிடும் படிமங்கள் பொதுவகத்தில் ஏற்றுவதற்கு தகுந்த பதிப்புரிமை உடையது என்பதை குறிக்க விரும்புகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 11:48, 23 நவம்பர் 2014 (UTC)
விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:21, 23 நவம்பர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Jayarathina/தொகுப்பு05!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
உதவி
தொகுவணக்கம். கனக்சிடம் நான் கேட்டிருந்த உதவியும் அதற்கு அவரளித்த பதிலையும் கீழே தந்துள்ளேன். இது குறித்து ஆவன செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:02, 4 சனவரி 2015 (UTC)
- நூல்கள் குறித்த சில கட்டுரைகளில் (உதாரணத்திற்கு வேங்கையின் மைந்தன் (புதினம்), கள்ளோ காவியமோ (நூல்), மேலும் பல) உள்ள தகவற்பெட்டியினால் பகுப்பில் "Infobox book image param needs updating" என சிவப்பு இணைப்பில் காணப்படுகிறது. சரிசெய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:11, 3 சனவரி 2015 (UTC)
- Booradleyp: இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். மேலும், ஒவ்வொரு கட்டுரையிலும் திருத்தங்கள் மேற்கொள்வது கடினம். தானியங்கி இயக்குபவர்கள் இதனைச் செய்யலாம்., ஆனாலும், வார்ப்புருவைத் திருத்தினால் சிலவேளை சரியாக இருக்கும். நீச்சல்காரன், ஜெயரத்தினா சரிசெய்ய முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:19, 3 சனவரி 2015 (UTC)
- ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:50, 4 சனவரி 2015 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:54, 5 சனவரி 2015 (UTC)
பொதுவகத்திற்குப் படிமம் நகர்த்தல்
தொகுஇவ்விரு படிமங்களையும் ஆவியில் இருந்து பொதுவகத்திற்கு நகர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தொடங்கிய கட்டுரைகளில் அவை தேவைப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 15:27, 7 சனவரி 2015 (UTC)
- ஆயிற்று Pythagorean theorem.gif என்பது Pythagorean theorem - Ani.gif எனும் பெயரில் உள்ளது.--AntonTalk 18:32, 7 சனவரி 2015 (UTC)
உடனடியாக நகர்த்தித் தந்தமைக்கு நன்றி, Anton.--Booradleyp1 (பேச்சு) 04:33, 8 சனவரி 2015 (UTC)
Hi my friend, and thank you very much for this page!!! Rei Momo (பேச்சு) 09:35, 9 பெப்ரவரி 2015 (UTC)
பாராட்டு
தொகுஅதியமான் நெடுமான் அஞ்சி கட்டுரையில் யானையைக் குளிப்பாட்டும் பொருத்தமான ஆவணப் படம் ஒன்றை இணைத்தமையைப் பாராட்டி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:02, 10 பெப்ரவரி 2015 (UTC)
- @Sengai Podhuvan: மன்னிக்கவும் ஐயா, அதை இணைத்தது திரு. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி ஆவார். அவருக்கே இப்பாராட்டு உரியது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:53, 10 பெப்ரவரி 2015 (UTC)
படிமம் நகர்த்தல்
தொகுhttps://en.wikipedia.org/wiki/File:SpiekerCenter.svg -இந்தப் படிமத்தைப் பொதுவகத்திற்கு நகர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:32, 20 பெப்ரவரி 2015 (UTC)
- ஆயிற்று--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:59, 20 பெப்ரவரி 2015 (UTC)
நன்றி | ||
{{{1}}} |
--Booradleyp1 (பேச்சு) 11:27, 20 பெப்ரவரி 2015 (UTC)
புதிய நிருவாகிகள் பரிந்துரை
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:33, 28 மார்ச் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
தொகுPlease register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:34, 7 மே 2015 (UTC)