விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு09

techtamil.in/tag/

தொகு

மாஹிரின் techtamil குறித்த தலைப்புக்கள் தொடர்பாக தமிழ் வலைப்பதிவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துத்தருகிறது. ஆனால் பக்கத்துக்குப் பக்கம் techtamil க்கான வெளி இணைப்பு அவசியமா? பயனர்களின் கருத்து வேண்டப்படுகிறது.

மேலும் இதனைப் பாருங்கள்

  • http://techtamil.in/tag/இசை - இப்பக்கத்தில் உள்ள ஒரு தலைப்பு - தெருநாய்களைக் கொல்வதால் வணிகம் பாதிக்கும் - இதற்கும் இசைக்கும் என்ன தொடர்பு?
  • நாளை நமதே பற்றித் தமிழ் வலைப்பதிவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்?

மாஹிரின் முயற்சி மிகப் பயனுள்ளதொன்று. ஆனால் அதனை விக்கிபீடியாவில் வெளியிணைப்புக்களாகப் பயன்படுத்துவது பொருத்தமில்லை. குறித்த வலைத்தளம் பற்றி விளக்கமான கட்டுரை சேர்ப்பது பொருத்தமானதென்பது எனது அபிப்பிராயம். நன்றி. --கோபி 19:57, 23 மே 2007 (UTC)[பதிலளி]


வலைப்பதிவர்கள் பொருத்தமற்று வகைப்படுத்துவதெல்லாம் கூட விக்கிபீடியா வெளியிணைப்பில் காட்சியளிக்கும். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. நாளை நமதே கட்டுரை ஒரு திரைப்படம் தொடர்பானது. ஆனால் techtamil க்கான வெளியிணைப்பு கட்டுரைக்குத் தொடர்பற்ற வலைப்பதிவிற்கு இட்டுச் செல்கிறது. இத்தகைய பிழைகளுக்கெல்லாம் விக்கிபீடியா பொறுப்பேற்க முடியாது. மேலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றையும் நம்பகமான தகவல் தருபவை என்று கொள்ள முடியாது. ஆதலால் techtamil இணைப்புக்கள் விக்கிபீடியாவில் வெளியிணைப்புக்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது என் அபிப்பிராயம். நன்றி. கோபி 20:20, 23 மே 2007 (UTC)[பதிலளி]


பக்கத்துக்குப் பக்கம், பல பக்கங்களில் இத்தளத்துக்கான இணைப்பு இருப்பது, அதுவும் அத்தள நிர்வாகியே சேர்ப்பது, விக்கிபீடியா கொள்கைகளுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இதை விளம்பரம், spammingஆக கருத இடமிருக்கிறது. techtamil பக்க உள்ளடக்கம் மாறிக் கொண்டே இருப்பது. அதை நம்மால் உறுதிப்படுத்த இயலாது. இசை குறிச்சொல் பக்கத்தில் பிழையான இடுகைகள் வருவதற்குக் காரணம், அதை வகைப்படுத்திய வலைப்பதிவரோ பிறரோ தவறாக வகைப்படுத்தியது தான். தளத்தின் நிரலுக்குத் தவறா சரியா என்று தெரியாது. இத்தளம் குறித்து தனிக்கட்டுரைப் பக்கம் தரும் அளவுக்கு இன்னும் notability வரவில்லை என்று கருதுகிறேன். ஏற்கனவே தரப்பட்டுள்ள இணைப்புகளை நீக்கலாம்--ரவி 20:12, 23 மே 2007 (UTC)[பதிலளி]

எனது கருத்தும் அதுவே.--Kanags 21:25, 23 மே 2007 (UTC)[பதிலளி]

இணைப்பை கொடுப்பதற்கு முன் ஆலமரத்தடியில் விவாதிக்கலாமென்றிருந்தேன்...நான் இவ்வகையில் (spamming) யோசித்திருக்கவில்லை. தவறுக்கு வருந்துகிறேன்.. --மாஹிர் 24 மே 2007

தொடுப்புகளை நீக்கிவிட்டேன்.... இந்த பக்கத்தை நீக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....நன்றி --மாஹிர் 24 மே 2007

மாஹிர், விக்கிபீடியா உரையாடல்களை நாங்கள் நீக்குவதில்லை. இந்த உரையாடல் அப்படியே இருக்கட்டும். ஒன்றும் பிரச்சினையில்லை. நீங்களே முன்வந்து இணைப்புகளை நீக்கியதற்கு நன்றி.--ரவி 09:43, 30 மே 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியா பற்றிய தவறான புரிதல்

தொகு

போகிற போக்கில் விக்கிபீடியா பற்றியும் தமிழ் விக்கிபீடியா பற்றியும் மேம்போக்கான பொய்க் கருத்துகள் பரவுவது கவலைக்குரியது. அகத்தியர் குழுவில் அண்மையில் வந்த மடல்:

The message is:


http://groups.yahoo.com/group/agathiyar/message/42533


இரண்டுநாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த இளைஞர் ஒருவர் இணையத்தில் நிலவும் தமிழ்த்தளங்கள், பக்கங்கள் முதலியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தமிழ் விக்கிப்பீடியா சம்பந்தமாகவும் பேச்சு வந்தது. அவர் அப்போது சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி கொடுப்பதாய் இருந்தாது.

"தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் தகவல்களில் இருபதினாயிரம் தவறுகள் இருக்கின்றனவாமே?" என்று கேட்டார். இந்த இடத்தில்தான் அதிர்ச்சியே. சமீபத்தில்தான் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கங்கள் பத்தாயிரத்தை எட்டின என்று சிறீதரன் எழுதியிருந்தார். அப்படியானால் ஒவ்வொரு பக்கத்துக்கும் சராசரி இரண்டு தவறுகள் விழுகின்றன. முதலில் ஒரு கேள்வி. இந்தத் தகவல் உண்மையா? அப்படியானால் அந்தத் தவறுகள் எப்படி ஏற்பட்டன? அல்லது ஏற்படுத்தப்படுகின்றனவா? அந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? இப்படி தவறுகள் மலிந்திருந்தால் அந்தத் தகவல்களின் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? எதை வைத்து அந்தத் தகவல்கள் உண்மை என்று நம்புவது? அந்தத் தகவல்களில் எவை எவை உண்மையானவை என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது ஒரு சாதாரண விஷயமல்ல.

ஜெயபாரதி

இதற்கு நான் அளித்துள்ள பதில்:

I got an intimation about this message from my friend. I could not read the group messages in TSCII and I also don't know how to write in TSCII. so, i apologise for this mail in english.

now regarding the mail:

The allegation that tamil wikipedia has 20,000 errors is completely baseless. There has been no study conducted on tamil wikipedia to come to such a conclusion. There was a study on english wikipedia by Nature magazine and it found that english wikipedia is on par with Encyclopedia Brittanica.

Please see - http://www.nature.com/news/2005/051212/full/438900a.html

In tamil wikipedia, we work in close coordination with other language wikipedias, online and offline encyclopedias, reference works and take extreme care to cross-check the correctness of facts presented. I do not deny there may be typos, minor mistakes in some articles but to make a wild statement like the above is completely unacceptable.

If someone makes such statements please ask them to provide the proof instead of spreading rumours. And if there is a major mistake in any article, instead of publicizing it, please try to correct that article. Because, wikipedia is written by me and you and everyone and it gives an equal chance to contribute. That will be the right attitude to take part in an open and colloborative movement for Tamils than to blame and dismiss it and have nothing at all.

Thanks.

Ravishankar,

இணையத்தில் பல்வேறு குழுமங்களிலும் இயங்கும் விக்கிபீடியர்கள் இது போன்ற தவறான புரிதல்களை கவனித்து எதிர்கொள்ள வேண்டுகிறேன்.--ரவி 09:43, 30 மே 2007 (UTC)[பதிலளி]
நன்றி ரவி. மயூரநாதனும் அக்குழுவில் விடை பகர்ந்துள்ளார். மயூரநாதன் சொல்வதுபோல பிழைகளை எண்ணுமொருவர் இலகுவாகத் திருத்தமுடியும். நான் ஓப்பீடி ஒன்றைச் செய்வதற்காக இலங்கை National Institute Of Education வெளியிட்ட ஒரு கணினி மற்றும் கணிதம் சம்பந்தமான இரண்டு புத்தகங்களில் ஒரு எழுந்தமானமான பக்கத்தைச் சோதித்தபோது இரண்டு பக்கங்களிலும் பிழைகள் இருந்தன. அப்படியே நான் கண்டுபிடித்தாலும் திருத்துவதற்கு யாதொரு வழியும் இல்லை. Nature இன் ஆங்கில விக்கிபீடியா ஆய்விலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கேற்ப கட்டுரையை ஆய்வுசெய்யும் போது அதன் அளவையும் கருத்திற் கொள்ளவேண்டும். இப்போதுள்ள கலைக்களஞ்சியங்களில் ஆங்கில விக்கிபீடியாவே அளவில் பெரியது. எனவே பிழைகளும் கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது (More Work More Problem) கட்டுரைகளை விகிதாரப்படி ஆய்வுசெய்வதே சாலப்பொருத்தமானது. ஏற்கனே பேராசிரியர் செல்வா தெரிவித்த கருத்துக்களை பிரதிசெய்து அவரது பெயரையும் குறிப்பிட்டு National Institute of Education அனுப்பியுருந்தேன் எனக்கு இதுவரை கிடைத்ததென்றோ அல்லது என்னுடைய கடிதங்கள் வாசிக்கப்படதென்றோ இதுவரை அறியேன். விக்கிபீடியாவில் எவராது பிழையாகத் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தால் தாராளாக யாருமே பிழைதிருத்தலாம். "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பதைப் போலக் கூடுதலான பயனர்கள் வரும்போது விக்கிபீடியா மேலும் வளர்ச்சியடையும். தமிழ் விக்கிபீடியா 10, 500+ கட்டுரையை அடைந்திருந்தாலும் இன்னமும் பங்களிப்பவர்கள் தொகை சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவே. விக்கிபீடியா அறுகுபோல் பரவி ஆல்போல் தழைக்கவேண்டும் என்றால் பங்களிப்பவர்கள் நிச்சயமாக அதிகரிக்கவேண்டும். தமிழர்கள் "வாய்ச்சொல்லில் வீரர்களாக இல்லாமல்" தமது ஓய்வுநேரத்தை சிறந்தமுறையில் செலவிட்டு எதிர்காலச் சந்ததியினரை "தமிழனென்று சொல்லித் தலைநிமிர வைக்கவேண்டும்". "காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப்பெரிது என்ற வள்ளுவர் வாய்மொழிக்கமைய" இன்றே விக்கிபீடியாவில் இணைந்து நன்றே செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --Umapathy 09:45, 2 ஜூன் 2007 (UTC)

Wikimedia Commons

தொகு

Please help with translation page commons:முதன்மைப் பக்கம். ~ putnik 07:51, 1 ஜூன் 2007 (UTC)

தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழக வரலாறு

தொகு

எது மிகப் பொருத்தம்? ஒன்றை மட்டும் பரிந்துரைக்க. நன்றி. --Natkeeran 23:09, 1 ஜூன் 2007 (UTC)

தமிழ்நாடு வரலாறு என்று எழுதுவது பிழை. தமிழக வரலாறு என்றே எழுதலாம் என்பது எனது கருத்து. Mayooranathan 03:25, 2 ஜூன் 2007 (UTC)
தமிழ்நாட்டு வரலாறு - என்பதும் பொருத்தமே--ரவி 09:59, 2 ஜூன் 2007 (UTC)

தமிழ்நாட்டு வரலாறு என்பதும் தமிழக வரலாறு என்பதுமே மிகச் சரியானவை. தமிழ்நாடு வரலாறு என்பது பிழையே. அதுபோலவே தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மக்கள் என்பதெல்லாமும் பிழையே. இவை திருத்தி அமைக்கப்பட்டால் தமிழுக்கு நலம்.--சுப.நற்குணன் 18:24, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்குணன், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த காலத்திலேயே இது பற்றி விரிவாக தமிழ்நாட்டில் கருத்தாடினார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு என்பது வேறு ஒரு கோணத்தில் எழுதுவதாகும், தமிழில் இது தவறுதான். மிலாடு என்று ஒரு நாட்டின் பெயர் இருந்தால் அதனை மிலாடு அரசு என்று எழுதினால், அந்நாட்டின் பெயர் திரியாமல் இருக்கும் என்பது கருத்துப்போக்கு. இது பற்றி நன்கு உரையாடலாம், ஆனால் அரசுதான் சரி செய்ய வேண்டும்!! இயற்பியல் என்று மிக முக்கியமான ஒரு துறையின் பெயரும் மிகத்தவறுதலாக அமைத்துள்ளனர். இவற்றையெல்லாம் திருத்துவதுதான் முறை. ஆனால் உங்களைப்போலவும், ஒஅலரும் துணிய வேண்டும். --செல்வா 17:29, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மே 15, 2007 புள்ளிவிபரங்கள் தொடர்பான சில அவதானங்கள்

தொகு
  • 75% கட்டுரைகள் அரை கிலோபைட் அளவை விடப் பெரியவை. இதனை ஓராண்டின் முன் (2700 கட்டுரைகள் இருந்தபோது) 59% ஆக இருந்தமையுடன் ஒப்பிடுகையில் புதிய கட்டுரைகளில் கிட்டத்தட்ட 80% ஆனவை 0.5kBயை விடப் பெரியனவாகவே உருவாக்கப்படுகின்றமை புலப்படுகிறது.
  • ஆனால் இரண்டு கிலோபைட் அளவை விடப் பெரியவை 12% மட்டும்தான். இது தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. ஆக புதிய கட்டுரைகள் பெரும்பாலும் சிறு அறிமுகங்களாக மட்டுமே அமைகின்றன. விரிவான கட்டுரைகள் அரிதாகவே உள்ளன.
  • கட்டுரைகளின் சராசரி அளவு 1288 பைட். முன்னைய புள்ளிவிபரங்களில் தரப்பட்ட அளவுகளிலிருந்து இப்போதைய அளவுகள் மாறுபடுகின்றன. (எடுத்துக்காட்டாக பழைய பட்டியலில் சனவரி 2007 க்கான சராசரி 4148. இப்பட்டியலில் சனவரிச் சராசரி 1415.) ஆனால் இப்போதுள்ள முறையே சரியானதாகப் படுகிறது.
  • சிலகாலங்களின் முன்னர் ஆர்வமாகப் பங்களிக்கத் தொடங்கிய சில பயனர்கள் பங்களிப்பதை நிறுத்தியுள்ளார்கள். விஜயசண்முகம், பாலாஜி, Nmadhubala, அகத்தியன், viruba, மேமன்கவி போன்றோர் அவர்களிற் சிலர்.
  • TrengarasuBOT மிக வேகமாக இயங்கி வருகிறது. பாராட்டுக்கள் டெரன்ஸ்.

கோபி 02:06, 5 ஜூன் 2007 (UTC)

ஒற்றுப் பிழைகள்

தொகு

விக்கிபீடியாவில் பல இடங்களில் ஒற்றுப் பிழையைக் காண்கிறேன். எடுத்துக் காட்டாக 'பக்கத்தை சேமிக்கவும்', 'மாற்றங்களை காட்டு' என்று உள்ள பொத்தான்களில் முறையே ச், க் ஆகியவை சேர்ந்து, 'பக்கத்தைச் சேமிக்கவும்' என்றும் 'மாற்றங்களைக் காட்டு' என்றும் இருக்க வேண்டும். திருத்தங்களை எந்த இடத்தில் தெரிவிப்பது என்பதைச் சொல்லவும். ஒற்றுப் பிழையைத் தவிர்ப்பதற்கான கையேடு ஒன்று விக்கியில் உள்ளதா அல்லது உருவாக்கப்பட வேண்டுமா? உருவாக்க வேண்டும் என்றால் நான் உதவுகிறேன். ஆனால் பக்கத்தை உருவாக்குவதில் எனக்கு உதவி தேவைப்படும், --ஹரி கிருஷ்ணன் 03:24, 5 ஜூன் 2007 (UTC)

ஹரி கிருஷ்ணன், செய்ய வேண்டிய ஒரு பெரும் திருத்தம். தாங்கள் அருள்கூர்ந்து உதவுங்கள்! நானும் என்னைப்போல் பலரும் ஒரு கையேடு எழுதவேண்டும் என எண்ணி இன்னும் எழுதாமல் இருக்கின்றது.உங்களைவிடச் சிறந்தவர்கள் இந்த கையேட்டை எழுத இருப்பது அரிது. இயன்றால் எழுதுங்கள். வலையில் பல இடங்களில் பல கருத்துக்கள் இருந்தாலும், இங்கே, உங்களைப்போன்ற அறிஞர்கள் இடுவது த. வி-க்குப் பெருமை சேர்க்கும். நன்றியுடையவர்கள் முன்னணியில் நான் இருப்பேன் --செல்வா 15:31, 5 ஜூன் 2007 (UTC)
ஒற்றுப் பிழைகளுக்கான கையேடு மிகவும் அவசியம். அத்தோடு தமிழ் இலக்கணைக் கையேட்டையும் விரிவாக்கி தந்தால் நன்று. என்னைப்போன்ற தமிழ் மாணவர்கள் பலர் மிகவும் நன்றியுடையவர்களாய் இருப்போம். தொலைநோக்கில் த.வி வில் கட்டுரை ஆக்கத்துக்கு இது மிகவும் ஆணித்தரமாக இருக்கும். --Natkeeran 01:48, 6 ஜூன் 2007 (UTC)

பயனர் பேச்சு/உரையாடல் பக்கம்

தொகு

விக்கிபீடியாவின் சிறப்புகளில் ஒன்று தேவைப்படும்பொழுது சேர்ப்பதும் நீக்குவதுமாகும். அதையே பயனர் பேச்சு போன்ற பக்கங்களிலும் சேர்ப்பதும் நீக்குவதும் முடிகிறது.

பயனர் பேச்சு/உரையாடல் பக்கங்களில் தன்னுடைய கருத்துக்களை சேர்த்துவிட்டு பிறகு அவை தேவையில்லை என்று நீக்குவதால் பயனரின் நன்பகத்தன்மை/தரம் குறைய நேரிடுமா? பயனர் பேச்சு/உரையாடல் பக்கங்களில் எதை/எப்படி எழுதுவது என்று "அறிவுரைகள்" பக்கம் உருவாக்கலாமே?

உங்களுடைய கருத்துக்களை எழுதுங்களேன். --மாஹிர் 08 ஜூன் 2007

மாஹிர், பொதுவாக விக்கிபீடியாக்களில் வெற்றுப் பக்கங்கள் தவிர வேறு எந்தப் பக்கங்களையும் நீக்குவதில்லை. உரையாடல்களை நீக்குவதும் கிடையாது. தற்போது பொருத்தமில்லாத உரையாடல் என்றால் கூட அதன் மேல் கோடிட்டு அடித்துக் காட்டுவதே வழக்கம். இதற்கு strike markup பயன்படும். எடுத்துக்காட்டுக்கு, தேவையில்லாத இந்த வரியை இப்படி அழிக்கலாம்.--ரவி 09:30, 8 ஜூன் 2007 (UTC)

நன்றி ரவி --மாஹிர் 08 ஜூன் 2007

இந்த மாதத் துப்புரவு

தொகு

போன ஆண்டு ஒவ்வொரு வாரம் அல்லது மாதமும் கூட்டு முயற்சிக் கட்டுரை என்று ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். தற்போது அதற்கு அவ்வளவு பங்களிப்பு இல்லாததால் கைவிடப்பட்டிருக்கிறது. அதே வேளை, தமிழ் விக்கிபீடியாவில் பல வகைகளில் துப்புரவு தேவைப்படுகிறது. இதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட வகையில் துப்புரவு செய்யலாமா? எடுத்துக்காட்டுக்கு, இந்த மாதத்தைக் கட்டுரைகளில் எழுத்துப் பிழை மாதமாக அறிவித்து பிழைகளைக் களைய முனைவோமா? அடுத்தடுத்த மாதங்களில் தமிழாக்கம், குறுங்கட்டுரை விரிவாக்கம், படிமம் இணைப்பு, விக்கியிடை இணைப்புகள், வெளியிணைப்புகள், பகுப்பு இடல் என்று துப்புரவுக் கவனிப்பைத் தொடரலாம். --ரவி 09:30, 8 ஜூன் 2007 (UTC)

நல்ல யோசனை தான் ரவி. செய்யலாம்.--Sivakumar \பேச்சு 11:25, 8 ஜூன் 2007 (UTC)

Wikimedia Election Notice

தொகு

If you are able, please translate this notice to as many possible languages and post it anywhere applicable.

The Wikimedia Election Committee is accepting candidates for the 2007 Wikimedia Foundation Board of Trustees election. Please see [1] for more information.

There is still time for a new candidate to be considered for election, and you may now endorse the candidate of your choice (up to 3 candidates) on the endorsements page, [2]. Please read the instructions carefully prior to endorsing. If you can translate the instructions, please do.

If you have any questions, please contact any member of the election committee, who are listed here [3].

Posted on behalf of the Election Committee,
Philippe

English Wikipedia is biased against Tamils

தொகு

In March there was a debate about deletion of "Tamil Americans" on English Wikipedia on the reason that Tamils were not an ethinic group. Some of you expressed your views and the consensus was keep: http://en.wikipedia.org/wiki/Wikipedia:Categories_for_discussion/Log/2007_March_9#Category:Tamil_Americans

Now with no discussion the category has been deleted, and the contents have been moved to Indian Americans and Sri Lankan Americans.

http://en.wikipedia.org/w/index.php?title=Special:Log/delete&page=Category:Tamil_Americans

This was done by the user Bakasuprman who removed the category from all pages and then said it should be deleted as an empty category! See his contributions for 22nd July around 5 p.m.

http://en.wikipedia.org/w/index.php?title=Special:Contributions&offset=20070622213411&target=Bakasuprman

Now he is trying to do the same thing with Canadians of Tamil descent. See how many people he manages to find to agree with him. Basically Wikipedia is going to take the official position that we cannot be categorised as a single ethnic group and there is nothing we can do about it! Expatriate Tamils cannot be categorised as Tamils for Wikipedias purposes, but must be expatriate Indians or Sri Lankans!

Why can't we do anything about it? Because there is an army of Kannada and Sinhalese editors and some Indian nationalists like Bakasuprman who are being supported by the senior administrator and arbitrator Blnguyen. Blnguyen has been teaming up with Sinhalese editors to remove all references to TamilNet and Tamilnation from articles on Tamils because they are biased, while leaving links to extremist Sinhalese sites like spur and lankadiva intact. He has refused to accept any compromise on TamilNet, and he has taken the support of Kannada editors to say that he has a consensus in his favor. See the discussion here:

http://en.wikipedia.org/wiki/Wikipedia_talk:Reliable_sources#Sri_Lanka_related_sources

The "neutral" people he is talking about are people like Sarvagnya! Until some weeks ago I did not even know who this user was, but I looked at his contributions during this debate and it is very clear that he has a strong anti-Tamil bias, and along with other Kannada editors is deliberately trying to destroy all Tamil-related articles. Look at how they have been targetting all these articles about Tamil history:

Even articles about religion and temples do not escape their wrath! See how they have been defacing the article about Temples in Tamil Nadu! Even after Tamil editors explain things on the Talk page, they refuse to discuss and simply continue their behaviour!

These same users are active in collaboration with Sinhalese editors to deface articles about the Eelam Tamils[4], [5],[6],[7] and yet Blnguyen can shamelessly claim they are "neutral"! Also see how he unblocked Bakasuprman[8]. Blnguyen's behaviour is even worse. He maliciously revealed the true identity of a Sri Lankan Tamil editor who had changed his username because he was afraid of threats for his life, and refused to accept that he had done anything wrong. Because he is an arbitrator and has high status, everybody assumes he can do no wrong, "Oh, he is such a respected editor, he cannot be doing such things, it must be your mistake!"

If we go to administrators, they say "This is a content dispute, go to dispute resolution", but how will dispute resolution work? These people don't want to resolve any disputes, they want to destroy all articles about Tamil because they hate Tamil and cannot accept the truth about it. And even the arbitrators like Blnguyen are involved. How will other arbitrators accept allegations about one of their fellows??

How can we hope to edit and convey true information when we are faced with shameless opposition at this level? How can we overcome this bias when it comes from Wikipedia's instituions? Should we just give up and publicise that we Tamils will no longer cooperate with the English Wikipedia, and hope that a drastic action like that will bring people to their senses so they see what the reality is becoming??

I am posting this anonymously because I am afraid that I will be targetted like the other Sri Lankan Tamil editor was by having my personal details revealed! -- 81.169.137.209 16:59, 24 ஜூன் 2007 (UTC)

விக்கிபீடியா ஒரு முற்றிலும் நம்பகமான கலைக்களஞ்சியமாக எப்பொழுதும் உருவாகப் போவதில்லை. குறிப்பாக சமய, சமூக, அரசியல் தளங்களில் பக்கச் சார்பான கருத்துக்களே தொடர்ந்தும் காணப்படும். தகவல்கள் கூட தேவைக்கேற்ப மிகைப்படுத்தலும் இருட்டடிப்பும் செய்யப்படும். இவை தவிர்க்க முடியாதவை. அதிகம் பேசத் தெரிந்தவர்கள், வாதிடத் தெரிந்தவர்கள் தமது உண்மைகளே உண்மையான உண்மைகள் என எப்பொழுதும் நிறுவிக் கொண்டே இருப்பார்கள். உண்மைகள் எப்பொழுதும் கட்டமைக்கப்பட்டவையே. அவை காலப்போக்கில் பரவலாக நம்பப்படவும் வாய்ப்புக்கள் அதிகம்.

தமிழ், தமிழர் சார்ந்து தகவல்களையும் ஆதாரங்களையும் தரும் தளங்கள் இணையத்தில் எத்தனை உள்ளன? கூட்டுப் பொறுப்புணர்வுடன் இணைந்து செயற்படுதல் தமிழ் இணையச் சூழலில் எவ்வளவு தூரம் சாத்தியமாகி உள்ளது? எம்முன் உள்ள கேள்விகள் ஏராளம்.

--கோபி 19:07, 24 ஜூன் 2007 (UTC)

மேற் கண்ட பிரச்சினைகளுக்குச் சுலபமான குறுகிய காலத் தீர்வு என்று எதுவும் கிடையாது. விக்கிபீடியா மட்டுமன்றித் தகவல்களையும், செய்திகளையும், வெளியிடும் ஊடகங்களாயினும், அறிவுசார் கட்டுரைகளையும் நூல்கள்களையும் வெளியிடும் தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களாயினும் தங்களுடைய கருத்துக்களுக்குத் தக்கபடி பக்கச் சார்பாகத்தான் நடந்து கொள்கின்றனர். இது எல்லா மட்டங்களிலும் நடந்துகொண்டு வருவதை நாங்கள் அவதானிக்கலாம். வலிமை உள்ளவர்கள், வல்லரசு நாடுகள் உட்பட பல்வேறு நிறுவனங்களைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு தங்களுக்குச் சார்பான வெளியீடுகளுக்குப் பரிசுகளும், விருதுகளும் கொடுத்து எழுப்பி விடுவதை அவதானித்ததில்லையா? உலகம் எப்பொழுதுமே பக்கச் சார்பானதாகவும், பாகுபாடு காட்டுவதாகவுமே இருந்துவருகிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால். இந்நிலையில் நமது நலன்களைப் பேணுவதற்குத் தொடர்ச்சியாகப் போராடத்தான் வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. இதற்கு நாங்களும் எங்கள் மொழியும் வலிமை பெறவேண்டும். தமிழ் உலகில் 18 ஆவது பெரிய மொழி. அம்மொழியைப் பேசுகிறவர்களாகிய தமிழரும் உலகின் பெரிய இனங்களில் ஒன்றுதான். இந்தத் தகுதியை மற்றவர்கள் எங்களுக்குத் தரவேண்டியதில்லை. நாங்களே எடுத்துக்கொள்ளுமளவுக்கு வளர்ச்சி பெறவேண்டும். எதற்கும் பயந்து ஓடவேண்டியதில்லை. ஆயினும், நான் முன்னரும் பலதடவை குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தமிழருக்கான விரிவான கலைக்கழஞ்சியம் தமிழ் மண்ணிலேதான் உருவாகவேண்டும். எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அரசியல் தலையீடின்றி வளர்க்கப்படக்கூடியதாக இருக்கவேண்டும். உலகின் எந்தக் கலைக்களஞ்சியத்துடனும் போட்டிபோடக்கூடியதாக இருக்கவேண்டும். ஏராளமான கணினித் துறை வல்லுனர்களையும், போதிய வளங்களையும் கொண்ட தமிழ் நாட்டில் இதைச் செயற்படுத்துவது சாத்தியமானதுதான். Mayooranathan 20:17, 24 ஜூன் 2007 (UTC)

மயூரனாதன், தமிழர் குறித்த உண்மைகளை நிலைநாட்டும் தரமான கலைக்களஞ்சியத்தைத் தமிழிலிலோ ஆங்கிலத்திலோ தமிழ்நாட்டில் இருந்து உருவாக்க இயலும் தான். ஆனால், அது நிறைவேறும் வரை, ஆங்கில விக்கிபீடியா போன்ற வலிமை வாய்ந்த ஊடகங்களில் தமிழர் குறித்த அபத்தக் கருத்துக்கள் வெளிவருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கமுடியாது. மேலுள்ள அடையாளம் காட்டாத பயனர் சொன்ன மாதிரி பக்கம் பக்கமாகச் சென்று தமிழர்கள் இப்பக்கதைப் புறக்கணிக்கிறோம் என்று எழுதுவது நடைமுறைச் சாத்தியமற்றது. இப்படி குழு சேர்ப்பது விக்கிபீடியா கொள்கைகளுக்கு உடன்படாமலும் இருக்கலாம். தவிர, சரியான கருத்துக்களைக் கொண்டு சேர்க்க வாய்ப்புள்ள ஒரு ஊடகத்தை நாமே முடக்கி வைத்தது போல் ஆகிவிடும். ஆங்கில விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கக்கூடிய தமிழர் இடையே ஆங்கில விக்கிபீடியாவுக்குப் பங்களிக்குமாறு விழிப்புணர்வு பரப்புவது ஒரு தீர்வு. தமிழ் குறித்த ஆங்கில விக்கிபீடியா கட்டுரையில் விசமத் தொகுப்புகள் செய்யப்பட்ட போது நற்கீரன் நம் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து நாம் அங்கு முற்றுகையிட்டு ஏற்கெனவே அது குறித்துத் தன்னந்தனியாகப் போராடி வந்த தமிழ்நாட்டுக் கட்டுரையாசிரியர்களுடன் இணைந்து கொண்ட போது எதிர்த்தரப்பு ஆட்கள் பின்வாங்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே, புறக்கணிப்பை விட மேம்பட்ட பங்களிப்பு தான் தீர்வாக இருக்கும். தமிழ் தவிர, சமயம், நாடு, வரலாற்றுக் கட்டுரைகளிலும் இப்படி குழு சேர்த்து குழப்பம் விளைவிப்பவர்கள் இருக்கிறார்கள். தமிழர் குறித்த கட்டுரைகளில் நாம் தமிழ் விக்கிபீடியாவில் ஒருமைப்பாடு காட்டினாலும் கூட நாளை தமிழ் விக்கிபீடியாவிலும் மதம், வரலாற்றுக் கட்டுரைகளில் குழு சேர்த்துக் குழப்பம் சேர்ப்பவர்கள் வந்து சேர்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து தரமான கலைக்களஞ்சியம் என்ற இலக்குக்கும் அது சோதனையாக இருக்கக் கூடும். இவற்றைக் குறித்து விழிப்புணர்வு, தெளிவான அணுகுமுறையுடன் நாம் இருப்பது அவசியம். --ரவி 20:33, 24 ஜூன் 2007 (UTC)


ஐயா மயூரனாதன் அவர்களே, தங்களின் கருத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். 'தமிழருக்கான விரிவான கலைக்கழஞ்சியம் உருவாகவேண்டும்' என்ற தங்களின் ஆவலில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், அது 'தமிழ் மண்ணில்' உருவாக வேண்டும் என்பதில் மாறுபாடு உண்டு. காரணம், வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் தமிழையும் தமிழரையும் பற்றி இதுவரை தமிழ் மண்ணில் வெளிவந்துள்ள ஆவணங்கள், அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள் என அனைத்தும் முழுமையாகத் தமிழின் அடையாளத்தையும் தமிழர்களின் அடையாளத்தையும் காட்டிவிடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் கீழ்ப்பட்டே தமிழும் தமிழரும் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற எழுதப்படாத சட்டம்தான் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, 'தமிழருக்கான விரிவான கலைக்கழஞ்சியம்' இனி உருவாக வேண்டுமானால் அதில் உலகம்பரவிய தமிழ் அறிஞர்கள், வல்லார்கள், பற்றாளர்கள் என பலருடைய பங்களிப்பும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். ஏனெனில், தமிழ் இன்று தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிமையானதன்று; மாறாகத் தமிழ்க்கூறு நல்லுகத்திற்கும்தான்.--சுப.நற்குணன் 15:57, 24 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியா இணைப்பு பிரச்சினைகள்

தொகு

மயூரநாதனுக்கு த.வி இணைப்பு செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். வேறு யாருக்கும் இந்த பிரச்சினை உண்டா? --Natkeeran 11:36, 30 ஜூன் 2007 (UTC)

மயூரநாதன் http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.ta.wikipedia.org அநாமதேயக் புரொக்கிசியூடாக முயற்சிசெய்துபாருங்கள். தவிர ஆங்கில விக்கிபீடியா வேலைசெய்கின்றதா எனவும் தெரிவிக்கவும். நன்றி. --Umapathy 12:54, 30 ஜூன் 2007 (UTC)
இன்று விக்கிபீடியா இணைப்பு என்னுடைய கணினியில் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய மின்னஞ்சல் கண்டு பதில் எழுதிய நற்கீரன், ரவி, உமாபதி ஆகியோருக்கு எனது நன்றிகள். Mayooranathan 17:03, 1 ஜூலை 2007 (UTC)

Hello everyone! can someone writes an article about Iran's launch of new English TV channel called PRESS TV which claims to be rivaling Anglophone BBC World, CNN International and Qatar base Al Jazeera! for further information please check out English Wikipedia's article at PRESS TV and BBC's article.

Many Thanks

Kattatra Kalaikananchiam - what !?!?!?

தொகு

"So, what really makes me feel happy is that, to me the Tamil wikipedia - is not just a translated site, but a sapling of valuable content that could soon lure all the 75 million native speakers to create a vibrant interesting network in Tamil - My mother tongue."

http://wulfpaw.blogspot.com/2007/05/kattatra-kalaikananchiam-what.html - Wulf Paw --Natkeeran 04:45, 20 ஜூலை 2007 (UTC)

தொகு

I had seen several websites (in english) which utilizing wikipedia topics put few lines of copyright informations...I am just added "Related Tamil wiki topics" in Techtamil.in website. And i put the one line Copyright notice in the bottom of the page....Please let me know is this "one line" notice is enough or I need to put any full copyright information to be available at this website with regards to the usage of wikipedia?

To check at http://techtamil.in/tag/அரசியல்

and can seen in right side.

thanks --Mahir 17:41, 20 ஜூலை 2007 (UTC)

மாஹிர், இணைப்புகள் மட்டும் தருவதற்கு எந்த விதமான பதிப்புரிமைத் தகவலோ நன்றி நவிலலோ தேவை இல்லை. இணைப்புகள் இல்லாமல் இணையம் ஏது :) ? --ரவி 11:53, 21 ஜூலை 2007 (UTC)

பதிப்புரிமை தெரிவிக்க வேண்டிய தருணங்களிலும் குனூ தளையறு ஆவண உரிமம் அல்லது அளிப்புரிமை - GNU GPL என்று கூறுவதே பொருத்தம். wwww.ta.wikipedia.org அல்லது விக்கிபீடியா நிறுவனத்துக்கோ உள்ளடக்கம் சொந்தமானதல்ல. இந்த உள்ளடக்கம் கட்டற்றது. --Natkeeran 12:02, 21 ஜூலை 2007 (UTC)

நன்றி ரவி, Natkeeran, இந்த சிறிய கருவி பட்டையை வேறுவகையிலும் மேம்படுத்த ஆலோசனைகள் இருந்தால் தயவுசெய்து எனக்கு அறியத் தாருங்கள்..நன்றி...--மாஹிர் 16:35, 26 ஜூலை 2007 (UTC)

விக்கிபீடியா, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள பிழைகளைக் குறிப்பிட்டு உதவுகின்றது

தொகு

விக்கிபீடியா, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் இல் உள்ள பிழைகளைக் குறிப்பிட்டு உதவுவதாக http://slashdot.org/articles/07/07/24/0114228.shtml இல் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விக்கிபீடியா:பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள பிழைகள் விக்கிபீடியாவில் திருத்தப்பட்டுள்ளன--Umapathy 13:23, 24 ஜூலை 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியா அறிமுக நிகழ்படம்

தொகு

தமிழ் விக்கிபீடியா அறிமுக நிகழ்படம். இது போல் விக்கிபீடியா வழமையான தொகுத்தல் பணிகளுக்கும் உதவிப் படங்கள் தயாரித்து அளிக்கலாம் என்று இருக்கிறேன். --ரவி 12:31, 25 ஜூலை 2007 (UTC)

ஆய்த எழுத்துப் பயன்பாடு

தொகு

கருத்து தேவை --ரவி 12:33, 25 ஜூலை 2007 (UTC)

அறிவியல் தமிழ் எதிர் அறிவியற் தமிழ்

தொகு

அறிவியற் தமிழ் என்பது அதிகம் பொருத்தமாயிருக்கும்....

மேலே அடையாளம் தராத பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் அறிவியல் தமிழ் என்றும் பரவலாக வழக்கத்தில் இருக்கின்றது. எது கூடிய பொருத்தம். பிற பயனர்களும் கருத்து தெரிவித்தால் நன்று.

--Natkeeran 16:36, 28 ஜூலை 2007 (UTC)

அறிவியிற்றமிழ், அறிவியல் தமிழ் சரி. அறிவியற் தமிழ் என்று வராது என்று நினைக்கிறேன். எளிதாகப் புரிவதற்காக அறிவியல் தமிழ் என்றே சொல்லலாம்.--ரவி 17:47, 28 ஜூலை 2007 (UTC)

அடையாளம் தராத கருத்து என்னுடையது. புகுபதிகை செய்யப் போதிய அவகாசமில்லாத போது எழுதியது. அறிவியல்+தமிழ்=அறிவியற்றமிழ். அறிவியற் தமிழ் என்பது ஓரளவு சரியானதென்பதற்கு ஒத்த உரையாடல் வேறொரு தலைப்புத் தொடர்பில் நிகழ்ந்துள்ளது. அதில் மயூரநாதன், செல்வா அகியோர் கருத்துக் கூறியதாக நினைவு. எந்தப் பக்கம் என்பதை உடனடியாக அடையாளங் காண முடியவில்லை. அறிவியல் தமிழ் என்பது எளிமையாக இருக்கலாம். ஆனால் இயல்பான தமிழ்ப் பாவனையில் இயல்பாக புணர்ச்சி நிகழும். அறிவியல் தமிழ் என்பது மிகச் செயற்கையாக இருக்கிறது - எனக்கு. நன்றி. --கோபி 18:39, 28 ஜூலை 2007 (UTC)

பார்க்க பேச்சு:நீச்சற் குளம். நன்றி. --கோபி 18:44, 28 ஜூலை 2007 (UTC)

அறிவியல் தமி்ழ் என்பது செயற்கையாக இருக்கலாம். ஆனால் அறிவியற்தமிழ் என்பது தமிழ் இலக்கணத்தை மீறியது. அப்படியானால் இலக்கணத்தை மீறித்தான் அறிவியற்தமிழ் என எழுதவேண்டும். இப்போதைக்கு ல் + த் புணர்ச்சியைத் தவிர்ப்பது பொருத்தம் போலுள்ளது. (காவல்துறை, அரசியல்துறை, பொருளியல்துறை...) இலக்கணத்தை மீறிப் புணர்த்துவதைவிட புணர்த்தாமல் இருப்பது மேலென்பது என் கருத்து.

இதே சிக்கல் தொடர்பாக எனது வலைப்பதிவிலும் வாதம் நடந்தது. காவற்றுறை, அரசியற்றுறை என்பன இருவேறு சொற்களின் கூட்டாகக் கருதாமல், தனிச் சொற்களாகக் கருதப்பட வேண்டுமென ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். எனக்கும் அது சரியாகவே படுகிறது. அறிவியற்றமிழ் என்பதை ஒரு சொல்லாகவே கருதிப் புழக்கத்திற் கொண்டுவந்தால் என்ன? மட்பாண்டம் என்பதை ஒரு சொல்லாகத்தான் பார்க்கிறோம், எழுதுகிறோம். அதை ஒவ்வொரு முறையும் மண் + பாண்டம் என்ற சொற்களின் புணர்ச்சியாகப் பார்ப்பதில்லை. --வசந்தன் 13:46, 15 ஆகஸ்ட் 2007 (UTC)

Uncyclopedia

தொகு

http://uncyclopedia.org/wiki/Main_Page  :) --ரவி 15:24, 29 ஜூலை 2007 (UTC)

ரவி, எதற்காக இந்த இணைப்பைத் தந்துள்ளீர்கள்.--Umapathy 15:57, 29 ஜூலை 2007 (UTC)

ஒரு வேடிக்கைக்குத் தான் :) --ரவி 18:33, 29 ஜூலை 2007 (UTC)

பதிவர் பட்டறை

தொகு

சென்னையில் நம் விக்கிபீடியர் எவராவது இருக்கிறீர்களா? august 5 அன்று பதிவர் பட்டறை ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டு பதிவர்களின் விக்கி குறித்த சந்தேகங்களை நேரடியாகத் தீர்க்க உதவலாம். இதற்கு ஒரு stall / desk ஏற்பாடு செய்யச் சொல்லி என்னால் கேட்கய இயலும்--ரவி 10:09, 31 ஜூலை 2007 (UTC)

ரவி, இயன்றவரை இதைச் செய்தால் நன்று. சென்னையில் த.வி பற்றி அறிமுகப்படுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பம். முயன்று பாருங்களேன். தமிழ்_வலைப்பதிவர்_பட்டறை இந்த விக்கியி த.வி பற்றி ஒரு சிறு குறிப்பு சேர்க்க முடியுமா? அத்தோடு, தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவிலும் இதைப் பற்றி ஒரு குறிப்பு இட்டால் நன்று. நன்றி.

  • ரவி, பயனர்:Amachu இடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு ஈடுபாடு இருக்கலாம்.

--Natkeeran 00:00, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

சொற்கள் சீர்தரப்படுத்தல் அறிவிப்பு 1

தொகு
  1. video - நிகழ்படம்
  2. video clip - நிகழ்படத் துண்டு
  3. video games - நிகழ்பட ஆட்டம்
  4. photography - நிழற்படம், புகைப்படம், ஒளிப்படம்
  5. shortfilm - குறும்படம்
  6. movies, film - திரைப்படம்
  7. animation - இயங்குபடம்
  8. audio - ஒலி- , ஒலிப்பதிவு
  9. blog - வலைப்பதிவு
  10. aggregator - திரட்டி

மேலே தரப்பட்டவை பரவலான வழக்கத்தில் உள்ள சொற்கள்தான். பகுப்படுத்தலுக்காக இங்கு சுட்டப்படுகின்றன. --Natkeeran 22:52, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

நிகழ் படம் என்று வருமா? நிகழ்ப் படம் என்று வருமா?

நிழற்படம் சரியென்றால், நிகழ் + படமும் புணர்த்தப்பட வேண்டுமென்று நினைக்கிறேன். சரியா தெரியவில்லை.--வசந்தன் 13:57, 15 ஆகஸ்ட் 2007 (UTC)

பாட் தகுதி

தொகு
சிவா, உங்கள் பரிந்துரையின் பேரில் தானியங்கி அனுக்கம் வழங்கியுள்ளேன். -- Sundar \பேச்சு 06:16, 13 ஆகஸ்ட் 2007 (UTC)
நன்றி. சுந்தர். நீங்கள் ஆ.வி.யிலும் நிறைய புகைப்படங்கள் பதிவேற்றியுள்ளீர்கள். அவையும் நன்று.--Sivakumar \பேச்சு 10:43, 16 ஆகஸ்ட் 2007 (UTC)

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?

தொகு

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?

ஆங்கில விக்கிப்பீடியா பற்றித்தான் மூலக் கட்டுரை. ஆனால் அங்கு தரப்பட்டிருக்கும் பதிற்குறிகளில் தமிழ் விக்கிபீடியா மீதும் சில குற்ற சாட்டுக்கள் இருக்கு? --Natkeeran 23:47, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியா தகவல்கள் குறித்து இங்கும் சர்ச்சை

தொகு

அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - பகுதி 1அ

எனக்கு பின்புலம் புரியவில்லை. த.வி இடம்பெற்றெருக்கும் தகவல் தவறா? எந்த தகவல்? சுட்டினால், மாற்றலாமே?? --Natkeeran 00:31, 14 ஆகஸ்ட் 2007 (UTC)

நான் இன்றுதான் இந்த செய்தியைப் பார்த்தேன். தமிழ் இணைய வரலாறுதனை (1992ல் இருந்து) நான் ஓரளவிற்கு நேரடியாக அறிவேன். மீண்டும் படித்துப் பார்க்கிறேன், கருத்துக்கள் தெரிவிக்கிறேன். மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கூறியுள்ளது நிறைய உள்ளது!--செல்வா 01:55, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

த.வி தகவல்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்தால் நன்று

தொகு

http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html அன்புள்ள பெயரிலிக்கு.....

தொடர்புள்ள கட்டுரைகள்

தொகு

--Natkeeran 01:18, 14 ஆகஸ்ட் 2007 (UTC)

Infobox and other stuff

தொகு

ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். :)

  • For the past few weeks I have been working on a Indian infobox upgrade. The upgrade allows for new types of places (state, district, village, taluk, national park etc). It adds the new colorful state-level and city-level maps that User:Planemad had developed. See Tamil Nadu and Chennai locator maps. I would really appreciate your help with some translation.
  • How about adding ஆலமரத்தடி to the left-hand side menu bar on வழிசெலுத்தல் section? Thoughts?

Thanks, Ganeshk 15:03, 19 ஆகஸ்ட் 2007 (UTC)

Ganesh, I have received an email from one of the Indian Wikipedian who prefers to have nice map for Andrapradesh (Hope my spelling is ok). I don’t have any resources for India at the moment (specifically the shape file required for ArcGIS or ArcView software) which is required for Mapping.. If I get it I can do that. That is not a problem for me. If somebody would guide (something similar to http://gislanka.googlepages.com/slgrid then I could give a try. Sorry to type in English since I am on middle of some work. --Umapathy (உமாபதி) 16:13, 19 ஆகஸ்ட் 2007 (UTC)
Umapathy, There is a map for Andhra Pradesh already. Regards, Ganeshk 16:34, 19 ஆகஸ்ட் 2007 (UTC)
Ganesh, Thanks for your promptly response. Is there any way to protect http://commons.wikimedia.org/wiki/Image:Gislanka_locator.svg the map since it is used in many articles in Tamil Wikipedia it is likely to expand in future.. Thanks in advance.--Umapathy (உமாபதி) 16:50, 19 ஆகஸ்ட் 2007 (UTC)
Yes to ஆலமரத்தடி to the left-hand side menu bar. As the 4 th link. --Natkeeran 15:22, 19 ஆகஸ்ட் 2007 (UTC)

Betawiki: better support for your language in MediaWiki

தொகு

Dear community. I am writing to you to promote a special wiki called Betawiki. This wiki facilitates the localisation (l10n) and internationalisation (i18n) of the MediaWiki interface. You may have changed many messages here on Wikipedia to use your language for your language profile, but if you would log in to for example the English language Wiktionary, you would not be able to use the interface as well translated as here.

If you wish to contribute to better support of your language in MediaWiki, as well as for many MediaWiki extensions, please visit Betawiki, create an account and request translator priviledges. You can see the current status of localisation of your language on meta and do not forget to get in touch with others that may already be working on your language on Betawiki.

If you have any further questions, please let me know on my talk page on the Dutch Wikipedia. We will try and assist you as much as possible, for example by importing all messages from a local wiki for you to start with.

You can also find us on the Freenode IRC network in the channel #mediawiki-i18n where we would be happy to help you get started.

Thank you very much for your attention and I do hope to see some of you on Betawiki soon! Cheers! Siebrand (Betawiki user page) 17:51, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

Preparation of Fundraiser 2007

தொகு

Hi, this is just a first introduction message to tell you: there is more to come. I am dealing with the Project Management of the Fundraiser 2007 and therefore will search for contacts of wikimedians who can help us to do our tasks on all projects. I am actually also building the structure for the fundraiser on Meta. We will need people who help to design buttons, translate texts of buttons, documents, sitenotices etc. Should you feel you want to co-operate please let me know. You can reach me on my meta user page or by e-mail at scretella (at) wikimedia (dot) org. If you wish to notify us that you would like to co-operate on translations, it would be nice if you used e-mail and copied the e-mail to me and Aphaia (aphaia (at) gmail (dot) com). Thank you for your attention and I hope to meet you soon! Cheers :-) -- 4 September 2007 Sabine

தமிழ் விக்கிபீடியா மறுஎழுச்சி!

தொகு

மீண்டும் தமிழ் விக்கிபீடியா முனைப்புடன் செயல்படத் துவங்கியுள்ளது குறித்து மகிழ்ச்சி. பேரா.செல்வா, சுந்தர், கோபி, நற்கீரன், டெரன்ஸ் ஆகியோர் மீண்டும் பல மடங்கு வேகத்துடன் வெவ்வேறு தளங்களிலும் (கட்டுரை ஆக்கம், நிலைப்படம், நிகழ்படங்கள் சேர்த்தல், துப்புரவு) செயல்பட்டு வருவதும் இடைவிடாது பங்களித்து வரும் கனகர், மயூரநாதன், பேரா.விகே ஆகியோரின் உழைப்பும் மோகன்தாஸ், நரசிம்ம வர்மன் ஆகியோரின் அருமையான பங்களிப்பும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. பணிச்சுமை, இடமாற்றம் ஆகிய காரணங்களினால் தடைப்பட்ட த.வி பணியை மீண்டும் கூடிய விரைவில் துவங்க இருக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்த வேகத்தை நிலைநிறுத்துவோம்.--Sivakumar \பேச்சு 12:29, 7 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மறுஎழுச்சிதான், நானும் சற்று கூடிய முனைப்புடன் செயற்படலாம் என்று இருக்கின்றேன். --Natkeeran 10:56, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
சிவகுமார், இடையறாது உழைத்துவரும் கனகு, மயூரநாதன், பேரா வி.கே அவர்களுடன் நாமும், இன்னும் பலரும், சேர்ந்து நிறைய எழுத வேண்டும். அண்மையில் நான் பெரு நாட்டுக்குச் சென்று இருந்தேன். அங்கு உலகப்புகழ்பெற்ற மாச்சு பிச்சு என்னும் இன்க்கா பேரரசின் அழிவுற்ற நகரத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது எனவே த.வியில் பங்கு கொள்ள இயலவில்லை. ஆண்டீய மலைத்தொடரை நேரில் கண்டு அங்குள்ள பல மலைகளில் ஏறி பல இடங்களைக் கண்டதில் பல புதிய கருத்துக்களும் செய்திகளும் அறியக் கிடைத்தது. அதன் அடிப்படையில் த.வியில் பல கட்டுரைகள் எழுதவும் எண்ணியுள்ளேன். பல புதுப்பயனர்கள் வந்து அருமையாக பல எழுதுவது கண்டு மிகவும் மகிழ்கின்றேன். நன்றாக முன்பு எழுதிவந்த மது, காயத்திரி போன்ற பலரும் ஏனோ இப்பொழுது பங்கு கொள்வதில்லை. பயனர்கள் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு கூட வேண்டும்! டெரன்ஸ் மீண்டும் முனைப்பாக அருமையான கட்டுரைகள் எழுதுவது கண்டு மிகவும் மகிழ்கிறேன். --செல்வா 15:00, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
செல்வா, பெரு நாடு பற்றியும், அங்கிருக்கும் மக்கள் பற்றியும் நேரடி அறிவுடன் கட்டுரைகளைத் தருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். மேலும், அங்கு நீங்கள் எடுத்த படங்களை கட்டற்ற முறையில் த.வியிலும் பொதுவிலும் சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran 15:06, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
இடையறாது வேகத்துடனும் முனைப்புடன் செயற்பட்டுவரும் விக்கிபீடியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நானும் அண்மையில் தனிப்பட்டரீதியாக வவுனியா (படங்களைப் பனாராமியாவில் பதிவேற்றியுள்ளேன் பார்க்க http://www.panoramio.com/user/69195) விற்கு செல்லவேண்டி ஏற்பட்டதாலும் வேறு சில தொழில்சார்ரீதியான மேம்படுத்தல்களை மேற்கொள்ளவேண்டியிருந்ததாலும் பலநாட்களாகப் பங்களிப்பு குறைவாக இருந்தது. மீண்டும் நிச்சயமாகப் புது உத்வேகத்துடன் கட்டுரைகளை என்னால் இயன்றவரை ஆக்கியும் மேம்படுத்தவும் முயற்சிக்கின்றேன். --Umapathy (உமாபதி) 15:12, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
ஆமாம், நற்கீரன், புதுக்கட்டுரைகளும், புதுப் படங்களும் சேர்க்க இருக்கின்றேன். இக்காலத்தில் எண்மிய ஒளிப்படக்கருவிகள் இருப்பதால், மிக எளிதாக 2000 படங்களுக்கு மேல் எடுக்க இயன்றது.--செல்வா 15:19, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
உமாபதி, உங்கள் படங்களைக் கண்டேன்! மிகவும் நன்றாக உள்ளன! உங்கள் நாயன்மார்கள் கட்டுரைகள் மிக அருமையாக இருந்தன. தாங்களும் மீண்டும் முனைப்பாக பங்கு கொளள இருப்பது அறிந்து மகிழ்கிறேன்.--செல்வா 15:26, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
விடுமுறை முடிந்து எடுக்கப்படும் கணக்கெடுப்பில் நாம் அனைவரும் "உள்ளேன் அம்மா/ஐயா" என்று உரக்கக் கூறியுள்ளோம். பாடத்தில் மும்முரம் காட்டுவோம். :-) -- Sundar \பேச்சு 17:45, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
:-) --Natkeeran 17:50, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

குறிப்பில்வழிப் பக்கங்கள் பற்றி

தொகு

பல இணைப்புகள் இருந்தும் ஏன் பல பக்கங்கள் இந்த குறிப்பில்வழிப் பக்கத்தொகுப்பில் உள்ளன?--செல்வா 15:58, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

குறிப்பில்வழிப் பக்கம் என்றால் Random pages என்றுதான் அர்த்தம். அந்த சொல்லின் மூலம் பற்றி தெரியாது. எவ்வளவு பொருத்தம் என்றும் தெரியவில்லை. --Natkeeran 16:18, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

எழுந்தமான அல்லது எழுமாற்றானா என்பதை Random இற்கு நிகராக இலங்கைப் பாடத்திட்டங்களிற் கையாள்கின்றார்கள். இது பொருத்தமாக இருக்கலாம். வேறு நல்ல தமிழ்ச் சொற்கள் இந்தால் நாம் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். --Umapathy (உமாபதி) 16:42, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
விளக்கங்களுக்கு நன்றி. Random pages என்பதை "ஏதாவது ஒரு பக்கம்" ன்று குறிப்பிடலாம் (இது மொழி பெயர்ப்பு அல்ல). Random என்பதற்கு சீருறா என்னும் சொல்லை ஆளலாம். இதுபற்றி விக்சனரி மடற்குழுவில் எழுதி இருந்தேன். சீருறாத் தேர்வு = Random selection/random choice. சீருறா பொறுக்கு என்றும் இதனைச் சொல்லலாம். --செல்வா 20:28, 8 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தொகுக்கும் பக்கத்தில் எப்படி சேர்ப்பது?

தொகு

ஆங்கில விக்கியில், ஒரு பக்கத்தைத் தொகுக்கும் பொழுது, சில நேரங்களில் மட்டுமே தேவைப்படும் ஒலித்திரிபு காட்டும் எழுத்துக்களை இணைத்துள்ளார்கள் (ஒருங்குறியில் உள்ளன). இதனால் எளிதாக ஓலித்திரிபுக் குறி (diacritic), இட்டுக் காட்ட இயலுகின்றது. இதனைத் தமிழ் விக்கியில் எப்படி செயல்படுத்துவது? கீழே உள்ளதைப் பார்க்கவும்.


Insert: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § Sign your username: செல்வா 15:09, 9 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

Symbols: ~ | ¡ ¿ † ‡ ↔ ↑ ↓ • ¶ # ¹ ² ³ ½ ⅓ ⅔ ¼ ¾ ⅛ ⅜ ⅝ ⅞ ∞ ‘ “ ’ ” ¤ ₳ ฿ ₵ ¢ ₡ ₢ $ ₫ ₯ € ₠ ₣ ƒ ₴ ₭ ₤ ℳ ₥ ₦ ₧ ₰ £ ៛ ₨ ₪ ৳ ₮ ₩ ¥ ♠ ♣ ♥ ♦ Characters: Á á Ć ć É é Í í Ĺ ĺ Ń ń Ó ó Ŕ ŕ Ś ś Ú ú Ý ý Ź ź À à È è Ì ì Ò ò Ù ù  â Ĉ ĉ Ê ê Ĝ ĝ Ĥ ĥ Î î Ĵ ĵ Ô ô Ŝ ŝ Û û Ŵ ŵ Ŷ ŷ Ä ä Ë ë Ï ï Ö ö Ü ü Ÿ ÿ ß Ã ã Ẽ ẽ Ĩ ĩ Ñ ñ Õ õ Ũ ũ Ỹ ỹ Ç ç Ģ ģ Ķ ķ Ļ ļ Ņ ņ Ŗ ŗ Ş ş Ţ ţ Đ đ Ů ů Ǎ ǎ Č č Ď ď Ě ě Ǐ ǐ Ľ ľ Ň ň Ǒ ǒ Ř ř Š š Ť ť Ǔ ǔ Ž ž Ā ā Ē ē Ī ī Ō ō Ū ū Ȳ ȳ Ǣ ǣ ǖ ǘ ǚ ǜ Ă ă Ĕ ĕ Ğ ğ Ĭ ĭ Ŏ ŏ Ŭ ŭ Ċ ċ Ė ė Ġ ġ İ ı Ż ż Ą ą Ę ę Į į Ǫ ǫ Ų ų Ḍ ḍ Ḥ ḥ Ḷ ḷ Ḹ ḹ Ṃ ṃ Ṇ ṇ Ṛ ṛ Ṝ ṝ Ṣ ṣ Ṭ ṭ Ł ł Ő ő Ű ű Ŀ ŀ Ħ ħ Ð ð Þ þ Œ œ Æ æ Ø ø Å å Ə ə • Greek: Ά ά Έ έ Ή ή Ί ί Ό ό Ύ ύ Ώ ώ Α α Β β Γ γ Δ δ Ε ε Ζ ζ Η η Θ θ Ι ι Κ κ Λ λ Μ μ Ν ν Ξ ξ Ο ο Π π Ρ ρ Σ σ ς Τ τ Υ υ Φ φ Χ χ Ψ ψ Ω ω • • (polytonic list) Cyrillic: А а Б б В в Г г Ґ ґ Ѓ ѓ Д д Ђ ђ Е е Ё ё Є є Ж ж З з Ѕ ѕ И и І і Ї ї Й й Ј ј К к Ќ ќ Л л Љ љ М м Н н Њ њ О о П п Р р С с Т т Ћ ћ У у Ў ў Ф ф Х х Ц ц Ч ч Џ џ Ш ш Щ щ Ъ ъ Ы ы Ь ь Э э Ю ю Я я IPA: t̪ d̪ ʈ ɖ ɟ ɡ ɢ ʡ ʔ ɸ ʃ ʒ ɕ ʑ ʂ ʐ ʝ ɣ ʁ ʕ ʜ ʢ ɦ ɱ ɳ ɲ ŋ ɴ ʋ ɹ ɻ ɰ ʙ ʀ ɾ ɽ ɫ ɬ ɮ ɺ ɭ ʎ ʟ ɥ ʍ ɧ ɓ ɗ ʄ ɠ ʛ ʘ ǀ ǃ ǂ ǁ ɨ ʉ ɯ ɪ ʏ ʊ ɘ ɵ ɤ ə ɚ ɛ ɜ ɝ ɞ ʌ ɔ ɐ ɶ ɑ ɒ ʰ ʷ ʲ ˠ ˤ ⁿ ˡ ˈ ˌ ː ˑ ̪ • --செல்வா 15:09, 9 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

சிறப்பு:Allmessages என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள். அதற்கு இணையாக ஆங்கில விக்கியிலும் இங்கு செல்லுங்கள். நீங்கள் விரும்பும் பகுதி அங்கு எங்கிருக்கிறது என்று நோக்கினால் இதில் இருக்கிறது என்ற அறியலாம். ஒத்த பக்கமான மீடியாவிக்கி:Edittools-ஐத் தொகுங்கள். -- Sundar \பேச்சு 16:14, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
சுந்தர், மிக்க நன்றி!--செல்வா 17:38, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

அனைத்துப் பயனர் கவனத்துக்கு

தொகு

அண்மைக்காலங்களில் புதிதாக உருவாகும் கட்டுரைகள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. மயூரநாதன், செல்வா. kanags, பேரா.விகே, டெரன்ஸ் உள்ளிட்ட பலரும் புதிதாக மோகன்தாஸ் போன்றோரும் மிக விரிவாகக் கட்டுரைகளை எழுதி வருகின்றீர்கள். உருவாகும் பெரும்பான்மையான கட்டுரைகள் விரிவாக உள்ளன.

ஆனால் பல காலத்தின் முன் உருவான பல கட்டுரைகள் விரிவாக்கப்படாமலேயே உள்ளன. 512 பைட்டு அளவை விடச் சிறியனவாகவே 27% கட்டுரைகள் உள்ளன. ஆனால் குறும்பக்கங்களைப் பார்வையிடும்போது 1% கும் குறைவான கட்டுரைகளே 512 பைட்டை விடச் சிறியவை. காரணம் விக்கியிணைப்புக்கள், வெளியிணைப்புக்கள், தலையங்கங்கள் போன்றவை.

சில வரிகள் சேர்த்தால்கூட கட்டுரைகள் 512 பைட்டு அளவைத் தாண்டி விடும். ஆதலால் மும்முரமாகப் பங்களித்து வரும் பயனர்கள் மனம் வைத்து குறும்பக்கங்களைப் பார்வையிட்டு[9], [10], [11] அவற்றில் உங்கள் ஆர்வத் துறைக் கட்டுரைகளை சற்றேனும் விரிவாக்கக் கோருகின்றேன். இதன்மூலம் த.வி.யின் தரத்தை மேம்படுத்தலாம். மிக்க நன்றி. கோபி 14:05, 11 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

என்னால் இயன்றதை நான் கட்டாயம் செய்கிறேன். இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. நான் தொடங்கிய நீளமான கட்டுரைகளிலும், பல முக்கியமான செய்திகள் இன்னும் சேர்க்கப்படாமலே உள்ளன. தரக்கண்காணிப்பு மிகவும் தேவை. அண்மையில் Mohandoss சில பிழையான செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். அதுபோல கலைய வேண்டியது, திருத்த வேண்டியது, செப்பம் செய்ய வேண்டியது என்று நிறைய உள்ளன. எக்கட்டுரையும் 2 கிலோ பைட்டுக்குக் குறைவாக இருக்க வேண்டியதில்லை. 4-5 வரிகள் இருந்தாலே 2 கிலோ பைட்டைத் தாண்டிவிடும். --செல்வா 14:34, 11 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நான் இடையிடையே இத்தகைய சிறிய கட்டுரைகளை 2 கி.பைட்டுக்குமேல் விரிவாக்குவது உண்டு என்றாலும் இது போதாது. Mayooranathan 19:52, 11 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மூன்றுநான்கு வசனங்கள் சேர்த்தாற்கூட கட்டுரைகள் 1000 பைட்டு அளவைத் தாண்டிவிடுகின்றன. 1000 பைட்டு அளவைவிடச் சிறிய கட்டுரைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்பொழுது (26-09-07) 1042 மட்டுமே உள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கையை 1000 ஐ விடக் குறைக்க முடியும். அனைத்துப் பயனர்களும் மனம் வைத்து முதல் ஆயிரம் குறுங்கட்டுரைகளில் சிலவற்றையேனும் விரிவாக்கக் கோருகிறேன். கோபி 05:09, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆங்கில/பிறமொழிகளில் வரும் F ன் ஒலிப்பு

தொகு

இதுபற்றி நிறைய முன்னரே எழுதி கருத்தாடி இருக்கின்றோம். இன்று கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள் என்னும் கட்டுரையைக் காண நேர்ந்தது. இதனை கிர்ச்சாப்வின் மின் சுற்று என்று எழுதினால் அதே ஒலிப்பு வருவதுபோல் தெரிகின்றது. சொல்லின் இடையே வரும் F ஒலிகளை ப் + வகர உயிர்மெய் இட்டுக் காட்டினால் பொருந்தி வரும் என்று நினைக்கிறேன். எங்கும் மாற்ற வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. இக்கருத்தை இங்குள்ள சிலர் எண்ணிப்பார்க்கக் கூடும் என்று எண்ணி பதிவு செய்கிறேன். என் நிலைப்பாடு Fa என்பதை 'வ, `வ, ˚வ என்று ஏதேனும் ஓர் ஒலித்திரிபுக் குறியை வகரத்திற்கு முன் இட்டு எழுதுவதுதான். இதனால் எத்தனையோ நன்மைகள் உள்ளன. ஆனால் இது இங்கே வரவேற்கப்படவில்லை என்பதால் மீண்டும் பரிந்துரைக்க வில்லை. இது தொடர்பாக அண்மையில் Hurricane Dean என்பதை டீன் சூறாவலி என்பதைக் காட்டிலும் `டீன் அல்லது 'டீன் அல்லது ˚டீன் என்று குறித்தால் குழப்பம் குறைவாக இருக்கும். இது என் தனிக்கருத்து. --செல்வா 14:20, 13 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கலைச்சொல்லாக்கத்தில் கவனம் தேவை

தொகு

நரசிம்மவர்மன், profvk, செல்வா, மயூரனாதன் முதலியோர் தொடர்ந்து ஆக்கி வரும் அறிவியல், கணிதம் குறித்த கட்டுரைகளைக் கண்டு மகிழ்ச்சி. எனினும், ஏற்கனவே தமிழகம் மற்றும் இலங்கையில் பாடநூல்களில் புழக்கத்தில் உள்ள நல்ல கலைச்சொற்களைக் கூட சரியாக கவனிக்காது புதிது புதிதாகக் கலைச்சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோமோ என்றும் கவலையாக இருக்கிறது. தமிழகம், இலங்கை இரண்டு இடங்களிலும் கல்லூரி முதுகலை அறிவியல் படிப்பு வரை முழுக்கத் தமிழ்வழிக் கல்வி உண்டு. ஆங்கிலத்தில் நூல்கள் வாசித்தாலும் தேர்வு எழுதினாலும் இம்மாணவர்களின் சிந்தனை தமிழ் வழியே. நாம் புதிதாக உருவாக்கும் கலைச்சொல் நன்றாக இருந்தாலும் கூட மாணவர்கள் பயின்று வரும் கலைச்சொல்லில் இருந்து தேவையில்லாமல் மாறுபட்டால் தமிழ் விக்கியைப் புரிந்து கொள்ள சிரமமாகி விடும். கலைச்சொல் உருவாக்கத்தில் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றக் கோருகிறேன். பரிந்துரைக்கிறேன்:

1. முதலில் தேவைப்படும் சொல் குறித்து தமிழ் இணையப் பல்கலையில் தேடிப் பார்க்க வேண்டும்.

2. தமிழ் இணையப் பல்கலையில் இல்லாவிட்டால் இணையத்தில் கிடைக்கும் தமிழ் வழியப் பாடநூல்களில் என்ன சொல் ஆளப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

3. ஏற்கனவே உள்ள சொல் பிற மொழிச் சொல்லாகவோ மிகவும் தவறான பொருள் தருவதாகவோ இருக்கும் பட்சத்தில் மட்டும் புதுச்சொல் ஆக்குவோம்.ஏற்கனவே உள்ள சொல்லுக்கு மாற்றாகப் புதுச்சொல்லைப் பயன்படுத்தும்போது தயவுசெய்து அதற்கான காரணத்தைப் பேச்சுப் பக்கத்திலோ விக்சனரி பக்கங்களிலோ குறிப்பாகத் தரலாம். பழைய சொல் மூலம் தேடுபவர்கள் கட்டுரையைக் கண்டு கொள்வதற்கும் பழைய சொல்லின் போதாமையை உணர்ந்து புதுச்சொல்லைக் கைக்கொள்வதற்கும் இது உதவும்.

4. profvk கணிதச் சொற்களைத் தொகுத்து வருவது போல் அந்தந்த துறையில் ஆர்வம் உள்ளோரும் சொற்களை ஓரிடத்தில் குவித்தால் பிறருக்கு உதவும். விக்சனரியிலும் ஏற்றி வைக்கலாம்.

நாம் இயல்பாகக் கருதி எழுதும் கலைச்சொல் கூட நம்மை அறியாமல் பாட நூல் வழக்கில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். எனவே, நாம் கட்டுரையில் பயன்படுத்தும் எல்லா சொற்களையும் ஒரு முறை இணையப் பல்கலை பரிந்துரை, பாடநூல் வழக்கோடு சரி பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கது. இது சற்று நேரம் தாழ்த்தும் நடைமுறை தான். எனினும், வாசகரைக் குழப்பாமல் எழுதும் பொறுப்பு நமக்கு இருப்பதால், இதை மேற்கொள்வது நலம். ஏற்கனவே வழக்கில் உள்ள நல்ல சொற்களுக்குத் தேவையில்லாமல் புதிது புதிதாகக் கலைச்சொல் ஆக்குவதில் பயன் இல்லை. எனவே, ஏற்கனவே உள்ள சொல்லைக் கண்டு கொள்ள முனையாமல் தயவுசெய்து புதுச்சொல் ஆக்க வேண்டாம். இதனால் கட்டுரை ஆக்கத்தில் எவ்வளவு தாமதம் ஆனாலும் சரி. --Ravishankar 11:13, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

விக்கிபீடியர்களுக்கான பாடநூல் நூலகம்

தொகு

இதற்கு மேல் உள்ள கலைச்சொல் உருவாக்க வழிகாட்டி தொடர்பாக: தமிழ்நாடு, இலங்கையில் உள்ள பயனர்கள் யாராவது தத்தம் நாட்டு பள்ளி, கல்லூரி அறிவியல், கணித நூல்களைப் பெற்று தங்கள் இல்லத்தில் சேமித்து வைக்க முன்வர முடியுமா? இதற்கான செலவை நாம் கூட்டாக ஏற்றுக் கொள்ள இயலும். தமிழ் விக்கிபீடியாவில் பயன்படுத்தும் கலைச்சொற்களை பாடநூல் சொற்களுடன் ஒப்பிட்டுத் தேவைக்கேற்பத் திருத்துவது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இணையத்தில் கிடைக்காத சொற்கள் குறித்து தமிழ் விக்கிபீடியர் எவரும் அறிய விரும்பினால் இந்தச் சிறு நூலகத்தைத் தங்கள் இல்லத்தில் வைத்திருக்கும் பயனரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும் உதவும். --Ravishankar 11:34, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நூலகம் திட்டத்தினர் ஏற்கனவே இலங்கை உயர்தரப் பாடத்திட்டத்துக்காக எழுதப்பட்ட கணிதப் பயிற்சி நூல்களை உரிய அனுமதியுடன் scan செய்துள்ளனர். சில மாதங்களில் அவை இணையத்தில் கிடைக்கும் என நம்பலாம். உயிரியல், இரசாயன, பௌதீகவியல் நூல்கள் சிலவற்றையும் மின்னூலாக்க நூலகத்தினரைக் கேட்கலாம். முடிந்தவரை இலங்கைப் பாடநூல் நூலகத்தை இணையத்திலேயே கிடைக்கச் செய்யலாம். கோபி 11:46, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆ..இது நல்ல யோசனை. எனக்குத் தோணாமல் போனதே :) ஒருவர் வீட்டில் நூல்களை வாங்கி வைப்பதை விட இணையத்தில் ஏற்றுவது நல்ல யோசனை. இலங்கையின் நூலகம் திட்டம் போல் அனைத்து நூல்களையும் தமிழ்நாட்டில் இணையத்தில் ஏற்ற முடியாது. தமிழகப் பாடநூல்களைப் பொறுத்த வரைக்காவது இப்படி படியெடுத்து இணையத்தில் போடுவதும் சாத்தியமே. இதை ஒரு திட்டமாகச் செய்வதென்றால் இன்னும கொஞ்சம் மெனக்கெட வேண்டும். தமிழ்நாட்டு விக்கிபீடியர் எவரும் தன்னாவலராகச் செயல்பட முன்வந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். --Ravishankar 11:51, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவியின் கருத்துக்கள் தொடர்பாக எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. அது போலவே ஏனைய பங்களிப்பாளர்களுக்கும் கொள்கையளவில் கருத்து வேறுபாடுகள் இருக்காது எனவே நம்புகிறேன். ரவியின் பரிந்துரைகள் பல மிகவும் பயனுள்ளவை என்பதுடன் எல்லோராலும் தீவிர கவனத்துக்கும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. எனினும் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் உள்ள பட்டியல் மிகவும் பழையது. புதிய வளர்ச்சிகளோடு தொடர்புடைய சொற்கள் இதில் இல்லை. அறிவியல் தொடர்பான பாடப் புத்தகங்களும் பொதுவாக 12 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களுக்கு உரியனவே. எனவே பல உயர்நிலைக் கலைச் சொற்களை இங்கும் காணமுடியாது. மேற்படி மூலங்கள் தவிர அவ்வப்போது வெளிவருகின்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த கலைச்சொல் அகரமுதலிகளும் உள்ளன. சென்னைக்குச் செல்லும்வேளையில் இவ்வாறான நூல்களைத் தேடிக் கிடைப்பதை வாங்குவதுண்டு. இவ்வாறு ஓரிரு கலைச்சொல் அகரமுதலிகள் என்னிடம் உண்டு. இவற்றுள்,
டாக்டர் சாமி சண்முகம் தொகுத்த மருத்துவக் கலைச்சொற்கள் என்னும் நூல் சுமார் 700 பக்கங்கள் கொண்டது. ஏராளமான சொற்கள் உள்ளன. ஒப்பீட்டுக்கு வேறு இதுபோன்ற நூல்கள் கிடைக்கவில்லை. எனினும் நல்ல பயனுள்ள நூலாகத் தெரிகிறது.
பேராசிரியர் அ. கி. மூர்த்தி தொகுத்த அறிவியல் அகராதி சுமார் 500 பக்கங்கள் வரை கொண்டது. இதிலுள்ள சொற்கள் சில இணையப் பல்கலைப் பட்டியலில் உள்ளவற்றிலிருந்து வேறுபடுவதைக் காணமுடிகின்றது. அறிவியலின் பல துறைகளிலும் உள்ள ஏராளமான சொற்களை அடக்குவதற்கு இதன் அளவு போதுமானதாக இல்லை. எனினும் பயனுள்ளது.
டாக்டர் சு. சக்திவேல் தொகுத்த மானிடவியல் கலைச்சொல் அகராதி என்பது மிகச் சிறிய நூல். 127 பக்கங்களை மட்டுமே கொண்டது. தற்போதைய நிலையில் மிகவும் பயனுள்ளது எனலாம்.
இவற்றைவிட சில நூல்களில் பின்னிணைப்பாகக் கலைச்சொற் பட்டியல்கள் உள்ளன. என்னிடம் பின்வரும் நூல்கள் உள்ளன.
பக்தவச்சல பாரதி எழுதிய பண்பாட்டு மானிடவியல் என்னும் நூலில் குறிப்பிடத்தக்க அளவு சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட பேச்சொலியியல், பேச்சுக் கூறுபாட்டியல் ஆகிய நூல்கள் அவ்வத்துறைகளைச் சேர்ந்த பல கலைச்சொற் பட்டியல்களைப் பின்னிணைப்பாகக் கொண்டுள்ளன.
இவற்றையே நான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறேன். இவை பொதுவாகக் கல்வித்துறையில் உள்ளவர்களால் எழுதப்பட்டிருப்பதால், இவை பெருமளவுக்குப் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயன்பாட்டிலுள்ள சொற்களுக்கு ஒத்தவையாக இருக்கும் என நம்புகிறேன். மேற்படி துறைகள் தொடர்பான கலைச்சொற்கள் தேவைப்படின் என்னால், இந் நூல்களில் பார்த்து உதவமுடியும்.
ஆனால் நமக்கு நிறையத் தேவைப்படுகின்றது. இதற்காக விக்சனரியில் கலைச்சொற் பட்டியலை முறையாகத் தொகுக்க வேண்டும். ஏற்கெனவே புழக்கத்திலுள்ள எல்லாச் சொற்களையும் இதில் உள்ளிட முயலவேண்டும். ரவி எழுதியதுபோல் பாடப் புத்தகங்கள் இதற்கு மிகவும் பயன்படும். இலங்கை, இந்தியாவில் உள்ளவர்கள் இதில் அக்கறை எடுக்கலாம். இத்தொகுப்பில் போதிய அளவு சொற்கள் சேர்ந்தால் தொடர்புடைய பலர் இதில் அக்கறை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். Mayooranathan 12:29, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

(பக்தவச்சல பாரதி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் போன்றோரது நூல்கள் உட்பட) பயனுள்ள நூல்களில் உள்ள பின்னிணைப்புப் பட்டியல்களை முழுமையாக இணையத்துக் கொண்டுவருவது பயனுள்ளதாக இருக்கும். அவர்களைத் தொடர்புகொண்டு அனுமதி பெறுவது சாத்தியமா?. தமிழகத் தோழர்கள் முயன்றால் முடியும். கோபி 12:34, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கோபியின் தகவலை இப்போது தான் பார்த்தேன். மிகவும் நல்ல செய்தி. நூலகம் திட்டத்தினருக்கு எனது பாராட்டுக்கள். இந் நூல்களில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்கள் மட்டுமே இருக்கும். இவற்றுக்கான சரியான ஆங்கிலச் சொற்களுடன் இவற்றைத் தொகுக்க வேண்டியிருக்கும். நூலகம் திட்டம் விட்ட இடத்திலிருந்து விக்சனரி தொடரலாம். Mayooranathan 12:40, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மயூரனாதன் எல்லா சொற்களும் இணையப் பல்கலையில் இருக்காது என்பது அறிந்ததே. ஆனால், அங்குள்ள பொருத்தமான, அடிப்படையான சொற்களையாவது நாம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அடுத்து பாடநூல்களில் உள்ள சொற்களுக்கு முன்னுரிமை. நான் சொல்ல வருவது என்னவென்றால், அறிவியல், கணிதக் கட்டுரைகளில் கலைச்சொற்களைக் கையாள்பவர்களுக்கு நடப்பு உலகில் உள்ள சொற்கள் குறித்த தெளிவும் ஒப்பீட்டுப் பார்வையும் இருப்பது அவசியம். பாடநூல்கள் முழுக்கத் தமிழில் தான் இருக்கும் என்பது அறிந்ததே. ஆனால், அவற்றை வாசிக்கும்போது ஆங்கிலக் கலைச்சொற்களுடன் அவற்றைத் தொடர்பு படுத்தி புரிந்து கொள்ள முடியும் தானே? ஆங்கில வழியம், தமிழ் வழியம் இரு வழிய நூல்களைப் பெறுவதும் ஒப்பு நோக்கிப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. அவற்றில் ஆங்கிலம்-தமிழ் சொற்பட்டியல்கள் இருக்காது. ஆனால், அவற்றைப் படித்துப் புரிந்து அது போன்ற சொற்பட்டியல்களை விக்சனரியில் உருவாக்க இயலும். விக்சனரி குறித்து ஆர்வலர்களின் கவனத்துக்கு: இந்த ஆண்டு சுமார் 500 சொற்கள் கூட விக்சனரியில் ஏற்றப்படாமல் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. விக்கிபீடியர்கள் அதற்கு கூடிய கவனம் தருமாறு இன்னும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.--Ravishankar 12:56, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]


கட்டுரை நீக்கங்கள், கட்டுரைப் பூட்டுகள்

தொகு

நீங்கள் எடுக்கும் முடிவுகளை மதிக்கிறேன், ஆனால் அருள்கூர்ந்து சற்று பொறுமையாக இம்முடிவுகளை எடுக்க வேண்டுகிறேன். இன்றைய தமிழர்களின் நிலயையில், த.வி இருக்கும் நிலையில் கட்டுரைகளை நீக்குவதினும், அவற்றைத் திருத்தி (தேவைக்கு ஏற்றவாறு சுருக்கியோ விரித்தோ) ஏற்கும் முறைகளை கைக்கொள்ள வேண்டும். விளம்பரம் என்று கருதி பல பயனுடைய கருத்துக்கள் நீக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். பல செய்திகளை நான் விளம்பரம் என்று நினைக்கிறேன், எனினும் அவை புதிய கருத்தைத் தருகின்றன. விளம்பரத்தன்மையைக் குறைக்கலாம், ஆனால் போதிய கருத்தாடல் இன்றி, நீக்குவது வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன். புதுப்பயனர்களுக்கும், புதிதாக பிற பின்னணியில் இருந்து வரும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இது பெரும் ஊக்கத்தடையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். --செல்வா 00:04, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, உங்கள் கருத்து முற்றிலும் சரி. தவறுகள் மனக்கசப்புகள் ஏற்பட்டு இருந்தால் மனம் வருந்துகின்றோம். உங்கள் கூற்றை அனைவரும் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளோம். இனி மிகவும் கவனமாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் இணைந்து இயங்குவோம். நன்றி. --Natkeeran 00:11, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சிய நம்பகத்தன்மை, அதன் மீதான சமூக மதிப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நீக்கங்கள், பூட்டல்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் எனது நிர்வாக அனுமதிமூலமான செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திக் கொள்கிறேன். நன்றி. கோபி 05:03, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கோபி, தயவு செய்து துப்புரவுப் பணியை இடை நிறுத்த வேண்டாம். கட்டுரைகளில் முதலில் எழுதி விட்டுப் பிறகு மாற்றுக் கருத்து இருந்தால் உரையாடி மாற்றங்களைச் செய்வது போல் நன்னம்பிக்கை அடிப்படையிலான செயற்பாடுகளை நிர்வாகப் பணிகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். தங்களின் வருகைக்குப் பிறகே தமிழ் விக்கிபீடியா பெருமளவு துப்புரவானது. தறுபோதும் தங்கள் அளவுக்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபாடு காட்டுவோரும் இல்லை. நீங்கள் செய்யும் 100 நிர்வாகத் தொகுப்புகளில் ஒன்றிரண்டில் மாற்றுக் கருத்து எழலாம். அதற்காக முழுப்பணியையும் நிறுத்தத் தேவை இல்லை. --Ravishankar 10:29, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவி, எனது நீக்கல்கள் சற்று அதிகமாகவும் வேகமாகவும் இருக்கின்றன. ஆதலால் இடைவெளிகள் விட்டுவிட்டு அவ்வப்போது துப்பரவுப் பணியில் ஈடுபடுவது ஏனைய பயனர்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் என நம்புகிறேன். அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருகின்றேனாதலால் வேண்டிய பக்கங்களைக் கவனிப்புப் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். நன்றி. கோபி 11:37, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முறையான உள்ளடக்கங்கள் எவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. எந்த அளவிற்கு நம்மால் இறங்கி வர முடியும், தேவை என்பதில் வேறுபாடு உண்டு. இவ்விடையத்தில் aஅனைவரது நிலைப்பாடும் ஒவ்வொரு விதத்தில் சரியே. இங்கே பார்க்கவும். இது சில இடங்களிலும் இது சில இடங்களிலும் மற்றவை வேறு சில இடங்களிலும் பொருந்தும். இதுபோன்ற ஒரு மெல்லிழை அல்லது கருதுகோள் நிலையிலான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நாம் சில வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். துரித நீக்கல் முதலியவற்றுக்கான குறைந்த அளவு தகுதிகளை நாம் ஒன்றுகூடி வரையறுத்து விட்டால் பின்னர் துப்புரவுப் பணிகளின் மீது மனத்தாங்கல்கள் வாரா. -- Sundar \பேச்சு 07:18, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

பார்க்க: விக்கிபீடியா:துரித நீக்கல் தகுதிகள். -- Sundar \பேச்சு 11:55, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு பாட நூல்கள் இணையத்தில், இலவசமாக

தொகு

--Natkeeran 23:58, 26 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி நற்கீரன்!! மிக நல்ல கண்டுபிடிப்பு! தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தாரை மிகவும் போற்றவேண்டும்!--செல்வா 00:42, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆஹா..அருமை ! நேற்று தான் நாம் நூலகம் ஆரம்பிக்கலாமா என்று ஆலமரத்தடியில் புலம்பினேன்..உடனே விடிவு :) இனி கலைச்சொல் உசாத்துணைகள், ஒப்பீடுகளுக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..கல்லூரிப் பாட நூல்களை அரசு வெளியிடுவதில்லை என்று நினைக்கிறேன்..கல்லூரிப் பாட நூல்களும் தமிழில் கிடைத்தால் அவற்றையும் தொகுக்க முனைவோம்..--Ravishankar 00:44, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆமாம். இனி தமிழ் விக்கிபீடியாவிற்கு நல்ல உசாத்துணைகளும் எடுத்துக்காட்டுகளும் கிடைத்துள்ளன. --Natkeeran 01:11, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
நமக்கு மிகப் பயனுள்ள ஒரு தளம். அறிமுகப்படுத்தியதற்கு நற்கீரனுக்கு நன்றிகள். இத் தளத்தை உரிய முறையில் பயன்படுத்துவது இப்பொழுது நமது கையில். இதன் துணையுடன் விக்சனரியையும் மேம்படுத்தவேண்டும். Mayooranathan 02:47, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
மிக நல்ல செய்தி. இவ்வளவு காலத்தின் பின்னராவது பயனுள்ள காரியம் செய்துள்ளார்கள். இவ்வாறு இன்னுமின்னும் நூல்களும் உசாத்துணைகளும் இணையத்துக்கு வர வேண்டும். கோபி 04:33, 27 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவில் பங்குபெற இருக்கும் தடைகள்

தொகு

த.வி யில் தொகுப்பதோ, அல்லது அதன் நடைமுறைகளை அறிந்து பின்வற்றுவதோ வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அவ்வளவு எளிதல்ல. பலருடன் எனக்கு ஏற்றப்பட்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இதை தொடர் பயனர்கள் போதிய அளவு புரிந்து கொள்ளவேண்டும்.

  • இணைய இணைப்பு இல்லாமை.
  • தமிழ் விக்கிபீடியா அறிமுகம் இல்லாமை.
  • கணியில் தமிழ் பயன்படுத்த தெரியாமை.
  • தமிழ் தட்டச்சு தெரியாமை.
  • விக்கியில் தமிழ்க் கட்டுரைகளை தொகுக்க தெரியாமை.
  • தமிழ் விக்கிநடை பரிச்சியமின்மை (முதலில் வரையறை, படர்க்கை நிலை, விடய நோக்கு, தனி-சார்புக் கருத்துக்களைத் தவர்த்தல்).
  • விக்கி நடைமுறைகள் பற்றி பரிச்சியமின்மை, அல்லது சரியான விளக்கம் இன்மை.

இப்படிப்பட்ட தடைகளை நாம் அடையாளம் கண்டு அவற்றை இயன்றவரை விலக்க வேண்டும். நன்றி. --Natkeeran 13:05, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன் கூறுவதை எனது 6 மாதத்தீவிர ஈடுபாட்டில் என் அனுபவத்தால் ஆமோதிக்கிறேன். மேலே நற்கீரன் பட்டியலிட்ட 7 இடர்களில், முதல் இரண்டைத் தாண்டினபிறகு, 3-ஆவதுக்கு முன்னமேயே ஒரு முக்கிய இடர் உள்ளது. அதுதான் த.வி.யில் கட்டுரைகளை எப்படிப் பார்ப்பது என்ற முதல் பிரச்சினை. பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டபிறகும், 'முதற்பக்கம்' தான் கிடைக்கிறதே ஒழிய, 'செல்' என்ற கட்டத்தில் எதைப் போடுவது என்ற பிரச்சினை. அவர்கள் த. வி. க்கு வருவதற்கு முன்னமேயே அவர்களுக்கு கட்டுரைகளின் தலைப்பு தெரிந்திருக்கவேண்டும். இந்த ஒரு பிரச்சினையே அவர்களை விரட்டிவிடுகிறது.
இதற்கு ஒரு தீர்வு. அவர்கள் மனதிலிருக்கும் கட்டுரை தலைப்பிற்கு ஆங்கிலத்தில் அதற்கு இணையான தலைப்பைப் போய் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அனேகமாக அவ்வாங்கிலக் கட்டுரையில் இடது பக்கத்தில் 'Other languages' பட்டியலில் 'தமிழ்' என்றிருக்கும் . அதை சொடுக்கினால் தமிழ்க்கட்டுரைக்கு வரலாம். இது நமக்குத்தெரியும் ஆனால் அவர்களுக்கு? இப்படி அவர்களுக்கு உதவி செய்வதற்கு நாம், த.வி. முதற்பக்கத்தில், இப்படியும் த.வி. கட்டுரைக்கு வரலாம் என்ற குறிப்பை கொட்டை எழுத்துக்களில் போடவேண்டும்.
அது மட்டும் போதாது. ஒவ்வொரு த.வி. கட்டுரைக்கும் அதற்கு ஒத்த ஆங்கில அல்லது பிரென்ச், ஜெர்மன் மொழிகளிலுள்ள கட்டுரைகளில், "Other languages" பட்டியலில் (இடது margin இல்) 'தமீழ்' வரும்படி, 'ta: ...." என்ற இணைப்பை சேர்க்க வேண்டும். I do not know whether this will be an automated process or has to be manually done for every article.

--Profvk 14:42, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன் சொல்வதும் பேரா.வி.கே சொல்வதும் முற்றிலும் உண்மை! நிர்வாகிகள் செய்ய வேண்டிய முதல் பணி, "எப்படி தேடு பொறியை சரி செய்வது? எங்கு யாருடைய உதவியை நாடி செய்ய வேண்டும் என்று சிந்திப்பது." அடுத்தாக தேடுபொறிக்கு கீழேயே அகரவரிசைப்படித் தேட சுட்டி இருக்கச் செய்வது, அல்லது, தேடு பொறி சரியான தேர்வைச் செய்யவில்லை என்றால் தானியங்கியாக இந்த அகரவரிசைப் பக்கத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். மூன்றாவதாக பெரும்பகுப்பாக 10 பகுப்புகள் முதற்பக்கத்தில் இருப்பது நல்லது. "அறிவியல்" என்று உள்ளே நுழைந்த பின் உள் பகுப்புகள் காட்டலாம், அங்கேயும் அகரவரிசைச் சுட்டி இருக்கலாம். நாம் எழுதும் கட்டுரைகளுக்கு யாஅரும் வந்து படிக்கின்றார்கள் என்றால் அது பெரும்பாலும், கூகிள் தேடுதலில் சிக்கியதாக இருக்கும். தமிழ் விக்கியை முறைப்படி ஒரு கலைக்களஞ்சியம் போல் பயன்படுத்துவது கடினம் (இப்பொழுதிருக்கும் அமைப்பில்). இன்னும் பல இடர்ப்பாடுகள் உள்ளன, ஆனால் இவை முதன்மையானவை. இங்கே நற்கீரன், பேரா.வி.கே கூறியவற்றை மறக்காமல் பலமுறை வந்து பார்த்து முழுத்தீர்வுகள் காண வேண்டும். கடைசியாக ரவி செய்யும் கருத்துப் பரப்பல் போன்றவற்றை நாம் எல்லோரும் நமக்கு இயன்றவாறு செய்யலாம், செய்ய வேண்டும்! --செல்வா 17:29, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நற்கீரன், நீங்கள் சொல்ல வருவதை இரண்டு பெரும் காரணங்களாகக் கூறலாம்.

1. விக்கி கூறுகள், விதிமுறைகள், நடைமுறைகள் அறியாமை. இது எல்லா மொழி விக்கிகளுக்கும் பொதுவான அறியப்பட்ட குறைகள். post doctorate செய்யும் என்னுடைய நண்பராலேயே ஆங்கில விக்கியில் எப்படி ஒரு பக்கத்தைத் தொகுப்பது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. விக்கி தொகுப்புப் பக்கம் இன்னும் மேம்பட வேண்டும் என்று மீடியாவிக்கி மென்பொருள் உருவாக்குனர்கள் அறிந்தே இருக்கிறார்கள். மென்பொருள் ரீதியாக செய்யக்கூடிய மாற்றங்கள் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக வரும் என்று எதிர்ப்பார்ப்போம். நம்மவர்கள் மீடியாவிக்கி மேம்பாட்டில் பங்கு கொள்வதும் பயன் அளிக்கும். அடுத்து, நம் தளத்துக்கு வருகிறவர்களுக்கு உதவும் வண்ணம் கூடிய அளவு உதவிப் பக்கங்கள், வழிகாட்டுக் குறிப்புகள் தர வேண்டும். செல்வா, profvk ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தப் பார்ப்போம். Profvk, நாம் எழுதும் கட்டுரைகளில் ஆங்கில விக்கிக் கட்டுரைக்கான இணைப்பை மட்டும் மனித முறையில் நாம் ஒவ்வொரு கட்டுரைக்கும் தரவேண்டும். அப்படித் தந்தால் sundarbot போன்ற விக்கியிடை தானியங்கிகள் பிற விக்கிகளில் இருந்து தமிழ் விக்கிக்கு இணைப்பை ஏற்படுத்தித் தந்து விடும். பிற மொழி விக்கிகளுக்கான இணைப்புகளையும் தமிழ் விக்கியில் சேர்த்து விடும்.

2. கணினியில் தமிழ் குறித்த அறிவின்மை இரண்டாவது தடை. தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியிலேயும் இது குறித்த விழிப்புணர்வு பரப்புவது இதற்கு அவசியம். பள்ளிகள், கல்லூரிகளில் நேரடிப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது போன்றவை பலனளிக்கலாம். --Ravishankar 22:25, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியின் தேடு பொறியின் வழு குறித்து ஏற்கனவே வழு பதிந்திருக்கிறேன். இது குறித்து தகுந்தவர்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும்.--Kanags 22:56, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவுக்கு நான்கு வயது நிறைவு (30-09-2007)

தொகு

இன்றுடன் தமிழ் விக்கிபீடியாவுக்கு நான்கு வயது நிறைவு பெறுகின்றது. நாளை பிறந்தநாள். 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முப்பதாம் தேதி தமிழ் விக்கிபீடியாவுக்கெனத் தனியான பக்கம் உருவாக்கப்பட்டது. இதிலே இடைமுகம் ஆங்கிலத்திலேயே இருந்தது. விக்கிபீடியாவுக்குரிய உள்ளடக்கமும் எதுவும் இன்றி ஏறத்தாள வெறுமையாகவே இருந்தது. இந் நிலையிலேயே தமிழ் விக்கிபீடியா மேலும் சில நாட்கள் இருந்தது. எனினும் பின்னணியில் இடைமுகத்துக்குரிய மென்பொருளின் தமிழாக்கம் நடந்து வந்தது. சிரின் எபாடி பற்றிய முதலாவது கட்டுரையை பயனர்:அமல்சிங் 2003 அக்டோபர் 16 ஆம் தேதி எழுதினார்.

தமிழ் விக்கியின் நான்கு வயது நிறைவெயொட்டி இதன் எல்லாப் பங்களிப்பாளருக்கும், பயனர்களுக்கும், இதன் வளர்ச்சியில் அக்கறைகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Mayooranathan 20:35, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் வரலாற்றில் உண்மையிலேயே பொன்னால் பொறிக்கவேண்டிய நன்னாள்! மயூரநாதன், நீங்கள் வழிகாட்டி, அடிகோலியவர்! உங்களை எத்தனை போற்றினும் தகும். வாழ்க நீங்கள், உங்கள் நற்தொண்டு! தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் மேலும் பன்முக நேர்த்தியுடன் வளர்தெடுப்பது நம் எல்லோருடைய இனிய கடமை. மிக்க அன்புடன்! --செல்வா 21:12, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிபீடியா, தமிழில், இணையத் தமிழிலில், எதிர்காலத் தமிழ்ப் புலத்தில் ஒரு முக்கிய முனை. இது மேலும் வளர்ந்து தமிழர் கூட்டு மதிநுட்பத்துக்கும் செயலாக்கத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டக அமையவேண்டும். வாழ்த்துக்கள். --Natkeeran 21:20, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

என்னுடனைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் திட்டத்துக்காக உழைக்கும் அனைவருக்காகவும் என் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். --Ravishankar 22:26, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவுக்கு நான்கு வயது நிறைவடைகிறது என்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. இக்கூட்டு முயற்சி மென்மேலும் வளர்ந்து முழுத் தமிழ் உலகத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என வாழ்த்துகிறேன். இதன் முன்னோடி மயூரநாதனுக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள்.--Kanags 22:51, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நவம்பர் 28, 2003 அன்று மயூரநாதன் எழுதிய உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.--செல்வா 01:33, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீரியாவின் துவக்க (செப்டம்பர் 30, 2003) எழுத்துக்களைப் பார்க்க (முதற்பக்கம்) இங்கே பார்க்கவும். தமிழ் எழுத்துக்களைப் பதிய முனைந்த தளர்நடைகளைக் காண இப்பக்கத்தின் பின்வரும் தொகுப்புகளைப் பார்க்கவும் (நவம்பர் 6-17, 2003 ++).--செல்வா 01:52, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன். த.வி ஒரு நம்பகமான தரமான கலைக்களஞ்சியமாக வளர நாம் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். புதியவர்கள் வருகையும் அவசியமானது. நன்றி. கோபி 02:06, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. அடித்தளமிட்ட மயூரநாதனுக்கு மிக்க நன்றி. நமது கூட்டு உழைப்பின் விளைவாக இப்போது த.வி. ஒரு நல்ல நிலையில் உள்ளது. கொள்கைகளும் வழிகாட்டல்களும் வரையறுக்கப்பட்டு பெரும்பாலான விடையங்களின் பின்புலக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டு பல நூறு பயனர்கள் வந்து பல்லாயிரம் கட்டுரைகளைத் தொகுக்கும் நாளை எதிர்நோக்கி நாம் பணியாற்றுவோம். -- Sundar \பேச்சு 07:26, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கட்டிடம் ஒன்றிற்கு அத்திவாரம் பலமாய் இருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே பலமான அத்திவாரத்தை இட்ட மயூரநாதனுக்கும் நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமான மேலும் விக்கிபீடியாவை வளர்த்து வரும் தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கன்னித் தமிழைக் கணினி வலையமைப்பூடாகப் இணையமெல்லாம் பரப்பும் அன்பர்களுக்கு எனது பாராட்டுக்கள். --Umapathy (உமாபதி) 16:28, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரை இலக்குகள்

தொகு
  • சில கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை ஆக்கப்படக்கூடியவையாக இனம் காணப்பட்டுள்ளது. ஆனால் ஆக்கப்படவில்லை.
  • மேலும் கட்டுரைகள் இனம் காணப்படுத்தபட்டு மேம்படுத்த வேண்டும்.
  • யதார்தமாக, கட்டுரைத் தலைப்புகள் முக்கியப்படுத்தி (priorize செய்து, எ.கா: பிரச்சினைகள் பட்டியல்), எண்ணிக்கை இலக்கு வைத்து சிறப்புக் கட்டுரைகள் ஆக்கத்தை ஊக்கு விக்கலமா?

--Natkeeran 00:36, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கட்டாயம் செய்ய வேண்டும். முதலில் சிறப்புக் கட்டுரையாக தேர்ச்சி பெறக் கூடிய கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து பட்டியலிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு கட்டுரையிலும் என்னென்ன செய்ய வேண்டும் என்று தேவைகளின் வலுப்படி வரிசைப்படுத்த வேண்டும். முதலில் பட்டியலில் இருக்கும் கட்டுரைகளுக்கு 1-5 வரை மதிப்பெண் தரலாம்.. ஆங்கில விக்கியில் இருப்பது போல தர முத்திரை பதிவு செய்யலாம் (ஆனால் இது முறைப்படி செய்ய சற்று காலம் எடுக்கும்). சிறப்புக் கட்டுரையாக தேர்ந்தெடுக்க ஒரு கட்டுரையின் நடை, அமைப்பு, படங்கள், போதிய விரிவு (4 பக்கங்களாவது இருத்தல்), சிவப்பு இணைப்பு இல்லாமை (ஒன்றிரண்டு இருந்தால் பரவாயில்லை, ஆனால் அவற்றையும் உடனே சரி செய்யலாமே), இணைப்புகள் வழி இட்டுச்செல்லும் கட்டுரைகள் ஒரு வரிக்கட்டுரையாக இல்லாமல், அவையும் ஓரளவுக்கு தன்னிறைவான கட்டுரைகளாக இருத்தல் வேண்டும் (ஒரு பக்கமாவது இருத்தல் வேண்டும்).. என்று இப்படி சில வரைமுறைகள் வைத்துக்கொண்டு தேர்வு செய்யலாம். --செல்வா 01:04, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

வழிமுறைகள் ஏற்கனவே ஓரளவு உண்டு. எனினும் செயற்படுத்தலின் கால வரையும், இலக்கு வைத்து செயற்படுத்தலுமே தற்போது தேவை. Wikipedia:சிறப்புக் கட்டுரைகள் நியமனம். --Natkeeran 01:12, 2 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உள்ளூர்ப் பெயரா உலகப் பெயரா?

தொகு

நாடுகள், மொழிகள் குறித்த முக்கிய திட்டங்கள் இலக்கு வைத்து நிறைவேற்றப்பட்டு வரும் வேளையில் முக்கியமான ஒரு விசயம் குறித்து உரையாட வேண்டும் என்று நினைக்கிறேன். மொழிகள், ஊர்கள், நாடுகள் ஆகியவற்றுக்கு நாம் ஆங்கிலப் பெயர்களைப் பயன்படுத்தப் போகிறோமா இல்லை அவற்றின் உள்ளூர்ப் பெயர்களைப் பயன்படுத்தப்போகிறோமா? இது குறித்து விக்கி அளவில் ஒரு சீர்தரக் கொள்கை பரிந்துரை எடுப்பது நல்லது. பொதுவாக ஆங்கிலப் பெயர்களை நாம் உலக வழக்குப் பெயர்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். குறைந்தது, நான் அப்படி எண்ணிக் கொண்டிருந்தேன். எனினும் அது உண்மை இல்லை என்பதை ஐரோப்பாவுக்கு வந்த பிறகு உணர முடிகிறது. deutschland, nederland, spanja போன்ற உள்ளூர்ப்பெயர்கள் ஐரோப்பிய மொழிகளில் அப்படியே வழங்கப்பட்டு வருகின்றன. அவை இவ்வூர்ப்பெயர்களை ஆங்கிலமயமாக்கி ஒலிப்பதில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில வழக்கு காலூன்றும் முன்னர்,பழந்தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளை அவற்றின் உள்ளூர்ப் பெயர் ஒலிப்புக்கு நெருங்கியே நாம் ஒலித்து வந்திருக்கிறோம். உருசியா, எகிப்து, இத்தாலி ஆகிய நாட்டுப் பெயர்களை எண்ணிப் பார்க்கலாம். இவற்றை ஆங்கில வழக்கில் எழுதினால் ரஷ்யா, ஈஜிப்ட், இட்டலி என்று தான் எழுத வேண்டி இருக்கும். நம் ஊர்ப் பெயர்களை, நம் மொழியின் பெயர்களை பிறர் அப்படியே ஒலித்தால், ஒலிக்க முயன்றால் தானே நாம் மகிழ்கிறோம்..அதே போன்ற மதிப்பை நாம் ஏன் பிற நாட்டவருக்குத் தரக்கூடாது. இந்த நோக்கில் இல்லாவிட்டாலும், ஒலிப்பு, தகவல் துல்லியத்துக்காகவேனும் உள்ளூர்ப்பெயர்களை நாம் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். பரவலாக அறியப்பட்ட நாடுகள், மொழிகளுக்குத் தொடக்கத்தில் குழப்பத்தை உண்டாக்கினாலும் நாளடைவில் புழக்கத்துக்கு வரும். பல நாடுகள், மொழிகள் இன்னும் தமிழர் வாழ்வியலில் அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கும்போது அவற்றைத் தயக்கமின்றி உள்ளூர் வழக்குப் பெயர்களில் அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். --Ravishankar 19:28, 9 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

எந்த நாட்டைப்பற்றி பேசுகிறோமோ அந்த நாட்டின் ஒலிப்பு நெருக்கமாக இருப்பதே நல்லது. வழிமாற்றுகள் தரலாம், ஆனால் தலைப்பு அந்நாட்டின் ஒலிப்புபடியே (கூடிய மட்டிலும்) இருத்தல் அல்லது. அறிவியல் பெயர்கள் (வேதிப்பொருட்கள் போன்றவை) ஆங்கிலத்தை ஒட்டி இருந்தால் பழுதில்லை. அண்மையில் குரோவாட்ஸ்க்கா என்றுதான் நான் Croatia ஐ கட்டுரையை ஆக்கினேன். ஜகரம் இல்லாத 'டாய்ட்சு மொழியை ஜெர்மன் என்று சொல்வது கொடுமை! எஸ்பொன்யால் என்று சொல்லவேண்டியதை ஸ்பானிஷ் என்று சொல்வது தவறு என்பது என் கருத்து. எஸ்பொன்யால் என்பதை எசுப்பானிய மொழி எசுப்பானியம் என்றால் போதிய அளவு நெருங்கிய ஒலிப்பு உள்ளது. --செல்வா 22:10, 9 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். நடைமுறையில் இதை ஒரு ஒழுங்கு முறையாகக் கொள்வது எவ்வளவு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக மொழிகளை எடுத்துக்கொண்டால், அறியப்பட்ட, முக்கியமான மொழிகளின் உள்ளூர்ப் பெயர்களை அறிந்து கொள்வது இலகு. ஆனால், இன்னும் ஆயிரக் கணக்கில் உள்ள பல மொழிகளின் உள்ளூர்ப் பெயர்களை அறிந்து கொள்வது சற்றுக் கடினமாகவே தோன்றுகிறது. பெரும்பாலான இத்தகைய மொழிகள் பற்றி ஆங்கில நூல்கள் மூலமாகவே அறிந்து கொள்வதனால் அச் சொற்களே நமது மொழியிலும் புகுந்து விடுகின்றன. கூடியவரை உள்ளூர்ப் பெயர்களையே பயன்படுத்தலாம் என்பதுதான் எனது கருத்தும். Mayooranathan 02:51, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

செல்வா, துல்லியமான உள்ளூர் ஒலிப்பு, அல்லது அதற்கு நெருங்கிய தமிழ் மொழி ஒலிப்புக்கு ஏற்ற பெயர் என்ற உங்கள் பரிந்துரையில் உடன்படுகிறேன். மயூரனாதனம், குறைந்தபட்சம், உள்ளூர் ஒலிப்பு தெரிந்த மொழிகள், நாடுகள், ஊர்கள் ஆகியவற்றுக்காவது அவற்றை அப்படியே பயன்படுத்தலாம். தெரியாதவற்றுக்கு அவ்வொலிப்புகளைத் தேடிக்கண்டுபிடிக்கும் வரை ஆங்கில ஒலிப்புகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தற்போது இணையத்தின் வருகையால் பலவற்றுக்கான உள்ளூர் ஒலிப்புகளைக் கண்டு கொள்ளும்படியாகவே இருக்கிறது.--Ravishankar 06:40, 10 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

த.வி.யின் கட்டுரைகள்

தொகு

இப்பொழுது நாம் 12,000 கட்டுரைகளை நெருங்கிவிட்டோம் என்று தோன்றினாலும், நம் முயற்சி பிற இந்திய துணைக்கண்ட மொழிகளை ஒப்பிடும்பொழுது வேண்டுமானால் சிறிதளவு முன்னணியில் இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் உண்மையில் தமிழ் விக்கியின் நிலைமை அப்படி உயர்வாக இல்லை. ஆகஸ்ட்டு 2007ன் புள்ளிக்குறிப்புகளின்படி, தமிழில் வெறும் 46 கட்டுரைகளே 16 கிலோ பைட்டைத் தாண்டி இருப்பதுபோல் தெரிகின்றது. கனடா, தமிழ் போன்ற மிகமிகச்சில கட்டுரைகளைத்தவிர மிகப்பெரும்பாலான கட்டுரைகள் (95.8%) 4 கிலோ 'பைட்டுக்கும் குறைவாக உள்ளன! அதாவது 487 கட்டுரைகள்தாம் 4 கிலோ 'பைட்டைத் தாண்டியுள்ளன!! 162 கட்டுரைகளே 8 கிலோ 'பைட்டைத் தாண்டியுள்ளன. கருத்துச் செறிவைப் பார்த்தால் இன்னும் குறைவான மதிப்பே தர இயலும். 25.2% கட்டுரைகள் 512 'பைட்டுக்கும் குறைவாக உள்ளன. எனவே, பைட் அளவைத்தாண்டி, நாம் கருத்துச் செறிவு உள்ளவற்றை ஆக்கவேண்டும் என்னும் என் நினைப்பைப் பகிர்ந்துகொள்ளுகிறேன். தவறாக நினைக்காதீர்கள். பங்களிப்பவர்கள் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன்.--செல்வா 03:30, 11 அக்டோபர் 2007 (UTC) --செல்வா 03:39, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

செல்வாவின் கருத்துக்கள் மிக மிகச் சரியானவை. கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் முனைப்புக் காட்டுவது பற்றிய எனது கருத்துக்களை நான் ஏற்கெனவே ஓரிரு முறைகளில் வெளிப்படுத்தியுள்ளேன். ஆனாலும், ஓன்றுமே எழுதமுடியாது என்பதிலும், 2 - 4 கிபை அளவு கொண்ட கட்டுரைகளாவது எழுதுவது வரவேற்கத் தக்கது தான். ஆனாலும் செல்வா சொன்னது போல் இத்துடன் நாங்கள் திருப்தி அடைய முடியாது. கருத்துச் செறிவுள்ள நிறைந்த தகவல்களைக் கொடுக்கக்கூடிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவுக்கு அவசியம். கூடிய எண்ணிக்கையில் கட்டுரைகள் இருப்பது, தேடு பொறிகளில் தமிழ் விக்கிபீடியா அகப்படுவதற்கான வாய்ப்புக்களைக் கூட்டியுள்ளது. இதனால், கோட்பாட்டளவில் பலர் தமிழ் விக்கியை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், வருபவர்களை மீண்டும் மீண்டும் வரச் செய்வதற்குக் கட்டுரைகளின் தரம் முக்கியம். கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உளவியல் ரீதியான ஊக்கத்தை நமக்குத் தருகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். குறுங் கட்டுரைகளை மட்டுமே எழுதுவதற்கான வசதிகள் உள்ளவர்கள் அதையே தொடரலாம். முடிந்தவர்கள் இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவோ அல்லது புதிதாக விரிவான கட்டுரைகளை எழுதவோ முயலலாம். சிலராவது இம் முயற்சியில் முனைப்பாக ஈடுபடவேண்டியது அவசியம் என்றே எனக்கும் தோன்றுகிறது. Mayooranathan 13:41, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

//ஆனாலும், வருபவர்களை மீண்டும் மீண்டும் வரச் செய்வதற்குக் கட்டுரைகளின் தரம் முக்கியம். // மயூரநாதன், நான் சில சமயங்களில் சுட்டிக் காட்டியது இதனையே. மிகப் பெருமளவு கட்டுரைகள் ஓரிரு வரிகளுடன் உள்ளன. தேடலின் போது எப்பொழுதும் விக்கிபீடியாக் கட்டுரைகள் முதலாவதாக வரும். அதனைச் சொடுக்கி இங்கு வரும் பலருக்குப் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே எஞ்சும். மிகச் சிறு கட்டுரைகளைச் சிறிதேனும் விரிவாக்க, படிமங்கள் சேர்க்க, கட்டுரைகளை ஒன்றிணைக்க, பொருத்தமற்றவற்றை நீக்க நாமெல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்...

கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்புத் தரும் ஊக்கம் நானும் உணர்ந்ததுதான். நான் ஆரம்பத்தில் தொடர்ச்சியாகக் குறுங்கட்டுரைகள் உருவாக்கியதும் சிந்துவை எழுத ஊக்குவித்ததும் அந்த அடிப்படையில்தான். ஆனால் இப்பொழுது பத்தாயிரம் தாண்டிப் பன்னிரண்டாயிரம் நெருங்குகிறோம். விக்கிபீடியாவின் தரமும் நம்பகத்தன்மையும் முக்கியம்.

மற்ற மொழி விக்கிபீடியாக்களுடனான எண்ணிக்கை ஒப்பீடு பற்றி நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இருக்கும் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதும் கட்டுரைகள் ஒன்றுடன் ஒன்று தொடுத்து சிகப்பு இணைப்புக்களை நீக்கி முன்செல்வதும் மொழிகள், நாடுகள், தனிமங்கள் போல ஏனைய முக்க்கிய விடயங்களில் ஓரளவேனும் முழுமையை அடைய முயற்சிப்பதும் முக்கியம். எல்லா விக்கிபீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் அனைத்தையும் எழுதி முடிப்பதும் பயன்தரும்.

நான் முன்பொருமுறை கேட்ட்தையே மீண்டும் கேட்கிறேன். முதல் 2000 குறுங்கட்டுரைகளில் ஒரு 500 ஆவது நன்கு விரிவாக்கப்படக் கூடியவை. புதுக் கட்டுரைகள் எழுதுமளவு குறுங்கட்டுரை விரிவாக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இன்னொன்று: மொழிபெயர்க்க வேண்டிய பக்கங்களுக்கான பகுப்பைத் துப்பரவு செய்ய வேண்டும். அதில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் பன்னெடுங்காலமாக உள்ளன. தமிழில் தேடி வரும் ஒருவருக்கு ஆங்கில உள்ளடக்கம் ஏமாற்றங் கொடுக்கலாம். கோபி 14:32, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

"25.2% கட்டுரைகள் 512 'பைட்டுக்கும் குறைவாக உள்ளன". இந்தப்புள்ளிவிபரத்தில் 'பக்கவழி நெறிப்படுத்தல்' கட்டுரைகளும் உள்ளன. அவைகளை இக்கணிப்பிலிருந்து நீக்கிவிட்டபிறகு 512 பைட்டுக்கும் குறைவாக எத்தனை கட்டுரைகள் இருக்கும்? --Profvk 17:50, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

பன்னீராயிரத்தில் 25% எனும் போது சுமார் 3000 கட்டுரைகள் 512 பைட்டு அளவை விடச் சிறியவை. இவற்றில் பக்கவழிப்படுத்தற் பக்கங்கள் சுமார் 50 மட்டும்தான் வரும். ஆனால் இங்குள்ள சிறப்புப் பக்கங்களினூடாகக் குறுங்கட்டுரைகளுக்குச் [12]சென்றால் 512 பைட்டு அளவுக் கட்டுரைகள் மொத்தமே 50 ஐவிடக் குறைவு. விக்கி இணைப்புக்கள், தலையங்கள், html இணைப்புக்கள் போன்றவற்றையெல்லாம் சேர்ப்பதால்தான் இவ்வளவு குறைவாக உள்ளது. அவையெல்லாம் இல்லாத புள்ளி விபரமே (3000 கட்டுரைகள்< 512 பைட்டு) சரியானது. ஆக குறைந்தது 2800 கட்டுரைகள் 512 பைட்டை விடச் சிறியவை. கோபி 18:21, 11 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

இல்லாததை விட இருப்பது நன்று. ஒரு விடயத்தைப் பற்றி குறுங்கட்டுரைதான் இருக்கின்றது என்று நாம் ஏன் இவ்வள்வு அங்கலாய்க்கின்றோம் என்று தெரியவில்லை. ஒருவர் தட்டு பட்டு வந்து இங்கு ஏமாறுகின்றார் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. "கலைக்களஞ்சியத்துக்குரியது, அற்றது" என்று இறுக்கமான வரையறைகளை தவிர்க்கலாம். மாற்றாக தகவல் விடய சார்பாக தரப்பட்டதா என்று பார்க்கலாம். --Natkeeran 00:22, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

இந்திய மொழிகளின் விக்கியாக்க வேகம்

தொகு

பல மொழிகளில் ஒருவரிக்கட்டுரைகள் எழுதி எண்ணிக்கையைக் கூட்டினாலும், நல்ல கட்டுரைகளும் எழுதி வருகின்றனர். பல கட்டுரைகள் தமிழ்மொழியை விட நன்றாகவும் விரிவாகவும் எழுதியிருப்பது தெரிகின்றது. அதே போல வேறு சில கட்டுரைவெளிகளில் தமிழில் நன்றாகவும் விரிவாகவும் உள்ளன. ஆனால் கட்டுரை ஆக்க வேகத்தில் நம்மை விட முன்னணி இந்திய மொழிகள் மிக விஞ்சி வருகின்றார்கள். எடுத்துக்காட்டுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் முதல் 12 நாட்களில் ஆக்கிய கட்டுரைகளின் புள்ளிக்குறிப்புகளைப் பாருங்கள்:

வங்காளி தொய்வு உற்றிருப்பதுபோலத் தெரிகின்றது. கன்னடமும் மெள்ள வளருகின்றது. ஆனால் மலையாளம், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகியவை விரைந்து வளருகின்றன. கட்டுரைகளின் 'பைட் அளவை மேலே உள்ள பக்கங்களைச் சொடுக்கினால் பார்க்கலாம். சுருங்கச்சொன்னால், தமிழின் கட்டுரையாக்க வேகம் மிகப்பிந்தியுள்ளது (எனவே நாமும் சில மொழிகளைப்போல ஒரு வரி கட்டுரைகள் எழுதவேண்டும் என்று சொல்ல வில்லை). என் பார்வையைப் பகிர்ந்து கொள்ளவே எழுதுகிறேன். 30 பேர் வந்து ஆளுக்கு நாளொன்றுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அது எளிது, 10 பேர் நாளொன்றுக்கு 3 கட்டுரைகள் எழுதுவது கடினம். 5 பேர் நாளொன்றுக்கு 6 கட்டுரைகள் எழுதுவது மிகமிகக்கடினம். எனவே பயனர்கள் முன்வந்து ஓரிரு கட்டுரைகளாவது எழுத வேண்டுகிறேன். --செல்வா 19:06, 12 அக்டோபர் 2007 (UTC) இயன்றால் நாம் நாளொன்றுக்கு 20-30 கட்டுரைகள் எழுதவேண்டும். அப்பொழுதுதான் 75 மில்லியன் தமிழர்களாகிய நாம் ஓரளவிற்காவது வரிசையில் இருப்போம். நாளொன்றுக்கு 20-30 கட்டுரைகள் என்பதனைக் குறிக்கோளாகக் கொள்ளலாம் (இதில் உள்ள இடர்ப்பாடுகளை நன்கு அறிவேன், ஆனால் முடியும்!!). தற்பொழுது இருக்கும் வேகம் பற்றாது. எனவே கட்டுரைகளின் தரம், கருத்துவெளியின் பரப்பு, கட்டுரையாக்க வேகம் என்று பல கோணங்களில் நாம் முன்னேற வேண்டியுள்ளது. நரசிம்மன், L.vivian.richard.tamil போன்று இன்னும் பலர் முன்வரவேண்டும். மிக நல்லமுறையில் முன்னர் எழுதிய முன்னோடிகளாகிய சந்தோஷ்குரு போன்றவர்களும் முன்வரவேண்டும். சந்திரா, ஹரிகிருஷ்ணன் போன்றோர் மிக நன்றாக எழுதக்கூடியவர்கள். காயத்திரி, மதுபாலா, விஜய்கிருஷ்ணா போன்ற பலர் மீண்டும் பங்களிக்கலாம். --செல்வா 19:24, 12 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சிக்காக இந்தியப் பல்கலைகழகங்களுடன் இணைந்து செயலாற்றுவதாக ஜிம்மி வேல்ஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஒரு வேளை, பிற இந்திய மொழி விக்கிகளின் அசுர வளர்ச்சிக்கு இது காரணமாக இருக்குமோ? உண்மையில் இப்படி பல்கலைக்கழக அல்லது organisational ஈடுபாடு இருக்கிறதா என்று பிற விக்கி ஆலமரத்தடிகளில் கேட்டறிய வேண்டும். மற்ற எல்லா மொழிகளைக் காட்டிலும் மலையாள விக்கி ஆழத்திலும் அகலத்திலும் வளர்ந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.--Ravishankar 22:10, 12 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]


குறிப்பிட்ட தலைப்பில் எழுதி தர எழுத்தாளர்கள் உள்ளார்கள். ஆனால் தட்டச்சு, விக்கியாக்கம் செய்ய பயனர்கள் இல்லை. தமிழ் தட்டச்சு கல்லூரிகளில் பாடமாகும் வரை, பரவலாக பயன்பாட்டுக்கு வரும்வரை அதுவே ஒரு பெரும் தடையாக இருக்கும். --Natkeeran 00:15, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிபீடியாவின் வேகம் தொடர்பில் செல்வாவின் உணர்வுகளே எனக்கும் உண்டு. உண்மையில் தமிழ் விக்கிபீடியா இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கலாம், ஆனால் அது தொடந்தும் தாமதப்படுகின்றது என்ற குறை எனக்கும் உண்டு. ஆனால், ஏனைய இந்திய மொழி விக்கிகளுடன் ஒப்பிடுவது நம்மைச் சரியான வழிக்கு இட்டுச் செல்லும் என எனக்குத் தோன்றவில்லை. செல்வா கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள் தமிழை விட ஏனைய சில இந்திய மொழிகள் வேகமாக வளர்வதாகக் காட்டினாலும் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவது சரியாகத் தெரியவில்லை. மலையாள விக்கியை மட்டும் தான் ஒப்பீட்டுக்காகக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஏனையவை நிச்சயமாக ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல. செல்வாவின் குறிப்பிலுள்ள இணைப்புகளின் வழி சென்று, அதனூடாக சில கட்டுரைகளையும் சென்று பார்த்தால் கட்டுரையின் பைட் அளவுகள் எவ்வாறு பிழையான தகவலைத் தருகின்றன என்று அறிந்து கொள்ளலாம். அவ்வாறான கட்டுரைகள் தான் வேண்டுமெனில் இப்பொழுது தமிழ் விக்கியில் பங்களிக்கும் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு நாளில் 500 கட்டுரைகள் எழுதலாம். அதுவல்ல நமக்கு வேண்டியது. இறுதியில் நம்முடைய உழைப்பு தமிழ் மக்களுக்குப் பயனுள்ளதாகவும், நமது மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உரமளிப்பதாகவும் இருக்கவேண்டும். பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வது நமக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும் என்பது உண்மை. தமிழ் விக்கிபீடியர் மத்தியில் ஒரு வேகத்தை உருவாக்குவதற்காகவே செல்வா இத் தகவல்களைக் கொடுத்துள்ளார். செல்வாவின் இந்த உத்தி தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு முன்னரும் பல தடவைகளில் உதவியிருக்கிறது. எனவே இதனைக் குறைகூறுவது எனது நோக்கமல்ல. அந்த நோக்கத்தைப் பங்களிப்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காவே இதனை எழுதினேன். ரவி குறிப்பிட்டு இருப்பதுபோல பிற இந்திய மொழி விக்கிகள் எதுவும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்றுகின்றனவா என எனக்குத் தெரியாது ஆனால், உருவாகும் கட்டுரைகளையும், அவை உருவாகும் விதத்தையும் பார்க்கும்போது அத்தகைய இணைப்புக்கள் எதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை.
ஒரு நாளுக்கு 20-30 கட்டுரைகள் என்பது நிச்சயமாக அடையக்கூடிய ஒன்றுதான். திட்டமிட்டு முயற்சித்தால் முடியும். என்னைப் பொறுத்தவரையிலும் கூட, சரியாகத் திட்டமிட்டால், நான் விக்கியில் செலவிடும் நேரத்தில் கூடுதலான கட்டுரைகளை எழுதமுடியும். சராசரியாக ஒரு நாளுக்கு 3-5 கட்டுரைகள் வரை எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு என்னால் முடியும் என்று எண்ணுகிறேன். எனினும், எண்ணிக்கையைக் கூட்ட முயலும்போது கட்டுரைகளின் நீளம் குறைந்து விடுகிறது.
மலையாள விக்கியைப் பற்றிப் பேசும்போது ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இங்கே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான மலையாளிகள் உள்ளனர் அவர்களோடு பழகியதில் சில விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. பல விடயங்களையும் அறிந்து கொள்வதில், அல்லது அறிவு தொடர்பான, அவர்களுடைய மனப்போக்கு (attitude), நிச்சயமாக வேறுபட்டது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் சிறிய மொழிகளில் ஒன்றான மலையாள மொழியில் வெளிவரும் பத்திரிகைகளே இந்திய அளவில் அதிக விற்பனையுள்ளவை என்பது வியப்பாக இல்லையா. தமது கலை, பண்பாடுகளுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்புப் போற்றத்தக்கது. இதனால்தான் மலையாள விக்கிபீடியாவும் சிறப்பாக வளருவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பது எனது கருத்து. Mayooranathan 07:46, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
மயூரநாதன், நீங்கள் கூறுவது உண்மைதான். என்றாலும் சில கருத்துக்களையும் கூற விழைகிறேன். தர அளவீட்டில் தமிழே முன்னணியில் உள்ளதாக நம்புகிறேன், ஆனாலும் அது ஒரு சில கண்ணோட்டத்தில்தான். எடுத்துக்காட்டாக தெலுங்கு மொழி விக்கியில் 90.7% கட்டுரைகள் 'பைட் அளவில் 512 'பைட்டை விட குறைவாக உள்ளன ஆனால் தமிழில் 25.2% கட்டுரைகள்தாம் அப்படி உள்ளன (கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கில் 3348 கட்டுரைகள் 512 'பைட் அளவை விட அதிகமாக உள்ளன, தமிழில் 8676 கட்டுரைகள் அவ்வாறு உள்ளன. தமிழில் மொத்தம் 11,600 கட்டுரைகள் உள்ளனவாகக் கொண்டுள்ளேன், தெலுங்கில் 36,000). ஆனால் தெலுங்கில் 108 கட்டுரைகள் 16 கிலோ 'பைட்டை மீறுகின்றது, தமிழில் இவை 46 தான். அதே போல தெலுங்கில் 8 கிலோ 'பைட்டை மீறுவன 216, தமிழில் அவை 162 தான்). இவை எல்லாமும் வெறும் 'பைட் அளவு மட்டுமே கொண்டது. ஆனால் தரத்திலும் பல கட்டுரைகள் தமிழைப் போலவோ அல்லது இன்னும் சிறப்பாகவோ இருப்பதாக நினைக்கிறேன் (நான் பார்த்த அளவிலே). இந்தி, மராத்தி விக்கிகளில் தனிமங்களைப் பற்றி "யஹ் ஏக் பௌதிக் தத்வ ஹை" என்று ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒவ்வொரு கட்டுரைகள் இருப்பதும், ஒவ்வொரு ஆண்டுக்கும், 10 ஆண்டுகளுக்கும் உள்ளடக்கமே இல்லாமல் "கட்டுரைகள்" இருப்பதும் போன்ற நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான ஆக்கங்களை நான் அறிவேன். நம் குறிக்கோள் பிறருடன் ஒப்பிடுவது மட்டும் அல்ல. நம் ஆக்கங்கள் நம் மக்களுக்குப் பயனுடையதாக இருக்கவேண்டும் அதுவே குறிக்கோள். 75 மில்லியன் மக்களாக இருக்கும் நாம், நம் மொழியைச் செம்மொழி என்று அறிந்திருக்கும் நாம், இன்னும் அழகாக இன்னும் விரிவாக ஆக்க வேண்டும் என்ற உந்துதலுக்காகக் குறிப்பிட்டேன். இங்கு உழைப்பவர்கள், மிகக் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதனை அறிவேன், என்றாலும், இன்னும் பல நண்பர்களும் தோழர்களும் வந்து கை கொடுக்கமாட்டார்களா, சற்று விரைவைக் கூட்ட மாட்டார்களா, தரம் சேர்க்க உதவ மாட்டார்களா என்னும் நினைப்பிலே முன் வைத்தேன். சிறுதுளி பெருவெள்ளம். தமிழ் விக்கியில் 2559 பயனர்கள் பதிவு செய்திருக்கும் பொழுது, ஒரு 500 பயனர்களாவது ஆளுக்கு ஒரேயொரு விடுபட்ட அடைப்புக் குறியையோ, அல்லது ஒரேயொரு எழுத்து திருத்தத்தையோ ஒரு நாளைக்கு செய்தால் ஒரே மாதத்தில் 15,000 பிழைகளை நீக்க முடியுமே. கூட்டுழைப்பின் அருமையே அதுதானே. ஆளுக்கு ஒரு 5 மணித்துளி ஒரு நாளைக்குத் தந்தால் ஒரு மாதத்தில் 1250 மணிநேர உழைப்பு பொதுப்பயனில் சேருமே (52 மனிதர்கள் 24 மணிநேரமும் உழைத்தது போன்ற உழைப்பு அல்லது 156 மனிதர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் உழைத்தது போன்றது). அதாவது இன்னும் பலரும் சிறு சிறு அளவிலாவது உழைப்பு தரலாம் என்பதே. கருத்து தெரிவித்த மயூரநாதன் மற்றும் எல்லோருக்கும் என் நன்றிகள். --செல்வா 14:25, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ICAAN tamil domain test

தொகு

வணக்கம் தோழர்களே, தத்தம் மொழிகளில் domain பெயர்களைப் பெறுவதற்கான சோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த வகையில் சோதனைகள் ஒருவிக்கியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குப் பங்கெடுக்க அனைத்து இணையத் தமிழார்வலர்களும் முன்வர வேண்டும்.

சோதனை முயற்சிகள் ஒரு விக்கியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்

இந்தத் தகவலை ரவி தமிழ்விக்கிபீடியா வலைப்பதிவில் இடுவதன் மூலம் தமிழ்மண முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி கோபி 17:51, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

முதற்பக்கமே எழுத்து, சொல், வசனப் பிழைகளுடன் காட்சியளிக்கின்றது. அதனால் முதற்பக்கத்தை காப்புநீக்கக் கோரி அது இப்பொழுது காப்புநீக்கப்பட்டுள்ளது. ஆதலால் முதற்பக்கப் பிழைகளை உடனடியாகத் திருத்த உங்களை அழைக்கிறேன். நன்றி. கோபி 18:00, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

  • ===இணைய மேல்நிலைப் பகுப்புப்பெயர்கள்===

கோபி, என் நண்பர் ஒருவர் (பேரா பொன்னம்பலம்) இது பற்றி குறிப்பு விடுத்திருந்தார். பின்னர், உங்கள் குறிப்பைப் பார்த்தவுடன், உடனே சென்று சில மாற்றங்கள் செய்தேன். பெருமைப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு இது! முதல் 11 மொழி எழுத்துக்களில் தமிழும் ஒன்றாக இருப்பது அருமை! நீங்கள் கூறியவாறு நல்ல தமிழில் அமையாது இருந்துவிட்டது வருந்தத்தக்கதுதான், ஆனால் செய்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுதியுள்ளார்கள். அவர்களைப் பாராட்டுவோம். நான் பயர் பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டிலும் சொடுக்கிப் பார்த்தேன், வெட்டி ஒட்டியும் பார்த்தேன், மிக அருமையாக வேலை செய்கின்றது!--செல்வா 19:52, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

என்னால் மேலே சுட்டப்பட்ட இணைப்பை அணுக முடியவில்லை. --Natkeeran 22:08, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

http://உதாரணம்.பரிட்சை/ அல்லது http://xn--zkc6cc5bi7f6e.xn--hlcj6aya9esc7a/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D கோபி 22:12, 16 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]


இரண்டாவது வேலை செய்கிறது; இணைப்பு வேலை செய்கிறது. அங்கே முதல் இரண்டும் வேலை செய்கிறது. மூன்றாவது வேலை செய்ய வில்லை. ie - 6.0 - கனடா.--Natkeeran 00:19, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
http://உதாரணம்.பரிட்சை/ இண்டநெட் எக்ஸ்புளோறர் உலாவி 6.0 (விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 2 உள்ள கணினியில்) இல் வேலை செய்யவில்லை தவிர இண்டநெட் எக்ஸ்புளோளரின் இதை முயற்சி செய்தபோது கணினி நிலைகுலைந்து விட்டது (Crashed). விண்டோஸ் எக்ஸ்பி சேவைப்பொதி 2 உள்ள கணினியில் பயர்பாக்ஸ் உலாவியில் சரியாக வேலைசெய்கின்றது.--Umapathy (உமாபதி) 02:25, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

உங்கள் சோதனை முடிவுகளைக் குறித்த தளத்தின் முதற்பக்கப் பேச்சுப் பக்கத்தில் ஆங்கிலத்தில் குறிப்பது பயனுள்ளதாயிருக்கும் என நினைக்கிறேன். கோபி 06:08, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஆம் நிச்சயமாக :) கப்பலோட்டிய தமிழன் போல இன்று நாம் இணையத்தில் தமிழ் டொமைன்களை ஏற்றிவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் :) --Umapathy (உமாபதி) 08:13, 17 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

இந்திய முன்னேற்ற நுழைவாயில்

தொகு

--Natkeeran 02:00, 20 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

செப்டம்பர் 2007 - புள்ளி விபரங்கள்

தொகு

செப்டம்பர் மாதத்திற்கான புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டு விட்டன.--Sivakumar \பேச்சு 10:52, 29 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஒருவரிக் குறுங்கட்டுரைகள் நீக்குதல்

தொகு

ரஷ்ய உட்குடியரசுகள் தொடர்பாக ஒருவரிக் கட்டுரைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை கால அவகாசங் கொடுத்து நீக்குவது தொடர்பில் பயனர் கருத்துக்களைக் கோருகிறேன். நன்றி. கோபி 14:21, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

உருசிய உட்குடியரசுகள் என்ற பக்கத்துக்கு இக்கட்டுரைகளின் விவரங்களை ஒரு பட்டியலாக நகர்த்திய பின் அழிக்கலாம்--Ravishankar 20:33, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரஷ்யாவின் உட்குடியரசுகள் ஏற்கனவே உள்ளது. கோபி 20:37, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரஷ்யாவின் உட்குடியரசுகள் தொடர்பான ஒருவரிக் கட்டுரைகளை தயவு செய்து நீக்க வேண்டாம். அவற்றை நேரம் கிடைக்கும்போது விரிவாக்குவேன். நன்றி.--Kanags 21:20, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி சிறீ அண்ணா. ரசியா தொடர்பில் என்றதால் நீங்கள் விரிவாக்கக்கூடும் என்றே நினைத்தேன். ஆனால் தனிப்பட உங்களிடம் கேட்பது உங்கள் பணிச்சுமையை அதிகரிப்பதாக போய்விடுமோ என்றதால் இங்கே கேட்டேன். கோபி 21:24, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பயனர் 59.92.46.215 இன்று உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளும்கூட ஒருவரிக் கட்டுரைகளே. இத்தகைய கட்டுரை அதிகரிப்பால் எந்தப் பயனுமில்லை. ஆண்டுகள் போன்றன தொடர்பான கட்டுரைகள் இவ்வாறு முன்பு உருவாக்கப்பட்ட போது உடனடியாக நீக்கப்பட்டமை மனஙகொள்ளத்தக்கது. ஒரு பட்டியலுக்கப்பால் புதிதாக எதுவும் சேர்க்கப்படவுமில்லை. த.வி.யும் ஏனைய சில இந்திய விக்கிபீடியாக்கள் போல ஒருவரிக் கட்டுரைகளை ஊக்குவிப்பது கலைக்களஞ்சியத் தரத்தைக் குறைக்கும். நன்றி. கோபி 14:33, 7 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

கோபி, நானும் கவனித்தேன். அந்த அனாமதேயப் பயனர் இப்படி ஒருவரிக் கட்டுரைகளை அளவு கணக்கின்றி எழுதிக் குவிப்பது தமிழ் விக்கிபீடியாவுக்கு அவ்வளவு அழகல்ல. அந்தப் பயனரையும் தொடர்பு கொள்வது சிரமமாயிருக்கிறது. பயனர் கணக்கும் தொடங்குகிறார் இல்லை. ஒப்லாஸ்துகள் தொடர்பான கட்டுரைகளை நீக்குவது நல்லது. ஒரு மாதம் அவருக்கு தவணை கொடுங்கள். உட்குடியரசுகள் கட்டுரைகள் இருக்கட்டும். அவற்றை விரைவில் நான் மேம்படுத்துவேன்.--Kanags 21:53, 7 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
கோபி, ஓப்லஸ்துகள் தொடர்பான கட்டுரைகளை செல்வா மேம்படுத்துகிறார் போற் தெரிகிறது.--Kanags 01:21, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆம், தகவற்சட்டங்களை இணைப்பதன்மூலம் கட்டுரைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்றே தெரிகிறது. கட்டுரை எண்ணிக்கையைக் குறைக்காமலிருப்பது எனக்கும் மகிழ்ச்சிதான் :-) நன்றி. கோபி 01:56, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நடப்பு நிகழ்வுகளை இற்றைப்படுத்துவதற்குப் பாராட்டுக்கள்

தொகு

அண்மைக்காலத்தில் கனக்ஸ், டெரன்ஸ், நற்கீரன், மயூரன் ஆகியோர் உழைப்பில் நடப்பு நிகழ்வுகள் விரிவாக எழுதப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வலையில் நடப்பு நிகழ்வுகளை மக்கள் அதிகம் வாசிப்பதால் தமிழ் விக்கிபீடியாவுக்கு கூடுதல் வரவேற்பை இது பெற்றுத் தரும். எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பகிர்ந்து கொள்கிறேன். --Ravishankar 20:36, 4 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவியின் மேற்கூறிய கருத்தே என்னுடையதும். ஊடகங்களும் தமிழ் விக்கிபீடியாவை அவதானிக்கின்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெளிவாகத் தெரிகின்றது. --Umapathy (உமாபதி) 07:33, 5 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தீபாவளி 2007

தொகு

இலங்கையில் இன்று (நவம்பர் 8) தீபாவளி விடுமுறை என அறிந்தேன் தீபாவளிக் கட்டுரையில் நவம்பர் 9 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எது சரி?--டெரன்ஸ் \பேச்சு 00:29, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

இன்று நவம்பர் 8 இல் இலங்கையிலும் இந்தியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அக்கட்டுரை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அங்கு தான் தவறு விட்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. விக்கிபீடியர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags 01:18, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். Mayooranathan 03:41, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தட்டச்சு உதவி, புதுப் பயனர் உதவி

தொகு

இவை மேலே ஒவ்வொரு ப்க்கத்தில் தரப்பட்டிருந்தன. அவை இப்போ என்கே? --Natkeeran 13:19, 10 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

நிதித் திரட்டு அறிவிப்பு வந்த பிறகு இவை காணாமல் போய் விட்டன. mediawiki:sitenotice பக்கத்தில் இவை உள்ளன. திரும்ப எப்படித் தெரியச் செய்வது என்று பார்ப்போம்.--ரவி 16:41, 16 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
  • நான் புதுப்பயனராக விக்கிபீடியாவில் இணைந்துள்ளேன். என்னால் இயன்றவரை எனக்கு தெரிந்த மற்றும் விக்கிபீடியாவில் கிடைக்கப்பெறாத புதுவிஷயங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். என்னுடைய விவரங்களை சற்றே திருத்தம் செய்ய விரும்புகிறேன். இதற்கான விவரங்கள் காணக்கிடைக்கவில்லை. முக்கியமாக என்னுடைய பெயரினை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துள்ளேன். இதனை தமிழில் மாற்ற விழைகிறேன். பயனர்கள் தயவுசெய்து உதவவும் --வாத்ஸல்யன் 07:58, 20 ஏப்ரல் 2013