விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு77

கணிதம் வலைவாசல் தொகு

கணித வலைவாசலுக்கு என்னவாயிற்று? அதனை திருத்தினால் முத்ற்பக்கத்தில் இடலாம் அல்லவா.--Prash (பேச்சு) 06:35, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆம், இதனை மேம்படுத்த வேண்டும். கணிதத் துறையில் ஆர்வமுள்ள பயனர்:Booradleyp போன்றவர்கள் மேம்படுத்த உதவலாம். பிரசாந்த், உங்களுக்கு இத்துறையில் ஆர்வமிருந்தால் உதவுங்கள்.--Kanags \உரையாடுக 09:42, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]
பயனர்:Booradleyp மற்றும் Prash சேர்ந்து ஒரு வலைவாசலில் பங்களித்தால் அக்கட்டுரைகளில் நக்கீரரால் கூட பிழை கண்டுபிடிக்க முடியாதாக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:23, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

மீண்டும் பங்களிப்பாளர் அறிவிப்பு தொகு

இப்போது விக்கியில் தள அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லையே. மீண்டும் பங்களிப்பாளர் தள அறிவிப்பு தொடங்கி வையுங்களேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:23, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

நினைவூட்டலுக்கு நன்றி. தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகம், முதற்பக்கத்தில் கட்டுரையாக்கத் தூண்டல் குறித்து இந்த மாதம் கவனம் செலுத்திச் செயற்படுத்துகிறேன். இவற்றை இடும் முன் சில உதவிப் பக்கங்களை உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறேன். --இரவி (பேச்சு) 19:07, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

விக்கிபல்கலைக்கழகம் விண்ணப்பம் தொகு

விக்கிப்பல்கலைக்கழகம் திட்டத்திற்கான விண்ணப்பம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எல்லோரையும் அப்பக்கத்தின் கீழே வாக்குகளிக்க வேண்டுகிறேன். --இராச்குமார் (பேச்சு) 07:48, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

அங்கு வாக்களிப்பதற்கான இடம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:55, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

Proposal க்கு கீழ் support என்ற துணைத்தலைப்பின் கீழ் உங்கள் கையொப்பத்தை இடுங்கள். --இராச்குமார் (பேச்சு) 08:57, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • இராச்குமார், நானும் வாக்களித்துள்ளேன். விக்கிப்பல்கலைக்கழகம் என ப் சேர்த்து எழுதியுள்ளேன். நானும் வெகு காலமாக இதனைத் தொடங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் போதிய பங்களிப்பளர் வளம் நம்மிடம் இன்னும் சேரவில்லை என்பதாலேயே தயங்கி நின்றேன். விக்கிப்பீடியாவிலேயே பல திட்டங்கள் ஓரளவுக்கு வளர்ந்து இருந்தாலும் இன்னும் சரிவர முழுமை பெறவில்லை. நம் ஆற்றல் அதிகம் சிதறுமோ என்பதே என் கவலையாக இருந்தது. ஆனால் விக்கிப்பீடியாவில் எழுத முடியாத அளவுக்கு விளக்கியோ, எளிமைப்படுத்தியோ, எடுத்துக்காட்டுகள் தந்து விக்கி நூல்களில் எழுதலாம். அவற்றை இங்கே விகிப்பீடியாவிலும் விக்கிச்செய்திகளிலும் சுட்டுகள் தந்து பயனைப் பெருக்கிக்கொள்ளலாம். அதே போல விக்கி நூல்களும் விக்கிப் பல்கலைக்கழகமும் சேர்ந்தியங்க இயலும் பல துறைகளில், இங்கே விக்கிப்பீடியாவுக்கும் நற்துணையாக இருக்க இயலும். விக்கியின் உறவுத்திட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று துணை செய்யுமாறும் அமைய நிறைய வாய்ப்புக்கூறுகள் உள்ளன. எனவே இதனை நான் வரவேற்கின்றேன். பிற மொழிகளிலும் விக்கிப் பல்கலைகழகம் அவ்வளவாக முன்னேறவில்லை. மலேசியக் கருத்தரங்கில் விக்கிப்பல்கலைக்கழகத்தை நாம் பயன்படுத்திக்கொள்வது குறித்துக் கூறினன். இதில் ஒலி, நிகழ்படம் ஆகிய வகைகளிலும், சேர்த்து வளமாக வளர்த்தெடுக்க வாய்ப்புகள் மிகவுண்டு. ஆனால் நம் ஆற்றல் சிதறுறாமல், இருக்கும் பணிகளில் குவியம் கலையாமல் செயல்படுவது திறன்கூவல், அறைக்கூவலாக இருக்கலாம்.. பலரும் வாக்களித்து தொடங்கி வைக்க நானும் வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 12:27, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • ஆலமரத்தடியில் முதலில் கலந்துரையாடிவிட்டுப் பிறகு அதற்கேற்ப அங்கு விண்ணப்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏற்கனவே உள்ள தமிழ் விக்கித் திட்டங்களிலேயே செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதால், இப்போது இத்திட்டம் வேண்டாம் என்று நடுநிலை வாக்கு இட்டுள்ளேன். தமிழ் விக்கித் திட்டங்களுக்கு ஓரளவு பங்களிப்பாளர் எண்ணிக்கை கூடிய பிறகோ 2015க்குப் பிறகு இதைத் தொடங்கலாம் என்று கருதுகிறேன். --இரவி (பேச்சு) 13:29, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
இரவி. முன்பொரு நாள் விக்கிப்பீடியாவில் உள்ள முதற்பக்கத்தின் அடிப்பகுதியில் உறவுத் திட்டத்தில் உள்ள விக்கிப்பல்கலைக்கழகம் என்பதை அழுத்திய போது அது மெடாவிக்கிச் சென்றது. பிறது இத்தளம் இன்னும் உறுவாக்கப்படவில்லை என்ற செய்தியுடன், திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு இணைப்பு இருந்தது. பிறகு எங்கங்கோ சென்று எதனையோ படித்து அரைகுறையாக விண்ணப்பித்துவிட்டேன். பிறகு நிறைய செய்தி அறிந்த பின் நீக்கிவிடலாம் என விட்டுவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் நான் தொடர்ந்தேன். பிறகு தொடங்களாம் என்றால் சரி. எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நன்றி.--இராச்குமார் (பேச்சு) 13:43, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

வாக்களித்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:11, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரவி, உங்கள் நினைப்பே என்னைப்போல் பலருடைய நினைப்பும். எனினும், தொடங்குவதால் நன்மைகள் உள்ளன. மேலே கூறியவாறு விக்கிப்பீடியாவுக்கும் பிற திட்டங்களுக்கும் தொடுப்புகள் தந்து விரிவாக்க உதவும். எடுத்துக்காட்டாக இடாய்ச்சு மொழி, கன்னட, பாரசீக மொழி முதலியன பயிற்றுவித்தல் என்றாலோ, அல்லது ஒரு எடுத்துக்காட்டு கணக்கு என்றாலோ, மருத்துவப் பாடங்கள், பொறியியல் பாடங்கள் என்றாலோ அவற்றை நாம் விக்கிப்பீடியாவில் தரமுடியாது. ஆனால் பாடம் போல் அங்கு பல நிலைகளில் தர இயலும். விக்கிநூல்களிலும் எழுத முடியும். மேலும் ஆர்வம் உடையவர்கள் முன்வந்து உருவாக்கும்பொழுது உடன்சென்று ஊக்கம் தந்தால் அதில் ஆர்வம் உடைய வேறுபல ஆர்வலர்களும் வரக்கூடும். இவை அனைத்திலும் தரம் பேணுவது என்பது பெரும் பொறுப்புதான்! ஆனால் எல்லாவற்றையும் போல் இதனையும் கூட்டாகவே செய்ய இயலும். சற்று மெதுவாக சில திட்டங்கள் நடந்தால் தவறில்லை. என் ஆர்வத்துக்குக் காரணம் ஒன்றுக்கு ஒன்று பல வகையிலும் துணையாக இருக்ககூடும். அவற்றுக்குத் தொடுப்புகள் தந்து விக்கிப்பீடியாவையும் வளர்க்கமுடியும். விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ள நற்துணையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக ஆலமரத்தடியில் கருத்துப் பதிந்து பின்னர் செய்யலாம் என்பது மிகவும் பயனுடைய அறிவுரை.--செல்வா (பேச்சு) 14:42, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • விக்கிப் பல்கலைக்கழகம் எனக்கு முற்றிலும் புதியதொரு கருத்து. என்னைப் போல இன்னும் பல பயனர் இருக்கலாம். எனவே, பொதுவானதொரு கலந்துரையாடல் வழியாக ஒத்த கருத்து உருவாக்கி, மேலெடுத்துச் சென்றால் சிறப்பு என எண்ணுகின்றேன். குறிப்பாக, ஏற்கெனவே வெற்றியாக நடைபெறும் மொழி விக்கிப் பல்கலைகள் இருந்தால் அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு சிந்திக்கலாம். --பவுல்-Paul (பேச்சு) 17:17, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
பவுலின் கருத்துடன் உடன்படுகிறேன். விக்கி பல்கலைக்கழத்தின் நோக்கம் என்ன? திறந்த பாடத் திட்டத்தை உருவாக்குவது ஒரு சிறந்த இலக்காக இருக்கும். ஆனால் திட்டத்தை தொடங்கப் பாடுபட்டு, நிறுவி, ஏவி விட ஒரு சிறிய commited அணி இருந்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:28, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • விக்கிமூலம், விக்கிசெய்திகள் இரண்டிற்கும் நேர்ந்த வரலாற்று நிகழ்வுகளை, நாம் இங்கு எண்ணிப்பார்த்தல் சிறப்பு. அவசரமில்லை. நடுநிலை வாக்கிட்டுள்ளேன்.-- உழவன் +உரை.. 04:29, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]
முதலில் தமிழ் விக்கிப்பீடியர்களிடம் உரையாடாமல் விக்கிப்பல்கலைக்கழகம் திட்டத்திற்கு விண்ணப்பித்தற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உறையாட வேண்டும் என்பதும், இதற்கு வாக்கெடுப்புகள் நடக்கும் என்பதை அறியாமலே விண்ணப்பித்தது தான் இதற்கு காரணம். ஆயினும், விக்கிப்பல்கலைக்கழகம் கொஞ்சம் மெதுவாக இப்போது இருந்தே தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்டக் கருத்து. எல்லோரும் விக்கிப்பீடியாவில் தான் முதலில் பங்களிக்க ஆரப்பிக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு விக்கிப்பீடியாவை விட விக்கிநூல்கள் பிடித்திருக்கலாம். விக்கிநூல்கள் இல்லாத காரணங்களால் அவர்களின் விக்கிப்பீடிய பங்களிப்பில் ஆர்வம் குறைந்திருக்கலாம். அது போல் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொருவருக்கு பிடித்தமானதாக இருக்கும். உதாரணமாக எனக்கு விக்கிநூல்களும், விக்சனரியும் தான் பிடிக்கும். ஏனென்றால், விக்கிப்பீடியாவை விட விக்கிநூல்களில் தான் ஒரு முழுமையான அறிவைக் கொடுக்கமுடியும். என்ன கொஞ்சம் நேரமெடுக்கும் அவ்வளவுதான். இது போன்ற எண்ணங்கள் கொண்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் அவர்களிடம் விக்கிப்பீடியாவை பரப்பினால், அவர்களின் ஆர்வம் குறையலாம். எனக்குத் தெரிந்த பலரும் இது போன்று பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர்.

மேலும், விக்கிப்பீடியாவில் இருக்கும் பல கட்டுரைகளை வைத்து ஒரு நூலைத் தயாரிக்கலாம். அவ்வாறு அந்நூலை தயாரிக்கும் பொழுது ஏதேனும் கூடுதல் தகவல் கிடைத்தால் அதனை மீண்டும் விக்கிப்பீடியாவில் சேர்கலாம். மேற்கோள்களாகவும் காட்டலாம். இப்படி தொடர்புள்ள திட்டங்களை வகுக்கலாம். --இராச்குமார் (பேச்சு) 06:10, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

செல்வா, உங்கள் நம்பிக்கையுடன் மாற்றுக் கருத்து இல்லை என்பதாலேயே நடுநிலை வாக்கு இட்டுள்ளேன். எனினும், விக்கிப் பல்கலையில் ஒரு படிப்பை உருவாக்கும் முன் அதற்கான பாடத்திட்ட நூல்களை விக்கிநூல்களில் உருவாக்கலாம். விக்கிநூல்களில் அத்தகைய நூல்களை எழுதும் முன் அவற்றில் உள்ள அடிப்படைக் கருத்துகள் குறித்து விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாவது எழுதலாம். கட்டிடக்கலை (மயூரநாதன்), கணிதம் (பூராடுலி), உயிரியல் ஆகிய சில துறைகள் குறித்து மட்டுமே ஓரளவு இவ்வாறு தொடர் கட்டுரைகள் எழுதி வந்துள்ளோம். இத்திட்டங்களைத் தாண்டி நேரடியாக விக்கிப் பல்கலைக்கழகத் திட்டத்தில் ஆர்வம் காட்டக்கூடிய புதிய பயனர்கள் வரக்கூடும் என்றாலும், ஒரு விக்கிக்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க ஏற்கனவே உள்ள சில பயனர்கள் தான் உதவ வேண்டும். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை நெருங்கியும் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிசெய்திகள் (ஏறத்தாழ சிறீதரனின் தனியாள் உழைப்பு) தவிர மற்ற திட்டங்களில் இதனை நம்மை உருவாக்க முடியவில்லை. மேலும், விக்கிப் பல்கலைக்கழகம் என்பது மற்ற விக்கித் திட்டங்களை விட மிக உயர்ந்த தரத்திலும் இவற்றுக்குச் சிகரமாகச் செயல்படுவதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இல்லாவிட்டால், அதன் முக்கியத்துவம் நீர்த்துப் போய் விடக்கூடும். எனவே, தொடங்கும் முன்னரேயே அது குறித்து மிகத் தெளிவான திட்டமிடலும் பணித்திட்டமும் தேவை என்று எதிர்பார்க்கிறேன். குறைந்தது இரண்டு மாதிரி பாடத்திட்டங்களையாவது முழுமையாக தமிழ் விக்கிப் பல்கலைக்கழகக் கருத்தளத்தில் உருவாக்கிப் பார்த்துப் பிறகு தனித்தளம் கேட்கலாம்.

இராச்குமார், தமிழ் விக்கித்திட்டங்களின் சார்பாக வெளியே அணுகும்போது ஒருமித்த கருத்தோடு அணுகினால் நன்றாக இருக்குமே என்ற கவலையில் சொன்னேன். மற்றபடி, உங்கள் முயற்சி நன்று. நெடுநாள் விக்கி விடுப்புக்குப் பின் மீண்டும் திரும்பி வந்து முனைப்போடு செயல்படுவதைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி --இரவி (பேச்சு) 06:23, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

மாதிரித் திட்டம் இன்குபேட்டரின் முதற்பக்கத்தை முன்பு மொழிபெயர்க்க முயற்சித்தேன். எவரேனும் மொழிபெயர்க்க உதவி செய்ய விரும்பினால் செய்யலாம். --இராச்குமார் (பேச்சு) 06:45, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஐசோலேடட் ஆர்டிக்கிள் தொகு

[1] இது என்ன? விக்சனரியில் ஐசோலேடட் என்றால் ஒதுக்கி வைத்த என்று வருகிறது. இதில் அப்படி என்ன கடுப்பென்றால் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமான 300 பருத்திவீரர்கள் கட்டுரையை அதில் முதலில் போட்டிருப்பதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:53, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆராய்ந்ததில் அப்பட்டியலில் வருவது நானே தொடங்கி மேம்படுதப்படாத கட்டுரைகள் போல் தெரிகிறது. இதில் அனைத்து பயனர்களும் தங்கள் பெயரினை தட்டச்சிட்டு தேடி தாங்கள் தொடங்கி மேம்படுத்தப்படாத கட்டுரைகளை அறிய முடியுமென நினைக்கிறேன். அறிந்து மேம்படுத்தினால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:17, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறில்லை. Isolated Articles என்பது அப்பக்கத்தை இணைத்துள்ள பக்கங்கள் குறைவாக உள்ள கட்டுரைகளைக் குறிக்கும். உறவிலிப் பக்கங்களும் Isolated Articlesஇனுள் அடங்கும். அகரவரிசையில் ஒழுங்குபடுத்தியிருந்ததாலேயே 300 பருத்திவீரர்கள் முதலாவதாக வந்தது. --மதனாகரன் (பேச்சு) 15:22, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

அப்படியா தகவலுக்கு நன்றி. இதன் உபயோகம் என்ன? காரணம் இல்லாமல் இப்படி வைக்க மாட்டார்களே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

மதன் கூறியபடி பார்த்தாலும் உறவிலா பக்கங்களுக்கு உறவேற்படுத்தியும் இணைப்பு கொடுக்கப்படாத கட்டுரைகளுக்கு இணைப்பு கொடுத்தும் தரமுயற்தலாமல்லவா? உதாரணத்திற்கு ஒருவில் விக்கியில் சேர்ந்த புதிதில் எழுதிய கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புகள் எல்லாம் கொடுக்காமல் வைத்திருக்கலாம். தற்போது அது தொடர்பான சொற்களில் கட்டுரை எழுதியிருப்பார். அதை எல்லாம் [[]] கொடுத்து இணைப்பாக்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:31, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]

மேற்கூறிய காரணத்துக்காகவே வைத்திருக்கிறார்கள் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 04:04, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

நெ. து. சுந்தரவடிவேலு கட்டுரைக்கான ஒலிக்கோப்பு மாதிரி தொகு

நெ. து. சுந்தரவடிவேலு கட்டுரைக்கான ஒலிக்கோப்பு மாதிரி இங்கு நான் செய்துள்ளேன். அனைவரின் கருத்துக்களை தரவும். --இராச்குமார் (பேச்சு) 19:09, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

  • அருமையான குரலில் சிறப்பான முயற்சி. பாராட்டுகள், இராச்குமார். ஒலிப்பதிவின் இறுதியில் கட்டுரை இறுதியாக இற்றைப்படுத்தப்பட்ட நாள் அல்லது பதிப்பெண் விவரத்தைத் தரலாம். விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் திட்டத்தில் சரி பார்ப்பு முடிந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒலிப்பதிவுகளைச் செய்தால் குறுந்தட்டிலும் சேர்க்கலாம். கட்டுரைகளின் இறுதியில் வரும் வெளியிணைப்புகள், மேற்கோள்கள், மேலதிக வாசிப்பு குறித்த பகுதிகளை எவ்வாறு ஒலிப்பதிவில் கொண்டு வரலாம் என்று அறிய விரும்புகிறேன்--இரவி (பேச்சு) 15:10, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil pronunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • குரல் இனிமை.தயங்காமல் வாசிக்கவும்.தயங்குவதால், ஏற்ற இறக்கப் பிழைகள் தோன்றுகின்றன. இனி கோப்புகளில், முன்னொட்டாக Ta என இணையுங்கள்.இக்கோப்பில் அத்தகைய மாற்றத்தினை விக்கிப்பொதுவத்தில் செய்து, இங்கும் அவ்விணைப்புகளை கொடுத்து விட்டேன். மேலும், சிலரின் பதிவுகளை விக்கிப்பொதுவத்தில் காணலாம்.அங்கு உள்ள பதிவுகளில் நான் அடிக்கடி கேட்பது, இக்கோப்பு ஆகும். -- உழவன் +உரை.. 15:57, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு முறை செய்து பார்த்தேன். இனிவரும் நாட்களில், குறுந்தட்டு கட்டுரைக்கு ஒலிப்பதிவு செய்கிறேன். இன்னும் தரமாகவும், செய்த பிழைகளைத் திருத்தியும் மேலும் மேம்படுத்த முயல்கிறேன். சில விக்கிச்செய்திகளையும் இவ்வாறு ஒலிப்பதிவு செய்துள்ளேன். --இராச்குமார் (பேச்சு) 10:40, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
மிகவும் நல்ல முயற்சி. மிகவும் பாராட்டுகின்றேன். இராச்குமார், இது உங்கள் குரலா? அருமையாக இருக்கின்றது! ஆனால் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்னும் துணிவில் ஒன்றைக் கூற வேண்டும். மிகவும் தெளிவாகவும் இனிய குரலிலும் இருக்கும் இந்த ஒலியுரையில் ழகர ளகரங்கள் இன்னும் திருத்தமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியது என்பதாலும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். மீண்டும் பாராட்டுகள்!.--செல்வா (பேச்சு) 12:23, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
செல்வா. இந்த ஒரே காரணத்தினால் தான் நான் பெரும்பாலும் தயங்கினேன். நிச்சயம் எல்லா தவறுகளையும் முடிந்த வரையில் தவிர்க்கிறேன். எப்பொழுது வேண்டுமானாலும் தவற்றைச் சுட்டிக் காட்டலாம். நன்றி.--இராச்குமார் (பேச்சு) 14:33, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆய்த எழுத்துப் பாவனை தொகு

எனக்குத் தெரிந்தவரையில் ஆய்த எழுத்து எழுத்தின் முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. நான் அறிந்து கொண்ட காரணங்கள்.

  1. ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. (தொல்காப்பியம்)
  2. எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே (தொல்காப்பியம்)

முதலாவது ஆய்த எழுத்து தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரவேண்டும் எனக் கூறுகின்றது.

இரண்டாவது சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது எனக் கூறுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து என்பதால் இவ்விதி அதற்கும் பொருந்துகின்றது.

பல கட்டுரைகளில் ஆய்த எழுத்து முதலிலும் இறுதியிலும் காணப்படுகின்றது. எனவே இது குறித்த தெளிவான முடிவை எடுப்பது தேவையெனக் கருதுகின்றேன். இதற்கு விதிவிலக்கு இருப்பின் தெரிவிக்கவும். --Anton (பேச்சு) 02:02, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

http://en.wikipedia.org/wiki/Tamil_script#Consonants_of_Modern_Tamil பக்கத்தில்
//In recent times, three combinations of Tamil basic letters are generally used to depict sounds of English letters 'f', 'z', and 'x'. This is for writing English and Arabic names and words in Tamil. The combinations are ஃப for f, ஃஜ for z and ஃஸ் for x. For example: asif = அசிஃப், aZaarudheen = அஃஜாருதீன், rex = ரெஃஸ்.//
இப்படியே போனால் ஆய்த எழுத்துக்கான ஒலிப்பும் பயன்பாடும் முற்றிலும் சிதைந்து போய் விடும். ஆய்த எழுத்துப் பயன்பாட்டைப் பொறுத்தமட்டிலும் முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரவேண்டும் என்னும் தொல்காப்பிய விதியை முற்றுமுழுதாக தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நடைமுறைக்குக் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறேன்--இரவி (பேச்சு) 15:14, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

அப்படி எனின் ஃபாக்சு பீ2 ஃபோன், போன்றவற்றுக்கு என்ன செய்வது..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:16, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

என்னைக் கேட்டால் மாற்றத்தான் வேண்டும் என்பேன். --Anton (பேச்சு) 17:24, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
பொது வழக்கிலிருந்து மாறுவதால் "ஆய்த எழுத்து சீர்மையை" எதிர்க்கிறேன்.மொழி சீர்மையை விக்கிக்கு வெளியே தொடர்வதே உகங்தது என்னும் என் கருத்தை மீண்டும் பதிவு செய்கிறேன். ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 16:43, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
மொழியை நிர்ணயிப்பது இலக்கண விதிகளா அல்லது பொது வழக்கா? எசுப்பானியா பொது வழக்கின்படி ஸ்பெயின் ஆக இருந்திருக்கலாமே? இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. இங்கும் அங்குமாக பயணிக்கக் கூடாது. --Anton (பேச்சு) 17:24, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
தப்பான உதாரணம். பொது வழக்குக்கும் உலக வழக்குக்கும் வித்தியாசம் இருக்கு. நான் கூறுவது தமிழ் மொழி பொது வழக்கு. ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 19:41, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

//என்னைக் கேட்டால் மாற்றத்தான் வேண்டும் என்பேன்.//

அண்டன் நீங்கள் கூறியபடி மாற்றினால் Box p2, Fox p2 எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:32, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

பால் என்று எழுதினால் கூடத் தான் ball, paul, பால் ஆகியவை இடையே வேறுபாடு அறிய முடியாது. b ஒலி வரை முதலில் இ சேர்த்து எழுதலாம். இபால், இபாக்சு என்று. இல்லாவிட்டால் b ஒலிக்கான கிரந்த எழுத்தைச் சேர்க்கலாம் ;) ஃபோன், ஃபிரான்சு போன்றவை பிரச்சினை இல்லை. இவற்றில் முதலில் உள்ள ஃ எழுத்த்தை விட்டு எழுதும் வழக்கமும் உண்டு.

பொதுவழக்கு குறித்த சிரீக்காந்தின் கருத்துக்கு: முற்று முழுதாக தொல்காப்பியத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது. ஆனால், தகுந்த இடங்களில் அதனைப் பின்பற்றுவதில் தவறில்லை. எடுத்துக்காட்டுக்கு, மெய்யெழுத்து சொல்லின் முதலில் வராது என்ற விதி. இதைக் கூடத்தான் பொது வழக்கு பின்பற்றுவதில்லை. அதற்காக, நாம் பின்பற்றுவது தவறு என்று சொல்ல முடியுமா? common misspellingஐ முறையான spellingஆக ஏற்றுக் கொள்ள முடியுமா? f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருகிறார்கள். இதற்குத் தமிழறிஞர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்களா? அரசு ஒப்புதல் உண்டா? இலக்கணத்தைப் பின்பற்றுவது எப்படிச் சீர்திருத்தம் ஆகும்?--இரவி (பேச்சு) 18:56, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

தொல்காப்பியர் 123 னு அரபி முறையில் எண்களை எழுதச்சொன்னாறா? ஏன் ௧௨௩ னு எழுதரதில்ல? அரசு ஃபா பயன்படுத்துவதே இல்லைனு சொல்றீங்களா? கற்பனை உலகில் இது எல்லாமே சரி தான். நீங்க கண் மூடினா உலகமே இருட்டாயிடுமா? தமிழக அரசு 12 வகுப்பு வேதியல் பாட புத்தகம் பக்கம் 149 பென்சைல் ஆல்கஹால்(கிரந்த தவிர்ப்பும் தமிழ் மக்களின் பொது வழக்கை ஒட்டாமல் இருப்பதால்) / ஃபினைல் மெத்தனால் தான். //முற்று முழுதாக தொல்காப்பியத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது. ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா? சிலருக்கு இங்க பேசும்பொது மட்டும் கூகிள் பயன்பாட்டை எண்ணிக்கையை கணக்கெடுக்க கூடாது, வேறெங்கோ ஃபேஸ்புக் ஐ முகநூல் என்று சொல்வது சரி என்று சொல்லுவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். அப்போ மட்டும் பொதுவழக்கு தேவைப்படுகிறது. சபாஷ்! நன்றி வணக்கம். ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 19:41, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

சிரீக்காந்த், 123, &%?! முதலியவை பன்மொழிக்கும் பொதுவான குறியீடுகள். நாம் பேசுவது ஒரு மொழியின் எழுத்து குறித்து. fக்கு ஈடாகப் பொதுவழக்கில் ஃப் பயன்படுவதை யாரும் மறுக்க முடியாது. நானும் இல்லை என்று சொல்லவில்லை. f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருவதற்குத் தான் அரசு ஒப்புதல் உண்டா, தமிழறிஞர் ஒப்புதல் உண்டா என்று கேட்டேன். அரசு ஆவணங்களில் ஒரு பயன்பாடு இருப்பது வேறு முறையான சட்டம் / அறிவிப்பு மூலம் ஏற்பைத் தெரிவிப்பது வேறு. (எடுத்துக்காட்டு: பெரியார் அரசு சீர்திருத்தத்துக்கு அரசு தந்த ஏற்பு) இங்கு கேள்வி என்பது இலக்கணம் பொதுவழக்குக்கு முரணாக இருக்கும் போது என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே.

//கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா? //

பொது வழக்கை உருவாக்கும் ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? விக்கிப்பீடியா போல் மறுப்பைத் தெரிவித்து மாற்றத்தை உருவாக்கும் நடைமுறை உண்டா? மற்ற ஊடகங்களை விட விக்கிப்பீடியா போன்ற ஒரு தளத்தில் எடுக்கும் எந்த முடிவும் கூடுதல் மக்கள் சார்புத் தன்மை உடையதே--இரவி (பேச்சு) 20:16, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

//f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருவதற்குத் தான் அரசு ஒப்புதல் உண்டா, தமிழறிஞர் ஒப்புதல் உண்டா என்று கேட்டேன்.//

அப்படி என்றால் fக்கு ஃப் என்று போடலாம் என்கிறீர்களா? நீங்கள் கூறிய h, x, z எப்படி எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

சொல்லொன்றின் ஆரம்பத்தில் f எழுத்து வராதவிடத்து (அவசியமானால் மட்டும்) f இற்கு பதிலாக ஃப் என எழுதலாம். ஆரம்ப எழுத்தாக f வருமிடத்து ப என எழுதுவதே சிறந்தது. ஃபெடரரை பிபிசி நேற்று பெடரர் என எழுதியிருக்கிறது பார்த்தீர்களோ தெரியாது. இவையெல்லாம் நல்ல மாற்றங்களே. மற்றும்படி ஃக, ஃவ என எழுதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன்னர் ஞானேந்திராவை ஆங்கில ஊடகங்கள் Gyanendra என்றும் Gayanendra என்றும் எழுதுகின்றன. அதையே பார்த்து தமிழ் ஊடகங்களும் கயனேந்திரா என எழுதுகின்றன.--Kanags \உரையாடுக 09:22, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிறீதரன், நீங்கள் ஏன் ஃக என்பதை ஏற்கமுடியவில்லை என்றும் ஆனால் ஃப என்பதை ஏற்கின்றீர்கள் என்றும் கூறினால் புரிந்துகொள்ள இயலும். தமிழில் முதலில் ஃ வராது என்பது உண்மை (அடுத்து வரும் எழுதுத்து எதுவாக இருப்பினும்). ஆனால் இடையே ஃ என்பதோடு (ஃ = அஃகேனம் எனவே அஃகேனத்தோடு) பல வல்லின எழுத்துகள் வருவதைக் காட்ட முடியும். ஆனால் வகரம் முதலான பிற இடையினங்களோ, மெல்லினங்களோ, உயிரெழுத்துகளோ வருவதில்லை. ஆனால் ஃஃ என்று இரட்டித்தும் வரும் (ஓசை நிரப்ப வரும். இதிலிருந்து நான் அறிவது அதற்கென ஓசை உண்டு, சார்ந்து வரும் சார்பெழுத்தே எனினும்). நான் கண்டவரை ஆய்த எழுத்து க, ச, ட, த, ற ஆகியவற்றோடு வருதைக் கண்டிருக்கின்றேன் ஆனால் பகரத்தோடு வருவது அரிது. கஃபு என்று வரும் என யாப்பருங்கல விருத்தியுரை கூறுகின்றது. பப்பத்து (பத்துப்பத்தாக) என்பதற்கு மாறாக பஃபத்து என்றும் கூறலாம் (பஃபத்து என்பதை paHbaththu என்று ஒலிக்க வேண்டும். ஆனால் அந்த H என்பது மிகக்குறைந்து ஒலிக்கும் அங்கு அதிக நேரம் நின்றுவிடல் கூடாது). ஆய்தம் வரும் தனிச்சொற்கள் பலவும், தொடர்மொழிகளும் உள்ளன அஃகு, எஃகு, பஃறி (= படகு), கஃசு ( = காற்பலம் என்னும் எடை) என பல தனிச்ச்சொற்கள் உள்ளன, ஆனால் தொடர்மொழியாக வரும்பொழுது ஃ என்னும் எழுத்துக்குப் பிற உயிர்மெய் எழுத்துகள் வரலாம். அஃகான், அஃறிணை, அஃகேனம் எனப் பல எடுத்துக்காட்டுகள் தரலாம். அஃகு என்றால் சுருங்கு (வினைச்சொல்) என்று பொருள். சுருங்கிய என்னும் பொருளில் சிறிய என்பதைக் குறிக்க அஃகடிய என்றும் வரும் (உஃகடிய என்றால் பெரிய என்று பொருள். உகப்பு = உயர்வு, உயர்ச்சி என்றும் பொருள்). எனவே இடையே வரும்பொழுது ஃ என்னும் அஃகேனத்துக்குப் பின்பு வல்லின உயிர்மெய் எழுத்துகள் வரலாம். ஓசை நிரப்ப அஃகேனமே இரட்டித்தும் வரலாம். ஆனால் மொழி முதலில் ஃப, ஃக, என வருதல் கூடாது. அப்படி நாம் எழுதினால் அது புதுவழக்கு. ஃப = Fa என்று எழுதும் பழக்கம் மிக அண்மையிலேதான் உருவானது. ப.வே மாணிக்கனார் என்னும் பொறியியலாளர் உருவாக்கிய புதுமை. இடையேதான் வரும் எனினும், ஃக போன்ற பிற யாவும் நன்கு அறிந்த ஒலிகளே. Hamilton என்னும் பெயரை ஃகாமில்டன் என்று எழுதக்கூடாது எனில், இஃகாமில்டன் என்று எழுதலாம். இஃகிட்லர் என்று எழுதலாம் (இதிலும் சிறு இலக்கணப்பிழைகள் உள்ளன). ஃ என்பது உண்மையில் காற்றொலித் திரிபை (குறிப்பாக உரசொலியாக வருவதைக்) குறிக்கும். பெரும்பாலும் ககரத்தின் காற்றொலித்திரிபு என்பதே பலரும் கொள்வது. ஆனால் கஃசு, பஃறி, அஃது முதலான பல சொற்களில் அது மிக நுட்பமான காற்றொலி கொண்டதாக உள்ளது. மிக நுட்பமான H எனக் கொள்ளலாம், ஆனால் H அன்று. "H" போன்ற, ஆனால் மிகுநுட்பமான, சார்ந்துவரும் ஒலி. எப்படி எந்தவிதமான "உரிமையும்" இன்றி ப.வே. மாணிக்கனார் ஃப என்பதை Fa என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தினாரோ (இதனை ஏற்காதவர்கள் மிகப்பலர் இருக்கின்றனர்), அதே போலத்தான் நானும் எந்தவிதமான "உரிமையும்" இல்லாமல், வகரத்தின் திரிபுதான் Fa என்றறிந்து ஃவ என வழங்குகின்றேன். Fa = ஃவ என்றும் ஃப = pha என்றும் கொள்ளலாம் என்பது இன்னொரு கருத்து. ஒலியை மட்டுமே முன்னிறுத்திப் பேசினால், அஃகேனம் காறொலித் திரிபு தரும் சார்பொலி என்று கொண்டால், இப்படி வழங்குவது முற்றிலும் பொருந்தும். ஃவ என்பதை நீக்க வேண்டும், கூடாது எனில், உங்களோடு முழுவதுமாக உடன்பட்டு நீக்க நானே முன்னிற்பேன், ஆனால் அதே போல ஃப என்பதையும் நீக்கவேண்டும். Fermi என்பதை வெர்மி என்றும் எழுதலாம். ஃபெர்மி என்று எழுதுவதினும் ஃவெர்மி என்று எழுதுவது பொருத்தமானது. தமிழில் வெர்மி, பெர்மி என்று எழுதினால் பிழை அன்று (ர்மி என்று வருவதும் பிழை என்பதைத்தவிர). இந்தப்பிழையை ஏதோ வரட்டு இலக்கண விதி என நினைக்க வேன்டாம், மிக மிக அருமையான, மொழியியல் நுண்ணறிவு மிக்க, விதி. ரகர மெய் ர் என்னும் எழுத்துக்குப் பிறகு சிறு உயிரொலி இல்லாமல் மகர உயிர்மெய்கள் வருவது "கடினம்" (இயல்பன்று) - எனவே பெருமி, வெருமி என்று கூறுதல் இலக்கணப்பிழை அற்றது. ஆனால் பெர்மி, வெர்மி என்று எழுதலாம் என்று கொள்ளலாம். ஒரு பிழை செய்தால் எல்லாப்பிழைகளும் செய்யலாம் என்றோ, ஒன்று கூடாது எனில் எதுவுமே கூடாது என்றோ கொள்வது பொருத்தம் அன்று. நான் டெட்சுயா ஃவுஜித்தா என்று Fujita Tetsuya என்று உரோமன் எழுத்தில் எழுதும் நிப்பானிய அறிஞரைப் பற்றிய குறுங்கட்டுரையை எழுதினேன். இதனை புச்சியித்தா தெத்துசுயா என்று எழுதுவதாலோ, புச்சியித்தா அளவுகோல் (Fujita scale) என்று அவர் முன்மொழிந்த சுழிக்காற்று (தோர்னேடோ) அளவுகோலைக் குறிப்பிடலாம். அதாவது ஃவு இல்லாமலும் ஜி இல்லாமலும் எளிதாக நன்கு எழுதலாம். ஆய்த எழுத்தைப் பற்றி அறிய இந்நூலில், பக்கங்கள் 45-52 வரை படித்துப்பாருங்கள். இராம.கி அவர்கள் விக்சனரி குழுமத்தில்] எழுதியுள்ளதையும், நான் இங்கே விக்கிப்பீடியாவில் பல இடங்களில் எழுதியுள்ளதையும் படித்துப் பார்க்கலாம். (நான் இன்னும் ஓரிரு நாட்கள் விடுப்பில் இருப்பேன்). தமிழ் இலக்கணம் என்பது மிகவும் அறிவார்ந்த நுட்பமான இயல்பான விதிமுறைகள். தமிழ் மொழியை அதன் சீரிளமையைக் காத்து வந்துள்ளது எனில் மிகையாகாது. கூடியமட்டிலும் பின்பற்றுவது மிகவும் நல்லது. அப்படிப் பின்பற்றுவது சீர்திருத்தம் அன்று!! --செல்வா (பேச்சு) 16:36, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

//வேறெங்கோ ஃபேஸ்புக் ஐ முகநூல் என்று சொல்வது சரி என்று சொல்லுவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். அப்போ மட்டும் பொதுவழக்கு தேவைப்படுகிறது.//

முகநூல் என்று வேறெங்கும் அல்ல. முகநூலின் முதற்பக்கத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 14:59, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

  • தென்காசி சுப்பிரமணியன், Box, Fox, Pox என்பதை வேறுபடுத்திக் காட்ட முடியாதது நமக்கு மட்டும் அன்று பல மொழியாளருக்கும் உண்டு. எல்லா ஒலியன்களும் எல்லா மொழிகளிலும் இராது. மேலும் ஒலிப்பைக் கொண்டு, ஒலியெழுத்துகளாக எழுதும் மொழிகளில் Red (சிவப்பு) Read (படித்தான்/ள்/ர்) என்பதை வேறுபடுத்திக்காட்ட இயலாது. paul, pall ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட இயலாது. முதலில் வரும் இடத்தில் முதன்மொழியின் வழக்கைச் சுட்டிக்காட்டிவிட்டு (அவர்கள் எழுத்தில்), நாம் மேலே நம் மொழிக்கு உகந்த வழியில் செல்ல வேன்டியதுதான். ஆங்கிலத்தில் புலி, புளி, புழி என்பதை எப்படி எழுதிக்காட்டுவீர்கள்? அது அவர்கள் சிக்கல், அவர்கள் தீர்த்துக்கொள்ளட்டும், எனக் கூறுவது, மொழிக்கு மொழி, பெயர்ப்பில் பலவிதமான சிக்கல்கள் இருக்கும் என்னும் பொது விதியை ஒப்புக்கொள்ளாமை ஆகும். பிறமொழி போலவே தமிழ் மொழியிலும் இப்படிச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் box, boks, baux என்று பலவிதமாக எழுதக்கூடியவற்றை ஒலியை மட்டும் வைத்து எழுதினால் வேறுபடுத்திக்காட்ட இயலாது. ஆங்கிலத்தில் so, sew, sow ஆகிய அனைத்துமே ஒரே விதமாகவே ஒலிப்பர் (கேட்பவர் சூழல் அறிந்தே புரிந்துகொள்ளவேண்டும்). so என்பதை ஃசோ என்று எழுதினாலும் ஸோ என்று எழுதினாலும் அந்த மூன்று சொற்களையும் வேறுபடுத்திக்காட்ட இயலாது. எனவே கிரந்தமோ பிற முறைகளையோ ஒலிப்பைக் காட்ட நுழைத்தால் தீர்வு ஏற்படாது. தமிழை, தமிழ்முறையை மதிக்கவேண்டும்! சிறு நெகிழ்ச்சி காட்டலாம் என்றால் எல்லாம் செய்யலாம் என்று பொருள் இல்லை. --செல்வா (பேச்சு) 16:59, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • //...ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா?//
    • தகுந்தது என முடிவு செய்வது நல்ல தமிழறிவுடன் அணுகுவோர், தமிழ் அறிந்தோர். அவற்றைக் கருதி நாம் முடிவு செய்கின்றோம். தமிழ் விக்கிப்பீடியாவும் நீங்கள் சுட்டும் ஊடகங்களைப் போல் பார்க்கப்படும் ஓர் ஊடகமே. தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாளைக்கு 138,000 தடவை பார்க்கப்படுகின்றது. ஒரு மாதத்துக்கு 4.1 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது. மேலே இரவி கூறியது போல் ஊடகங்கள் ஒன்றை எழுதுவதால் அது பொது வழக்காகாது, பொதுமக்கள் ஏற்புபெற்றதாகாது. இங்கே கலந்துரையடியும் மறுத்துக்கூறியும் செய்வது போல், அதுவும் திறந்த நிலையில், அங்கு செய்யப்படுவதில்லை, எனவே இது இன்னும் சிறந்தது. அண்மையில் தினமணி என்னும் நாளிதழில் "நியூட்ரானுக்கு நிறை இல்லை" என்று எழுதியது, இகிசு போசான் கண்டுபிடிப்புப் பற்றி எழுதிய கட்டுரையில், அதனால் நியூட்ரானுக்கு நிறை இல்லை என்று பொருள் ஆகிவிடாது. தமிழ் ஊடகங்களில் எழுதுவோர் சரியான தமிழ் அறிவோடோ, பொது அறிவோடோ, பொறுப்புணர்வோடோ எழுதுகின்றார்கள் என்று கூறமுடியாது, ஆகவே அவர்களின் தமிழை ஏற்புடைய பொதுத்தமிழ் என்று கூற முடியாது. இதே போல பாடநூல்களிலும் பல பிழைகள் உள்ளன. விக்கிப்பீடியாவில் கலந்துரையாடி எங்கெங்கு சரியான வழக்கங்கள் உள்ளனவோ, அவற்றைக் கூடியமட்டிலும் எடுத்தாண்டு சரியாக எழுதலாம். --செல்வா (பேச்சு) 20:51, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
* எப்பொழுது பொதுமக்கள் ஏற்புடையதாகிறது என்பதற்கு எது அளவுகோல்? கிரந்தம் பொதுவழக்கில் இருக்கிறதா இல்லையா? இல்லை அதுவும் எதோ ஆதிக்க ஊடகங்களின் சூட்சியா? தொல்காப்பியத்தின்படி இலக்கணப் பிழை என்ற அளவில் மட்டும் வாதத்தை வைக்க வேண்டுகிறேன். பொது மக்களின் ஏற்பு நிலை பற்றி நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? எப்பவுமே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் இங்கு வாதிடுவதே நேர விரையம். எல்லா முறையும் அறிவு அடிப்படையில் வாதிடலாம் வாங்க என்று கூறிவிட்டு "நான் சொல்வது தான் சரி என்று சொன்னால்", அறிவடிப்படையில் வாதிடுபவர்கள் விலகவே செய்வார்கள். சரி தினமணி நாளிதழில் இகிசு போசான் பற்றி கருத்துப்பிழையுடன் பதித்துவிட்டார்கள், அதனால் தமிழ் ஊடகங்களில் எழுதுவோர் சரியான தமிழ் அறிவோடோ, பொது அறிவோடோ, பொறுப்புணர்வோடோ எழுதுகின்றார்கள் என்று கூறமுடியாது. அருமையான கூற்று. இதற்கு பெயர் பறந்து விரந்த பொதுக்காரணியாக்கல் (sweeping generalization) என்று கூறுவார்கள். சப்பகட்டு வாதங்கள் தேவையில்லையே, அறிவடிப்படையில் வாதிடலாமே? ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 20:52, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

//*//...ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா?//

தமிழ் பல்லாயிரம் ஆண்டு தொன்மையுடையது. அதற்குக் கிடைத்திருக்கும் ஒரு இலக்கண நூலான தொல்காப்பியம் மட்டும் இரண்டாயிரம் ஆண்டு தொன்மை உடையது. அன்றில் இருந்து இன்று வரை எத்தனைத் தலைமுறைகளாக எத்தனைக் கோடி தமிழர்கள் வாழ்ந்துள்ளனர்? இவர்கள் ஏற்புடன் தான் தமிழ் இலக்கணம் பின்பற்றப்பட்டு வந்தது? நீங்கள் மேலே கேட்டுள்ள கேள்வி உண்மையில் இலக்கணத்துக்குப் புறம்பாக மொழியில் மாற்றங்களை உருவாக்குவோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. கிரந்தமானாலும் சரி, ஆய்தத்தை முறை தவறிப் பயன்படுத்துவதானாலும் சரி அவை பயன்பாட்டில் இருக்கும் காலத்தில் அவற்றைத் தவிர்த்துப் பின்பற்றி எழுதும் வழக்கமும் உள்ளது. சிறீதரன் சுட்டியபடி உலக ஊடகமான பி. பி. சி. ஆகட்டும் உள்ளூர் சந்தில் உள்ள கடை ஆகட்டும் fக்குப் பதில் ப எழுத்தை மட்டும் பயன்படுத்தி எழுதி வழக்கம் இருந்தே வருகிறது. மொழியின் இலக்கணத்துக்குப் புறம்பான ஒரு புதுமையையோ சீர்கேட்டையோ புகுத்தத்தான் நீங்கள் கூறுவது போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உரிமை இல்லையே தவிர, ஏற்கனவே உள்ள நடைமுறையைக் கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் முழு உரிமை உண்டு.--இரவி (பேச்சு) 06:25, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் சீர்கேடாகப் பார்க்கும் விஷயத்தை நான் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறேன். ஃப பயன்பாடு பெயர்ச்சொல் தவிர பிற இடங்களில் பயன்படுத்துவது இலக்கணப்பிழையாகலாம் என்பது என் கருத்து. ஃப பயன்பாட்டின் வரலாறு என்ன? அதனை முன்மொழிந்த மொழியியலாளர்களின் கருத்து என்ன? தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் பள்ளிகளில் ஃப பயன்பாடு கற்றுக்கொடுக்கபடுகிறதா இல்லையா? (ஆசிரியர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்). இல்லை என்றால் எப்படி மக்கள் ஃப ஐ f என்று உச்சரிக்கிறார்கள்? தொல்காப்பியத்தை தனிமையில் வைத்துப்பார்த்தால்(isolated view) நாம் இன்று எழுதுவது தமிழே அல்ல என்று கூட யாரேனும் ஒருவர் சொல்லலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் தலையாய நோக்கம் இன்றைய மக்கள் தமிழில் தவற்களஞ்சியத்தைத் தருவது. மொழியின் பரிணாம வளர்ச்சியை/சீர்கேட்டையோ மாற்றுவது அல்ல. நன்றி. ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 20:52, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

//தப்பான உதாரணம். பொது வழக்குக்கும் உலக வழக்குக்கும் வித்தியாசம் இருக்கு. நான் கூறுவது தமிழ் மொழி பொது வழக்கு// நீங்கள் குறிப்பிடும் தமிழ் மொழிப் பொது வழக்கு என்றால் என்ன? அதன் ஆதாரத்தைச் சற்று விளக்குவீர்களா?

//இலங்கை, சிங்கப்பூர் பள்ளிகளில் ஃப பயன்பாடு கற்றுக்கொடுக்கபடுகிறதா இல்லையா? (ஆசிரியர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்)// இலங்கையிலிருந்து ஆசியர்கள் இப்போது விக்கிக்குப் பங்களிக்கிறார்களா? --Anton (பேச்சு) 13:07, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு#ஆய்த எழுத்துப் பயன்பாடு பகுதியில் தொடர வேண்டுகிறேன். அதே பக்கத்தில் பல்வேறு இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாட்டையும் உரையாடி முடிவுக்கு வரலாம்--இரவி (பேச்சு) 14:58, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

தொகுத்தலின் போது ஆங்கில உரை தொகு

 

தொகுத்தலின் போது இதுபோல ஆங்கிலத்தில் வருகிறது. இதனை தமிழாக்கம் செய்து, அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும் இடர் நேராமல், மாற்றக்கோருகிறேன்.வணக்கம்-- உழவன் +உரை.. 03:05, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று சில நாட்களில் இற்றையாகும்--சண்முகம்ப7

(பேச்சு) 04:21, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம், இதே போல் Difference between revisions of என்பதையும் தமிழ்ப் படுத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 07:58, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 08:21, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
அம்மாற்றங்கள் தமிழில் வருகின்றன.நன்றி.சண்முகம்!-- உழவன் +உரை.. 05:21, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

Redwood மரத்தின் தமிழ் பெயரை தெரிந்து கொள்ளலாம?--220.247.236.38 08:26, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

  • Sequoiadendron giganteum / Giant sequoiaஎன்பதனை குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.அது தமிழக மரமில்லை. நாம் பெயர்வைப்பதற்கு முன் இந்தியாவில் Soymida febrifuga/ செம்மரம் என ஒன்றுண்டு. அதனையும் கருத்தில் கொண்டு,மிகப்பெரிய மரம் நீங்கள் சொன்னது என்பதால், மாசெம்மரம் எனலாம். செம்மாமரம்என்றால் மாமர வகை என தவறாக புரிந்து கொள்ள வாய்புண்டு.-- உழவன் +உரை.. 08:39, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒத்தாசைப் பக்கத்தில் கருத்து இட்டிருக்கின்றேன். அங்கு தொடர்வதே நல்லது. பார்க்கவும்: விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்#redwood --செல்வா (பேச்சு) 01:32, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]
சொற்களுக்காக விக்சனரி திட்டம், அனைத்து மொழிகளிலும் உள்ளதை, நாமும் பேண வேண்டும். அங்கு கோரப்பட்ட சொற்கள் எனும் தொடுப்பு, எப்பக்கத்திலும் இடப்புறம் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் சொல் பற்றிய ஐயங்கள், ஒத்தாசைகள் இருப்பின் அங்கு தெரிவித்தலே சிறப்பு. சொற்களுக்கென்று, இங்கு தனிப்பக்கம் அமைப்பது, விக்சனரி திட்டத்தினை வளர்த்தெடுக்க உதவாது. அனைத்து பயனர்களையும் வேண்டி, இந்நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.விக்கிபற்றிய அறியா புதுப்பயனர்கள் அல்லது புகுபதிகை செய்யாதவர்களுக்கு, நாம் தான் இந்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.வணக்கம்.-- உழவன் +உரை.. 02:24, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]
நானும் இதனை வழிமொழிகின்றேன். சில நேரங்களில், ஒரு கட்டுரை சார்ந்த கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன, அதற்காக இங்கு உரையாடித் தொகுப்பதும் முறையே. ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் மருத்துவக் கலைச்சொற்கள், இலத்தீன் கலைச்சொற்களாக வருவனவற்றின் பொருள்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பட்டியலாகத் தந்துள்ளனர். விக்சனரியில், சொல்லுக்கென்றே விரிவான பொருள், சொற்பிறப்பியல் ஆகியவற்றை தரலாம், எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள் தரலாம். ஆனால் இங்கே விக்கிப்பீடியாவிலும், கட்டுரைகளுக்குள்ளே தக்கக்கருத்துச்சூழலான இடத்தில் விளக்குவதும் பயன்தரும் (இதனையும் ஆங்கிலவிக்கியில் காணலாம்). இங்குள்ள அல்லது இங்கு தக்கக்கருத்துச்சூழலில் பயன்படுத்தப்பெறும் சொற்களை விக்சனரியில் சேர்ப்பது நல்ல பணியாக இருக்கும். நான் இதனைச் செய்துகொண்டும் இருக்கின்றேன். இன்னும் பலரும் செய்கின்றனர். இங்கு ஒத்தாசைப் பக்கம் இருப்பதன் காரணம் வேறு (இங்கு கட்டுரை ஆக்கம் நடப்பதால், அக்கட்டுரையைச் திருத்தவும், அக்கட்டுரைக்கான தேவைகளைக் கேட்பதும் முறையே).--செல்வா (பேச்சு) 02:51, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]
பெரும்பாலும், ஒரு சொல் பற்றி நடக்கும்/நடந்த உரையாடல் முடிவுகள், விக்சனரியில் இணைக்கப்படுவதில்லை. அதனால் தான், இங்கு வேதனையுடன் குறிப்பிடுகிறேன். உரையாடல்களில், அதிக நேரம் செலவிடுவது, ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நடக்கிறது.ஆனால், தரவுகள், அங்கு அதிகமாக உள்ளன. தமிழ் விக்சனரியை 8-ஆம் இடத்திற்கு சுந்தரும், இரவியும் கொண்டு சென்றனர். ஆனால், அங்கேயே அதனை நிலைநிறுத்த, இயலவில்லை. தமிழின் இன்றைய நிலையை இங்கு அறியலாம். அவரவர் பங்களிப்புகளை, பதிந்தாலே போதும். நேரமின்மை என்று கருதுபவர்கள். எனதுவிக்சனரி பயனர்வெளியில் குறிப்புகளை இட்டால் கூட போதும். வேண்டிய மாற்றங்களை செய்து, அவர்கள் பெயரிலேயே பதிவேற்ற இயலும்.வணக்கம்.-- உழவன் +உரை.. 05:02, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

மூன்று வரிக் கட்டுரை குறித்த கொள்கை உரையாடல் தொகு

மூன்றுவரிகளுக்கு குறைவான கட்டுரைகளை நீக்கல் விக்கிப்பீடியாவின் கொள்கையா? அல்லது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையா? ஆங்கில விக்கியில் கூட மூன்றுவரிகளுக்கு குறைவான கட்டுரைகள் உள்ளதே..இங்கு இவற்றை விட யானை விருத்தம்,மூக்கனூர் போன்ற கட்டுரைகளில் அதிகமான உள்ளடக்கம் உள்ளது. மேலும் விரிவாக அக்கட்டுரைகளை எழுத முடியுமா என்பதும் சந்தேகமே. நன்றி--Sank (பேச்சு) 12:32, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

பார்க்க:-
சோடாபாட்டில், சண்முகம்ப7 ஆகியோர் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். --மதனாகரன் (பேச்சு) 13:31, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி மதனாகரன் :) நான் கூறுவது என்னவென்றால் மூக்கனூர் போன்ற குக்கிராமங்களுக்கு என்ன செய்வது ? இவ்வாறன கட்டுரைகளை விரிவாக எழுதும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றனவா?(மூன்று வரிக்கு மேல்)--Sank (பேச்சு) 13:52, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறானவற்றைப் பொருத்தமான தலைப்புகளின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் (எ-டு: குக்கிராமங்கள்). --மதனாகரன் (பேச்சு) 14:00, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

இது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பற்றிய நிலப்படம். இதில் மூக்கனூர் பற்றி இல்லையே. மேலும் சேலம், கோயமுத்தூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் நிறைய கிராமங்கள் மூக்கனூர் என்ற பெயரில் உள்ளன.

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சிவன் கோயில் தேவபாண்டலமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:12, 11 சூலை 2012 (UTC) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:07, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

சங்கீர்த்தன், கட்டுரைகள் குறைந்தது மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் தர மேம்பாட்டுக்குக்காக நாம் வகுத்தள்ள நடைமுறை. கடந்த பல ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவைக் கண்ட அனுபவத்தில், தொடக்கத்திலேயே சரியான அடிப்படைகளுடன் தொடங்காத கட்டுரைகள் பல அப்படியே தேங்கி விடுவதே வழமையாக உள்ளது. ஏனெனில், அனைத்துக் கட்டுரைகளையும் முன்னேற்றுவதற்கான ஆள்வளம் நம்மிடம் இல்லை. இதனால் தான் ஒரு கட்டுரையைத் தொடங்கும் போது குறைந்த அளவு தகவல்களுடனாவது அதனைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குறைந்த அளவு தகவல் என்பது மூன்று வரிகள், பகுப்பு, ஒரு படிமம், விக்கியிடை இணைப்புகள், முதல் வரியில் ஈடான ஆங்கிலச் சொல், உசாத்துணை முதலியவற்றைக் குறிக்கும். இந்த குறைந்த அளவு தகவலைத் தருவதன் மூலம் பிற பயனர்கள் அவற்றை முன்னேற்ற முனையும் போது உதவியாக இருக்கும்.

ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரைக்கான குறைந்த அளவு தகவலை இம்மூன்று வரிகளில் தரலாமே என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பிடத்தக்க தகவல் இல்லாமலேயே பத்துப் பதினைந்து வரிகளை எழுத முடியும் என்பதால், மூன்று வரிகளைத் தாண்டி விட்டதாலேயே போதுமான தகவல் இருப்பதாகவும் பொருள்படாது. எடுத்துக்காட்டு: ஒரு எழுத்தாளர் என்ன எழுதினார் என்றே குறிப்பிடாமல் பக்கம் பக்கமாக அவருடைய வாழ்க்கை வரலாறை எழுதுவது ஏற்புடையதாகாது. போதுமான தகவல் எது என்பதனை ஒவ்வொரு கட்டுரையாகத் தான் ஆய வேண்டும்.

ஆங்கிலி விக்கிப்பீடியாவில் இந்த மூன்று வரி விதி இல்லை. ஆனால், இதை விடக் கடுமையான விதிகள் உள்ளன :) ஒருவரிக் கட்டுரைகளை ஏற்றுக் கொண்ட சில இந்திய விக்கிப்பீடியாக்கள் தரக் கண்காணிப்புச் சிக்கலை எதிர்கொள்வதையும் பார்க்கிறோம்.

எது போதுமான உள்ளடக்கம் என்பது கட்டுரைக்கு கட்டுரை மாறும். விரைவு நீக்கல் அறிவிப்புகளில் மாற்றுக் கருத்து இருந்தால் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். அவ்வாறு மாற்றுக் கருத்து வந்த பல கட்டுரைகளுக்கான அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு நாளில் நிறைய தொகுப்புகள் நடப்பதால், விரைவு நீக்கல் அறிவிப்புகள் சரியான கவனத்தைப் பெறுவதில்லை என்று கருதுகிறேன். எனவே, விரைவு நீக்கல் குறித்து பின்வரும் நடைமுறைகளைப் பரிந்துரைக்கிறேன்:

  • குறிப்பிட்ட பயனர் இவ்வாறு தொடர்ந்து சில கட்டுரைகளை உருவாக்குகிறார் என்றால் முதலில் அவரது பேச்சுப் பக்கத்தில் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகோள் விடுக்கலாம்.
  • தொடங்கிய பயனரிடம் இருந்து மறுவினை இல்லாத நிலையிலோ, மிகப் பழைய கட்டுரை என்றாலோ வார்ப்புரு இட்டுவிட்டு மீண்டும் அவரது பேச்சுப் பக்கத்தில் அறிவிக்கலாம். முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு, உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு போல் இதற்கு ஒரு வார்ப்புரு உருவாக்கிக் கொள்ளலாம்.
  • அண்மைய மாற்றங்கள் பக்கத்தில், பல்வேறு கட்டுரை உருவாக்க / மேம்பாட்டு அறிவிப்புகளை விடுவது போல் இதற்கு ஒரு அறிவிப்பு இடலாம். குறிப்பிட்ட விக்கித்திட்டத்தின் கீழ் வரக்கூடிய கட்டுரை என்றால் அத்திட்டத்தின் பேச்சுப் பக்கம், முனைப்பாக உள்ள பங்களிப்பாளர் பக்கங்களிலும் வேண்டுகோள் இடலாம்.--இரவி (பேச்சு) 14:21, 11 சூலை 2012 (UTC)  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 14:36, 11 சூலை 2012 (UTC)  விருப்பம்--Sank (பேச்சு) 15:00, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

+1 //தொடங்கிய பயனரிடம் இருந்து மறுவினை இல்லாத நிலையிலோ// மறுவினை இல்லை என்பதற்கு எவ்வளவு நாட்கள் என வகுத்தல் நல்லது. ஏனெனில் சில பயனர்கள் மேம்படுத்த சில நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:01, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

பல வழமையான விக்கி நடைமுறைகளுக்கு ஒரு வாரம் பொறுத்திருப்பது போலவே இதற்கும் செய்யலாம்--இரவி (பேச்சு) 13:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • வழக்கு ஒழிந்த கலைகள், விளையாட்டுகள் போன்ற தமிழர் குறித்த கட்டுரைகள், குறைவான உள்ளடக்கங்களை கொண்டதாகவே பெரும்பாலும் இருக்கும். அவைகளை, 'வரலாற்றைப் பேணுதல்' என்னும் கொள்கைக்காக நீக்காமல் இருக்க வகை செய்ய வேண்டும்.-- உழவன் +உரை.. 16:35, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
குறுங் கட்டுரைகள நீக்க வேண்டாம். அதற்காகவே 3 வரி விதி வந்தது. விக்கிகுப் பொருத்தாமான தலைப்பில் கட்டுரை இருப்பின் அது குறுங்க் கட்டுரையாக இருப்பதில் தவறில்லை. விரும்பின் குறுங்கட்டுரை என்ற வார்ப்புருவை சேர்த்துவிடவும்.
மேலும், சிற்றூர்கள் பற்றிய குறுங்க கட்டுரைகள் விரிவுபெறத்தக்கவை. எ.கா சுருவில் என்ற சிற்றூரை எடுத்துக் கொள்வோம். எந்த வகையில் விரிவுபெறத்தக்கது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. --Natkeeran (பேச்சு) 18:25, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு சொற்றொடராக இருந்தாலும் அதனை ஐந்து சொற்றொடராக வளர்க்க வேண்டுமே தவிற அதனை நீக்குவது நல்லதல்ல. நிர்வாகிகளின் கடமைகளில் அதனையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். --இராச்குமார் (பேச்சு) 20:46, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு வரிக் கட்டுரைகள் நீக்குதல் கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும் போல தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கட்டுரைகள் விரிவுபெறத் தக்கவையாக தோன்றும். எனவே இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிந்து அதற்கேற்ப கொள்கையை மறு உருவாக்கம் செய்வது நல்லது எனத் தோன்றுகிறது. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு07 இங்கு சில உரையாடல்கள் நடந்துள்ளது போல் தெரிகிறது. ஆலமரத்தடி தொகுப்புகள் வளர்ந்து கொண்டே போவதால் மற்ற விக்கிகள் போல ஒரு பொதுவான பக்கத்தில் விக்கிப்பீடியா:கருத்து வேண்டல்/ஒரு வரி கட்டுரைகள் நீக்கம் அனைத்து பயனர்களின் கருத்துகளையும் அறிந்து அதற்கேற்ப கொள்கையை உருவாக்குவது பிரச்சினைகளை தவிர்க்கும் என கருதுகிறேன். பிற்காலத்தில் மற்ற பயனர்களுக்கு உரையாடலை எளிதாக எடுத்துக்காட்ட இயலும்.
நிர்வாகிகளும் சாதாரண பயனர்களே இராச்குமார். அவர்கள் மற்ற பயனர்களின் ஒருமித்த முடிவை செயல்படுத்துகிறார்கள் அவ்வளவுதான். மேலும் அனைவருக்கும் அனைத்து கட்டுரைகளைப் பற்றியும் தெரியாது. எனவே அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியாத தலைப்பை பற்றி கட்டுரை இருந்தால் என்ன செய்வது? :).. தமிழ் விக்கி சமூகம் வளர்ந்துள்ளதால் அனைவரின் கருத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்படுதல் நலம்--சண்முகம்ப7 (பேச்சு) 06:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையை ஆதரிக்கும் அதேவேளை, கட்டுரையின் வரி எண்ணிக்கை/ அளவு என்பவற்றை மட்டும் வைத்து கட்டுரை நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இக்கட்டுரைகளில் நீக்கல் வேண்டுகோள் இடுவதற்குப் பதிலாக விரைந்து மேம்படுத்தப்பட வேண்டிய கட்டுரை எனும் வார்ப்புரு இடப்படலாம். இவ்வாறான கட்டுரைகளைத் தொடங்கியவர் மட்டுமன்றி ஏனைய பயனர்களும் மேம்படுத்த முயல வேண்டும். மூன்று வரிக்கு குறைவான கட்டுரைகளை மேம்படுத்துவதில் வரும் இரு மாதங்களைச் செலவிட முயற்சிக்கிறேன். என்னால் தொடங்கப்பட்ட கட்டுரைகளையும், விரைந்து நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பகுப்பில் உள்ள கட்டுரைகளையும் தவிர இவ்வாறான கட்டுரைகள் காணப்பட்டால், தயவுசெய்து எனது பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடவும். --சிவகோசரன் (பேச்சு) 06:08, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
விரைந்து மேம்படுத்தக் கோரிய பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளன. இன்னும் பல துப்புரவுப் பணிகளும் அப்படியே. இலக்குத் தேதி / திட்டம் ஏதும் இல்லாமல் தரம் பேணுதல் கடினம். எனவே, கட்டுரைகள் குறைந்தது மூன்று வரிகள் இருக்க வேண்டும், விரைவு நீக்கல் வார்ப்புரு இட்டு ஒரு மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும் போன்ற கொள்கைகள் தொடர வேண்டும். ஆனால், நீக்குவதற்கு முன் அதனை மேம்படுத்தவோ தகவலைத் தக்க வைக்கவோ அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 13:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
எந்த மாதிரிக் கட்டுரைகளுக்கு "விரைவு நீக்கல் வார்ப்புரு இட்டு ஒரு மாதத்துக்குள் மேம்படுத்த வேண்டும்" என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படலாம் என்பதில் தெளிவு வேண்டும். மூன்று வரிகள் இருந்தால் அப்படித் தேவை இல்லை. குறுங்கட்டுரை என்ற வார்ப்புரு போதுமானது. --Natkeeran (பேச்சு) 13:21, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் வரத்து தொகு

கடந்த சில நாட்களாக சில புதிய கட்டுரை முயற்சிகள், அடையாளம் காட்டாத தொகுப்புகளைக் காண முடிகிறது. முதற்பக்கக் கட்டுரையாக்கத் தூண்டலின் விளைவா வழமையான பங்களிப்புகளா என்று போகப் போகத் தான் தெரியும். எப்படி இருப்பினும், இதில் வரும் பிழையான பங்களிப்புகளை உடனுக்குடன் நீக்காமல் ஓரிரு கால அவகாசம் தந்து நீக்கலாம். ஏனெனில், புதிதாகப் பங்களிப்பவர்கள் சிறுகச் சிறுகவே பங்களிப்பர். மீண்டும் திரும்பி வந்து பார்க்கும் போது குழம்பாமல் இருக்க வேண்டும். கட்டுரைகளை நீக்கினாலோ வழிமாற்றினாலோ ஒன்றிணைத்தாலோ பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் தகுந்த விளக்கத்தை இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். அடையாளம் காட்டாத பயனர்களுக்கும் இது பொருந்தும்.

விரிவான வழிகாட்டுதல் இன்றி கட்டுரை உருவாக்கப் பெட்டியை மட்டும் தருவது சரியான பங்களிப்புகளைப் பெற உதவவில்லை எனில், எப்படி இந்தத் தூண்டலை மேம்படுத்தலாம் என்றும் வழிகாட்டுதல் தேவை. கட்டுரை உருவாக்கம் குறித்து ஒரு சிறிய அறிமுக திரைக்காட்சிப் பதிவு ஒன்றை இடலாம் என்று இருக்கிறேன். வேறு என்ன செய்யலாம்? விக்கிப்பீடியா:முதல் கட்டுரை பக்கத்தில் உள்ள வழிமுறைகளை முதற்பக்கத்தில் இடலாம். ஆனால், கூடுதல் இடம் தேவைப்படும்--இரவி (பேச்சு) 13:21, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

புதிய பங்களிப்பாளர்களை மேலும் பங்களிக்கத் தூண்டுவது எப்படி? தொகு

தொடர்பங்களிப்பாளர்களின் பட்டியல் பக்கத்தில் கடந்த 30 நாட்களில் பங்களித்தவர்கள் பட்டியலைக் காணலாம் ( தானியங்கிகள், நிருவாகப் பயனர்கள் நீங்கலாக. இவற்றில் ஒரு சில தானியங்கி / பிற மொழி விக்கிப்பீடியர் கணக்குகள். ஒரு சில நன்கு அறிப்பட்ட தொடர் தமிழ் விக்கிப்பங்களிப்பாளர்கள் கணக்குகள். அவற்றை விட்டுவிடுவோம்.) அது ஒரே ஒரு தொகுப்பாக இருந்தால் கூட, இவர்களில் எப்படியும் 50+ பேராவது நல்ல பங்களிப்புகளை நல்கி இருக்கவல்லவர்கள். புதிய பங்களிப்பாளர்களை ஈர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் ஏற்கனவே பங்களித்துப் பார்த்தவர்களைத் தக்கவைப்பதும் மேலும் பங்களிக்கத் தூண்டுவதும். விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த உத்தி தெரியும். புதிதாக பெறக்கூடிய வாடிக்கையாளர்களை விட ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை மேலும் பொருட்களை வாங்கச் செய்வது இலகு. எனவே, இந்தப் பங்களிப்பாளர்களை மேலும் பங்களிக்க எவ்வாறு தூண்டலாம் என்பது குறித்து அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன்.

புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புரு இடுவது போலவே, இவர்களுக்கும் ஒரு வார்ப்புரு இடுவது பொருத்தமாக இருக்கும். அதில் என்னென்ன தகவல் சேர்க்கலாம்? ஒத்தாசைப் பக்கத்தைச் சுட்டுவது, தேவைப்படும் முக்கிய கட்டுரைகள் பட்டியலைச் சுட்டுவது, அடுத்து அவர்கள் இலகுவாக செய்யக்கூடிய பணிகளைச் சுட்டுவது, பங்களிப்பாளர் அறிமுகப்பக்கத்தைச் சுட்டுவதன் மூலம் சமூக உணர்வைக் கொண்டு வருவது, தமிழ் விக்கிப்பீடியாவின் அண்மைய இலக்குகள் / குறிக்கோள்களைச் சுட்டுவதன் மூலம் அவர்களைப் பங்களிக்கத் தூண்டுவது ஆகியவற்றை முயன்று பார்க்கலாம். ஒலி / ஒளிப்பதிவாக ஏதேனும் சுட்ட முடிந்தாலும் நன்று. --இரவி (பேச்சு) 14:58, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

இதனை நான் மிகவும் ஆதரிக்கிறேன். முதலில் நான் விக்கிப்பீடியாவில் எழுதும் பொழுது எனது ஐபிக்கு தடுப்பு போட்டுவிட்டார்கள். எனக்கு அன்று யாரும் தனியாக செய்தி அனுப்பவில்லையென்றால் நான் இன்று விக்கிப்பீடியாவில் எழுதிக்கொண்டிருக்கமாட்டேன்.--இராச்குமார் (பேச்சு) 15:06, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]
நல்ல முயற்சிகள். ஒளிப்பதிவு ஒன்றை இணைத்துப் பார்ப்பது நன்று. முதற் பக்கத்தில் பயனர்கள் என்ன செய்யலாம் என்பதை சுழற்சி முறையில் காட்சிப்படுத்தியும் பார்க்கலாம். --Natkeeran (பேச்சு) 16:52, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

தங்குதன் தொகு

நிருவாகிகளின் கவனத்திற்கு: தங்குதன்

ஒன்றிணைக்க வேண்டும்.--மதனாகரன் (பேச்சு) 14:21, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 14:48, 13 சூலை 2012 (UTC)[பதிலளி]