விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகள் பட்டியல்

இந்தப் பக்கத்தை விரைந்து பூட்டவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:28, 2 மார்ச் 2011 (UTC) +1 --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:47, 19 மே 2012 (UTC)Reply

பூட்டுவதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லையே? இப்பக்கத்தைப் பூட்டியிருந்தால் நிருவாகி ஆவதற்கு முன் மதனால் பங்களித்திருக்க முடியுமா? இது போல் இன்னும் பல பக்கங்களில் பல நல்ல பங்களிப்புகளைப் பெற முடியுமே? ஒவ்வொரு நாளும் மிகுதியான மக்கள் பார்க்கும் முக்கியமான பக்கங்களில் மட்டும், அதுவும் தொடர் விசமத் தொகுப்புகள் வந்தால் பூட்டலாம். --இரவி (பேச்சு) 16:48, 16 சனவரி 2013 (UTC)Reply

நிருவாகிகளைப் பற்றிய விவரம் இருப்பதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதியே பூட்டினேன். இப்போது புகுபதிகை செய்த பயனர்கள் மட்டுந் தொகுக்கக்கூடியவாறு மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 03:08, 18 சனவரி 2013 (UTC)Reply

வரையறை தொகு

நீண்டகாலம் பங்களிக்காத தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எனும் தலைப்பில் மூன்று நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு நீண்டகாலம் என்பதற்கான வரையறை ஏதும் உள்ளதா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:25, 20 மே 2012 (UTC)Reply

தேனி.எம்.சுப்பிரமணி, வரையறை என்பது உள்ளதா என்று சரியாகத் தெரியவில்லை, ஆனால் ஓராண்டு பங்களிப்பு செய்யாவிட்டால், நீண்டகாலம் என்பதை குறிக்க வாய்ப்புள்ளது, ஏற்கனவே இது பற்றி எங்கோ(அநேகமாக நிர்வாகி தேர்தல் குறித்த தொகுப்புகளில் இருக்கலாம்) படித்ததாக ஞாபகம்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:54, 20 மே 2012 (UTC)Reply
இப்பக்கத்தின் தலைப்பை நிருவாகிகள் பட்டியல் என்று மாற்ற விழைகிறேன். மாற்றுக்கருத்திருந்தால் தெரிவியுங்கள். நிர்மூலம், நிர்தாட்சண்யம் போன்ற சொற்களில் வரும் நிர் என்பது இல்லாமையைக் குறிக்கும். நிர்வாணம் என்பது அப்படியே. நிருவாகம், நிருவாகி என்பது சீரான எழுத்துக்கூட்டல். --செல்வா (பேச்சு) 17:53, 28 மே 2012 (UTC)Reply
எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. மாற்றலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:00, 28 மே 2012 (UTC)Reply

தொடர்பங்களிப்பு- காலவரையறை தொகு

ஆ.வியில் இருப்பது போல் தொடர்ந்து பங்களிக்கும் நிருவாகிகள் என்பதற்கு குறைந்தபட்சமாக கடந்த இரு மாதங்களில் 30க்கும் அதிகமான தொகுப்புகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். மாற்றுக் கருத்திருந்தால் அறியத்தாருங்கள்.

கவனிக்க:பயனர்:கோபி,பயனர்:செல்வா,பயனர்:தமிழ்க்குரிசில்,பயனர்:தென்காசி சுப்பிரமணியன்,பயனர்:Almighty34,பயனர்:AntanOபயனர்:Arularasan. G,பயனர்:Aswn,பயனர்:Balajijagadesh,பயனர்:Drsrisenthil,பயனர்:Gowtham Sampathபயனர்:Hibayathullah,பயனர்:Info-farmer,பயனர்:Jagadeeswarann99,பயனர்:Jayarathina,பயனர்:Kalaiarasy,பயனர்:Kanags,பயனர்:Kurumban,பயனர்:Mayooranathan,பயனர்:Nan,பயனர்:Natkeeran,பயனர்:Parvathisri,பயனர்:Ravidreams,பயனர்:Rsmn,பயனர்:Sancheevis,பயனர்:Selvasivagurunathan m,பயனர்:Shanmugamp7,பயனர்:Sivakumar,பயனர்:Sodabottle,பயனர்:Sundar ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:23, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

  விருப்பம்--AntanO (பேச்சு) 09:15, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
  1. விருப்பமில்லை. ஆங்கில விக்கியின் கட்டுரைகளை இங்கு ஏற்பதில்லை. எடுத்துக்காட்டாக, மூன்றுவரிகள் ஒரு கட்டுரைக்கு அவசியம் என்கிறோம். அங்கு அப்படி அல்ல. மேலும், தமிழ் விக்கி வளர்ச்சி என்பது தொடர் ஓட்டம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொருவரின் உழைப்பும் போற்ற வேண்டியவை. இவர்களது பங்களிப்புகள் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவை. இவர்களது உரிமையை நீக்குவதால் தமிழ் விக்கியின் வளர்ச்சி ஏற்படுமா? மேல்விக்கியில் அவ்வப்போது இதற்கான அறிவிப்புகளை, தேவைப்படும் பயனரின் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கப்படுகிறது. நமது நோக்கம் சமுதாயத்தினை வளர்க்கவே இருக்கட்டும். ---உழவன் (உரை) 13:11, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
    உங்களது அடிப்படைப் புரிதலே தவறு.
    //இவர்களது உரிமையை நீக்குவதால் தமிழ் விக்கியின் வளர்ச்சி ஏற்படுமா?// நிருவாகி என்பது உரிமை அல்ல பொறுப்பு. மேலும், எனது கருத்தினை புரிந்துகொள்ளாமல் குற்றம் சுமத்த முயற்சிப்பது போல் உள்ளது. நான் இங்கு குறிப்பிட்டது திட்டப் பக்கத்தில் தொடர்ந்து பங்களிக்கும் நிர்வாகிகள் என்பதில் பட்டியலிடுவதற்காக மட்டுமே. எனது கருத்தினை மீண்டும் பார்க்கவும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:32, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:38, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம் - வணக்கம் நண்பரே, தற்பொழுது செயல்பாட்டில் உள்ள விக்கிபீடியா நிர்வாகிகளை பட்டியலிடுதல் பற்றி கூறுகின்றீர்கள் உள்ளீர்கள் என எண்ணுகிறேன். இவ்வாறு செயல்பாட்டில் உள்ள விக்கிபீடியர்களை இனம் காணும் பொழுது விக்கிபீடியாவின் உடைய வளர்ச்சி மேம்படும் என்றால் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு)
  விருப்பம்
இவ்வகையான பட்டியலிடுதல் பங்கெடுக்காத நிர்வாகிகளை மீண்டும் பங்கெடுக்கத் தூண்டலாம். விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல் பக்கத்தை இற்றைப்படுத்த முயற்சி செய்கின்றீர்கள் எனக் கருதுகின்றேன்.
புரிதலுக்காக ஆ.வியில் உள்ளவற்றை எழுதுகின்றேன்:
  • தொடர்ந்து பங்களிக்கும் நிருவாகிகள்
இந்த நிர்வாகிகள் கடந்த 2 மாதங்களில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட திருத்தங்களைச் செய்துள்ளனர்.
  • குறைவாகப் பங்களிக்கும் நிருவாகிகள்
இந்த நிர்வாகிகள் கடந்த 2 மாதங்களில் 30க்கும் குறைவான திருத்தங்களைச் செய்துள்ளனர், ஆனால் கடந்த 3 மாதங்களில் குறைந்தது ஒரு திருத்தமாவது செய்திருக்கிறார்கள்.
  • பங்களிக்காத நிருவாகிகள்
இந்த நிர்வாகிகள் கடந்த 3 மாதங்களில் ஒரு திருத்தங்களையும் செய்யவில்லை.
இவற்றைப் பட்டியல் அமைப்பதோடு மட்டுமல்லாது எதற்காக நிர்வாகிகள் பங்கெடுப்பதில்லை என்பதை அவர்களிடம் கேட்பது நன்று. த♥உழவன் கூறியது போல அனைவரும் ஒரு காலத்தில் முனைப்புடன் செயற்பட்டவர்கள். சிலர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பங்கெடுத்துள்ளனர். அவர்களிடம் "நீங்கள் ::கடந்த 3 மாதங்களில் ஒரு திருத்தங்களையும் செய்யவில்லை", பங்களிக்காத நிருவாகிகள் பட்டியலில் நீங்கள் அடங்குகின்றீர்கள் என்று தெரிவிப்பது இன்று முனைப்புடன் செயற்படும் நிர்வாகிகளின் கடமை.
தொடர்ந்து பங்களிக்கும் நிருவாகிகள், குறைவாகப் பங்களிக்கும் நிருவாகிகள், பங்களிக்காத நிருவாகிகள், முன்னைய நிருவாகிகள் என பக்கங்கள் இருந்தால் நல்லது. விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல் பக்கம் தற்போது இவை அனைத்தையும் ஒரே பக்கத்தில் கொண்டுள்ளது. இது தானியங்கி முறையில் அமையுமானால் மிக நன்று. கவனிக்க: பயனர்:Neechalkaran
கீழ்க் காணும் விதிமுறை தமிழ் விக்கியில் இல்லை என்றாலும் பங்களிக்காத நிர்வாகியின் பேச்சுப் பக்கத்தில் "நீங்கள் கடந்த ஒரு வருடமாக ஒரு திருத்தங்களையும் செய்யவில்லை" என்று தெரிவிப்பது உறங்கு நிலையில் இருக்கும் நிர்வாகிகளைத் தட்டி எழுப்புவது போன்று அமையலாம். இதனால் அவர்கள் மீண்டும் பங்களிக்க வழிகோலலாம்.
ஆ.வியில் - பங்களிக்காத ஒரு நிருவாகியின் அணுக்கத்தை நீக்குவதற்கான நிபந்தனைகள்
வரைகூறு 1
  • நிர்வாகி கடந்த 12 மாதங்களில் எந்த திருத்தங்களையோ அல்லது நிர்வாக நடவடிக்கைகளையோ செய்யவில்லை.
- இந்த desysop செயல்முறை ஆரம்பிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பும் மற்றும் சில நாட்களுக்கு முன்பும் அவரது பயனர் பேச்சு பக்கத்தில் அறிவிப்பது அவசியம்.
வரைகூறு 2
  • நிர்வாகி கடந்த 60 மாதங்களில் 100க்கும் குறைவான திருத்தங்களை மட்டுமே செய்துள்ளார்.
-இந்த desysop செயல்முறைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பும் ஒரு மாதத்திற்கு முன்பும் அவரது பயனர் பேச்சு பக்கத்தில் அறிவிப்பது அவசியம்.
இந்த செயல்முறையில் சில நிர்ணயமான படிகள் பின்பற்றப்பட வேண்டும். desysop நடவடிக்கை எடுக்கப்படும் முன் குறிப்பிட்ட இடைவெளிகளில் நிர்வாகியின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பது ஒரு வெளிப்படையான மற்றும் நீதியான செயல்முறையை உறுதி செய்ய உதவுகிறது.
பங்களிக்காத ஒரு நிருவாகியின் அணுக்கத்தை நீக்குவது அதிகாரிகளால் கையாளப்பட வேண்டும்.
--சி.செந்தி (உரையாடுக) 16:32, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
அவ்வாறு பட்டியலிடுவதால் என்னென்ன பயன்கள் எனத் தெரிந்தால் நன்றாக இருக்கும். நிருவாக உதவிக்கு யாரை அணுகலாம் என்பதற்கான பட்டியலென்றால் எனக்கு உகப்பே. -- சுந்தர் \பேச்சு 04:20, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

இது தொடர்பங்களிப்பு காலவரையறை பற்றியது. நிர்வாக அணுக்க நீக்கம் பற்றியதல்ல. --AntanO (பேச்சு) 17:26, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

தமிழ் விக்கிக்கு ஒத்துவராதுனு தோணுது. இது பற்றிய பழைய உரையாடல். https://ta.wikipedia.org/s/3cih --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:53, 31 மார்ச்சு 2024 (UTC)Reply

இது தொடர்பங்களிப்பு காலவரையறை பற்றியது. நிர்வாக அணுக்க நீக்கம் பற்றியதல்ல. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:47, 31 மார்ச்சு 2024 (UTC)Reply
வணக்கம். தொடர்பங்களிப்பு காலவரையறை செய்வது நன்றே என்றாலும் தொடர்ந்து பங்களிக்கும் நிருவாகிகள் என்பதற்கு குறைந்தபட்சமாக கடந்த இரு மாதங்களில் 30க்கும் அதிகமான தொகுப்புகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது சரியாக வருமா என்பதில் ஐயமுள்ளது. உதாரணமாக, நான் சீனாவில் இருந்தபோது (தற்பொழுது சுவீடன் திரும்பிவிட்டேன்), விக்கிப்பீடியாவில் சாதாரணமாக புகுபதிகை செய்ய இயலாதிருந்தது. விபிஎன் வாங்கிய பிறகே புகுபதிகை செய்ய முடிந்தது. அதனால், இரு மாதங்கள் என்பது குறுகிய காலமாகத் தெரிகிறது. இதில் பொதுவாக எடுக்கும் எந்த முடிவும் எனக்கு சம்மதமே.--நந்தகுமார் (பேச்சு) 18:01, 31 மார்ச்சு 2024 (UTC)Reply
தங்களது கருத்திற்கு நன்றி. //விபிஎன் வாங்கிய பிறகே புகுபதிகை செய்ய முடிந்தது// இதனைத் தொழிநுட்ப ரீதியில் தீர்க்க முயற்சிப்போம். ஒரு நிருவாகி (உதாரணத்திற்கு நான்) இரு மாதங்களாக ஏதோ ஓர் காரணத்தினால் விக்கியில் பங்களிக்க இயலவில்லை எனில் தொடர்ந்து பங்களிக்கும் நிருவாகி எனும் பட்டியலில் இருந்து தான் என் பெயர் நீங்குமே தவிர, நிருவாகிகளின் பட்டியலில் இருந்து அல்ல என்பதனைத் தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன். இந்தப் பட்டியலும் விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்#குறிப்பில் கூறியுள்ளவாறு தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உண்மையிலேயே தற்போது எத்தனை நிருவாகிகள் செயற்பாட்டில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதுமே ஆகும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:10, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:35, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Sridhar G: மற்றுக்கருத்து (தொடர்பட்ட கருத்தல்ல) இல்லாததால் இதனை நடைமுறைப்படுத்துங்கள். தேவையானால், சில கால (1 வாரம்) அவகாசம் கொடுக்கலாம்.--AntanO (பேச்சு) 05:21, 6 ஏப்பிரல் 2024 (UTC)Reply

Return to the project page "நிருவாகிகள் பட்டியல்".