புளோரின்

(ஃபுளூரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புளோரின் (Flourine) அல்லது புளூரின் என்னும் தனிமம் F என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் அணுவெண் 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (chemical reativity) கொண்டதும், அதிக எதிர்மின்னி பிணைப்பீர்ப்பும் (electronetativity) கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய வளிமம். இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது இரட்டை மூலக்கூறாக இருக்கும். இதன் வேதியியல் குறியீடு F2. மற்ற ஆலசன்களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.

புளோரின்
9F
-

F

Cl
ஆக்சிசன்புளோரின்நியான்
தோற்றம்
வளிமம்: மிகவும் வெளிர் மஞ்சள்
திரவம்: பிரகாசமான மஞ்சள்
Small sample of pale yellow liquid fluorine condensed in liquid nitrogen
Liquid fluorine at cryogenic temperatures
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் புளோரின், F, 9
உச்சரிப்பு /ˈflʊərn/, /ˈflʊərɪn/, /ˈflɔːrn/
தனிம வகை ஆலசன்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 172, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
18.9984032(5)[1]
இலத்திரன் அமைப்பு 1s2 2s2 2p5[2]
2, 7
Electron shells of fluorine (2, 7)
Electron shells of fluorine (2, 7)
வரலாறு
கண்டுபிடிப்பு ஆ. ஆம்பியர் (1810)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
முவாசான்[2] (June 26, 1886)
பெயரிட்டவர் டேவி
இயற்பியற் பண்புகள்
நிலை வளிமம்
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
1.696[3] g/L
திரவத்தின் அடர்த்தி கொ.நி.யில் 1.505[4] g·cm−3
உருகுநிலை 53.53 K, −219.62 °C, −363.32[5] °F
கொதிநிலை 85.03 K, −188.12 °C, −306.62[5] °F
மாறுநிலை 144.4 K, 5.215[4] MPa
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 6.51[3] கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை (Cp) (21.1 °C) 825[4] J·mol−1·K−1
(Cv) (21.1 °C) 610[4] யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 38 44 50 58 69 85
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் −1
(oxidizes oxygen)
மின்னெதிர்த்தன்மை 3.98[2] (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 1,681[6] kJ·mol−1
2வது: 3,374[6] kJ·mol−1
3வது: 6,147[6] kJ·mol−1
பங்கீட்டு ஆரை 64[7] pm
வான்டர் வாலின் ஆரை 135[8] பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு cubic
புளோரின் has a cubic crystal structure

the structure refers to solid fluorine, just below the melting point, 1 atm[9]
காந்த சீரமைவு diamagnetic[10]
வெப்ப கடத்துத் திறன் 0.02591[11] W·m−1·K−1
CAS எண் 7782-41-4[2]
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: புளோரின் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
18F trace 109.77 min β+ (96.9%) 0.634 18O
ε (3.1%) 1.656 18O
19F 100% F ஆனது 10 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
reference[12]
·சா

குறிப்பிடத்தக்க பண்புகள்

தொகு

தூய புளோரின் (F2) அரிக்கும் பண்புடைய வெளிர் மஞ்சள் அல்லது இளம் பழுப்பு[1] நிற வளிமம். இது வலுவான ஆக்சைடாக்கி. இதன் எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு (electronetativity) 4.0 ஆக இருப்பதால் பெரும்பாலான தனிமங்களுடன் இணைந்து சேர்மங்கள் ஆகின்றது. நிறைவுடைய வளிமங்களாகிய (noble gasses) கிருப்டான் (krypton), செனான் (xenon), ரேடான் (radon) ஆகியவற்றுடன் கூட இணைந்து சேர்மமாகின்றது. ஒளியின்றி, குளிர்ந்த சூழலிலும், புளூரின் ஐதரசனுடன் வெடிப்புடன் இணைகின்றது. மிகவும் வேதியியல் இயைபுடையதால், புளோரின் பீய்ச்சில் கண்ணாடி, மாழைகள், முதலிவவை மட்டுமன்றி நீருடனும் பிறபொருட்களுடனும் சேர்ந்து ஒளிர்வுடன் எரியும். இதன் இயைபுத் தன்மையால் இதனை சாதாரண கண்ணாடி முதலிய கொள்கலங்களில் வைத்திருப்பது கடினம், எனவே புளூரோ-கார்பன் பூச்சுடைய ஒருவகையான சிறப்பு குவார்ட்சு (சிலிக்கான்-டை-ஆக்சைடு) குழாய்களில் இது வைக்கப்பட்டிருக்கும். ஈரப்பதம் உடைய காற்றுடன் கலந்தால் மிகவும் கேடு விளைவிக்கும் ஐதரோ-புளூரிக் காடி உருவாகும். நீர்க்கரைசல்களில், புளோரின் புளோரைடு மின்ம அணுவாய், F, இருக்கும்.

வரலாறு

தொகு

கால்சியம் புளூரைடு (புளூர்சுபார் அல்லது புளூரைட்டு என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, மாழைகளைக் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக 1530ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் [13]. 1670ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை அம்ஃபிரி டேவி, கே லூசாக்கு, அந்துவான் இலவாசியே முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.

இந்த ஐதரோ புளூரிக் காடியில் முன்பு கண்டறியாத ஒரு புதுப் பொருள் இருப்பது உணரப்பட்டது. ஆனால் இது மிகவும் விறுவிறுப்பாக பிற பொருட்களுடன் இயைபுற்றதால், இதனை தனியே எளிதில் பிரிக்கமுடியவில்லை. கடைசியாக பல அறிஞர்கள் சுமார் 74 ஆண்டுகளாக முயன்ற பின்னர் 1866ல் என்றி முவாசான் (Henri Moissan) பிரித்தெடுத்தார்.[14] இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

அணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய ஓரிடத்தானாகிய 235U மற்றும் 238U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது.

பயன்பாடுகள்

தொகு
  • குறைக்கடத்திக் கருவிகள் மற்றும் மின்சுற்றுகள் உற்பத்தியிலும், தட்டையான தொலைக்காட்சிக் கருவிகள், கணினித் திரைகள் முதலியவற்றின் உற்பத்தியிலும் பயன்படும் பிளாசுமா அரிப்பு எந்திரங்களில் துல்லியமாய் அரிக்க புளூரின் பயன்படுகின்றது.
  • மின் விளக்குக் கண்ணாடிக் குமிழ்களை அரிப்பு நிகழ்த்த ஐதரோ-புளூரிக் காடி தேவைப்படுகின்றது.
  • டெஃப்லான் (அல்லது டெப்லான்) (Teflon) எனப்படும் பாலி-தெட்ரா-புளூரோ-எத்திலீன் (Polytetrafluoroethylene) என்னும் பொருள் சமைக்கும் பாத்திரங்களில் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • புளூரின் சேர்மங்களான சோடியம் புளூரைடு, வெள்ளீய புளோரைடு (இசுடான்னசு புளூரைடு) முதலியன பற்பசையில் பயன்படுத்தப் படுகின்றன.
  • சில புளூரேன்கள் (செவொ புளுரேன் (sevoflurane), தெசுபுளூரேன் (desflurane), ஐசோ புளூரேன் (isoflurane) முதலியன மயக்க மருத்துகளாக மருத்துவமனைகளில் பயன்படுகின்றன.
 
புளூரினைக் கண்டுபிடித்த என்றி முவாசான்
 
புளூரைட்டு (CaF2) படிகங்கள்

ஆபத்துக்கள்

தொகு
 
வர்த்தகத்திற்காய் இடமாற்றப்படும் புளோரினுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எச்சரிக்கைக் குறியீடுகள்.[15]

புளோரின் எனப்படும் மூலகம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. புளோரின் மில்லியனில் 25 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், காற்று வழிகள், நுரையீரல் போன்ற பகுதிகளில் அரிப்பு போன்ற உணர்வை உண்டாக்கும். அத்தோடு கல்லீரல், சிறுநீரகம் என்பவையும் பாதிப்படையலாம். ஆனால் மில்லியனில் 100 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், மூக்கு போன்றவை கடுமையாகச் சேதமடையும்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. Wieser, Michael E.; Coplen, Tyler B. (2010). "Atomic weights of the elements 2009 (IUPAC Technical Report)". Pure and Applied Chemistry 83: 359–396. doi:10.1351/PAC-REP-10-09-14. 
  2. 2.0 2.1 2.2 2.3 Aigueperse et al. 2005, "Fluorine", p. 1.
  3. 3.0 3.1 Aigueperse et al. 2005, "Fluorine", p. 2.
  4. 4.0 4.1 4.2 4.3 Compressed Gas Association (1999). Handbook of compressed gases. Springer. p. 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412782305. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. 5.0 5.1 Dean 1999, ப. 3.29.
  6. 6.0 6.1 6.2 Dean 1999, ப. 4.6.
  7. Dean 1999, ப. 4.35.
  8. Kim, Sung-Hoon (2006), Functional dyes, Elsevier, p. 257, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444521763 {{citation}}: Check |isbn= value: checksum (help)
  9. Young, David A. (2011-06-10). Phase Diagrams of the Elements (Report). Springer. p. 10. {{cite report}}: Check date values in: |year= / |date= mismatch (help)
  10. Mackay, Mackay & Henderson 2002, ப. 72.
  11. Yaws & Braker 2001, ப. 385.
  12. Chiste, V. (2006). "F-18" (PDF). Table de radionucleides. Laboratoire National Henri Becquerel. பார்க்கப்பட்ட நாள் 15 June 2011. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  13. புளூரைடு வரலாறு Discovery of fluorine
  14. H. Moissan (1886). "Action d'un courant électrique sur l'acide fluorhydrique anhydre". Comptes rendus hebdomadaires des séances de l'Académie des sciences 102: 1543–1544. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3058f/f1541.chemindefer. 
  15. NOAA 9F data sheet.
  16. Keplinger & Suissa 1968.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரின்&oldid=3950836" இலிருந்து மீள்விக்கப்பட்டது