அலுமினியம் ஈரசிட்டேட்டு

அலுமினியம் ஈரசிட்டேட்டு (Aluminium diacetate) என்பது C4H7AlO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கார அலுமினியம் அசிட்டேட்டு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் தூளாக இருக்கிறது. அலுமினியம் அசிட்டேட்டு வகைகளுள் ஒன்றான இச்சேர்மத்தை சோடியம் அலுமினேட்டுடன் (NaAlO2) அசிட்டிக் அமிலம் சேர்த்து தயாரிக்கலாம்.

அலுமினியம் ஈரசிட்டேட்டு
Skeletal formula of aluminium diacetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் டையசிட்டேட்டு
இனங்காட்டிகள்
142-03-0 Yes check.svgY
ChemSpider 21106083 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 10197832
பண்புகள்
C4H7AlO5
வாய்ப்பாட்டு எடை 162.08 g·mol−1
தோற்றம் வெண்மை நிறம், ஒளிபுகா படிகங்கள்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கண் மற்றும் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மருத்துவப் பயன்கள்தொகு

அலுமினியம் ஈரசிட்டேட்டு ஒரு கிருமி நாசினியாகவும் மற்றும் தசைக் கட்டுப்படுத்தியாகவும், குறிப்பாக ஈரமான அல்லது கசியும் புண்களின் காயங்களைச் சுருக்கி தூய்மையாக்கவும் தற்காலிகமாக நமைச்சலை குறைத்து ஆற்றவும் இது பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக்கடி, பாதப்படை, நஞ்சுப்படர்கொடி போன்ற செடிகள் மற்றும் மரங்களைத் தொடுவதால் [1]உண்டாகும் அழற்சி நோய்களிலிருந்து விடுதலை பெற உதவுகிறது. மேலும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அணிகலன்களை உபயோகிப்பதால் ஏற்படும் அழற்சிகளைப் போக்கவும், காயங்களால் தோன்றிய வீக்கத்தைக் குறைக்கவும் அலுமினியம் ஈரசிட்டேட்டு பயன்படுகிறது. தோலின் மீது உண்டாகும் சிரங்கு, வெடிப்பு, அரிப்புகள், முகப்பருக்கள் ஆகியனவற்ரிலிருந்து நிவாரணம் பெறவும் அலுமினியம் ஈரசிட்டேட்டு பயன்படுகிறது. பரோவின் கரைசல், அதாவது நீரில் கரைக்கப்பட்ட 13 சதவீத அலுமினியம் அசிட்டேட்டாக பெரும்பாலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அலுமினியம் அசிட்டேட்டு கலந்துள்ள மருந்துப் பொருட்கள் தோம்போரோ தூள், கோர்தோன்சின் போரோகட்டு என்ற வணிகக் குறியீட்டுப் பெயர்களுடனும்[2], திரைகாம் என்ற கூழ்ம வடிவிலும் விற்கப்படுகின்றன[3].

வெளிப்புற காதில் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அசிட்டிக் அமிலம்/அலுமினியம் அசிட்டேட்டு கரைசல் பயன்படுகிறது. நோய்த் தொற்றால் காதில் வளரும் பாக்டீரியா, பூஞ்சை முதலியவற்றை இம்மருந்து கட்டுப்படுத்துகிறது[4]. தோம்போரோ ஓட்டிக், சிடார்-ஓட்டிக்,, போரோ ஃபெர் போன்ற வர்த்தகப் பெயர்களுடன் அமெரிக்காவில் காது தொற்று நோய்க்கான மருந்துகள் தயாரித்து விற்கப்படுகின்றன[5].

மேற்கோள்கள்தொகு

  1. "MedlinePlus Medical Encyclopedia: Rashes." U.S National Library of Medicine. U.S. National Library of Medicine, 22 Oct. 2011. Web. 08 Oct. 2012.
  2. Drugs.com: Aluminum acetate. Provides sources for each specific use.
  3. "TriCalm Uses". TriCalm official website. 2012. 12 நவம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. Medicine Net. "Acetic Acid/Aluminum Acetate - OTIC (Domeboro) Side Effects, Medical Uses, and Drug Interactions." MedicineNet. N.p., n.d. Web. 08 Oct. 2012.
  5. Drugs.com: Acetic acid/ aluminum acetate solution