பேரியம் அசிட்டேட்டு
பேரியம் அசிட்டேட்டு (Barium acetate) Ba(C2H3O2)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் உப்பு ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் அசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
பேரியம் டையசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
543-80-6 | |
Abbreviations | Ba(OAc)2 |
ChemSpider | 10515 |
EC number | 208-849-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10980 |
வே.ந.வி.ப எண் | AF4550000 |
| |
UNII | FBA31YJ60R |
பண்புகள் | |
C4H6BaO4 | |
வாய்ப்பாட்டு எடை | 255.42 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.468 g/cm3 (நீரிலி) 2.19 g/cm3 (ஒற்றை நீரேறி) |
உருகுநிலை | 725 °C (1,337 °F; 998 K) |
55.8 g/100 mL (0 °C) 72 கி/100மி.லி (20 °செல்சியசு) | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் சிறிதளவு கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உட்கொள்வதால் தீங்குண்டு |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
921 mg/kg (oral, rat) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபேரியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தை வினைபுரியச் செய்வதன் மூலமாக பொதுவாக பேரியம் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது[2].
கரைசல் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வினையில் பேரியம் அசிட்டேட்டு படிகமாக வெளிவருகிறது. பேரியம் கார்பனேட்டுக்கு மாற்றாக இவ்வினையில் பேரியம் சல்பைடையும் பயன்படுத்த முடியும்.
இங்கும் கரைப்பான் ஆவியாக்கப்பட்டு பேரியம் அசிட்டேட்டு படிகமாக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுவெண்மை நிறத் துகள்களாக காணப்படும் பேரியம் அசிட்டேட்டு 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதிக அளவு கரைதிறன் பெற்றுள்ளது. அதாவது 100 கிராம் தண்ணீரில் 55.8 கிராம் அளவு பேரியம் அசிட்டேட்டைக் கரைக்க முடியும். பேரியம் அசிட்டேட்டைச் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது.
வினைகள்
தொகுபேரியம் அசிட்டேட்டைக் காற்றில் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது. மேலும் இது கந்தக அமிலம், ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து முறையே சல்பேட்டு, குளோரைடு மற்றும் நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது.
பயன்கள்
தொகுபேரியம் அசிடேட்டு நெசவுத் தொழிலில் நெசவுத் துணிகளில் அச்சிடும் போது நிறமூட்டியாகவும், வண்ணப்பூச்சுகள் , மெருகூட்டிகளில் மற்றும் உயவு எண்ணெய்களில் உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலில், மற்ற அசிட்டேட்டுகள் தயாரிக்கவும் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,பேரியம் அசிடேட்டு உயிரைக் கொல்லும் ஒரு வலிமையான நஞ்சாகவும் இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ [1], JT Baker
- ↑ Barium acetate பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம், hillakomem.com, retrieved 30 June 2009
உசாத்துணை நூல்கள்
தொகு- I. Gautier-Luneau; A. Mosset (1988). "Crystal structure of anhydrous barium acetate". Journal of Solid State Chemistry 73 (2): 473–479. doi:10.1016/0022-4596(88)90133-8. Bibcode: 1988JSSCh..73..473G.
அசிட்டேட்டுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
AcOH | He | ||||||||||||||||||
LiOAc | Be(OAc)2 BeAcOH |
B(OAc)3 | AcOAc ROAc |
NH4OAc | AcOOH | FAc | Ne | ||||||||||||
NaOAc | Mg(OAc)2 | Al(OAc)3 ALSOL Al(OAc)2OH Al2SO4(OAc)4 |
Si | P | S | ClAc | Ar | ||||||||||||
KOAc | Ca(OAc)2 | Sc(OAc)3 | Ti(OAc)4 | VO(OAc)3 | Cr(OAc)2 Cr(OAc)3 |
Mn(OAc)2 Mn(OAc)3 |
Fe(OAc)2 Fe(OAc)3 |
Co(OAc)2, Co(OAc)3 |
Ni(OAc)2 | Cu(OAc)2 | Zn(OAc)2 | Ga(OAc)3 | Ge | As(OAc)3 | Se | BrAc | Kr | ||
RbOAc | Sr(OAc)2 | Y(OAc)3 | Zr(OAc)4 | Nb | Mo(OAc)2 | Tc | Ru(OAc)2 Ru(OAc)3 Ru(OAc)4 |
Rh2(OAc)4 | Pd(OAc)2 | AgOAc | Cd(OAc)2 | In | Sn(OAc)2 Sn(OAc)4 |
Sb(OAc)3 | Te | IAc | Xe | ||
CsOAc | Ba(OAc)2 | Hf | Ta | W | Re | Os | Ir | Pt(OAc)2 | Au | Hg2(OAc)2, Hg(OAc)2 |
TlOAc Tl(OAc)3 |
Pb(OAc)2 Pb(OAc)4 |
Bi(OAc)3 | Po | At | Rn | |||
Fr | Ra | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
La(OAc)3 | Ce(OAc)x | Pr | Nd | Pm | Sm(OAc)3 | Eu(OAc)3 | Gd(OAc)3 | Tb | Dy(OAc)3 | Ho(OAc)3 | Er | Tm | Yb(OAc)3 | Lu(OAc)3 | |||||
Ac | Th | Pa | UO2(OAc)2 | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |