இந்து தொன்மவியல் உயிரினங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்து தொன்மவியல் உயிரினங்கள் என்பவை இந்து சமயத்தில் உள்ள புராணங்கள் மற்றும் கதைகளில் கூறப்பட்டுள்ள உயிரினங்களாகும்.

விலங்குகளின் உடற்கூறுகளைக் கொண்டவை

தொகு

மீன்

தொகு
  • மச்ச அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக கருதப்படுவது. இந்த உருவத்தில் இடைவரை மனித உடலும், அதன்பிறகு மீன் உருவமும் உள்ளது.[1]
  • சுவர்ணமச்சை - தெற்காசியப் பகுதிகளில் கூறப்படும் இராமயணத்தில் இராவணனின் மகளாகவும், அனுமனின் மனைவியாகவும் கூறப்படுகின்றவர். [2] இவர் கடற்கன்னிகளின் இளவரசியாக அனுமான் மீது கொண்டகாதலால் இராமருக்கு பாலம் அமைத்திட உதவி செய்தவராக கருதப்படுகிறார்.[3]
  • வானவில் மீன் என்பது இந்து சமயத்தில் திமிங்கிலத்தினை விடப் பெரியதாக கருதப்படுகின்ற உயிரினமாகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான புத்தரை உண்டதாகவும், அவரை மீனவர் மீட்டதாகவும் கூறப்படுகிறது.[4]

நீர்நில வாழ்வன

தொகு
  • பீகி - தொடுவான சூரியனின் குறியீடாக் கூறப்படும் தவளையாகும். இது சமஸ்கிருத விளக்கவுரையில் குறிப்பிடுகிறது.

ஊர்வன

தொகு
  • ஆமைகள்
    • கூர்ம அவதாரம் - திருமாலின் தச அவதாரங்களில் இரண்டாவது அவதாரம். இடுப்பு வரை மனித உடலும், இடுப்பிலிருந்து ஆமை வடிவமும் உடையது. [5][6]
  • முதலைகள்
    • மகரம் - இந்து தொன்மவியலில் உள்ள கடல்வாழ் உயினினம். கங்கா தேவி மற்றும் வருணனின் வாகனமாக மகரம் உள்ளது.[7][8] காமதேவனின் கொடியாகவும் மகரம் உள்ளது.
  • பாம்புகள்
  • வாசுகி (பாம்பு) - சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பாகும். [9]
  • ஆதிசேஷன் - பாற்கடலில் திருமாலுக்கு படுக்கையாக இருப்பவர்.[10]
  • மானசா - வாசுகி பாம்பின் சகோதரி.
  • கேது - மனித தலையும் பாம்பு உடலும் கொண்டுள்ள உயிரினம். கேது நவக் கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • இராகு (நவக்கிரகம்) - நவக்கிரகங்களில் ஒருவர்.
  • காளிங்கன் - மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற நாகமாகும். இந்த நாகத்தின் மீது கிருஷ்ணன் நடனமாடினார். இதனை காளிங்க நடனம் என்பர்.
  • கார்கோடகன் - வானிலையை கட்டுப்படுத்தும் வல்லமையுடைய நாகம்.
  • தட்சகன் - நாகர்களின் தலைவன்.
  • உலுப்பி, மகாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவிகளுள் ஒருத்தி. இவள் ஒரு நாகதேவதையாவர்.
  • சுரசை
  • ஜரத்காரு - வாசுகியின் தங்கை

பறவைகள்

தொகு

யானை

தொகு
  • ஐராவதம் - தொன்மவியலில் கூறப்படுகின்ற வெள்ளை யானை. இந்த யானையானது இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது.
  • சுப்ரதீகம் - மன்னர் பகதத்தனின் போர் யானை
  • கஜாசுரன்[11] - சிவபெருமானால் கொல்லப்பட்ட யானை.
  • கஜேந்திரன் - தடாகத்தில் இருந்த முதலையால் தாக்கப்பட்ட யானை, இதனை திருமால் காப்பாற்றினார். இச்சம்பவம் கஜேந்திர மோட்சம் என்று கூறப்படுகிறது.
  • பிள்ளையார் - யானை தலையுடன் இருக்கும் கடவுள்.
  • ஐராவதி - ஐராவதம் எனும் வெள்ளையானையின் தாய். இவர் கருது மற்றும் காசியப்பரின் தம்பதியினரின் மகள்.
  • விநாயகி - யானை தலை, மனித உடல் கொண்ட இறைவி.

குரங்கு

தொகு

காட்டுப் பன்றி

தொகு
  • வராக அவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம். பன்றி தலையும், மனித உடலும் பெற்றதாக உள்ளது.
  • வராகி அம்மன் - ஏழு கன்னிமார்களில் ஒருவராவார். இவர் பன்றி தலையும், பெண் உடலும் பெற்றதாக உள்ளது.
  • தாய்ப் பன்றி வடிவம் - சிவபெருமான் தாயை இழந்த குட்டிகளுக்காக பன்றியாக மாறி பால்தந்த வடிவம்.

மாடு

தொகு
  • நந்தி தேவர் - சிவபெருமானின் வாகனமாக கூறப்பெறுகின்ற காளை உயிரினம். சில சமயங்களில் காளை தலையும், மனித உடலும் கொண்ட நந்தி தேவர்.
  • காமதேனு - இந்து சமயத்தில் புனிதமாக கருதப்படும் பசு. பெண்ணின் தலையும், பசுவின் உடலும், மயிலின் சிறகும் உடைய உயிரினம். பல சமயங்களில் பசுவே காமதேனுவாக கொண்டாடப்படுகிறது.
  • பட்டி - காமதேனுவின் மகள்.
  • தக்கன் - ஆட்டின் தலையும், மனித உடலும் கொண்டவர். யாகத்தினை சிவபெருமானை அழைக்காமல் செய்தமைக்காக வீரபத்திரரால் தலை வெட்டப்பட்டு, ஆட்டின் தலையை பெற்றவர்.

குதிரை

தொகு
  • ஹயக்ரீவர் - குதிரைமுகமும் உடலும் பெற்ற திருமாலின் வடிவம்.
  • உச்சைச்சிரவம் - ஏழு தலைகளைக் கொண்ட வெள்ளைக் குதிரை. இக்குதிரை மகாபலி மற்றும் இந்திரனின் வாகனமாக உள்ளது.

சிங்கம்

தொகு
 
சரப மூர்த்தியின் ஓவியம்
  • நரசிம்மர் - திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவர்.
  • பிரத்தியங்கிரா - சிங்க முகத்தினைக் கொண்ட பெண் தெய்வம்.
  • சரபேசுவரர் - சிவபெருமானின் அறுபத்தி நான்கு வடிவங்களில் ஒருவர். இரண்டு சிம்ம முகமும், உடலும் கொண்டவர்.
  • சிம்மமுகன் - இவர் சிங்க முகத்தினையும், மனித உடலைக் கொண்டவர். சூரபத்மனின் சகோதரராவார்.

கரடி

தொகு

  • சாம்பவான் - கரடி இனத்தின் தலைவராக இந்து தொன்மவியலில் குறிப்பிடப்படுபவர். இவரைப் பற்றி மகாபாரதம் இராமாயணம் ஆகிய இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது.
    • ஜாம்பவதி - ஜாம்பவானின் மகள். திருமாலின் அவதாரமான கிருஷ்ணனின் மூன்றாவது மனைவியாவார்

பல உயிர் கலவை

தொகு
  • நவகுஞ்சரம் - மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகும்.
  • யாளி - இந்துக் கோயில்களின் தூண்களிலும், படிக்கட்டுகளிலும் எண்ணற்ற சிற்பங்களாக யாளி காணப்படுகிறது.
  • சரபா - சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவது. சரபம் பறவையானது சிங்கம் மற்றும் பறவையின் கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது.

அரக்கர்கள்

தொகு

பூதங்கள்

தொகு
  • துவாரபாலகர் - இறைகளின் வாயிற்காவலர்கள் துவாரபாலகர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் அனுமதியைப் பெற்றே இறையை தரிசனம் செய்ய முடியும். கதை போன்ற பெரிய ஆயுதங்களைக் கொண்டும், பேருருவமாக இருப்பர்கள்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Hindu Temple, Somnathpur
  2. Satyavrat Sastri (2006). Discovery of Sanskrit Treasures: Epics and Puranas. Yash Publications. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89537-04-3. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  3. S.N. Desai (2005). Hinduism in Thai Life. Popular Prakashan. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-189-8. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
  4. From: A guide to Hinduism. C.M.Faren[full citation needed]
  5. "Hinduism - Shiva Parvati". msu.edu. Archived from the original on 28 September 2012. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  6. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 74.
  7. Robert Beer (10 September 2003). The handbook of Tibetan Buddhist symbols. Serindia Publications, Inc. pp. 77–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932476-03-3. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
  8. George Mason Williams (2003). Handbook of Hindu mythology. ABC-CLIO. pp. 294–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-106-9. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
  9. Bhāgavata Purāṇa 3.26.25
  10. Bhāgavata Purāṇa 10.1.24
  11. [1]