ஐ. எஸ். இராமச்சந்திரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐ. எஸ். ஆர் (ISR) என்று தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்பட்ட ஐ. எஸ். இராமச்சந்திரன் (நவம்பர் 7, 1936), ஒரு தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர். கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஐ.எஸ்.ஆர். தியேட்டர்ஸ் (ISR Theaters) என்ற நாடக நிறுவனத்தை நிறுவி, சொந்தமாக பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். கர்நாடக இசை ஞானமுள்ள ஐ.எஸ்.ஆர், ஓரிரு திரைப்படங்களில் பாடியுமிருக்கிறார்; ஆடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளார். அரசியல் மற்றும் சமூகத்தை நையாண்டி செய்து அவரே எழுதி, அவரே பாடிய எல்.பி இசைத் தட்டு ஒன்றை எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுபூர்வீகம்
இராஜபாளையத்தை அடுத்து உள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் சர்க்கரை நாடார். அவருடைய இளைய சகோதரரின் பெயர் சோலை என்று அழைக்கப்பட்ட சோலையப்பன். அவரும் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குடும்பம்
மனைவியின் பெயர் பொன்னுத்தாய். அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மூத்த மகன் செல்வகுமார், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிகின்றார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் (ISR Ventures) என்கிற திரைபடம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ஐ.எஸ்.ஆர் மேல்படிப்புக்காக சென்னை வந்து பாலிடெக்னிக் படித்துவிட்டு, தென்னக இரயில்வேயில் பணியில் அமர்ந்தார். பணியில் இருந்து கொண்டே, ஓய்வு நேரங்களில் நாடகம், திரைப்படங்களில் நடித்து வந்தார். கும்பகோணத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, நெஞ்சு வலி தாக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் நடித்த அந்த கடைசித் திரைப்படம் - மோகமுள்.
நடித்த திரைப்படங்கள்
வருடம் | திரைப்படம் |
1964 | சர்வர் சுந்தரம் |
1965 | நீர்க்குமிழி |
நீலவானம் | |
சாந்தி | |
1966 | தாயே உனக்காக |
மேஜர் சந்திரகாந்த் | |
பாமா விஜயம் | |
1968 | எதிர் நீச்சல் |
சோப்பு சீப்பு கண்ணாடி | |
1969 | பூவா தலையா |
ஐந்து லட்சம் | |
1970 | தலைவன் |
நவக்கிரகம் | |
நம்ம வீட்டுத் தெய்வம் | |
ராமன் எத்தனை ராமனடி | |
கண்ணன் வருவான் | |
1971 | ராஜ நாகம் |
புன்னகை | |
1972 | பிஞ்சு மனம் |
இதோ எந்தன் தெய்வம் | |
அவசரக் கல்யாணம் | |
நீதி | |
ஞான ஒளி | |
கண்ணம்மா | |
1973 | சொந்தம் |
தெய்வக் குழந்தைகள் | |
நத்தையில் முத்து | |
கௌரவம் | |
1974 | ராஜநாகம் |
ஹோட்டல் சொர்க்கம் | |
சமர்ப்பணம் | |
1975 | மனிதனும் தெய்வமாகலாம் |
அந்தரங்கம் | |
எடுப்பார் கைப்பிள்ளை | |
மொகுடா பெல்லாமா (தெலுங்கு) | |
பிஞ்சு மனம் | |
1976 | முத்தான முத்தல்லவோ |
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது | |
ஓ மஞ்சு | |
1977 | அவர் எனக்கே சொந்தம் |
நல்லதுக்குக் காலமில்லை | |
பாலாபிஷேகம் | |
அண்ணன் ஒரு கோயில் | |
1978 | மாங்குடி மைனர் |
கண்ணாமூச்சி | |
மேளதாளங்கள் | |
1979 | வேலும் மயிலும் துணை |
ராஜ ராஜேஸ்வரி | |
பசி | |
1980 | பொன்னகரம் |
பம்பாய் மெயில் 109 | |
1981 | பட்டம் பறக்கட்டும் |
சவால் | |
கல் தூண் | |
சிவப்பு மல்லி | |
1982 | பகடை பன்னிரண்டு |
லாட்டரி டிக்கெட் | |
போக்கிரி ராஜா | |
புதுக் கவிதை | |
1983 | தனிக்காட்டு ராஜா |
இமைகள் | |
தலை மகன் | |
1984 | நான் மகான் அல்ல |
நல்லவனுக்கு நல்லவன் | |
1985 | ஜப்பானில் கல்யாணராமன் |
1986 | மருமகள் |
மிஸ்டர் பாரத் | |
பதில் சொல்வாள் பத்ரகாளி | |
ஒரு இனிய உதயம் | |
1988 | சர்க்கரைப் பந்தல் |
1990 | ஆரத்தி எடுங்கடி |
என் காதல் கண்மணி | |
1991 | தந்துவிட்டேன் என்னை |
1995 | மோக முள் |