பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2012
கூட்டு முயற்சிக் கட்டுரை
தொகுதீவு கட்டுரையை நீங்கள் மேம்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன். இரு வாரங்கள் கழித்து தமிழக நாணயவியல் கட்டுரையை கூட்டு முயற்சியாக எடுத்துக் கொள்வோம். அனைத்துப் பயனர்களின் பரிந்துரைகளும் இடம் பெற வேண்டும் என்பதால் நீங்கள் பரிந்துரைத்த மற்ற தலைப்புகளைப் பிறகு சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வோம். நன்றி--இரவி 16:54, 29 சனவரி 2012 (UTC)
- அதன்படியே செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் 17:00, 29 சனவரி 2012 (UTC)
இவ்வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரையாக நீங்கள் பரிந்துரைத்த சங்ககால தமிழக நாணயவியல் இடம்பெற்றுள்ளது. இது குறித்த துறையறிவு இல்லாததால் உரை திருத்த மட்டுமே முடிந்தது. கட்டுரையைச் சிறப்பாகவும் ஆர்வத்துடனும் எழுதி உள்ளீர்கள். பாராட்டுகள்--இரவி 20:38, 16 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி, நான் விக்கிப்பங்களிப்பு செய்யும் நேரம் குறைந்துள்ளதால் தற்போது அக்கட்டுரையை மேம்படுத்த இயலவில்லை. விரைவில் திரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 07:20, 17 பெப்ரவரி 2012 (UTC)
பரவாயில்லீங்க. நீங்கள் பரிந்துரைக்க கட்டுரைகளைக் குறிப்பிட்ட வாரத்தில் தொகுக்கும் போது மற்றவர்கள் அதனைக் கவனித்து இணைந்து கொள்ள வாய்ப்பு உண்டு. நன்றி--இரவி 11:09, 17 பெப்ரவரி 2012 (UTC)
நாம் இருவருமே ஏற்கனவே நிறைய கூடுதல் பரிந்துரைகளைத் தந்திருப்பதால், புதிதாக பரிந்துரைப்பவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என எண்ணுகிறேன். எனவே, வேறு யாரும் பரிந்துரைகளைத் தராத நிலையில், வரும் வாரங்களில் நீங்கள் பரிந்துரைத்த மீன் பிடித்தல், ராம் பிரசாத் பிசுமில் கட்டுரைகள் இடம்பெறும். அப்புறம், சென்ற வாரம் கூட்டு முயற்சிக் கட்டுரை அறிவிப்புகளை இற்றைப்படுத்தியமைக்கு நன்றி. கூட்டு முயற்சி, முதற்பக்கக் கட்டுரைகள் போன்றவற்றில் தெளிவான ஒரு முறைமை, வரையறை உருவாக்கினோம் என்றால் யார் வேண்டுமானாலும் பொறுப்பெடுத்துச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம். நன்றி--இரவி (பேச்சு) 06:51, 30 மார்ச் 2012 (UTC)
வணக்கம் தென்காசி
தொகுRosalindelsiefranklin.jpg இப்படம் caroline davis என்பவரால் எடுக்கப்பட்டது. உரிமம் cc By 2.0 என இருந்தது. இப்படத்தின் மூலம் இங்கே இதனை இணைத்து விட முடியுமா?
மிக்க நன்றி தென்காசி--பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:11, 1 மார்ச் 2012 (UTC)
குறிப்பு
தொகுபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு. அப்புறம், வரும் வாரக் கட்டுரைகள் தொடர்பான வார்ப்புருக்களில் உங்கள் கட்டுரைகளுக்கு மட்டுமல்லாது மற்ற கட்டுரைகளுக்கும் கூட முதற்பக்க வடிவம் இட்டு உதவலாமே? நன்றி--இரவி (பேச்சு) 11:07, 15 மார்ச் 2012 (UTC)
குதில்
தொகுவணக்கம் சுப்பிரமணி. குதில் கட்டுரை பார்த்தேன். அது "குதில்" அல்ல. "குதிர்" என்றே இருக்க வேண்டும். குதிர் என்றால் தான் கூடு அல்லது நெற்கூடு எனப் பொருள்படும். பேச்சு வழக்கில் கூட குதிர் என்றே பயன்படுத்துகிறோம். ("எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல")--பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 21 மார்ச் 2012 (UTC)
- எங்களது ஊரில் இதை நெற்குதிர் என்றும் குதிலரை என்றும் கூறுவர். அப்பெயரில் வேறொரு கட்டுரை இருந்ததால் இணைத்து விட்டேன். எங்கள் ஊர் மனையமைப்பு சொற்கள் தமிழில் அதிகம் மாறுபடும். வண்ணதாசன் கதைகளில் காணலாம். கூறியதற்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:19, 21 மார்ச் 2012 (UTC)
இது உங்கள் ip முகவரியா
தொகு203.99.221.151 - இது உங்களின் IP முகவரியாக இருக்கும் பட்சத்தில் உரையாடல் பக்கத்தில் ஒரு குறிப்பை இட்டு விடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 05:19, 2 ஏப்ரல் 2012 (UTC)
- மின்மடல் விளக்கத்துக்கு நன்றி. இதில் உள்ள அனைத்துத் தொகுப்புகளும் தங்களுடையதாக இல்லாத நிலையில், அதையும் குறிப்பிட்டு உங்கள் பொறுப்பைத் துறக்கலாம். இல்லையேல், வருங்காலத்தில் அதில் இருந்து வரும் அனைத்துத் தொகுப்புகளும் தாங்கள் செய்தது என்று தவறுதலாக எண்ண இடம் உண்டு--இரவி (பேச்சு) 11:03, 2 ஏப்ரல் 2012 (UTC)
- எனக்கு ஐ.பி. முகவரி குறித்து ஒரு சந்தேகம், தவறுதலாக புகுபதிகை செய்யாமல் ஒரு தொகுத்தல் பணி செய்யப்படுமாயின் நம்முடைய ஐ.பி. முகவரி விக்கீயில் பதிவு செய்யப்படும், அவ்வாறு பதிவு செய்யப்படும் முகவரியை நீக்க தற்போது(ஆங்கில விக்கியில் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்), வழி வகை உள்ளதா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 2, ஏப்ரல், 2012.
- மறைக்க முடியும். நிருவாகிகளுக்கு திருத்த வரலாற்றில் “காட்டு/மறை” தெரிவு ஒன்று இதற்காக உள்ளது. ஒரு தொகுப்பின் உள்ளடக்கம், செய்தவர் (ஐபி/பயனர்), தொகுப்பு சுருக்கம் மூன்றையும் மறைக்கலாம். மறைப்பதற்கான காரணங்கள் 1)அவதூறான உள்ளடகத்தை மறைப்பது 2)தொகுத்தவரின் தனிப்பட்ட தகவல்களை மறைப்பது (பிரைவசி) .3)பதிப்புரிமை மீறல்.--சோடாபாட்டில்உரையாடுக 11:39, 2 ஏப்ரல் 2012 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, பாலா.
- மறைக்க முடியும். நிருவாகிகளுக்கு திருத்த வரலாற்றில் “காட்டு/மறை” தெரிவு ஒன்று இதற்காக உள்ளது. ஒரு தொகுப்பின் உள்ளடக்கம், செய்தவர் (ஐபி/பயனர்), தொகுப்பு சுருக்கம் மூன்றையும் மறைக்கலாம். மறைப்பதற்கான காரணங்கள் 1)அவதூறான உள்ளடகத்தை மறைப்பது 2)தொகுத்தவரின் தனிப்பட்ட தகவல்களை மறைப்பது (பிரைவசி) .3)பதிப்புரிமை மீறல்.--சோடாபாட்டில்உரையாடுக 11:39, 2 ஏப்ரல் 2012 (UTC)
- எனக்கு ஐ.பி. முகவரி குறித்து ஒரு சந்தேகம், தவறுதலாக புகுபதிகை செய்யாமல் ஒரு தொகுத்தல் பணி செய்யப்படுமாயின் நம்முடைய ஐ.பி. முகவரி விக்கீயில் பதிவு செய்யப்படும், அவ்வாறு பதிவு செய்யப்படும் முகவரியை நீக்க தற்போது(ஆங்கில விக்கியில் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்), வழி வகை உள்ளதா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 2, ஏப்ரல், 2012.
எப்படி பொறுப்புத் துறப்பது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:12, 2 ஏப்ரல் 2012 (UTC)
- அந்த முகவரியின் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் தந்தால் போதுமானது--இரவி (பேச்சு) 12:04, 2 ஏப்ரல் 2012 (UTC)
- தவறுதலாக புகுபதிகை செய்யாமல் ஒரு தொகுத்தல் பணி என்னுடைய பேச்சுப்பக்கத்தில் செய்யப்பட்டது. அதனை நீக்கிய பிறகும், வரலாற்றைப்பார்க்கும் போது, ஐ. பி. முகவரி உள்ளது. இதனை நீக்க அல்லது என்னுடைய பெயருடன் இணைக்க உதவி வேண்டும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 05, ஏப்ரல், 2012.
முதற்பக்கம்
தொகுதென்காசி, முதற்பக்கத்தை இற்றைப்படுத்தும் போது தவறாமல் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள், விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 போன்ற பக்கங்களையும் இற்றைப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:51, 19 ஏப்ரல் 2012 (UTC)
உதவி
தொகுபிரதான வேலைகள் அநேகமானவற்றை முடித்துவிட்டேன். மேற்கொண்டு செல்ல இங்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்றுக் காலக்கோடு, பேச்சு:தமிழர் வரலாற்றுக் காலக்கோடு --Anton (பேச்சு) 08:43, 29 ஏப்ரல் 2012 (UTC)
- பண்டையத் தமிழகம் என்ற நூலை நூலகத்தில் இருந்து எடுத்திருக்கிறேன். நேற்று தென்காசியிலிருந்து கோவை வந்ததால் செய்ய இயலாமல் போய்விட்டது. இனி சிறிது சிறிதாக விரிவாக்கல்லாம். தமிழகத்தில் நடந்த கற்கால ஆய்வுகள் பற்றி துணைக்கட்டுரைகள் எழுத உள்ளேன். அதிலிருந்தே மேற்கோள்களை எடுத்து விடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:25, 30 ஏப்ரல் 2012 (UTC)
போலி வரலாறு
தொகுலெமூரியா, குமரிக்கண்டம் போன்றவை இதுவரை நிறுவப்படாமையால் இவற்றை அறிவியல் உலகம் போலி வரலாறு என்று அழைக்கிறது. :-( ஆங்கில விக்கிப்பிடியாவைப் பின்பற்றி இக்கட்டுரைகளுக்குப் போலி வரலாறு எனும் பகுப்பைச் சேர்த்துள்ளேன். மயன், மய அறிவியல் போன்ற கட்டுரைகளும் இப் பகுப்பில் வரும் என்று நினைக்கிறேன். இது குறித்து தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:21, 1 மே 2012 (UTC)
- ஆங்கிலப்பகுப்பில் கூட இன்னும் இவை சேர்க்கப்படவில்லையே. இன்னும் நிறுவப்படவில்லை என்றால் கருதப்படும் கண்டங்களில் அவற்றைச் சேர்க்கல்லாம். ஆனால் அங்கு இருந்ததாக ஒரு சமூகத்தாரல் கருதப்படும் என்ற அர்த்தம் அடங்கிவிட்ட அது கூடத் தேவையில்லை என்பது என் கருத்து. பகுப்பு பேச்சு:போலி வரலாறு இதைப் பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:43, 2 மே 2012 (UTC)
நேதாஜி கட்டுரை தொடர்பாக..
தொகுநேதாஜியின் மனைவியும் மகளும் அவர்கள் தான் என உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் நேதாஜி கட்டுரையில் தகவல் பலகையில் சேர்க்காமல் அப்படி கருதப்படுகிறார்கள் என்ர தகவலை மட்டும் சேர்க்கவும். - தென்காசி சுப்பிரமணியன்
- இற்றைப்படுத்தப்பட்டது, பார்க்க, சுபாஷ் சந்திர போஸ். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:50, 5 மே 2012 (UTC)
நீர் நாய்
தொகுநீங்கள் நீர் நாய் என்ற வழிமாற்றைத் துடுப்புக்காலி என்ற கட்டுரைக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள். நீர் நாய் என்பது வேறினம், துடுப்புக்காலி என்பது வேறினம். நீர் நாய்களை நான் பல தடவைகள் நேரிலேயே எமது ஊரிற் பார்த்துள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 12:40, 7 மே 2012 (UTC)
- அப்படியா? நீர் நாய் என்றால் சீல் என்று புத்தகங்களில் படித்ததாக ஞாபகம். அதை வைத்தே அப்படிச் செய்தேன். தவறென்றால் அழித்துவிடுங்கள். விக்சனரியில் கடல் நாய் என்றுளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:27, 7 மே 2012 (UTC)
கடல் நாய் வேறு நீர் நாய் வேறு. அதனாற்றான் நீர் நாயை ஊர்வாசிகள் ஆற்று நாய் என்கின்றனர். அது கறுப்பு நிறம். சந்தர்ப்பம் கிடைத்தால் படமெடுத்துவிடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 18:07, 7 மே 2012 (UTC)
- நன்று. நீங்கள் அப்படிச்செய்தால் என்னைப்போன்றவர்கள் குழம்பத்தேவையில்லை.:)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:17, 8 மே 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு
தொகுசுப்பிரமணியன், திவாகர நிகண்டு பக்கத்தில் நான் பங்களிக்கவில்லையே.. தவறுதலாக என் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்--இரவி (பேச்சு) 17:33, 16 மே 2012 (UTC)
எப்படி அந்த பக்கம் வந்தேன் என்று மறந்து விட்டது. இனிமேல் தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:56, 16 மே 2012 (UTC)
அருங்காட்சியங்கள் தொடர்பாக
தொகு1. பாண்டியர் காலத்துப் போர்முறைகள் குறித்த நூல் என்னிடம் இல்லை; இருப்பினும் தேடுகிறேன். 2. அருங்காட்சியகங்களில் இருந்து ஒளிப்படம் எடுக்க ஒப்புதல் தேவையில்லை, அருங்காட்சியகம் குறிக்கும் தொகையைச்செலுத்த வேண்டும்; சில நேரங்களில் கடிதம் கேட்பார்கள். 3. சில இடங்களில் தொல்லியல் சான்றுகளை (சான்று: சித்தன்னவாசல், திருபருத்திக்குன்றம்) ஒளிப்படம் எடுக்க (சென்னையில்) ஒப்புதல் பெற வேண்டும். 4. தமிழ் பல்கலைக்கழகங்களின் இணைய மின் நூலகங்களின் இணைப்பை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது எதனால்? அவர்கள் தளத்தில் இடம் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது இணைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது தளக்கட்டமைப்புப் பணிகள் நடந்து கொண்டுருக்கலாம். 5. தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகத்தினை நாம் இன்னமும் ஆவணப்படுத்தவில்லை; அது தமிழக அரசின் தளம். 6. தங்களின் அலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் விடுக்க விழைகிறேன்.
அன்பன்,--Thamizhpparithi Maari (பேச்சு) 08:34, 21 மே 2012 (UTC), 9750933101
நன்றி
தொகுநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:09, 26 மே 2012 (UTC) +1 நன்றி தென்காசி சுப்பிரமணியன்--சண்முகம் (பேச்சு) 11:26, 26 மே 2012 (UTC)
+1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:10, 30 மே 2012 (UTC)
கூட்டு முயற்சிக் கட்டுரை இற்றை வேண்டுகோள்
தொகுஅடுத்த இரு வாரங்களுக்கு விடுப்பில் செல்வாதல், சூன் 3, சூன் 10 அன்று கூட்டு முயற்சிக் கட்டுரையை இற்றைப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 18:11, 31 மே 2012 (UTC)
- சரி செய்து விடுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:59, 1 சூன் 2012 (UTC)
இந்த வார கூட்டு முயற்சித் திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுவது கண்டு மகிழ்கிறேன். எனவே, நீங்கள் விரும்பினால், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட முடியுமா என அறிய விரும்புகிறேன். சென்ற வார கூட்டுமுயற்சிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த கொழும்பு கட்டுரை நல்ல பங்களிப்பைப் பெற்றுள்ளது. அது போல் இன்னும் பல தெரிவுகளை எதிர்பார்க்கிறேன் :)--இரவி (பேச்சு) 20:14, 8 சூலை 2012 (UTC)
- அக்கட்டுரை தேர்ந்தெடுப்புக் காரணம் நாமிருவர் தவிர அண்டன் பரிந்துரை என்பதால். கூட்டு முயற்சிக் கட்டுரை பொறுப்பு அடுத்த மாதத்திலிருந்து எடுக்கிறேன். இம்மாதம் 16-30 என் பங்களிப்புகள் குறைந்து விடும். அதனால்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:21, 8 சூலை 2012 (UTC)
சரி, அடுத்த மாதத்தில் இருந்து பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகும் தேவைப்படும் போது இணைந்து உதவுகிறேன். கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க பலரது பரிந்துரை உதவுமானால், தலைப்புகளுக்கு அருகே விருப்ப வார்ப்புரு இடக் கேட்கலாம்.--இரவி (பேச்சு) 20:40, 8 சூலை 2012 (UTC)
//இம்மாதம் 16-30 என் பங்களிப்புகள் குறைந்து விடும். //
அப்படித் தெரியலியே :) நீங்கள் முன்பே தெரிவு செய்து மீளப்பெற்ற கட்டுரைகளையே கூட்டு முயற்சிகளாக அறிவித்து வருகிறேன். ஆகத்து 5 முதல் நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்--இரவி (பேச்சு) 07:23, 25 சூலை 2012 (UTC)
//அப்படித் தெரியலியே :) // ஹ, ஹா. அலுவலக நாட்கள் விதிவிலக்கு. நிறைய திரைப்படங்களையும் வரலாற்று நாவல்களையும் தரவிரக்க வேண்டியுளது. 2ஐயும் வீட்டிலுள்ள இணையத்தில் செய்ய வேகம் பத்தாதென்பதால் அப்படிக் கூறினேன். கூட்டு முயற்சி ஞாயிறு வருகிறதல்லவா. ஆகத்து மாதம் முதல் எடுத்துக் கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:29, 25 சூலை 2012 (UTC)
சரி :) --இரவி (பேச்சு) 08:00, 25 சூலை 2012 (UTC)
போன வாரம் கூட்டு முயற்சிக் கட்டுரை இற்றைப்படுத்தப்படக் காணோமே?--இரவி (பேச்சு) 16:17, 25 ஆகத்து 2012 (UTC)
சங்கீர்த்தன் மூலமாக கூட்டு முயற்சிக் கட்டுரையை இற்றைப்படுத்தியதற்கு நன்றி. ஒரு வேளை, ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களுக்கு இணைய அணுக்கம் இருக்காது என்றால், வேறு ஒரு நாளில் கூட கூட்டு முயற்சிக் கட்டுரையை மாற்றலாம். குறுகிய காலத்துக்குத் தொடர்ச்சியாக இணைய இணைப்புப் பிரச்சினை இருக்கும் எனில், வேறு யாராவது இதனைப் பொறுப்பெடுத்திச் செயற்படுத்தி வருகிறோம்.--இரவி (பேச்சு) 06:34, 27 ஆகத்து 2012 (UTC)
வணக்கம் முதற்பக்க இற்றைப்படுத்தலில் நான் ஏற்கனவே கூறியிருந்தேனே. இன்று தான் அலுவலகத்தில் எனக்கு இ(உ)றுதித் தேர்வு முடிவடைந்தது. உறுதிப்படுத்தல் கடிதம் அடுத்த மாதம் வரலாம். அதனால் கடந்த சில வாரங்கள் வேண்டுமென்றே இணைப்பை துண்டித்து விட்டேன். இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன். இதை போல் நிலை வரும்போது முதற்பக்க இற்றைபடுத்தலின் பேச்சுப்பக்கம் பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:47, 27 ஆகத்து 2012 (UTC)
நீலகண்ட நகரம்
தொகுநீங்கள் மே 23, 2012 அன்று தொடங்கிய நீலகண்ட நகரம் கட்டுரை, ஒரு வரியிலேயே நிற்கிறது. விரைந்து கட்டுரையை முடிக்கவும். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:25, 4 சூன் 2012 (UTC)
- நினைவுப்படுத்தியமைக்கு நன்றி. ஆகட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:40, 4 சூன் 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:45, 4 சூன் 2012 (UTC)
நன்றி
தொகுநீங்கள் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் வெளியாகும் கருத்துகளை இட்டவர்களின் பயனர் பக்கத்தில் அறிவிப்பு நல்குவதை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். மிக்க நன்றி தென்காசி சுப்பிரமணியன்! :) --செல்வா (பேச்சு) 23:28, 10 சூன் 2012 (UTC) விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 13 சூன் 2012 (UTC)
நன்றி, செல்வா. இதைப் போன்ற முதற்ப்பக்க தொடர்பான படையெடுப்புகளை எல்லாம் முன்பு கனகர் மட்டுமே ஒருதானாகி போர் செய்து கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது முதற்பக்கம் தொடர்பான படையெடுப்புகளில் மேலும் பஞ்சவர் சேர்ந்துளதால் அவர்களுக்கும் இந்நன்றியை பகிர்ந்தளிக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:45, 17 சூன் 2012 (UTC)
வரலாற்றுச் செய்திகள்
தொகுவணக்கம் தென்காசி தமிழர், தமிழக வரலாறு குறித்த பதிவுகளைத் தாங்கள் மிகவும் சிறப்பாகச் செய்துவருகிறீர்கள் என் உளமார்ந்த பாராட்டுகள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:53, 17 சூன் 2012 (UTC)
மிக்க நன்றி வாத்தியாரம்மா. நாங்கள் என்ன தான் குதறி குதறி எழுதினாலும் அதை செப்பனிடுவது பொராட்லிபி, பார்வதி போன்ற வாத்தியார்கள் தானே. அதனால் அவர்களைத் தான் பாராட்ட வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:35, 17 சூன் 2012 (UTC)
பகுப்புகள்
தொகுதென்காசி, புதிய (உப) பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அதனை முடிந்த வரையில் குறைந்தது இரண்டு தாய்ப்பகுப்பிற்குள் வருமாறு சேமிக்க வேண்டும். உ+ம்: இந்தியாவில் கற்காலம் என்ற பகுப்பு இந்தியா தொடர்பான ஒரு தாய்ப்பகுப்புக்குள்ளும், கற்காலம் தொடர்பான ஒரு தாய்ப்பகுப்பிற்குள்ளும் சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:05, 23 சூன் 2012 (UTC)
- நான் இன்னும் சில கட்டுரைகள் இது தொடர்பாக எழுத உளதால் இன்னும் சில நாட்களுக்குப் பின் அதை சரி செய்துவிடுவேன். அப்போது பகுப்புகள் நீங்கள் கேட்டதற்கு இணங்க அமைந்துவிடும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:16, 23 சூன் 2012 (UTC)
- நானே அவற்றைச் சேர்த்து விட்டேன். ஆனாலும், உங்களுக்கு அந்த நடைமுறையைத் தெரியப்படுத்தவே எழுதியிருந்தேன். வேறொன்றும் அல்ல. நன்றி.--Kanags \உரையாடுக 08:25, 23 சூன் 2012 (UTC)
ஓர் உதவி
தொகுவணக்கம்,
- பல்லவ மன்னர்கள் பட்டியலில் பிற்கால பல்லவர்களுள் மூன்றாம் நந்திவர்மன் காலம் 825-850 என்றுள்ளது.
ஆனால்:
- தமிழர் வரலாற்றுக் காலக்கோடு கட்டுரையில்:
சுமார் 846-869- பல்லவ மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசை தோற்கடித்து வைகை வரை பல்லவ பேரரசை வியாபித்தல், என்றுள்ளது.
- ஆங்கில விக்கியின் en:Nandivarman III கட்டுரையில் இவனது காலம் 846-869 என்று தரப்பட்டுள்ளது.
சரியான காலம் எது என்பது எனக்குத் தெரியவில்லை. எதற்கும் ஒரு முறை உங்களுக்குத் தெரிந்த குறிப்புகளிலிருந்து சரிபார்த்து எனக்குத் தெரிவிக்க முடியுமா?
- பாண்டிய மன்னர்கள் அட்டவணையில் சீவல்லபன் என்ற பெயர் உள்ளது. அதே மன்னன் ஆங்கில விக்கியின் en:Pandyan Dynasty கட்டுரையில் Sirmara Srivallabha (830 – 862 CE) எனத் தரப்பட்டுள்ளது. ஸ்ரீவல்லபனா அல்லது சீவல்லபனா? எனத் தெளிவுபடுத்த வேண்டும் நன்றி.--Booradleyp (பேச்சு) 21:25, 23 சூன் 2012 (UTC)
- பதில்
- பல்லவர் பற்றிய பதில் இங்குளது.
ஸ்ரீமாறன் சீமாறன் இரண்டும் உபயோகத்தில் உள. அதனால் வழிமாற்று ஏற்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:46, 24 சூன் 2012 (UTC)
- வணக்கம், நிஜமாகவே பல்லவ வரலாறு கட்டுரை பேச்சுப்பக்கத்தில் நீங்கள் அளித்துள்ள விளக்கத்தினால் எனது சந்தேகம் தீரவில்லை. மூன்றாம் நந்திவர்மன் காலம் 825-850 அல்லது 846-869 இரண்டில் எது சரியானது என்று கூறினீர்கள் என்றால் நானே தேவையான மாற்றங்களைச் செய்து விடுகிறேன் நன்றி.--Booradleyp (பேச்சு) 00:00, 9 சூலை 2012 (UTC)
மன்னிக்கவும். வார்ப்புரு:பல்லவ வரலாறு ஏற்கனவே மாற்றிவிட்டேன். ஆட்சியாண்டுகளை அதில் பார்க்கலாம். ஆனால் உங்களிடம் கூற மறந்துவிட்டேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:55, 9 சூலை 2012 (UTC)
- நன்றி, தென்காசி சுப்பிரமணியன்.--Booradleyp (பேச்சு) 10:27, 9 சூலை 2012 (UTC)
பாளையங்கள்
தொகுதாங்கள் முன்பு பாளையப் பகுதிகளாக இருந்த ஊர்களின் பெயர்களில் பாளையம் எனும் பகுப்புவைச் சேர்த்து வருகிறீர்கள். உதாரணமாக, போடிநாயக்கனூர் எனும் ஊரில் பாளையம் எனும் பகுப்பைச் சேர்த்திருக்கிறீர்கள். இது போடிநாயக்கனூர் நகராட்சிப் பகுதித் தகவல்களைக் கொண்டதாக இருக்கும். தாங்கள் போடிநாயக்கனூர் (பாளையம்) எனும் புதுக் கட்டுரையை உருவாக்கி, அதில் போடிநாயக்கனூர் பாளையப் பகுதிகளில் இருந்த ஊர்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களைச் சேர்க்கலாம். அதைப் பாளையம் எனும் பகுப்பின் கீழ் கொண்டு வரலாம். தற்போதுள்ள ஊர்களை பாளையத்துடன் சேர்த்துக் குழப்பம் செய்ய வேண்டாம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:16, 19 சூலை 2012 (UTC)
- மேலதிக உரையாடலை இங்கு தொடரவும். --இராச்குமார் (பேச்சு) 15:23, 19 சூலை 2012 (UTC)
பொதுப் படிமங்கள்
தொகுதென்காசி, நீங்கள் இன்று இங்கு தரவேற்றிய சன்யாசிப்படவுக் கல்வெட்டு தொடர்பான படிமம் விக்கி காமன்சில் பதிவேற்றத் தகுதியானது. அங்கு இதனைத் தரவேற்றி விட்டு இங்குள்ளதை நீக்கி விடுங்கள். அங்கு தரவேற்றும் போது படிமப் பெயரை ஆங்கிலத்தில் தருவது நல்லது. ஆனால் அவசியமல்ல.--Kanags \உரையாடுக 10:31, 21 சூலை 2012 (UTC)
ஆயிற்று இதற்கு முன் ஒரு தடவை அங்கு தரவேற்ற இயலவில்லை. ஏதேதோ கேள்விகள் கேட்டன. அதிலிருந்தே தமிழ் விக்கியில் தரவேற்றத் தொடங்கினேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 21 சூலை 2012 (UTC)
கூட்டு முயற்சிக்கட்டுரை
தொகுநான் ஆங்கில விக்கிபீடியா கட்டுரையை பார்த்தபின்னர் தான் தந்தியை பரிந்துரைத்தேன். அது மிகவும் தகவல் செறிவுள்ளதாக உள்ளது. எனவே தமிழிலும் அதேயளவு இல்லையென்றாலும் ஒப்பீட்டளவில் நல்ல கட்டுரையாக்கலாம். நன்றி.--பிரஷாந் (பேச்சு) 07:05, 25 சூலை 2012 (UTC)
பதக்கம்
தொகுபயனர் வெளிக்கு நகர்த்தப்பட்டுளது.
எதிர்பார்க்காத பதக்கம் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:43, 25 சூலை 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
தொகுவணக்கம்! நெல்லை மாவட்டத்தில் 'கோயில் கொடை' என்பதனைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; இதில் 'கொடை' என்பதனின் அர்த்தம் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்தால்... சொல்லவும். 'கோயில் கொடை' எனும் பெயரில் கட்டுரை ஒன்றினை இங்கு எழுத எண்ணியுள்ளேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:05, 25 சூலை 2012 (UTC)
விசாரித்ததில் அதன் பெயர்க் காரணம் கண்டறிய இயலவில்லை. ஆனால் கொடு - கொடுத்தல் - கொடை என்று வந்திருக்கலாம் என நினைக்கிறேன். நிறைய கொடை வள்ளல்கள் பணம் கொடுத்து அதை ஊர் மக்கள் நல்னுக்காக (கோயில் கொடை அன்னதானம் இதன் வெளிபாடாக இருக்கலாம்) பயன்படுத்துவது. எங்களூர் கோயில்களில் கொடைப்பலகையில் யார் யார் தானம் கொடுத்தனர் என்று குறித்து வைப்பது இன்றும் கூட நடைபெறும் வழக்கம். ஆனால் இதை ஒரு வரி தகவலாகத் தான் சேர்க்க இயலும். மேலும் சில செய்திகள்,
- இதுவருடம் தோரறும் நரக்கும்.
- இரவில் மிருகங்கள் பழியிடுதல் வழக்கமாக நடக்கும் - சாமக் கொடை என்று கூருவர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:41, 26 சூலை 2012 (UTC)
மற்றும்
தொகுபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 26, 2012 --மதனாகரன் (பேச்சு) 12:54, 31 சூலை 2012 (UTC)
முதற்பக்கப்படம்
தொகுவணக்கம் தென்காசி முதற்பக்கப் படத்திற்கான படங்கள் எங்குள்ளன?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:36, 19 ஆகத்து 2012 (UTC)
- http://ta.wikipedia.org/s/8au - இது படங்களின் பரிந்துரைப் பக்கம். தற்போது யாரும் பரிந்துரைப்பதில்லை. அதனால் அதன் வடிவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு வேறொரு படத்தைக் காட்சிப்படுத்துங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:01, 19 ஆகத்து 2012 (UTC)
Your Credo Reference account is approved
தொகுGood news! You are approved for access to 350 high quality reference resources through Credo Reference.
- Fill out the survey with your username and an email address where your sign-up information can be sent. Credo will contact you within a few weeks with your login information.
- If you need assistance, ask User:Ocaasi.
- A quick reminder about using the account: 1) try it out; 2) provide original citation information, in addition to linking to a Credo article; 3) avoid bare links to non-free Credo pages; 4) note "(subscription required)" in the citation, where appropriate. Examples are at W:EN:WP:Credo accounts/Citations.
- Credo would love to hear feedback at W:EN:WP:Credo accounts/Experiences
- If you decide you no longer can or want to make use of your account, donate it back by adding your name here
Thanks for helping make Wikipedia better. Enjoy your research! Cheers, Ocaasi 19:41, 23 ஆகத்து 2012 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுவணக்கம் தென்காசியாரே.. சென்னை உயர் நீதிமன்றம் கட்டுரையைக் காட்சிப்படுத்தியதற்காக நடைபெற்ற உரையாடலை இங்கு காணவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:08, 17 செப்டெம்பர் 2012 (UTC)
புரிகிறது. தமிழகத்தில் கற்காலம் கட்டுரையை சில நாட்களுக்கு பிறகே காட்சிப்படுத்துங்கள். இராபர்ட் புருசு ஃபூட்டின் இறந்தநாள் டிசம்பர் 29. அன்று காட்சிப்படுத்துமாறு வைக்கலாம்.
அதே நேரம் ஆதாரம் தேவை, மேற்கோள் தேவை என்று கேட்கப்பட்ட கட்டுரைகள் முதற்பக்கக் கட்டுரையின் அடிப்படை விதிகளை இழந்தது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். கோயமுத்தூர் கட்டுரையை நீக்கிவிட்டு, ஏற்கனவே பரிந்துரையில் உள்ளவற்றில் இருந்து வேறு கட்டுரையை எடுப்பது சிறந்ததாக இருக்கலாம். கூட்டுமுயற்சிக்கட்டுரைகள் அதிக பலனளிக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:29, 17 செப்டெம்பர் 2012 (UTC)
குமரிக்கண்டம்
தொகுவணக்கம் தென்காசி. குமரிக்கண்டம் குறித்த சில வலைப்பதிவுகளைக் கண்டேன். இவற்றிலுள்ள தகவல்களை கட்டுரைப்பகுதியில் இணைக்க முடியுமா? உதவியாக இருக்குமா?
- http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/
- http://www.geotamil.com/pathivukal/mayilangkuudal_p_nadarasan_on_tamilinthonmai.htm
- http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
- http://thonmai.blogspot.in/2007/12/blog-post.html
- http://www.tamilpaper.net/?p=761
- http://cdjm.blogspot.in/2009/09/blog-post_14.html
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:47, 23 செப்டெம்பர் 2012 (UTC)
ஜெய பரதன் இணைப்பு ஏற்கனவே எடுத்தாளப்பட்டுளது. அப்பாத்துரையார், விக்டர் எழுதிய நூல்களில் தான் நான் குமரியைப்பற்றி ஏற்கனவே நன்கறிந்தேன். இரண்டு வெளியிணைப்புகள் அந்நூல்களில் இருந்து எடுத்தாண்டுளனர்.
ஆனால் புலவர் குழந்தைதான் குமரிகண்டம் வரைபடத்தை மடகாசுகர் வரை வரைந்தார் என்றும், செயகரன் தன் நூலில் குமரி என்பது மடகாசுகர் வரை இல்லை என்றாலும் அதை இந்தியா இலங்கை சேர்ந்த பகுதி என ஒத்துக்கொண்டார் எனவும் நீங்கள் கொடுத்த இணைப்புகளிலேயே கண்டறிந்தேன். என்னிடம் உள்ள ஆங்கில நூலில் குமரிக்கண்டத்தின் வரைபடம் கிமு. 4400 மற்றும் 3100 மற்றும் 2300 போண்ற படங்கள் உள்ளன. அது செயகரன் கூறிய வெள்ளக் காலங்களோடு பொருந்துகிறது.
அதனால் குமரிக்கண்டம் என்பது மடகாசுகர் வரை இருந்தது என்று ஒரு பிரிவு, இந்தியா இலங்கை மற்றும் சில பகுதிகல் சேர்ந்த பகுதி என்று அறிவியல் ரீதியாக கூறும் ஒரு பிரிவு, குமரிக்கண்டமே இல்லை என்பது ஒரு பிரிவு என்று 3 ஆக எழுத வேண்டும். இதில் இரண்டாம் பிரிவுக்கு நீங்கள் குடுத்த இணைப்புகள் 50% மற்றும் என்னிடமுள்ள ஆங்கில நூல் ஒரு 50% என்று எழுதி பூர்த்தி செய்யலாம்.
மேலும் ஆறாம் வகுப்பு பாடத்தில் குமரிக்கண்ட வரைபடம் உள்ளதாமே? அதை நீங்கள் மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப முடியுமா?
இந்த தகவல்களை எல்லாம் இணைத்து கட்டுரையை உரை திருத்தினால் முத்ற்பக்கக் கட்டுரை அளவு தரமுயர்த்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:32, 23 செப்டெம்பர் 2012 (UTC)
உ.தெ. வார்ப்புரு
தொகுவணக்கம் சுப்பிரமணியன், உ.தெ. வார்ப்புருவை கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டியதை நீங்கள் முதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு இடும் நினைப்பில் இட்டுவிட்டீர்கள். கோழி கட்டுரையினைத் தொடங்கிய பயனர்:Sivakumarக்கு இடப்பட வேண்டியது என்னுடையதில் இடம்பெற்றுவிட்டது. என்னுடையதை நீக்கிவிடுங்கள். --Anton (பேச்சு) 18:33, 3 அக்டோபர் 2012 (UTC)
உதெ குறியீடு, முதற்பக்க விண்மீன் போன்றவை தொடங்கியவரை விட அதிக பங்களிப்புகளை செய்த மூவர்க்கே இட வேண்டும். அடர்பச்சை பைட்டு எண்களை கொண்டு கொஞ்சம் எளிதாக அறியலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:44, 3 அக்டோபர் 2012 (UTC)
உதவி
தொகுவணக்கம் சுப்பிரமணியன், களப்பிரர் வரைபடத்தில் மாற்றம் செய்துள்ளேன். சோழர் கடற்படை கட்டுரையினை ஆ.வி. இலிருந்து மொழி பெயர்க்கிறேன். அங்கு சில பகுதிகளுக்கு மேற்கோள் தேவைப்படுகின்றது. குறிப்பாக இங்கு. இவற்றிற்கு மேற்கோள் அளித்து உதவ முடியுமா எனப்பாருங்கள். --Anton (பேச்சு) 21:16, 15 அக்டோபர் 2012 (UTC)
- உங்களுக்கு என் பேச்சுப் பக்கத்தில் செய்தியுள்ளது.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள் இந்த இணைப்பிணைப் பாருங்கள். உங்களுக்கு ஆர்வமான செய்தியென நினைக்கிறேன். இதன் (மேலும், வயல்வெளியில் காணப்படும் பிராமி எழுத்தில் அமைந்த கல்லறை நினைவுத் தூண்கள் சிலவும்) ஒளிப்படங்களை நேரில் சென்று எடுத்து வைத்துள்ளேன். தேவைப்படுமாயின் பொதுவிற்கு பதிவேற்றலாம். இவ்விணைப்பினை உசாத்துணையாகக் கொண்டு கட்டுரையினைத் தொகுக்க முடிமோ எனவும் நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன? --Anton (பேச்சு) 12:50, 16 அக்டோபர் 2012 (UTC)
நல்ல தகவல்கள். நான் ஈழக்கல்வெட்டுகள் பற்றி அதிகம் அறிந்ததில்லை. இது உபயோகப்படும் என நினைக்கிறேன். தற்பொது அலுவலகத்தில் உள்ளதால் படம் மட்டும் தெரியவில்லை. இதை தமிழ் மரபு அறக்கட்டளை சார்ந்த குழுமங்களில் விடுகிறேன். அங்கும் அதிகம் ஈழக்கல்வெட்டுகள் பற்றி இல்லை எனத்தெரிகிரது. அங்கு எவராவது புத்தாய்வுகள் செய்ய வாய்புளது.
இப்படிமங்களை எல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க படம் பகுப்பில் தரவேற்றலாம். நான் அலுவலக்த்தில் உள்லதால் தற்பொது படம் தெரியவில்லை. இல்லம் சென்றதும் பார்வையிடுகிறேன். மேலும் குட்ட பரிந்தன் கல்வெட்டு ஒன்று அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவில் உள்ளதாமே. நீங்களோ உங்கள் நண்பர்கள் மூலமோ படமெடுத்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:06, 16 அக்டோபர் 2012 (UTC)
- முயற்சிக்கிறேன்! --Anton (பேச்சு) 15:46, 16 அக்டோபர் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா பற்றி
தொகுவணக்கம் சுப்பிரமணி. உங்களுக்குத் தெரியுமா பற்றி நான் கவனிக்காது விட்டவிடயத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:27, 16 அக்டோபர் 2012 (UTC)
பகுப்பு பேச்சு:தமிழர் கணக்கியல்
தொகுபார்க்க: பகுப்பு பேச்சு:தமிழர் கணக்கியல் --Natkeeran (பேச்சு) 14:16, 21 அக்டோபர் 2012 (UTC)
பதில்
தொகுஉங்களுக்கான பதில் இங்கு காத்திருக்கிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:23, 8 நவம்பர் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? வார்ப்புரு தயாராக இருக்கும் என நினைத்தே அவ்வாறு செய்தேன். ஆனால் இதில் முனைப்பாக இருக்கும் தென்காசியார் சற்று சுணக்கமாக இருக்கிறார். என்ன செய்யலாம் அவரை?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:00, 11 நவம்பர் 2012 (UTC)
என்ன செய்யலாமா? வழக்கமாக புதன் கிழமைக்கான வார்ப்புருவை தான் உங்களுக்குத் தெரியுமாவில் இடுவார்கள். நீங்கள் ஞாயிற்று கிழமை தேதியில் வார்ப்புரு இட்டுவிட்டீர்களே. இல்லாத வார்ப்புருவை வாவான்னா எப்பிடி வரும். ராதாகிருசுணா டென்ஷ்ன் டென்ஷன். :)-
நீங்கள் தற்போது தேர்வு படுத்திய செய்திகளை நவம்பர் 14க்கு மாற்றிவிட்டு, நவம்பர் 7 என முதற்பக்க வார்ப்புருவில் இட்டுவிடுங்கள். 13 தேதி வரை அது தானிருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:35, 11 நவம்பர் 2012 (UTC)
- தவறுக்கு வருந்துகிறேன். //ராதாகிருசுணா டென்ஷ்ன் டென்ஷன். :)-//அப்படித்தாங்க எனக்கும்..... :(-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:48, 11 நவம்பர் 2012 (UTC)
Tamil Article Redirection Problem of Tamil Nadu Government Organizations
தொகுProblem:
- The Tamil Article of Tamil Nadu Government Organizations is தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசின்_அமைப்புகள்).
- But while redirecting from English Article Tamil Nadu Government Organizations (Left side - Languages section "தமிழ்") to Tamil Article தமிழ்நாடு அரசின் அமைப்புகள், It wrongly redirects to Tamil Article வார்ப்புரு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (this is the Tamil language version of English article "Template:State Organizations of Tamil Nadu")
Request:
- Please help by redirecting English article Tamil Nadu Government Organizations to Tamil Article தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசின்_அமைப்புகள்).
Thanking You Karuppan.Muniyappan Muniyankaruppan (பேச்சு) 07:03, 16 நவம்பர் 2012 (UTC)
- ஆயிற்று--Kanags \உரையாடுக 07:13, 16 நவம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)
நிச்சயம் முயற்சிக்கிறேன். என் பேச்சுப் பக்கம் வந்து பதிவிட்டதற்கு நன்றி நற்கீரரே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:40, 26 நவம்பர் 2012 (UTC)
நன்றி தென்காசி. இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.
எதாவது தலைப்பு எண்ணி இருந்தால் கூறவும். தலைப்புகள் பட்டியல் தேவை எனினும் கூறவும். உங்களுக்கு ஈடுபாடான தொல்லியல் + வரலாற்றியல் + மானிடவியல் தலைப்புகளில் கட்டுரை சமரிப்பிக்கலாம். சற்றுச் செறிவாகவும், தகுந்த மேற்கோள்கள் போதுமானதாகவும் இருந்தால் சிறப்பு. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:28, 26 திசம்பர் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த குமார் மகாதேவா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 5, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தென்காசிப் பாண்டியர்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 19, 2012 அன்று வெளியானது. |
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த மா. இராசமாணிக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் டிசம்பர் 23, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
Virtual reality யின் தமிழ்ப் பதம் என்ன? தமிழ்ப் பதமிருப்பின் அதனைக் கட்டுரையாக்குவீர்களா?
தொகுஇங்குள உரையாடல் பேச்சு:தோற்ற மெய்மை பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:27, 26 திசம்பர் 2012 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம் | ||
சுப்பிரமணிய சுவாமிகள் புதிய பல பயனர்களை ஆர்வமோடு ஊக்குவிப்பதால் அடியேன் யாழ்ஸ்ரீயான யாம் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 2 நவம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விக்கித் திட்டம் வானியலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், தென்காசி சுப்பிரமணியன்/2012!
- தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
- நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
- பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.