தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3

தொகுப்பு இரண்டு

வேண்டுகோள் தொகு

விக்கிப்பீடியா பெயரிடல் மரபு கொள்கை வரைவு பற்றிய உரையாடல்களில் நீங்கள் தெரிவித்தபடி பங்களிப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் கூறிய உங்கள் கருத்தை ஏற்காவிட்டால் நீங்கள் விலகுவீர்கள் என்று நீங்கள் முடிவு செய்தால், அதைத்தடுக்க என்னால் ஏதும் செய்ய இயலாதுதான், ஆனால் மாற்றுக்கருத்துகளை நான் முறையாகவே எடுத்து வைத்துள்ளேன் என்று நம்புகின்றேன். என் கருத்துக்கு ஒருசிறிதும் ஒவ்வாதன நூற்றுக்கணக்கில் உள்ளன தமிழ் விக்கிப்பிடியாவில். அதற்காக நான் விலகிவிடவில்லை. உங்களுடைய உளப்போக்கும் தீர்வும், அணுகுமுறையும் என் முடிவில் அல்லது அணுகுமுறையில் இருந்து வேறுவிதமானதாக இருக்கலாம் என்பதை அறிவேன், அதை மதிக்கின்றேன், ஆனால் கருத்துமாறுபாடுகளையும் தாண்டி இணக்கத்துடன் நற்பணி ஆற்ற முடிந்தால் அது அருமையாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும் எத்தனை எத்தனை முரண்பாடுகள் உள்ளன என்று (இவர் அவர் என்று வேறுபாடில்லாமல் ஒவ்வொருவர் கருத்துக்கும் எதிராகவும் முரணாகவும் உள்ளவை நிறைய இருக்கின்றன). இருந்தாலும் கூடிய அளவு இணக்கமான செயற்பாட்டை எட்ட முயல்கின்றோம். மிகவும் இறுக்கமாக இருப்பதில்லை. ஒரே சீர்மையுடன் இருப்பது மிகவும் நல்லது, ஆனால் எதில் சீர்மையுடன் இருக்க வேண்டும், எதில் கருத்து சுதந்திரம் பாராட்டவேண்டும்/இருக்கவேண்டும் என்பதில் நிறைய மாறுபாடான எண்ணங்கள் உள்ளன. ஒத்தக் கருத்துகள் கூடுதலாக இருந்தால் இன்னும் சிர்மை பெறும். ஆனால் முயல்வதைத் தவிர வேறு வழியில்லை. செய்வன திருந்தச்செய் என்பது தமிழில் அடிக்கடி கூறப்படும் ஒரு சொலவடை, ஆகவே கூடியமட்டிலுமாவது சரியானதாகச் செய்ய முற்படுவது நல்லது என முயல்கின்றோம். புரிந்து கொள்ள வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 05:00, 13 திசம்பர் 2013 (UTC)Reply

நீங்கள் தன்னாட்சி என்னும் பக்கத்தில் தவறான சாய்வு தரும்படி கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். விரும்பினால் ஒவ்வொன்றைப் பற்றியும் பேசலாம். ஆனால் இப்போதைக்கு ஒன்றிரண்டைச் சுட்டுகின்றேன். "கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற நிலையிலிருந்து நிறுவனக் களஞ்சியம் என்ற நிலை அடையலாம்." என்று நீங்கள் கூறுவதில் இருந்து "கட்டற்ற" என்ற சொல்லை நீங்கள் வேறுவிதமாகப் புரிந்துகொன்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். கட்டற்ற என்பது விக்கிப்பீடியாவானது இலவசமாகவும் யாரும் தொகுக்கும்படியாகவும் உள்ள ஒரு கலைக்களஞ்சியம் என்பதற்காக. இது ஆங்கில வாசகம் "the free encyclopedia that anyone can edit." என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இலவசம் என்பது காப்புரிமப் பணத்தொகை ஏதும் கட்டாமல், முன்கூட்டியே அனுமதியும் பெறாமல், ஆனால் வழங்கப்பட்ட பகிர்வுரிம, பயனுரிமக் கட்டுப்பாடுகளுக்குள் யாரும் பயன்படுத்தலாம் என்னும் பொருள் கொண்டது. யாரும் தொகுக்கலாம் என்பதும் யாரும் எப்படி வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்று பொருள் அன்று. ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியாவும் அதனதன் வழிமுறைகளுக்கு உட்பட்டுத் தொகுப்பதாகும். ஆகவே தமிழ் விக்கிப்பிடியா தான் பின்பற்றும் வழிமுறைகளைக் கொண்டிருப்பதால், "கட்டற்ற நிலையில் இருந்து நிறுவனக் கலைக்களஞ்சியமாக" மாறுவதாகக் கொள்ளமுடியாது. இப்படியான எதிர்ம்றையான அல்லது தவறான சாய்வு தரும் கூற்றுகளைப் பதிவது சரியல்ல. இது உங்கள் பக்கம்தான் எனினும், இப்படித் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எதிராக நீங்கள் எழுத மாட்டீர்கள் என்றே நினைத்தேன். --செல்வா (பேச்சு) 15:43, 14 திசம்பர் 2013 (UTC)Reply
செல்வா ஐயா, தமிழ் விக்கிப்பீடியாக்கு எதிர்மறை விளைவைத் தரும் என்பதைப் புரிந்து கொண்டு, அத்தொடர்களை நீக்கியுள்ளேன். தவறுக்கு மன்னிக்கவும். "எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு" என்பதற்கு ஏற்ப தன்னாட்சியான வழக்கிற்கு இணங்கி என்னால் எழுதமுடியவில்லை என்ற இயலாமையைப் பதிவு செய்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 19:53, 14 திசம்பர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி நீச்சல்காரன். "எவ்வதுறைவது" என்பதன் பொருள் சற்று வேறானது. ஊரொடு ஒட்டி வாழ் என்பது ஒருகால் நீங்கள் நினைப்பதற்கு நெருக்கமாக வரும் ஒன்று என்று நினைக்கின்றேன். இக்கருத்துகளின் அடிப்படையிலே பல இருப்பதால், விரிவாக இங்குப் பேசுவது கடினம். ஆனால் நீங்கள் விரும்பியவாறு த.வி-யில் எழுத முடிந்தால் எழுதுங்கள், நீச்சல்காரன், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், ஆனால் வேறு யாரும் எதையும் திருத்தக்கூடாது என்று நினைத்தால், அது விக்கிப்பீடியாவில் சற்றுக் கடினம் அல்லது இயலாத ஒன்று. இன்னும் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். பெயரிடல் மரபு பற்றிய பக்கத்தில் உரையாடியபொழுது பலரும் வந்து பலவும் தாறுமாறாகக் கூறவில்லை. இணைய உலகில் இப்படி உயரிய உரையாடல் ஒழுக்கத்துடனும் பண்புடன் பொறுப்பறிந்து அனைவரும் உரையாடியதும், நாம் இருவரும் உரையாட முடிந்ததும் நினைத்துப்பார்க்கத்தக்கது. நம்மிடையே இதில் கருத்தொருமை அல்லது இணக்கம் ஏற்படாதிருந்தாலும், நன்முறையில் உரையாட முடிந்ததற்கு என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். --செல்வா (பேச்சு) 20:14, 14 திசம்பர் 2013 (UTC)Reply

தரவு தேவை 1 தொகு

http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm பக்கத்தில் Distribution of article edits over registered editors, incl. bots என்ற பகுதியைப் பாருங்கள். 1, 3, 32, 100.. என்று தொகுப்புகள் எண்ணிக்கை வாரியாக எத்தனைப் பயனர்கள் அம்மைல்கற்களைக் கடந்துள்ளார்கள் என்று தந்துள்ளார்கள். யார் யார், இந்த ஒவ்வொரு மைல்கல்லையும் கடந்துள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து பட்டியல் இட்டுத் தர முடியுமா? நன்றி. படி: பயனர்:Balurbala--இரவி (பேச்சு) 18:49, 13 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா:Statistics/Contributions இங்கு ஏற்றியுள்ளேன். --நீச்சல்காரன் (பேச்சு) 10:24, 14 திசம்பர் 2013 (UTC)Reply
உடனடி உதவிக்கு நன்றிங்க. அந்தப் பக்கத்தைத் திறந்தாலே உலாவி தொங்குகிறது. பயனர்கள் கணக்கு தொடங்கிய ஆண்டு வாரியாக இந்தப் பட்டியலைப் பிரித்துத் தர முடியுமா? வேறு வழியில் பிரித்துத் தந்தாலும் சரி. நன்றி.--இரவி (பேச்சு) 07:22, 19 திசம்பர் 2013 (UTC)Reply
இப்போது இந்தப் பக்கம் உலாவியில் தொங்காமல் வருகிறது :) எனினும், பிரித்து தர முடிந்தால் நன்று. இத்தரவுகளைப் பயன்படுத்தி சில பங்களிப்புத் தூண்டற் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதால், இன்றைய நிலவரத்துக்கு இத்தரவை இற்றைப்படுத்தித் தர முடியுமா? நன்றி--இரவி (பேச்சு) 09:06, 2 ஆகத்து 2014 (UTC)Reply
9128 பயனர் கணக்குகளின் மொத்தமான தரவும் இற்றை செய்யப்பட்டு வருகிறது(24 மணிக்குள் நிறைவு பெறும்). பங்களிப்பு ஆண்டு வாரியாகவும், கணக்குத் தொடங்கிய நாள் வாரியாகவும் உள்ளது. பிரித்துத் தருவதால் ஒப்பீடுகள் செய்வதில் சிரமம் வராதா? ஒருமுறை இங்கு பார்த்துவிட்டு எந்தவகையில் பிரிக்க என்று சொல்லவும் அல்லது கூகிள் விரிதாளாகவே பகிர்ந்துகொள்ளவா?--நீச்சல்காரன் (பேச்சு) 03:34, 3 ஆகத்து 2014 (UTC)Reply
நன்றி, நீச்சல்காரன். பங்களிப்பைப் பிரித்துத் தருவது என்று நான் கேட்டது, 2014ஆம் ஆண்டு பங்களிக்கத் தொடங்கியவர்கள் தொடர்பான தரவுகள் ஒரு பக்கத்தில், 2013ஆம் ஆண்டு பங்களிக்கத் தொடங்கியவர்கள் தொடர்பான தரவுகள் ஒரு பக்கத்தில் என்று... இவ்வாறு செய்தால் ஒவ்வொரு பக்கத்துக்கும் குறைவான உருப்படிகள் இருக்கும் என்பதால் பக்கம் தொங்காது என்று எதிர்பார்த்தேன். எனினும், நீங்கள் இங்கு ஆண்டு வாரியாக பிரித்துக் கொடுத்துள்ள முறையும் பயனுள்ளதே. registered, user id தேவையில்லை. முதல் தொகுப்பு செய்த ஆண்டு இருந்தால் போதும். தானியங்கிக் கணக்குகளின் தரவுகள் தேவை இல்லை. விக்கியிலேயே இத்தரவுகளைத் தந்தால் நலம். கூகுள் விரிதாளில் தான் முடியும் என்றாலும் பரவாயில்லை. ஆனால், அனைத்து தரவுகளும் வரிசைப்படுத்துமாறு இருப்பது தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 4 ஆகத்து 2014 (UTC)Reply
நீச்சல்காரன், மேற்கண்ட வேண்டுகோளுக்கு இணங்க இத்தரவுகளை இற்றைப்படுத்தித் தர முடியுமா? ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தொகுப்புகள் என்ற தரவு தேவையில்லை. ஆனால், எந்த ஆண்டு தொகுப்புகளைத் தொடங்கினார்களோ அதன் படி தனித்தனிப் பக்கங்கள் தேவை. https://en.wikipedia.org/wiki/Cohort_Analysis முறையில் பங்களிப்பாளர்களை அணுக இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 07:49, 16 சனவரி 2015 (UTC)Reply
இரவி, தாமதத்திற்கு வருந்துகிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல பகுப்பு:விக்கிப்பீடியா பயனர் புள்ளிவிவரங்கள் இங்கே பட்டியலைக் கொடுத்துள்ளேன். கூகிள் விரிதாளின் விரிவான புள்ளிவிவரங்களை அங்கே வெளியிணைப்பாகவும் கொடுத்துள்ளேன். ஆண்டுக்கு இருமுறை இப்படியலை இற்றை செய்ய வேண்டுமென்றாலும் செய்யலாம். அன்புடன் --நீச்சல்காரன் (பேச்சு) 20:02, 3 பெப்ரவரி 2015 (UTC)
மிக்க நன்றிங்க. அடுத்து முன்னெடுக்க இருக்கும் பல பணிகளுக்கு இந்தத் தரவு மிக முக்கியமான அடிப்படையாக இருக்கும். எனக்குத் தெரிந்து வேறு உலக மொழி விக்கிப்பீடியாக்களில் யாரும் இப்படி ஆய்வு செய்து பார்த்ததாகவோ அதனை வைத்து பிற பணிகளை மேற்கொண்டதாகவோ தெரியவில்லை. எனவே, உங்கள் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இந்த முன்னேற்றங்களை முறையான அறிக்கையாக எழுதும் போது அது இன்னும் பலருக்கும் பயன்படும். நீங்கள் தந்துள்ள தரவுகளில் இருந்த தானியங்கிக் கணக்குகளைத் தற்போது முறையாக தானியங்கிக் குழுவில் சேர்த்து விட்டேன். பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் உள்ள அட்டவணைகளில் வரிசை எண் இல்லையே? அது இருந்தால் மொத்த பயனர் எண்ணிக்கையை எளிதில் கணக்கிட முடியும். இன்னொரு முறை உடன் இந்தத் தரவுகளைப் பிரித்தெடுப்பது இலகு என்றால் செய்து தர இயலுமா?தானியங்கிக் கணக்குகளை மறைக்கவும் வரிசை எண்ணைப் பெறவும் உதவும். அடுத்து சூலை / ஆகத்தில் இற்றைப்படுத்தினால் போதும். நன்றி.--இரவி (பேச்சு) 18:50, 5 பெப்ரவரி 2015 (UTC)
2011ம் ஆண்டுக்குப் பின் பக்கத்தின் அளவு அதிகமானதால் எண்வரிசையைத் தவிர்த்தேன். தற்போது மீண்டுமொருமுறை இற்றை செய்துள்ளேன். அடுத்து ஆகஸ்ட் முதல் நாளை ஒட்டி செய்ய முயல்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 05:25, 6 பெப்ரவரி 2015 (UTC)
மிக்க நன்றி ! :) --இரவி (பேச்சு) 06:53, 6 பெப்ரவரி 2015 (UTC)

பெயரிடல் மரபு தொகு

பெயரிடல் மரபு பேச்சுப் பக்கத்தில் என்னுடைய கருத்துகளையும் உங்களுக்கு நான் வைத்துள்ள வேண்டுகோளையும் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:22, 19 திசம்பர் 2013 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

மிகவும் உபயோகமான ஒன்று நாவி!. உருவாக்கிய நீச்சல்காரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 10:14, 19 திசம்பர் 2013 (UTC)Reply

ஆம்!   விருப்பம் --செல்வா (பேச்சு) 19:15, 19 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 10:15, 19 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் --செல்வா (பேச்சு) 19:14, 19 திசம்பர் 2013 (UTC)Reply

தானியங்கி தேவை தொகு

இங்கு பாருங்கள். --AntonTalk 07:54, 28 பெப்ரவரி 2014 (UTC)

நீக்கலுக்கான காலத்தையும், காரணத்தையும் தெரிவித்தல் தொகு

{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}.} என்ற வார்ப்புருவை, தங்கள் தானியங்கி நீக்குவது கண்டு மகிழ்ச்சி. எனினும், ஒரு நீக்கலை செய்யும் போது, அதற்குரியக் காரணத்தை, ஒரு குறிப்பாகத் தெரிவித்தால் நன்றாக இருக்கும். பலரும் பலவித சூழ்நிலைகளில் இருந்து செயற்படுவதால், அனைத்து விதிகளையும், அனைவரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த நீக்கல் செய்யப்பட்டபோது, அதற்கான காரணத்தைக் கண்டறிய, அந்தவார்ப்புருவின் பேச்சுப்பக்கத்தில் பார்த்தேன். தெளிவான குறிப்புகள் இல்லாததால், இப்பேச்சுப்பகத்தில் கேட்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:28, 15 மார்ச் 2014 (UTC)

த.உழவன் அவர்களே, இங்கு தொகுக்கப்படுகிறது.... எனும் உபதலைப்பை பார்க்க.... இதைத் தான் கேட்டீர்கள் என நினைக்கிறேன். இவ்வுரையாடல் ஆலமரத்தடியில் நடந்தது.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:44, 15 மார்ச் 2014 (UTC)
ஆதவன்!நீங்கள் கூறிய பக்கத்தினைப் பார்த்தேன் (விக்கிப்பீடியா_பேச்சு:விக்கித்_திட்டம்_தானியங்கிப்_பராமரிப்பு#தொகுக்கப்படுகிறது.... )நன்றி. மேலும், அக்குறிப்பிட்ட அவ்வார்ப்புருவின் பேச்சுப்பக்கத்தில், எனது எண்ணங்களைக் கூறியுள்ளேன். ஒரு வேண்டுகோள். 'அவர்களே' என்றெல்லாம் என்னை அழைக்க வேண்டாம். தகவலுழவன் என்று விளித்தாலே போதும். என்னை விட பெரியவர்களை, நான் அவ்விதம் பெயர்சொல்லி அழைக்க, அவர்கள் பணித்துள்ளனர். அவ்வடியை நானும் பின்பற்ற எண்ணுகிறேன். இயல்பாக இருப்போம். முடிந்தவரை உழைப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 11:00, 15 மார்ச் 2014 (UTC)
முயற்சித்தேன்....., என்றாலும் அடிக்கடி ஒட்டிக் கொள்கிறது. :( மீண்டும் முயற்சிக்கிறன்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:22, 15 மார்ச் 2014 (UTC)

தானியங்கி தேவை தொகு

பார்க்க: விக்கிப்பீடியா:வணிக இணைப்புகள் கண்காணிப்பு இதில் உள்ள முகவரிகள் வெளியிணைப்புகள் பகுதியில் இருந்தால் தானாக நீக்குமாறு ஒரு தானியங்கி செய்ய முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, noolulagam.com இணைப்புகளை சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தத் தானியங்கியை ஓட்டினால் போதுமானதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 08:26, 30 மார்ச் 2014 (UTC)

  1. ஒரு கட்டுரையில் இத்தளங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளி இணைப்புகளை நீக்கமுடியும். மற்றும் தேடுதல் முறையில் கிடைக்கும் அனைத்துக் கட்டுரைக்கும் தானியங்கியை ஏவி திருத்த முடியும். ஆனால் அதில் வெளியிணைப்பாக அல்லாமல் மேற்கோள்கள் என்றோ அல்லது வேறுவிதமாகவோ வழங்கப்படும் போது தானியங்கிக்குப் புரியவைக்க முடியாது (மேற்கோளிட்ட கட்டுரை வரியையும் நீக்கிவிடும்). எனவே அவ்வாறான கட்டுரையைப் பயனர் ஒருவர் திருத்திவிட்டு மீதியை தானியங்கி கொண்டு ஏவுவது சிறப்பு என நினைக்கிறேன்.
  2. ஏற்கனவே ஓடும் தானியங்கிப் பராமரிப்பில் இத்தளங்களை இட்டுவிட்டால் மூன்று மாத இடைவெளியில் தனியாக ஓட்டும் பணி சுமையைக் குறைக்க முடியும்.--நீச்சல்காரன் (பேச்சு) 17:26, 30 மார்ச் 2014 (UTC)

நீச்சல்காரன், மேற்கோள்கள் / உசாத்துணைகளில் வணிகத் தளங்களுக்கான இணைப்புகளைத் தருவதைப் பற்றிய தெளிவான கொள்கை இப்போது இல்லை. இதில் தேவைப்படும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகு அத்தகைய இணைப்புகளை நீக்கினாலும், மேற்கோள் குறித்த தரவுகளையும் சேர்த்து நீக்கி விடக்கூடாது. எனவே, தானியங்கியாக இப்பணியைச் செய்யும் போது, வெளி இணைப்புகள் என்ற பகுதியின் கீழ் உள்ள இணைப்புகளை மட்டுமே நீக்குமாறு செய்ய வேண்டும். கட்டுரையின் மற்ற பகுதிகளில் இந்த இணைப்பு வந்தால் வேண்டுமானால் பேச்சுப் பக்கத்தில் ஒரு கவன ஈர்ப்பு அறிவிப்பு விடுவது போல் செய்யலாம். இத்தகைய கொள்கை மீறல்கள் குறைவாகத் தான் நடக்கும் என்பதால் அடிக்கடி இந்தத் தானியங்கிப் பணியைச் செய்வதற்கான தேவை இருக்காது. நன்றி.--இரவி (பேச்சு) 11:36, 2 ஏப்ரல் 2014 (UTC)

அப்படியெனில் தானியங்கி கொண்டு வெளியிணைகளை முழுமையாக நீக்கமுடியாது. ஆனால் ஓரளவிற்கு "வெளியிணைப்பு" என்று முறையான தலைப்பிலுள்ள வணிக இணைப்புகளை மட்டும் நீக்கமுடியும். தேவையெனில் குறிப்பிடுங்கள். அன்புடன்--நீச்சல்காரன் (பேச்சு) 14:13, 2 ஏப்ரல் 2014 (UTC)

சரி, இப்போதைக்கு ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடிய அளவு இணைப்புகளே உள்ளதால் கைப்பட செய்கிறேன். பிறகு தேவைப்பட்டாம் தானியங்கி உதவி கோருகிறேன். உதவ முன்வந்தமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 10:37, 8 ஏப்ரல் 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல் தொகு

வணக்கம் நீச்சல்காரன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நீச்சல்காரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:39, 7 மே 2014 (UTC)Reply

அப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன், தேவைப்படின் திருத்திக் கொள்ளுங்கள். நன்றி--நீச்சல்காரன் (பேச்சு) 16:05, 15 மே 2014 (UTC)Reply
நன்றி, நீச்சல்காரன். நீங்கள் விரும்பினால், நீங்கள் பங்களித்த சில குறிப்பிடத்தக்க கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் தரலாம். ஆகத்து முதல் வாரத்தில் இந்த முதற்பக்க அறிமுகம் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 11:24, 16 மே 2014 (UTC)Reply
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 16 மே 2014 (UTC)Reply
நீண்ட தாமதத்துக்கு வருந்துகிறேன். முதற்பக்க அறிமுகப் பகுதியை மீண்டும் தொடங்கி உள்ளோம். முதல் அறிமுகம் உங்களுடையது தான். அடுத்த இரு வாரங்களுக்கு இந்த அறிமுகம் இடம்பெறும். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 22:08, 4 நவம்பர் 2014 (UTC)Reply

தானியங்கி தேவை தொகு

வணக்கம் Neechalkaran,

அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களின் பேச்சுப்பக்கத்திலும் பின்வரும் செய்தியை இடவேண்டியுள்ளது. உங்களுடைய தானியங்கி இப்பணியைச் செய்ய இயலும் என்று நம்புகிறேன்.

{{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}}

தங்களால் உதவ முடியுமானால் எனக்குத் தெரிவிக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:13, 17 மே 2014 (UTC)Reply

முடியும். ஆனால் பயனர் பேச்சு வெளிகளில் தானியங்கிச் செய்திகள் இட சில தயக்கம் உள்ளது. கொள்கைகள் இல்லாததால் சமூகத்தின் ஒத்தக் கருத்திருந்தால் ஏவிவிடுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 04:35, 17 மே 2014 (UTC)Reply

புள்ளிவிவரம் இற்றை தொகு

விக்கிப்பீடியா:Statistics/June 2014 இற்றையாகவில்லையே--இரவி (பேச்சு) 15:38, 1 சூன் 2014 (UTC)Reply

ஒவ்வொரு நாள் முடிவில்தான் அந்நாளைய மாற்றங்கள் இற்றை செய்யப்படுகிறது.--நீச்சல்காரன் (பேச்சு) 01:40, 2 சூன் 2014 (UTC)Reply
ஓ.. சரி.--இரவி (பேச்சு) 08:37, 3 சூன் 2014 (UTC)Reply

உதவி தேவை தொகு

பார்க்க: வார்ப்புரு பேச்சு:Today/AD/SH/AH. நன்றி.--Kanags \உரையாடுக 01:52, 22 சூன் 2014 (UTC)Reply

புள்ளிவிவரம் தொகு

பார்க்க: விக்கிப்பீடியா:Statistics/weekly/22-Jun-2014 கடந்த வார புள்ளிவிபரங்கள் 22-Jun-2014 வரை இற்றை செய்யப்படவில்லை காரணம் என்ன தெரியுமா --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 10:30, 24 சூன் 2014 (UTC)Reply

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 23 அன்று காலை 5-6 மணியளவில் கூகிள் வழங்கியில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு முன்னும் பின்னும் சரியாக வழங்கி செயல்பட்டிருக்கிறது. அவ்வாரத்திற்கான தரவைத் தனியாக இயக்கிப் பதிவேற்றப்பட்டுவிட்டது. -நீச்சல்காரன் (பேச்சு) 01:42, 25 சூன் 2014 (UTC)Reply

கட்டுரைப் போட்டித் தரவுகள் தொகு

வணக்கம் நீச்சல்காரன் :) கட்டுரைப் போட்டியில் மேம்படுத்திய 500+ கட்டுரைகளின் தலைப்புகளைத் தந்தால் அவற்றில் இருந்து பின்வரும் தரவுகளைத் தானியக்கமாக அட்டவணைப்படுத்த முடியுமா?

கட்டுரைப் போட்டி நடந்த 12 மாதங்களில் இக்கட்டுரைகளில்

  • எத்தனை பைட்டுகள் சேர்க்கப்பட்டன?
  • எத்தனை பயனர்கள் பங்களித்துள்ளனர்?
  • முன்பு இருந்த பைட்டு அளவு, தற்போது பைட்டு அளவு
  • எத்தனை படிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன?
  • எத்தனை சான்றுகள் / உசாத்துணைகள் / குறிப்புகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன?
  • எத்தனை வெளியிணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன?

இன்னும் ஏதாவது பயனுள்ள விவரங்கள் கிடைக்க வழியிருந்தால், அவற்றையும் பெறலாம்.

இவற்றில் சில விவரங்களை மட்டும் தான் பெற முடியும் என்றால் அதுவும் சரி.


நன்றி--இரவி (பேச்சு) 12:33, 4 சூலை 2014 (UTC)Reply

அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்-பின் எனத் திரட்டமுடியும். நேரடியாக கிடைக்கக்கூடிய பைட்டு, பயனர், படிமம் ஆகிய தகவல்கள் துல்லியமாகத் திரட்ட முடியும். குறியீடுகள் அடிப்படையில் கிடைக்கக்கூடிய மேற்கோள்கள், வெளியிணைப்புகள் போன்றவற்றில் சிற்சில பிழைகள் வரலாம். ஒரு மாதிரிக் கட்டுரை ஒன்றிற்கு, ஒரு மாதிரி தரவுப்பட்டியல் தாருங்கள் அதனடிப்படையில் மற்ற கட்டுரைகளை அமைக்கிறேன். அன்புடன் -நீச்சல்காரன் (பேச்சு) 02:35, 5 சூலை 2014 (UTC)Reply
நன்றி, நீச்சல்காரன். மேற்கண்ட தரவுப் பட்டியலில் எவை எல்லாம் இலகுவாக பெற முடியுமோ அவை எல்லாம் பெற முடிந்தால் நன்று. துல்லியம் குறைவாக இருக்கக்கூடிய தரவுகளை மட்டும் அவ்வாறே குறிப்பிட்டு விடலாம். சூன் 1, 2013 தொடக்கம் மே 31, 2014 முடிய உள்ள காலவெளியில் சேர்க்கப்பட்ட தொகுப்புகளை ஆய வேண்டும். எடு்த்துக்காட்டுக்கு, சில கட்டுரைகள்: தோக்கியோ, நடுநிலக்கடல், ரூபாய், மரக்கட்டை, எரிவளி, வானூர்தி, பணம், கண்டம், உசாமா பின் லாதின், பிரமிடு--இரவி (பேச்சு) 04:51, 5 சூலை 2014 (UTC)Reply
இக்கால இடைவெளியில் நிகழந்த தொகுப்புகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ்கண்டவாறு இருந்தால் போதுமா? உதாரணம் - தோக்கியோ
பயனர் தொகுப்பு பைட்டு படிமம் மேற்கோள் வெளியிணைப்பு
Aladi 11 3477 0 0 0
Rsmn 8 13497 5 14 0

-நீச்சல்காரன் (பேச்சு) 07:01, 5 சூலை 2014 (UTC)Reply

நான் பயனர்களின் பங்களிப்புத் தரவுகளை அலச எண்ணியிருக்கவில்லை. ஆனால், நீங்கள் செய்து காட்டிய பிறகு, அது கூட பயனுள்ள ஒன்றாக தெரிகிறது. இத்தரவுகள் குறித்து பிறகு பார்ப்போம். முதலில் நான் செய்ய விரும்பியது என்னவென்றால், இப்போட்டியால் எந்த அளவு கட்டுரைகள் மேம்பட்டுள்ளன என்று அறிய வேண்டும். நீங்கள் கொடுத்துள்ள அதே அட்டவணை மாதிரியில் பயனர் பெயருக்குப் பதிலாக ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பும் இருக்க வேண்டும். ஒரு கட்டுரைக்கு ஒரு வரிசை.--இரவி (பேச்சு) 22:36, 6 சூலை 2014 (UTC)Reply

சரி, நீங்கள் குறிப்பிடும் கட்டுரைகள் அனைத்தையும் கொடுங்கள் பதிவேற்றுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 00:50, 7 சூலை 2014 (UTC)Reply
முழுமையான பட்டியலுக்கு விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் பாருங்கள். இதில் ஓரிரு கட்டுரைகள் சரி பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், இப்போதைக்கு இப்பட்டியலை உங்கள் நிரலின் சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தலாம். நன்றி.--இரவி (பேச்சு) 07:19, 12 சூலை 2014 (UTC)Reply
கட்டுரைகளின் மேம்பாட்டுப் புள்ளிவிவரம் இங்குள்ளது. ஏதேனும் மாற்றம் செய்தபிறகு மீண்டும் இயக்கவேண்டுமென்றாலும் கூறுங்கள். ஒரு தொகுப்பில் நீக்கப்படும் பைட்டுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. ref அங்கத்திற்குள் இருக்கும் மேற்கோள்கள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. "வெளியிணைப்புகள்" என்று தலைப்பிற்குக் கீழுள்ள இணைப்புகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.-நீச்சல்காரன் (பேச்சு) 06:40, 13 சூலை 2014 (UTC)Reply
மன்னிக்கவும், எப்படியோ உங்கள் பதிலைத் தவற விட்டு விட்டேன். இனி பதில் அளிக்கும் போது, என் பயனர்பக்கத்துக்கு ஒரு இணைப்பு தந்து பதில் அளிக்க வேண்டுகிறேன். தற்போது, விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் பக்கத்தில் இறுதிப் பட்டியல் உள்ளது. இதனைப் பயன்படுத்தலாம். தொகுப்புகள், படிமங்கள் என்ற விவரங்கள் யாவற்றுக்கும் அனைத்து கட்டுரைகளின் கூட்டுத் தொகை தேவைப்படும். மே 31, 2013 நிலவரப்படி கடந்த ஒரு ஆண்டில் எவ்வளவு பைட்டுகள், படிமங்கள் முதலியன சேர்க்கப்பட்டு நிலைத்தன என்ற தகவல் முக்கியமாக தேவை. எடுத்துக்காட்டுக்கு, இந்தியப் பிரிவினை கட்டுரையில் 491272 பைட்டுகள் சேர்க்கப்பட்டதாக காட்டுகிறது. ஆனால், இப்போது எஞ்சியிருப்பது 96,737 தான். எஞ்சியிருக்கும் விளைவையே போட்டியின் நல்விளைவாக காட்ட முடியும் அல்லவா? இதே போல் படிமங்கள் விசயத்திலும் குழப்பம் நிலவுகிறது. நரம்புத் தொகுதி கட்டுரையில் 4 படங்கள் சேர்க்கப்பட்டதாகச் சொல்கிறது. இப்போது இருப்பதே 2 படங்கள் தாம். அப்புறம், தானியங்கித் தொகுப்புகளை விலக்க முடிந்தால் நன்றாக இருக்கும். இந்த விவரங்கள் சரியாக கிடைக்குமானால், இது ஒரு மிக முக்கிய நிரல் வழி ஆய்வாக இருக்கும். இக்கட்டுரைப் போட்டி குறித்து விக்கிமீடியா வலைப்பதிவில் எழுத எண்ணியிருக்கும் இடுகையில் இந்த ஆய்வினையும் உங்கள் நிரலையும் சிறப்பாக குறிப்பிட எண்ணியுள்ளேன். மற்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பயன்படும். நன்றி.--இரவி (பேச்சு) 21:40, 30 சூலை 2014 (UTC)Reply
இரவி, படிமங்களின் சோதனையில் சிறிய பிழையிருந்துள்ளது, அதைத்தற்போது நீக்கிவிட்டேன். படிமங்களைப் பொறுத்தமட்டில் இன்றைய நாளில் நிலைத்திருக்கும் படிமங்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. ஆனால் பைட்டைப் பொறுத்தமட்டில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டவை அனைத்தையும் எடுத்துக் கொள்வதால் நிலைத்திருக்கும் பைட்டை மட்டும் பிரிக்கமுடியாது. ஆகவே நீங்கள் கூறியது போல அக்கால இடைவெளியில் மொத்தமாகச் சேர்க்கப்பட்ட பைட்டையும் வரிசையில் கொடுத்துவிட்டேன். கடைசியாக அனைத்து எண்ணிக்கையின் கூட்டுத்தொகையையும் கொடுக்கப்பட்டுள்ளது. தானியங்கியைத் தவிர்த்தும் சேகரித்துள்ளேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:06, 3 ஆகத்து 2014 (UTC)Reply

பெண்ணியம் வலைவாசல் தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:15, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

ஏற்கனவே சென்னை சந்திப்பில் கலந்து பேசியிருப்பினும் அறிமுகப் பக்கத்தில் காணும் போது புதிதாகக் கண்டதுபோல் மகிழ்ச்சி. உண்மையைச் சொல்கிறேன். நீங்கள் பெரிய ஆள்தான்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:57, 5 நவம்பர் 2014 (UTC)Reply

வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:47, 4 நவம்பர் 2014 (UTC)Reply

வாழ்த்துக்கள்.--AntonTalk 03:03, 5 நவம்பர் 2014 (UTC)Reply
தென்காசியாருக்கும், அன்ரன் சகோதருக்கும் நன்றிகள். சஞ்சீவி, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னைப்போன்ற கத்துக்குட்டிகளை நம்பி ஏமாறாதீர்கள்:) --நீச்சல்காரன் (பேச்சு)
உங்களை முதற்பக்க அறிமுகத்தில் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 11:36, 8 நவம்பர் 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் Neechalkaran/தொகுப்பு 2!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:36, 30 திசம்பர் 2014 (UTC)Reply

உதவி தொகு

வணக்கம். கனக்சிடம் நான் கேட்டிருந்த உதவியும் அதற்கு அவரளித்த பதிலையும் கீழே தந்துள்ளேன். இது குறித்து ஆவன செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:04, 4 சனவரி 2015 (UTC)Reply

நூல்கள் குறித்த சில கட்டுரைகளில் (உதாரணத்திற்கு வேங்கையின் மைந்தன் (புதினம்), கள்ளோ காவியமோ (நூல்), மேலும் பல) உள்ள தகவற்பெட்டியினால் பகுப்பில் "Infobox book image param needs updating" என சிவப்பு இணைப்பில் காணப்படுகிறது. சரிசெய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:11, 3 சனவரி 2015 (UTC)Reply
Booradleyp: இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். மேலும், ஒவ்வொரு கட்டுரையிலும் திருத்தங்கள் மேற்கொள்வது கடினம். தானியங்கி இயக்குபவர்கள் இதனைச் செய்யலாம்., ஆனாலும், வார்ப்புருவைத் திருத்தினால் சிலவேளை சரியாக இருக்கும். நீச்சல்காரன், ஜெயரத்தினா சரிசெய்ய முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:19, 3 சனவரி 2015 (UTC)Reply

கலைக்களஞ்சியத் தலைப்புகள் தொகு

தானியங்கி வித்தகரே, கலைக்களஞ்சியத் தலைப்புகளை அட்டவணைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி !--இரவி (பேச்சு) 07:53, 2 ஏப்ரல் 2015 (UTC)

  விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:38, 2 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:39, 2 ஏப்ரல் 2015 (UTC)
இங்கு [[<a name="KE"></a>]] என்பது போல குறியீடுகளே காணப்படுகின்றன. கவனிக்கவும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:47, 2 ஏப்ரல் 2015 (UTC)
சகோதரன் ஜெகதீஸ்வரன், இது போன்ற சிறு பிழைகளைத் தானியங்கி இல்லாமல் நாமே சரி பார்த்து விடலாம் என நினைக்கிறேன். நீச்சல்காரன், இன்னொரு வேண்டுகோள். விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம் பக்கத்திலும் இதே போல் தலைப்புகளைத் தொகுத்துத் தர வேண்டுகிறேன். மூல இணைப்பு - http://www.tamilvu.org/library/kulandaikal/lku00/html/lku00hom.htm --இரவி (பேச்சு) 13:34, 2 ஏப்ரல் 2015 (UTC)
அதனை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை நண்பரே. அதனால்தான் குறிப்பிட்டேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:59, 2 ஏப்ரல் 2015 (UTC)


அருமையான முயற்சி. பட்டியலில் ஆங்கிலத் தலைப்புக்கும் ஒரு column விட்டால், அதனை பயனர்கள் இணைக்க முடியும். இதனை எவ்வாறு செய்கிறீர்கள் என்று அறிய ஆவல். --Natkeeran (பேச்சு) 19:43, 2 ஏப்ரல் 2015 (UTC)
இந்துக் கலைக்களஞ்சியம் இணையத்தில் உள்ளது. அதன் தலைப்புகளையும் தொகுக்க முடியும். --Natkeeran (பேச்சு) 19:45, 2 ஏப்ரல் 2015 (UTC)
மேலும், அந்த row தொகுக்கும் மாதிரிச் செய்தால் இலகுவாக இருக்குமா!--Natkeeran (பேச்சு) 19:57, 2 ஏப்ரல் 2015 (UTC)
அக்களஞ்சியத்திலிருந்த வெற்றுவரிகள் இப்படி name="KE" போன்றவையாக வந்துவிட்டன. அவற்றைத் திருத்தி மறுமுறை இற்றை செய்கிறேன் அப்போது ஆங்கிலத் தலைப்பும் புதிய நெடுவரிசையாக அமைக்கிறேன். குழந்தைகள் கலைக்களஞ்சியத்தையும் நாளை இற்றைசெய்கிறேன். நற்கீரன், http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk00/html/lkk0i001.htm இப்பக்கத்தில் உள்ள மூலநிரலை பகுத்தாய்வு செய்தால் தலைப்புகளையும், இணைப்புகளையும் சில string function மூலம் பிரித்து எடுக்கமுடியும். அவ்வாறே கூகிள் ஸ்கிரிப்ட்டில் பிரித்து இற்றை செய்தேன். எச்.டி.எம்.எல். வடிவில் இருக்கும் எந்தப்பக்கத்தில் உள்ள தகவலையும் பிரித்தெடுக்கமுடியும். இந்துக் கலைக்களஞ்சியப் பக்கத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை அதுவிருந்தால் தான் இற்றை செய்யமுடியும்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:06, 3 ஏப்ரல் 2015 (UTC)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் மற்றும் கலைக்களஞ்சியம் இரண்டையும் அட்டவணையிட்டாயிற்று. அணுக்கம் உள்ளவர்கள் யாரேனும் விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ஃ விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ங இப்பக்கங்களை நீக்கிவிடுங்கள். தவறாக உருவான பக்கங்கள் இவை --நீச்சல்காரன் (பேச்சு) 07:49, 5 ஏப்ரல் 2015 (UTC)
நன்றி நீச்சல்காரன். --Natkeeran (பேச்சு) 13:41, 6 ஏப்ரல் 2015 (UTC)

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் தொகு

இங்குள்ள கட்டுரைகளை அளவிற்கேற்ப பட்டியலிட முடியுமா? சிலவற்றை துப்புரவு செய்து வருகிறேன். சிறிய பைட்டுள்ள கட்டுரைகளை முதலில் துப்புரவு செய்ய எளிதாக இருக்கும். --AntanO 03:24, 20 மே 2015 (UTC)Reply

இவ்வாரத்தில் ஒருநாள் செய்கிறேன். ஆயிரத்து சொச்சத்தையும் ஒரே பக்கத்தில் இட்டுவிடுகிறேன். பின்னர் நீங்கள் அதைத் திருத்திக் கொள்ளுங்கள் நீச்சல்காரன் (பேச்சு) 04:24, 20 மே 2015 (UTC)Reply
  விருப்பம்--AntanO 14:10, 20 மே 2015 (UTC)Reply
விக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் இங்கு அப்பகுப்பில் உள்ள அனைத்து பக்கங்களின் அளவுகளை அப்படியே திரட்டியுள்ளேன். மாற்றங்கள் வேண்டினால் கூறுங்கள் அல்லது திருத்திக்கொள்ளுங்கள். வேறு எங்காவது அளவுகளின் அடிப்படையில் கட்டுரையை வரிசைப்படுத்த வேண்டினால் இது உதவலாம். http://apps.neechalkaran.com/wikicalculator --நீச்சல்காரன் (பேச்சு) 07:51, 24 மே 2015 (UTC)Reply

அன்டன், முயற்சிக்கு நன்றி. நீச்சல்காரன், உதவிக்கு நன்றி. நீங்கள் இது போல் எந்த அட்டவணை இட்டாலும் அதில் வரிசை எண்களையும் சேர்த்து விடுங்கள். --இரவி (பேச்சு) 08:04, 24 மே 2015 (UTC)Reply

  விருப்பம் நன்றி நீச்சல்காரன்! --AntanO 14:32, 24 மே 2015 (UTC)Reply
Return to the user page of "Neechalkaran/தொகுப்பு 2".