பயனர் பேச்சு:Neechalkaran/தொகுப்பு 3
|
---|
1 2 3 4 |
தொகுப்பு மூன்று
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
உதவி...
தொகுவணக்கம்! ஒரு நாளின் 24 மணி நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்தின் முடிவுலும் அந்த மணி நேரத்தில் செய்யப்பட்ட தொகுப்புகள் குறித்த தரவுகளைப் பெற இயலுமா? இயலும் என்றால் சொல்லுங்கள், என்னென்ன தரவுகள் வேண்டுமென்பதனை பட்டியலிடுகிறேன். (விக்கி மாரத்தான் 2015 நிகழ்வுக்காக இது தேவைப்படுகிறது!)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:22, 15 சூலை 2015 (UTC)
- கண்டிப்பாக செய்ய இயலும். Special:Log பக்கத்தில் அனைத்து தொகுப்புகளையும் பார்க்க இயலும். புதிய பக்கங்கள், இக்கருவி மூலம் குறிப்பிட்ட நாள் அல்லது நாட்களில் தொகுப்புகளை பார்க்கமுடியும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:32, 15 சூலை 2015 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் விரும்பியதை எடுத்துப் பதிவு செய்யும் தானியங்கியை வடிவமைக்கமுடியும். மேலே தினேஷ் குறிப்பிட்டக் கருவியையும் பாருங்கள், அதில் தொகுப்புகளுடன் log எண்ணிக்கையும் கணக்கில் உள்ளது. தானியக்கம் தேவையென்றால் குறிப்பிடுங்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 16:23, 16 சூலை 2015 (UTC)
எனக்குத் தேவைப்படும் தானியங்கியை வடிவமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- சூலை 18, 00:00 UTC முதல் சூலை 20, 00:00 UTC வரை 48 மணி நேரங்களுக்கு இந்தத் தானியங்கி இயங்க வேண்டும்.
- ஒவ்வொரு மணி நேர முடிவிலும் எண்ணிக்கைத் தரவு (numerical data) வேண்டும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:27, 17 சூலை 2015 (UTC)
- எந்தந்த தரவுகள் எந்த வடிவில் வேண்டும் என்றும் சொல்லுங்கள். பயனர்வாரியாகவும் பயனர்வெளிவாரியாகவும் விக்கிப்பீடியா:Statistics/weekly/12-Jul-2015 இப்படி வேண்டுமா? அல்லது கீழ்கண்ட வகையில் ஒரே பக்கத்தில் இப்படி அமைக்கவா?
எண் | நேரம் | புது | தொகு | வழி | படி | வார் | பகு | இதர | மொத்தம் | பைட் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சூலை 18 01:00 | 1 | 126 | 4 | 11 | 1 | 7 | 86 | 236 | 9681 |
2 | சூலை 18 02:00 | 8 | 156 | 0 | 0 | 10 | 0 | 41 | 215 | 58465 |
3 | சூலை 18 03:00 | 3 | 128 | 6 | 0 | 11 | 22 | 33 | 203 | 200300 |
--நீச்சல்காரன் (பேச்சு) 04:03, 17 சூலை 2015 (UTC)
1. நீங்கள் இங்கு காட்டியுள்ளவாறு அட்டவணை ஒன்று கண்டிப்பாக வேண்டும். இதில்... 1) மொத்தத் தொகுப்புகள் 2) கட்டுரைத் தொகுப்புகள் 3) உருவான புதிய கட்டுரைகள் 4) உருவான புதிய பகுப்புகள் 5) உருவான புதிய வார்ப்புருக்கள் 6) (கட்டுரை) பேச்சுப் பக்கத் தொகுப்புகள் 7) பயனர் பேச்சுப் பக்கத் தொகுப்புகள், 8) வலைவாசல் தொகுப்புகள், 9) பிற தொகுப்புகள் (ஆலமரத்தடி, திட்டப் பக்கங்கள்) ஆகியவற்றின் எண்ணிக்கைத் தரவுகள் (numerical data) ஒவ்வொரு மணி நேர முடிவிலும் அப்போதே வேண்டும்! (ஒவ்வொரு மணி நேர முடிவில் Trend chart ஒன்றின் வாயிலாக பயனர்களுக்கு நிலவரத்தை அறியத் தருதலே இதன் நோக்கம்; chartஐ நான் உருவாக்கி, படிமமாக இங்கு பதிவேற்றுவேன்)
2. பயனர்வாரியாகவும் பயனர்வெளிவாரியாகவும் மேற்காணும் 9 வகையான தரவுகளைக் கொண்ட இன்னொரு அட்டவணையும் வேண்டும். ஆனால் இந்தத் தரவுகள், முதல் 24 மணி நேரத்துக்குப் பிறகும், இரண்டாவது 24 மணி நேரத்துக்குப் பிறகும் கிடைத்தால் போதுமானது. (மாரத்தான் திட்டம் முடிந்ததும் பங்களிப்பாளர்களுக்கு அவர்களின் பங்களிப்பு குறித்த தரவுகளை அறியத் தருதலே இதன் நோக்கம்)
3. சிலர் சனிக்கிழமையன்றும் பங்களிக்க வாய்ப்பிருப்பதால் சூலை 18, 00:00 UTC (சனிக்கிழமை 05.30 IST) முதல் சூலை 20, 00:00 UTC (திங்கட்கிழமை 05:30 IST) வரை 48 மணி நேரங்களுக்கு தானியங்கியை இயக்கக் கேட்டுக் கொள்கிறேன்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 17 சூலை 2015 (UTC)
- ஞாயிற்றுக்கிழமை மட்டும் பயனர்கள் செய்த தொகுப்புகளின் முழுமையான பட்டியலை எங்கிருந்து பெறலாம்.--Kanags \உரையாடுக 01:16, 18 சூலை 2015 (UTC)
- Kanags, அந்த நாளுக்கான முழுமையான பட்டியல் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தான் செல்வசிவகுருநாதன் கேட்டதைப் போல சனி மற்றும் ஞாயிறுக்கான பயனர்வாரி பட்டியலையும் தயாரிக்கவுள்ளேன்.
- மா. செல்வசிவகுருநாதன், எதிர்பார்த்ததுபோல தானியங்கியை முடுக்கிவிட்டுவிட்டேன். கட்டுரை, பகுப்பு, வார்ப்புரு, வலைவாசல், கட்டுரைப் பேச்சு, பயனர் பேச்சு ஆகிய குறிப்பிட்ட பெயர்வெளியிலும், மொத்த பெயர்வெளியிலும், பங்களித்த எண்ணிக்கையையும், பைட்டையும் எடுத்து மணிக்கொருமுறை இற்றைசெய்யும். Log & External வகைத் தகவல்களைத் தவிர்த்து, புதிய(New) மற்றும் தொகுப்பு(Edit) ஆகிய இரண்டு தகவலையும் எடுக்கிறது. இந்த வார்ப்புருவைத் திருத்திக்கொள்வதன் மூலம் வேண்டிய வடிவமைப்பை மாற்றிக்கொள்ளலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:29, 18 சூலை 2015 (UTC)
நன்றி, நீச்சல்காரன்! இற்றையாகும் தரவுகளை தொடர்ந்து கவனித்து, உதவி ஏதும் தேவையெனில் மீண்டும் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 18 சூலை 2015 (UTC)
- //சிலர் சனிக்கிழமையன்றும் பங்களிக்க வாய்ப்பிருப்பதால் சூலை 18, 00:00 UTC (சனிக்கிழமை 05.30 IST) முதல் சூலை 20, 00:00 UTC (திங்கட்கிழமை 05:30 IST) வரை 48 மணி நேரங்களுக்கு தானியங்கியை இயக்கக் கேட்டுக் கொள்கிறேன்// மெக்சிக்கோ மற்றும் அமெரிக்க மேற்குப் பகுதிகளில் சூலை 19 இரவு திங்கள் 12:00 UTC வரை இருக்கும். உலகளவில் சூலை 19 திகதி 00:00 UTC±12 மணித்தியாலங்களுக்கு இருக்கும். அதாவது சூலை 18 12:00UTC முதல் சூலை 20 12:00 UTC வரை இருக்கும்.--மணியன் (பேச்சு) 19:47, 18 சூலை 2015 (UTC)
நீச்சல்காரன்... மணியன் அவர்களின் பரிந்துரைப்படி, மேலும் 12 மணித்தியாலங்களுக்கு அல்லது 24 மணித்தியாலங்களுக்கு தானியங்கியின் செயற்பாட்டினை நீட்டிக்க வேண்டுகிறேன்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 19 சூலை 2015 (UTC)
வேறுவிதமான உதவி...
தொகுவணக்கம்! தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) எனும் கட்டுரையினை தற்போதுள்ள நிலைமையிலிருந்து ஒழுங்குபடுத்த இயலுமா? (குறிப்பாக இங்கும், இங்கும் பார்த்தால் பிரச்சினையைப் புரிந்துகொள்ளலாம்!) அதன்பிறகு, தானியங்கி மூலம் இற்றை செய்ய இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:15, 25 சூலை 2015 (UTC)
- முதலிரண்டு தமிழெழுத்தைக் கொண்டு அகரவரிசைப்படுத்தும் நிரலிருந்ததால்(மற்றெழுத்தைக் கணக்கில்கொள்ளவில்லை) உடனே இற்றை செய்துள்ளேன். கூடுதலாகப் போலிகளும் நீக்கப்பட்டிருக்கும். இதிலும் மாற்றம் வேண்டுமென்றால் கூறுங்கள். அன்புடன்--நீச்சல்காரன் (பேச்சு) 05:16, 26 சூலை 2015 (UTC)
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். தாங்கள் உடனடியாக செய்த இற்றை அருமை! வேண்டும் சில மாற்றங்கள்:
- எண்களில் தொடங்கும் படங்கள் எனும் தலைப்பில் அனைத்துப் படங்களும் பட்டியலாகியுள்ளது. இதனைத் திருத்தவேண்டும்.
- கிரந்த எழுத்துகளில் ஆரம்பமாகும் படங்களை தனியான தலைப்பின்கீழ் கொண்டுவர இயலுமா?
- ஒவ்வொரு உயிரெழுத்தின்கீழ், ஒவ்வொரு மெய்யெழுத்தின்கீழ் படங்களை பட்டியலிட இயலுமா?
தேவைப்படும் அடுத்தகட்ட முன்னேற்றம்: தமிழ்த் திரைப்படம் குறித்து எழுதப்படும் ஒவ்வொரு புதிய கட்டுரையும், தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) எனும் கட்டுரையில் தானாகவே பட்டியலாகுதல் வேண்டும். வாரமொருமுறை இந்த இற்றை நடந்தால் நலம்! என் மனதில் தோன்றிய ஒரு பரிந்துரை: உதாரணமாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க எனும் கட்டுரையை எழுதும்போது, பகுப்பு:2015 தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பினை சேர்க்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் எனும் நூலினைப் பிடித்துக்கொண்டு தானியங்கி வேலை செய்யுமாறு நிரல் எழுத இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:19, 15 ஆகத்து 2015 (UTC)
- அகரவரிசைப்படுத்தலைக் கைமுறையில் திருத்துவதை விட தானியக்கத்தில் செய்வது எளிதென்பதால் அதைச் செய்தேன். இதர சிறிய திருத்தங்கள் ஒப்பீட்டளவில் கைமுறையில்தான் எளிதென நினைக்கிறேன். இப்பகுப்பில் உள்ள திரைப்படக் கட்டுரையைத் தொடர்முடுக்கத்தில் இப்பக்கத்தில் தொகுக்கமுடியும் ஆனால் தற்போதுவரை அவை எண்ணிக்கையில் 3300க்கு மேல் இருப்பதால் படிப்பதில் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு மெய்/உயிரெழுத்திற்கும் இதைப் போன்ற ஒரு பக்கமென்றால் சிறப்பாகயிருக்கும் என நினைக்கிறேன். இது தேவையென்று விக்கிச் சமூகம் எண்ணினால் தானியக்கத்தை உருவாக்குகிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 04:47, 16 ஆகத்து 2015 (UTC)
புள்ளிவிவர உதவி தேவை
தொகுஇங்கு இருப்பது போன்ற அனைத்து இந்திய மொழி (தற்போது சில மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன) விக்கிப்பீடியாக்களுக்கும் தரவு சேகரிக்க முடியுமா? கூடவே, தமிழ் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மாதமும் கூடுதல் பக்கப்பார்வைகள் பெறும் 1000 கட்டுரைகள், அவற்றுக்குத் தொடர்புடைய கட்டுரைகள் பெறும் பக்கப் பார்வைகளைப் பட்டியல் இட்டால் அவற்றை இனங்கண்டு மேம்படுத்த முனையலாம்.--இரவி (பேச்சு) 08:10, 14 ஆகத்து 2015 (UTC)
- பக்கப்பார்வை பற்றிய கச்சாத் தரவு பெரியளவில் உள்ளதால் தற்போதைய கட்டணத்தில் எனது கூகிள் வழி தானியக்கம் செயல்படாது. வேறு எளிய வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக விக்கிடிரண்ட் உருவாக்குநர் Johan Gunnarssonனிடம் கேட்டுப்பாருங்கள் பிற இந்தியமொழிக்கு அவரே உருவாக்கலாம். அல்லது tools.wmflabs.orgல் கருவி உருவாக்கம் பற்றிய அடிப்படைப் பயிற்சி எனக்குக் கிடைத்தால் எனது நிரல்களை அங்கு மொழிபெயர்க்க முயல்வேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:19, 15 ஆகத்து 2015 (UTC)
- Johan Gunnarsson க்கு மின்மடல் வேண்டியும் பதில் இல்லை என்றே உங்களிடம் கோரினேன். இப்பணிக்குத் தேவையான கூகுள் சேவைக்கு எவ்வளவு செலவு ஆகும்? tools.wmflabs.orgல் கருவி உருவாக்கம் பற்றிய அடிப்படைப் பயிற்சிக்கான வழிகளை ஆராய்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:29, 18 ஆகத்து 2015 (UTC)
- 10MB + 50000 API பரிவர்த்தனை கொண்ட வரை மலிவாகக் கிடைக்கும்(எனது கணக்கும் அதுவே). அதற்குமேல் தரவு அளவு மற்றும் வினவல் உரை எண்ணிக்கைக்கென்று தனித்தனிக் கட்டணங்களுள்ளன. இதைவிட மலிவான வழியுள்ளதா/சிக்கனமான பயன்பாடு முறை என்று சொல்லுமளவிற்கு இதில் எனக்கு அனுபவமுல்லை. வணிகநிறுவனமில்லாத விக்கித்தேவையை கூகிள்வழியாகப் பூர்த்திசெய்வதைவிட விக்கிக்குள்ளே செய்வது சிறப்பு என நினைக்கிறேன். பத்தாவதாண்டுக் கூடலுக்குப் பிறகு சில மாற்றுயுக்திகள் கொண்டு en:Wikipedia:Top 25 Report போல தமிழில் தயாரிக்க ஒரு தானியக்கத்தில் முயன்றேன் ஆனால் முன்னிறுத்தப்பட்டு விக்கிச்செய்திகளில் வரும் கட்டுரைப் பெயர்களையெல்லாம் பொதுப்பெயரிலிருந்து மாற்றப்பட்டதால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். 1000 கட்டுரைக்குப் பதில் முதல் 25 கட்டுரைகளைப் பட்டியலிட்டால் உதவுமென்றால் அத்திட்டத்தை இப்போது செயல்படுத்துகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 17:53, 18 ஆகத்து 2015 (UTC)
- நீச்சல்காரன், இதற்கு http://drill.apache.org/, http://redash.io/ அல்லது http://www.megapivot.com/ பயன்படுத்த இயலுமா? குறிப்பிட்ட அளவு பயன்பாட்டிற்கு கட்டணமில்லா சேவை. அமேசான் 1-மில்லியன் ஏபிஐ சேவையை, முதல் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகின்றனர். இங்கு சோதனை செய்து பார்க்கலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:44, 19 ஆகத்து 2015 (UTC)
- 10MB + 50000 API பரிவர்த்தனை கொண்ட வரை மலிவாகக் கிடைக்கும்(எனது கணக்கும் அதுவே). அதற்குமேல் தரவு அளவு மற்றும் வினவல் உரை எண்ணிக்கைக்கென்று தனித்தனிக் கட்டணங்களுள்ளன. இதைவிட மலிவான வழியுள்ளதா/சிக்கனமான பயன்பாடு முறை என்று சொல்லுமளவிற்கு இதில் எனக்கு அனுபவமுல்லை. வணிகநிறுவனமில்லாத விக்கித்தேவையை கூகிள்வழியாகப் பூர்த்திசெய்வதைவிட விக்கிக்குள்ளே செய்வது சிறப்பு என நினைக்கிறேன். பத்தாவதாண்டுக் கூடலுக்குப் பிறகு சில மாற்றுயுக்திகள் கொண்டு en:Wikipedia:Top 25 Report போல தமிழில் தயாரிக்க ஒரு தானியக்கத்தில் முயன்றேன் ஆனால் முன்னிறுத்தப்பட்டு விக்கிச்செய்திகளில் வரும் கட்டுரைப் பெயர்களையெல்லாம் பொதுப்பெயரிலிருந்து மாற்றப்பட்டதால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். 1000 கட்டுரைக்குப் பதில் முதல் 25 கட்டுரைகளைப் பட்டியலிட்டால் உதவுமென்றால் அத்திட்டத்தை இப்போது செயல்படுத்துகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 17:53, 18 ஆகத்து 2015 (UTC)
- Johan Gunnarsson க்கு மின்மடல் வேண்டியும் பதில் இல்லை என்றே உங்களிடம் கோரினேன். இப்பணிக்குத் தேவையான கூகுள் சேவைக்கு எவ்வளவு செலவு ஆகும்? tools.wmflabs.orgல் கருவி உருவாக்கம் பற்றிய அடிப்படைப் பயிற்சிக்கான வழிகளை ஆராய்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:29, 18 ஆகத்து 2015 (UTC)
பகுப்பில்லாதவை வார்ப்புரு தொடர்பாக...
தொகுவணக்கம்! பொன்ராஜ் வெள்ளைச்சாமி எனும் கட்டுரையில் இந்த மாற்றத்தை NeechalBOT செய்திருந்தது. நான் பகுப்பினைச் சேர்த்தேன். பகுப்பினைச் சேர்த்தால், வார்ப்புருவினை NeechalBOT தானாகவே நீக்கிவிடுமா என்பதனையறிய காத்திருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்தத் தொகுப்பின் வாயிலாக சிறீதரன் வார்ப்புருவினை நீக்கினார். எனது கேள்வி: பகுப்பு சேர்க்கப்பட்டால், வார்ப்புரு தானாக நீங்குமாறு தானியங்கியை இயக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:07, 15 ஆகத்து 2015 (UTC)
- அவ்வாறு தானியக்கமாக நீக்குவது ஆபத்து. உதாரணமாக, நீங்கள் விருதுநகர் மாவட்ட நபர்கள் என்ற பகுப்பைச் சேர்த்தீர்கள். ஆனால் ஒரு நபர் பற்றிய கட்டுரைக்கு எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பதோ அல்லது பிறந்த ஆண்டுப் பகுப்போ மிக முக்கியமானதல்ல. அவர் எந்தத் துறையில் சிறந்து விளங்கினார் என்ற பகுப்பே மிக முக்கியமானது. எனவே ஒரு பகுப்பு சேர்க்கப்பட்டவுடன் வார்ப்புருவை நீக்கலாமா என்பது குறித்து தனித்தனியாகத் தான் முடிவு செய்யப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:09, 15 ஆகத்து 2015 (UTC)
@Kanags... முக்கியப் பகுப்பு (அல்லது) குறிப்பிடத்தக்கப் பகுப்பு (அல்லது) சரியான பகுப்பு சேர்க்கப்பட்டதா என்பதனை மனிதரால் மட்டுமே தீர்மானிக்க இயலும் என்பதால், தங்களின் கருத்து சரியானதே. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
@நீச்சல்காரன்... தானியக்கமாக நீக்குவது, தொழினுட்பத்தில் சாத்தியமா என்பதனை எனது அறிதலுக்காக தெரிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 16 ஆகத்து 2015 (UTC)
- ஏற்கெனவே காலம் கடந்த வார்ப்புருவை நீக்கிக்கொண்டு வருகிறோம். நிச்சயம் சாத்தியமே. தற்போதைக்குத் தேவையில்லாததால் விட்டுவிடுகிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 08:36, 16 ஆகத்து 2015 (UTC)
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:41, 16 ஆகத்து 2015 (UTC)
நிறைகுடம் தளும்புவதில்லை...
தொகுநேற்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 24 ஆகத்து 2015 (UTC)
'பாணி'
தொகு'பாணி' என்னும் வார்த்தை அடுத்ததாக வருவதால் வலிமிகாது. நாவி இவ்வாறு கூறுகிறது. இதனை விளக்க முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 11:21, 19 செப்டம்பர் 2015 (UTC)
- சாரங்கபாணி, தண்டபாணி, கோதண்டபாணி போல இச்சொல் அதிகச் சதவிகிதத்தில் வலிமிகாததால் இப்படிப் பரிந்துரைசெய்கிறது. இச்செயலியின் மேம்பட்ட பதிப்பில் இன்னும் தெளிவுபடுத்துகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு)
ஊராட்சி தானியங்கி
தொகுசட்டமன்றத் தொகுதிகளில் தொடுப்புகளை நீக்க முடியுமா? நீக்கினால் உறுப்பினர் பெயர் காட்டும்.@Ravidreams: --Mdmahir (பேச்சு) 15:25, 9 நவம்பர் 2015 (UTC)
- இதுவரை சுமார் 1900 கட்டுரை தொடுப்போடு உருவாகிவிட்டது, இருவாரங்களுக்குப் பிறகு மீண்டும் இத்தானியங்கி ஏவப்படும் போது புதுப்பித்துக் கொள்ளப்படும். புதிய கட்டுரைகள் தற்போதைய தொடுப்பற்றே உருவாகிவருகிறது. ஒரே ஊராட்சிக்கு இரண்டு, மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு தொகுதி வார்ப்புருவை மாற்றுங்கள். மேலும் திருத்தங்களைத் தானியக்கம் முடியும் வரை பயனர்:Neechalkaran/மகாராஜபுரம் ஊராட்சியில் மாற்றவேண்டாம்.-நீச்சல்காரன் (பேச்சு)
- >>ஒரே ஊராட்சிக்கு இரண்டு, மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன<< இரண்டு கேள்விபட்டுள்ளேன். மூன்று தொகுதியாக பிரிக்கிறாங்களா? புதிய தகவல். :-)... சரி...--Mdmahir (பேச்சு) 15:49, 9 நவம்பர் 2015 (UTC)
- ஊனையூர் ஊராட்சியில் மூன்று தொகுதிகள் உள்ளன- விராலிமலை,மணப்பாறை,திருமயம்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:00, 9 நவம்பர் 2015 (UTC)
நுட்பத் தாரகைப் பதக்கம்
தொகுநுட்பத் தாரகைப் பதக்கம் | ||
நீச்சல்காரன், NeechalBOT மூலமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தாங்கள் அளித்து வரும் நுட்பச் சேவையின் உச்சமாக 10,000+ தமிழக ஊராட்சிகள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். இது தொடர்பாக விக்கிக்குப் பின்னணியிலும் தங்களின் அயரா உழைப்பையும் அறிவையும் திறனையும் நன்னோக்கையும் பொறுமையையும் கண்டு வியந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இது உங்களுக்கு என்றே சிறப்பாக அன்டன் உருவாக்கித் தந்த பதக்கம். அவருக்கும் நன்றி. இன்னும் பலர் உங்களைப் போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வர உந்துதலாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. .--இரவி (பேச்சு) 11:04, 11 நவம்பர் 2015 (UTC) |
- விருப்பம். வாழ்க உங்கள் பணி.--Kanags \உரையாடுக 11:24, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்.--பாஹிம் (பேச்சு) 11:37, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:02, 11 நவம்பர் 2015 (UTC)
- கட்டுரைகள் உருவாகும் வேகம் எனக்கு மாயாஜாலம் மாதிரி இருந்தது. தவியில் நுழைந்த பின் நான் காணும் முதல் தானியங்கி உருவாக்கும் திட்டம் என்பதால்மிகவும் வியப்பாகவும் மிரட்சியாகவும் இருந்தது. ’புதியன’ பட்டியல் அனுமார் வாலென நீண்டு கொண்டேயிருந்ததைக் காண்பது, இவ்வாண்டின் தீபாவளிப் பரிசாக எனக்கு இருந்தது. இந்த வெற்றிக்குக் முக்கியமான பங்களிப்பாளர்களான நீச்சல்காரன், இரவி, மேம்படுத்த முனைப்பாக ஆலோசனை வழங்கிப் பங்களித்த பயனர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். --Booradleyp1 (பேச்சு) 12:12, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். வாழ்த்துகள். உங்கள் உழைப்பு பல விக்கிபீடியா உபயோகிப்பாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 12:49, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். வாழ்த்துகள். --Mdmahir (பேச்சு) 12:55, 11 நவம்பர் 2015 (UTC)
- பாராட்டுக்கள் நீச்சல்காரன். தானியங்கி மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பல உதவிகள் செய்யும் உங்களுக்காக பதக்கம் வடிவமைத்ததில் மகிழ்ச்சி. NeechalBOT இற்கு அதன் மொழியிலே பதக்கத்தில் விருப்பம் உள்ளது. விருப்பத்தைத் தெரிவிக்கும் பச்சை நிறத்தின் பதினாறு அடி எண்ணின் (54AD69) இருமம் (10101001010110101101001) ஈஸ்டர் முட்டை முறையில் உள்ளது. --AntanO 13:19, 11 நவம்பர் 2015 (UTC)
- Antan, அடடா, அருமை :)--இரவி (பேச்சு) 08:16, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நன்றிகளும் பாராட்டுக்களும்............... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:42, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள்.--நிர்மல் (பேச்சு) 13:46, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் என் நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். --செல்வா (பேச்சு) 20:39, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நினைத்ததை நடத்தி முடிப்பவன் -வாழ்த்துகள்.--ஸ்ரீதர்
- விருப்பம் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்! --Chandravathanaa (பேச்சு) 14:34, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நண்பரே! தங்களது கடின உழைப்பையும் நுட்ப அறிவையும் கண்டு வியக்கிறேன்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:41, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் நீச்சல்காரன், மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும். --- மயூரநாதன் (பேச்சு) 17:43, 11 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம்; பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். அதிகமான கிராமங்களின் கட்டுரைகளை நான் உருவாக்கியுள்ளேன். அனைத்து ஊருக்கும் உருவாக்க எனது நீண்டநாள் அவா..... அதை நிறைவேற்றிய தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.--ஹிபாயத்துல்லா (பேச்சு) 12:45, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். பாராட்டுகள்! --சிவகோசரன் (பேச்சு) 15:59, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். மனம் நிறைந்த பாராட்டுக்கள். உங்களிடமிருந்து கற்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மீண்டும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.--கலை (பேச்சு) 17:57, 12 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம். என் நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். --செல்வா (பேச்சு) 20:41, 12 நவம்பர் 2015 (UTC)
- நுட்ப வித்தகருக்குப் பாராட்டுக்கள். --Natkeeran (பேச்சு) 20:57, 12 நவம்பர் 2015 (UTC)
- பாராட்டுக்கள், பாராட்டுக்கள்....--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:26, 13 நவம்பர் 2015 (UTC)
- மழை காரணமாக துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டபோது த.வியின் கட்டுரை எண்ணிக்கை 70,000இலிருந்து 80,000ஆக உயர்ந்திருந்தது ஆச்சரியத்தை அளித்தது; உள்ளே வந்து ஆய்ந்தால்தான் உங்கள் வியத்தகு சாதனை புரிந்தது. உங்கள் நுட்ப அறிவார்ந்த பங்களிப்பையும் இதனைக் குறித்த சமூக கருத்தொற்றுமையை ஒருங்கிணைத்த இரவியின் முயற்சிக்கும் பயனுள்ள பின்னூட்டங்கள் தந்து மேம்பாட்டிற்கு வழிவகுத்த உடன் பயனர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !! இத்தகைய அரும்பணி தொடரட்டும் !!--மணியன் (பேச்சு) 15:17, 13 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 16:37, 13 நவம்பர் 2015 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள். --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 16:45, 14 நவம்பர் 2015 (UTC)
- வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், பதக்கத்தை வடித்த அன்டன் மற்றும் வழங்கிய இரவிக்கும் நன்றி. அதே வேளையில் வேறு காரணங்களால் முழுப் பணியும் நிறைவு செய்யாது அரைகுறையாக இருப்பதால் தயக்கத்துடனே பதக்கத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறேன்-நீச்சல்காரன் (பேச்சு)
தானியங்கிக் கட்டுரையாக்க ஆவணமாக்கல்
தொகுவணக்கம். ஊராட்சிகள் தொடர்பான கட்டுரைகளைத் தானியக்கமாக ஏற்றியது குறித்த ஆவணமாக்கம் இருந்தால் தொடர்ந்து பல்வேறு பயனர்களும் பங்கெடுத்து இற்றைப்படுத்தலில் கலந்து கொள்ள முடியும். குறிப்பாக, இதற்குப் பயன்பட்ட தகவல் ஆதாரங்கள், நிரல் ஆகியனவும் கட்டற்ற முறையில் கிடைப்பது உதவும். கவனிக்க: @Sundar and Natkeeran:--இரவி (பேச்சு) 12:14, 8 திசம்பர் 2015 (UTC)
- கூகிள் நிரல்வழியாக எழுதியதால் அதில் கட்டற்றமுறையில் வெளியிடுவது சிறப்பாகாது. விக்கிஆய்வகம் போன்ற கட்டற்ற தளத்தில் தானியங்கி இயக்கும் முறையைக் கற்று அதன்பின்னர் அங்கே வெளியிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:20, 8 திசம்பர் 2015 (UTC)
- ஆம் இரவி. நாம் சிறிய குஉவாயிருப்பதால் வளங்களைச்சிதறவிடாமல் ஓரிடத்தில் சேர்த்துவைப்பது நலம். கிட்டுஃகப்பில் நமக்கொரு கணக்கைத்தொடங்கி விடலாம். அவரவர் தனியாகத்தொடங்கும் திட்டங்களை முதலில் அவரவர் விருப்பப்படி தங்கள் சொந்த கணக்கிலிருந்து வெளியிடலாம். அதை ஆக்குநர்சுட்டுடன் படியெடுக்கும் வசதியைப்பயன்படுத்தி பொதுக்கணக்கில் வைக்கலாம் (ஆக்குநர் விரும்பினால்). என்னுடைய சிற்றாக்கங்களை அவ்வழி வெளியிட அசியமாயுள்ளேன்.
- கூகுள் நிரலெனில் Go நிரல்மொழியா, நீச்சல்காரன்? -- சுந்தர் \பேச்சு 06:13, 13 திசம்பர் 2015 (UTC)
- கூகுள் குறு மொழி (Google Apps Script)? --AntanO 06:20, 13 திசம்பர் 2015 (UTC)
- நீச்சல்காரன், எந்த நிரலையும் கட்டற்ற முறையில் வெளியிடலாம். நிரல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது ஒரு பொருட்டன்று. இதில் ஏதேனும் தயக்கம் இருக்கும் எனில், குறைந்தபட்சம் இந்தத் தானியங்கி எப்படிச் செயற்பட்டது என்று முறையாக ஆவணப்படுத்தவாவது செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊர்கள் தொடர்பான தரவுகள் கொண்டுள்ள கூகுள் விரிதாளை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளதைப் போல, உரிய நிரல்கள், தரவுகள், கோப்புகளை கட்டற்ற முறையில் இல்லையென்றாலும் உரியவர்களுடன் தனிப்பட்ட முறையிலேனும் பகிர்ந்து கொள்வது நன்று. 10,000+ கட்டுரைகள் தொடர்புடையது என்பதால் இதன் இற்றை, பராமரிப்பு ஆகியவற்றை உங்களுடன் இணைந்து இன்னும் சிலரும் மேற்கொள்ள இது உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 04:47, 17 திசம்பர் 2015 (UTC)
- எனது தளத்தில் இருக்கும் கருவிகளை எல்லாம் ஒத்த கருத்துடையவருடன் பகிர்ந்தே வருகிறேன். விக்கி கருவிகளையும் அவ்வாறே கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் அறிந்த தகவல்உழவன் போன்றவருடன் பகிர்ந்தே வந்துள்ளேன். இதையும் பகிர்வதில் தடையில்லை. கட்டற்ற முறை என்ற கொள்கை திணிப்பிற்குத் தான் பொதுவாக எதிர்க்கிறேன். ஆகவே கட்டற்ற மென்பொருளைக் கற்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன் என்பதையே சுட்டிக்காட்ட விரும்பினேன். இதனை ஆவணம் ஆக்கத்தான் உள்ளேன். அரைகுறையாக ஆவணம் ஆக்கிப் பயனில்லை என்பதால் ஊராட்சிப் பெயர்களை அரசு மீண்டும் சரிபார்த்து வழங்கியபிறகு மீதியுள்ள கட்டுரையை ஏற்றிவிட்டு பின்னர் உருவாக்குகிறேன்.
- நீச்சல்காரன், எந்த நிரலையும் கட்டற்ற முறையில் வெளியிடலாம். நிரல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது ஒரு பொருட்டன்று. இதில் ஏதேனும் தயக்கம் இருக்கும் எனில், குறைந்தபட்சம் இந்தத் தானியங்கி எப்படிச் செயற்பட்டது என்று முறையாக ஆவணப்படுத்தவாவது செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊர்கள் தொடர்பான தரவுகள் கொண்டுள்ள கூகுள் விரிதாளை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளதைப் போல, உரிய நிரல்கள், தரவுகள், கோப்புகளை கட்டற்ற முறையில் இல்லையென்றாலும் உரியவர்களுடன் தனிப்பட்ட முறையிலேனும் பகிர்ந்து கொள்வது நன்று. 10,000+ கட்டுரைகள் தொடர்புடையது என்பதால் இதன் இற்றை, பராமரிப்பு ஆகியவற்றை உங்களுடன் இணைந்து இன்னும் சிலரும் மேற்கொள்ள இது உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 04:47, 17 திசம்பர் 2015 (UTC)
- சரி, நீச்சல்காரன். கட்டற்ற செயற்பாடு என்பது, கட்டுரைகளில் நடுநிலை நோக்கு போல விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. எனவே, இதில் தனிப்பட்ட சிலரின் கொள்கைத் திணிப்பு என்று ஏதும் இல்லை. எனினும், கட்டற்ற மென்பொருள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நன்கு அறிவேன் என்பதால் தான் தனிப்பட்ட முறையிலேனும் பகிர்ந்து கொள்ள வேண்டினேன். தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை இற்றைப்படுத்துவதில் தொடர்ச்சியைப் பேணுவது மட்டுமே ஒரே நோக்கம். எதிர்வரும் விக்கிப்பீடியர் நுட்பத் திறன்கள் பயிற்சி மூலமாகவோ வேறு வழிகளிலோ விக்கிஆய்வகம் போன்ற நுட்பங்களில் தமிழ் விக்கிப்பீடியர் பயிற்சி பெற வழி செய்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:07, 17 திசம்பர் 2015 (UTC)
- ஆவணப்படுத்தல் என்பது வழிமுறைகளைப் பற்றியதே. எனவே, முழுமையாகத் திருத்திய தரவு கிடைக்கும் வரும் காத்திருக்க வேண்டும் என்றில்லை. ஆவணத்தை அவ்வப்போது இற்றைப்படுத்தி வருவதும் வழமையே. நம்முடைய முயற்சி குறித்து அறிந்து, பயன்படுத்த மற்ற பல விக்கிப்பீடியர்களும் விக்கிமீடியா அறக்கட்டளையும் கூட ஆர்வம் காட்டி வருகிறது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:28, 17 திசம்பர் 2015 (UTC)
- கட்டுரையாக்கத்திற்காக எழுதிய நிரல்களைக் கட்டற்றமுறையில் வெளியிட்டுள்ளேன். https://github.com/neechalkaran/Panchayat பிழைநீக்கம், ஒழுங்குபடுத்தல், சோதனை ஆகிவற்றை எனது காப்புரிமை கொண்ட இதர செயலிகளால் சுயவிருப்பத்தில் செய்ததால் அவற்றை வெளியிடமுடியாத சூழலில் உள்ளேன். தானியக்கத்தில் கட்டற்றமுறை என்ற கொள்கை திணிப்பிற்கு உடன்படாததால் தொடர்ந்து தானியக்கக் கட்டுரையோ, தொடர் இற்றையோ செய்யமுடியாத சூழலில் உள்ளேன். புரிந்துகொண்டதற்கு நன்றி -நீச்சல்காரன் (பேச்சு)
thanks for opening the article thirumalairayan river in tamil . but yo wrote with lots of mistake .therefore i will edit it
கவனிக்கவும்...!
தொகுஇங்கு கவனித்து உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 14 பெப்ரவரி 2016 (UTC)
- இந்தப் பக்கம் விக்கிமூலத்தில் இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 05:10, 13 மார்ச் 2016 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெறுவதையிட்டு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! --AntanO 02:41, 19 சூன் 2016 (UTC)
- பாராட்டுகள்; மேன்மேலும் சிறப்பு பெற உளங்கனிந்த வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 19 சூன் 2016 (UTC)
- வாழ்த்துகள் நண்பரே. தற்போது முனைந்திருக்கும் தானியங்கிக் கட்டுரையாக்கம் முயற்சியில் வெற்றி கண்டு. தமிழுக்கு பல்லாண்டு தொண்டாற்ற வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:31, 19 சூன் 2016 (UTC)
- நீச்சல்காரன், தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 05:12, 19 சூன் 2016 (UTC)
- பாராட்டுக்கள் !! இணையத்தில் உங்களது தமிழ் இலக்கணத் துணைக் கருவிகளும் தமிழ் விக்கிக்கான நுட்பம் சார்ந்த பங்காற்றலும் தமிழ் கணிமையில் மைல்கற்களாக என்றும் உங்கள் பெயரை நிலைநிறுத்தும். முற்றிலும் தகுதியுடைய உங்களுக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்படுவது மிகவும் மெச்சத்தகுந்தது. மேன்மேலும் பல சிறப்புகளை எய்திட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 13:31, 19 சூன் 2016 (UTC)
- மனமார்ந்த வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:21, 20 சூன் 2016 (UTC)
வாழ்த்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:03, 20 சூன் 2016 (UTC) மேன்மேலும் சிறந்து விளங்கி தமிழுக்குப் புதியன சேர்க்க வேண்டும்.வாழ்த்துகிறேன்.--171.49.220.141 05:59, 21 சூன் 2016 (UTC
மேன்மேலும் சிறந்து விளங்கி தமிழுக்குப் புதியன சேர்க்க வேண்டும்.வாழ்த்துகிறேன்.--Semmal50 (பேச்சு) 06:02, 21 சூன் 2016 (UTC)
- பெருமகிழ்ச்சி. வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 18:19, 21 சூன் 2016 (UTC)
வாழ்த்துகள்!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:32, 17 சூலை 2016 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
உதவி தேவை
தொகுவணக்கம்! விக்கி மாரத்தான் 2016 நிகழ்வு, சூலை 31 அன்று நடக்கவிருக்கிறது. 2015 நிகழ்வின்போது தாங்கள் இயக்கியது போன்று இம்முறையும் தானியங்கியை இயக்கி, உதவ வேண்டுகிறேன்.
- பார்வைக்கு:
- விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/வளர்ச்சி புள்ளிவிவரம்
- விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(18)
- விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(19)
- விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015/பயனர் புள்ளிவிவரம்(20)
- கடந்த ஆண்டில் நடந்த உரையாடல் பற்றி அறிய: பயனர் பேச்சு:Neechalkaran#உதவி...
- புள்ளிவிவரங்கள் குறித்தான தேவைகளில் ஏதேனும் மாற்றமிருப்பின், விரைவில் தெரிவிக்கிறேன்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 26 சூலை 2016 (UTC)
- சரி, சனியன்றே தானியங்கியை ஏவிவிடுகிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 04:54, 27 சூலை 2016 (UTC)
- அருமை. மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 05:59, 27 சூலை 2016 (UTC)
நினைவூட்டல்
தொகுசூலை 30 00:00 UTC நேரத்திலிருந்து உங்களின் தானியங்கி தனது வேலையை ஆரம்பிக்க வேண்டும்! (அதாவது இந்திய நேரம் காலை 5.30 மணி) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:38, 29 சூலை 2016 (UTC)
ஆகத்து 1 18:00 UTC நேரம் வரை தானியங்கி பணியாற்ற வேண்டும். (அதாவது இந்திய நேரம் இரவு 11.30 மணி). இவ்விதம் இயங்கினால், தேவைப்படும் தரவுகளை நாம் எடுத்துக் கொள்ள இயலும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:55, 29 சூலை 2016 (UTC)
வேண்டுகோள்
தொகுஉங்களின் தானியங்கி தனது வேலையை ஆரம்பித்துவிட்டதா? புள்ளிவிவரங்கள் தெரியும் பக்கங்கள் எவையென்பதை அறியத் தாருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:36, 30 சூலை 2016 (UTC)
- இங்கு விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/வளர்ச்சி புள்ளிவிவரம், விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(30), விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(31), விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2016/பயனர் புள்ளிவிவரம்(1) என இற்றை செய்யப்படும் -நீச்சல்காரன் (பேச்சு)
இங்கு கவனித்து, உரியன செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 1 ஆகத்து 2016 (UTC)
இரண்டு கோரிக்கைகள்
தொகு1: சிவப்பு இணைப்புகள்
சிவப்பு இணைப்புள்ள கட்டுரைகளின் பட்டியல் தேவை சகோ. தானியங்கி கொண்டு செய்ய இயலுமா? பல கட்டுரைகளில் ஆங்கில விக்கியில் இருந்து எடுத்த ஆதாரங்கள், ஆங்கில விக்கியின் உள்ளிணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடைய பட்டியல் தயாரிக்க இயலுமா? அவ்வாறு பட்டியல் தயாரித்தால்,
- தானியங்கி உதவியுடன் முடிந்தவற்றை மொழிபெயர்ப்பு கொண்டு மாற்றலாம்.
- தேவையற்ற இணைப்புகளை நீக்கி விடலாம்.
2: தானியங்கி கட்டுரைகள்
இந்த இணைப்பில் தேவைப்படும் கட்டுரைகள் என்ற தலைப்பில், தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகள் ஆனால் அதிகம் பயன்படுத்தப்பட்ட தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் பல ஊராட்சிகள் குறித்த கட்டுரைகள் தேவையென உள்ளது, இன்னும் தரவேற்றம் நடந்து வருகின்றனவா? இக்கட்டுரைகளிலும் சில மாறுபாடு செய்ய வேண்டியுள்ளது, எடுத்துக்காட்டாக அன்புமணி இராமதாசு என்ற பெயர் தானியங்கி கட்டுரைகளில் உள்ளது; அன்புமணி ராமதாஸ் என்ற பெயரில் கட்டுரை உள்ளது. தானியங்கி கட்டுரைகளுக்கான தரவில் இதுபோன்று சரிபார்த்து ஒரே பெயரில் மாற்ற முடியுமா?
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:19, 24 அக்டோபர் 2016 (UTC)
- @1: சிவப்பிணைப்பு ஏறக்குறைய பாதிக்குப்பாதி கட்டுரைகளில் இருக்கும். நீங்கள் எதை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று உதாரணங்களைக் காட்டவும்.
- @2: அங்குள்ள ஊராட்சிக் கட்டுரைகள் எல்லாம் வார்ப்புருவில் இருப்பதால் காட்டுகின்றன. சுமார் இரண்டாயிரம் ஊராட்சிகள் பற்றிய தகவகள் சரிபார்க்கப்படவேண்டும் என்பதால் ஏற்றவில்லை. அன்புமணி இராமதாசு என்று கட்டுரையில் இருப்பவையும் வார்ப்புருவின் தகவலே. வார்ப்புருவைத்தான் திருத்திக் கொள்ளவேண்டும் கட்டுரையையல்ல. அன்புடன் -நீச்சல்காரன் (பேச்சு) 01:53, 24 அக்டோபர் 2016 (UTC)
- ஆங்கிலத்தில் உள்ள சிவப்பு இணைப்புகளின் பட்டியல் தேவை. எ.கா. Times of India, Prime Minister's Office (India) போன்றவை. பட்டியலிட்ட பின் தானியங்கி உதவியுடன் முடிந்தவற்றை மொழிபெயர்ப்பு கொண்டு மாற்றலாம், தேவையற்ற இணைப்புகளை நீக்கலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:02, 24 அக்டோபர் 2016 (UTC)
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு
தொகுவணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)
உதவி
தொகுதமிழ் விக்கியில் இடம்பெறவுள்ள விக்கித்திட்டப்போட்டி தொடர்பாக தொடர்பங்களிப்பாளர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட செய்தி ஒன்றை கொண்டு செல்ல இயலுமா? மேலும் புதுப்பயனர்களுக்கு மட்டும் பிறிதொருரு செய்தியை கொண்டுசெல்ல முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 28 பெப்ரவரி 2017 (UTC)
- @Shriheeran: http://apps.neechalkaran.com/appswiki என்ற தானியங்கி இயக்கியைப் பயன்படுத்தலாம். உங்கள் கூகிள் கணக்கின் வழியாக அணுக்கத்தை வழங்கி, உங்களின் தானியங்கிக் கணக்கான ShriheeranBOT மூலம் நுழைந்து, நீங்களே வேண்டிய பக்கங்களுக்கு அச்செய்தியைப் போடமுடியும். இல்லாவிட்டால் செய்தியைக் கூறவும், நானே இடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:18, 1 மார்ச் 2017 (UTC)
- தங்களை ஒருங்கிணைப்புக்குழுவில் அறிவிப்பாளராக இணைத்துள்ளேன். மேலும் இங்கு உள்ள விடயத்தினை அனைத்து தொடர்பங்களிப்பாளர்களுக்கும் பேச்சுப் பக்கத்தில் இட்டுவிடுங்கள்! மேலும் தொடர்பங்களிப்பாளர் பட்டியலில் இல்லாத முன்னாள் தொடர்பங்களிப்பாளர்களுக்கும் இடமுடியுமெனில் இடுங்கள் நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:10, 5 மார்ச் 2017 (UTC)
- நான் இங்கு செய்த மாற்றத்தை அவதானித்தீர்களா? எனினும் இங்கு == தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு == என்பது சரியான வடிவில் வரவில்லை. நான் ஒரு சில பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளேன். ஏனையோரது பேச்சுப்பக்கத்தில் தாங்களாகவே அழைப்பு விடுக்க வேண்டுகின்றேன். நன்றி! மேலும் தாங்கள் மேலே குறிப்பீட்ட இணைப்பில் எனது தானியங்கிக் கணக்குப் பெயர் லொக் இன் ஆகவில்லை. ஏன்?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:01, 5 மார்ச் 2017 (UTC)
இப்போது இடுங்கள் அண்ணா! நான் ஒருசிலருக்கு இட்டுவிட்டேன். நான் இட்டவர்களை பங்களிப்புப்பக்கத்தில் பார்த்துத் தவிருங்கள்! மற்றையோருக்கு இடுங்கள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:31, 5 மார்ச் 2017 (UTC)
- @Shriheeran:வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அழைப்பு என்ற பக்கத்தை உருவாக்கியுள்ளேன். அதில் திருத்தம் வேண்டுமென்றாலும் எப்போதும் செய்யலாம். 50 தொகுப்பிற்கு மேல் செய்துள்ள முனைப்பான பயனர்கள் சிலருக்கு இட்டுள்ளேன். ஏற்புடையதென்றால் மீதிபயனர்களுக்கும் இட்டுவிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 6 மார்ச் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
9 மாதங்கள்
2017 ஏப்ரல்-டிசம்பர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
கோயில் கட்டுரைகள் சோதனை ஓட்டம் வேண்டல்
தொகுகோயில் கட்டுரைகள் தொடர்பான சோதனை ஓட்டம் வேண்டுகிறேன். ஒரு சில கட்டுரைகள் போதுமானதாக இருக்கும். கோயில்/கோவில் மாற்றம், அருள்மிகு தொடர்பான மாற்றம் மட்டும் சோதனை ஓட்டத்துக்குப் போதுமானது. எடுத்துக்காட்டுக்கு, இந்த மாற்றத்தைக் காண்க. தொடர்புடைய வார்ப்புருவில் இதே போன்று செய்ய வேண்டிய மாற்றம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஊர்கள் பெயர்களுக்கு உள்ளிணைப்பு தருவது போன்று வேண்டிய புதிய மேம்பாடுகள் அனைத்தையும் உடனே செய்ய வேண்டும் என்றில்லை. படிப்படியாக அடுத்த ஓட்டங்களில் கூடச் செய்யலாம். படி: @Thamizhpparithi Maari:--இரவி (பேச்சு) 14:50, 5 மார்ச் 2017 (UTC)
- தகவல் பெட்டியில் கோவில் என்ற சொல் இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 07:43, 6 மார்ச் 2017 (UTC)
வேண்டுகோள்
தொகுஇங்குள்ள குறிப்பைக் கவனியுங்கள். தொடர்ந்து பல கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட எழுத்துப் பிழையுடன் (சட்டப்படிப்படி -> சட்டப்படி) பதிவேறி வருகின்றன. இதனை மட்டும் திருத்தி பதிவேற்றத்தைத் தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 22:00, 7 ஏப்ரல் 2017 (UTC)
சந்தேகம்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை இலகுவாக உருவாக்குவதற்கு ஏதேனும் கருவிகள் உள்ளதா? எடுத்துக்காட்டாக ஒரு சில தரவுகளை உட்புகுத்தும் போது அவற்றையெல்லாம் தொகுத்து தானாகவே வாக்கியங்களை அமைப்பது போன்ற கருவி. இவ்வாறான ஒரு கருவி இடங்கள் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்கள் தொடர்பான எழுதப்படாத கட்டுரைகளினை உருவாக்க உதவும். மேலும் இவற்றைத் தானியங்கிகள் கொண்டும் செய்யலாம் என எண்ணுகின்றேன். எனினும், அனைத்தையும் தானியங்கியினைக் கொண்டு செய்வது நல்லதல்ல. ஆகவே, இவாறான கருவிகளை உருவாக்கிதர விருப்பம். ஏற்கனவே அவ்வாறு உள்ளதாயின் அறியத்தாருங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:28, 12 ஏப்ரல் 2017 (UTC)
- நான் அறிந்தவரை அவ்வாறு பொதுவான கருவிகள் இல்லை. அவ்வாறு கருவிகள் அமைப்பதும் பொதுப்பயனர்களுக்கு எவ்வகையில் உதவும் என்ற ஐயமுள்ளது. ஒவ்வொரு தேவையும் தனித்தன்மையாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் உருவாக்க விரும்புவதை வரவேற்கிறேன். விக்கித்தரவை மையமாகக் கொண்டு உருவாக்குவது எதிர்காலத்தின் தேவை-நீச்சல்காரன் (பேச்சு)
- பொதுவாக அன்றி பிரத்தியேகமாக வடிவமைத்து உள்ளார்களா? மேலும், அவ்வாறான ஒரு கருவியை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உருவாக்கித் தருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? அத்துடன், இவ்வாறான கருவிகள், பல நபர்கள், இடங்கள், திரைப்படங்கள், அதிகள், மலைகள் எனப்பொதுவான பல கட்டுரைகளையும் உருவாக்க உதவும். கருவியின் இடைமுகம்ம், தரவுகளை உள்வாங்குவதாகவும், குறிப்பாக பெயர்:_______ வயது:_______ என வினவுவதாகவும் அமையலாம். மேலும் தரவுகளைத் தொகுத்து எலிய வாக்கியங்களை அமைக்கும் ஆற்றல் இருக்கவேண்டும். இது எவ்வளவு சாத்தியமானது? இவ்வாறான கருவிகள் தானியங்கிக் கட்டுரைகளின் பரவலைத் தடுக்கவும், கட்டுரைகளின் என்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும். தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:27, 13 ஏப்ரல் 2017 (UTC)
கோயில் கட்டுரைகள் பதிவேற்றம்
தொகுவணக்கம் நீச்சல்காரன். கோயில் கட்டுரைகள் பதிவேற்றத்தைக் காண மிக்க மகிழ்ச்சி. ஒரு சிறு நினைவூட்டல்/வேண்டுகோள்: கட்டுரை எண்ணிக்கை 99,500 அடையும் போது தானியங்கி ஓட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுகிறேன். 1,00,000 வரையிலான 500 கட்டுரைகளைப் பயனர்கள் வழமை போல் எழுதிப் பதிவேற்றி அச்சாதனையைக் கொண்டாடிய பிறகு, தொடர்ந்து தானியங்கியை ஓட்டலாம். நன்றி. --இரவி (பேச்சு) 19:38, 17 ஏப்ரல் 2017 (UTC)
- விருப்பம், கொண்டாட்டத்திற்கென ஒரு லோகோ அமைக்க வேண்டாமா? @Ravidreams and AntanO:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:57, 18 ஏப்ரல் 2017 (UTC)
- மேலும் Mediawiki sitenoticeஇல் தமிழ் விக்கிப்பீடியாவின் 100,000 ஆவது கட்டுரையை உருவாக்குவதற்கு விரையுங்கள்! எனும் சுலோகத்தையும் இடலாமா? உதவுக @AntanO, Ravidreams, Kanags, Mayooranathan, and Nan:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:03, 18 ஏப்ரல் 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு
தொகுஅருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:13, 26 ஏப்ரல் 2017 (UTC)
உதவி
தொகுதாங்கள் பயன்படுத்தும் தானியங்கிக்கான மொழி, மற்றும் எவ்வாறு கட்டுரைகளைத் தானியங்கி கொண்டு உருவாக்குவது என்பதை ஒவ்வொரு படிமுறையாக விளக்க முடியுமா? விரும்பின் எனது மின்னஞ்சலான shriheeran@gmail.comஇற்கும் கூறலாம். அருள்கூர்ந்து தங்கள் பதிலை இட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 28 ஏப்ரல் 2017 (UTC)
எரித நடவடிக்கைகள் தடுக்கப்படல்
தொகுமுதற்கண் தங்கள் சேவைகளுக்கு (இணையம் எனும் ஆழ்கடலில் நீச்சலடிக்கும் சேவைகளுக்கும்) நன்றி. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#விசமத் தொகுப்பு எனும் பகுதியைக் கவனித்தால் நன் தங்களிடம் என்ன உதவி கேட்கின்றேன் என்பது புலப்படும். எரிதப் பதிவுகளை தன்னிச்சையாக அடையாளம் கண்டு தடை செய்யும் வழி அல்லது நிருவாகிகளுக்கு அல்லது அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும் வழியை இங்கு மேற்கொள்ளமுடியுமா?--☤சி.செந்தி☤ (உரையாடுக) 17:03, 1 மே 2017 (UTC)
- @Drsrisenthil:எரிதப் பதிவுகளை தன்னிச்சையாக அடையாளம் காண்பது கடினம். இங்கு லட்சம் அடையும் வேளையில் மட்டுமே இந்த சிக்கல் வந்தது என நினைக்கிறேன், விசமத் தொகுப்புகள் பற்றி அதிகம் கண்காணித்தது இல்லை என்பதால் நீங்கள் பார்த்த சிக்கல்கள் எனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் கணிப்பதற்கு ஏதேனும் நிலையான வழிமுறையை உருவாக்க முடிந்தால் அவற்றைக் கொண்டு கண்காணிப்புத் தானியக்கத்தை உருவாக்கமுடியும். "ஒவ்வொரு 15 நிமிடத்தில் உறுதிசெய்யப்படாத ஒரு பயனர் ஐந்துக்குமேல் பொதுவெளியில் புதிய பக்கத்தைத் தொடங்கினால் அதை இவர்களுக்கு மின்னஞ்சல் செய்" என்றோ அல்லது "தமிழில்லாமல் பிறமொழியில் தலைப்புடன் கட்டுரை உருவானால் அதை உடனே இந்த வார்ப்புரு இடு" என்றோ "ஒரே பயனர் தொடர்ச்சியாக பத்திற்கும் மேல் புதுக் கட்டுரையை உருவாக்கினால் இவர்கள் பேச்சுப்பக்கத்தில் கருத்திடு" என்பது போல எரிதப் பதிவுகளை அடையாளம் காண வழிமுறைகளை உருவாக்கினால்தான் உண்டு.-நீச்சல்காரன் (பேச்சு)
- நன்றி நீச்சல்காரன். "ஒரே IP (V4 or V6) பயனர் (மிக முக்கியம் அது ஐ.பி பயனராக இருத்தல்) தொடர்ச்சியாக ஒரு நிமிடத்துள் நான்கு தொடக்கம் ஏழு வரையிலான புதுக் கட்டுரையை உருவாக்கினால் அவ்வாறு உருவாக்கிய கட்டுரைகளை நீக்குதல் அல்லது நிருவாகிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்தல்". இவ்வாறு உருவாக்க முடியுமா? இதில் IPயைத் தடுப்பதையும் இணைக்கலாம் (அதற்குரிய அணுக்கம் கிடைக்குமாயின்). இங்கு இணைத்த படத்தைப் பாருங்கள். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:02, 4 மே 2017 (UTC)
- நல்லது. தாராளமாக உருவாக்கலாம். தானியங்கிக்கு நீக்கல் அணுக்கல் கிடைக்காது, நான் விண்ணப்பித்து நீக்கல் அணுக்கம் பெற்றாலும், அதைத் தானியக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. எனவே தற்போதைய விதிமுறைகளின் படி மின்னஞ்சல் செய்யலாம். இதற்கான கருவியைச் செய்துவிட்டு யாருக்கெல்லாம் மின்னஞ்சல் செய்யலாம் என்று விவாதிக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 03:06, 4 மே 2017 (UTC)
- நன்றி நீச்சல்காரன். "ஒரே IP (V4 or V6) பயனர் (மிக முக்கியம் அது ஐ.பி பயனராக இருத்தல்) தொடர்ச்சியாக ஒரு நிமிடத்துள் நான்கு தொடக்கம் ஏழு வரையிலான புதுக் கட்டுரையை உருவாக்கினால் அவ்வாறு உருவாக்கிய கட்டுரைகளை நீக்குதல் அல்லது நிருவாகிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்தல்". இவ்வாறு உருவாக்க முடியுமா? இதில் IPயைத் தடுப்பதையும் இணைக்கலாம் (அதற்குரிய அணுக்கம் கிடைக்குமாயின்). இங்கு இணைத்த படத்தைப் பாருங்கள். --☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:02, 4 மே 2017 (UTC)
- மிக்க நன்றி, தற்போது (இக்கணம்) கூட அன்ரன் இவ்வகைப் பதிவுகளை நீக்கி இருப்பதை அண்மைய மாற்றங்களில் காணலாம். இது ஒரே வகைப் பதிவுகள். cookies பயன்படுத்தித் தடை செய்யலாம் என்று ஆ.வியில் எங்கோ வாசித்தமாதிரி உள்ளது. --☤சி.செந்தி☤ (உரையாடுக) 03:10, 4 மே 2017 (UTC)
- விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#ஐ.பி பயனர் கட்டுரை உருவாக்கம் - இதனையும் கவனியுங்கள்.--AntanO 03:17, 4 மே 2017 (UTC)
தொடர்.பங்.போ:உதவி
தொகு- இப்பட்டியலை Update செய்து வரும் yerpo என்பவரிடம் போட்டிக்காக விரிவாக்க வேண்டிய குறுங்கட்டுரைகளின் பட்டியலைக் "As we are using the list that you gave, it is very necessary to know that which are stubs. If you wish, you can tell me how to run the script to create the list of stubs." இவ்வாறு கேட்டேன். மார்ச் 5 அன்று ஒன்றை அவர் uருவாக்கித் தந்தார். மீண்டும் (இன்று) கேட்ட போது இவ்வாறு கூறினார், // I put the latest score for tawiki on Google Docs, so you can download. The values there are raw character counts, so you have to multiply each by 0.9 to get the real result.
- Of course you can also run the script yourself and get resuts that are more nicely formatted; it's published at meta:List of Wikipedias by sample of articles/Source code. It allows selecting only one language, but you'll have to change the code so it shows more than 100 stubs. First, you need to install Python 2.7.x on your computer (it won't work on 3.6.x), then Pywikibot and all the other modules that the script needs. Basic instructions are here, for other modules you will have to figure it out yourself - it depends on what system you have and I'm not able to provide tech support. // எனவே இதில் தங்களால் உதவ முடியுமா? நான் பைவிக்கிபொட்டை டவுன்லோட் செய்தும் அத்னை Configure செய்ய முடியாது தவிக்கின்ரேன். விரும்பின் இதிலும் எனக்கு உதவலாம், உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அருள்கூர்ந்து உதவி செய்தருளுங்கள் அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:04, 6 மே 2017 (UTC)
- கவனிக்க, @Info-farmer and Aswn:
அத்துடன் கட்டுரைப் பட்டியல் ஒன்றில் கட்டுரைகளுக்கு அருகில் அவற்றின் Characters எண்ணிகையை அருகில் இட்டு, அவ்வெண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் / அல்லது ஒவ்வொரு ஐந்து மணித்தியாலங்களுக்கும் புதுப்பித்து வரலாமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:44, 6 மே 2017 (UTC)
@Info-farmer and Aswn:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:58, 7 மே 2017 (UTC)
- @Shriheeran:தற்போதைக்கு விக்கித்தரவு பட்டியல் மட்டும் தயார் நிலையில் உள்ளது. பார்க்க விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/மணல்தொட்டி. கட்டுரை அளவினை சேர்க்க முயல்கிறேன் --அஸ்வின் (பேச்சு) 10:20, 7 மே 2017 (UTC)
- @Aswn: இவ்வாறு ஒவ்வொரு நாளும் Update செய்ய முடியாதா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:25, 7 மே 2017 (UTC)
- @Shriheeran: புதுப்பிக்கலாம். --அஸ்வின் (பேச்சு) 10:31, 7 மே 2017 (UTC)
- @Aswn: நன்றி, முடியுமானால் 12 மணிக்கொருமுறை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:34, 7 மே 2017 (UTC)
- @Shriheeran: புதுப்பிக்கலாம். --அஸ்வின் (பேச்சு) 10:31, 7 மே 2017 (UTC)
- @Aswn: இவ்வாறு ஒவ்வொரு நாளும் Update செய்ய முடியாதா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:25, 7 மே 2017 (UTC)
- @Shriheeran: ஆயிற்று. கட்டுரை நீளமும் சேர்த்தாயிற்று. 00:00 UTC மற்றும் 12:00 UTC நேரத்தில் புதுப்பிக்கப்படும். --அஸ்வின் (பேச்சு) 12:29, 7 மே 2017 (UTC)
- @Aswn:, நன்றிகள் ஏராளம், இதை போட்டிக்கான ஓர் சுட்டியாக வைத்து நம்மை நாமே வளர்க்கலாம், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:30, 7 மே 2017 (UTC)
கோயில் கட்டுரைகள் பதிவேற்றத்தைத் தொடரலாம்
தொகுவணக்கம். 1,00,000 கட்டுரைகள் இலக்கை எட்டியுள்ள நிலையில் மீண்டும் கோயில்கள் கட்டுரைப் பதிவேற்றத்தைத் தொடரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:14, 9 மே 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
தொகுஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:36, 20 சூன் 2017 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! கல்லூரணி ஊராட்சி எனும் கட்டுரையைப் பாருங்கள். சான்றுகள் எனும் துணைத் தலைப்பின்கீழ் வார்ப்புருப் பட்டியல் தோன்றி, அதற்குக் கீழ்தான் சான்றுகள் தெரிகின்றன. இது போன்று வேறு சில கட்டுரைகளிலும் பிரச்சனை இருக்கிறது. என்னவென்று பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 11 சூலை 2017 (UTC)
பெரும்பாலான பிற கட்டுரைகளிலும் இப்பிரச்சனை உள்ளது. இது ஒரு வழுவாக இருக்கக்கூடும். சரியானதும் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 11 சூலை 2017 (UTC)