பயனர் பேச்சு:Neechalkaran/தொகுப்பு 1
|
---|
1 2 3 |
தொகுப்பு ஒன்று:
வரவேற்பு
தொகுவாருங்கள், Neechalkaran/தொகுப்பு 1! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
--தேனி.எம்.சுப்பிரமணி. 17:04, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
பாராட்டுகள்
தொகுஅன்புள்ள நீச்சல்காரன், பயனுள்ள பல கட்டுரைகளை விரிவாக எழுதி வருகிறீர்கள். என உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி--இரவி 04:59, 20 சனவரி 2012 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
பல முதன்மையான தலைப்புக்களில் நல்ல பல கட்டுரைகளை வழங்கியுள்ள உங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 10:15, 4 பெப்ரவரி 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பாதி ஆங்கிலம் வேண்டாமே
தொகுநீங்கள் உருவாக்கிய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களில் நாடுகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் அவ்வார்ப்புருக்களை நீக்கியிருக்கிறேன். முடிந்தவரை தமிழாக்கம் செய்யலாம். பாதியில் ஆங்கிலம் இருந்தால், பிற்காலத்தில் முற்றிலும் தமிழாக்கம் செய்வதில் பராமரிப்பு பணி அதிகமாகலாம். தமிழ் விக்கியில் தொடர்ந்து நீந்துங்கள். நன்றி -- மாகிர் (பேச்சு) 15:13, 20 மார்ச் 2012 (UTC)
நீச்சல்காரன், நீங்கள் உருவாக்கிய தமிழ் விக்கி மாற்றி கருவியைச் சோதித்துப் பார்த்தேன். மிகவும் அருமை. மிகவும் பயனுள்ளது. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 09:48, 31 மார்ச் 2012 (UTC)
கலைச்சொல் ஒத்தாசை
தொகுகலைச்சொல் உதவிகளுக்கு கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தை நாடலாம்--இரவி (பேச்சு) 10:03, 3 ஏப்ரல் 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
தொகுஉங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நீச்சல்காரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 18:29, 15 மே 2012 (UTC)
- நன்றி இரவி. ஆனால் மன்னிக்கவும். முதற்பக்கத்தில் அறிமுகம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.--நீச்சல்காரன் (பேச்சு) 00:36, 16 மே 2012 (UTC)
சரி, நீச்சல்காரன். உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து எப்போதும் போல் பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:32, 16 மே 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த பச்சை அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வெள்ளை அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தாராளமயமாக்கல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தலா வருமானம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 6, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வாழை இலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 20, 2012 அன்று வெளியானது. |
விலகல் ஏன்?
தொகுநண்பரே, திடீரென்று விக்கிப் பங்களிப்பிலிருந்து விலகுவதாக தங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் ”பகுப்பு: விலகிய பயனர்கள்” என்று ஒரு புதிய பகுப்பையும் தொடங்கியுள்ளீர்கள். தங்களது மனக்குறைக்கு என்ன காரணமோ? தாங்கள் மனக்குறை தீர்ந்த பின்பு அல்லது மீண்டும் விரும்பும் போது விக்கிக்கு மீண்டும் பங்களிக்க வரலாம். தற்போதைய நிலையில் தாங்கள் தொடங்கிய பகுப்பு நீக்கம் செய்யப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:39, 1 சூன் 2012 (UTC)
- நீச்சல்காரன், தங்கள் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 02:18, 1 சூன் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சித்தமிழ் நடையில் தேர்ச்சியில்லாததால் புதிய எழுத்துப்பங்களிப்பை இப்பயனர் தமிழ்விக்கியில் நிறுத்திவிட்டார்.
- என்ற உங்களின் அறிவிப்பைப் பார்த்தேன். இவ்வாறு பயனர்கள் விலகியிருப்பதால் தான் மாற்றங்களற்று இருக்கிறது என் கருத்து. மாற்றம் வேண்டுமெனில் பங்களித்து, உரையாடி தீர்வுகளைக் காண வேண்டும். மாற்றங்களுக்கு கால தாமதமாகலாம், ஆனால் விலகிச் செல்வதால் பயனில்லை. விக்கிப்பீடியா_பேச்சு:சொல்_தேர்வு பக்கத்தில் நீங்கள் ஒரு உரையாடலை "தொடங்கியுள்ளீர்கள்", அது நிறைவடய பல நாட்களாகலாம், பாதியில் விலகிச் செல்வது உதவாது. உங்கள் முடிவை மாற்றிக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 05:31, 1 சூன் 2012 (UTC)
- வணக்கம் நீச்சல்காரன், உங்களிடம் எனக்கு அதிக அறிமுகமில்லை, ஆயினும், நீங்கள் தொடங்கிய / மேம்படுத்திய கட்டுரைகள், பங்கு பெற்ற உரையாடல்கள், ஆகியவற்றை படித்திருக்கிறேன். உங்களுடைய பங்களிப்புகள் அருமையாகவும் அசத்தலாகவும் செல்லும் இவ்வேளையில் திடீரென்று தன்னாட்சித்தமிழ் நடையில் தேர்ச்சியில்லாததால் என்று குறிப்பிட்டு விலக முடிவெடுத்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
- கருத்துகள் ஒருவொருக்கொருவர் மாறுபடலாம், நாளையோ அல்லது இன்னும் சில நாட்களிலோ, அல்லது மாதங்களிலோ மாற்றம் வரலாம். கண்டிப்பாக மாற்றம் என்பது வந்தே தீரும். இவ்வாறான சிற்சில கருத்து வேறுபாட்டினால், உங்களுடைய அருமையான கட்டுரையாக்கம் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போய்விடும். திரும்பவும் பழைய முறையில் உங்களுடைய கட்டுரையாக்கங்களை தொடர்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விரைந்து வாருங்கள். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:45, 1 சூன் 2012 (UTC)
- ஜி. எஸ். எல். வி க்கு மாற்றாக புவிசுற்றிணைவு செயற்கைக்கோள் ஏவுகலம் என்ற அருமையான சொல்லைப் பரிந்துரைத்த நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சித்தமிழ் நடையில் தேர்ச்சியில்லாத காரணத்தால் விலகுவதாக அறிவித்துள்ளது வியப்பளிக்கிறது. இயன்ற அளவு நல்ல தமிழ் என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் பொதுவான கொள்கையே அன்றி, எந்த ஒரு தனிப்பயனரையும் அவ்வாறே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவது இல்லை. ஒரு கட்டுரையில் எந்த வகையான மாற்றமாக இருந்தாலும் மாற்றுக் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் பேசித் தீர்க்க முடியும். உங்கள் கட்டுரைகளில் யாரேனும் அவ்வாறு தொடர் மாற்றங்கள் செய்யுமாறு வலியுறுத்தினார்களா என்று அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 06:11, 1 சூன் 2012 (UTC)
- நீச்சல்காரன், பலரும் ஒருங்கிணைத்து ஒன்றை உருவாக்கும்போது, சில மன வருத்தங்கள் வருவது இயல்பே. நீங்கள் மதுரையிலிருந்து பூனாவிற்குச் சென்று பணிசெய்யும் போது பல இன்னல்களைச் சந்தித்து, சமாளித்து, வாழ்கையில் முன்னேற்றம் பெற்றுள்ளீர்கள். எனவே, நம் தாய் மொழிக்காகப் பணிசெய்யும் போது நிகழும் சில மனவருத்தங்களுக்காக தங்கள் பங்களிப்புகளை நிறுத்தமாட்டீர்கள், மீண்டும் பங்களிப்பீர்கள் என்பதே அனைவரின் விருப்பம். உங்கள் முடிவை மறு பரிசீலனைச் செய்யவும்.--Nan (பேச்சு) 07:46, 1 சூன் 2012 (UTC)
மகிழ்ச்சி
தொகுமீண்டும் இங்கு உங்களைக் காண்பதிலும் நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வர இருப்பதிலும் மகிழ்ச்சி :) --இரவி (பேச்சு) 11:27, 24 சூன் 2013 (UTC)
விருப்பம் மகிழ்ச்சி. உங்களைப் போன்றோர் தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:46, 25 சூன் 2013 (UTC)
- | விருப்பம் மிக்க மகிழ்ச்சி -−முன்நிற்கும் கருத்து Aathavan jaffna (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:14, 8 ஆகத்து 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:58, 18 செப்டம்பர் 2013 (UTC)
- உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:57, 27 செப்டம்பர் 2013 (UTC)
தங்குமிட உதவி தேவை
தொகுவணக்கம் நீச்சல்காரன், எனக்கு உங்களுடைய அறையில் தங்க அனுமதி தேவை. வெள்ளிக்கிழமையன்று இரவு மட்டும் கிடைத்தால் கூட பரவாயில்லை. சனிக்கிழமையன்று எனக்குத் தேர்வு உள்ளது, ஞாயிறன்று கூடலுக்கு வந்த்துவிடுவேன். தொலைபேசி / அலைபேசி எண் கிடைத்தால் நலம். எனது மின்னஞ்சலுக்கு பகிரவும். நன்றி -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:22, 25 செப்டம்பர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த யோசனைக்கான பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மிகவும் புதுமையான புதிர் போட்டியைப் பரிந்துத்துப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்துவதற்காக இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். உங்கள் மீள் வரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இரவி (பேச்சு) 19:55, 25 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வேண்டுகோள்...
தொகுவணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:54, 27 செப்டம்பர் 2013 (UTC)
இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை
தொகுவணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)
உழவன் விரைவு ரயில்
தொகுவணக்கம். நீங்கள் கட்டுரையில் அளித்திருக்கும் இணைப்புகள் இரண்டும் வண்டியின் பெயரைத்தானே உழவன் எக்ஸ்பிரஸ் என்று குறிக்கின்றன. வண்டி எண்-கூடத் தரப்பட்டுள்ளதே? உழவன் எக்ஸ்பிரஸ் என்றால் தொடர் வண்டியைத்தானே குறிக்கும்? எப்படி வழித்தடமாகும் என்று புரியவில்லை. எடுத்துக்காட்டாக, கோவை எக்ஸ்பிரஸ் என்றால் அது கோவைக்கும் சென்னை-சென்ட்ரலுக்கும் இடையே பயணிக்கும் வண்டியைக் குறிக்காதா? வண்டித் தடத்தைக் குறிக்குமா? எனக்குக் குழப்பமாக உள்ளது. எனக்கு தெளிவு படுத்தமுடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:14, 2 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் கருத்து சரியானதென்றால் தாராளமாக மாற்றி விடலாம். அதே சமயம் எனது குழப்பத்தையும் சற்று தெளிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:28, 2 அக்டோபர் 2013 (UTC)
புதிர்ப் போட்டி தொடர்பாக
தொகுMohamed Ali என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார். muthu rama என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார். --Natkeeran (பேச்சு) 01:55, 3 அக்டோபர் 2013 (UTC)
தமிழில் எழுத
தொகுஅன்புத் தம்பி! டிவிட்டரில் தமிழில் எழுத என்ன செய்யவேண்டும்--யோகிசிவம் (பேச்சு) 17:06, 3 அக்டோபர் 2013 (UTC)
தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை
தொகுவணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:23, 4 அக்டோபர் 2013 (UTC)
- தாங்கள் பரிந்துரை செய்தபடியே பக்கத்தினை மாற்றியுள்ளேன். தொழில்நுட்ப மாற்றங்களுக்கான கோரிக்கைகளை அங்கு இடலாமா தகவல் உழவன் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதனை தற்போதைக்கு அங்கு காட்சிபடுத்தியிருக்கிறேன். தக்க இடம் அறிந்தால் மாற்றம் செய்யுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:37, 6 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுசெயல்நயம் மிக்கவர் பதக்கம் | ||
திரையில் தட்டச்சுப் பலகையைக் காண்பதற்கான நீட்சியைக் கேட்டவுடன் தந்ததற்காக இந்தப் பதக்கம் ! இரவி (பேச்சு) 15:28, 8 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்பயனர் கருவிகள் என்ற பக்கத்தில் அதிக கருவிகளை உருவாக்கதி தந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. கட்டுரையைக்கம் தவிற தொழில்நுட்ப முறையில் விக்கிப்பீடியர்கள் பங்காற்ற இயலும் என்பதை சென்னை கூடலில்தான் அறிந்தேன். அதன் பிறகே தங்களின் செயல்பாடுகள் நிரலாக்க முறையில் எத்தனை சிறப்பாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். (நினைவிருக்கலாம் பண்பாட்டு சுற்றுலாவில் முனைவர் துறை மணிகண்டன் அவர்கள் உங்களைப் பற்றி பாராட்டிக்கொண்டே வந்தார்.) தகவல் உழவன் போன்ற நல்லெண்ணம் கொண்டோர்களுடன் இணைந்து தொழில்நுட்ப முறையில் பெருஞ் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துகளும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:51, 13 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுவிக்கிப்பதக்கத் தக்கவைப்பாளர் பதக்கம் | ||
வணக்கம் நீச்சல்காரரே, அலாவுதீன் பூதம் (பயனர்:NeechalBOT) ஒன்றை உருவாக்கி நாங்கள் கேட்ட வரங்களையெல்லாம் தந்துவிட்டீரே. //சீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு// அற்புதம்.! மீண்டுமொரு பதக்கமோ, அகமகிழும் பாராட்டுகளோ இதற்கு ஈடில்லை எனும் பொழுதும். அதைத்தவிற வேறொன்றும் கொடுக்க இயலாமல் இப்பதக்கத்தினை தருகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 14 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- நன்றி. நானே எனக்குத் தெரிஞ்ச ஒன்னு ரெண்டு விசயத்தை வச்சு ஒப்பேற்றிக்கிட்டுயிருக்கேன். இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றி ஒரு வழியாக்கிவிடாதீங்கண்ணே:)--நீச்சல்காரன் (பேச்சு) 05:57, 15 அக்டோபர் 2013 (UTC)
bot
தொகுவணக்கம், உங்கள் தானியங்கி செய்த தொகுப்புகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். பாருங்கள்: [1]. கையொப்பமும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:47, 14 அக்டோபர் 2013 (UTC)
எழுத்து மாற்றி
தொகுhttp://web.archive.org/web/20050404044750/http://www.intamm.com/m-science/war.htm அல்லது அந்த வலைத்தளத்தில் உள்ள பிற பக்கங்களை ஒருங்குறியில் மாற்றி வாசிக்க முயற்சி செய்கிறேன். இது அஞ்சல் எழுத்துருவில் உள்ளது. ஆனால் சுரதா கருவி கொண்டு மாற்றும் போது சில சொற்கள் சரியாக மாற்றப்படவில்லை. உதவ முடியுமா?--Natkeeran (பேச்சு) 03:04, 15 அக்டோபர் 2013 (UTC)
- அது webtamil என்ற எழுத்துருவில் உள்ளது. சுரதாவில் இதற்கான மாற்றி இணைக்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 03:11, 15 அக்டோபர் 2013 (UTC)
- அப்படியா. நன்றி.--Natkeeran (பேச்சு) 03:14, 15 அக்டோபர் 2013 (UTC)
- நானும் அது அஞ்சல் எழுத்துரு என்றுதான் நினைக்கிறேன். விடுபடும் எழுத்துக்கள் எல்லாம் சிதைந்துள்ளதாகத் தெரிகிறது. அவற்றை அடையாளப்படுத்த முடியாததால் எழுத்து மாற்றியில் ஒருங்குறியாகவில்லை. --நீச்சல்காரன் (பேச்சு) 05:49, 15 அக்டோபர் 2013 (UTC)
- அப்படியா. நன்றி.--Natkeeran (பேச்சு) 03:14, 15 அக்டோபர் 2013 (UTC)
- அந்த இணையதளப் பக்கத்தின் மூலத்தைப் பார்த்தால் webtamil என்ற எழுத்துருவில் இருப்பது தெரிகிறது. அந்த எழுத்துருவும் அஞ்சல் எழுத்துருவும் ஒன்றே. http://www.koodal.com/tamil/download-font.asp இங்கிருந்து webtamil ஐ தரவிறக்கம் செய்யலாம். உங்கள் கணினியில் இவ்வெழுத்துருவை நிறுவிய பின்னர் அங்கேயுள்ள உரையை நகல் எடுத்து வேர்டில் இட்டால் படிக்க முடியும், ஆனால் சிதைந்த எழுத்துகள் இருக்கும் இடம் ஸ்ரீ எனும் எழுத்தால் நிரப்பப்படுகின்றது. அ, க, கு, சி போன்ற எழுத்துகளே விடுபட்டவை.
ஒருங்குறியாக மாற்ற சுரதாவில் அஞ்சல் தெரிவுசெய்து பின்னர் ஒவ்வொரு வரிவரியாக விடுபட்ட அ, க, கு, சி போன்றவற்றை ஈடுசெய்யவேண்டும்.
நான் மாற்றிய முதல் பத்திகள்:
தமிழர் போரியல்
போர்க் காரணங்கள்
- நாடு பிடிக்கும் வேட்கை போருக்கு ஒரு காரணம்
- ஒரு தமிழரசன் மற்ற இரு தமிழரசரை வென்று அனைத்து நாடுகளையும் வெல்ல வேண்டும் எனும் ஆவல்.
- ஓர் அரசன் மகளை மன முடிக்க இயலாது ஏமாற்றம் அடைந்தால் அரசர்கள் அப்பெண்ணின் நாட்டின் மீது போர் தொடுத்தனர்.
- தனது ஆட்சிக்குப்பட்ட சிற்றரசர்கள் கப்பங்கட்டத் தவறியபோது அரசன் போர் புரிய நேரிட்டது.
- தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை அரசர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் போர்கள் மூண்டன.
போர் வகைகள்
ஒரு நாட்டின் மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது "வெட்சித் திணை" எனப்பட்டது. இம்முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெட்சி மலர்களைச் சூடினர். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:36, 28 அக்டோபர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்
தொகுநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC) |
- நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:03, 16 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:55, 16 அக்டோபர் 2013 (UTC) |
புதிய பகுப்பு உருவாக்கல்
தொகுவணக்கம் நீச்சல், புதிய பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அப்பகுப்பின் தலைப்புக்கேற்ப எத்தகைய தாய்ப்பகுப்புகளுக்குள் இட வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, நியூசிலாந்து எழுத்தாளர்கள் என்ற பகுப்பு இரண்டு தாய்ப்பகுப்புகளுக்குள் இட வேண்டும். ஒன்று எழுத்தாளர் குறித்த தாய்ப் பகுப்பு (அது நாடு வாரியாக எழுத்தாளர்கள் என்ற பகுப்பாக இருக்கலாம்), மற்றையது: நியூசிலாந்து என்ற பகுப்பு (இது நியூசிலாந்து நபர்கள் என்ற பகுப்பாக இருக்கலாம்.). இரண்டையும் சேர்த்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 04:42, 19 அக்டோபர் 2013 (UTC)
வேண்டும் வேண்டும்
தொகுஎனக்கு NeechalBOT தானியங்கியின் உதவி தேவை. ஆனால் த.விக்கிக்காக அல்ல, விக்கிமூலத்திற்காக தேவை, அதுமட்டுமின்றி உங்களின் அனுமதியை பெறாமலேயே உங்கள் தானியங்கி பயன்படுத்துவது பற்றி இங்கு கூறியும் உள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:44, 23 அக்டோபர் 2013 (UTC)
மேலும் ஒரு நுட்ப உதவி
தொகுவணக்கம். உங்களின் திறன்களுக்கு இங்கு நிறைய தேவை இருப்பது தெரிகிறது. அவ்வாறே எனக்கும் ஒரு தேவை உண்டு.
தமிழ் நூல்களைப் பற்றிய கட்டுரைகளில் உள்ள வார்ப்புருத் தகவல்களை bot செலுத்தி csv வடிவில் scrap பண்ண வேண்டும். பயனர்:Sundar இதற்கு முன்பு பெர்ள் நிரல் வைத்திருந்தார். இதைச் செய்யக் கூடியதாக இருந்தால் பல பயன்கள் உள்ளன. சாத்தியக் கூறுகளை, எவ்வளவு ஆற்றல்/நேரம் தேவை என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா. நன்றி.--Natkeeran (பேச்சு) 14:14, 24 அக்டோபர் 2013 (UTC)
மலையாளம் தமிழ் மொழிபெயர்ப்பி
தொகு- அண்ணே! எனக்கும் ஒரு உதவி தேவை!
- 1. புதிதாக உருவாக்கப்படும் மலையாளக் கட்டுரைகளை, உடனுக்குடன் உங்கள் தானியங்கி என் மணற்தொட்டியில் துணைப் பக்கங்களாக இட வேண்டும்.
- 2. பின்னர், தமிழ் எழுத்துருவிற்கு மாற்ற வேண்டும். (எந்த எழுத்தை எதைக் கொண்டு மாற்ற வேண்டும் என்ற பட்டியலை நான் தருவேன்.)
- 3. சிறு அளவிலான சொற்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளேன். இவற்றையும் அது தேடிக் கண்டுபிடித்து மாற்ற வேண்டும். (இதற்கும் பட்டியல் என்னிடம் உள்ளது.)
- 4. regex கொண்டு இலக்கண விதிகளை மாற்றுவதற்கு படிக்கிறேன். இதில் நான் வெற்றியடைந்தால், அந்தப் பட்டியலும் தருகிறேன். அதையும் உங்கள் கருவி மாற்றித் தர வேண்டும்.
பின்னர், உரை திருத்தி, செம்மையாக்குவதுடன் என் பணி முடியும். இலகுவாக உணர்வேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:46, 24 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில் பார்க்க: http://transliterator.blogspot.ca/ http://kaiman-alavu.blogspot.ca/, --Natkeeran (பேச்சு) 17:30, 24 அக்டோபர் 2013 (UTC)
- இருவருக்கும் மின்னஞ்சல் பறக்கவிட்டுள்ளேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:21, 24 அக்டோபர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில் பார்க்க: http://transliterator.blogspot.ca/ http://kaiman-alavu.blogspot.ca/, --Natkeeran (பேச்சு) 17:30, 24 அக்டோபர் 2013 (UTC)
சுந்தர்
தொகுநீச்சல்காரன், சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் சில குறிப்புக்களை விட்டுள்ளீர்கள். அவர் தனிப்பட்ட காரணங்களினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:34, 26 அக்டோபர் 2013 (UTC)
தானியங்கி அணுக்கம்
தொகுஉங்கள் NeechalBOT தானியங்கிக்குத் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. ---மயூரநாதன் (பேச்சு) 15:44, 26 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி செய்தியைப் பரப்புக!
தொகுவணக்கம் அண்ணே! கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அனைத்துப் பயனர்களுக்கும் அழைப்பு விடுக்க, உங்கள் தானியங்கியை பயன்படுத்த வேண்டுகிறேன். மாதிரி செய்தியை கீழே இட்டிருக்கிறேன். செம்மைபடுத்திவிட்டு, குறைந்தபட்சம், தொடர்பங்களிப்பார்களின் பேச்சுப்பக்கத்திலாவது செய்தி இடுமாறு வேண்டுகிறேன். “
- ==கட்டுரைப் போட்டி==
- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி!
“ -விரைக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:41, 27 அக்டோபர் 2013 (UTC)
- இவ்வளவு வேகம். சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள்ளாகவே, உங்கள் தானியங்கி நூறு பேருக்கு செய்தி இட்டுவிட்டதே! ரியலி ஃபாஸ்டு! :) நன்றி! -08:00, 27 அக்டோபர் 2013 (UTC)
- எல்லாப் புகழும் கூகிளுக்கே! தேனியார் பேச்சுப் பக்கம் பூட்டப்பட்டுள்ளதால் அது நீங்கலாக தானியங்கிகள், நீங்கள், நான் உட்பட 363 நபர்களுக்கும் இட்டாகிவிட்டது. பயனர்களின் பட்டியல் என்று ஒன்று இல்லாததால் தானியங்கிக் கணக்குகளைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்தமுறை கவனத்தில் கொள்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 08:15, 27 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி அழைப்பிற்கு நன்றி
தொகுதாங்கள், எனக்கு அனுப்பிய கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி.. ஆனால், கடந்த மாதம் நான் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு 21 கட்டுரைகள் விரிவுபடுத்தினேன் என்பதை இங்கு தங்களுக்கு நினைவு கூறுகின்றேன்... --Saba rathnam (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)
- நீச்சல்காரரே.. தங்களது மறுமொழியை பார்த்தேன். எல்லாம் சரிதான், ஆனால் 22 வயதாகும் என்னை ஐயா என்று கூறியது தான், சற்று... --Saba rathnam (பேச்சு) 08:29, 27 அக்டோபர் 2013 (UTC)
- என்னங்க நீங்க! ஐயா என்பது வயதானவரைக் குறிக்கும் சொல் இல்லையே! மேலானவர்களை, சான்றோர்களைக் குறிக்கும் சொல்லாயிற்றே! சிலர் குழந்தைகளையும் பாசத்தோடு ஐயா என்பதை இங்கு நினைவு கூர்கிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08
- 32, 27 அக்டோபர் 2013 (UTC)
பாட்டு (Bot) பாடிய பாட்டு
தொகுஉங்கள் பாட்டு (Bot) 373 பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் கட்டுரைப்போட்டி பாட்டுகளை பாடியுள்ளது. ஆனால் பாட்டு பாடும் பாட்டு நேற்றோடு நின்றுவிட்டதே? காரணம் என்னவோ?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:41, 27 அக்டோபர் 2013 (UTC)
- பாட்டு நிற்கவில்லை, வேறு தேவையில்லாததால் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. புள்ளிவிபரம் பற்றிய சேகரிப்பில் கூடுதல் திருத்தங்கள் சேர்த்துக்கொள்வதற்காக பாட்டு ஆய்வகத்தில் இருக்கு --நீச்சல்காரன் (பேச்சு) 16:04, 28 அக்டோபர் 2013 (UTC)
பொதுவகத்திற்கான தானியங்கி
தொகுதங்களது தானியங்கி சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள். அதுகுறித்த எனது எண்ணங்களை, இங்கு கூறியுள்ளேன். சந்திப்போம். வணக்கம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:52, 31 அக்டோபர் 2013 (UTC)
பதக்கம்
தொகுமுதற்பக்கக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் | ||
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Neechalkaran/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.பயனர் பேச்சு வெளிகளில் தானியங்கிச் செய்திகள்
தொகுஇங்கு உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:03, 3 நவம்பர் 2013 (UTC)
உங்கள் பெயர்
தொகுஎன்ன நீச்சல் உங்க படம், பெயர், மதுரயில் படித்த கல்லூரி எல்லாம் தான் அச்சு இதழிலும் (தமிழ் கம்பியூட்டர் இதழில் தேனி எழுதும் தொடர்) முகநூலிலும் வந்திருச்சே. படத்துல நம்ம சூர்ய பிரகாசுக்கு போட்டியா சின்ன வயசாதான் தெரியறீங்க. --குறும்பன் (பேச்சு) 15:28, 5 நவம்பர் 2013 (UTC)
- :P விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 5 நவம்பர் 2013 (UTC)
நாவி
தொகுநீச்சல்காரன், உங்க நாவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவுள்ளது. இது இலக்கண விதிகளை வைத்து இயங்குவதா மாதிரி உரைகளின் அடிப்படையில் இயங்குவதா? இதன் இயக்கத்தைப் பற்றி எங்காவது எழுதியிருக்கிறீர்களா? படிக்க ஆவல். -- சுந்தர் \பேச்சு 13:33, 6 நவம்பர் 2013 (UTC)
- http://dev.neechalkaran.com/2013/11/Making-of-navi.html இங்குள்ளது --நீச்சல்காரன் (பேச்சு) 07:44, 7 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், உங்களது நாவியைப் பலகாலம் முன்பே பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதன் ஒரு வடிவத்தை விக்கியில் ஏவ முடியுமா? ஏராளமான ஒற்றுப்பிழைகள் முதலியன இருக்கின்றன. அவற்றைத் திருத்த முடிந்தால் நல்லது. சோதனையோட்டம் போல் கூடச் செய்து பார்க்கலாம். --இரா. செல்வராசு (பேச்சு) 11:49, 7 நவம்பர் 2013 (UTC)
- விருப்பம் நானும் பல காலம் முன்னரே பயன்படுத்தியிருக்கிறேன். மேலே உள்ள செல்வராசு அண்ணனின் கருத்தே எனதும்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 7 நவம்பர் 2013 (UTC)
- நன்று நீச்சல்காரன். இதை பைவிக்கிப்பீடியாபாட்டு கட்டமைப்பில் சேர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். நாவியை ஏவிவிடலாம். :) -- சுந்தர் \பேச்சு 12:11, 7 நவம்பர் 2013 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:20, 7 நவம்பர் 2013 (UTC)
- விக்கியில் நேரடியாகத் தமிழ்த் தொடர்கள் இல்லை. விக்கிக்கென்றுள்ள நிரல்களை நாவி உணரும் விதத்தில் மாற்ற வேண்டும் என்பது அதிக நேரம் எடுக்கும் காரியம். மேலும் தற்போதைக்கு அச்செயலி இலக்கண விதிகளைக் கண்டுணர்ந்து பரிந்துரைதான் அளிக்கிறது இன்னும் பெரிய பணி நிலுவையில் உள்ளது. மனிதத் தலையீடு இல்லாமல் தானியங்கித் திருத்தம் சிறப்பாகயிருக்காது. ஆனால் எதிர்காலத்தில் அதற்குரிய நேரமும், நாவியின் வளர்ச்சியும் அடையும் போது இணைக்கலாம். அதுவரை எழுதுபவர்கள் அச்செயலியின் தளத்தில் இட்டுத் திருத்திக் கொண்டால் அவர்களே பிழையின்றி எழுதக் கற்றுவிடுவார்கள்.(அதுதான் நாவியின் வெற்றியும் கூட) --நீச்சல்காரன் (பேச்சு) 02:48, 8 நவம்பர் 2013 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:20, 7 நவம்பர் 2013 (UTC)
NeechalBOT பணிகள்
தொகுநீச்சல்காரன், உங்கள் தானியங்கி மூலம் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி. பொதுவாக, ஒன்று அல்லது ஒரு சிலப் பணிகள் தொடர்பாகவே தானியங்கி அணுக்கம் வழங்கப்படுவதுண்டு. நீங்கள் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருவதால், அப்பணிகள் பற்றிய சிறு குறிப்பையும் எடுத்துக் காட்டுத் தொகுப்பு ஒன்றையும் தானியங்கியின் பயனர் பக்கத்தில் குறிப்பிட முடியுமா? தற்போது செய்யப்படும் பணிகள் என்பதன் கீழ் இரண்டு பணிகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது போக, வார்ப்புரு சேர்த்தல், விக்கித் திட்ட வார்ப்புரு இடுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகிறது. இன்னொரு வேண்டுகோள்: உங்கள் தானியங்கியை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டினால், அது குறித்த குறிப்பு ஒன்றை தானியங்கியின் பேச்சுப் பக்கத்திலும் இட்டு உங்கள் பேச்சுப் பக்க உரையாடலுக்கான இணைப்பையும் சேர்த்து விடுங்கள். வருங்காலத்தில் தானியங்கியின் பணியைப் பின் தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 06:23, 8 நவம்பர் 2013 (UTC)
உதவி தேவை...
தொகுவணக்கம், நீச்சல்காரன்!
வலைவாசல்:தமிழீழம் எனும் பக்கத்தில் 'செய்திகளில் தமிழீழம்' எனும் பகுதி உள்ளது. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 6 செய்திகளை தற்சமயம் நான் அவ்வப்போது இற்றை செய்கிறேன். இதனை தானியங்கிகொண்டு இற்றை செய்ய தங்களின் உதவி தேவைப்படுகிறது. ஆங்கில விக்கியில் இதனைச் செய்கிறார்கள். இப்பக்கங்களை பாருங்கள்: en:Portal:United States, en:Portal:United States/United States news, en:Portal:United States/United States news/Wikinews.
en:User:Wikinews Importer Bot எனும் தானியங்கி WIKI NEWS இலிருந்து அண்மைய செய்திகளை எடுத்து இற்றை செய்கிறது. en:Portal:India எனும் பக்கத்தில் இதனை நான் செயல்படுத்தினேன். காண்க:en:Portal:India/News: Revision history. ஆனால், இந்தியா குறித்த அண்மைய செய்திகள் WIKI NEWS இல் அவ்வளவாக எழுதப்படுவதில்லை என்பதனால், எனது மாற்றங்களை முன்னிலைப்படுத்திவிட்டனர். (முன்னதாக எனக்கு ஒருவர் The Brilliant Idea Barnstar பட்டம் கொடுத்திருந்தார்!). தானியங்கி, ஆங்கில விக்கியில் இயங்குவதால் அதனை எளிதில் அங்கு பயன்படுத்திவிட்டேன். தமிழ் விக்கியில் பயன்படுத்த உங்களைப் போன்றோரே உதவ இயலும். தமிழ் விக்கி செய்திகளில் தமிழீழம், தமிழ்நாடு, இந்தியா குறித்த அண்மைய செய்திகள் எழுதப்படுவதால்... நமது வலைவாசல்களில் இந்தத் தானியங்கி மிகவும் உதவிகரமாக இருக்கும். அவசரமில்லை, பொறுமையாக உதவுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:39, 8 நவம்பர் 2013 (UTC)
- அன்புள்ள மா. செல்வசிவகுருநாதன், உங்களுக்கு விக்கியூடாக இருமுறை மின்னஞ்சலிட்டேன். பதில் எதும் உங்களிடமிருந்து வரவில்லை. இப்பணி தேவையெனில் மின்னஞ்சல் செய்க --நீச்சல்காரன் (பேச்சு) 16:12, 21 நவம்பர் 2013 (UTC)
மலையாளக் கட்டுரைகளின் தானியக்கச் சேர்ப்பு
தொகுவணக்கம் அண்ணே! நாளொன்றுக்கு ஐந்து கட்டுரைகள் வீதம், மலையாள விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் புதிய கட்டுரைகளை, எழுத்துப் பெயர்ப்பு செய்து, என் மணல்தொட்டியில் போடுமாறு வேண்டுகிறேன். நாளொன்று ஐந்து தான் என்பதால், எளிதில் முடித்திடுவேன். 1200 பைட்டுகளுக்கு குறைவாக உள்ளனவற்றையும், தமிழ் இணைப்பு உள்ளவற்றையும் தவிர்த்து மற்றவற்றை சேகரித்துத் தருமாறு வேண்டுகிறேன். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் உதவினால் நலம். (நானே ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்து எழுத்துப்பெயர்ப்பு செய்வதால் அலுப்பு ஏற்படுகிறது. எனவே தான் கேட்கிறேன். முன்னர், அட்சரமுக கருவியை பயன்படுத்தி வந்தேன்.) நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:05, 9 நவம்பர் 2013 (UTC)
- தமிழ்க்குரிசில், நீங்கள் கேட்ட தானியக்கம் தயார். மாதிரி இதோபயனர்:Neechalkaran/test. ஆனால் முன்னர் மின்னஞ்சலில் கூறியது போல தினமும் வெளிவரும் கட்டுரைகளை எழுத்துபெயர்த்து எழுதுவது கீழ்கண்ட விதங்களில் சிறப்புகுன்றுகிறது. தினமும் பயனர் வெளியில் ஒரு பக்கம் உருவாக்க வேண்டும் அல்லது 24மணி நேரத்தில் அடக்கங்களை அழிக்க வேண்டிவரும். ஒரு கட்டுரை மலையாளத்தில் தோன்றியவுடன் இங்கு எடுப்பதால் அதன் வளர்ச்சிகளை விட்டுவிடுவோம். தேவையில்லாத நீக்கலுக்குகந்த கட்டுரைகளைத் தானியங்கி கண்டுணராது. அதே நேரத்தில் ஒரு இடைமுகம் (web interface) செய்து அதில் உள்ளிடும் மலையாளத் தலைப்பிற்கு உரிய கட்டுரையை அதுவே எடுத்து, பெயர்த்து நீங்கள் குறிப்பிடும் பயனர்வெளி இடத்தில் இட்டுவிடலாம். இதனால் எத்தகைய பழைய கட்டுரையையும் எழுத்துபெயர்க்கமுடியும் உங்கள் விருப்பம் போல. இரண்டில் எது வேண்டும் என்று சொன்னால் முடித்துவிடலாம். பிறகு, அட்சரமுகக் கருவியைப் பயன்படுத்தி எனது தானியங்கி கொண்டு எழுத்துபெயர்க்க முடியாது. இருந்தாலும் எனது சொந்த எழுத்துப்பெயர்ப்பு கருவி கொண்டே பெயர்க்கிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 05:09, 10 நவம்பர் 2013 (UTC)
- செம்மையாக உள்ளது அண்ணே!
கீழ்க்கண்ட திருத்தங்களைச் செய்தால் சிறப்பு! 1.கட்டுரையின் முதல் அல்லது இரண்டாவது வரியில் பிரெடியூஆரெல் என்ற வரி இருக்கும். அதை நீக்க முடிந்தால் நலம். 2. வர்க்கக் குறிகள் வேண்டாம். k, kh, g, gh ஆகிய நான்கினையும் க என்று குறிப்பிட்டாலே போதும். (க1,க2,க3,க4 என வேண்டாம் ) 3. ஒவ்வொரு நாளும் புதிய கட்டுரைகளை எடுத்து வந்தால் போதும். ஏனென்றால், பழைய கட்டுரைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன! ஐந்து கட்டுரைகள் போதும்முண்ணே! 4. விக்கியில் பயன்படுத்தும் குறிச்சொற்களின் பட்டியலையும் மாற்றித் தரவும். (எ.கா: வர்க்கம்- பகுப்பு: பலகம் -வார்ப்புரு. என்னிடமும் இதன் பட்டியல் இருக்கிறது என நினைக்கிறேன்.) 5. நான் மாற்ற விரும்பும் சொற்களின் பட்டியலை இரு அரேக்களாக தர விரும்புகிறேன், எந்த பக்கத்தில் இவற்றைத் தரட்டும்? (சலச்சித்ரம்- திரைப்படம், தினப்பத்ரம்- நாளேடு,..) 6. மலையாளக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள உள்ளிணைப்புகளுக்கு இணையான தமிழ்க் கட்டுரைகள் இருப்பின், மாற்றித் தந்தால் சிறப்பு. 7. மணல்தொட்டிப் பக்கத்தின் கீழேயே அடுத்த நாளின் கட்டுரைகளைப் போடவும். முந்தைய நாளின் உள்ளடக்கத்தை நீக்க வேண்டாம், மேற்கூறியவற்றில் தங்களுக்கு எளியனவாக இருப்பனவற்றை செய்திடுங்கள்.
- இந்த திட்டத்தை ஒரு மாதம் செயற்படுத்திப் பார்க்கிறேன். என்னால் தொடர முடிந்தால் மேலும் எண்ணிக்கையை அதிகரித்துப் பார்ப்பேன். இதனால் என் வேலை பல மடங்கு குறையும். அதைப் போல, அடுத்தது தெலுங்கு கட்டுரைகளையும் செயற்படுத்த வேண்டியிருக்கும்!!!!!!!!! :)
தங்கள் ஆலோசனைகளையும் தரவும். தற்போதே இதைச் செயற்படுத்தினாலும் நலம். உதவியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:01, 10 நவம்பர் 2013 (UTC)
- திட்டத்தை முடிக்கிவிட்டேன். உங்கள் விருப்பப்படியே தினமும் அதிகாலையில் இப்பக்கத்தில் 1200 பைட்டுக்குள் மற்றும் 500பைட்டுக்கு மேல் என்கிற எல்லையில் ஐந்து கட்டுரைகள் இற்றை செய்யப்படும். ஒவ்வொரு கட்டுரைக்கும் நடுவில் மூன்று நடுக்கோடுகள் பிரித்தறிய இட்டுள்ளேன். தமிழ் உள்ளிணைப்பு அங்கிருந்தால் அவற்றைச் சேர்த்துக் கொள்ளும். வர்க்கக்குறிகள் நீக்கிவிட்டேன். மாற்றித் தரவேண்டிய சொற்பட்டியல்களை மின்னஞ்சல் இடுங்கள், ஒவ்வொன்றாகச் செய்வதைவிட மொத்தமாகச் சேர்த்துவிடுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 07:50, 11 நவம்பர் 2013 (UTC)
- தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். 1200 பைட்டுகளுக்கு அதிகமான அளவுள்ள கட்டுரைகள் தான் வேண்டும். (1200 பைட்டுகளுக்கும் குறைவான அளவில் இருப்பது கட்டுரையே அல்ல!) சொற்பட்டியலை இப்போதே அனுப்பிவிடுகிறேன். :) நீங்கள் குறிப்பிட்டபடி, கட்டுரைகளை மாதமொரு முறை கவனித்து, அவற்றை இற்றைப் படுத்திக் கொள்வேன். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும், தொகு என்ற இணைப்பு இருத்தல் நலம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:24, 11 நவம்பர் 2013 (UTC)
தரவுமீட்பான் இணைப்பு
தொகுநீங்கள் மின்னஞ்சலில் தந்த இணைப்பு வேலை செய்கிறது. ஆனால் விக்கியில் தந்த இணைப்பின் பக்கம் வெற்றாக இருக்கிறது. கவனிக்கவும். --Natkeeran (பேச்சு) 15:32, 9 நவம்பர் 2013 (UTC)
வேண்டுகோள் + விண்ணப்பம்
தொகு- நீங்கள் தொடர்ந்து பல்வேறு தொழில் நுட்பங்களை உருவாக்குவது கண்டு மிகவும் மகிழ்கிறேன். அவற்றைத் தொடர்ந்து விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) என்ற பகுதியில் தொடர்ந்தீர்கள் என்றால், பிற்காலத்தில் தொழினுட்பத்தில் மட்டும் பங்களிப்புச்செய்யும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, பொதுவான இடத்தில் செய்வதால், குறிப்பாகத் தேட வேண்டியதாக உள்ளது. இந்நிலையைத் தடுக்க, இவ்வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
- விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#தொகுத்தலில் வரிச்சீராக்கம் என்பதில் தங்கள் ஆலோசனையை எதிர்நோக்குகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:16, 10 நவம்பர் 2013 (UTC)