பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு16

ஒலிபெயர்ப்பு சந்தேகம்

தொகு

பொதுவாக ஆங்கிலத்தில் "Air" என்ற வார்த்தையை தமிழில் ஒலிபெயர்க்கும் பொழுது "ஏர்" என்று எழுதுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலான கட்டுரைகளில் "எயர்" என்று எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் மாற்றம் செய்துள்ளேன். இருந்தும் சந்தேகத்தை தீர்த்துக்கொண்டால் அனைத்து இடங்களிலும் மாற்ற ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உதவி செய்யவும். --அமுமுஸ்தபா 16:10, 20 பெப்ரவரி 2012 (UTC)

”எயர்” என்பது இலங்கைத் தமிழர்கள் எழுத்துப்பெயர்க்கும் முறை என நினைக்கிறேன் (நூறு சதவீதம் உறுதியாகத் தெரியவில்லை). இப்படி தமிழ்நாட்டுத் தமிழ் X இலங்கைத் தமிழ் வேறுபாடுகள் பல உள்ளன. தமிழ் விக்கியில் இரண்டையும் அரவணைத்து செல்கிறோம். இவ்வாறான பயன்பாடுகளைக் கண்டால் மாற்ற வேண்டாம், அடைப்புகளில் மாற்றுப் பயன்பாட்டைக் கொடுத்துவிட்டு, வழிமாற்றை உருவாக்கிவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:12, 20 பெப்ரவரி 2012 (UTC)

உதவி

தொகு

எஸ். என். லட்சுமி கட்டுரையில் ref tag சரியாக வரவில்லை. என்னால் பிழையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று சரிபாருங்களேன்.--மணியன் 05:39, 22 பெப்ரவரி 2012 (UTC)

சிறு குறிவழு இருந்தது மணியன். சரி செய்துள்ளேன். ' எனம் குறி இரட்டித்திருந்தது. -- சுந்தர் \பேச்சு 05:47, 22 பெப்ரவரி 2012 (UTC)

வார்ப்புரு உதவி

தொகு

{ {convert|406|PD/sqkm|PD/sqmi} } இந்த வார்ப்புருவில் ஏதோ தவறு உள்ளது என நினைக்கிறேன்.. ஏற்கனவே தங்களிடம் இது போன்ற வார்ப்புரு சந்தேகத்தை யாரோ கேட்டதாக நினைவு.. வெளியீடு 1000 த்திற்கு மேல் வந்தால் 1 என காண்பிக்கிறது....சரிபார்க்கவும்...நன்றி--shanmugam 17:47, 22 பெப்ரவரி 2012 (UTC)

இதனை முன்பு சரிசெய்ய முயன்று தோற்றிருக்கிறேன். convert வார்ப்புரு முழுக்க சீரமைக்க வேண்டும் சண்முகம். பொறுமையாகச் செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:05, 23 பெப்ரவரி 2012 (UTC)

உதவி

தொகு

பயனர் பக்கம், என்பேச்சு, என் விருப்பத்தேர்வுகள்,... இந்த மேல் பட்டையில் தொகுத்தல் பற்றிய பின்னோட்ட இனைப்பு - தட்டச்சு உதவி,parvathisri என்ற என்னுடைய பயனர் பக்க இணைப்பின் மேல் எழுத்துகள் போல (ஒன்றன்மேல் ஒன்று) என இருக்கிறது. லிங்க் மெர்ஜ் ஆனது போல.. எனவே அங்கு நான் சொடுக்கினலே mood bar மட்டுமே திறக்கிறது. பயனர் பக்கம் திறப்பதில்லை. சரி செய்து உதவுங்கள்.--Parvathisri 03:18, 23 பெப்ரவரி 2012 (UTC)

எனக்கு சரியாக வருகிறதே. ஒரு screenshot (printscreen பொத்தான் அழுத்து, paint இல் பேஸ்ட் செய்து) sodabottle at gmail முகவரிக்கு அனுப்புங்கள். சரி செய்ய முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:07, 23 பெப்ரவரி 2012 (UTC)
மூட்பார் மீடியாவிக்கி நீட்சிக்கும் நரையம் நீட்சிக்கும் ஒவ்வாமை காரணமாக விளைந்த வழு இது. மூட்பார் நீட்சியை ஸ்ரீகாந்த் வழு பதிவு செய்து நீக்கியுள்ளார். இப்போது சரியாகியிருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:10, 25 பெப்ரவரி 2012 (UTC)

மீடியாவிக்கியில் மொழிபெயர்ப்புகள்

தொகு

பாலா, மீடியாவிக்கியில் அண்மையில் செய்யப்பட்ட சில மொழிபெயர்ப்புகளால் விக்கிசெய்தியில் சில மாற்றங்கள் தெரிகிறது. அண்மைய மாற்றங்களைப் பாருங்கள். கட்டுரைத் தலைப்பு மாற்றப்படும் போது, நகர்த்தப்பட்டதுபக்கம் XXXXXXX லிருந்து xxxxxக்கு என அண்மைய மாற்றங்களில் வருகிறது. இன்றிலிருந்துதான் இம்மாற்றம் தெரிகிறது. translatewiki யில் தேடியபோது அகப்படவில்லை. முன்பிருந்ததுக்கு மீளமைத்து விடுங்கள். அவசரமில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 06:35, 24 பெப்ரவரி 2012 (UTC)

புதிதாக உருவாக்கப்பட்ட செய்தி (டிசம் 2011). ஏன் இப்போது திடீரெனத் தோன்றுகிறது எனப் புரியவில்லை. சற்று மாற்றியிருக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:43, 24 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி பாலா, வேறு பல மாற்றங்களும் மோசமான மொழிபெயர்ப்புகளுடன் தெரிகின்றன.--Kanags \உரையாடுக 08:00, 24 பெப்ரவரி 2012 (UTC)
பக்கம் **** லிருந்து **** க்கு திசைதிருப்புதல் இல்லாமல் <பயனர்> நகர்த்தப்பட்டது. என்று மோசமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எங்கு இந்த மொழிபெயர்ப்பு உள்ளது என்று தெரியாமல் உள்ளது.--Kanags \உரையாடுக 11:45, 2 மார்ச் 2012 (UTC)
நீங்கள் இதனை இன்று திருத்தியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. இதன் மாற்றங்கள் தெரிய சில நாட்கள் ஆகலாம் என நினைக்கிறேன். நன்றி பாலா.--Kanags \உரையாடுக 11:49, 2 மார்ச் 2012 (UTC)
இன்று நான்கைந்து “நகர்த்தல்” /கணக்கு உருவாக்கம் செய்திகளை திருத்தியிருக்கிறேன். [1] [2] [3], [4]. அடுத்த திங்கட்கிழமை இங்கு நமக்கு வந்துவிடும். மீடியாவிக்கி 1.19 பதிப்பு மாற்றத்தால் இப்புதிய செய்திகள் தோன்றத் தொடங்கியுள்ளன. --சோடாபாட்டில்உரையாடுக 11:52, 2 மார்ச் 2012 (UTC)
மாற்றங்கள் இன்று விக்கித்திட்டங்களுக்கு வந்துவிட்டன.--சோடாபாட்டில்உரையாடுக 03:33, 6 மார்ச் 2012 (UTC)

ஐயம்!

தொகு

பதக்கம் குறித்து சில ஐயங்கள்:
1. ஒரு பயனருக்கு பதக்கம் வழங்கும் உரிமை, நிர்வாகிகளுக்கு மட்டும்தானா? அல்லது எந்தப் பயனரும் வழங்கலாமா? (‘பதக்கம் வழங்கும்போது பாகுபாடின்றி, நடுநிலைமையுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளவேண்டும்; உரியவருக்குத் தரவேண்டும் என்பன சொந்தப் பொறுப்பு’ என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை!)
2. கணிதப் பதக்கம் என்பது, கணிதத்தில் சிறந்த கட்டுரைகளை அளித்துவரும் பயனருக்கு வழங்குவதற்கென உள்ளதுதானே?

ஒரு ஆலோசனை: ஒவ்வொரு பதக்கத்தின் நோக்கம் குறித்து ஒரு பட்டியல் தயாரித்து அதனையும் விக்கியன்பு திட்டத்தின் பக்கத்தில் சேர்த்தால் ... எதிர்காலத்தில் அனைவருக்கும் ஒரு வழிகாட்டலாக அமையும். --மா. செல்வசிவகுருநாதன் 16:06, 25 பெப்ரவரி 2012 (UTC)

செல்வசிவகுருநாதன், யாரும் யாருக்கும் பதக்கம் தரலாம். நம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கவே. விக்கித்திட்டத்தில் ஏறத்தாழ எதிலுமே அதிகாரி/நிருவாகி/பயனர் என்ற பாகுபாடு கிடையாது. அதிகாரி/நிருவாகி என்பது மிகமிகப்பெரும்பாலும் துப்புரவு போன்ற பணிகள் சில செய்யவும், சில பொருத்தமில்லாத கட்டுரைகளை நீக்குதல் போன்றவற்றைச் செய்யவும், சில நேரங்களில் பயனர்களிடையே நேரிடும் கருத்துவேறுபாடுகளைத் (அவர்களாகத் தீர்க்க முடியாததைத்) தீர்க்க முனைவதும் போன்ற மிகச் சில பணிகள்தாம். பிணக்கைத் தீர்க்கக்கூட எந்தப் பயனரும் முன் வந்து உதவலாம். --செல்வா 16:17, 25 பெப்ரவரி 2012 (UTC)
1)யார் வேண்டுமென்றாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் தரலாம் செல்வசிவகுருநாதன். பதக்கங்களின் விவரப் பட்டியல் ஒன்றை விரைவில் உருவாக்கி விடுகிறோம்.
2) ஆம். கணிதப் பதக்கம் கணித்தத்தில் கட்டுரைகள் எழுதியவருக்கு தர உரியதே.--சோடாபாட்டில்உரையாடுக 17:25, 25 பெப்ரவரி 2012 (UTC)
சோடாபாட்டில்... உங்களின் பதிலுரைக்கு நன்றி!
எனது முதல் 'பதக்கம் வழங்குதலை' செய்துவிட்டேன். அந்த பாக்கியசாலி: சண்முகம்--மா. செல்வசிவகுருநாதன் 18:12, 25 பெப்ரவரி 2012 (UTC)

ஊடகப்போட்டி

தொகு

நான் பதிவேற்றிய இரண்டு படங்கள் சரியாக பதிவாகவில்லை அவற்றை நீக்கிவிடச்சொல்லவும் --குறும்பன் 17:10, 25 பெப்ரவரி 2012 (UTC)

குறும்பன், self tagging செய்தால் உடனடியாக நீக்கிவிடுவார்கள். பிறர் tagging செய்தால் காரணம் சொல்ல வேண்டும். நீங்களே படங்களில் {{delete}} சேர்த்துவிடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 25 பெப்ரவரி 2012 (UTC)

மறுபடியும் வார்ப்புரு சந்தேகம்

தொகு

வணக்கம், மறுபடியும் வார்ப்புரு உருவாக்குவதில் சந்தேகம்.. பார்க்கவும் பயனர்:shanmugamp7/testing.. இதில் உள்ள பட்டியல் ஆங்கில விக்கியில் உள்ளவாறு நகலெடுத்தால் சரியாக வரவில்லை.ஏற்கனவே ஒரு வார்ப்புருவிற்கும் (வார்ப்புரு:இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்) இவ்வாறே வந்தது.. { {.}} இதை இடுவதன் மூலம் சரிசெய்தேன்.. hlist என கொடுத்தால் அதற்கேற்றவாறு வருவதில் எதோ பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன்.. * முன்னால் வருவதால் எண்ணிடப்பட்ட பட்டியலாக வருகிறது என நினைக்கிறேன்.. அதனை சரிசெய்ய இயலுமா? இயலவில்லையெனில் { {.}} இவ்வார்ப்புருவை அனைத்து மாவட்டங்களுக்கு பின்னாலும் இடுவதன் மூலம் சரி செய்து கொள்ளளாம் என நினைக்கிறேன்..shanmugam 19:34, 25 பெப்ரவரி 2012 (UTC)

hlist class தற்போது தமிழ் விக்கியில் இல்லை. இங்கிருந்து எடுத்து இங்கு இற்றைப்படுத்த வேண்டும். செய்யத் தொடங்கினேன். நிறைய dependancies உண்டு போலத் தெரிகிறது. மெதுவாகச் செய்கிறேன். (வேறு எதுவும் முறிகிறதா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும்).--சோடாபாட்டில்உரையாடுக 02:56, 26 பெப்ரவரி 2012 (UTC)
அப்படியானால் சரி .. நான் இப்போதைக்கு {{. }} வார்ப்புருவை உபயோகப்படுத்தி கொள்கிறேன்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அதை திருத்திவிடுங்கள்.. நன்றி --shanmugam 03:13, 26 பெப்ரவரி 2012 (UTC)

how to rotate file

தொகு

படிமம்:Sadayavarman sundara pandyan coins.jpg eventhough i previewed the figure horizontal before uploading it uploaded as vertical figure. how can i change it.--தென்காசி சுப்பிரமணியன் 17:32, 29 பெப்ரவரி 2012 (UTC)

caching problem போலத் தெரிகிறது. இரண்டாவது பதிப்பு சரியாகத் தான் பதிவேறியுள்ளது. எக்காரணத்தாலோ, முந்தைய பதிப்பே thumbview இல் தெரிகிறது. இப்போது முதல் பதிப்பை நீக்கியிருக்கிறேன். சில மணி நேரம் கழித்து சோதித்துப் பார்க்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:20, 1 மார்ச் 2012 (UTC)

மீடியாவிக்கி மேம்பாடு

தொகு

mediawiki1.19 upgrade முடிஞ்சது போல!?.. பல மாற்றங்கள் தெரியுது...--shanmugam (பேச்சு) 05:16, 1 மார்ச் 2012 (UTC)

ஆம் இப்போது தான் கவனித்தேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:18, 1 மார்ச் 2012 (UTC)

படிமம்:Rosalindelsiefranklin.jpg cc by 2.0 என்றால் என்ன? இப்படிமத்திற்கு அதில் கொடுக்கப்ப்ட்டிருக்கும் வார்ப்புரு சரியா?

என்ன cc by 2.0 என்று தெளிவாக இல்லை எனினும் attribution உடன் பயன்படுத்தியிருப்பது சரியே.--சோடாபாட்டில்உரையாடுக 19:41, 1 மார்ச் 2012 (UTC)
அளிக்க வேண்டியவை

படிமம்:பார்செக்.png இதன் பழைய பதிப்புகள் மற்றும் படிமம்:Rosalin delsie franklin.jpg--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:20, 1 மார்ச் 2012 (UTC)

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 19:43, 1 மார்ச் 2012 (UTC)

ஹென்றி ருடால்ப் ஹெர்ட்ஸ்

தொகு

இக்கட்டுரையை ஒன்றிணைக்கும் முயற்சியில் எப்படி என்பது தெரியாமல் செய்துள்ளேன். சரி செய்து ஒன்றிணைத்து விடுங்கள்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:10, 2 மார்ச் 2012 (UTC)

 Y ஆயிற்று. உள்ளடக்கங்களை சரியாக இணைத்திருந்தீர்கள். இப்போது நான் வரலாறுகளை ஒன்றிணைத்துவிட்டேன். (வரலாறு இணைப்பு நிருவாகிகளால் மட்டும் செய்ய முடியும்).--சோடாபாட்டில்உரையாடுக 02:51, 3 மார்ச் 2012 (UTC)

இரட்டை வழிமாற்றிகள்

தொகு

யூக்ளிடிய திசையன் இரட்டை வழிமாற்றியாக உள்ளது. இதன் மூலப் பக்கம் என்ன?--Kanags \உரையாடுக 22:19, 2 மார்ச் 2012 (UTC)

திசையன். தவறை சரி செய்துள்ளேன். நன்றி கனக்ஸ்.--சோடாபாட்டில்உரையாடுக 02:46, 3 மார்ச் 2012 (UTC)

நீக்கப்பட்ட காமன்சு படங்கள்

தொகு
  - சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962
  - க. சீ. கிருட்டிணன்
  - பெ. வரதராஜுலு நாயுடு
  - சா. கணேசன்
  - எஸ். எம். அப்துல் மஜீத்
  - ஆர். வி. சுவாமிநாதன்
  - பா. ராமச்சந்திரன்
தங்கள் ஆலோசணைப்படி (--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 25 சனவரி 2012 (UTC) )
நீக்கப்பட்ட காமன்சு படங்களை மறு பதிவேற்றம் செய்துள்ளேன் கவனிக்க.--ஸ்ரீதர் (பேச்சு) 09:16, 3 மார்ச் 2012 (UTC)
சரியாக உள்ளன ஸ்ரீதர். நன்றி.--சோடாபாட்டில்உரையாடுக 02:26, 4 மார்ச் 2012 (UTC)

உங்களின் கவனத்திற்கு...

தொகு

AswnBot எனும் தானியங்கியால் செய்யப்பட்டுள்ள சில துப்புரவுப்பணிகள், 2 கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

1) செம்மங்குடி சீனிவாச ஐயர், ஐந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்), ஒன்பதாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) போன்ற கட்டுரைகளில் 'உசாத்துணை' எனும் தலைப்பு 'வெளி இணைப்புகள்' எனும் தலைப்பாக மாற்றம் கண்டுள்ளது. இது தவறுதானே? (புத்தகவடிவில் மட்டுமே இருக்கும் தகவல் மூலத்தைக் குறிப்பிடும்போது 'உசாத்துணை' என்றுதானே குறிப்பிடவேண்டும். மேலும் வெளி இணைப்புகள் என்றால், ஏதேனும் ஒரு இணையத்தளத்துடன் இணைப்பு இருக்கவேண்டும்.)
நீங்கள் சொல்வது சரியே. நூல்கள் உசாத்துணை/மேற்கோள்கள் எனவே இருக்க வேண்டும் வெளி இணைப்பு இணையத்தளத்துக்கு மட்டுமே பொருந்தும். மீளமைத்துவிட்டு aswn இடம் சொல்லிவிடுங்கள்.
2) துக்கடா, டி. வீ. சங்கரநாராயணன் போன்ற கட்டுரைகளில் துப்புரவு செய்யப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால் உள்ளடக்கம் அப்படியே உள்ளது. என்ன மாதிரியான துப்புரவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கவும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:38, 5 மார்ச் 2012 (UTC)
whitespace correction நடந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படாது. கூடுதலாக உள்ள space கள் அகற்றப்பட்டுள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 09:37, 5 மார்ச் 2012 (UTC)

சங்ககால மலர்கள்

தொகு

வணக்கம், சங்ககால மலர்கள் என உள்ள பக்கத்தில் உள்ள மலர்களில் பல இன்றும் உள்ளன.. அவற்றின் பெயரும் (இன்றுள்ள பெயர்) அக்கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.. தற்போது உள்ள மலர்களுக்கு பகுப்பு:மலர்கள் பகுப்பையும் சங்ககால மலர்களுக்கு பகுப்பு:சங்க கால மலர்கள் பகுப்பையும் இட்டு வருகிறோம்.. இம்மாதிரியான இரண்டும் உள்ள கட்டுரைகளுக்கு என்ன செய்வது.. இரண்டையும் இடுவதா?.. அல்லது மலர்கள் மட்டும் இடுவதா?--shanmugam (பேச்சு) 19:15, 5 மார்ச் 2012 (UTC)

இந்த ஒரு விசயத்தில் மட்டும் இரண்டையும் இடுங்கள். மலர்கள் பகுப்பு தாவரவியல் அடிப்படையில் இன்னும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப் பட வேண்டும். அப்படி பிரிக்கப்படும் போது மலர்கள் நீக்கப்பட்டு உட்பகுப்புகள் சேர்க்கப்பட்டுவிடும். எனவே தற்போதைக்கு இரண்டும் இருக்கட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 03:15, 6 மார்ச் 2012 (UTC)
அப்படியே செய்கிறேன்.. நன்றி. தற்போதைய பெயர்களுக்கும் வழிமாற்று உருவாக்கி விடுகிறேன்.. அவற்றுக்கான சரியான ஆங்கிலப் பெயர்கள் தெரிந்தால் விக்கியிடையிணைப்பு மற்றும் ஆங்கில விக்கியில் இருந்து infofox கொடுக்கலாம் :)--shanmugam (பேச்சு) 07:49, 6 மார்ச் 2012 (UTC)
அப்படியே மற்றொரு உதவி.. செருந்தி, சூரல் போன்ற கட்டுரைகள் சங்கப்பாடல்களில் செருந்தி எனக்குறிப்பிடப்படும் புல் என ஆரம்பமாகிறது.. மற்ற தகவல்கள் பூவைப் பற்றி உள்ளன .. இது பூவைப் பற்றிதான் என கண்டிப்பாக தெரிந்தால் முதல் வரியில் பூ என ஆரம்பித்து பிறகு அதன் மரமோ, செடியோ, புல்லோ எதுவாயினும் அதைப்பற்றி கூறலாம் என நினைக்கிறேன்.. இது பற்றி செங்கைப்பொதுவன் அவர்களிடம் கேட்கலாமா? (ஏனெனில் ஆரம்பத்தை படிக்கும்போது அது செருந்தி புல்லை போல் உள்ளது.. உள்ளே படித்தால் செருத்தி பூவைப் போல் உள்ளது. தலைப்பு கூட செருந்திப்பூ என இருந்தால் இரண்டுக்கும் வேறுபாடு தெரியும் என நினைக்கிறேன்)--shanmugam (பேச்சு) 08:18, 6 மார்ச் 2012 (UTC)


file:ThajaiPeriyaKovil Krishnan.JPGt

தொகு

//தமிழ்: மரத்தில் பல்லி பார்க்கும் மக்கள், கருவூரார் சந்நிதி பின்புறம், தஞ்சை பெரிய கோவில். பல்லியைப் பார்த்தல் வேண்டியது விளங்கும் என்பது நம்பிக்கை. English: A sculpture in Tanjavur Brihadeesvarar temple. Located at the backside of Karvurar sanctum. Depicts people looking for a lizard in a tree. Sighting a lizard was believed to be a good omen that would bring good luck.// வணக்கம்.இதற்கான விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிற்பம். பாகவதப் புராணத்தில் வரும் சலக்ரீடை என்ற காட்சி சிறபமாக வடிக்கப்பட்டுள்ளது.கருவூரார் சந்நிதி பின்புறம் உள்ள இச்சிலையின் மரத்தில் பல்லியைப் பார்த்தால், வேண்டியது விளங்கும் என்பது நம்பிக்கை.

என இருப்பின் பொருத்தமாக இருக்கும்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:22, 8 மார்ச் 2012 (UTC)

தவறை சுட்டியதற்கு நன்றி பார்வதி. நீங்கள் கூறியபடி மாற்றியிருக்கிறேன். (இது கோபிகையரின் ஆடைகளோடு கிருஷ்ணன் மரத்தில் ஏறி நிற்கும் காட்சியா?). சரி பார்க்க வேண்டுகிறேன். பிழையிருந்தால் திருத்தி விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:28, 8 மார்ச் 2012 (UTC)
இது கோபிகையரின் ஆடைகளோடு கிருஷ்ணன் மரத்தில் ஏறி நிற்கும் காட்சி. சரியே..--பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:35, 8 மார்ச் 2012 (UTC)

பயனர்வெளிக்கு நகர்த்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்

தொகு

Rameshta/இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு போன்ற பக்கங்களை கட்டுரைவெளிக்குக் கொணரலாமா ? அல்லது புதியதாக உருவாக்க வேண்டுமா? --மணியன் (பேச்சு) 17:29, 8 மார்ச் 2012 (UTC)

தாராளமாகக் கொண்டுவரலாம் மணியன். இரண்டாம் சுற்றில் உருவாக்கப்பட்ட 23 மட்டும் இன்னும் பயனர்வெளிகளில் உள்ளன. ஆனால் திருத்துவதை விட புதிதாக எழுதுவது இலகா என்று பார்த்துக்கொள்ளுங்கள் :-) --சோடாபாட்டில்உரையாடுக 17:31, 8 மார்ச் 2012 (UTC)

கதிரியக்கம்- கதிர் வீச்சு

தொகு

முதற்பக்கத்தில் கதிரியக்கவியல் என்ற கட்டுரையை உருவாக்கக் கோரப்பட்டுள்ளது. கதிரியக்கம்,கதிர் வீச்சு இரண்டு கட்டுரைகளும் ஒரே கருத்துள்ளவையா. இவற்றை ஒன்றிணைத்து இதனை கதிரியக்கவியல் தலைப்பிற்குள் சேர்ர்க்கலாமா?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:00, 9 மார்ச் 2012 (UTC)

பார்வதி, உங்கள் கருத்து பேச்சு:கதிரியக்கவியல் இற்கு மாற்றியுள்ளேன். அங்கு கருத்தைத் தெரிவியுங்கள்.--Kanags \உரையாடுக 21:37, 9 மார்ச் 2012 (UTC)

உதவி

தொகு

கூட்டுசேரா இயக்கம் கட்டுரையில் முதலில் ஏன் வெற்றிடமாக உள்ளது ? என்ன பிழை  ?--மணியன் (பேச்சு) 09:57, 10 மார்ச் 2012 (UTC)

தகவற்பெட்டியில் established என்னும் அளபுருவில் ஏதோ சிக்கல். இப்போதைக்கு நீக்கியுள்ளேன். தகவற்பெட்டி சற்று சிக்கலானது. நிதானமாக ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:22, 10 மார்ச் 2012 (UTC)
எப்படி கண்டுபுடிச்சிங்க.. நான் வார்ப்புருவை நீக்கி மற்றும் மாற்றி முன்தோற்றம் பார்த்ததில் அதில்தான் எதோ பிரச்சினை என தெரிந்தது.. ஆனால் established தான் பிரச்சினை என எப்படி கண்டுபுடிச்சிங்க!!!!!.--shanmugam (பேச்சு) 10:30, 10 மார்ச் 2012 (UTC)
debugging அனுபவம் ;-). வார்ப்புருவில் ஒவ்வொரு பகுதியாக நீக்கி எது பிழையென ஆராய்தல் மூலம் கண்டு பிடித்தேன். halving and quartering methodology. முழு வார்ப்புருவில் சிக்கல் எனத் தெரிந்ததும். வார்ப்புருவை இரண்டாகப் பிரியுங்கள். ஒவ்வொரு பாதியினையும் நீக்கிவிட்டுப் பாருங்கள். எந்தப் பாதியில் வழு என்று தெரிந்ததும், அதை இரண்டாகப் பிரியுங்கள். இப்படியே வழு அகப்படுவரை செய்தால் குறைவான iteration களில் வழு சிக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 10:52, 10 மார்ச் 2012 (UTC)
விளக்கியமைக்கு நன்றி.. இனி அவ்வாறே செய்கிறேன்:).. --shanmugam (பேச்சு) 11:03, 10 மார்ச் 2012 (UTC)
உடனடியாக சரிசெய்தமைக்கு நன்றி. debugging விளக்கமும் மிகப் பயனுள்ளது.--மணியன் (பேச்சு) 11:25, 10 மார்ச் 2012 (UTC)

பாராட்டுப் பதக்கம்

தொகு
 
சோடாபாட்டில், த.வி திட்டங்களில் பல்வகைப்பட்ட உங்கள் அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி என் உவப்பைத் தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

சோடாபாட்டில், நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்து ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை, இதனை நான் முன்னரே சில முறை ஆலமரத்தடியிலும் பிற இடங்களிலும் குறிட்டிருந்தாலும், உங்கள் பணிகளைப் பாராட்டி பதக்கம் தந்து என் உவப்பைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் தொடங்கி எழுதிய ஏறத்தாழ 800 கட்டுரைகளும், விக விரைவாகவும் ,வீறுடனும் செய்யும் பலதரப்பட்ட துப்புரவு, பராமரிப்புப் பணிகளும், நிரல்-நுட்ப வழிகாட்டுதல்களும், மிகச்சிறப்பாக விக்கிப்பீடியா ஊடகப்போட்டியை வழிநடத்தியதும், இப்பொழுது குறுந்தட்டு திட்டத்தை நடத்தி வருவதும், பயனர்களுக்கு விரைந்தாற்றி உதவிகள் செய்து வருவதும் மிகப்பாராட்டுக்குரியன. உங்கள் பறக்கும் இடியாப்ப அரக்கன் போன்ற காட்டுரைகளை நான் முகநூல் போன்ற தளங்களிலும் சிறிதளவு பரப்புரை செய்துள்ளேன். ஐரோப்பியாவிலும் பிற இடங்களிலும் நடந்த பல சண்டைகள் பற்றிய கட்டுரைகள் வரைவதிலும், (எ.கா ஊர்ட்கென் காடு சண்டை, பிரான்சு சண்டை, நெதர்லாந்து_சண்டை..) நல்ல எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் வரைவதிலும் (எ.கா வால்ட்_விட்மன், அநுத்தமா...), சென்னை மாகாணம் போன்ற மிக நெடிய கட்டுரைகள் எழுதுவதிலும் உங்கள் பங்களிப்புகளின் சிறப்பைக் காண முடியும். உங்கள் நற்பணி மேன்மேலும் சிறப்புடன் வளர நல்வாழ்த்துகளைத் தெரிவித்து உடன் பங்களிப்பாளனாகிய நான் இப்பதக்கத்தை அளிக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 16:48, 11 மார்ச் 2012 (UTC)

நன்றி செல்வா. :-)--சோடாபாட்டில்உரையாடுக 17:52, 11 மார்ச் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு தொகுப்பு பணிகளைச் செய்து குறுகிய காலத்திற்குள் தமிழ் விக்கிப்பீடியர்களில் அதிகத் தொகுப்புகள் செய்திருப்பவர்களுக்கான தர வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்தமைக்கும் சேர்த்து என் இனிய வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:57, 11 மார்ச் 2012 (UTC)
சோடாபாட்டில், உங்கள் சிறந்தப் பங்களிப்பை பாராட்டுவதில் நானும் உவகை அடைகிறேன். கண்டிப்புடனும் கவனத்துடன் நீங்கள் ஆற்றும் நிர்வாகப்பணிகள் ஓர் ஒழுங்கை நிலைநாட்டியுள்ளது. சக பயனர்களுக்கு இடுக்கண் களையும் நண்பனாக, வழிகாட்டும் நல்லாசிரியனாக, தரத்தை நிலைநிறுத்தும் காவலனாக உறுதுணையாக உள்ளீர்கள். குறைந்த காலத்திலேயே நிறைவானப் பணியாற்றி மற்றவர்களுக்கு ஓர் முன்மாதிரியாகவும் விளங்குகிறீர்கள். உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக !!--மணியன் (பேச்சு) 18:56, 11 மார்ச் 2012 (UTC)



awb சந்தேகம்

தொகு

வணக்கம், awb இன்றுதான் உபயோகிக்க முயன்றேன்...வெற்றிகரமாக பழகியும் விட்டேன்.. உபயோகமாக உள்ளது:)..ref பிழைகளை அதுவே சரிசெய்து விட்டது:). ஒரு சிறு உதவி.. அதில் append or prepend text செய்கிறோமல்லவா.. அதில் இயல்பாக பகுப்பிற்கு மேலே தான் நாம் சேர்க்கும் உரை வருகிறது.. இதை நமது விருப்பப்படி மாற்ற இயலுமா?--shanmugam (பேச்சு) 09:11, 12 மார்ச் 2012 (UTC)

நேரடியாக மாற்ற முடியாது. append/prepend பதிலாக find and replace இல் regex கொண்டு தேவைப்படும் இடத்தில் வேண்டியவற்றை சேர்க்கலாம். (சற்று சிக்கலான விசயம்). --சோடாபாட்டில்உரையாடுக 09:39, 12 மார்ச் 2012 (UTC)

BAFTA விருது

தொகு

BAFTA-ஐ எவ்வாறு தமிழாக்கம் செய்வது?
பாப்தா, பாஃப்தா, பாஃப்டா என்றா? உதவவும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 12:19, 13 மார்ச் 2012 (UTC)

பாஃப்டா சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:59, 13 மார்ச் 2012 (UTC)
பாஃவ்ட்டா என்று சொல்லலாம். TA என்பது வல்லினமாக ஒலிக்க இப்படி ஒரு ட் சேர்த்தல் தேவை. BAFDA என்றால் பாஃவ்டா எனலாம். BAFTA = பா'வ்'டா" என்பது இன்னொரு முறை :) இன்னொரு முறை பா3வ்'டா1 என்பது. --செல்வா (பேச்சு) 19:25, 13 மார்ச் 2012 (UTC)

media contest

தொகு

வணக்கம், காமன்சில் tamilwiki media contest பகுப்பில் பகுப்பாக்கப்படாத கோப்புகளை மட்டும் பார்க்க filter உருவாக்க ஏதாவது வழி உள்ளதா? --shanmugam (பேச்சு) 06:08, 14 மார்ச் 2012 (UTC)

ஸ்ரீகாந்திடம் உள்ளது, அவரிடம் கேட்டுப் பாருங்கள். API மூலமாக இப்படி ஒரு “பகுக்கப்படா கோப்புகள்” பட்டியலைத் தயார் செய்து வருகிறார்.--சோடாபாட்டில்உரையாடுக 06:10, 14 மார்ச் 2012 (UTC)
சரி மின்னஞ்சலில் கேட்டுப்பார்க்கிறேன்..நன்றி :)--shanmugam (பேச்சு) 06:19, 14 மார்ச் 2012 (UTC)

ஒரு சந்தேகம்

தொகு

கட்டுரைகளில் 'you tube' இணைப்பு தரலாமா? ஒரு கட்டுரையில் ஒரு பயனர் அவ்விதம் செய்துள்ளார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:48, 14 மார்ச் 2012 (UTC)

விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் கொள்கைகளில் எதுவும் மீறப்படாதவரை தரலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:28, 14 மார்ச் 2012 (UTC)

கட்டுரைகளை இணைத்தல் உதவி

தொகு

உமர்-உமறு இப்னு அல்-கத்தாப் உள்ளடக்கங்களை ஒன்றினைத்து விட்டேன் எவ்வாற்று இணைப்பது? எனத் தெரியவில்லை. அவற்றைத் தாங்கள் இணைக்க முடியுமா?--பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:31, 14 மார்ச் 2012 (UTC)

 Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 17:27, 14 மார்ச் 2012 (UTC)
Return to the user page of "Sodabottle/தொகுப்பு16".