மாரான் மக்களவைத் தொகுதி

மாரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Maran; ஆங்கிலம்: Maran Federal Constituency; சீனம்: 马兰国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், மாரான் மாவட்டத்தில் (Maran District) அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P086) ஆகும்.[5]

மாரான் (P086)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Maran (P086)
Federal Constituency in Pahang
மாரான் மக்களவைத் தொகுதி
(P086 Maran)
மாவட்டம்மாரான் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை53,128 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிமாரான்
முக்கிய நகரங்கள்மாரான், புக்கிட் செகும்பால், செனோர், கெர்த்தாவ்
பரப்பளவு3,846 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்இசுமாயில் முத்தாலிப்
(Ismail Muttalib)
மக்கள் தொகை61,932 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

மாரான் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து மாரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

மாரான் மாவட்டம்

தொகு

மாரான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான். முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

முன்பு மாரான் மாவட்டம், பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு நகராண்மைக் கழகமாக இருந்தது. 1981 சனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மாரான் மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் மாரான் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (89.3%)
  சீனர் (5.9%)
  இதர இனத்தவர் (3.5%)
மாரான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் மாரான் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P069 1974–1978 இசாமிடின் யகயா
(Hishamuddin Yahaya)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 முகமது காலில் யாக்கோப்
(Mohd Khalil Yaakob)
7-ஆவது மக்களவை P077 1986–1990 முகமது அப்துல்லா
(Muhammad Abdullah)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P081 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P086 2004–2008 இசுமாயில் முத்தாலிப்
(Ismail Muttalib)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

மாரான் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
இசுமாயில் முத்தாலிப்
(Ismail Muttalib)
பெரிக்காத்தான் நேசனல்19,60047.6747.77  
சகானிசா சம்சுதீன்
(Shahaniza Shamsuddin)
பாரிசான் நேசனல்17,77943.245.82
அகமது சுகோர் அவாங்
(Ahmad Shuhor Awang)
பாக்காத்தான் அரப்பான்3,5748.694.69
முகமது அபிசு அல் அயிவ்
(Muhamad Hafiz Al-Haifz)
சுயேச்சை1660.400.40  
மொத்தம்41,119100.00
செல்லுபடியான வாக்குகள்41,11998.63
செல்லாத/வெற்று வாக்குகள்5731.37
மொத்த வாக்குகள்41,692100.00
பதிவான வாக்குகள்53,12877.353.95
Majority1,8214.57.00
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரான்_மக்களவைத்_தொகுதி&oldid=4107915" இலிருந்து மீள்விக்கப்பட்டது