சேகர் (நடிகர்)

இந்திய நடிகர்
(மாஸ்டர் சேகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாஸ்டர் சேகர் என்று அறியப்படும் ஜே. வி. சேகர் (7 சனவரி 1963 - 8 யூலை 2003) என்பவர் ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார்.

சேகர்
பிறப்புஜே. வி. சேகர்
(1963-01-07)7 சனவரி 1963
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு8 சூலை 2003(2003-07-08) (அகவை 40)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்மாஸ்டர் சேகர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1968–1988

துவக்க வாழ்க்கையும் தொழிலும்

தொகு

சேகர் 7, சனவரி, 1963 அன்று பிறந்தார். இவர் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1968 ஆம் ஆண்டு குடியிருந்த கோயில் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையிலகில் அறிமுகமானார். [1] மணிப்பயல், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் பல திரைப்படங்களில் தனது குழந்தை நடிப்பிற்காக பிரபலமானார். இவர் மாஸ்டர் சேகர் என்று அழைக்கப்பட்டார். இதய வீணை, குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவ வேடங்களில் நடித்தார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் ஜே. வி. விஜயத்தின் மகன் ஆவர். [1]

இவர் 2003 சூலை 8 அன்று சென்னையில் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். [2] [3]

பகுதி படத்தொகுப்பு

தொகு
ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1968 குடியிருந்த கோயில் தமிழ் சேகர் (ம) ஆனந்த்
1968 எங்க ஊர் ராஜா தமிழ் இளம் சக்கரவர்த்தி
1968 ஒளி விளக்கு தமிழ்
1968 சக்கரம் தமிழ்
1969 வா ராஜா வா தமிழ்
1970 அனாதை ஆனந்தன் தமிழ் ஆனந்தன்
1970 வைராக்கியம் தமிழ்
1970 எங்க மாமா தமிழ் காந்தி
1970 என் அண்ணன் தமிழ் ரெங்கா
1970 நம்ம குழந்தைகள் தமிழ்
1971 அன்னை வேளாங்கண்ணி தமிழ் ராசா
1971 போபானும் மொளியும் மலையாளம் போபன்
1971 அபிஜாத்யம் மலையாளம்
1972 ஆசீர்வாதம் தமிழ்
1972 மயிலாடும்குன்னு மலையாளம்
1972 தங்கதுரை தமிழ்
1972 ராஜா தமிழ் இளம் ராஜா
1972 அக்கா தம்முடு தெலுங்கு
1972 அகத்தியர் தமிழ்
1972 மீண்டும் வாழ்வேன் தமிழ் பாபு
1972 அன்னமிட்ட கை தமிழ் துரைராஜ்
1972 இதய வீணை தமிழ் சுந்தரம்
1973 கட்டிலா தொட்டிலா தமிழ் கோபி
1973 சொல்லத்தான் நினைக்கிறேன் தமிழ் கமலின் தம்பி
1973 ராஜ ராஜ சோழன் தமிழ் பொன்னா
1973 திருமலை தெய்வம் தமிழ் வெங்கடேசன்
1974 வாணி ராணி தமிழ்
1974 எங்கம்மா சபதம் தமிழ்
1974 மணிப்பயல் தமிழ் இளங்கோவன்
1975 மஞ்சள் முகமே வருக தமிழ்
1975 சுவாமி ஐயப்பன் மலையாளம்/தமிழ் ஐயப்பன்
1975 முன்னிரவு நேரம் தமிழ்
1975 ஓடக்குழல் மலையாளம்
1975 ஜானகி சபதம் தமிழ்
1976 ஓ மஞ்சு தமிழ் Madhu
1976 பயணம் தமிழ் சேகர்
1976 Cசோட்டாணிக்கரை அம்மா மலையாளம்
1976 குமார விஜயம் தமிழ்
1976 மோகினியாட்டம் மலையாளம் சிந்து
1976 பேரும் புகழும் தமிழ் இரவி
1976 அம்பா அம்பிகா அம்பாலிகா மலையாளம் முருகன்
1976 ஆயிரம் ஜன்மங்கள் மலையாளம் இராஜன்
1976 தசாவதாரம் தமிழ் பரதன்
1977 சமுத்திரம் மலையாளம்
1978 பீனா மலையாளம்
1979 கவரிமான் தமிழ் இராஜேஷ்
1979 நல்லதொரு குடும்பம் தமிழ்
1979 ஒரு விடுகதை ஒரு தொடர்கதை தமிழ்
1979 நீதியா நியாயமா தமிழ்
1979 அன்பின் அலைகள் தமிழ்
1979 நங்கூரம் தமிழ்
1980 நதியை தேடி வந்த கடல் தமிழ்
1982 துணைவி தமிழ்
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் தமிழ்
1993 அபர்ணா மலையாளம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "திரைத் துளி". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. "షాకింగ్‌ న్యూస్‌.. శేఖర్‌ మాస్టర్‌ని చంపేసిన గూగుల్‌" (in தெலுங்கு). 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  3. "Master Sekhar falls to death". 2003-07-09. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_(நடிகர்)&oldid=4147344" இலிருந்து மீள்விக்கப்பட்டது